Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • தொடங்கியவர்

இந்த போட்டிக்கு மினக்கெட்டதிலும் பார்க்க   ஒரு கமுகம் பிள்ளை நட்டு தண்ணி வார்த்திருந்தால் தன்னும் பிரயோசனமானதாக வளர்ந்திருக்கும். 

 

என்ன கோதாரியாப்பா.............  கோவிலை கோபம் எண்டால் நேரை பேசலாமே :o :o :( .

 

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கமுகு மரம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கமுகு மரம் அல்லது பாக்கு மரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாறல் பாக்குமரம்.

கமுகம்பிள்ளை...!

 

குறிப்பாகச் சில பிள்ளைகள் : தென்னம்பிள்ளை, கமுகம்பிள்ளை , அணில்பிள்ளை , கீரிப்பிள்ளை ...!  இன்னுமொரு பிள்ளை மறந்திட்டன் , அதுக்காக  வேலுப்பிள்ளை என்று சொல்லக் கூடாது ...! :)

ஏன்னாங்க நீங்க கிளிப்பிள்ளை மாதிரி நான் சொல்வதையே........சொல்லீட்டு :D

 

கமுகம் பிள்ளை பற்றி நான் சிறுவனாக இருந்த போது ஒரு பகிடி அது நினைவுக்கு வந்துதான் இதை இங்கே எழுதினேன்)

சிறு வகுப்பில் ஒரு நாடகத்தில் நான் சிறுவனாக, நோஞ்சானக,  வருத்தம் வந்து இறப்பதாக காட்சி. என் அப்பனுக்கு நடித்தவர் மிகவும் உயர்ந்த மேல்வகுப்பு மாணவன். என் வகுப்பு வாத்தியாரை நாடக இயக்குனர்- ஆசிரியர் ஒருமாணவனை தரசொல்லிக் கேட்ட போது எனது ஆசியர் நான் மனனம் செய்து கூறுவதாலும், கட்டை என்பதாலும் போலும் பையனாக நடிக்க என்னை அனுப்பிவைத்தார். நாடக ஆசியருக்கு எங்கள் குடும்பத்தையே பிடிக்காது. இதனால் அவர் என்னை சேர்க்கவும் இல்லை திருப்பி அனுப்பவும் இல்லை. நாடகத்தில் எல்லோரும் பெரிய ஆண்களும் பெண்களும்(மாணவர்கள்தான் ). நான் மட்டும் தான் இரண்டாம் வகுப்பு. அதுவே எனக்கு பெரிய கிலிச கேடாக இருந்தது. நாடக நேரம் என்னை எனது வாத்தியார் அனுப்பிவிடுவார். நான் என்னடாப்பா செய்ய என்று நாடக அறைக்கு போனால் அந்த வாத்தியார் என்னை மட்டும் காணதுபோல மற்ற்வர்களுக்கு மட்டும் பழக்குவார். சில நாட்களில் மற்ற நடிகர்களில் ஒருவர் என்னை "எங்கே பார்க்கிறாய், உனது கட்டமெல்லோ" என்று எதாவது ஒருவிததில் ஒன்றை செய்ய சொல்வார். இன்னொரு நாளுக்கு இன்னொருவர் வேறு ஒன்றை சொல்வார். இறுதியில் எனக்கு ஸ்கிறிப்ட் தேவையில்லை என்று சொல்லிவிட்டு சும்மா வந்து போ என்று கூறி எனது இரண்டு வரி ஸ்கிறிப்டையும் வாங்கிவிட்டார்கள். அதன் பின்னர் நான் அங்கு செய்ய ஒன்றும் இருக்கவில்லை.

 

