Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 வெளியிட்ட 'இசைப்பிரியா உயிருடன் கைதாகும்' காணொளி

Featured Replies

  • Replies 197
  • Views 29.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கவலைபட்டும் வேதனைபட்டும் நான் விட்ட பிழைக்கு நிவர்த்தி கிடையாது தங்கையே .

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்ல....

 

இவ்வளவு நடந்தும் அடுத்தவன் கண்டுகொள்ளவில்லையே என்பதை விட எங்கட இனமே கண்டுகொள்ளாமல் இருப்பதை என்னவென்று சொல்வது... :unsure: 

 

ஆரம்பம் படத்துக்கு ரிக்கற் புக் பண்ணுறதில நாங்க ஒரே பிசி...

கந்தசட்டி விரதத்தால வேலை முடிஞ்சு கோயிலுக்கு ஓடுறதில பிசி...

தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராகிறதில பிசியோ பிசி...

குத்தாட்ட நடனப்போட்டியளில பயங்கர பிசி...

 

இப்படியொரு வீடியோவை போட்டா மட்டும் எங்களுக்கு சூடு சொறனை வந்திடுமா என்ன? லட்சக்கணக்கில கொல்லப்பட்ட போது வராதது இப்ப எங்கயிருந்தய்யா வரப்போகுது?

 

இசைப்பிரியா உயிர் பிரியும்வரை இருந்த அந்த சில நிமிடங்களிற்காக மட்டுமே வருந்துகின்றேன். உடலை விட்டு உயிர் பிரிந்து இன்று அவள் தான் நேசித்தவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பாள். உயிருடன் இருந்திருந்தால் எம் இனம் தினமும் அவளை கொன்றிருக்கும். சொறணைகெட்ட இனம்!  :( 

 

இசைப்பிரியாவின் முடிவு ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தது தான்.அவர் கைது செய்யப்பட்டுத் இப்படி ஒரு முடிவு வந்திருக்கும் என்பதும் எதிர் பார்த்தது தான்.காணொலியைப் பார்த்ததும் மனதில் ஒரு கவலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்.ஆனால் நீங்கள் எல்லோரும் 2009ம் மாதம் மேயிக்கு பிறகு ஒரு களியாட்ட நிகழ்ச்சிக்களுக்குப் போகவேயில்லை போலவும்.படமே பார்க்கவில்லை என்பது போலவும் மற்றவரை குற்றம் சொல்கிறீர்கள் பாருங்கள்.அது தான் வேடிக்கை.இசைப்பிரியாவின் வன்புணர்வுக்குகான காணொளியை பார்த்த பிறகும் கூட எத்தனையோ களியாட்ட நிகழ்ச்சிக்களை சந்தித்து இருப்பீர்கள்.
 
முதலில் மற்றவரை குறை சொல்லுவதை விட்டு "கலம் மக்கரே" மாதிரி உங்கட வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.
 
இதை உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை.உங்கள மாதிரி எழுதின,எழுதுகின்ற எல்லோருக்கும் தான்.நன்றி 

தோழர்களே எப்படியான காலகட்டத்தில் இருக்கிறோம் என்று ஒருகணம் சிந்தித்து பாருங்கள். இன்று நம் சகோதரி இசைபிரியாவின் கோரமான காணொளி வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த காணொளியை சேனல் 4 வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த தமிழ் செய்தி நிறுவனங்களும், இந்திய ஊடகங்களும் இந்த காணொளியை காட்டவில்லை.

இதே போன்று தான் 2009 காலகட்டத்திலும் நாம் காயடிக்கப்பட்டோம், நமக்கான செய்திகளை வெளிடாத எந்த செய்தி நிறுவனங்களும் நம் தமிழ் மண்ணில் வணிகம் செய்யக்கூடாது. இங்கே அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களின் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டிருக்கிறேன். இந்த காணொளியை அந்த ஊடகங்கள் காட்டும் வரை தொடர்ந்து அவர்களை அழைத்து அதன் செய்தி ஆசிரியரிடம் தொடர்பெடுத்து நமது கண்டனங்களை தெரிவிப்போம்.

இதை நான் இயக்கம், கட்சி என்ற அனைத்து அடையாளங்களையும் துறந்து ஒரு தமிழனாக கேட்கிறேன். அனைவரும் முடிந்த அளவு பகிருங்கள்.

