Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயவு செய்து அறியத்தாருங்கள்

Featured Replies

வணக்கம் உறவுகளே இசையமைப்பு ஒலிப்பதிவிற்காய் ஒரு ஸ்டூடியோ மைக் வாங்கினேன் ...எனது குரலில் பரீட்சித்து பார்த்தேன் .பாடி அதை ஒலிப்பதிந்தபின் ..Normalize.செய்யும்போது ஒரு இரைச்சல் பின்னால் வருகிறது .பல முனைகளிலும் முயன்று பார்த்தேன் ........முடியவில்லை . உங்கள் யாருக்காவது இந்த விடயம் பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள் நன்றிகள் .

இப்படியான மைக்கை முன் பாவித்த அனுபவம் எனக்கு இல்லை .

1157714_169038586631717_1905230755_n.jpg/intl/en_ALL/images/logo.gif]

Edited by தமிழ்சூரியன்

இப்படியான செற்றப்பை பார்த்த  அனுபவமே எனக்கு இல்லை ............ :rolleyes:  :rolleyes:  :rolleyes:  :rolleyes: 

இதேமாதிரி, ஆனால் வயருடன் வந்தது. அதே பிரச்சனை. என்ன கோதாரியோ தெரியாது, சத்தம் போடாமலே மைக் ஊடாய் கிசு கிசு என்று சத்தங்கள் கேட்கும், சிலவேளைகளில் வானொலியும் அலைகளும் வரும். நான் நினைக்கின்றேன், இது அளவுக்கு மிஞ்சிய உணர்வலை கொண்டதோ என்று. எந்தப்பக்கத்தால் அதிகம் ஒலியை இது உள்வாங்கும் என்று கண்டறிவதே சோதனையாகி போனது. வாங்கிய கடையிலேயே விளக்கம் கேளுங்கள்/அவர்களின் (ஒலிவாங்கி தயாரிப்பாளர்) தொழில்நுட்ப பிரிவை அழைத்தால் உதவி செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஒலிவாங்கி வைத்திருக்கும் அறையின் சுவர்களை காற்று;மற்றும் வெளி சத்தம்கள் புகாதவகையிலும் ஒலிகளை உறிஞ்சும் வகையிலும் மாற்றி அமையுங்கள்..சரியாககூடும் என்று நினைக்கிறேன்.. :unsure:

  • தொடங்கியவர்

நன்றி அண்ணா உங்கள் பதிலுக்கு ...............கடைக்காரரிடம் விளக்கம் கேட்டேன் .அவர் சொன்னது போல எல்லாம் செய்து பார்த்தேன் .இறுதியாக Normalize செய்வது 40 வீததத்திற்கு மேல் சென்றால் ,அதுவும் குரலின் சத்தம் குறைவாய் இருந்தால் இந்த பிரச்சனை வரும் என்றார் .என் குரலின் மகிமையும் அதுதான் ........சரி வருகிற சனிக்கிழமை சத்தமான குரலோன் ஒருவன் வருகிறான் .முயற்சித்து பார்க்கிறேன் ..........................ஆனால் சாதாரண மைக்கில் எனது குரலில் 100 வீதம் Normalize  வைத்தாலும் இரைச்சல் வராது .

உங்கள் ஒலிவாங்கி வைத்திருக்கும் அறையின் சுவர்களை காற்று;மற்றும் வெளி சத்தம்கள் புகாதவகையிலும் ஒலிகளை உறிஞ்சும் வகையிலும் மாற்றி அமையுங்கள்..சரியாககூடும் என்று நினைக்கிறேன்.. :unsure:

உண்மை சுபேஸ் அதுவும் ஒரு காரணியாய் இருக்கலாம் என நான் நினைக்கிறேன் ...............கண்ணாடி கூண்டொன்று அமைக்கலாம் என்று இருக்கிறேன் .
 
[அல்லது குளியல் அறையில் இருக்கும் செட்டை கொண்டு வந்து போடலாம் எந்திருக்கிறேன் :D  :D  ]

gxl2200_image1.jpg
 
இந்தவகை மைக்கா தமிழ் சூரியன்... ??  
 
