Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் அப்பாச்சியும் .!

Featured Replies

எனது சிறுவயது முதல் என்னை அதிகமா நேசித்த மனிதர்களில் எனது அப்பாச்சி  முன்னணியில் உள்ளார் அம்மாவை விட அவர் மேல பாசம் அன்பு கொள்ளை பிரியம் எனக்கு ஒரு நெடியெனும் என்னை காணமல் இருப்பது அப்பாச்சிக்கு எதோ தொலைத்து விட்ட சோகம் இருக்கும் எங்க போட்டான் இன்னும் காணவில்லை சுற்றிக்கொண்டு வருவான் ஆளை காணம் செக்கல் பட்டுடு விளக்கு வைக்கும் நேரம் ஆகுது இவனை காணம் என தனியா விட்டின் திண்ணையில் இருந்து கதைப்பார் .

 

அம்மா பேசியபடி இருப்ப அவன் வருவான் நீங்க வந்து தேத்தண்ணிய குடியுங்க எங்க போகபோறான் எங்காவது பெடியலோடா நிப்பான் இப்ப வந்திடுவான் என்று சொன்னாலும் அப்பாச்சி கேளாது நாலுதரம் ரோட்டுக்கு வந்து எட்டி பார்க்கும் சிலவேளை அப்பொழுதுகளில் நான் வருவேன் ......'என்ன கிழவி ரோட்டில யாரை சயிட் அடிக்கிற என்று கேட்படி ' ஓம் ஓம் எனக்கு இப்பதான் 18 ஆள் பிடிக்கிறன் நீ எங்க உலாத்திட்டு வாற என்று என் பின்னாடி வருவார் போய் முகத்தை கைகாலை கழுவிட்டு வீடுக்குள்ள வா நேரம் கேட்ட நேரம் வாறது பேய் பிசாசுடன் என்று புறுபுறுப்பு நடக்கும் .

 

சரி சரி கிழவி உனக்கு கதை கூட புட்டை போடு என்று சொன்னா ஓம் மாப்பிளை நீ வைச்ச ஆள் நான் சாப்பாடு போடுறன் பொறு என எனக்கு பதில் சொல்லி  குசினிக்கு போகும் கிழவி கறிச்சட்டி திறந்து பார்த்து ஏண்டி பிள்ளை குழம்புக்க ஒண்டையும் காணம் என்று அம்மாவிடம் கேள்வி போகும் அம்மாவோ கிடக்கிறது போட்டு கொடுக்க சாப்பிடுவன் என்று சொல்லுவா கிழவி கேட்காது உடனம் ஒரு முட்டை பொரியும் அவ்வளவு வேகமும் வேலைக்கு பஞ்சி படாத ஆளும் அப்பாச்சி மண்வெட்டிய தூக்கினா அவ்வளவு காணி புல்லும் செருக்கிதான் வைப்பா மனவலிமையும் உடல் வலிமையையும் உள்ள ஆள் அப்பாச்சி ....

 

காலமும் நேரமும் வேகமாக நகர உறவுகள் சொந்தங்கள் பிரிவுகள் என சுழற்ச்சி முறையில் வர அதுக்கு நாங்களும் விதிவிலக்கா என்ன அதில் தப்பி போக o/L எடுக்கிற நேரம் போராட்டம் என்னும் பாதையில் போயிட்டம் சிறிது காலம் மனம் பெரும் கஷ்டம் ஏக்கங்களை சுமந்தாலும் நண்பர்கள் வேலைகள் என நாட்கள் நகர அப்பாச்சி இரவுகளில் நினைவில் எப்படியும் வருவார் என்னை அறியாமல் என் கண்கள் நீரை விட்டபடி இருக்கும் கிழவி இப்ப என்ன செய்யும் சாப்பிடுதா அல்லது கோயில் குளம் என்று திரியுதா சொல்லாமல் வந்திட்டன் தேடியிருக்கும் அன்று பூரா என மனதில் ஒரு ஓரமா வலி இருக்கும் இன்னும் சிறிது காலம் எப்படியும் பார்க்கலாம் இப்ப என்ன வேற நாட்டுக்கா போயிட்டன் என்று மனதை தேற்றி உறக்கம் தழுவும் ...

