Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எள்ளுச்செடி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனகாம்பரம்

எள்ளு, கள்ளு என்று ஒன்றும் கிடையாது. அது கொடுந்தமிழ்.

 

எள் தான் செந்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லெண்ண  சீ  எண்ணைச் செடி...!

  • கருத்துக்கள உறவுகள்

கனகாம்பரம்

 

உங்கள் வீட்டுக் கனகாம்பரம் இப்பிடித்தான் பூக்கிறதோ ???

 

  • தொடங்கியவர்

எள்ளு, கள்ளு என்று ஒன்றும் கிடையாது. அது கொடுந்தமிழ்.

 

எள் தான் செந்தமிழ்.

 

வணக்கம் பிள்ளையள் !!! நல்லாய்தான் ஆனைக்கோட்டையிலை செக்காட்டி நல்லெண்ணை எடுத்து இருக்கிறியள் :lol: :lol:  :D . நாங்கள் எள்ளு எண்டு சொல்லி பழகீட்டம் ஆனால் எள் தான் சரியான தமிழ் . இதுக்கு இன்னுமொரு பேர் " திலம் " எண்டு இருக்கு .  மல்லையர் அடிச்சால் குறிதப்பாது அதாலை அவருக்குதான் இந்தமுறை பரிசு :):D .

 

  • தொடங்கியவர்

39 எலுமிச்சை மரம் ( lemon or C. limon )

 

svsw.jpg

 

எலுமிச்சை மரம்  இந்தியா, வடக்கு பர்மா, சீனா ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை. தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும், இது ஒரு தொற்றுநீக்கியாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் பல வகை நச்சுப் பொருட்களுக்கான நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டது. இது முதலில் பாரசீகத்துக்கும் அங்கிருந்து ஈராக் பின்னர் கிபி 700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது பற்றிய பதிவுகள் முதன் முதலில் கிபி பத்தாம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன. இது தொடக்க கால இஸ்லாமியப் பூங்காக்களில் அழகூட்டல் தாவரங்களாகவும் பயன்பட்டன. கிபி 1000க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் இது அரபு உலகிலும், நடுநிலக்கடல் பகுதிகளிலும் இது பரவியிருந்தது.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி நகரில் தனியான எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.

எலுமிச்சை (lemon) புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது. இது தேசிக்காய் (lime), தோடம்பழம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப சீனி (சர்க்கரை) அல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது உண்டு. இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.

எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

Nutritional value per 100 g (3.5 oz)
Energy    121 kJ (29 kcal)
- Sugars    2.5 g
- Dietary fiber    2.8 g
Fat    0.3 g
Protein    1.1 g
Thiamine (vit. B1)    0.04 mg (3%)
Riboflavin (vit. B2)    0.02 mg (2%)
Niacin (vit. B3)    0.1 mg (1%)
Pantothenic acid (B5)    0.19 mg (4%)
Vitamin B6    0.08 mg (6%)
Folate (vit. B9)    11 μg (3%)
Choline    5.1 mg (1%)
Vitamin C    53 mg (64%)
Calcium    26 mg (3%)
Iron    0.6 mg (5%)
Magnesium    8 mg (2%)
Manganese    0.03 mg (1%)
Phosphorus    16 mg (2%)
Potassium    138 mg (3%)
Zinc    0.06 mg (1%)
Link to USDA Database entry
Percentages are roughly approximated
using US recommendations for adults.
Source: USDA Nutrient Database

தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும்.

மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.. குளிக்கும் போது  எலுமிச்சை தோலை உடலில் தேய்த்து குளிக்கலாம் .உடம்பும் சுத்தமாகும் .கிருமிகளும் நீங்கும் . சந்தையில் எலுமிச்சைசோப்புகளும் ஷாம்புகளும் ஏராளம்  உள்ளன .

குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சைஆகும் .  எலுமிச்சை, . பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய் போக்கும், வாய் நாற்றம் போகும், சர்ம நோய்கள் விலகும்.

எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை கடந்தது. எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது. சுமார் 15 அடிவரை வளரும். தமிகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. செம்மண்ணில் நன்கு வளரும். இதில் பலவகையுண்டு நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டு. எல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். பூ விட்டுக் காய்கள் உருண்டை மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். முற்றினால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சையை அரச கனி என்பர். இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர். கடவுளுக்கு மிக உகந்தது. வழிபாட்டில் வரவெற்பிலும் முதன்மை வகிப்பது. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :

பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும். இதன் சாறு டீயுடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.

பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

பழச்சாற்றை கண், காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.

பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம், குமட்டல், பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும். வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லி. சாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.

இதன் சாறு 30 மி..லி. இந்துப்பு-15 கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த நோய், வயிற்றுக்கோளாறு, பக்க சூதக வாதம், கப நோய் குணமாகும்.

இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, சூடு குணமாகும்.

பற்பம் என்பது சுண்ணாம்பு சத்துடையதாம். எலும்பு, சுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும், சங்கு, பவளம், முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.

இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.

படை, கருமையாகத் தடிப்பாகப் படர்தல், இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.

வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம் இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டு. மூப்பு நீங்கும், நரை, திரை படராது. ஆயுள் பெருகும். உடல் ஊட்டம் பெறும். ஆனால் புளி, காரம், புலால், புகை ஆகாது.

எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளும் தவராது சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம் எற்படும்.

இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல் மயக்கம் தீரும்.

குடற்புண், காச்சல், டைப்பாய்டு சுரம் எனப்படும். இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து, ஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88

 

http://en.wikipedia.org/wiki/Lemon

 

http://news.amanushyam.in/2013/01/blog-post_7577.html

Edited by கோமகன்

எலும்பிச்சை

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நீங்கள் படம்போடும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் போடுவது தான் நல்லது. அதைவீடுவிட்டு நவீனனுக்கும் உங்களுக்கும் வசதியான நேரம் போட்டால் நாங்கள் ஒருத்தரும் உந்தப்பக்கம் வரமாட்டம் சொல்லிப்போட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

எலுமிச்சை (எலுமிச்சஞ்செடி)

  • கருத்துக்கள உறவுகள்

எலுமிச்சை மரம்


எலுமிச்சை என்றால் பழத்தைத்தான் குறிக்கும். அதனால் எனக்குத்தான் இம்முறை பச்சை வரவேணும்.

கோமகன் நீங்கள் படம்போடும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் போடுவது தான் நல்லது. அதைவீடுவிட்டு நவீனனுக்கும் உங்களுக்கும் வசதியான நேரம் போட்டால் நாங்கள் ஒருத்தரும் உந்தப்பக்கம் வரமாட்டம் சொல்லிப்போட்டன்.

சுமோ, கோமகன் ஏதோ தான் விரும்பிய நேரம் படத்தை போடுகிறார். இதற்குள் ஏன் என்னை இழுக்கிறீர்கள்???

நீங்கள் இதை எழுதி மினக்கட்ட நேரம் சரியான பதிலை கண்டு பிடித்திருக்கலாம். யாரும் இன்னும் சரியான பதில் கூறவில்லை

ஆல்பக்கோடா மரம் :)

  • கருத்துக்கள உறவுகள்

தோடை மரம்

லெமென்/ இலெமென்/ கொடி எலுமிச்சை

 

இதை நாம் லெமென் அல்லது இலெமென் என்றுதான் அழைப்போம். ஆனாலும் கொடி எலுமிச்சை, எலுமிச்சை போன்ற பெயர்கள் பாவிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் நிச்சயமாக Lime மும் Lemon னும் இரண்டு வேறு மரங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அட... புங்கை ! நான் நாரத்தங்காய் ஒருத்தரும் சொல்லேல்ல நாந்தான் வின்னர் என்று ஆவலுடன் கீழே வந்தால் நீங்கள்,  ஜஸ்ட் மிஸ்ட்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

நாரத்தங்காய் தமிழ்ச் சொல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிக்காய் மரம்/lime 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் வீட்டுக் கனகாம்பரம் இப்பிடித்தான் பூக்கிறதோ ???

 

 

விஞ்ஞான வளர்ச்சியிலை ஏதாவது மாற்றம் கீற்றம் வந்திருக்கலாமெண்டுட்டு ஒரு குருட்டுவாக்கிலை எழுதிப்பாத்தன்.....நாசமறுப்பு இந்தமுறையும் சறுக்கீட்டுது  :(

  • கருத்துக்கள உறவுகள்

நாரத்தங்காய் தமிழ்ச் சொல் இல்லை.

 

தங்காய் ! நார்த்தங்காய்யில  நார்த் இருக்கென்டதுக்காக அது வடமொழிச்சொல்லாகாது, அதில் இருக்கும் நார்  ஐ நீங்கள் பார்க்க வேனும். நார் அக்மார்க் தமிழ்ச்சொல்தானே...! (தேங்காய் நார், வாழை நார், பனம்நார், நாரந்தனை, நார்ச்சிமார்கோவில் இப்படி...!) :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

தங்காய் ! நார்த்தங்காய்யில  நார்த் இருக்கென்டதுக்காக அது வடமொழிச்சொல்லாகாது, அதில் இருக்கும் நார்  ஐ நீங்கள் பார்க்க வேனும். நார் அக்மார்க் தமிழ்ச்சொல்தானே...! (தேங்காய் நார், வாழை நார், பனம்நார், நாரந்தனை, நார்ச்சிமார்கோவில் இப்படி...!) :lol::D

 

அதுசரி :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.