இது கொஞ்சம் உணர் திறன் அதிகமானது ஆதலால் இந்த பிரச்சினை....  இதை நீங்கள் உபயோகிக்க வேண்டுமானால் உங்களின் ஸ்ரூடியோ வின் காற்று புக முடியாத வாறு அமைக்க பட்டு இருக்கிறதா எண்டதை ஒரு தரம் உறுதிப்படுத்துங்கோ.... 
 
பிரச்சினை அதுவாக இருக்கலாம்....  இந்த வகை மைக் கின் உணர் திறன் -36dBV (16mV) எனும் அதிகமாக உணர் திறன் இருப்பதால் இந்த பிரச்சினை... ஒரு சங்கை எடுத்து உங்கள் காதின் அருகில் வைத்தால் எப்படி ஒரு சத்தம் வருகிறதோ அது போல... அதே சங்கை காற்றே போக முடியாதவாறு அடைத்து பிடித்து பாருங்கள் எதுவும் கேக்காது...

நிச்சயமாக இது என் அனுபவம் கிடையாது... :lol:  எனது (ஆபிரிக்க) நண்பன் ஒருவர்.. DJ செய்பவன் அடிக்கடி இப்படியான ஒலிப்பதிவுகளையும் செய்பவன் என்பதால் தொலை பேசி கேட்டுப்பார்த்தேன் அவன் சொன்னதுதான்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

[அல்லது குளியல் அறையில் இருக்கும் செட்டை கொண்டு வந்து போடலாம் எந்திருக்கிறேன் :D  :D  ]

முற்கூட்டியே சொல்லீட்டன்...வீட்டுக்காறி மைக்கபுடுங்கி அதாலையே அடிச்சால்.. என்னை  திட்டவேண்டாம்... :D

  • தொடங்கியவர்

gxl2200_image1.jpg

இந்தவகை மைக்கா தமிழ் சூரியன்... ??  

இது கொஞ்சம் உணர் திறன் அதிகமானது ஆதலால் இந்த பிரச்சினை....  இதை நீங்கள் உபயோகிக்க வேண்டுமானால் உங்களின் ஸ்ரூடியோ வின் காற்று புக முடியாத வாறு அமைக்க பட்டு இருக்கிறதா எண்டதை ஒரு தரம் உறுதிப்படுத்துங்கோ.... 

பிரச்சினை அதுவாக இருக்கலாம்....  இந்த வகை மைக் கின் உணர் திறன் -36dBV (16mV) எனும் அதிகமாக உணர் திறன் இருப்பதால் இந்த பிரச்சினை... ஒரு சங்கை எடுத்து உங்கள் காதின் அருகில் வைத்தால் எப்படி ஒரு சத்தம் வருகிறதோ அது போல... அதே சங்கை காற்றே போக முடியாதவாறு அடைத்து பிடித்து பாருங்கள் எதுவும் கேக்காது...

நிச்சயமாக இது என் அனுபவம் கிடையாது... :lol:  எனது (ஆபிரிக்க) நண்பன் ஒருவர்.. DJ செய்பவன் அடிக்கடி இப்படியான ஒலிப்பதிவுகளையும் செய்பவன் என்பதால் தொலை பேசி கேட்டுப்பார்த்தேன் அவன் சொன்னதுதான்..

அதுதான் உண்மை என நினைக்கிறேன் தயா அண்ணா .........சரி நாளை கண்ணாடி கூண்டு ஒன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறேன் .மிக்க நன்றி அண்ணா உங்கள் பொறுப்பான பதிலுக்கு  :)

அதுதான் உண்மை என நினைக்கிறேன் தயா அண்ணா .........சரி நாளை கண்ணாடி கூண்டு ஒன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறேன் .மிக்க நன்றி அண்ணா உங்கள் பொறுப்பான பதிலுக்கு  :)

கண்ணாடி கூடு எல்லாம் தேவை இல்லை எண்டு நான் நினைக்கிறன்...   

உங்களின் கதவுகளின் ஜன்னல்களின் ஓரங்களை குளிர் (காற்றும் தான்)  புகாமல் அடைக்கை ஒரு மென்பஞ்சு மாதிரியான ஒட்டக்கூடிய ஒரு நாடாக்களை விக்கிறவங்கள்...  நிலைகளில் ஒட்டி பாருங்கள்... 

