Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராளியின் நாள் குறிப்பு .!

Featured Replies

ஜெயசுக்குறு ராணுவ நடவடிக்கை நடைபெற்ற காலம் வன்னியின் மேற்கு கிழக்கை கிழமைக்கு கிழமை மாறி மாறி திரிந்தவண்ணம் இருந்தோம்... எமது அணி விஷேட வேவு பிரிவு என்பதால் நாளாந்தம் எதிரி நிலை கண்காணித்து அறிக்கை கொடுக்க வேண்டிய பணியாக இருந்தது.. எமக்கு என்று ஒரு காப்பரண் எல்லை கிடையாது. வன்னியின் கிழக்கு பகுதியில் நின்ற எமக்கு அழைப்பு உடனும் கிளம்பி வரும்படி.. இரவுப் பயணம்.. வந்தவேகத்தில் நித்திரை தூக்கம் நல்லாய் உறங்கீட்டம்.. ஆனாலும் காதுகளில் பெண்களின் குரல் கூடுதால கேட்டபடி இருந்தது.. அதிகாலை விடியலை தேட கண்விழித்து பார்த்து பொறுப்பாளருக்கு தொடர்பை எடுத்தோம்.. எங்க வரணும்..? அவர் நீங்க நில்லுங்க நான் வந்து கூடி வாறன் என் பதில் சொல்லி தொடர்பை துண்டித்தார் . சரி எழும்பி முகம் கழுவ போவம் என கொட்டிலை விட்டு வெளியில் வந்தால் சுற்றி பெண்பிள்ளைகள்.. என்ன அண்ணாமரே குறட்டை ஆமி லைனுக்கு கேட்டு இருக்கும் என நக்கல் பண்ணியபடி நின்றார்கள்.. நாங்களும் பதிலுக்கு ம்ம் சென்றி பார்க்காமல் எங்க குறட்டை கேட்டியலே என்றபடி பேச்சு கொடுத்தம்..

 

அவர்கள் கடல்புலிகளின் மகளிர் அணி.. எக்கோ லைனில் நிறுத்த பட்டு இருந்தனர்.. அவர்களுக்கு அடுத்து விஷேட வேவு புதிய பயிற்சி பெற்ற போரளிகள் பப்பா லைனிலும் வவுனிக்குளம் அலைகரையில் ஜெயந்தன் சிறப்பு தாக்குதல் படையணியும் நிலை எடுத்து இருந்தது... கடல்புலிகள் அணிக்கு லெப்டினன் கேணல் காதம்பரி அக்கா கொம்பனி பொறுப்பா இருந்தார்.. வேவு அணி ஜெரி அண்ணையின் பொறுப்பிலும் ஜெயந்தன் படையணி இனியபாரதி பொறுப்பிலும் நின்றனர்... மூன்று முறிப்பில் இருந்து கல்லிருப்பு வரை பக்கவாட்டா நிலைகள் அமைந்து இருந்தது.. நாங்கள் ஒன்பது பேர் மேஜர் சுயாத்தின் தலைமையில்.. கையில் வரைபடம் கொண்டு என்ன நடக்கு என்றபடி உள் வந்தார் தீபக் மாஸ்ரர்.. இருக்குறம் அண்ணே என்ன பெரிய அலுவலா..? என கேட்டு யூரியா பையை தரையில் விரித்தான் செழியன்.. இல்லடப்பா வழமைதான் இந்தபக்கம் உடைக்க போறான் போல கிடக்கு அதுதான் இரண்டு நாள் ஆவது உள்ள தங்கி பார்க்க வேணும் பெடியள் புதுசு அதுதான் ஜெயம் அண்ணை உங்களை இங்கால எடுக்க சொன்னவர் ஒரு மாதம் அப்படி இப்படி நில்லுங்க என்று வரைபடத்தை விரித்து அதில் மூழ்கி போக..

