Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் - ததேகூவுக்குள் சர்ச்சை

Featured Replies

ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் - ததேகூவுக்குள் சர்ச்சை

வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் என்பதால், ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்யக் கூடாது என்ற கருத்துக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகவும், தாமும் அதனையே ஆதரிப்பதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.

ஆனாலும் சுமூகமான ஆரம்பத்தை நோக்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்க வேண்டும் என்று சர்வதேச சமூகமும் ஏனைய பலரும் கேட்டிருப்பதாக இரா. சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தை மக்கள் உணர்வுபூர்வமாகப் பார்ப்பதால், கட்சிகளும் அதனையே பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தாங்கள் சிங்கள அரசிடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்ற கருத்து மக்கள் மனதில் ஏற்பட்டுவிடும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவை குறித்த அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131004_tnaswearinrow.shtml

பிபிசி தமிழ் சேவையிடம் திடமாக பதிலும் அசடும் வளிந்த  சித்தார்த்தன்...  

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/10/siddharthanswearindilemma_131004_tnaswearinrow_au_bb.mp3

Edited by தயா

மஹிந்த முன்னிலையில் பதவிப்பிரமாணம்; நாட்டைவிட்டு வெளியேறினார் மாவை!?

— 

04/10/2013 at 8:35 pm

 | no comments

mavai-senathiraja-150x150.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றியீட்டியிருந்தாலும் கூட்மைப்புக்குள் நிலவும் இழுபறி நிலையின் தொடராக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நாட்டை விட்டு அவசரமாக வெளியேறி இந்தியா சென்றிருப்பதாக தெரியவருகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவி ஏற்கவேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீவிரமாக வலியுறுத்தி வந்திருந்த நிலையில் கூட்டமைப்பின் கடந்த கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் மாவை சேனாதிராஜாவும் ஏனைய கட்சி தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை தீவிரமாக எதிர்த்திருந்தனர்.

இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலும் இது தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன் மற்றும் சுமந்திரன் ஆகியோரே சம்பந்தனுக்கு சார்பாக மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் மேற்கொள்ளவேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தியிருக்கின்றனர்.

இதனிடையே முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் மேற்கொள்வதில் மாற்றமில்லை என்பதை உணர்ந்த மாவை சேனாதிராஜா நேற்று இரவு அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக தெரியவருகின்றது. எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்வில் பங்குகொள்ளாமல் தவிர்க்கும் நோக்கிலேயே அவர் இந்தியா பயணமாகியிருப்பதாக தெரியவருகின்றது.

இதேவேளை, தனது நம்பிக்கைக்குரிய இளைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மஹிந்த முன்னிலையில் பதவி ஏற்கும் விவகாரம் தொடர்பில் மௌனம் சாதித்தமை குறித்தும் மாவை சேனாதிராஜா கொழும்பின் மூத்த தமிழ் ஊடகர் ஒருவரிடம் மனம் வருந்தியதாகவும் தெரியவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

விதியே விதியே என்செய்ய நினைத்தாய் இந்த தமிழ்ச்சாதியை? :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே   சர்ச்சைகள் நிறைந்த ஒரு அமைப்பு.

எந்த விடையமானாலும் இழுபறி நிலை

சம்பந்தரின் சாணக்கிய எதேச்சாதிகாரம்
 
இதற்குள் விக்கினேஸ்வரன் மகிந்த முன்னிலையில்
எந்தப் பிரமாணத்தை எடுத்தும் என்ன பயன்  

தேர்தலின் பின் எது நடக்கும் என்று சொன்னமோ அது நன்றாக நடக்கிறது.

சம்பந்தரும் ,விக்கியும் சுமந்திரனும் மக்களுக்குப்  பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

புலிக்கு வாலும் , சிங்கத்துக்கு தலையும் காட்டி நடாத்தும் அரசியல் ஒரு காலமும் உருப்படாது.

விதியே விதியே என்செய்ய நினைத்தாய் இந்த தமிழ்ச்சாதியை? :(

இப்படி  ஓர் இரு நாளில் புலம்புவீர் என்று நான் கூட எதிர்பார்க்கவில்லை.

இப்படிக்கு புலம் பெயர் புண்ணாக்கு.

இந்த வடக்கு மாகாண சபை மூலம் உரிமைகள் பெற்றுக் கொள்வதை விட இருக்கும் அதிகாரங்களை வைத்து ஓரளவுக்கேனும் வடக்கை அபிவிருத்தி செய்ய முனைவது தான் சாத்தியபாடான விடயம். அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டு இருக்கும் வடக்கு மக்களுக்கு முதல் தேவையாக இருக்கும் அபிவிருத்தி போன்றவற்றை செய்வதற்கு வடக்கு மாகாண சபையும் அதன் உறுப்பினர்களும் மத்திய அரசுடன் தேவையற்ற விடயங்களுக்கு எல்லாம் முரண்டு பிடிப்பது சரியான வழியாக இருக்காது.