இது என் சொந்த ஐடியா தான்...  வேலை செய்ய இல்லை எண்டால்  தாராளமாக என் பெயரை சொல்லி திட்டுங்கோ...  :lol:  :lol:

காலமை வேலைக்கு போகும் நாட்களில் வெள்ளண படுக்கிற எனக்கு பிள்ளைகள் சத்தம் போட்டு எழுப்பாமல் இருக்க நான் ஒரு அறைக்கு இதை தான் செய்து வைச்சு இருக்கிறன்...  நல்லா வேலை செய்யுது...  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

மிக்க நன்றி அண்ணா அப்படி செய்து பார்க்கிறேன் . :D

முற்கூட்டியே சொல்லீட்டன்...வீட்டுக்காறி மைக்கபுடுங்கி அதாலையே அடிச்சால்.. என்னை  திட்டவேண்டாம்... :D

எத்தனை முறை மைக் ஸ்டாண்டால் அடி வாங்கிய அனுபவம் ..............சப்போஸ் ஒரு சின்ன மைக்கால் அடித்தால் வலிக்கவாபோகுது ...........வாங்கிடுவும் சுபேஸ் ,,,,,,,,,,, :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒலி வாங்கியை Transformer அல்லது Power Supply இற்கு அருகில் வைத்தாலும் இப்படியான சத்தம் வர சந்தர்ப்பம் உண்டு. கணனிக்கு கிட்ட வைத்தாலும் இப்படியான சத்தம் வர சந்தர்ப்பம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிவாங்கி இருக்கும் இடத்தில் வேறு எந்தப்பொருட்களும் இருக்கக்கூடாது தவிர ஒலியை கூடிய அளவுக்கு உறிஞ்சக்கூடிய ரெஜிபோர்ம்கள் விற்கின்றன அவற்ரை சுவர் முழுதும் இடைவெளிவிட்டு ஒட்டவும், ஒலிவாங்கிக்கு மேற்பரப்பில் வெளிப்புறங்களில் காற்றை மட்டுப்படுத்தும் பஞ்சுக் கட்டமைப்பை ஏற்படுத்திப் பார்க்கவும், ஒலிப்பதிவுக்கூடம் குளிர்பதனம் செய்யப்பட்டதெனில் குளிர்பதனப்பெட்டி வெளியில் சுவரையண்டி இருப்பின் அதன் இணைப்புக்கம்பிகளிக்கு இடையில் ரப்பர் துண்டுகள் வைத்துப் பூட்டவேண்டும். அதன் அதிர்வுகளை அறையின் சுவர்கள் உள்வாங்காதபடிக்கு. தவிர உங்களது அறைக்குள் நிச்சயமாக கண்ணாடியால் செய்யப்பட்ட ஒலிவாங்கி அறை ஒன்று இருந்தே தீரவேண்டும்.

இவையெல்லாம் தவித்து ஏதாவது செய்யவேண்டுமாகவிருந்தால், வன்னியில் ஜெயசுக்குறு காலத்தில் பாடல்களை ஒலிப்பதிவு செய்தவர்கள் யாராவது உங்கள் அருகாமையில் இருந்தால் அவர்களிடம் கருத்துக்கேட்கவும். காரணம் அதற்கு, அவர்களே மிகவும் திறைமையான ஒலிப்பதிவாளர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  இதுக்கும் கன மைல் தாரம் தம்பி

காலமை வேலைக்கு போகும் நாட்களில் வெள்ளண படுக்கிற எனக்கு பிள்ளைகள் சத்தம் போட்டு எழுப்பாமல் இருக்க நான் ஒரு அறைக்கு இதை தான் செய்து வைச்சு இருக்கிறன்...  நல்லா வேலை செய்யுது...  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

ஆனால் இவருக்கு பதில்  சொல்லலாம்

தங்களுடைய  குறட்டையை  பொறுக்கமுடியாமல்

இளசுகள் தான் இதைப்பொருத்தியதாக எமது புலநாய்வு தகவல் சொல்கிறது தல......... :lol:  :D  :D