 

அண்ணே பிளேண்டி சீனி இல்லை குடிப்பியலே என கேட்டபடி ஐங்கார் டின்னில் தேனீர் வைத்தாள் ஒரு பெண் போராளி.. காலையில் எழும்பி பிள்ளைகளிடம் ஒரு தேனீர், மதியம் ஜெயந்தன்காரரிடம் போனால் எதாவது சுட்டு வாட்டி வைத்து இருப்பாங்கள் அங்கின சாப்பாடு என்று இரண்டு நாள் போயிட்டு.. அடுத்த நாள் அதிகாலை பிள்ளைகளின் நிலைபக்கம் உடைப்பு.. செம சண்டை நடக்கு.. எங்களுக்கு நிலைகள் இல்லை.. பிள்ளைகளுக்கு சப்போட்டுக்கு இறங்குங்க என்று அழைப்பு வரும் என்றால் அதுகும் இல்லை.. தலை தூக்க முடியாதபடி செல் போட்டு தாக்குறான்.. மதியம் நெருங்க நெருங்கிட்டான் என்றவுடன் கருணா அம்மான் இனியபரதிக்கு அழைப்பு.. டேய் பெடியளை கொண்டு எக்கோ பக்கம் உடனம் உடனம்... சரியண்ணை என தொடர்வை துண்டித்து வேகமா கிளம்பி ஓடியபடி அவர்கள் போக பின்னாடி நாங்களும் கவருக்கு வாறம் என சொல்ல வேணாம் இங்க நில்லுங்கோ ஆள் பேசும் உங்களின் வேலை இன்னும் முடியவில்லை தொடர்பு வரும் வரை வரவேணாம்...

 

ஆத்து கிடங்கில் படுத்தபடி மேலால் போகும் கிபிரையும் செல்லையும் எண்ணிக்கொண்டு என்ன கொடுமை அங்க நிண்டு இருக்கலாம் வாத்திக்கு தொடர்பை போடுங்கோ சுயாத் என்று நச்சரித்தபடி இருக்க அவரே அழைப்பில் பப்பாக்கு நடுவுல வாங்கோ என்றார்.. சரி என கிளம்பி ஓடிவர கிபீர்.. ஒரு மட்டக்கிளப்பு போராளி மருவ கிறிகிட்டு வருது மடுவில் பொசிசன் எண்டான் (அவன் சொன்னது மறுபடியும் கிபீர் வருது பங்கருக்க போங்கோ என ) எங்களுக்கு சண்டை சத்தம் அவன் சொன்னது விளங்க வில்லை.. திருப்பி நல்ல தமிழ்ல சொன்னான் டேய் ...........மக்களே விழுந்து படுங்கோ என்று சொல்லி வாய் மூட புழுதி எழும்புது.. மரம் செடி கொடி எல்லாம் சரிஞ்சு விழ 100மீற்றர் தள்ளி விழுந்து இருக்கும் குண்டு.. அட அழிஞ்சு போவானே.. எல்லோரும் ஓகேயா.. ஓம் ஓம்.. திரும்பி குத்த முதல் ஓடுங்கடா என்று குரல் கொடுத்து விழுந்து அடித்து ஓடி ஒவ்வொரு நிலையில் போய் விளுந்தம் .

 

பின்னேரம் சண்டை ஓய்வுக்கு வந்திட்டு.. அம்மான் வரட்டாம் உடனும்..தவல்வர அம்மானின் கட்டளை பீட நிலைக்கு போனம்.. அங்க அவன் இங்கால பெரிய அளவில் நசலை கொடுக்க போறான் போல இருக்கு நீட்டுவரிக்காரர் ஒரு ஐந்து பேர் வேணும் எண்டு சொல்லுங்கோ (விக்டர் கவச எதிர்ப்பு படையணி ).. அந்த ஒரு ஆர் பி ஜி போராளிக்கு முன்று பேர் பாதுகாப்பு கொடுக்க வேணும் அப்படி பெறுமதியா வளர்த்து வைத்து இருந்தார் தலைவர்.. நீட்டு வரி போராளிகளை கண்டால் பவள்வாகனம் பின்னாடி போகும் அப்படி காட்டு காட்டி வைத்து இருந்தவங்கள் அடியின் பவர் அப்படி .

