Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதப் போராட்டத்தை; தியாகு இன்று கைவிட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கடந்த 15 நாட்களாக மேற்கொண்டிருந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழர் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு இன்று மாலை கைவிட்டார். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது, இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 1-ந் தேதி தியாகு சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் ஆதரித்தனர்.

ஆனால் கடந்த வாரம் தியாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரவே அங்கிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னரும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். இதனிடையே தியாகுவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இன்று தியாகுவின் உடல்நிலை மோசமடையவே அவரை போலீசார் வலுக்கட்டாயமாக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாகவும் ஆனால் ஆதரவு தலைவர்கள் முன்னிலையில்தான் போராட்டத்தை நிறைவு செய்வேன் என்றும் தியாகு வலியுறுத்தினார். போலீசாரோ அனுமதி மறுக்கவில்லை. இந்நிலையில் மருத்துவமனையிலேயே தாய்த் தமிழ் பள்ளிக் குழந்தைகள் கொடுத்த பழரசத்தை அருந்தி தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தியாகு நிறைவு செய்தார்.

thanks oneindia

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97703/language/ta-IN/article.aspx

  • Replies 54
  • Views 5.3k
  • Created
  • Last Reply

தீலீபனுக்கு இணை திலீபனே.  

Edited by நேசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதி, பொபி சாண்ட்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோது இந்திய அரசு தலையிட்டு யுத்தத்தினை நிறுத்த சொல்லி கருணாநிதி அவர்கள் மன்மோகன் சிங்கிட்கு கடிதம் தந்தி என்று அனுப்பியபோதும் பதில் அனுப்பாத மன்மோகன் தியகுவிட்காக பதை பதைத்து பதில் கடிதம் எழுதியிருக்கிறார் .அதே நேரம் தமிழர்களின் நலனை முன் நிறுத்தியே கொமன் வெல்த் மகாநாடு பற்றி சிந்திக்கப்படும் என்றும் சொல்லியுள்ளார் .

இவர் எறிந்த கல்லில் விழுந்த முதலாவது மாங்காய்.....இந்தியா மகா நாட்டில் கலந்து கொண்டாலும் இல்லாது விட்டாலும் அது ஈழத்தமிழர்களின் நலன் களிட்காகவே என்றொரு மாயையை உருவாகியிருக்கிறார்

மாங்காய் இரண்டு ..உண்ணாவிரதம் இருந்தவர் தியாகு .மாநில முதலமைச்சராக இருப்பவர் ஜெயலலிதா அவர்கள்.ஆனால் உண்ணாவிரதத்தினை நிறுத்த சொல்லி கடிதம் எழுதியதோ கருணாநிதிக்கு .எனவே அடுத்த தேர்தலிலும் காங்கிரசுக்கு கருணாநிதிதான் நண்பேண்டா

மாங்காய் மூன்று ...இரண்டாவது தடவையாகவும் தியாகுவின் உயிரை தாயுள்ளத்தோடு தமிழினத் தலைவர் கருணாநிதி காப்பாற்றியுள்ளார் .

மாங்காய் நான்கு.....தனது தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகாமல் அவை திசை திருப்பப்பட்டு தன்னை தியாகியாக்கிய திருப்தியோடு வெற்றி அல்லது வீர மரணம் என்கிற கோசத்தோடு உண்ணாவிரதம் இருந்த தியாகு அவை இரண்டும் இல்லாமலேயே உண்ணாவிரதத்தை கை விட்டுள்ளார் .

எனவே ஈழத் தமிழர்களே இந்த நான்கு மாங்காய்களையும் பொறுக்கி ஊறுகாய் போட்டு வையுங்கள் இனியும் ஈழத் தமிழர்களிக்காக சாகாத ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வருவார்கள் அவர்கள் தொட்டு நக்கி கொள்ள உதவும் .

இதுக்கு மேலயும் அரசியல் புரியாமல் நம்ம ஆழுகள் இதுகளை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு பக்கம் பக்கமா எழுதிகொண்டே தான் இருப்பாங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உணர்சி வசப்படுபவர்களை பார்க்கும் போது எனக்கு அடிக்கடி தோன்றுவது.

"இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் ஒரு ஆட்டோகாரனிடம் மாட்டவில்லையோ?"

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் இருந்தாலும் தப்பு. செத்தாலும் தப்பு. இதில உளறுதுகளைப் போல.. அந்த ஐயாவும் சும்மா கிடந்து இணையத்தில குத்தித் தள்ளினா.. ரெம்ப கரக்டு..!