முரண்டு பிடிப்பதற்கும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. வெறுமனே யார் முன் பதவிப் பிரமாணம் எடுப்பது என்பது போன்ற சில்லரைத்தனமான விடயங்களுக்காக முரண்டு பிடிப்பது வெறுமனே உணர்ச்சி அரசியல் செய்யவும், அதனை சாக்காக வைத்து மக்களை தொடர்ந்து தன் பக்கம் வைத்து இருக்கவுமே உதவும்.

ஆரம்பமே மோதல் போக்கில் அமையாமல் சுமூகமான போக்கினை கொண்டதாக அமைவதே சரியானதாக இருக்கும்.  மகிந்த முன் சத்தியப் பிரமாணம் எடுப்பது சுமூகமான ஒரு ஆரம்பத்தினைக் கொடுக்கும் என்ப்தால் அவ்வாறு செய்வதில் எந்த தவறும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan_Ranil_CI.jpgசிங்க கொடி பிடித்த சம்பந்தருக்கு மகிந்தவின் முன் சத்தியபிரமாணம் செய்ய வெட்கமாக இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின் பின் எது நடக்கும் என்று சொன்னமோ அது நன்றாக நடக்கிறது.

சம்பந்தரும் ,விக்கியும் சுமந்திரனும் மக்களுக்குப்  பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

புலிக்கு வாலும் , சிங்கத்துக்கு தலையும் காட்டி நடாத்தும் அரசியல் ஒரு காலமும் உருப்படாது.

இப்படி  ஓர் இரு நாளில் புலம்புவீர் என்று நான் கூட எதிர்பார்க்கவில்லை.

இப்படிக்கு புலம் பெயர் புண்ணாக்கு.

ஏதேது ஆனைகோட்டையில் கிரிமினல்களுக்கும் போலீசுக்கும் நடந்த சண்டையை அடுத்த யுத்தம் என்று அறைகூவிய உங்களை விடவா அண்ணே.
 
மேலே நிழலி சொன்னதுபோல் ஒரு அணுகுமுறை எடுக்காமல் கூட்டமைப்பின் சிலர் மீண்டும் உணர்ச்சி அரசியலை கையில் எடுப்பதால் வந்த ஆதங்கமே அது.
 
ஆனால் இதற்ககாக மற்றையவரின் பிள்ளைகளின் மண்டை ஓட்டில்ன் மேல் நின்று நான் கொலிடே போக ஒரு தனிநாடு வேண்டும் எனும் புலம் பெயர் சுடுகாட்டு அரசியலை மட்டும் ஆதரிப்பேன் என்று கனவிலும் நினைக்காதீர்கள்.
 
கூட்டமைப்பு புடுங்குப்படுகிறது, நிலத்து மக்கள் வாழ்வில் நம்பிக்கையில் மண் விழுகிறது பற்றி தெரிந்ததுமே நீங்கள் துள்ளிக்குதிப்பது பார்க்கவே கண்றாவியா இருக்குதண்ணே. பார்த்து, சிரிக்கும் பற்களினூடே தெறிக்கிறது என் பிள்ளைகளின் ரத்தம்.
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தேர்தலுக்கு முன்னாடியும் மகிந்தவோடு சந்திச்சுப் பேச்சு. பின்னாடியும் சந்திச்சுப் பேச்சு. என்ன பேசுறார் என்றது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். சனத்துக்கு ஒரு நன்மையும் நடக்கிறதாத் தெரியல்ல. உந்த விலாங்குளை நம்பி தமிழ் மக்கள் இன்னும் எத்தினை காலம் தான் ஏமாறிறதோ..???! :rolleyes::o

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விலாங்குகளை நம்பேலாது, புலத்து திமிங்கிலங்களை நம்பினால், ஆமாம் ஆசையில் அப்படியே சாப்பிடும்.

ஏதேது ஆனைகோட்டையில் கிரிமினல்களுக்கும் போலீசுக்கும் நடந்த சண்டையை அடுத்த யுத்தம் என்று அறைகூவிய உங்களை விடவா அண்ணே.
 
மேலே நிழலி சொன்னதுபோல் ஒரு அணுகுமுறை எடுக்காமல் கூட்டமைப்பின் சிலர் மீண்டும் உணர்ச்சி அரசியலை கையில் எடுப்பதால் வந்த ஆதங்கமே அது.
 
ஆனால் இதற்ககாக மற்றையவரின் பிள்ளைகளின் மண்டை ஓட்டில்ன் மேல் நின்று நான் கொலிடே போக ஒரு தனிநாடு வேண்டும் எனும் புலம் பெயர் சுடுகாட்டு அரசியலை மட்டும் ஆதரிப்பேன் என்று கனவிலும் நினைக்காதீர்கள்.
 
