Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கக் கடியாரம்....வைர மணியாரம்.. (இறுதிப்பாகம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதற்பாகத்தைப் பார்வையிட....

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130316

 

 

ஏதோ, ஒரு காரணத்தினால், அல்லது பல காரணங்களினால், அவன் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் குறுக்கிட்ட போதும், நிரந்தரமான வலிகளோ, வடுக்களோ இன்றி, இது வரை அவனால் விலகிச் செல்ல முடிந்திருக்கின்றது! அப்படியானால், காதலே சந்திரனுக்கு ஏற்படவில்லையா? என்ற கேள்விக்கும் அவனால் பதில் சொல்ல முடியாது! ஒவ்வொன்றிலும் இனம், மதம், மொழி என்று பல தடைகள் குறுக்கிட்டன!அவனைக் காதலிப்பதாகக் கூறியவர்கள், எவருக்கும் காதலுக்காக, அவற்றைக் கடந்து செல்லும் தைரியம் இருக்கவில்லை! அவற்றைக் கடந்து வரத் துணிந்த ஒருத்தியையும் விட்டுவைக்கக் காலனுக்கும் கருணையில்லை!

 

நீ விரும்பும் பெண்ணிலும் பார்க்க, உன்னை விரும்பும் பெண்ணொருத்தி இருப்பாளானால், நீ மிகவும் பாக்கியசாலி என்று பலவிதமான சமாதானங்களைத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்! தூரத்திலிருந்து தனது மனதைத் தானே பார்த்து, அதனுடன் அளவளாவக்கூடிய ‘குணாதிசயத்தை' அவன் வளர்த்துக்கொண்டது அவனுக்கு இப்போது மிகவும் உதவியாக இருந்தது!  சரி,சந்திரன் ‘கோழை' தான் எனத் தீர்ப்பளித்து விட்ட திருப்தியுடன், கதையை நோக்கி நகர்வோம்!

 

திருமண ஆயத்தங்களில், ஒரு பணக்கார முதலாளியின் ‘ஆடம்பரங்கள் அத்தனையும் குறைவின்றி இருந்தன! திருமண அழைப்பிதழ் கூட, அவனது பட்டதாரிச் சான்றிதழை விடவும், நேர்த்தியான கடதாசியில் அச்சிடப்பட்டிருந்தது! அவனது பெயரை விட, அவனது பட்டமும், தொழிலும் கொஞ்சம் பெரிதாக அச்சடிக்கப்பட்டிருந்ததையும், சந்திரனின் கண்கள் அவதானிக்கத் தவறவில்லை! மாப்பிள்ளை அழைப்பின் போதும், ஒரு இயந்திரத்தனமான சிந்தனையுடன் நடந்து வந்தவனை ,’என் தலைவன் வருகிறான், தேரிலே….! எனற நாதஸ்வர வித்துவானின் பாடல், ராசாத்தியின் வீடு அண்மையில் வந்து விட்டதை, அவனுக்கு உணர்த்தியது!,சிறு குழந்தைகள்,கலகலப்புடன் குரும்பட்டிகளில் தேர் செய்து விளையாடும் விளையாட்டைப் போலவே பெரியவர்களின் கலகலப்புக்களுடன், திருமணமும் இனிதே நடைபெற்று முடிந்தது!

 

திருமணம் முடிந்த கையோடு, நயினாதீவுக் கோவில் திருவிழாவும் வந்த படியால் அங்கேயும் ஒருக்காப் போய்வாறது நல்லது எண்டு, ராசாத்தியின் குடும்பம் முடிவு செய்தது! கோயிலுக்கு வெளிக்கிட்ட ராசாத்தியைப் பார்க்க, அவனுக்கு முதலாவது ‘தலைச்சுற்று' ஏற்பட்டது! கலியாண வீட்டுக்குப் போட்டிருந்த அவ்வளவு நகையும் அவளது கழுத்தில் இருந்தது! அவனும். எவ்வளவுக்குக் குரலில், இனிப்பைக்குழைக்க முடியுமோ அவ்வளவுக்குக் குழைச்சு, ‘இஞ்சை, பாருங்கோ, இதெல்லாத்தையும் கழட்டி வைச்சிட்டு, சிம்பிளா ஒரு சங்கிலியை மட்டும் போட்டுக்கொண்டு வாங்கோ! எண்டு சொல்லவும், சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த தகப்பனின் காதில் இந்த வார்ததைகள் விழுந்து விட்டன! குறை நினைக்காதையுங்கோ, தம்பி… பிள்ளை, ஆசையாய்ப் போட்டிருக்குது..நகையளைப் போட்டுக்கொண்டு போனாத்தானே, நாலு பேர், நம்மை மதிப்பினம்!  என்று சொல்ல, நான் கதைச்சது ராசாத்தியோட, என்று வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை, மிகவும் சங்கடத்துடன், திரும்பவும் மென்று விழுங்கிக்கொண்டான்!  கொஞ்சம் மாலையாகிற நேரமானதால், கோயிலுக்குப் போறவழி நெடுகிலும், ஒரே சன நடமாட்டம்! மோட்டார் சைக்கிள்ல போன ஒரு ஆமிக்காறன், கிட்டவரவும் சேலைத் தலைப்பையிழுத்துத் ‘தற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈட்டுபட்ட ராசாத்தியிடம், அக்கோய், வெலாவக் கீயத எண்டு கேட்க, ராசாத்தியும் கொஞ்சமும் தயங்காமல், பைப் போர்டி பைப் எண்டு சொல்லவும், ஆமிக்காறன் கொஞ்சம் ஆடிப் போனது கடைக்கண்ணில் தெரிந்தது!