 

அம்மான் சொன்னார் இன்று இரவே போங்கோ என்ன நடக்கு எங்க சப்ளே வருது எந்த ரூட் பாவிக்குறான் முடிந்த அளவு பாருங்கோ கவனம் இப்ப முன்னுக்கா நிக்குறான் குறுக்க எங்காவது மாட்டாமல் பின்னாடி போய் சுற்றி வாங்கோ நல்லம் உங்களுக்கு.. கல்லிருப்பை பிடிச்சு இறங்குங்கோ ஒரு கிழமைக்குள் முடிஞ்சதை எடுங்கோ அவன் அடுத்த மூவ் எடுக்க முதல் நாங்க பூரணும் தம்பியா சரியா... தலயாட்டி நடந்தோம் வந்த வேகத்தில் எடுத்து வைக்க வேண்டியதை எல்லாம் வைத்து விட்டு பொழுது சாய இறங்கிநடக்க தொடங்க பின்னாடி அண்ணாக்கள் கவனம் மணிக்கூடு எலாம் எல்லாம் நிப்படுங்கோ சிலவேளை மறந்தால் அவன் நிலையில் நிக்கும்போது அடிச்சு காட்டி கொடுத்து போடும் என பிள்ளைகள் சொல்ல.. சரி பருவாயில்லை நீங்களே வைத்து இருங்கோ என்று கூறி கழட்டி கொடுத்து விட்டு கைகாட்டி நகர்ந்தோம் .

 

இரவு ஏழு மணிக்கு பின் காடு புகுந்து நடந்து வண்டில் பதை ஓரமா குறிப்பு பிடித்து மூன்றுமுறிப்பு கல்லிருப்பு பிரதான வீதி கடந்து ஒரு கிலோமீற்றர் தள்ளி நிலை எடுத்தோம்.. இரவு பார்வை முடிந்து பகல்.. எம்மை நன்றாக மறைத்து சூரியனுக்காய் காத்து இருந்தோம்..அவனின் நடமாட்டம் மிக குறைவா இருந்தது.. காலையும் அப்படி வாகன ஓட்டம் கூடுதலா இருக்கு ஒரு 30க்கு மேல் காவலரண்.. அதில் மூன்றில் ஒன்றில்தான் இரண்டு ஆமி என நின்று இருந்தான் ஒரு பொழுது போட்டுது.. இண்டைக்கு நெருங்கி பார்ப்பம் டம்மியா இல்லையா என்று இரவு நகர்ந்து பார்த்து விட்டு விடிய போவம் வெளியில தடையை தண்டி வந்தா ஓகே கணிவெடி பதை எடுப்பம் இல்லாட்டி பார்ப்பம் என்று குறி நிலைகளை பார்த்து விட்டு நன்கு பேரும் நடக்க தொடங்கினோம் . இரவுடன் காடு மாறி நடந்து வந்து இடம் பிடிபடாமல் வந்து வவுனிக்குளம் அப்பால் உள்ள கிடாய்பிடித்த குளம் பக்கம் வந்து ஏறி திரும்பி மூன்றுமுறிப்புக்கு நடந்து வந்து சேர பசி உயிரை கொண்டு போகுது..