ஆனால் மற்றவர்களின் நினைவு .நான் வருத்தக்காற குழந்தையாக வசனம் இல்லாமல் வந்து போவது மட்டும் என்றதாக இருந்தது. எனது நினவு என்னை நீக்கிவிட்டார்கள் என்பது. அது சற்று ஆறுதலாக இருந்தாலும், வகுப்பு வாத்தியார் நாடக நேரம் எழுப்பி அனுப்ப அவரிம் நீக்கியதை சொல்லப் பயந்து சும்மா ஒவ்வொருநாளும் நாடக அறைக்கு போய் மற்றவர்களை பார்த்துவிட்டு அவர்கள் தங்கள் வகுப்புக்களுக்கு திரும்ப, நானும் வந்து எனது வகுப்பில் அமர்ந்துவிடுவேன்.   நாடக போட்டி இன்னொரு பள்ளியில். நான் அதில் கட்டுரை போட்டியிலும்  இருந்தேன். அது மற்ற பெரிய மாணவர்களுக்கும் தெரிந்திருந்தது எனக்கு அது அவர்களுக்கு தெரியும் என்பது தெரியாது.  நாடக ஆசியர் நாடகம் அன்று என்னை மற்ற பாடசாலைக்கு வர சொல்லவில்லை ஆனால் நானும் சென்றிருந்தேன் ஏனெனில் எனது கட்டுரை போட்டிக்காக.

 

கட்டுரை முடிய நான் உடனே வீட்டுக்கு வராமல் மற்ற மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது  இன்னொரு பெண் நடிகர் திடுதிடுப்பென  ஓடிவந்து "நீ என்ன இஞ்சை விளையாடிக் கொண்டிருக்கிறாய். நாடகம் தொடங்கப் போகுது என்றார்." நான இதென்னடா கஸ்டம் என்று ஒருமுறை வளைந்து நெளிந்துவிட்டு "நான் நாடகத்தில் இல்லையே என்றேன். " அவ எனது அம்மாவாக நடித்தவர். அவவுடந்தான் நான் மேடையில் தோற்றுவது. "ஆஆஆஆய்ஞ்" என்று சொல்லிவிட்டு என்கையை பிடித்து இழுத்து கொண்டு போய்விட்டார். அங்கு எல்லோரும் நாடக உடைகளுடன். எனது அப்பனாக நடித்தவர் ஒரு றாங்கி மாதிரி. நான் மெல்லமாக எனக்கு உடை இல்லையே என்றேன். மற்றவர்கள் அந்த கதையைக் கேடகவே இல்லை. அப்பனாக நடித்தவர் " நீ அப்படியேதான் வருகிறாய்" என்றார். எல்லொரும் மேக்கப், உடை, எனக்கு மட்டும் பள்ளிக்குட கால்சட்டை சேட்டுடன் என்று அதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. 

 

எனது கட்டம் வந்த போது என்னை பிடித்து மேடையில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள். நான் பயந்து பயந்து போனேன். நான் மேடையில் கஸ்டப்படுவதை பார்த்தோ என்னவோ தாயாருக்கு நடித்தவர் எனது பழைய ஸ்கிரிப்டின் முதல் சொல்லை முனுமுனுத்து சொன்னார்.  அவர்கள் அதை என்னிடம் இருந்து வாங்கி விட்டாலும் அந்த இரண்டுவரிகளும் எனக்கு முதல் நாளே பாடம். உடனே எனக்கு துணிச்சல் வந்து இரண்டு வரிகளையும் உரக்ககத்தி 15 செக்கன்களுக்குள் சொல்லி முடித்துவிட்டேன். மிகுதி ஐந்து நிமிடமும் மேடையில் அவலமாகப் போய்விட்டது. எனக்கு நோய்வாய்ப்பட்ட குழந்தை எப்படி நடிக்கும் என்றதே தெரியவில்லை.  மேலும் எங்கள் குழு எவ்வளவோ கஸ்டப்படும் ஒரு பரிசும் கிடைக்வில்லை. எல்லோரும் முகத்தை தொங்க போட்டுக்கொண்டு வீடு போனார்கள். எனக்கு என்னாலா என்று பயமாக இருந்தது. ஆனால் இனி நாடகம் இல்லை எனறதால் சந்தோசம்.

 