 

ஒரு மாதிரி ராசாத்தியைக் கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு வந்த பின்னர்…..

 

அவனது வீட்டில், அவன் வீட்டுத் தேவைக்கான அரிசி, மா, பருப்பு, சீனி போன்ற பாரமான பொருட்களை வாங்கிகொடுப்பது அவனுக்குப் பழக்கமாகையால், அன்று வேலை முடிந்து வரும் வழியில் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் காவிக்கொண்டு வந்தான்! ராசாத்தியும் முகத்தில் எந்த விதமான சலனத்தையும் காட்டாமல், வீட்டிலை அனேகமா, வேலைக்காரர் தான் இதுகளைப் பாத்துக்கொள்ளுவினம்! மற்றது அப்பா எல்லாத்தையும் சில்லறையா வாங்காமல்,மூட்டை, மூட்டையாக் கொண்டு வந்து இறக்கி விடுவார்! சந்திரனுக்குக் கோபம் வந்தது தான்! ஆனாலும், ராசாத்தி எதற்காக இதைச் சொல்லுகிறாள் என்று அவனுக்குப் பிடிபடவில்லை! ஒரு வேளை, அவனுக்குச் சம்பளம் காணாதென்பதைக் குத்திக்காட்டுகிறாளோ என்றும் மனம் நினைத்துக்கொண்டது! சரி, எதற்கும் விட்டுப்பிடிப்பம் என்று தீர்மானித்துக் கொண்டான்!

 

ராசாத்தி இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும்போது நகைகள் அணிவதையும் நிறுத்தி விட்டிருந்தாள்! தகப்பன் வரப்போவதாகத் தெரிந்தால் மட்டும், அவற்றைப் போட்டுக்கொண்டாள்! ஆனால், அடிக்கடி எங்கட வீட்டிலை எண்டால்……. மட்டும் அடிக்கடி வந்து போனது! சந்திரனுக்கு, அவன் மீதே ஒரு விதமான பச்சாத் தாபம் ஏற்பட்டது! சரி, ராசாத்திக்கு என் மேல விருப்பம் இல்லைப்போல கிடக்கு! காசைக் குடுத்து வாங்கின சாமான் தானே எண்டு நினைக்கிறாளோ தெரியாது! அப்படி அவள் நினைத்தாலும், அவளில் தவறில்லைத் தானே!

 

ஒரு நாள் இரவு ஏழு மணியிருக்கும்! சுவரில் இரண்டு பல்லிகள் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன! அவனும் தானும் ஒரு பல்லியாகப் பிறந்திருந்தால், இந்த சீதனப் பிரச்சனையில்லாமல் இருந்திருக்கும்! ‘ராசாத்தி' என்ட பல்லியை, எந்த விதமான மனச் சஞ்சலங்களுமின்றி, அந்த ஆண் பல்லியைப் போல துரத்திப் பிடித்து விளையாடியிருக்க முடியும் என எண்ணியவன், ராசாத்திக்குத் தன் மீது விருப்பமில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான்! உடனேயே, மனம் மாற முந்தியே ராசாத்தியைக் கூப்பிட்டு, ராசாத்தி, நான் ஒரு அவசர அலுவலா, எங்கட வீட்டை போகவேணும்! நீ கொஞ்ச நாளைக்கு அப்பாவோட, அவற்றை கொழும்பு வீட்டில போய் இரு! என்று கூறியவன் தான் செய்வது சரி தானா என்றும் சிந்தித்தான்! ஆயினும் மனத்தை மாற்றிக்கொள்ளாமல், வேலைத்தலத்து  மேலாளரிடம், எதிர்பாராத் விதமா, ஊருக்குப் போக வேண்டி வந்திட்டுது! அங்க போன பிறகு உங்களோட வடிவாக் கதைக்கிறன் என்று தொலைபேசியில் தெரிவித்து விட்டு, ராசாத்தியின் தகப்பனாருக்கும் விசயத்தைச் சொன்னான்! என்ன தம்பி, இருந்தாப் போலை, என்று இழுத்தவர் அதிகம் அலட்டாமல், சரி, தம்பி என்று போனை வைத்துவிட்டார்! அவரது ‘வியாபார மூளை' இவ்வளவுக்குள், ஆயிரம் காரணங்களைத் தேடியிருக்கும் என்றும் அவனுக்குத் தெரியும்!