 

 

காலம் உருண்டு ஓட வெளியில் போய் வரும் சுழலும் எனக்கு அமைய ஒருநாள் இரண்டு வருடம் கழிந்து இருக்கும் வீட்டுக்கு போகிறேன் அங்கு அவர்கள் இல்லை பக்கத்து வீட்டு ஆண்டி சொன்னா அம்மா ஆக்கள் இப்ப இன்னாரின் காணியில் வீடு போட்டு இருக்கினம் என்று சரி எனகூறி அங்கு போனா கிழவிதான் முன்னுக்கு இருக்கு மேட்டர் சைக்கிளை கிழவிக்கு நேர விட்டுக்கொண்டு போக அசையாமல் கிழவி இருக்கு என்னன்னா எப்படி இருக்குற குரலில் யாரு என பிடித்த கிழவி அழுது குளறி கூப்பாடு போட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து நிண்டிச்சு சரி சரி விடு விடு இப்ப என்ன நான் உனக்கு முன்னுக்கு நிக்கிறன் எதுக்கு அழுகிற விடு தேத்தண்ணி போடு எங்க அம்மா என்று கேட்டபடி நான் அமர .....

 

அம்மா தங்கச்சிய கூப்பிட போயிட்ட எதோ பாடம் படிக்க போறவள் அந்த வாத்தியார் விட்டுக்கு பொழுது படுகுது அதுதான் கூட்டி வர போறா சரி மகனே நீ இப்படி கறுத்து இருக்குற வளத்திட போல கிடக்கு இப்ப எனக்கும் கண் பெரிசா தெரியிறது குறைவு என்று கூற ஓம் நான் முதல் நல்ல வெள்ளைதானே சும்மா இருண அப்பர் எங்க இப்பவும் தண்ணி அடிக்கிறவரா குழப்படியா உன்ர மகன் என்றவுடன் இல்லை நீ போனப்பிறகு குறைவு கவலைதான் அவனுக்கு தடி வளர்த்தபடி இருக்குறான் யாரோ இண்டைக்கு வயல் வெட்ட கூப்பிட்டது போல போயிட்டான் வருவான் இப்ப என் நீ போகப்போறியா மகனே கொஞ்சநேரம் இரு அம்மாவும் அப்பாவும் வந்திடுவினம் தங்கச்சி வேற உன்னை பார்க்க ஆர்வமா இருக்குறாள் இல்லையென நேரம் போகுது நான் எட்டி பார்த்திட்டு போவம் என்று வந்தனான் இனி இங்கால வேலை அடிக்கடி வந்து போறன் யோசிக்காமல் இரு நல்ல சாப்பிடு மருந்து எடு கண்ணுக்கு ஓம் ஓம் நாளைக்கு கட்டையில போற எனக்கு இதுகள்தான் குறை .........

 

வீட்டுக்குள் ஓடி சென்று தனது பையில் இருந்து ஒரு 200ரூபா கையில தந்தா எதாவது வாங்கி சாப்பிடு மோனே உடம்பை பாரு எங்க இருந்தாலும் நீ நல்ல இருப்ப எனக்கு நம்பிக்கை இருக்கு தங்கச்சி உன்னை நம்பிதான் இருக்குறாள் அவளை பாரு நான் இண்டைக்கோ நாளைக்கோ வாழ்த்து முடிச்சிட்டன் நீங்க வாழுற பிள்ளைகள் இன்னும் நிறைய இருக்கு பார்க்க என கட்டி அனைத்து முத்தம் இட்டு கண்கலங்கி நிக்கும் கிழவியின் கண்களை பார்த்து பேசும் அளவு நான் இல்லை என் கண்களும் நீ நிறைந்து இருந்ததால் சரியன போட்டு வாறன் அம்மா வந்தா சொல்லு சிலவேளை அடுத்த கிழமை வருவேன் போட்டு வாறன் ...........

 

 

காலம் வேகமா போக சமாதான  காலம் வர நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பா வந்தா இங்கயும் தனிமை வாட்டி எடுக்கும் சில காலம் அப்பாச்சிக்கு ஒரு போனை போட்டு ஒரு நிமிடம் கதைத்தா எதோ ஒரு சுமை இறங்கிய மாதிரி இருக்கும் கிழவி அங்க கதைக்கும் வேகம் இங்க கேட்கும் 'எண்டா மோனா அங்க எதோ காட்டு கொடுப்பினமாம் உனக்கு தந்திட்டங்களா ' என்று கேட்கும் வேகம் இங்க உள்ள பக்கத்து வீட்டுக்காரனுக்கு கேட்கும் ...இல்லையென அதுக்கு கனகாலம் வேணும் என்று சொன்னா ஆ அது எப்படி அவன்ட மகனுக்கு கொடுத்தவங்கள் இவனட மகனுக்கு கொடுத்தவங்கள் எண்டு எல்லா விபரமும் கிழவி எடுத்து விடும் நாட்டில இருந்த படி அப்படி விசாரிப்பு வெளிநாடு பற்றி அங்க ...