போய் வேற அலுவல் இருந்தா பாருங்க சார்மார். உலகம் உங்களை நம்பி சுத்திறதா எதுக்கு கற்பனை பண்ணிக்கிட்டு குத்தி முறியுறீங்க. :D

தோழர் தியாகு ஐயாவின் போராட்டமும் இலக்கும் தொட வேண்டிய இடத்தை தொட்டுள்ளது. அதுவே அங்கு எதிர்பார்ப்பும் கூட. நன்றி ஐயா.. உங்களை நீங்களே வருத்தி தமிழினத்திற்காகப் போராடியதற்கு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு வியாபரிகளுக்கு புலம் எங்கும் நெட்வேர்க் இருக்கும் போல.

போங்கப்பு போய் யாவாரத்தை பாருங்க.

தமிழ்நாட்டு வியாபரிகளுக்கு புலம் எங்கும் நெட்வேர்க் இருக்கும் போல.

போங்கப்பு போய் யாவாரத்தை பாருங்க.

இவ்வளவு ஏன் கூட்டமைப்பு தலைவர்களும் உண்டியல் தூக்கி கொண்டு இங்கை தான் வருகினம்...

பிச்சை எண்டு வெளிக்கிட்டால் செக்கென்ன சிவலிங்கம் என்ன... எல்லாத்திலையும் வாய் வைக்க வேண்டியதுதானே..>?

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தியாகு அவர்கள் தன்னால் முடிந்த அளவிற்குப் போராடியுள்ளார்.
இந்தப் போராட்டத்தால் ஈழ மக்களுக்கு  நன்மையோ தீமையோ
ஈழ மக்களின் போராட்டம் இன்று இருக்கும் நிலையில்

தியாகு அவர்கள் செய்த போராட்டம் மக்களிடையே

ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

தியாகு அவர்களின் உயிர் காக்கப்பட்டதில் சந்தோசம்

ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோது இந்திய அரசு தலையிட்டு யுத்தத்தினை நிறுத்த சொல்லி கருணாநிதி அவர்கள் மன்மோகன் சிங்கிட்கு கடிதம் தந்தி என்று அனுப்பியபோதும் பதில் அனுப்பாத மன்மோகன் தியகுவிட்காக பதை பதைத்து பதில் கடிதம் எழுதியிருக்கிறார் .அதே நேரம் தமிழர்களின் நலனை முன் நிறுத்தியே கொமன் வெல்த் மகாநாடு பற்றி சிந்திக்கப்படும் என்றும் சொல்லியுள்ளார் .

இவர் எறிந்த கல்லில் விழுந்த முதலாவது மாங்காய்.....இந்தியா மகா நாட்டில் கலந்து கொண்டாலும் இல்லாது விட்டாலும் அது ஈழத்தமிழர்களின் நலன் களிட்காகவே என்றொரு மாயையை உருவாகியிருக்கிறார்

மாங்காய் இரண்டு ..உண்ணாவிரதம் இருந்தவர் தியாகு .மாநில முதலமைச்சராக இருப்பவர் ஜெயலலிதா அவர்கள்.ஆனால் உண்ணாவிரதத்தினை நிறுத்த சொல்லி கடிதம் எழுதியதோ கருணாநிதிக்கு .எனவே அடுத்த தேர்தலிலும் காங்கிரசுக்கு கருணாநிதிதான் நண்பேண்டா

மாங்காய் மூன்று ...இரண்டாவது தடவையாகவும் தியாகுவின் உயிரை தாயுள்ளத்தோடு தமிழினத் தலைவர் கருணாநிதி காப்பாற்றியுள்ளார் .

மாங்காய் நான்கு.....தனது தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகாமல் அவை திசை திருப்பப்பட்டு தன்னை தியாகியாக்கிய திருப்தியோடு வெற்றி அல்லது வீர மரணம் என்கிற கோசத்தோடு உண்ணாவிரதம் இருந்த தியாகு அவை இரண்டும் இல்லாமலேயே உண்ணாவிரதத்தை கை விட்டுள்ளார் .

எனவே ஈழத் தமிழர்களே இந்த நான்கு மாங்காய்களையும் பொறுக்கி ஊறுகாய் போட்டு வையுங்கள் இனியும் ஈழத் தமிழர்களிக்காக சாகாத ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வருவார்கள் அவர்கள் தொட்டு நக்கி கொள்ள உதவும் .