புதிய தலைமுறை: 044-45969500
சன் தொலைக்காட்சி : 044-44676767
தந்தி தொலைக்காட்சி : 044-42907777
கலைஞர் தொலைக்காட்சி : 044-24307777
ஜெயா தொலைகாட்சி : 044-4396 0000
CNN IBN : +91-120-4341818
NDTV : +91-1126446666
Hindu : 044-28576300

 

 

Prithik Ganesan

(facebook)

 

பி.கு: சத்யம் தொலைகாட்சி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இக்காணொளி ஒளிபரப்பப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மீழ முடியாத வலிகளினுடே பயணிக்கின்றோம்...... அவலத்தை தந்தவனுக்கு திருப்பி கொடுப்போம்!!

இன்றைய தமிழோசையில் எதிர்பாருங்கள்

இசைப்பிரியா படுகொலை தொடர்பில் இலங்கை இராணுவத்திடம் எழுப்பப்படும் கேள்விகள்...

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் செவ்வி...

 

BBC tamil
(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தமிழோசையில் எதிர்பாருங்கள்

இசைப்பிரியா படுகொலை தொடர்பில் இலங்கை இராணுவத்திடம் எழுப்பப்படும் கேள்விகள்...

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் செவ்வி...

 

BBC tamil

(facebook)

அவன் நல்ல வெடிச்சு தள்ளுவான் போய் கேலுங்கோ அவன் சொல்லுற பொய்யை

Edited by பையன்26

அவன் நல்ல வெடிச்சு தள்ளுவான் பொய் கேலுங்கோ அவன் சொல்லுற பொய்யை

 

ஒரு தகவலுக்காக இங்கு இணைத்தேன். :)

 

இப்பவே சில சிங்களவர்கள் இந்த காணொளி பொய்யாம். மீண்டும் முன்னை போல் பொய்யை அவிழ்த்து விடுகிறார்களாம் என கூறியிருக்கிறார்கள். :rolleyes: இவர்களுக்கெல்லாம் சிங்கள மக்களுக்கு இதே போல் நடந்து அக்காணொளிகள் வெளிவரும்போது அது பொய்யான காணொளி என கூறினால் தான் வலிக்கும். :rolleyes:

Edited by துளசி

இசைப் பிரியா கொடுமைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்ட காணொளியை ஏராளமான நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் உளவலிமை எனக்கில்லை என்பதால் நான் பார்க்கவில்லை. இந்த நேரத்தில் அழுவதோ, அரற்றுவதோ, ஆத்திரப்படுவதோ, ஆற்றாமையால் எரியிட்டுக் கொள்வதோ சரியான எதிர்வினையாக இருக்காது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

அறிவை பயன்படுத்துவோம். இத்தாலிக்காரி பாசிசத்தையும், மோடிகளின் மோசடிகளையும், இவர்களுக்கு ஏவல் செய்யும் இந்நாட்டு அரசியல்வியாதிகளையும் அம்பலப்படுத்துவோம். தமிழராய் இணைவோம், மாற்றங்கள் செய்வோம், ஏற்றம் பெறுவோம்.

 

S.p. Udayakumaran

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தகவலுக்காக இங்கு இணைத்தேன். :)

 

இப்பவே சில சிங்களவர்கள் இந்த காணொளி பொய்யாம். மீண்டும் முன்னை போல் பொய்யை அவிழ்த்து விடுகிறார்களாம் என கூறியிருக்கிறார்கள். :rolleyes: இவர்களுக்கெல்லாம் சிங்கள மக்களுக்கு இதே போல் நடந்து அக்காணொளிகள் வெளிவரும்போது அது பொய்யான காணொளி என கூறினால் தான் வலிக்கும். :rolleyes:

சிங்களவன் எப்ப உண்மையை சொல்லி இருக்கிறான்...

இசைப்பிரியாவினைப் பற்றிய காணொளியை முழுவதுமாக பார்க்குமளவு மனவலிமை எனக்கில்லை.. அல்லது அதைப் பார்த்து பக்கம் பக்கமாக அரசியல் தேர்வுக்கு பதில் எழுதி நகர்ந்து செல்லும் தத்துவ ஆர்வமும் இல்லை… இசைப்பிரியா என்பது அங்கு நிகழ்ந்த 150,000 படுகொலையில் ஒரு புள்ளியாக நிற்கிறது.. இந்த ஒரு புள்ளியே நம்மின் ஆன்மாவினை உறுவி எடுத்துவிடுகிறது எனும் பொழுது ஒட்டுமொத்த நிகழ்வினையும் எண்ணிப்பார்க்க துணிவில்லாமல் கோழையாக ஒடுங்குகிறது மனம்.