 

 

ஒருநாள் இப்படித்தான் வேலைக்கு போயிட்டு வந்து இருக்க  போன் வந்துது என்னன்னா சொல்லு சும்மா எடுத்தனான் இரவு பூரா ஒரே கனவு அதுதான் உனக்கு எதாவது உடம்பு சரியில்லை என்று யோசிச்சன் அதுதான் கேட்பம் என்று சொன்னா இல்லை அப்பாச்சி வேலை ஒன்றுக்கு போறனான் இங்க தேத்தண்ணி கடையில் கோப்பை கழுவுற வேலை சரியான சனம் இண்டைக்கு சாப்பிட வந்தது அதுதான் வேலை கூட களைச்சு போனன் என்று சொல்ல (அண்டைக்கு அடி அமவாசை ஊருல எல்லோரும் விரதம் எனக்கு தெரியாது ) உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது எனக்கு சிரிச்சு முடில ...

 

 

யோவ் கிழவி இங்க வெள்ளைக்காரன் உனக்கு ஆடி அமவாசை பிடிக்கிறான் விரதம் இருந்து எண்டு ஒரு கத்து கத்தினான அதுக்கு பிறகுதான் கிழவிக்கு விளக்கிச்சு ஓம் நான் ஊர் நினைவில சொல்லி போட்டன் சரி விடு நேற்று போன் அடிக்க யாராவோ ஒரு வெள்ளைகாரி கதைச்சால் யாரு அவள் உனக்கு தெரியுமா என்று அடுத்த கேள்வி அனே அது என்னுடைய போன் நிப்பாட்டி கிடந்தா அப்படி சொல்லும் இப்ப உனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் நானும் உனக்கு கால் பண்ணினா சிலநேரம் 'உப அனத்த பிச்சி சாரிய கருணாகர லலித் பசுவ அவ தாணுவ ' எண்டு சொல்லுது நானும் கருணாவை பஸ்சில வைத்து பிடிச்சிட்டங்கள் எண்டு குழம்பி போயிட்டன் உடனம் கிழவி உனக்கு இந்த நக்கல் நளினத்துக்கு மட்டும் குறையில்லை சாப்பிட்டு படு இங்க எனக்கு காசு ஓடுது வைக்கிறன் என்று சொல்லி கட் பண்ணிட்டு போயிட்டா ...

 

இப்ப அப்பாச்சியின் கழுத்தில ஒரு சாம்சுங் கொழுவி விட்டு கிடக்கு அக்கம் பக்கம் எல்லாம் நடமாடும் டெலிக்கொம் இப்ப அப்பாச்சிதான் நம்ம ஊரில ...

 

அப்பாச்சியின் நினைவுகள் நேரம் உள்ள நேரங்களில் தொடரும் உறவுகளே ...

 

"இப்ப அப்பாச்சியின் கழுத்தில ஒரு சாம்சுங் கொழுவி விட்டு கிடக்கு அக்கம் பக்கம் எல்லாம் நடமாடும் டெலிக்கொம் இப்ப அப்பாச்சிதான் நம்ம ஊரில.."

 

அப்பாச்சி நீடூழி வாழ்க!!  :) 

எனக்கு என்னுடைய பேரன்மார், பேத்திமாரைத் தெரியாது. நான் பூமிக்கு வரமுன்னம் அவை பூமியை விட்டு வெளிக்கிட்டிட்டினம்.

 

ம்ம்..... நல்லாயிருக்கு, தொடருங்கள் வாசிக்க மிக ஆவல்!!

  • தொடங்கியவர்

நன்றி சோழியன் அண்ணே வரவுக்கும் கருத்துக்கும் .

 

நன்றி அலையக்கா வரவுக்கும் கருத்துக்கும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.....

நல்லாயிருக்கு,

தொடருங்கள் வாசிக்க மிக ஆவல்!! :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால கொஞ்சம் சீரியசாச் சொல்லிப்போட்டு பின்னால சிரிக்க வச்சிட்டியள்.

  • கருத்துக்கள உறவுகள்

உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது............................

 

 

 எனக்கும் சிரிச்சு முடில ...