கூட்டமைப்பு புடுங்குப்படுகிறது, நிலத்து மக்கள் வாழ்வில் நம்பிக்கையில் மண் விழுகிறது பற்றி தெரிந்ததுமே நீங்கள் துள்ளிக்குதிப்பது பார்க்கவே கண்றாவியா இருக்குதண்ணே. பார்த்து, சிரிக்கும் பற்களினூடே தெறிக்கிறது என் பிள்ளைகளின் ரத்தம்.

அடுத்த யுத்தம் என்று நான் எழுதி இருப்பதைக் காட்டவும்.எழுதாத விடயங்களை எழுதியதாக பொய் கூறுவதே உமது வழக்கமாகி விட்டது.

கூட்டமைப்பின் மேடைப் பேச்சுக்கள் உணர்ச்சி அரசியல் இல்லாமால் என்ன அரசியல்? மேடையில் வாக்கு வாங்க உணர்ச்சி அரசியல், பதவிக்கு வந்த பின் இணக்க அரசியல் என்றால் வாக்குப் போட்ட சனமும் பாதிக்கப்பட்ட சனமும் சும்மா விடுமோ?

புலம் பெயர் தேசத்தவர் எவரும் தனி நாடு கேட்கவில்லை, தமிழீழ மக்கள் தமது தலையெழுத்தை தாமே தீர்மானிக்க ஒரு வாகெடுப்பையே கோரி நிற்கிறார்கள். முதலில் எழுதியவற்றை வாசித்து விளங்கி கருத்து எழுதப் பழகவும்.

உங்கட பிள்ளையின் இரத்தமோ , யார் அது விளக்கமா எழுதவும்.அங்க பிள்ளையளைக் கொடுத்த சனம் தான் வாக்குப் போட்டது. நாங்கள் தேசியம் தன்னாட்சி என்பதில் அங்குலமும் விலகவில்லை என்று சொல்லித் தான் வாக்குக் கேட்டது கூட்டமைப்பு. தங்கட பிள்ளையளிர உயிரைக் குடிச்சவனோட நீங்கள் இணக்க அரசியல் செய்ய நாங்கள் வோட்டுப் போடேல்ல என்று சனம் கேட்க்கிற கேள்வியளுக்குப் பதில் சொல்ல ஏலாட்டி நாங்கள் என்ன செய்யிறது?

தேர்தல் நடந்த அடுத்த நாளே உங்களுக்கு போலிசு அதிகாரமும் கிடையாது காணியும் கிடையாது படையும் விலக்கப்பட மாட்டது எண்டு அவன் கிளீனா சொல்லிப் போட்டான்.

இதில் மகிந்த தெளிவா இருக்கிறான். இந்தியாவும் சொல்லிப் போட்டுது நாங்கள் கேட்டுக் கழைச்சுப் போட்டம் எண்டு.

சம்பந்தருக்கு மகிந்த எதாவது காதில சொன்னவரே செய்யிறன் எண்டு ,அதை வெளியில சொன்னா சனம் ஏன் நாக்கப் புடுங்கிற கேள்வி கேட்கப் போகுது?

  • கருத்துக்கள உறவுகள்

சனம் எங்கண்ணே கேக்குது? ஓ மறந்துபோச்சு நீங்கதான் சனம் சனம்தான் நீங்க. அப்பிடித்தானே.

என்பிள்ளைகள் யார் என்பதை புலத்து புண்ணியவான்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. நீங்கள் கொலைக்களத்துக்க அனுப்ப துடிக்கும் ஒவ்வொரு உயிரும் என்பிள்ளையே.

காணி பொலீசு கொசுமருந்து அடிக்கும் அனுமதிஉடைய அதிகாரமே தர மறுப்பவனிடம் இருந்து எப்படி தனிநாட்டு வாக்கெடுப்பை அடையப் போகிறிர்கள்?
 
இந்தியாவிடம் கேட்டா? - அவர்கள் அப்படி ஒன்றுக்கு எப்படி ஓம்படுவர்.
 
சர்வதேசத்திடம் இருந்தா - அவர்கள் எப்படி ஓம்படுவர்.
 
நடக்கிறகாரியமா கதையுங்க பாஸ்.

மகிந்தா தன் முன்னால் சத்தியப் பிரமாணம் எடுக்கச்சொல்லி கேட்டவரா தெரியாது. தேர்தல் முடிய நாட்டை விட்டு போயிருந்துவிட்டு நேற்றுத்தான் வந்தவர். ஆனால் சந்திரசிறி தன் முன்னால் எடுக்கக்கேட்ட சத்தியப்பிரமாணம் மறுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. அவை முழுவதும் தமிழ் பத்திரிகைள் கடந்த ஒருவாரகாலமாக எழுதி வந்த செய்திகளே. அதாவது பாம்பைக் காணாமலே பாம்படித்து முடித்துவிட்டன. 