சாதிப்பெருமையும், மதப்பெருமையும் பேசித் திரியும் ஒரு இனம் இம்மாதிரியான இனப்படுகொலையை அங்கீகரிக்கும் மெளனத்தினையே கடைபிடிக்கும் என்பதற்கு தமிழினத்தினை தவிர வேறெந்த உதாரணமும் இருக்க முடியாது.. கட்சி பெருமைக்கு கூட்டம் சேர்ப்பவர்களும், சாதிப்பெருமைக்கு கூட்டம் சேர்ப்பவர்களும், அதிகாரப் பலத்திற்கு இவ்விரண்டினையும் ஒருசேர செய்து முடிப்பவர்களும் முடிசூடா மன்னர்களாக வலம் வரும் இதே தேசத்தில், இதே அரசினால் செய்து முடிக்கப்பட்ட இனப்படுகொலையின் முகம் ‘இசைப்பிரியாவின் படுகொலை’.

இதை பார்த்து எந்த கட்சியாவது தனது ஆகப்பெரும் பலத்தினை திரட்டி சென்னையையோ, அல்லது வேறு நகரினையோ முடக்கப்போகிறதா என்ன?.. அல்லது இந்திய அரசின் வெறியை எதிர்த்து களமாடப்போகிறதா என்ன?.. அல்லது சாதிப் பெருமைக்கு நரம்பு புடைக்க களமாடுபவர்கள் வண்டி வண்டியாய் தலைநகரினை ஆக்கிரமித்து இந்திய தேசிய கட்சிகளையும், இனப்படுகொலையை ஆதரிக்கும் சோ, சுப்ரமணியசாமி, இந்து ராம், எம்.எஸ் சுவாமிநாதன், போன்றோர்களை விரட்டியடிக்கப் போகிறார்களா என்ன?

வாக்குகட்சிகள் மட்டுமா, 2009இல் அடையாளப் போராட்டம் கூட நடத்தாத பல புரட்சிகர கட்சிகளின் மெளனம் இதில் ஒன்று. 2009க்கு பின்பு இனப்படுகொலையைப் பற்றி பேசாத, அம்மனநிலையை திசை திருப்பிய நிலை. இன்றும் அனைவரையும் குற்றம் சாட்டிவிட்டு , ஈழத்தில் விடுதலை என்கிற கோரிக்கைக்கு மக்கள் ஆதாரவு இல்லை என்று நாக்கூசாமல் இந்திய அரசுக்கு சொம்பு தூக்குவதற்கு மார்க்சியத்தினையும் லெனினியத்தினையும் பயன்படுத்தும் யோக்கியவான்கள், 2009இல் என்ன செய்தார்கள் என்றும் பட்டியலிடவேண்டும். ஒரு இனப்படுகொலை என்பது , வாரம் ஒரு முறை நடக்கும் தெருமுனை விபத்து அல்ல. இனப்படுகொலைப் பற்றிய அறிவியல் பூர்வமான விவாதம் வராமல் தவிர்ப்பதற்காக செய்யப்படும் புரட்சிகர யுக்திகள் கவனிக்கப்படாமல் இல்லை..

தேர்தல் கட்சிகள் 2009இல் தமது வாக்குவங்கிகளுக்காக, தேர்தலுக்காக போராட்டத்தினை “அம்போவென” விட்டுச் சென்ற அயோக்கியத்தனமும், பிறரைக் குறைசொல்லிவிட்டு தமது கடமையை இதுவரை செய்யாமல் நிற்கும் புரட்சிகர மாற்றுக்குழுக்களும் இதுவரை நேர்மையான சுயவிமர்சனத்தினை முன்வைக்கவில்லை….யார் இங்கு குற்றவாளி இல்லை?... நாம் அனைவரும் உட்பட 150,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதற்கு எந்த ஒரு தமிழகத் தமிழனும் கொஞ்சம் கூட வெட்கப்படாமல், குற்ற உணர்ச்சியில்லாமல் அடுத்தவரைக் குறை சொல்லிவிட்டு தப்பிச் செல்லும் லாவகம் இருக்கும் வரை தமிழ்ச் சமூகம் வெற்றி பெறாது.

ஒவ்வொரு தமிழனும் தன் கட்சி, தன் சாதி, தன் இயக்கம் என்பதற்கு விசுவாசமாய் நின்றான்/நிற்கிறான். மனித நேயத்திற்காகவும், தமது இனம் என்பதற்காகவும் கூட அவன் போராட்டக் களத்திற்கு வரவில்லை. 2009க்கு பின்பு இதுவரை கவனித்த அரசியலில்கூட இதே மனநிலையையே பார்க்க முடிகிறது. இது மாறாமல் எதுவும் நிகழப்போவதில்லை. எப்பொழுது நாமெல்லாம் நமது மெளனம், செயலற்றதன்மை, நேர்மையற்ற சுயநல மனநிலை இவற்றிற்காக சுயவிமர்சனம் ஏற்று இயக்கம்-கட்சி-சாதி கடந்து நிற்கிறோமோ அப்பொழுது தான் விடுதலை பிறக்கும்.