 

அன்று இரவே பஸ் பிடித்தவன் யாழ்ப்பாணம் வரும் வரைக்கும் ஒரே யோசனையில் ஆழ்ந்திருந்தான்! விடியக்காலமை வீட்டையடைந்த போது, தலை ஏறத்தாழக் கொதிநிலையில் இருந்தது! வீட்டில், ஒரு அலுவலா வர வேண்டி வந்திட்டுது எண்டு சொல்ல அவர்களது அடுத்த் கேள்வி, அப்ப ஏன் அண்ணியைக் கூட்டிக்கொண்டு வரேல்லை? எண்ட கேள்வி அவனைத் திக்குமுக்காட வைத்துவிட்டது! எத்தினை நாளெண்டு வடிவாத் தெரியாததால, அவவின்ர அப்பா வீட்டை விட்டிட்டு வந்திட்டன்!

 

ஆச்சி, தனது முகத்தைத் அவவின்ர தோள்பட்டையில் இடிச்ச விதம், அவனிடம் இதைப்பற்றி ஆச்சி மேலும் கதைக்கப் போவதில்லை என்பதை அவனுக்கு உறுதிப்படுத்தியது!

 

இரண்டு நாட்கள் போயிருக்கும்! இருந்தாப்போல, சந்திரனுக்கு அடிவயிற்றில் ஒரு வலி ஏற்பட்டது!  வலி தாங்க முடியாமல் போகவே, வீட்டிலிருந்து அவனை, அவனது நண்பனொருவன் உடனடியாக ஊரில் உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனான்! அங்கே அவன் மயக்கமானது மட்டும் தான் அவனுக்கு நினைவிருந்தது! எவ்வளவு நேரம், அவன் அந்த நிலையிலிருந்தான் என்பதைக்கூட அவனால் அனுமானிக்க முடியவில்லை! மெதுவாக ;மயக்கம்' தெளிந்து கொண்டிருந்தது!

 

ராசாத்தியின் குரல் வெளியிலிருந்து கேட்டது மாதிரியிருந்தது!

 

ஐயோ, என்ர ராசாவைப்பாக்க விடுங்கோ! என்ர கிட்னியில ஒண்டை அவருக்குக் குடுங்கோ! உரத்த குரலில், அவள் யாரிடமோ கெஞ்சிக்கொண்டிருந்தாள்!

 

அப்போது அங்கு வந்த மருத்துவர், சந்திரன் உமக்கு ஒரு பிரச்சனையுமில்லை! உங்கட நண்பன், உங்களுக்கு ‘வயித்துக்குத்து' எண்ட உடனை ‘கிட்னிப்பிரச்சனையா இருக்கும் ; எண்டு சொல்லி உங்கட வீட்டில சொல்ல, அவை கொழும்புக்கு உங்கட மனுசியிட்டைச் சொல்ல, அவை அப்பிடியே கார் ஒண்டைப் பிடிச்சுக்கொண்டு நேர இஞ்சதான் வந்திறங்கியிருக்கினம்! நான் அவையோடை இன்னும் கதைக்கேல்லை! கொஞ்ச நேரத்தாலை உள்ளுக்கு அனுப்பி விடுறன்! நீங்களே நேரில, இந்தச் சந்தோசமான செய்தியைச் சொல்லுங்கோவன் என்ற படி மெல்ல நழுவினார்!

 

சந்திரன் நனைந்து போன தலையணையினுள் மேலும், மேலும் புதைந்து கொண்டிருந்தான்!

 
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

இது தான் வாழ்க்கை

புரிந்தவருக்கு சொர்க்கம்

இல்லாதுவிட்டால்  நரகம்.......

 

நன்றி  புங்கையர்

கதைக்கும்

கெதியாக முடித்ததற்கும்...... :D

அண்ணா மணி . உண்மைக்கதைதானே .இல்லை என்றுதான் சொல்லுவியள்.  

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துநடை நன்றாக இருக்கின்றது புங்கை அண்ணா. இரண்டாவது பாகத்தில் கதை சொல்லி தன்னைத் துருத்தாமல் சொல்ல வந்த விடயத்தை கதைக்குள் கொண்டு வந்திருக்கலாம்.