எது சுமூகமான ஆரம்பமாக இருக்குமென்றோ அல்லது எதையோ செய்வது சுமூகமான ஆரம்பமாக இருக்கும் என்றோ சிங்கள அரசுகளிடம், அல்லது மகிந்தாவிடம் எடுபடத்தக்கதொன்றும் இல்லை. தேர்தல் முடியும் வரை காத்திருந்து முடிந்தவுடன் காணி உரிமையை கோடு மூலம் அரசு நீக்கியதானது அரசு தான் சுமூகமான ஆரம்பத்தை கூட்டமைப்பிடம் எதிர்பார்த்து இருக்கிறது என்பதைக்காட்ட அல்ல. 

மேலும் மகிந்தாமுன் சத்தியப்பிரமாணம் எடுப்பது, இந்த மாகாண சபை தேர்தலில் மகிந்தா கட்சியை மானம் கெடத்தக்கதாக தோற்கடித்ததற்கு தமிழர்களுக்கு இருக்க போகும் குறிசுடுதலில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது. தனிய பழிவாங்கலுக்கான விளக்கத்திற்கு இடம் கொடுக்காமலிருக்கும். இங்கே சம்பந்தப்படுவது தமிழர் மட்டும்தான் என்றால் அவர்கள் வெறும் பொய் விளக்கம் ஒன்றைப் பற்றிக் கவலைப்படுவது அர்த்தம் இல்லாதது.

கூட்டமைப்பு ஊள்ளூர் ஆட்சித்தேர்தல் தேர்தலில் வென்ற போது "இவர்களுக்கு தெருவிளக்கில் பல்ப் மாற்றுவதை விட வேறு என்ன முடிய போகிறது" என்று கேட்டவர் பசில். வடக்கின் வசந்தத்திற்கு பொறுப்பாக இருந்து, வடக்கில்  கூட்டமைப்பு தெருக்களுக்கு பல்ப் மாற்ற, தெருக்களுக்கு தார் போட்டவர்தான் இந்த பசில். ஆனால் எப்படி தேர்தல் முடிந்தவுடன் காணி அதிகாரம்  நீக்கப்பட்டதோ, அதே போலவே எதிர்பாராதபடி ஆரம்பம் சுமூகமாக இருந்துவிட்டாலும் என்று நினத்து, அதை பின்னர் சரி செய்து கொள்வதற்காகவே பசிலிடமிருந்து கூட இந்த வடக்கின் வசந்தம் எடுக்கப்பட்டுவிட்டது. வடகில் இராணுவமும், சட்டமும், பொருளாதாரமும் ஜனாதிபதியின் கைகளுக்கு மாற்றப்பட்டது, பாராளுமன்றத்தை  கலைத்து முழுவதாக ஜனாதிபதி ஆட்சி வந்தால், வடக்கு ஜனாதிபதியின் கையில் இருந்து திமிறிவிடாமல் இருக்க செய்யப்பட்ட முன்னவதான நடிவடிக்கை. அனந்தி தெரியப்பட்டதால் வெடிவைக்கப்பட்டதே தலைவரின் நிலக்கீழ் தங்குமில்லம். 

தேர்தல் எப்பவாவது தன் கையை மீறி வந்துவிட்டால் அதில் வெல்லும் என்று தெரிந்திருந்த கூட்டமைப்பு,  வடக்கு கிழக்கின் முன்னேற்றம் என்பதை கையில் எடுப்பதை அடைத்து மூட கொண்டுவரப்ப்ட்டதே திவி நெகும்பா. இதை புரியாமல் தனது சுய நன்மைக்காக அதைத் தடுக்கப்போய் சுழல் காற்றுச் சூறாவளியில் சிக்குண்டு ஒரே தூக்காக தூக்கி எறியப்பட்டவர்தான் சிராணி. சிங்கள் ஆட்சியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் உள்க்கிடக்கையும் அறிந்ததால்தான் சிராணியின் பதவி நீக்கத்தை கூட்டமைப்பு முழுமனத்தாக எதிர்த்தது. 

கிழக்கில் அரசு ஆட்சி அமைத்திருக்கு. நீண்ட பேரத்திற்கு பிறகு, "எது நடந்தாலும் தான் அரசை விட்டு நீங்க போவத்தில்லை" என்ற வாக்குறுதியுடன் மு.கா. அரசில் இங்கு இணைந்திருக்கு. இதை கூடட்மைப்பு வடக்கில் எந்த நிலைமையிலும் நிகர்ப்பதென்பதை நினைக்கமுடியாது. ஆனால் அங்கு இருக்கும் பிரச்சனைகளுக்காக அரசின் பங்குக்கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் தனது பகிஸ்கரிப்புகளை செய்துவருகிறது. அங்கு நடந்த கடந்த இரண்டு அரசின் ஆட்சிக்காலத்திலும் எதுவும் செய்யப்படவில்லை. அரசில் இருந்த பிள்ளையான் தன்னால் ஒரு சிற்பந்தியைக்கூட பதவியில் அமர்த்தமுடியவில்லை என்று குறைப்பட்டான்.