 

ஆளிட நிலைமை சொல்லவேணும்.. ஆக்கள் வந்திட்டாங்கள் அனுப்பவோ..? என வாத்தி கேட்க.. உடனும் ஆள் கிளம்ப போகுது ஓடி வரட்டாம் என.. அந்த களையுடன் மறுபடி மெயினுக்கு ஓட்டம்.. என்னடாப்பா என்ன கதை சாப்பிட்டியலா..? டேய் தண்ணி கொடுங்க.. சரி இருங்கோ கதைக்கலாம் ஒரு அவசரம் இல்லை நோமலுக்கு வாங்கோ என்று அம்மான் சொல்லிட்டு செட்டில் ஏதோ கேட்டபடி இருந்தார்.. நாங்கள் தண்ணி குடித்து விட்டு சரி அண்ணே அவன் இவ்வளவு இடமும் நெருக்கம் இல்லை சும்மாடம்மி வளங்கள் மாங்குளம் ஊடா நடக்கு போல.. இந்த ரோட்டு சாப்பாடு மட்டும்தான் போகுது.. வடிவா பார்த்தனியலா பிசகு இருக்க கூடாது நான் இன்று ஆளை சந்திப்பன் முடிவு கேட்க சிக்கல் இருந்தா முதலே சொல்லி போடுங்க என அமான்..

 

அப்பொது தமிழ்வேந்தன் சொன்னான் இல்லை முன்னுக்கு நல்ல நிலை போட்டு இருக்கு அதை உடைச்சா உள்ள ஒன்னும் இல்லை என்று.. ஓகே வரைபடம் எடுத்து கோடு போட்டு சொன்னார் இவ்வளவு துரம் என்ன நிலைமையில் இருக்கு ஒரு கிழமை பாருங்கோ என... இந்த ஒரு கிழமையும் உலர்உணவு சாப்பாடு மச்சி என்று சொன்னபடி தளம் திரும்பி மீண்டும் இரவுக்கு பயணம்.. அதிகாலை மீளுதல் என அம்மானின் எல்லையை குறித்து எடுத்து வந்து தீபக் மாஸ்ரர் இடம் கொடுத்தம்.. பார்த்திட்டு கொண்டு போனவர் ஜெயம் அண்ணையுடன் பேசிவிட்டு அம்மானிடம் கொடுத்து வந்து சொன்னார் இனி அவை முடிவு எடுப்பினம் அதுவரை நீங்க போய் பார்க்க வேணும் நிலை மாறுதா இல்லையா என..

 

ஓகே இரண்டு கிழமை போய் இருக்கும் சண்டை ஒழுங்கு சிறிய அளவு ஏற்பாடு பண்ணி முன்றுமுறிப்பு ஒரு கிலோமிற்றர் தாக்குதல் நடைபெற்று தாக்கி அழிக்கப்பட்டது.. அதில் லெப்டினன் தமிழ்வேந்தன் வீரச்சாவு அடைகிறான்.. கூடி திரிந்தவன் உடைக்கலாம் என ஆணித்தரமா கூறி நின்றவன் அச்சமரில் விதையாய் விழுந்தான்.. தோழனை சுமந்தபடி தளம் திரும்பினோம்...

 

 

Edited by அஞ்சரன்

நல்லாய் இருக்கு , தொடர்ந்து எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அஞ்சரன்

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓகே இரண்டு கிழமை போய் இருக்கும் சண்டை ஒழுங்கு சிறிய அளவு ஏற்பாடு பண்ணி முன்றுமுறிப்பு ஒரு கிலோமிற்றர் தாக்குதல் நடைபெற்று தாக்கி அழிக்கப்பட்டது.. அதில் லெப்டினன் தமிழ்வேந்தன் வீரச்சாவு அடைகிறான்.. கூடி திரிந்தவன் உடைக்கலாம் என ஆணித்தரமா கூறி நின்றவன் அச்சமரில் விதையாய் விழுந்தான்.. தோழனை சுமந்தபடி தளம் திரும்பினோம்...

 

உறங்காத கண்மணிகளின் இழப்புகளின் மீதே ஒவ்வொரு களமும் வெற்றிக் கொடி நாட்டியது. தமிழ்வேந்தன் போல் ஆயிரமாயிரமாய் தாயகத்தை நேசித்து தங்களைத் தந்தார்கள். அவர்களது தியாகத்திற்கு நன்றியாக அவர்கள் கனவை நனவாக்க ஒவ்வொருவரும் தொடரும் பயணம்....!