நாம் இதுவரை பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு கூடங்குள போராட்டமே அத்தாட்சி. இடிந்தகரைக்குள் முடங்கிய மக்களுக்காக எந்த ஒரு மக்கள் திரள் போராட்ட்த்தினையோ, நெருக்கடிக்குள்ளாக்கும் செயல்பாட்டினையோ வைக்காமல் எப்பொழுதும் போல அரசாங்க கிளார்க் போல நாம் நடந்து கொண்டிருக்கிறோம். இரண்டு வருடங்களுக்கும் மேலாக முடக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நெருக்க்டி தரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை திரட்டி ஒரு போராட்டம் நட்த்த வக்கில்லாத சமூகம் இனிமேலும் வீரவசனம் பேசுமென்றால், புரட்சிகர தத்துவம் மட்டும் கட்டுரையில் பேசுமென்றால் அதை விட அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது.

இப்பொழுதும் , இப்படுகொலைக்கு துணை செய்த பார்ப்பன ஊடகங்களும், அரச ஆதரவு நிறுவன்ங்களும், சோ, சுப்ரமணிய சாமிகளும், புலிகளை மிகக் கேவலமாக பேசி-எழுதிச் செல்லும் “தி இந்து” , “ தினமலரும்” ஏகோபித்த வணிகத்தினை தமிழகத்தில் எந்த ஒரு நெருக்கடியில்லாமல் செய்து கொண்டிருக்கும். பிறருக்கு இதை விட வேறென்ன வேண்டும் தமிழனின் முகத்தில் காறி உமிழ.

வீரவசனமோ, காயடிக்கும் வறட்டு சித்தாந்தமோ தேவையில்லை, அறத்தின் பாற்பட்டு செயல்படுவோம். அதை செய்வதற்கு முன் நமது குற்றத்தினை சுயவிமர்சனத்தோடு ஏற்றுக்கொள்வோம்.

திருமுருகனாகிய நான் இசைப்பிரியா உட்பட அனைவரின் படுகொலை நடப்பதற்கும் 2009இல் எனது மெளனத்தின் மூலமாக, குறை நிறைந்த அரசியல் செயல்பாடு காரணமாக, என் கோழைத்தனத்தின் காரணமாக, என் சுயநலத்தின் காரணமாக உடந்தையாக இருந்திருக்கிறேன்.

கோரிக்கை அடிப்படையில் இயக்கம்-கட்சி-சாதி கடந்து போராட கற்றுக்கொள்வோம், இனியேனும்.

 

Thirumurugan Gandhi

(facebook)

சிங்களவன் எப்ப உண்மையை சொல்லி இருக்கிறான்...

 

சிங்களவர்களில் ஒருபகுதியினர் உண்மை தெரிந்தும் அதை பொய் என நிறுவ முயல்கிறார்கள். இன்னொரு பகுதியினருக்கு நடந்தது என்ன என்பது தெரியாது. அவ்வளவுக்கு இலங்கை அரசாங்கம் பொய்யையும் பிரட்டையும் கூறி அவர்கள் நம்பும்படி பிரச்சாரம் செய்கிறார்கள்.

வெளிநாட்டில் இவ்வாறான காணொளிகள் இலங்கையின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டுகின்றன. உலகம் தெரிந்தே பிழை விட்டாலும் அதை சாதாரணமாக கடந்து போக முடியாத அழுத்த நிலையை ஒருநாள் இவ்வாறான காணொளிகள் உருவாக்கும்.

ஆனால் உள்நாட்டில் இவ்வாறான காணொளிகள் பொய் என கூறி மீண்டும் பொய் பிரச்சாரம் செய்வார்கள். இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பொய் பிரச்சாரங்களையும் முறியடிக்க வேண்டும். ஆனால் இலங்கையில் வைத்து அதை செய்ய முடியாது.

தோழர்களே நமது தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக இசைபிரியாவின் காணொளி புதியதலைமுறை தொலைக்காட்சியிலும், கலைஞர் செய்தியிலும் காட்டப்படுகிறது, மேலும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தால் மற்றவர்களும் காட்டுவார்கள்.

இன்னும் அழுத்தம் கொடுப்போம்..