இந்த நிலையில் வடக்கைப் பொறுப்பெடுக்கும் கூட்டமைப்பு, அரசு விரும்பும் சுமூகமான ஆரம்பத்தை தொடக்கி, வடமாகணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதற்காவே தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று மாற்றுக்கருத்துக்களால் முன்னுரை கொடுக்கப்படுகிறது. (அரசு தோற்ற பின்னர், தான் செய்துவந்த அபிவிருத்திகளை, தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தேவையற்ற வெற்று உரிமை பேச்சுக்களை நம்பி கைவிட்டுவிட்டார்கள் என்று சவாலும் விட்டிருக்கிறது)

வடக்கில் சர்வதேச முதலீடு மெல்ல மெல்ல ஆரம்பம் ஆகலாம் என்றதை தெளிவாக தெரிந்துவைத்திருக்கும் அரசு வடக்கில் பொருளாதார முன்ன்ற்றங்கள் தலைஎடுக்க விட்டுக்கொடுக்கப்போவதில்லை

அரசு அமைதியான ஆரம்பம் எதையும் விரும்பவில்லை என்றதை உணர்த்த பல சமிக்ஞைகளை தெளிவாகத்தான் தெரிவித்திருக்கிறது.

ஒரு இனம் தன்னைத்தான் பாதுகாக்க முயன்றால் அதை பழிவாங்களாக எடுத்து பழிதீர்ப்பவர்களிடமிருந்து நியாயம் பிறக்காது. (தயாசிறி அதிக்கப்படியான வாக்குகளை எடுத்தற்காக அவர் மீதும் காய்வதுதான் மகிந்தா கூட்டம். மனமோகன் சிங்கின் அரசாங்கம் எவ்வளவோ இலங்கையின் காலில் விழுந்தும், தமிழரை அழிக்கும் போர்க்குற்றத்தில் தானும் பங்கு பற்றியபின்னரும் மகிந்தா அரசாங்கம் கிடைக்கும் இடமெல்லாம் இந்திய அரசை பழி வாங்கத் தவறுவதில்லை)
 
1948 தொடக்கம் தமிழ் மக்கள் பழிவாங்கப்படுவதுதற்கு இதுவரையில் ஞாயம் ஒன்றும் இல்லை. ஆனால் சட்டப்படியாக மகிந்தா முன் பதவிப்பிரமானம் எடுக்காவிட்டால் அதில் பழிவாங்களுக்கு ஒரு விளக்கம் கொடுக்க இடம் கொடுக்கப்படும் என்பதில் மறுப்பு இருக்க முடியாது. ஆனால்  சர்வதேச முயற்சிகள் ஐ.நாவில் காத்திருக்கும் போது அவர்கள் நினைப்பதை சம்பந்தர் அனுசரித்துப் போவதில் தவறு இல்லை. 

Edited by மல்லையூரான்

சனம் எங்கண்ணே கேக்குது? ஓ மறந்துபோச்சு நீங்கதான் சனம் சனம்தான் நீங்க. அப்பிடித்தானே.

என்பிள்ளைகள் யார் என்பதை புலத்து புண்ணியவான்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. நீங்கள் கொலைக்களத்துக்க அனுப்ப துடிக்கும் ஒவ்வொரு உயிரும் என்பிள்ளையே.

காணி பொலீசு கொசுமருந்து அடிக்கும் அனுமதிஉடைய அதிகாரமே தர மறுப்பவனிடம் இருந்து எப்படி தனிநாட்டு வாக்கெடுப்பை அடையப் போகிறிர்கள்?
 
இந்தியாவிடம் கேட்டா? - அவர்கள் அப்படி ஒன்றுக்கு எப்படி ஓம்படுவர்.
 
சர்வதேசத்திடம் இருந்தா - அவர்கள் எப்படி ஓம்படுவர்.
 
நடக்கிறகாரியமா கதையுங்க பாஸ்.

 ஏன் நீங்கள் சொல்வது தான் சனமோ? ஏன் மாவை இந்தியா சென்றார்? ஏன் சித்தார்த்தான் எமது மக்களும் தொண்டர்களும் மகிந்த முன் பதவிப் பிரமாணம் செய்வதை விரும்பவில்லை என்று பேட்டி கொடுத்தார்? ஓ அவையும் புலத்திலையா இருக்கினம்?

