Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்ணி 2012/2013 !!!!!!!!!! யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிளாவிலை சித்திராபறுவ கஞ்சிமட்டும்தான் குடிச்சனான் :D

 

சின்னஞ்சிறுசுகள் பிளாவிலை சித்திரைக்கஞ்சியைத்தான் குடிக்கேலும் :D .....என்னைமாதிரி கட்டிளம்காளைகள் சோமபானத்தை பிளாவிலை உறிஞ்சி இழுப்பதையே விரும்புவர் :icon_mrgreen:

 

MELUNCHIMUNAI1.jpg

தட்டுவத்திற்கும் பிளாவிற்கும் வித்தியாசம் இரு படங்களிலும் தெரியும்.

  • Replies 286
  • Views 20.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவின் கைகளால் விருதுகளை வாங்கிய மெசோ அக்கா ......அப்பிடியே சாந்தி அக்காவிடம் ..... நல்ல சாறி எங்க வாங்கினீங்க?

சாந்தி அக்கா: கடையில தான்

மெசோ அக்கா: எந்த கடையில?

சாந்தி அக்கா: ஆ அரிசி கடையில......

பதிலைக்கேட்ட மெசோ அக்கா கோபத்தில் மேடையை விட்டு இறங்க சாந்தி அக்கா அவரை சமாதனப்படுத்த பின் தொடர்கிறார்......

  • தொடங்கியவர்

சாந்தி அக்காவின் கைகளால் விருதுகளை வாங்கிய மெசோ அக்கா ......அப்பிடியே சாந்தி அக்காவிடம் ..... நல்ல சாறி எங்க வாங்கினீங்க?

சாந்தி அக்கா: கடையில தான்

மெசோ அக்கா: எந்த கடையில?

சாந்தி அக்கா: ஆ அரிசி கடையில......

பதிலைக்கேட்ட மெசோ அக்கா கோபத்தில் மேடையை விட்டு இறங்க சாந்தி அக்கா அவரை சமாதனப்படுத்த பின் தொடர்கிறார்......

 

சுண்டு இந்த மைக்கை எங்கையப்பா செருகி வைச்சனியள் :lol: :lol: :D ??

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்,சுமோவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவின் கைகளால் விருதுகளை வாங்கிய மெசோ அக்கா ......அப்பிடியே சாந்தி அக்காவிடம் ..... நல்ல சாறி எங்க வாங்கினீங்க?

சாந்தி அக்கா: கடையில தான்

மெசோ அக்கா: எந்த கடையில?

சாந்தி அக்கா: ஆ அரிசி கடையில......

பதிலைக்கேட்ட மெசோ அக்கா கோபத்தில் மேடையை விட்டு இறங்க சாந்தி அக்கா அவரை சமாதனப்படுத்த பின் தொடர்கிறார்......

 

சுமேரியர் வழிவந்தவர்தானே சாந்தியக்காவும்...!! கோபம் சட்டெனப் பறந்துவிடும். நீங்கள் சுண்டப்போனால்தான் பிரசிசனை சுண்டல்...!

 

புழுதி வாசம் பகலவன், ஊர்க்கதை ஊரெல்லாம் மொசப்பத்தேமியா சுமேரியருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!! :rolleyes:

  • தொடங்கியவர்

வணக்கம் ......... வாசகர்களே !!! ரசிகப்பெருமக்களே !!!!  சிட்ணியின் கோடைகால அந்திமாலைப் பொழுதில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மனம் பூரிக்கின்றோம் :D .  யாழ் இணையத்தில் பல விகடகவிகள் வருவார்கள் போவார்கள் ஆனால் , ஒருசில விகடகவிகளே மக்கள் மனதில் ஆழ வேரோடி என்றும் நினைவில் நிற்பார்கள் . முகத்தார் , சக்கடத்தார் , சுப்பண்ணை , சின்னப்பு , குமாரசாமியர் , டாண் , சாத்திரி , தமிழ் சிறி போன்றோர் வரிசையில் 2012  / 13 க்கான தேர்தலில் பல்முனைப் போட்டிகளே இடம்பெற்றது  :lol:  . பல பகிடிச் சிங்கங்கள் மோதின . வாசகர்களுக்கு யாரைத் தெரிவு செய்வது என்பதில் பலத்த குழப்பமே ஏற்பட்டது . இறுதியாக ஒரு பகிடிச்சிங்கம் [32.76%] வாக்கு வித்தியாசத்தில் " பகிடிச்சிங்கம் " என்ற விருதை தட்டிக்கொண்டது . ஆம்....... ரசிகப்பெருமக்களே !!!! அவர்தான் ......... எமது அன்புக்கும் பாசத்துக்கும் உரிய இசைக்கலைஞனை மேடைக்கு அழைக்கின்றேன்  :)  . இவருக்கு நாங்கள் வைத்த வேறு பல செல்லப் பெயர்களும் உண்டு :wub: . அதை வெளியில் உங்கள்முன் போட்டு உடைப்பது அழகில்லை . எங்கே பகிடிசிங்கத்திற்க்கு அதிரட்டும் கரவோசை ........ இந்த பகிடிசிங்கத்திற்க்கு முன்னாள் "  நகைசுவைக்காவலர் "ஐயா குமாரசாமியர் இங்கே என்னருகில் அவரது சாமான் சக்கட்டுகளுடன் விருதை வழங்கத் தயாராக நிற்கின்றார் :icon_mrgreen: .இப்பொழுது குமாரசாமி ஐயா நகைச்சுவை என்ற பொருளில் ஒரு சிற்ருரை ஆற்றுவார் :D.

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிசிங்கத்திற்கு முன்னாள் " நகைசுவைக்காவலர் "ஐயா குமாரசாமியர் விருதை வழங்கத் தயாராக இருப்பதாக கோமகன் அறிவித்துள்ளார். விருதை பிளாவில் வைத்துக் கொண்டுவருவதா? அல்லது தட்டுவத்தில் வைத்து எடுத்துவருவதா? என்பதையும் அறியத்தருமாறு வேண்டிக்கொள்கிறேன். :D

என் பெயரும் பகிடிச்சிங்க விருதுக்காகப் பரிந்துரைக்கப் பட்டிருந்தது. யாரோ ஒரு கறுப்பு உறவு என் அறைக்குள் பாம்பை விட்டதால் அது என் பகிடிகளைக் கடித்துவிட்டது. அந்தக் கறுப்பு உறவைக் கண்டுபிடித்துத் தருமாறு துப்பறியும் சிங்கங்களான யாழ் உறவுகளைக் கேட்டுக்கொள்கிறேன். :o:blink:

  • தொடங்கியவர்

பகிடிசிங்கத்திற்கு முன்னாள் " நகைசுவைக்காவலர் "ஐயா குமாரசாமியர் விருதை வழங்கத் தயாராக இருப்பதாக கோமகன் அறிவித்துள்ளார். விருதை பிளாவில் வைத்துக் கொண்டுவருவதா? அல்லது தட்டுவத்தில் வைத்து எடுத்துவருவதா? என்பதையும் அறியத்தருமாறு வேண்டிக்கொள்கிறேன். :D

என் பெயரும் பகிடிச்சிங்க விருதுக்காகப் பரிந்துரைக்கப் பட்டிருந்தது. யாரோ ஒரு கறுப்பு உறவு என் அறைக்குள் பாம்பை விட்டதால் அது என் பகிடிகளைக் கடித்துவிட்டது. அந்தக் கறுப்பு உறவைக் கண்டுபிடித்துத் தருமாறு துப்பறியும் சிங்கங்களான யாழ் உறவுகளைக் கேட்டுக்கொள்கிறேன். :o:blink:

 

அதுதான் ராசா நான் விளப்பமாய் கடைசியிலை சொல்லியிருக்கிறன் :lol: . நகைச்சுவை காவலர் ஐயா குமாரசாமி தன்ரை சாமான் சக்கட்டுகளோடை என்னோடை நிக்கிறார்  :D  :D  :icon_idea: .  எண்டு கொஞ்சம் பொறுங்கோ நகைசுவைகாவலர் தான் ஒரு உரை ஆற்றவேண்டும் எண்டு அடம்பிடிச்சவர் என்ன சொல்லுறார் எண்டு பாப்பம் :lol: :lol: :D .