 

புதிய தலைமுறை: 044-45969500
சன் தொலைக்காட்சி : 044-44676767
தந்தி தொலைக்காட்சி : 044-42907777
கலைஞர் தொலைக்காட்சி : 044-24307777
ஜெயா தொலைகாட்சி : 044-4396 0000
CNN IBN : +91-120-4341818
NDTV : +91-1126446666
Hindu : 044-28576300

 

Prithik Ganesan
(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை முறை பார்த்தாலும் கண்ணில் உதிரம் வர வைக்கிற காட்சியாக தொலைக்காட்சிகளில் ஓடியும் ஒரு பயலுக்கும் உறைக்கல என்றால் இது இனம் அல்ல பிணம். சொந்த தங்கையை அம்மணமாக அடித்து இழுத்துச்செல்கிறான் எதிரி. இங்கே பட்டாசு கொளுத்திக்கொண்டும், புத்தாடை அணிந்துக் கொண்டும், தல படம் பார்த்துக்கொண்டும், டாஸ்மாக்கில் குடித்துக் கொண்டும் கும்மாளமாக இருக்கிறான் தமிழன். இப்படிப்பட்ட தன்மானற்ற ,தரங்கெட்ட இனத்தில் தான் நாமும் பிறந்திருக்கிறோம் என எண்ணும் போது வெட்கி தலைக்குனிகிறேன். # இந்த லட்சணத்துல ஹேப்பி தீபாவளி,மண்ணாங்கட்டி தீபாவளி என்று எவனாவது என்னிடம் சொன்னீங்க, மரியாதை கெட்டுடும்.

 

 

 

மணி செந்தில்

சேனல் 4-வின் காணொளியும் இலங்கை மீது அதிகரிக்கும் அழுத்தமும்

1 நவம்பர், 2013 - 17:13 ஜிஎம்டி

 

இலங்கையில் அடுத்த மாதம் உலக நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ள இருக்கின்ற காமன்வெல்த் உச்சிமாநாடு நடக்க இருக்கின்ற சூழ்நிலையில், இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் ஒரு அழுத்தமாக பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 புதிய வீடியோ செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மோதலில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் லெப்டினன் கர்ணல் இசைப்பிரியா என்றழைக்கப்படும் ஷோபா என்ற 27 வயது இளம்பெண், இறுதிக்கட்ட போரின்போது தப்பிச்செல்ல முற்படுகையில் இலங்கை இராணுவத்திடம் உயிருடன் பிடிபடும் காட்சியையே வெளியிட்டுள்ளதாக சேனல் 4 செய்தியாளர் கலம் மக்ரே கூறியிருக்கிறார்.

அந்தக் காட்சியில் மேலாடை இல்லாத நிலையில் சேறு நிரம்பிய குட்டையொன்றுக்குள் இருந்து வருகின்ற இளம்பெண்ணின் உடம்பை இராணுவத்தினர் வெள்ளைத் துணியொன்றால் மூடி அழைத்துச் செல்கின்றனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள்தான் அவர் என்று அருகிலிருக்கின்ற மற்ற இராணுவச் சிப்பாய்கள் கோசமிட, அதற்கு 'ஐயோ அவர் நானில்லை' என்று அந்தப் பெண் கூறுகின்ற காட்சிகளே சேனல் 4 வில் நேற்றிரவு புதிதாக வெளியாகின.

 

131101134234_isaipriya__304x171_channel4

 

(இசைப்பிரியா இறுதிப் போரில் ஆயுத மோதலில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு முன்னர் அறிவித்திருந்தது)

 

காமன்வெல்த் மாநாடு

 

இசைப்பிரியா விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, நிர்வாணகோலத்தில் கொல்லப்பட்டுள்ள அவரது சடலத்தின் படங்களை சேனல் 4 ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

இப்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில், பிடிபடும்போது காயங்கள் எதுவுமின்றி இருக்கின்ற இசைப்பிரியா, பின்னர் குழியொன்றுக்குள் மயங்கிய நிலையில் அல்லது பெரும்பாலும் உயிரிழந்துவிட்ட நிலையில் காணப்படுவதாக சேனல் 4 செய்தியாளர் கூறுகிறார்.

பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாகி முகத்தில் மோசமான காயங்களுடன் இசைப்பிரியா இறந்துகிடக்கும் ஏற்கனவே வெளியான காட்சியையும் சேனல் 4 இதனுடன் காட்டியிருக்கிறது. அதனுடன் தொடர்புடையவாறு ஏற்கனவே வெளியான, நிராயுதபாணிகள் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணகோலத்தில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகளும் உள்ளன.

ஏற்கனவே, மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என்றுகூறி கனடா பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டை இந்தியப் பிரதமரும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று தமிழகத்திலிருந்து குரல்கள் ஒலித்த வண்ணமுள்ளன.

பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரோனும் இலங்கையின் உரிமைப் பிரச்சனையை காமன்வெல்த் மாநாட்டில் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் மாநாட்டுக்கு இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், தாம் வெளியி்ட்டுள்ள புதிய ஆதாரம் உலகநாடுகளின் தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று சேனல் 4 கூறியிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் அதுகுறித்து சுயாதீனமான விசாரணைகளை நடத்தாவிட்டால், சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்படலாம் என்று ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

131031130359_manmohan_singh_and_mahinda_

 

(இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது)

 

சரத் பொன்சேகா

 

உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபோது இராணுவத்துக்கு தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை தொடர்புகொண்டு தமிழோசை வினவியது.

'12 ஆயிரம்பேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவர்களில் இந்தப் பெண்ணும் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது. சரணடைந்த 12 ஆயிரம் பேர் பற்றிய ஆவணங்கள் எல்லாம் இராணுவத்தலைமையகத்தில் இருக்கவேண்டும். கடைசியில் அவரை யாரும் பார்த்தார்களா, எப்போது பார்த்தார்கள், இந்தப் படங்கள் எப்போது எடுக்கப்பட்டன போன்ற தகவல்களை ஆராய்ந்தால் தான் அது தொடர்பில் எதனையும் கூறமுடியும்' என்றார் சரத் பொன்சேகா.

இலங்கை இராணுவம் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இருந்தால் அந்த ஆவணங்களை ஆராய்ந்துபார்த்துதான் மறுக்கமுடியும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது எதிரணி அரசியல் தலைவர்களில் ஒருவருமான சரத் பொன்சேகா தமிழோசையிடம் கூறினார்.

 

130801134004_sarath_fonseka_304x171_bbc.

 

(போர் முடிவுக்கு வந்தபோது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டு கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்)

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131101_channelfour.shtml
 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாவின் படத்தை போடாதீர்கள் என்கிறீர்கள்..வேற என்ன பண்ண சொல்றீங்க ...? படத்தை காட்டினால் இந்த இனம் என்கிற பிணத்திற்கு உயிர் வர வில்லையே.. மரணங்களை காட்டித்தான் மரத்துப் போனவனை உசுப்ப வேண்டி இருக்கிறது. துயரங்களை காட்டித்தான் தூங்கிக் கொண்டிருப்பவனின் உறக்கத்தை கலைக்க வேண்டி இருக்கிறது. இத்தனையும் காட்டிய பிறகும் கூட எவனுக்கு இங்கே என்ன நடந்து விட்டது ?. அது என் தங்கை இசைப்பிரியாவின் நிர்வாணம் அல்ல. நான் வெட்கப்பட்டு மறைக்க. மனித தன்மை அற்றுப் போன பேரினவாதமொன்றின் கொடூரம். ரத்தமும், சதையுமாக அம்பலப்படுத்திதான் எமக்கான நீதியை கோருகிறோம். இது வியாபாரமோ,விளம்பரமோ அல்ல. மூடிக் கிடக்கும் உலகத்தின் கண்களை திறப்பதற்கான வெளிச்சம். பதிவிடும் அனைவருமே கலங்கிய கண்களோடும் ,வலி நிறைந்த நெஞ்சோடும் தான் பதிவு இடுகிறோம். வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் தங்கையின் உடை விலகினால் கூட சரியா உட்கார் என்று அறிவுறுத்துகிற இனத்தின் மகள் தான் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். எதிர்த்து கேட்டு நம் சகோதரர்கள் மாவீரர்களாய் விண்ணுக்கு போனார்கள்.நாம் மண்ணில் மானங்கெட்டவர்களாய்..அவமானத்தின் சாட்சிகளாய்...அடிமை தேசிய இனமாய் வாழ்கிறோம்..வாழ்கிறோம்.

 

மணி செந்தில்

  • கருத்துக்கள உறவுகள்

தங்கையே உனக்கு என் வீரவணக்கம்

 

 


No Fire Zone

The team behind the Nobel Peace Prize-nominated Sri Lanka's Killing Fields tell the story of the 138-day-long final offensive in Sri Lanka's bloody civil war

 

 