குத்துவரி கொமாண்டோக்களின் வரலாற்றில் மறக்கப்பட முடியாத தளபதி அக்பர் அண்ணாவினால் வளர்க்கப்பட்ட குத்துவரி கொமாண்டோக்களின் வரலாறுகளும் எழுதப்பட வேண்டும்.

நன்றி அஞ்சரன் பகிர்வுக்கு.

 

  • தொடங்கியவர்

நன்றி உங்கள் வரவுக்கு கரன் ...சுமேரியா சாந்தி அக்கா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அண்ணெய் பற்றியும் சொல்லி இருக்கிறீங்கள் அதுவும் அம்மான் என்று வேற சொல்லி இருக்கிறீங்கள் இது நியாயமா? யாழில் இருக்கும் கொஞ்சப் பேருக்கு இதெல்லாம் பிடிக்காதே <_<

  • தொடங்கியவர்

கருணா அண்ணெய் பற்றியும் சொல்லி இருக்கிறீங்கள் அதுவும் அம்மான் என்று வேற சொல்லி இருக்கிறீங்கள் இது நியாயமா? யாழில் இருக்கும் கொஞ்சப் பேருக்கு இதெல்லாம் பிடிக்காதே <_<

 

எப்பவும் ஜெயசுக்குறு கதாநாயகன் கருணா அம்மான் தான் அதை தலைவரே ஒருவருட வெற்றிவிழாவில் சொல்லி இருந்தார் 3000ஆயிரம் போராளிகளுடன் வந்தவர் திரும்பி போகும்போது முழுதா போனது 800 பேருக்கு கிட்டவா இருக்கும் மனிதர்கள் மாறலாம் வரலாறு மாறாது . :(

நீங்களும் நம்ம கேஸ் போல நாங்கள் ஆகாயம்.தொடருங்கள்

  • தொடங்கியவர்

நன்றி அனைவருக்கும் வரவுக்கும் கருத்துக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யோசிச்சன் என்ன கருணா இனிய பாரதி எல்லாம் வந்து போகினம் என்று but as you said வரலாறுகளை மாற்றி எழுத முடியாது தானே தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அஞ்சரன் இஞ்சை யாழிலை புலிகளையும். தமிழ்தேசியத்தையும் சிலர் ஒட்டு மொத்தமா குத்தகைக்கு  எடுத்திருக்கினம் பாத்து  சூதானமா  நடந்து கொள்ளப்பு. இதுதான் என்னாலை முடிஞ்சது.

  • தொடங்கியவர்

நான் உயிருடன் உள்ளவரை எவரும் ஈழத்தை விற்க விடமாட்டேன் நான் இல்லாத பிறகு எவர் வேணும் என்றாலும் மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்கலாம் .....தேசிய தலைவர் பிரபாகரன் .

 

இந்தியாவில் இருந்து ஈழத்துக்கு அனுப்பிய ஒரு கடித குறிப்பு அது கண்முன்னே நடக்கு இப்ப விடுங்க :(

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி பகிர்விற்க்கு..

Edited by சுபேஸ்

வரலாறைப் பலர் பலவிதமாக எழுதினாலும் சம்பவம் என்ற உள்ளுடனை யாருமே மாற்றமுடியாது. அஞ்சரன் மேலும் தொடர எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

 

  • தொடங்கியவர்

நன்றி கோமகன் சுபேஸ் வரவுக்கு கருத்துக்கும் . :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ அஞ்சரன்

  • தொடங்கியவர்

நன்றி புத்தன் அண்ணா .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கோ அஞ்சரன் அண்ணா.. :)

  • தொடங்கியவர்

நன்றி ஜீவா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.