இங்கே இருந்து எவரையும் கொலைக் களத்துக்கு அனுப்ப நாங்கள் தாயாரில்லை. கொலை செய்தவனைத் தண்டிக்கவே நாங்கள் வேலை செய்கிறோம்.அதன் மூலமே கொலையுண்டவர்களுக்கு நீதி பிறக்க முடியும்.கொலை செய்தவன் தண்டனை பெறா விட்டால், கொலையுன்டவருக்கு நீதி கிடைக்காவிட்டால் , அந்த மண்ணில் தொடர்ந்தும் கொலைகள் நடக்கும்.அதனை நாங்கள் தடுக்க முயல்கிறோம், ஆனால் உங்களைப் போன்றோர் , காகம் இருக்க பனம் பழம் விழும் என்று சொல்லி, மக்களை கொலைக் களத்தினுள் தொடர்ந்தும் வாழ பாடுபடுகிறீர்கள்.ஏனேனில் நீங்கள் இங்கு பத்திரமாக பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.

டக்கிளசு அண்ணாச்சி பல வருடங்களாக இணக்க அரசியல் செய்கிறார், ஏன் சனம் அவருக்கு வாக்குப் போடவில்லை? நீங்களும் வாக்குப் போட்டாப் பிறகு அதைத் தான் செய்யப் போகிறீர்கள் என்றால் ஏன் சனம் உங்களுக்கு வாக்குப் போட வேணும்?

இதில் நான் உங்களுக்குச் சொல்வது , கூட்டமைப்பு உண்மையைப் பேசி முதலில் அரசியல் செய்யட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தமுன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்தால் தமிழிழம் கொடுத்து விட்டதாக சிங்களம் கொதித்தெழும்பும்.அதைச்சாட்டி மகிந்தவை விழுத்திப்போட்டு இன்னொருவர் பதவிக்கு வந்தாலும் அவரும் தமிழருக்கு எதிரான போக்கையே கடைப்பிடிப்பாரென்பது வரலாறு சொல்லும் பாடம்.அதில் பிழையில்லை.அவர்கள் வாக்குப்போட்ட மக்களுக்கு விசுவாசமாக நடக்கின்றார்கள்.ஆனால் ததேகூட்டமைப்பு வாக்கு போட்ட மக்களின் விருப்புக்கு எதிர்மாறாகவே நடக்கின்றது.சாதாரணசட்டத்தரணி முன்னாலும் சத்தியப் பிரமாணம் எடுக்கலாம் என்ற விதி இருக்கின்ற படியால் வாக்களித்த மக்களைத்திரட்டி மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஒரு சட்டத்தரணியின்(சட்டவிதிக்காக)முன்னால் பதவியேற்று நமது தனித்துவத்தைக்காட்ட வேண்டும். மேலும் இணங்கிகப்போனால் அரசாஙகத்தின் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றால் மக்கள் நேரிடையாக மகிந்தவையே ஆதரித்திருக்கலாமே.(தங்களை புலிகளிடமிருந்து மீட்ட)தங்கள் பிள்ளைகளை யுத்தத்தில் பறிகொடுத்த மக்களே கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்கள்.அவர்கள் விரும்பியது சலுகைகளை அல்ல தம்மக்களின் இழப்புக்கான நீதியை,தம்மக்களைக் குண்டு போட்டு அழித்தவனுக்கான தண்டனையை,தம்முடைய சுயநிர்ணய உரிமையை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதற்காகவே ஆகும்.சுமுகமான ஆரம்பத்திற்காக என்று சர்வதேசம் சொல்லுது என்று சம்பந்தர் எங்களைப் பேக்காட்ட வேண்டாம்.ஜெனிவாவில் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் நவிபிள்ளையின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி ஆதரவாக முழக்கமிட நவிபிள்ளை றோட்டு போட்டதைச சொல்ல வில்லையே என்று சிறிலங்காவுக்கு வக்காலத்து வாங்கின இந்தியா சொன்னது என்று எங்களுக்குத் தெரியும்.சிங்களவன் தேர்தலை நடத்தி அமைச்சர்களை நியமித்து சத்தியப் பிரமாணமும் உடத்து விட்டான். நம்மவர்கள் இன்னும் ஒரு விடயத்திலும் ஒழுங்கான முடிவுக்கு வராமல் இழுபறிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இப்போதைய தேவை சம்பந்தருக்கு எதிரான நம்பிக்கையில்லத் தீர்மானமே ஆகும்.