22.50 Channel 4, 3rd November 2013 Sunday

http://www.channel4.com/programmes/no-fire-zone

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாவின் இன்னொரு ஒளிக்காட்சியை அலை 4 வெளியிட்டிருக்கின்றது. எப்பொழுதோ அவர்களிடம் கிடைத்த அனைத்து காட்சிகளையும் தொடர் நாடகம் போல் பகுதி பகுதியாக வெளியிடுகிறார்கள். நம்மாக்களும் தவணை முறையில் ஒப்பாரி வைக்கிறார்கள். இதனை வைத்தே இந்திய மற்றும் உலக அரசியல் அடுத்த கட்டத்திற்கு இலங்கையை மையமாக வைத்து நகரப் போகின்றது. நம்மாக்கள் தொடர்ந்தும் புலம்புவதும் சர்வதேசம் எதையாவது தரும் என்று நம்புவதோடு மட்டுமே நின்று கொள்ளும். சொந்தமாக எதையும் செய்யாது. ஆனால் கொஞ்ச காலம் கழித்து ஒரு வீடியோ போடுவாங்கள்  . அப்ப பாருங்கோ தலையிலை அடிச்சு அழுவாங்கள் நம்மாக்கள். அதுவரை ...

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

எதை எழுத வார்த்தை இன்றி நிற்கின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

அலைவரிசை நான்கு பகுதி பகுதியாக திட்டமிட்டே வெளியிடுகிறது..

முதலில் பாலச்சந்திரனின் உடலை மட்டும் வெளியிட்டார்கள்.. சிங்களவனும் துப்பாக்கிச் சண்டையில் மாட்டிக்கொண்டு உயிரிழநதிருக்கலாம் என்றான்.. சொல்லி முடிய இராணுவ பங்கரில் உட்கார்ந்திருக்கும் படத்தை வெளியிட்டார்கள்.. அதற்கு சிங்களம் என்ன சொன்னது என்பது மறந்துவிட்டது..

அதேபோலத்தான் இப்ப தங்கை இசைப்பிரியாவும்..

இது சிங்களவனுக்கு மட்டுமல்ல.. இந்தியாவுக்குமே நெருக்கடி.. இதைவைத்து இந்தியா சிங்களவனை ஒன்றும் செய்ய முடியாது.. சர்வதேச நாடுகள் இந்திய அதிகாரிகளுக்கு ராஜிய ரீதியில் அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது.. அழுத்தம் கொடுத்து ஏதாவது ஒரு பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்ப்பந்திப்பார்கள்.. இந்தியா ஒப்புக்கொள்ளாவிட்டால் இலங்கையை மேலும் நெருக்குவார்கள்.. :wub:

சொந்தமாக எதையும் செய்யாது என்று சொல்வதோடு மட்டும் நிறுத்தாமல், சொந்தமாக என்ன செய்யலாம் என்பதையும் சொல்ல வேண்டும்.

உலகில் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை எடுப்பதை விட்டால் வேறு தெரிவுகள் குறைவு.

உலகம் என்பதே நலங்களில் இயங்குவது, இங்கே மனித் உரிமை நீதி நியாயம் எல்லாம் அவ் அவ் நாடுகளின் நலங்களை அடைவதற்கான வழிகள் மட்டுமே.

இந்த ஓட்டத்தில் பலமற்றவனால் எதிர் நீச்சல் செய்ய முடியாது, ஓட்டத்தோடு நீந்தித் தான் கரை சேர முடியும்.

 

இதில வேறு சொல்ல என்ன இருக்கிறது.

 

உள் ஊர் அரசியல் வாதிகளுக்கு அலுப்புக் கொடுங்கோ.பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு எம்பிக்கள் மூலம் அலுப்புக் குடுங்கோ. அதன் மூலம் கமரூனுக்கும், மன் மோகன் சிங்குகும் அலுப்புக் குடுங்கோ.

அவங்கள் தங்கள் நலனோட , எங்களுக்கு ஒரு சதவீதம் சேத்துச் செய்தாலும் , ஒரு கண்துடப்புக்காகிலும் , எமது மக்களுக்கு, காயம் பட்டவர்களுக்கு, சிறையில் இருப்பவர்களுக்கு , காணாமல் இருப்பவர்களுக்கு எதாவது தீர்வு கிடைக்கும். அந்த   ஒரு சதவீதத்தையும் இல்லாது செய்யும் சுய விளம்பர வேலைகளை நிப்பாட்டிப் போட்டு, மக்களை நேரடியான போராட்டங்ளைச் செய்யச் சொல்லி ஊக்கப்படுத்த வேணும்.

 

Please write to you MP and invite him/her to participate at the debate on ‘Sri Lanka and CHOGM’ on the 6th of Nov 2013.

 
See the draft below:

 

Subject: Westminster Hall Debate on ‘Sri Lanka and CHOGM’ on the 6th of Nov 2013 2.30 – 4 PM

 

Dear Mr/Mrs/Ms XXXXXXX,

 

As your constituent, I would be grateful if you could attend this debate at the Westminster Hall on ‘Sri Lanka and CHOGM’, on the 6th of November 2013 from 02.30 until 04.00 PM.