இதுக்கு மேலயும் அரசியல் புரியாமல் நம்ம ஆழுகள் இதுகளை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு பக்கம் பக்கமா எழுதிகொண்டே தான் இருப்பாங்கள்

மாணவர்கள் மற்றும் கட்சியினர் போராட்டத்தை தொடர்வதாக வாக்களித்ததால் தான் தியாகு ஐயா உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். அதையும் மன்மோகன் சிங்கின் கடிதத்தையும் சேர்த்து கதைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. மன்மோகன் சிங்கின் கடிதம் கிடைக்காவிட்டாலும் கூட இன்று போராட்டத்தை நிறுத்தியிருப்பார்.

எம்மால் செய்ய முடியாததை அவர் இவ்வளவு நாளாக செய்திருக்கிறார். அவர் மூலம் இப்பொழுது கட்சிகள் மக்களை திரட்டி போராட முன்வந்திருக்கிறார்கள். மக்களும் திரண்டிருக்கிறார்கள். அதுவே வெற்றி தான்.

சும்மா எழுதுவதற்கு ஒன்றும் கிடைக்காமல் இதை எழுதாமல் பிரயோசனமாக வேறு ஏதாவது எழுதுங்கள். <_<

குளுக்கொசில் நடந்த போராட்டம் முடியாது இப்போது என்று தெரியும் அனைருக்கும் சும்மா போங்கோ பகிடி விடாமல் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் நேரில் கண்டது போல இங்கை ஒரு தர் குளுக்கோஸ் அது இது என்று அந்த ஜயாவின் போராட்டத்தை கிண்டல் செய்யிறார்... :wub:  :wub:

மாணவர்கள் மற்றும் கட்சியினர் போராட்டத்தை தொடர்வதாக வாக்களித்ததால் தான் தியாகு ஐயா உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். அதையும் மன்மோகன் சிங்கின் கடிதத்தையும் சேர்த்து கதைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. மன்மோகன் சிங்கின் கடிதம் கிடைக்காவிட்டாலும் கூட இன்று போராட்டத்தை நிறுத்தியிருப்பார்.

எம்மால் செய்ய முடியாததை அவர் இவ்வளவு நாளாக செய்திருக்கிறார். அவர் மூலம் இப்பொழுது கட்சிகள் மக்களை திரட்டி போராட முன்வந்திருக்கிறார்கள். மக்களும் திரண்டிருக்கிறார்கள். அதுவே வெற்றி தான்.

சும்மா எழுதுவதற்கு ஒன்றும் கிடைக்காமல் இதை எழுதாமல் பிரயோசனமாக வேறு ஏதாவது எழுதுங்கள். <_<

இவர் எழுதுவதை நம்பிட்டு போக்க தமிழர்கள் என்ன முட்டாள்களா....ஒரு சிலர் வருவினம் சாத்திரி அண்ணா அந்த மாதிரி எழுதி இருக்கிறீங்கள்....கொஞ்சம் பொறுங்கோ இதை நான் காவிட்டுப் போய் என்ற முகப் புத்தகத்தில் போடுறேன் என்று :D

குளுக்கொசில் நடந்த போராட்டம் முடியாது இப்போது என்று தெரியும் அனைருக்கும் சும்மா போங்கோ பகிடி விடாமல் . :lol:

குளுக்கோஸ் ஏற்றாமல் தான் அவர் போராட்டம் நடைபெற்றது.

நீங்கள் குளுக்கோஸ் ஏத்தி தன்னும் வேறு எதுவும் சாப்பிடாமல் 15 நாட்களுக்கு இருப்பீர்களா? இருந்து காட்டுங்கள். அதன் பின் மற்றவர்கள் குளுக்கோஸ் ஏற்றினார்களா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யலாம். <_<

தியாகு ஐயாவின் உண்ணாவிரதத்தை அடுத்து தான் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் கூடியுள்ளார்கள். இவ்வளவு பேர் திரள்வார்கள் என்றும் உங்களுக்கு முதலே தெரியுமா? :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130804

இந்திய சனத்தொகை அப்படி விஜயின் புதுப்படம் வரும்போது இதைவிட கூடும் சனம் நீங்க பார்க்கவில்லை போல தமிழ் தேசிய கூட்டமைப்பு போல தமிழ்நாட்டில் எல்லோரையும் ஒரு கூட்டணி வைக்க சொல்லுங்க முடியாது ஜாதி அரசியல் அங்க முக்கியம் சும்மா சினிமாதனம பேசாமல் அலுவலை பாருங்க .

நீங்கள் பேசுறதை விடவா நான் பேசி விட்டேன். :D

முன்னர் சினிமாவுக்கு அதிகளவு மக்கள் கூடுவார்கள். போராட்டத்துக்கு ஆதரவு குறைவு. இப்பொழுதும் சினிமாவுக்கு அதேயளவு மக்கள் கூடுகிறார்கள். ஆனால் போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து செல்கிறது. :)

இன்றைய போராட்டத்திற்கு பல கட்சிகள் சேர்ந்தே அழைப்பு விடுத்திருந்தன. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துளசி கோவியாதையுங்கோ ஆனா தமிழ்நாட்டில 10,000 எல்லாம் ஒரு கூட்டமே இல்ல.