ஒருகிழமைக்கு பின்னர் நான் பாத்றூம் போய்விட்டு எனது வகுப்புக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த அப்பனாக நடித்தவரும் இன்னொருவரும் பாத்றூமுக்கு வந்துகொண்டிருந்தார்கள். அவர்களின் நடையை பார்த்தால் எதோ என்னோடு கொளுவப் போகிறார்கள் என்பது தெரிந்து  நான் பாதையின் ஒரமாக மறுவளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தேன். ஆனலும் எனக்கு கிட்ட வந்தவுடன் அவர்கள் எனது கரைக்கே வந்துவிட்டார்கள். நாடகத்தில் சொதப்பினதுக்குத்தான் பிரச்சனை கொடுக்க போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் கிட்ட வந்த பின்னர் அந்த அப்பனாக நடித்தவர் என்னிடம் குனிந்து மெல்லிய குரலில் உனக்கு "சாரம் அவிட்ட நேரம் ஒரு கமுகம் பிள்ளையை வைச்சு தண்ணி வாத்திருந்தாலும் கொட்டை பாக்காவது விழுத்தியிருக்கும்" என்று விட்டு கோபம் சந்தோசம் எதுவும் காட்டாமல் நடக்கத் துவங்கிங்கினார்.  நான் இன்னமும் எதுவும் விளங்காமல் அதே இடத்தில் நின்றிருந்தேன். ஆனால் அவர் சொன்ன விதத்திலும் கொட்டை பாக்கு என்ற சொல்லை கேட்டதும் எதோ தூஷ்னத்தால் என்னை திட்டியிருக்கிறார் போலப் பட்டது. எனது பாரிதாப நிலையை பார்த்து மற்றவர் என்ன்னை திரும்பி பார்த்து அவன் உனக்கு அப்பன்ரா என்றுவிட்டு அவரும் போய்விட்டார்.

 

எனக்கு எதுவும் நடந்தது புரியாவிட்டாலும் நாடகத்தில் சொதப்பியதற்கு Account settle பண்ணியாயிற்று என்பதால்  இனிமேல் அவர்களைக்கண்டு பயப்பட வேண்டியதில்லை என்றது புரிந்தது.  ஆனல் பிற்காலம் O/Lல் இன்னொரு பள்ளியில் படித்த போது எனது வகுப்பு நண்பர்கள் அதே கதை தென்னையை வைத்து ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டதை கேட்டேன். "அட கொப்பன் உனக்காக கொடுக்கு அவிட்ட நேரம் ஒரு தென்னம் பிள்ளையை வைத்து தண்ணிவார்த்திருந்தால் தேங்காய்  தன்னும் பிடிங்கியிருக்கலாம்" என்றான் ஒருவன் மற்றவரைப் பார்த்து.

 

அந்த நேரம் தான் எனக்கு எனது பழைய கமுகம் பிள்ளை கதை நினைவுக்கு வந்தது.  நானும் அதை அவர்களுக்கு சொல்லியும் சிரித்தேன். அதன் பின்னர்தான் விளங்கியது கொட்டை பாக்கில் தூஷனம் எதுவும் இருக்கவில்லை. அது அவர்களின் பகிடியின் Version மட்டும்தான் என்பதும்.

 

(அதன் பின்னர் நான் அந்த பள்ளியில் படித்தகாலம் முழுவதும் அந்த அப்பனாக நடித்தவர் எனக்கு நல்ல நண்பனாக  இருந்தார். பால் interval நேரம் பால் கொட்டிலுக்கு போனால் தனது நீண்ட கைகளால் எனக்கு முதலில் மூக்கு பேணியில் பால் வார்த்து தருவார். அவரை ஊரிலும் தெரிய வந்தது. ஆனால் நான் கொழும்புக்கு வந்த பின்னர் அவர் தற்கொலை செய்ததாக கேள்விப்பட்டேன். அவர் காதலித்த பெண் உறவு முறையில் சகோதரி என்று தந்தையார் கலியாணத்துக்கு உடன்படவில்லை என்று பேசிக்கொண்டார்கள். கவலையாக இருந்தது. அதன்பின்னர் அவரின் றாங்கி நடத்தைகளுக்கு பின்னால் இருந்த இளகிய மனத்தையும் நகைசுவையின் ஆழத்தையும் புரிந்தேன். அதனால் கமுகம் பிள்ளை பகிடி எனக்கு உறவு முறை சொந்தமானது ஒன்று) :D

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லை..! உங்கள் அனுபவம் அருமை. பாருங்கள்  தலையில் சீப்பை வைத்துக் கொண்டு வீடு முழுதும் தேடியமாதிரி , இந்தக் கிளிப்பிள்ளைக்கு ரெக்கை  முளைச்சிடிச்சு அதுதான் நினைவை விட்டுப் பறந்து போயிடிச்சு...! :D :D

  • தொடங்கியவர்

இந்த போட்டிக்கு மினக்கெட்டதிலும் பார்க்க   ஒரு கமுகம் பிள்ளை நட்டு தண்ணி வார்த்திருந்தால் தன்னும் பிரயோசனமானதாக வளர்ந்திருக்கும். 

