Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • தொடங்கியவர்

07 அரச மரம் ( Ficus religiosa or sacred fig )

 

 

rl79.jpg

 

 

அரச மரம்  பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். இது அண்ணளவாக 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது . அரசமரத்தின்  அடி விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது .
இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவமாகவும் அமைந்திருக்கும் . இந்த இலை  10 தொடக்கம் 17 சென்ரி   மீட்டர் வரை நீளமானதாகவும், 8 தொடக்கம் 12 சென்ரி   மீட்டர்கள் வரை அகலம் கொண்டதாகவும் காணப்படும் .

Edited by கோமகன்

  • Replies 594
  • Views 102.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அரசமரம்

அரசமரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போதிமரம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரச மரம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசமரம்.  ஆரைக் கட்டிப்பிடித்திருக்கென்டு தெரியேல்லை. அரசனென்டால் மரம் என்டாலும், மனுசன் என்டாலும் இதே வேலையாய்ப் போச்சுது! :lol:

 

ஒரு தகவல்: அரசம் இலையில்தான்  ரேகை உள்ளங் கையில் ஓடுவதுபோல் உள் இலையில் ஓடும். ஏனைய இலைகளுக்கு புறத்தியில் இருக்கும்! :D :D

  • தொடங்கியவர்

நான் போட்ட மரத்திலை சிக்கிச் சில்லெடுத்து  விளையாடின எல்லா உறவுகளுக்கும் நன்றியுங்கோ  :lol:  :lol:  . இன்னும் கொஞ்ச நேரத்திலை ஆர் வெண்டதெண்டு சொல்லுறன் பிள்ளையள் :D :D .

  • தொடங்கியவர்

அரசமரம்

 

இதிலை எனக்கு மிச்சம் சந்தோசம் கண்டியளோ  . ஏனென்டால் எல்லாருமே சரியான மறுமொழியைத்தான் தந்திருக்குறியள் .  என்ரை நண்பன் பிரக்கிராசி " வெள்ளரசு " எண்டு சொன்னார் :wub: . ஆனால் நீங்கள் குழம்பாமல் சரியாதான் நிண்டியள்  :D . எல்லாரும் சொன்னாலும் நண்டன் முதலிலை சொன்னதாலை அவருக்குதான் இந்தமுறை பரிசு  :) .

 

  • தொடங்கியவர்

08 அதிமதுரம் (liquorice or Glycyrrhiza glabra)

 

o65a.jpg

 

அதிமதுரம் (liquorice) ஒரு மருத்துவ மூலிகை ஆகும் . அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம். கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.

 

http://en.wikipedia.org/wiki/Liquorice

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிழங்குச் sedi

அதிமதுரம்.

 

அதிமதுரம் ஒரு சிறியவகை மரம் ஆனால் ஆங்கிலத்தில் Plant  ஆக இருப்பதால் அதிமதுரச் செடி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலக் கடலை (கச்சான்) செடி

  • தொடங்கியவர்

அதிமதுரம்.

 

அதிமதுரம் ஒரு சிறியவகை மரம் ஆனால் ஆங்கிலத்தில் Plant  ஆக இருப்பதால் அதிமதுரச் செடி.

 

எனத்தைச் சொல்ல .......... கதை பேச்சு இல்லாமல் உங்களுக்கே தாறன் அப்புக்காத்து :lol::D :D .

 

  • தொடங்கியவர்

09 ஆடாதோடை ,பாவட்டை அல்லது வாசை  ( Malabar nut or Justicia adhatoda )

 

 

GBPIX_photo_110204_zps45fb0353.jpg

 

ஆடாதோடை ஒரு மருத்துவ மூலிகையாகும். இச்செடி இந்திய முழுவதிலும் ஏராளமாக பயிராகின்றது.
இந்த மரத்தின் இலை, பூ, பட்டை, வேர் என்பன மருத்துவ குணமிக்கவை இதன் சுவை கைப்புதன்மையாக இருக்கும் இதன் மருத்துவ குணங்களாக சளியை அகற்றும் நுண்புழு கொல்லியாக செயல்படும் சிறுநீரைப் பெருக்கும் வலியை நீக்கும் இந்த மரத்தின் முக்கிய வேதிப் பொருட்களாக வாசிசின் , வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின் , வைட்டமின் சி , கேலக்டோஸ் போன்றன காணப்படுகின்றன .இந்த மூலிகையினால்  இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றைகே கட்டுப் படுத்தலாம் .

"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி.”


(அகத்தியர் குணவாகடம்)

இந்த மூலிகையைப் பின்வருமாறு பயன்படுத்தினால் ,

சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க
ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க
இருமல்,இளைப்பு,சுரம் தீரும்.
இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்
கொடுக்க இருமல் தீரும்.
இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்.

இந்தச் செடியை பாவட்டை அல்லது வாசை என்றும் அழைப்பார்கள் .