  • தொடங்கியவர்

ஒலிவாங்கி இருக்கும் இடத்தில் வேறு எந்தப்பொருட்களும் இருக்கக்கூடாது தவிர ஒலியை கூடிய அளவுக்கு உறிஞ்சக்கூடிய ரெஜிபோர்ம்கள் விற்கின்றன அவற்ரை சுவர் முழுதும் இடைவெளிவிட்டு ஒட்டவும், ஒலிவாங்கிக்கு மேற்பரப்பில் வெளிப்புறங்களில் காற்றை மட்டுப்படுத்தும் பஞ்சுக் கட்டமைப்பை ஏற்படுத்திப் பார்க்கவும், ஒலிப்பதிவுக்கூடம் குளிர்பதனம் செய்யப்பட்டதெனில் குளிர்பதனப்பெட்டி வெளியில் சுவரையண்டி இருப்பின் அதன் இணைப்புக்கம்பிகளிக்கு இடையில் ரப்பர் துண்டுகள் வைத்துப் பூட்டவேண்டும். அதன் அதிர்வுகளை அறையின் சுவர்கள் உள்வாங்காதபடிக்கு. தவிர உங்களது அறைக்குள் நிச்சயமாக கண்ணாடியால் செய்யப்பட்ட ஒலிவாங்கி அறை ஒன்று இருந்தே தீரவேண்டும்.

இவையெல்லாம் தவித்து ஏதாவது செய்யவேண்டுமாகவிருந்தால், வன்னியில் ஜெயசுக்குறு காலத்தில் பாடல்களை ஒலிப்பதிவு செய்தவர்கள் யாராவது உங்கள் அருகாமையில் இருந்தால் அவர்களிடம் கருத்துக்கேட்கவும். காரணம் அதற்கு, அவர்களே மிகவும் திறைமையான ஒலிப்பதிவாளர்கள்.

மிக்க மிக்க நன்றிகள் உங்கள் தரவுகளுக்கு .ரெஜிபொமினால் ஆனா காண்ணாடி யன்னல்கள் கொண்ட ஒரு ஒலிப்பதிவு சிற்றறையை செய்ய இன்று ஆரம்பித்துள்ளேன் .எனது இனிய நண்பர் ஒருவருக்கு இதை பற்றி சொல்ல உடனே அவர் இங்கு வந்து அந்த வேலையை செய்யத்தொடங்கினார் ..........நாளை மிகுதியை தொடர மீண்டும் வருவார் ............எல்லாம் அந்த மாவீரர்களுடைய மூச்சுக்காற்றுடன் இனிதே நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது ..........நாளை வேலை முடிந்ததும் என் உறவுகளாகிய உங்களுக்கு புகைப்படம் மூலம் காட்டுகிறேன் .........உண்மையில் நீங்கள் தந்த அத்தனை பதில்களும் யதார்த்தமானவை .அந்தவகையில் .
 
நெற்கொளு, கரும்பு  அண்ணா , சுபேஸ், தயா அண்ணா .வாசி அண்ணா , எழு ஞாயிறு.அண்ணா ,விசுகு அண்ணா அனைவர்க்கும் என் இதயம் கலந்த நன்றிகள் .
  • கருத்துக்கள உறவுகள்

பாடகருக்கு தனிக்கூடம் அமைப்பதே சரி என்று தோன்றுகிறது.. முன்பு தமிழ்ப்பாடல்கள் தமிழகத்தில் ஒலிப்பதிவு செய்யும் காட்சிகளைக் கண்டிருக்கிறோம்தானே.. :D

தனி அறை இன்னொன்றுக்கும் நல்லது.. அதாவது பாடகர் சுரத்தை எட்டிப்பிடிக்க அவலப்பட்டு முகம் அஷ்டகோணல் ஆவதைக் காணவேண்டியதில்லை அல்லவா?? :icon_idea::D

ஆமாம் நண்பா நான் செய்யும் இந்த கூடத்தில் சுரத்தை எட்டிப்பிடிக்கிறார்களோ இல்லையோ மூச்சு திணராமல்.ஆரோக்கியமாக வெளியே வந்தால் அதுவே பெரிய விடயம் . :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன்  கடின உழைப்பு வீண் போகாது
உழைப்பின் பலன் காலம் பல சென்றாலும் என்றாவது ஒருநாள் கிடைத்தே தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

stock-photo-radio-dj-man-indoor-at-radio

தமிழ்சூரியன் பொதுவாக ஒலிப்பதிவுக்கூடம் மிகக்குறுலாகவும் இந்த ஒலியை உறிஞ்சும் பொஞ்சினால் சூழப்பட்டதாகவும் இருந்தால் உங்கள் குரல் தவிர்ந்து மற்றைய ஒலிகளை உள்வாங்கி பதிவு செய்யும் வாய்ப்பு குறைவானதாக இருக்கும். அத்தோடு முக்கியமாக ஒலிவாங்கிக்கு பொஞ்ச் அணியவேண்டும் அப்போதுதான் உங்கள் மூச்சுக்காற்றின் ஓசையை குறைக்க முடியும். உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தைப்பாருங்கள். சிறிது காலம் வானொலி நேரலையில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. அவ்வளவுதான். :rolleyes:

Acoustic_Foam_Panel_Convoluted_400.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் வைத்துள்ளேன்.மைக்குக்கு கட்டாயம் மேலே போடக் கவர் தந்திருப்பார்கள் தானே. அது அவசியம். அது போட்ட பின்னரும் இரைச்சல் கேட்டால் உங்கள் மிக்சர் போட்டின் செட்ரிங்கில் முழுமை இல்லை என்று அர்த்தம்.அதைக் கவனிக்கவும்.அத்துடன் மற்றவர்கள் கூறியதுபோல் சத்தம் எதிரொலிக்காத அறையும் நன்றுதான். ஆனால் இப்போது வரும் நவீன மைக்குக்களில் இருப்பவரின் சத்தம் மட்டுமே உள்வாங்குவதுபோல் அமைத்துள்ளனர்.

  • தொடங்கியவர்

நன்றிகள் உங்கள் யதார்த்தமான தரவுகளுக்கு  சகாரா அக்கா ,சுமேரியர் அக்கா ....எல்லா விடயங்களையும் உள்வாங்கி நல்ல ஒரு முடிவுக்கு வந்த பின் நல்ல செய்தியை உங்களுக்கு அறிவிப்பேன் .

அறிவிப்பாளர் பயன்படுத்தும் மைக்குக்கும் பாடகர் பயன்படுத்தும் மைக்குக்கும் வித்தியாசம் உண்டு. பாடகர் பாடும் மைக்குக்கு தொப்பியோ முகமூடியோ அணிவதில்லை என நினைக்கிறேன். அதற்குப் பதிலாகத்தான் அதன் முன்னே வட்டமாக ஒரு வடிகட்டி உள்ளது.

ஏற்கெனவே பாடல் ஒன்றை பதிவு செய்த அனுபவம் சுமே அவர்களுக்கு உள்ளதுதானே.. அங்கு அதை அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார்கள் என்ற அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்தானே? :)

  • தொடங்கியவர்

வணக்கம் உறவுகளே இரண்டு நாட்களாய் பெரும் சுமைகளின் மத்தியில் இந்த பாடகர் கூண்டை செய்து பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட்டேன் .இதற்கு நீங்கள் தந்த அனைத்து யதார்த்தமான தரவுகளுக்கு மீண்டும் ஒரு தடவை நன்றிகள் கூறிக்கொள்கிறேன் .நன்றிகள் 

[i

1237767_169785703223672_433385176_n.jpg/intl/en_ALL/images/logo.gif]

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிப்பாளர் பயன்படுத்தும் மைக்குக்கும் பாடகர் பயன்படுத்தும் மைக்குக்கும் வித்தியாசம் உண்டு. பாடகர் பாடும் மைக்குக்கு தொப்பியோ முகமூடியோ அணிவதில்லை என நினைக்கிறேன். அதற்குப் பதிலாகத்தான் அதன் முன்னே வட்டமாக ஒரு வடிகட்டி உள்ளது.

ஏற்கெனவே பாடல் ஒன்றை பதிவு செய்த அனுபவம் சுமே அவர்களுக்கு உள்ளதுதானே.. அங்கு அதை அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார்கள் என்ற அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்தானே? :)

நான் என் வீட்டில் இந்த மாதிரி மைக்கை வைத்துள்ளேன். நாடகங்கள், பாடல்கள் என நிறைய பதிந்துள்ளேன். என் வீட்டில் மூடிய அறையில் செய்வோம். நடுவில் மைக்கை வைத்துக்கொண்டு பலர் ஒரே நேரத்தில் சுற்றிவர நின்று அல்லது இருந்து செய்வோம். மிகத் துல்லியமாக வரும். நான் பதிவு செய்வது சவுண்ட் பூத் என்பதில். ஆகவே கணனியில் இரைச்சல்களைக் குறைக்கலாம். தேவையானதை வெட்டலாம். ஒட்டலாம். 