 

வணக்கம் பிள்ளையள் !! நல்லாய் வெத்திலையும் பாக்கும் போட்டு வாய் சிவக்க சிவக்க கதைச்சு இருக்கிறியள் :lol: . மிச்சம் சந்தோசம் . நவீனன் பாக்கு மரம் எண்டார் . அவர் சொன்னது சரியெண்டாலும் , நான் போட்டது பேபி மரம் :lol: . அதாலை மல்லையர் கமுகம் பிள்ளை எண்டு சொன்னார் :D .அதாலை மனச்சாட்சிபடி அவருக்குத்தான் நான் குடுக்க வேணும் :) .அனால் அவருக்கு நான் பயம் இல்லை எண்டதயும் உங்களுக்கு சொல்ல வேணும் :lol: . பேந்து அதுவேறை பிரச்சனையாய் போடும்.

 

  • தொடங்கியவர்

46 கத்தரிச் செடி  அல்லது வழுதுணங்காய் செடி ( brinjal Eggplant aubergine melongene garden egg, or guinea squash ) .
 

00046.jpg

 

கத்தரி சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். இதனைப் பழந்தமிழில் வழுதுணங்காய் என்றனர் (சங்கக் காலத்து ஔவையார் வரகசிரிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்).

கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள். கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அராபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள்.

தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. இவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய் எனப் பல வகைகள் உண்டு.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF

கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.

இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையான வேதிப்பொருட்கள் அர்ஜினைன், லுஸைன், நிகோடின் அமிலம், சொலசோடைன், டையோஸ்ஜெனினி, டிரான்ஸ், கெபெய்க் அமிலம், டேடுரடியோல். ஆஸ்துமா நோயை குறைக்கும்கத்தரியின் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்; சிறுநீர்க் கழிப்பின் போது ஏற்படும் வலி ஆகியவற்றினை குணப்படுத்தும்; வாயில் எச்சில் சுரக்க உதவும். வேர் ஆஸ்துமா மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது. வேரின் சாறு காதுவலி போக்க பயன்படுத்தப்படுகிறது. கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். காலின் வீக்கத்தை குறைப்பதற்கு அப்பகுதியில் பூசிக்கொள்வார்கள். இதை பிழிந்து சாறு எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் பூசுவதன் மூலம் வியர்வையை தடைசெய்யலாம்.கொழுப்புக்கு எதிரானது மேலும் கொழுப்பு சேர்வதற்கு எதிரானது. கல்லீரல் நோய்களுக்கு நல்ல மருந்தாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவினைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தினை சரிப்படுத்த சிறந்த உணவாகும். உடலில் கூடுதலாக உள்ள கொழுப்புச்சத்தின் அளவை கட்டுப்படுத்த கத்தரிக்காய் உதவுகிறது. அத்துடன் இது ஒரு போஷாக்கு நிறைந்த உணவாகையால் ஏழைகளின் இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது,ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கத்தரியின் மருத்துவப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளன. சுத்த ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவத்தை தடுக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூலநோய்க்கு மேல் பூச்சாக பயன்படுகிறது. நசுக்கப்பட்ட கனியானது வெங்குரு மற்றும் வெயில் காரணமாக முகம் சிவந்திருத்தலை போக்க வல்லது.

http://tamil.boldsky.com/health/food/2011/medicinal-uses-brinjal-aid0091.html


 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிச் செடி :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை திண்ணையில நிக்கிறதைக் கண்டுவிட்டு தெரிஞ்ச செடியாப் போட்டிருக்கிரியல் போல கிடக்கு கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாவல் கத்தரிச் செடி :D

வழுதுணங்காய்ச் செடி. அது சரியான செந்தமிழ். 

 

கத்தரிக்காய்ச் செடி எங்கோவோ களவேடுத்த பெயர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டுவில்!!!!  மட்டுவில் கத்தரிக்காய் மரம்..

  • கருத்துக்கள உறவுகள்

வழுதுணங்காய்ச் செடி. அது சரியான செந்தமிழ்.