 

http://en.wikipedia.org/wiki/Justicia_adhatoda

Edited by கோமகன்

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் செங்காந்தாள் : மேற்கு தொடர்ச்சி மலையில் பூத்துள்ளது.

 

Tamil_News_large_865620.jpg

 

ராஜபாளையம்: ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும், மருத்துவ குணம் கொண்ட, செங்காந்தாள் மலர்கள், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூத்துள்ளன. குளிர்ச்சியான இடம், நீர்நிலைகள் அருகே, செங்காந்தாள் செடிகள் வளரும். இதன் மலர்கள் சிவப்பு, வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும். தண்டும், மலரும் மருத்துவ குணமுடையவை. ஆண்டுக்கு ஒரு முறை, கார்த்திகை மாதத்தில் மட்டும் பூக்கும், இந்த பூக்கள், ராஜபாளையத்தில், மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில், தற்போது பூத்துள்ளன.

இந்த மலர் பற்றி, சித்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது: இந்த செடியின் மலர்கள் சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறம் என, மூன்று வகைகளாக உள்ளன. சிவப்பு பூக்கள் மட்டும் அதிகமாகவும், மற்றவை அரிதாகவும் காணப்படும். செடியின் கிழங்கு விஷத்தன்மையுடையது. பசுவின் கோமியத்தில் ஊறவைத்து, நஞ்சு முறிக்கப்பட்டு, பாதரசத்துடன் கலந்து, சித்த மருத்துவத்தில், வலி நிவாரணி மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது. இந்த மலர்கள், சமீப காலமாக வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு சித்த மருத்துவர் கூறினர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=865620

 

blank.gif
  • தொடங்கியவர்

நான் நட்ட மரம் தண்ணி வென்னி இல்லாமல் கிடந்தது வாடுதப்பா :D :D :lol: :lol: .

நான் நட்ட மரம் தண்ணி வென்னி இல்லாமல் கிடந்தது வாடுதப்பா :D :D :lol: :lol: .

 

நானும் நாலு தரம் வந்து பாத்தன். மரத்தை கண்ட மாதிரிக் கிடக்கு.சில்லெடுத்த பெயர்தான் தெரியுதில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நாலு தரம் வந்து பாத்தன். மரத்தை கண்ட மாதிரிக் கிடக்கு.சில்லெடுத்த பெயர்தான் தெரியுதில்லை.

 

நானும் பாத்தன்!

 

மாமரத்துக்கும் மரவள்ளிக்கும் பிறந்தது மாதிரிக்கிடக்கு! :o

 

காட்டு மரவள்ளி!!! :icon_idea:

எனக்கும் தான் :) நன்றாக தெரிந்தமரமாதிரி இருக்கு ஆனால் பெயர் தான் வரமாட்டன் என்று அடம் பிடிக்குது :lol:

மரவள்ளி (குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு)

நானும் பாத்தன்!

 

மாமரத்துக்கும் மரவள்ளிக்கும் பிறந்தது மாதிரிக்கிடக்கு! :o

 

காட்டு மரவள்ளி!!! :icon_idea:

 

காட்டுமரவள்ளி என்றுதான் நினைத்தேன். ஆனால் அதன் தாவரவியல் பெயர் வேறாக இருக்குமென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழல் மரவள்ளி.  :D

  • தொடங்கியவர்

ஆடாதோடை

 

தோட்டத்திலை நட்ட மரத்தை வாட விட்டு போடுவினமோ எண்டு உண்மையிலை இண்டைக்கு எனக்கு செரியான கவலையாய் இருந்திது :( .  கடைசி நேரத்திலை   அட்டாக் பாண்டியாய் வந்து மல்லை தண்ணி ஊத்தியாச்சு :lol: . வணக்கம் பிள்ளையள் !!  எல்லாரும் நல்லாத்தான் தேடி இருக்குறியள் .  இதைத் தான்  நாங்கள் லோக்கல் தமிழிலை " பாவட்டை மரம் " எண்டு சொல்லுவம் . இப்ப உங்களுக்கு ஞாபகம் வருகுதோ ??  பாவட்டம்  பத்தையாலை கன கதையள் ஊரிலை நடந்திருக்கு  :D  :D  .

 

  • தொடங்கியவர்

10 அன்னமுன்னா மரம் அல்லது சீத்தா பழமரம் ( custard apple, Annona  or Annona squamosa )

 

hysx.jpg

 

சீத்தா பழம்  அல்லது அன்னமுன்னா அல்லது அன்னமின்னா , வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா  சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும். பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும். சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது. காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

சீதளப் பழம் என்பதே சீத்தாப் பழம் என மருவியது. சீதளம் என்பது குளிர்ச்சியைக் குறிக்கிறது.
 

http://en.wikipedia.org/wiki/Annona_squamosa

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.