ஒரு வட்ட செயலாளர் முக்கினாலே 5000 பேர் சேருவாங்கள். நமீதா கடைதிறக்க வந்தா போலீஸ் தடியடி நடக்கும்.

நீங்க அதிரும் சென்னை என்பது ஓவர் பில்டப்.

எந்த நாட்டிலும் முழு மக்களும் போராடியதாக சரித்திரம் இல்லை.

அன்று தமிழ்நாட்டில் போராடியதை விட இன்று போராடுபவர்கள் அதிகரித்துள்ளார்கள். நாளை இன்னும் அதிகரிக்க கூடும். மக்கள் தொகை போதாது என்று பேசாமல் இருப்பதை விட மக்களுக்கு பிரச்சனைகளை எடுத்துக்கூறி போராட அழைப்பது தான் முறை.

இவ்வாறான போராட்டங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க நிச்சயம் உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகுவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் - சுரேஷ். பிரேமச்சந்திரன்

16 அக்டோபர் 2013

ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்குக் குரல்கொடுத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு அனைத்திந்தியாவின் கவனத்தையும் ஈழத்தமிழர்பால் ஈர்த்த தோழர் தியாகுவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு நேற்று இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் வேண்டுதலை ஏற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட தோழர் தியாகுவிற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ்.க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ஈழத்தமிழ்ர்களுக்காக இந்தியாவில் பல தோழர்கள் தமது இன்னுயிரையும் ஈந்திருக்கின்றார்கள். கடந்த ஓரிரு ஆணடுகளாக ஈழத்தமிழரின் விடியலுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்தெழுந்து நிற்கின்றது. இந்த வரிசையில் தோழர் தியாகுவின் உண்ணாநோன்பையும் ஈழத்தமிழர்களுக்காகத் தனது இன்னுயிரையே கொடுக்க முன்வந்தமையையும் ஈழத்தமிழர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

தோழர் தியாகு அவர்கள் ஒரு தேர்ந்த மாரக்சிய சிந்தனையாளர். அவருடைய வரலாறு என்பது இந்தியாவின் புரட்சிகர இடதுவாரி வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. அவர் சிறைச்சாலையில் இருந்தபொழுது கார்ல் மார்க்சின் பிரதான படைப்பான வுயுளு ஊயிவையட (ராஸ் கெபிடல்)ஐ தமிழில் மூலதனம் என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர். ஈழவிடுதலைப் போராட்டத்தின் அரசியல் தேவையைத் தமிழக்த்தின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சென்றவர். இந்திய மத்திய அரசாங்கம் ஈழத் தமிழர்கள் தொடர்பாக அவர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக உறுதியான நிலை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்தும் வற்புறுத்தி வருபவர். அந்தவகையில் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு கொழும்பில் நடக்கக்கூடாது என்றும் அதற்கு இந்தியப் பிரதமர் செல்லக்கூடாது என்றும் ஆரம்பம் முதலே தொடர்ந்தும் குரல் கொடுத்து வருபவர். டெல்லியை இதற்கு இணங்க வைப்பதற்காக தனது உயிரையும் துச்சமென மதித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறுபட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

இப்பொழுது அவர்மேற்கொண்டிருந்த உண்ணாநோன்பும் அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் எழுந்துள்ள தமிழக மக்களின் எழுச்சிப் பேரலைகளும் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை யோசிக்க வைத்துள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்ற அவரது செய்தியானது இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தத்தைச் செலுத்தும் என்று கருதுகின்றோம். அதுமட்டுமன்றி, இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பார் என்றும் எதிர்பார்க்கின்றோம். அந்தப் புறக்கணிப்பானது மகாநாட்டில் கலந்துகொள்ளும் ஏனைய நாடுகளின் தலைவர்களுக்கும் சரியான ஒரு செய்தியைச் சொல்லும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதற்குத் தூண்டுகோலாக இருந்த தோழர் தியாகுவை மீண்டும் ஒருமுறை வாழ்த்துவதுடன் தமிழக மக்களின் எழுச்சிமிகு போராட்டங்களுக்கும் தலைவணங்குகின்றோம்.

ஈழ மக்களின் உரிமைகளுக்காகத் தமது உயிரையும் கொடுத்துப் போராடும் தாய்த் தமிழ்நாட்டின் இனிய சொந்தங்களை நெஞ்சில் ஏற்றிப் போற்றுகின்றோம்.