புரியவில்லை .................அரசியல் நகர்வு ,சூழல் என்று பிதற்றி தேர்தலிலேயே பங்கு கொண்டாச்சு .அப்புறம் அரசியல் சட்டங்களுக்கு அமைய அந்த நாட்டு ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் எடுக்க ஏன் இந்த தயக்கம் [நாடகம் ] :(

  • தொடங்கியவர்

இந்த வடக்கு மாகாண சபை மூலம் உரிமைகள் பெற்றுக் கொள்வதை விட இருக்கும் அதிகாரங்களை வைத்து ஓரளவுக்கேனும் வடக்கை அபிவிருத்தி செய்ய முனைவது தான் சாத்தியபாடான விடயம். அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டு இருக்கும் வடக்கு மக்களுக்கு முதல் தேவையாக இருக்கும் அபிவிருத்தி போன்றவற்றை செய்வதற்கு வடக்கு மாகாண சபையும் அதன் உறுப்பினர்களும் மத்திய அரசுடன் தேவையற்ற விடயங்களுக்கு எல்லாம் முரண்டு பிடிப்பது சரியான வழியாக இருக்காது.

முரண்டு பிடிப்பதற்கும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. வெறுமனே யார் முன் பதவிப் பிரமாணம் எடுப்பது என்பது போன்ற சில்லரைத்தனமான விடயங்களுக்காக முரண்டு பிடிப்பது வெறுமனே உணர்ச்சி அரசியல் செய்யவும், அதனை சாக்காக வைத்து மக்களை தொடர்ந்து தன் பக்கம் வைத்து இருக்கவுமே உதவும்.

ஆரம்பமே மோதல் போக்கில் அமையாமல் சுமூகமான போக்கினை கொண்டதாக அமைவதே சரியானதாக இருக்கும்.  மகிந்த முன் சத்தியப் பிரமாணம் எடுப்பது சுமூகமான ஒரு ஆரம்பத்தினைக் கொடுக்கும் என்ப்தால் அவ்வாறு செய்வதில் எந்த தவறும் இல்லை.

யாழிலை கருத்துக்களை படிக்காமலே யார் சொல்கிறார்கள் எனும் கோணத்தில் மட்டுமே சிலர் கருத்துகளை வைப்பதோடு சீண்டல்களிலும் ஈடுபடுகிறார்கள் எண்டதுக்கு நிழலி சொன்னவைக்கு பச்சை போட பட்டிருப்பது நல்ல உதாரணம்...

இதே கருத்தை தான் பலர் இங்கு சொன்னார்கள்... சொன்னவை எல்லாம் புலம்பெயர் புண்ணாக்குகள்...

ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் என்பது தவறல்ல, சமயோசிதம் என்று கூட சொல்லலாம். ஆனால் ஏன் அதிகளவிலான எதிர் மறை விமர்சனங்கள் வருகின்றன. நான் அறிந்த வரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நல்ல ஒற்றுமையாகவே உள்ளனர். கருத்து மோதல்கள் , விவாதங்கள் இருக்கத் தான் செய்யும் ,அது ஆரோக்கியமானதே.

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை .................அரசியல் நகர்வு ,சூழல் என்று பிதற்றி தேர்தலிலேயே பங்கு கொண்டாச்சு .அப்புறம் அரசியல் சட்டங்களுக்கு அமைய அந்த நாட்டு ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் எடுக்க ஏன் இந்த தயக்கம் [நாடகம் ] :(

தமிழ்சூரியன், பக்கத்துக்கடையில் பத்துபைசா பச்சை மிலகாய வாங்கிவிடல்லாம் சட்டத்தில் வழி இருக்கு, அதுக்காக பத்துப்பைசா பெரிமதியில்லாத பச்சை மிழகாயை மருதனார்மடம் சந்தையிலதான் வாங்குவம் எண்டு அடம்பிடிக்கினம். சிங்களவனது தமிழின அழிப்பிற்குத்துணைபோன சித்தார்த்தனே யதார்த்ததை உணர்கின்றார். சம்பந்தனும், யாழ் களம் புதிதாக உள்வாங்கிய களப்பணியாளர்களும், இன்னமும் எதுவுமே புரியாததுபோல் நடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உதை சந்திரகாந்தன் போல.. வாயை மூடிக்கிட்டு செய்து முடிச்சிருக்கலாமே..! உதில என்ன இராஜதந்திரம் உள்ளது. சிங்களப் பேரினவாதிகள் மத்தியில் சந்தேகத்தை விதைத்ததும்.. சிங்கள உயர் நீதிமன்றம்.. மாகாணத்துக்கு காணி அதிகாரம் இல்லைன்னு.. சொல்லவும் தான் மீண்டும் மகிந்த வழியில் சம்பந்தன்.. என்றானதோ...!