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் அப்பாச்சியின் கதை என்னையும் எனது அம்மம்மாவிடம் கொண்டு போய்விட்டுவிட்டது. நகைச்சுவையும் கடுமையான உணர்வின் தெறிப்புமாக அனுபவம் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீங்கள்.

பி.கு :- அங்கை (FB)நிற்காமல் இங்கை நிண்டு எழுதுங்கோ. :lol:

பி.கு :- அங்கை (FB)நிற்காமல் இங்கை நிண்டு எழுதுங்கோ. :lol:

 

பேந்து அங்கை தேடுறவைக்கு ஆர் பதில் சொல்லுறது?!  :o

  • தொடங்கியவர்

ம்ம்.....

நல்லாயிருக்கு,

தொடருங்கள் வாசிக்க மிக ஆவல்!! :icon_idea: 

 

நன்றி வரவுக்கும் கருத்துக்கும் விசுகு அண்ணே :rolleyes:

முன்னால கொஞ்சம் சீரியசாச் சொல்லிப்போட்டு பின்னால சிரிக்க வச்சிட்டியள்.

 

தொடர்த்து கடினமா போனால் வாசிக்க ஆர்வம் வராது என்று கொஞ்சம் மாற்றி பார்த்தன் அக்கா :)

உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது............................

 

 

 எனக்கும் சிரிச்சு முடில ...

 

நன்றி அக்கா நிலாமதி வரவுக்கும் கருத்துக்கும் :)

 

அஞ்சரன் அப்பாச்சியின் கதை என்னையும் எனது அம்மம்மாவிடம் கொண்டு போய்விட்டுவிட்டது. நகைச்சுவையும் கடுமையான உணர்வின் தெறிப்புமாக அனுபவம் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீங்கள்.

பி.கு :- அங்கை (FB)நிற்காமல் இங்கை நிண்டு எழுதுங்கோ. :lol:

 

அப்பம்மா அம்மம்மா ஒரு வரம் எங்கள் பிள்ளைகளுக்கு அப்படி கிடைக்க வில்லையே என்கிற கவலை எனக்கு இருக்கு அக்கா .

 

fb குறைச்சுட்டு வாறன் இப்ப :D

பேந்து அங்கை தேடுறவைக்கு ஆர் பதில் சொல்லுறது?!  :o

 

அதுதானே சோழியன் அண்ணே அப்படி கேளுங்கோ :icon_idea:

 

எங்கை மிச்சக் கதை? 

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், உங்கள் கதையை வாசித்ததும், உடனே நினைவுக்கு வந்தது, என்னையும் வளர்த்த ஆச்சிகளும். அப்புக்களும் தான்!

 

அவர்கள் எங்களிடம் எதையுமே எதிர்பார்க்காவிட்டாலும், எம்மால் அவர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான நேரத்தில்.எதையுமே செய்ய இயலாத தூரத்தில் வாழ்ந்திருந்தோம்! :o

 

அவர்கள் விடைபெற்ற போது , அவர்கள் அருகிலிருந்து விடையனுப்பும் சந்தர்ப்பங்கள் ம் கூடக் கிடைக்கவில்லை! 

 

உங்கள் கதை நகைச்சுவையுடன் கலந்திருந்தாலும், அதன் கருப்பொருள் மிகவும் காத்திரமானது!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

அஞ்சரன், உங்கள் கதையை வாசித்ததும், உடனே நினைவுக்கு வந்தது, என்னையும் வளர்த்த ஆச்சிகளும். அப்புக்களும் தான்!

 

அவர்கள் எங்களிடம் எதையுமே எதிர்பார்க்காவிட்டாலும், எம்மால் அவர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான நேரத்தில்.எதையுமே செய்ய இயலாத தூரத்தில் வாழ்ந்திருந்தோம்! :o

 

அவர்கள் விடைபெற்ற போது , அவர்கள் அருகிலிருந்து விடையனுப்பும் சந்தர்ப்பங்கள் ம் கூடக் கிடைக்கவில்லை! 