அதீத அன்புகொண்ட அப்பாவி மனைவி வாய்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும்தான், ஆனால் சுவையாக இருக்கும் என்று சொல்லமுடியாது. கதையில் பெண்ணின் தனிப்பட்ட ஆளுமை என்னவென்று அறியமுடியவில்லை. சிறு பராயத்தில் அப்பாவின் சொல் கேட்டு, திருமணம் முடித்த பின்னர் கணவனின் சொல் கேட்டு, பிள்ளைகள் வளர்ந்த பின்னர் அவர்களின் சொல் கேட்டு எல்லோரையும் சந்தோசமாக வைத்திருப்பதுதானோ?!

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துநடையும் தனித்தனித் திரிகளில் போட்ட விதமும் நல்ல சாகசக் காரர்களை நினைவுபடுத்துகிறது. நன்றாக இருக்கு உங்கள் சாகசம். :lol:

எங்கள் இருவருக்கும் எதோ விட்டகுறை தொட்டகுறை இருக்கின்றது போல :lol::D . நான் கவிதையில் இந்தப் பிரச்சனையைத் தொட நீங்களோ கதையில் தொடுகின்றீர்கள்  . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் தொடருங்கோ :) :) .

 

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்.. ஆச்சி சொல்லைத் தட்டாதே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்.. ஆச்சி சொல்லைத் தட்டாதே.. :D

 

யாரு 

நிலாமதி  ஆச்சியைத்தானே  சொல்கிறீர்கள்??? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை கதையை முடிக்க வேண்டும் என்பதற்காக சினிமா/நாவல் பாணியில் முடித்துள்ளார் :)

  • கருத்துக்கள உறவுகள்

யாரு 

நிலாமதி  ஆச்சியைத்தானே  சொல்கிறீர்கள்??? :lol:  :D

 

 

 விசுக்கர் இது நல்லா   இல்லை சொல்லிபோட்டன். :D  பாட்டி ஆச்சி என்று

 

..... பாசத்தோட அக்கா என்று சொல்லுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

 விசுக்கர் இது நல்லா   இல்லை சொல்லிபோட்டன். :D  பாட்டி ஆச்சி என்று

 

..... பாசத்தோட அக்கா என்று சொல்லுங்கோ 

 

 

இப்படிக்கூப்பிட்டால்தானே ஓடி வருகிறீர்கள்.... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் நாயகி முடிவில் அதீத அன்பைக் காட்டிய பெண்ணின் அப்பாவித்தனத்தோடு முடித்திருக்கிறீங்கள். எங்கள் சமூக வளர்ப்பும் பெண்ணை ஒவ்வொருவ ஆணின் ஆழுகைக்கும் உட்பட்ட பிறவியாகவே உங்கள் கதையின்படி கதையின் நாயகியின் முடிவு அமைந்திருக்கிறது. கதை நிகழ்ந்த காலம் அதன் நடைமுறையை சொல்லிய கதை. நன்றிகள் புங்கையூரான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு பகுதியும் முழுமையாக வாசித்தேன். விலக விடாமல் கட்டிப்போடும் வித்தை நன்றாகவே கைகூடியுள்ளது.

எழுத்துநடை பிரமாதம். அந்தச் சந்திரன் எங்கள் புங்கை அண்ணா தானா?? :rolleyes:

 

குறுநாவல் படித்த திருப்தி.. வாழ்த்துக்கள் அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பகுதியும் முழுமையாக வாசித்தேன். விலக விடாமல் கட்டிப்போடும் வித்தை நன்றாகவே கைகூடியுள்ளது.

எழுத்துநடை பிரமாதம். 

 

உண்மை..கட்டீப்போட்ட எழுத்து நடை கதைமுழுதும் தொய்வின்றி கொண்டுசெல்கிறது.. நல்ல ஒரு கதை சொல்லி..

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு நாள் இரவு ஏழு மணியிருக்கும்! சுவரில் இரண்டு பல்லிகள் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன! அவனும் தானும் ஒரு பல்லியாகப் பிறந்திருந்தால்,

 

இது போன்ற அசாதாரணமான உவமைகளை  சாதாரணமாக  தூக்கி போட உங்களால்தான் முடியும். நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை முதல் பாகத்தை சுயமாகத்தான் எழுதினாராம்.. :unsure: ஆனால் அதை அவரது மனைவி யாழில் படித்துவிடவே, கிளைமாக்ஸ் மருத்துவமனையில் கண்ணீருடன் முடித்து வைக்கப்பட்டது.. :rolleyes: புங்கையின் பாதுகாப்பு இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..!. :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் கதையை இறுதிவரை படித்தேன்

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
புரிந்து வாழ்வனுக்குச் சொர்க்கம்
புரியாமல் வாழ்பவனுக்கு நரகம் :)

 

பகிர்விற்கு நன்றி புங்கையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.