 

Please make a contribution to this debate and ideally speak on this issue where our Prime Minister and the Foreign Secretary have decided to attend the forthcoming Commonwealth Summit in Sri Lanka, regardless of recent Human Rights record in that country.

 

The third part of the shocking documentary Sri Lanka’s Killing Fields – No Fire Zone by Callum Macrae, will be screened on Channel 4 on Sunday 3 November 2013 at 10:50PM.  Please endeavour to watch this programme which details what really happened during the final stages of the war in Sri Lanka which culminated in May 2009 with the massacre of tens of thousands innocent civilians, including women and children. According to official figures; 146,679 people are still unaccounted for.   Link to No-Fire-Zone - http://www.channel4.com/programmes/no-fire-zone

 

I would appreciate it if you could speak on the following;

 

 


1.
      
Call for the Prime Minister and the Foreign Secretary
not to attend CHOGM in Sri Lanka
in November 2013

2.
    
Call for an
International Independent Investigation
into war crimes, crimes against humanity committed during the final stages of the war in Sri Lanka, where 146,679 people are still unaccounted for.

Thank you and look forward to hearing from you soon.

 

 

Kind Regards

 

Full Name

Address

எங்கள் பழைய காயங்களை கிளறி விட்டு எம்மை மீண்டும் வலிகளில் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பதே உலகத்தின் வேலையா இருக்கு ஒரு டிவி சனலிடம் இவ்வளவு ஆதாரம் இருக்கு என்றால் உலக சண்டியரிடம் எவ்வளவு இருக்கும் பின் எதுக்கு இந்த தொடர் நாடகம் என்று விளங்கவில்லை .

 

ஒன்றில் எமக்கு தீர்வு விரைத்து தரவேணும் அல்லது எங்களை மறந்து வாழவிடவேனும் இதை விடுத்து எம்மை குற்றுயிராய் வைத்து பார்ப்பதில் என்ன சுகம் காணப்போகுது இந்த உலகு .

 

 

இசைப்பிரியா படுகொலை தொடர்பில் சரத் பொன்சேகா புலம்பல்.

உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்த போது இராணுவத்துக்கு தளபதியாக இருந்த சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்,

12 ஆயிரம்பேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவர்களில் இந்தப் பெண்ணும் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது.

சரணடைந்த 12 ஆயிரம் பேர் பற்றிய ஆவணங்கள் எல்லாம் இராணுவத் தலைமையகத்தில் இருக்க வேண்டும்.

கடைசியில் அவரை யாரும் பார்த்தார்களா, எப்போது பார்த்தார்கள், இந்தப் படங்கள் எப்போது எடுக்கப்பட்டன போன்ற தகவல்களை ஆராய்ந்தால் தான் அது தொடர்பில் எதனையும் கூற முடியும்.

இலங்கை இராணுவம் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இருந்தால் அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்து தான் மறுக்க முடியும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது எதிரணி அரசியல் தலைவர்களில் ஒருவருமான சரத் பொன்சேகா கூறினார்.

BBC

இசைப்பிரியாவின் இன்னொரு ஒளிக்காட்சியை அலை 4 வெளியிட்டிருக்கின்றது. எப்பொழுதோ அவர்களிடம் கிடைத்த அனைத்து காட்சிகளையும் தொடர் நாடகம் போல் பகுதி பகுதியாக வெளியிடுகிறார்கள். நம்மாக்களும் தவணை முறையில் ஒப்பாரி வைக்கிறார்கள். இதனை வைத்தே இந்திய மற்றும் உலக அரசியல் அடுத்த கட்டத்திற்கு இலங்கையை மையமாக வைத்து நகரப் போகின்றது. நம்மாக்கள் தொடர்ந்தும் புலம்புவதும் சர்வதேசம் எதையாவது தரும் என்று நம்புவதோடு மட்டுமே நின்று கொள்ளும். சொந்தமாக எதையும் செய்யாது. ஆனால் கொஞ்ச காலம் கழித்து ஒரு வீடியோ போடுவாங்கள்  . அப்ப பாருங்கோ தலையிலை அடிச்சு அழுவாங்கள் நம்மாக்கள். அதுவரை ...

 

நம்மவர்கள் என்றால் நமது மக்கள் அப்படித்தானே. என்னங்க நீங்கள் துயரத்தில் கவலை படுபவர்களை பார்த்து நக்கல் அடிக்கின்றீர்கள். இது நியாயமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.