 

உங்கள் கதை நகைச்சுவையுடன் கலந்திருந்தாலும், அதன் கருப்பொருள் மிகவும் காத்திரமானது!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

 

 

புங்கை உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கோ :)

  • கருத்துக்கள உறவுகள்

பேந்து அங்கை தேடுறவைக்கு ஆர் பதில் சொல்லுறது?!  :o

 

அங்கை காலைவணக்கம் மதிய வணக்கம் போடுற நேரத்தை அப்பாச்சியின் ஞாபகத்தை பகிர பாவிக்கலாம் எண்ட நல்லெண்ணம்தான். அங்கையும் தம்பி வேணும் பதில் சொல்ல ஆனால் இங்கை ஒரு வரலாற்றை பதிய வேண்டிய காலத்தின் கடமையை இங்கையும் செய்ய வேணுமெண்டு சொல்ல வந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

fb குறைச்சுட்டு வாறன் இப்ப :D

 

அச்சாப்பிள்ளை. :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ அஞ்சரன் அப்பாச்சியின் கதைகளை வாசிக்க ஆவலாய் உள்ளோம்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாட்டன் பாட்டியின் அன்பை அரவணைப்பைப் பெற்றுக்கொள்ளதவன்.

ஆனாலும் அயலவர்கள் உறவினர்களின்
பாட்டன் பாட்டிகள் தங்கள் பேரன் பேத்திகளிடம் காட்டும்

தொல்லைக்கு அளவே இல்லை. :D

சிலவேளைகளில் பாட்டியின் மேலிருக்கும் கோபத்தை

அவரின் பேரனிடம் காட்டி அவர்களை வம்புக்கிழுப்பதும் உண்டு :lol:

 

பதிவிற்கு நன்றி அஞ்சரன் 

  • தொடங்கியவர்

நன்றி புத்தன் ..........வாத்தியார் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் :rolleyes:


எங்கை மிச்சக் கதை? 

 

அக்கா அவசரம்  வேணாம் வரும் ஆனால் வராது :D

 

கூடிய சீக்கிரம் :rolleyes:
 

அனுபவ வெளிப்பாடுகளுக்கு என்றுமே ஒரு தனியான வீச்சு உண்டு . அதைச் சொல்லும்பொழுது மிகவும் கவனமாக கோர்த்துச் சொல்ல வேண்டும் . அந்த வித்தையை அஞ்சரன் கைவரப் பெற்றிருப்பது மகிழ்சியே . ஆனாலும் முற்ருப்  புள்ளி , கால் புள்ளி இடைப்புள்ளி ஆகியவற்றில் கவனம் எடுங்கள் . இதுவும் ஒரு கதைசொல்லிக்கு அத்தியாவசியமானது .உங்கள் கதைக்கு எனது மனந் திறந்த பாராட்டுக்கள் :) :) :) .

 

  • தொடங்கியவர்

அனுபவ வெளிப்பாடுகளுக்கு என்றுமே ஒரு தனியான வீச்சு உண்டு . அதைச் சொல்லும்பொழுது மிகவும் கவனமாக கோர்த்துச் சொல்ல வேண்டும் . அந்த வித்தையை அஞ்சரன் கைவரப் பெற்றிருப்பது மகிழ்சியே . ஆனாலும் முற்ருப்  புள்ளி , கால் புள்ளி இடைப்புள்ளி ஆகியவற்றில் கவனம் எடுங்கள் . இதுவும் ஒரு கதைசொல்லிக்கு அத்தியாவசியமானது .உங்கள் கதைக்கு எனது மனந் திறந்த பாராட்டுக்கள் :) :) :) .

 

நன்றி கோமகன் அண்ணா உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் பிழைகளை திருத்த முயற்சி செய்வேன் நிச்சயம் :)

அஞ்சரன்...  என் அப்பா தன் இளவயதிலேயே தன் தாய் தந்தையரை இழந்தவர் என்பதனால் நான் அப்பாச்சியைப் பார்த்ததே இல்லை.

எனக்கு எல்லாமுமேஎன் அம்மம்மாதான். ஆனாலும் அம்மாவின் மாமியார் ஒருவர் இருந்தவ. பூமணி என்பது அவவின்ர பெயர்.

எங்கட இயக்கப் பெடியள் என்றால் அவவுக்கு பிடிக்காது. இதனால் என் அப்பாவுக்கும் அவவுக்கும் அடிக்கடி சூடான  அரசியல் விவாதம் நடக்கும். இப்படியே அவவைப்பற்றி நிறையக் கதைக்கலாம்.

பழைய ஞாபகங்களை கிளறிவிட்டது உங்கள் கதை... தொடருங்கள்! :)

 

கோமகன் சொன்ன விடயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மற்றும் படி திறம்பட எழுதுகின்றீர்கள்! வாழ்த்துக்கள்! :)

  • தொடங்கியவர்

நன்றி கவிதை வரவுக்கும் கருத்துக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.