ஆனால் தாயகத்தில் மூடிய அறைக்குள் ஹெட்போன் போட்டு அதில் வரும் இசையைக் கேட்டுப் பாடிய அனுபவம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சூரியன்...

உங்கள் பதிவை இப்பத்தான் பார்த்தேன்.... 

இது கொண்டென்சர் வரை மைக்கிரோபோன் இதற்கு phantom power உங்கள் சவுண்காட்டில் இருந்து போகவேண்டும், அதெல்லாம் நீங்கள் சரியாகக்கொடுத்து ஒலிப்பதிவு செய்யும் போது சவுண்கட்டில் மைக்கிரோபோனுக்குரிய இன்புட் சரியான அளவு கொடுத்து, நீங்கள் இசையடையமைப்பில் நீண்டகாலம் இருப்பதால் ஒலிப்பதிவின் அடிப்படையெல்லாம் தெரிந்திருக்கும், அந்தவகையில் ஒலிப்பதிவு செய்திருந்த்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்க வாய்ப்பில்லை, காரணம் கண்ணாடி அறை ஏதும் இல்லாமல்,  சாதாரண அறையில் ஒலிப்பதிவு செய்த எனது பாடல் ஒன்று mastering stage 98% முடிந்தளவில் இருக்கிறது. அதை நீங்கள் கேட்டால் எனது விளக்கத்தை புரிந்துகொள்ள முடியும். ஆனாலும் உங்கள் ஸ்ரூடியோ செட்டப் மிகவும் தரமான ஒலியைக் கொடுக்குமென்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

இருந்தும் உங்கள் விசயத்துக்கு வந்தால், சரியான அளவு மைகிரோபோனின் இன்புட் சவுண்காட்டுக்கு செல்லாமல் நீங்கள் குரலை ஒலிப்பதிவு செய்து அந்த track ஐ normalise பண்ணி இருந்தால் உங்கள் மாதிரி பிரச்சனை வர வாய்ப்புக்கள் இருக்கு.

மேலும் இந்த மைக்கில் ஒலிப்பதிவு செய்யும் போது பக்கத்தில் ஸ்பீக்கர்ஸ், அம்பிளிபையர், அறை யன்னல்கள் திறந்து இருந்தால் காற்று இரைச்சல் போன்றவற்றை எல்லாம் இந்த மைக் பிக்கப் பண்ணி விடும் அளவுக்கு இந்த வகை மை சென்சிட்டி வாய்ந்தது.

உங்கள் ஒலிப்பதிவை கொம்பியூட்டரில் பதிவு செய்த வேவ் பைலின் screenshot ஐ இந்தப் பதிவில் போட்டலோ அல்லது எனது மெயிலுக்கு அனுப்பினாலோ என்னாலான உதவியை செய்யப் பார்க்கிறேன்... 

நன்றிகள்

  • 1 year later...

வணக்கம் உறவுகளே இசையமைப்பு ஒலிப்பதிவிற்காய் ஒரு ஸ்டூடியோ மைக் வாங்கினேன் ...எனது குரலில் பரீட்சித்து பார்த்தேன் .பாடி அதை ஒலிப்பதிந்தபின் ..Normalize.செய்யும்போது ஒரு இரைச்சல் பின்னால் வருகிறது .பல முனைகளிலும் முயன்று பார்த்தேன் ........முடியவில்லை . உங்கள் யாருக்காவது இந்த விடயம் பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள் நன்றிகள் .

இப்படியான மைக்கை முன் பாவித்த அனுபவம் எனக்கு இல்லை .

1157714_169038586631717_1905230755_n.jpg/intl/en_ALL/images/logo.gif]

நீங்கள் பாவிக்கும் மைக் முன்னாடி ஒரு நெட் பூட்டவெண்டும் ,அல்லது நீங்கள் பின்வரும் சாப்ட்வேர் இ உபயோகித்து பார்ர்க்கலாம் MAGIX Audio Cleaning Lab 2014 - http://www.magix.com/int/audio-cleaning-lab/ நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.