கத்தரிக்காய்ச் செடி எங்கோவோ களவேடுத்த பெயர்.

வழுதுணங்காய் ஒரு கிலோ தாங்கோ எண்டால் கடையில் என்ன கிடைக்கும்?? :huh::D

வழுதுணங்காய் ஒரு கிலோ தாங்கோ எண்டால் கடையில் என்ன கிடைக்கும்?? :huh::D

எதற்கும் சங்கானை சந்தையில் கேட்டுபாருங்க இசை
  • கருத்துக்கள உறவுகள்

வழுதுணங்காய் ஒரு கிலோ தாங்கோ எண்டால் கடையில் என்ன கிடைக்கும்?? :huh::D

பக்கத்தில இருக்கிற 'முருங்கைக்காய் நீளத்தைப்' பொறுத்துக் கிடைக்கற 'அளவு' இருக்கும்! :icon_idea:

வழுதுணங்காய் ஒரு கிலோ தாங்கோ எண்டால் கடையில் என்ன கிடைக்கும்?? :huh::D

இன்னங்க சார் நக்கலா?

 

கடையிலயென்னா "எக்பிளாண்ட் கில்லோ என்ன பிறைஸ் " என்னுதான் கேட்டுக்க வேணுமின்னு இன்னும் தெரிஞ்சுக்கேலையா சாமி? எந்த தரவையிலை நீங்களெல்லாம் குடியிருக்கீங்க சார்?.  :lol:

பக்கத்தில இருக்கிற 'முருங்கைக்காய் நீளத்தைப்' பொறுத்துக் கிடைக்கற 'அளவு' இருக்கும்! :icon_idea:

நீங்க றம்ஸ்டிக்கை சொல்லுறீங்க போலிருக்கு. நம்ம பக்க கடைகள் எல்லாம் லேடீஸ் பிங்கர்தான் வைச்சிருப்பாங்க. நீளமானது ரொம்ம நைசுங்க. அதைதான்.கேட்டு வாங்கி நமக்கு பழக்கம். :D

நானா கடையிலை கேட்டா அண்ணி(உண்ணிதானோ சரியான பெயர் என்று தெரியாது) கில்லோ இல்லை தனி அலகிலையே நன்னா போட்டிக்கொடுப்பா.

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக் கத்தரிச் செடி !

  • தொடங்கியவர்

கத்தரிச் செடி :D

 

வணக்கம் பிள்ளையள்!!!   நல்லாய் தான்  கத்தரிக்காய் பொரியலும் வெள்ளைபுட்டும் சாபிட்டிருக்கிறியள் போலை கிடக்கு  :lol: . எல்லாரும் சரியாய் தான் சொல்லியிருக்கிறியள் . நான் சட்டப்படி எங்கடை டங்குவுக்குதான் குடுக்கவேணும் . இதிலை மல்லையரும் அழுகுணி ஆட்டம் போட்டுருக்கிறார்  :wub:  :D . எங்களுக்கு தெரியாத ஒரு சொல்லை சுழியோடி எடுத்து தந்திருக்கிறார் . அது எங்களுக்கு பெருமை தானே . அதாலை இவை ரெண்டு பேருக்கும் இந்தமுறை வழக்கத்துக்கு மாறாய் பரிசை குடுப்பம் எண்டு இருக்கிறன் :) :) .

 

  • தொடங்கியவர்

47 கருங்காலி (  Ebony or  Diospyros ebenum )

 

00047.jpg

 

கருங்காலி (Diospyros ebenum - இலங்கைக் கருங்காலி) என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் பெறப்படுகின்றன.

இந்த கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். அநேகமாக கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது. சில இடங்களில் கருங்காலி அல்லாத பலகைகளில் இருந்து உலக்கை செய்யப்பட்டாலும், கருங்காலி உலக்கைகளுக்கான பெறுமதியை மற்றையப் பலகைகள் பெறுவதில்லை.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF

https://en.wikipedia.org/wiki/Diospyros_ebenum

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன்.. :D 

இப்போது போட்டிருப்பது..

"----- மரம்"

என்ன மரம் என்பது பிற்பாடு நிரப்பப்படும்..  :lol:

கருங்காலி மரம்

  • கருத்துக்கள உறவுகள்

கருங்காலி...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.