மகிந்த வழியில் சம்பந்தன் என்றால்.. பிறகேன் சனம்.. கூட்டமைப்புக்கு வாக்குப் போடுது. அபிவிருத்தின்னா மகிந்தவுக்கே வாக்குப் போடலாமே....!!!!!! அபிவிருத்தின்னு சனமே எதிர்பார்க்காமல் வாக்குப் போடுதுகள்.. அதிகாரம் தான் முதலென்னு. இவ்வொரு தேர்தலிலும் ஒன்றைச் சொல்லுறீங்க.. அப்புறம்.. அபிவிருத்தின்னு சனத்தின் ஆசைகளை நிராசைகள் ஆக்கிடுறீங்க..! நல்ல ஒரு அபிவிருத்தி. அது...சனம் வாழும் வரை நடக்க வேண்டியது. அதிகாரம் இல்லாத அபிவிருத்தி என்பது எம்மக்களை தெருப்பிச்சை எடுக்கும் நிலையில் தான் வைச்சிருக்கும்..! இன்று அதிகாரம் கேட்டு வாக்குப் போடும் மக்களை சோத்துப் பார்சலுக்கு வாக்கப் போட வைக்கும் நிலைக்குத் தான் மகிந்த - சம்பந்தன் கூட்டணி இழுத்துக்கிட்டு போகுது...!!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

நையாண்டிப்புலவர் பாரதத்தில் பாதியைத்தான் படித்திருக்கிறார். ஐவரும் பாஞ்சாலிக்கு துகியிலுரியும் போது இடம் இல்லாத இடத்தில் பொறுத்திருந்து பின்னர் சந்தர்ப்பம் வந்து சேர்ந்த போது அவர்களின் இரத்த்தை அள்ளி அவள் தலை முடியக் கொடுத்தனர். நையாண்டிப்புலவர் பிழையாக ஐவரை கூட்டமைக்கு ஒப்பிட்டதுதான் தவறு. பாஞ்ச்சலி விடையத்தில் மட்டுமே ஐவர்  காடிய ஒற்றுமையை கூட்டமைப்புக் காட்டவில்லை. மேலும் இல்லாத பெண்ணை துரத்துவதை, சில கட்சிகள்தான் ஆரம்பித்துவைக்கின்றன. ஆனால் ஒற்றுமையாக இருப்பத்தற்கு கொடுக்கும் பரிசாக மற்ற கட்சிகள் அதை பார்த்து தொடரும் போது பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கு. ஆனால் அந்த கட்சிகள் தெரிந்துகொள்ள வேண்டியது வீட்டு சின்னத்தை துறந்து வேறு எங்கு போனாலும் துறவறம்தான.

மஹிந்த முன்னிலையில் பதவிப்பிரமாணம்; நாட்டைவிட்டு வெளியேறினார் மாவை!?

— 

04/10/2013 at 8:35 pm

 | no comments

mavai-senathiraja-150x150.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றியீட்டியிருந்தாலும் கூட்மைப்புக்குள் நிலவும் இழுபறி நிலையின் தொடராக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நாட்டை விட்டு அவசரமாக வெளியேறி இந்தியா சென்றிருப்பதாக தெரியவருகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவி ஏற்கவேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீவிரமாக வலியுறுத்தி வந்திருந்த நிலையில் கூட்டமைப்பின் கடந்த கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் மாவை சேனாதிராஜாவும் ஏனைய கட்சி தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை தீவிரமாக எதிர்த்திருந்தனர்.

இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலும் இது தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன் மற்றும் சுமந்திரன் ஆகியோரே சம்பந்தனுக்கு சார்பாக மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் மேற்கொள்ளவேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தியிருக்கின்றனர்.

இதனிடையே முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் மேற்கொள்வதில் மாற்றமில்லை என்பதை உணர்ந்த மாவை சேனாதிராஜா நேற்று இரவு அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக தெரியவருகின்றது. எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்வில் பங்குகொள்ளாமல் தவிர்க்கும் நோக்கிலேயே அவர் இந்தியா பயணமாகியிருப்பதாக தெரியவருகின்றது.

இதேவேளை, தனது நம்பிக்கைக்குரிய இளைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மஹிந்த முன்னிலையில் பதவி ஏற்கும் விவகாரம் தொடர்பில் மௌனம் சாதித்தமை குறித்தும் மாவை சேனாதிராஜா கொழும்பின் மூத்த தமிழ் ஊடகர் ஒருவரிடம் மனம் வருந்தியதாகவும் தெரியவருகிறது.

மாவை இந்தியா சென்றது ,தன்னுடைய முள்ளந்தண்டில் ஏற்பட்ட நோய்க்கான சிகிச்சைக்காக .

மாவை இந்தியா சென்றது ,தன்னுடைய முள்ளந்தண்டில் ஏற்பட்ட நோய்க்கான சிகிச்சைக்காக .

ஓ அப்படியா அப்ப மற்ற கட்சிகாறகாரகளுக்கு புது புது நோய்கள் இன்னும் நாள் போக வரப்போகுது. இனி அடுத்த உள்சண்டைக்கு ஆயத்தம் பண்ணவேணுமே!! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.