சுரேஷ்.க. பிரேமச்சந்திரன்,

பாராளுமன்ற உறுப்பினர்,

உத்தியோகபூர்வ பேச்சாளர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97703/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ

கூட்டமைப்பும் வரவேற்றிருக்கிறது

வரவேற்க வேண்டிய  அளவுக்கு வந்திருக்கிறது

இங்கு

தாயகத்தமிழர்களின் நலன்களை  தியாகு சுயநலத்துக்கு பாவித்தார் என்பவர்கள்

இந்த அறிக்கையின் பின் கூட்டமைப்பும் அது தான் என்கிறார்களா???

இங்கு எல்லோரும் மாறி மாறி மற்றவனை கேள்வி கேட்கிறோமே தவிர நாங்கள் விடை காணுவதா இல்லை எமது நோக்கம் எல்லாம் ஈழம் கொதிநிலையில் இருக்க வேணும் என்பது மட்டுமே .

  • கருத்துக்கள உறவுகள்
அவருடைய உண்ணாவிரதம் வெற்றி அடைந்ததா எப்படி? தமிழ்நாட்டில் தூங்கிக் கொண்டு இருந்த 10,000 மக்களை எழுப்பினாரா?...இன்னம் கொஞ்ச நாளில் இன்னொருத்தர் தொடங்குவார்.அப்புறம் அடங்கிடும்.அப்படியே மாறி,மாறி விளையாட வேண்டியது தான்.ஈழம் என்பதே விளையாட்டாக போயிட்டுது ^_^
 
  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் ஒரு பத்து பேரை கூட்டி எதுவும் செய்யமுடியுமா?

தமிழ்நாட்டில் ஒரு நடிக,நடிகைககள் கூப்பிட்டால் எத்தனை பேர் வெளியே வருவார்கள் தெரியுமா? இதெல்லாம் ஒரு கூட்டம் <_< எத்தனை வருடமாக அவர் அரசியலில் இருந்தும் 10,000 பேரைத் தான் அவரால் கூட்ட முடிந்தது

நியானி: மேற்கோள் காட்டிய கருத்தும் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளன

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சார ஊடகமே உனக்கு தொப்புள் காட்டினால்தான் செய்திபோடுவாயோ?....

கிஷோர் சாமி மேல சினேகா வழக்கு பதிய போரங்கன்னு யாரோ சொல்லதை நம்பி.... 2 மணிநேரம் கமிஷ்னர் ஆபிஸ்ல நாக்க தொங்கப்போட்டுகிட்டு நின்னிங்களாமே... அடடே... என்ன ஊடகதர்மம்....

மனைவி துணைவியுடன் மெரினாவில் 15 நிமிடம் உண்ணாவிரதம் இருந்தாதான் வந்து நியூஸ் எடுப்பிங்களா?.....

இங்க ஒருத்தர் 12 நாளா உண்ணாவிரதம் இருக்கார்... அதை ஒரு துண்டுசெய்தியா சொல்லவே முடியலையே உங்களால்...

1392983_385425908257135_1637718451_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே கோசன் சே வின் கருத்தை கொப்பி அடிப்பதாக தெரிகிறது.

நடிகைகளுக்கு வரும் கூட்டம் வேறு அரசியல் கூட்டம் வேறு.

நீங்களும் தான் தெரியாமல் அரசியல் கருத்து போட்டு இங்கு குத்தி முறிகிறீர்கள்.

உங்களால் ஒரு பத்து பேரை கூட்டி ஏதாவது உருப்படியா செய்ய முடியுமா?

நான் ஒரு அரசியல்வாதியோ,நடிகையோ இல்லை அப்படி இருந்தால் யாழில் குப்பை கொட்டிக் கொண்டு இருக்க மாட்டேன்.தமிழ்நாட்டு அரசியல்வாதியாக நான் இருந்தால் ஈழத்தை வித்து பிழைக்க மாட்டேன்.
 
கூட்டத்தை கூட்டுவது பெருதுதில்லை.கூட்டம் கூட்டி என்ன சாதிக்கிறது/சாதிச்சது என்பது தான் முக்கியம்

கூட்டத்தைக் கூட்டி என்ன சாதிக்கிறார்கள் என்பதற்கு பொதுவான ஒரு அளவீடு இல்லை.. ஆகவே இந்த விவாதம் அவ்வளவு கெதியில் முடியாது.. :blink:  எதற்கும் இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு தலைவர்கள் ஒன்லைனில் மீட்டிங் வைக்க பரிந்துரைக்கிறேன்.. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.