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு இனிய வாழ்த்துக்கள்...! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மேடையிலை இருக்கிற எல்லாருக்கும்  வணக்கம்......
முக்கியமாய்  குஞ்சுகுருமன்களுக்கு முதல் வணக்கம்.ஏன் குஞ்சுகுருமன்களுக்கு முதல் வணக்கமெண்டால் அவர்கள் தான் வருங்கால தூண்கள் எண்டொரு கதை ஒருபக்கமிருந்தாலும் எனக்கு அவையள்ளை ஒருதனிமரியாதை தனிப்பயம்...என்னநேரம் என்னசெய்வினம் எண்டு கடவுளுக்கும் தெரியாது.....கூட இருக்கிறவைக்கும் தெரியாது.....அதாலை இன்னுமொருக்கால் அவைக்கு முதல் வணக்கம்.....இஞ்சை எல்லாரையும் ஒரேயிடத்திலை பாக்கிறதிலை பெரிய சந்தோசமாயிருக்கு...... :D
என்ரைசிறித்தம்பி இந்தநேரம்பாத்து வரமுடியாமல் இருக்கிறது கொஞ்சம் மனவருத்தம்.... :(
அவருக்கு விசா கிடைக்கவில்லை என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்..... ^_^
 
(பரிமளம் ஓடிவந்து காதில் குசுகுசுக்கின்றார்)
 
அன்பானவர்களே எனது தேவதை பரிமளம்!!! கனக்க அறுக்க வேண்டாம்...வந்த அலுவலை பாக்கட்டாம்.....mad0251.gif
 
நகைச்சுவை எல்லாருக்கும் வராது  அது உளரீதியாக வருவது...அது சொல்லும் விதங்களில் இருக்கின்றது...சொல்லும் இடங்கள்....சந்தர்ப்பங்கள் என நேரகாலம் பார்த்து சிந்த்திக்கக்கூடிய நகைச்சுவைகளை அள்ளிவீசுபவர்தான் இசைக்கலைஞன்...ஏனையை நகைச்சுவையாளர்களும் சற்றும் சளைத்தவர்களல்ல......அந்தவகையில் இந்தவருடத்திற்கான பகிடிச்சிங்கம் விருதை இசைக்கலைஞன் அவர்களுக்கு என் கையால் கொடுப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.Fireworks-06-june.gif
 


கையோடை இன்னுமொரு அறிவித்தலை விடுறன்......அம்புக்குறி  001_forward.gif  காட்டின வழியாலை வாறவைக்கு சகல சௌபாக்கியங்களும் கிடக்கும் எண்டதையும் சொல்லவாறன்....... :D
Spoiler
kal_zpsbf70edde.jpg
பரிமளம்  ஏதோ சொல்ல ஓடிவர நான் மற்றப்பக்கத்தாலை விழுந்தடிச்சு ஓடுறன்dogrun-1.gif :o
 
நிலமையை சமாளிக்க இசை மைக்கை எடுத்து பாட வெளிக்கிடுறார்..
 
http://www.youtube.com/watch?v=RgbXUBPkyNs  :D
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குமாரசாமி அண்ணா, கோமகன், அஞ்சரன் ,மற்றும் அனைத்து யாழ்கள உறவுகளுக்கும்..! :D

இந்த விருதை ஏனைய பகிடிச் சிங்கங்களின் சார்பாகவும் வாங்கிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.. :wub: இத்தருணத்தில் எம் ஐயன் வள்ளுவனின் குறளில் இருந்து ஒன்றை எடுத்துச் சொல்லி விடை பெறுகிறேன்.. அதாவது.. :unsure:

எவ்வதை செய்தார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

பகிடிவதை செய்தவர்க்கு.. :(

அவ்வகையில் உங்களையெல்லாம் நான் வதைக்கவில்லை என்கிற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.. நன்றி.. :D

Edited by இசைக்கலைஞன்

குருவானர் அறுவை இல்லை என்கிறார். சீடன் வதை இல்லை என்கிறார். இவர்கள் என்ன Surgeon ம் Dentist ருமா? :D  நல்லாத்தான் தங்கள் சேவைக்கு விளம்ப்ரம் (advertisement) போடுகிறார்கள் போலிருக்கு. Surgeon முட்டி முடியாய் மயக்க மருத்தும் வைத்திருக்கிறார். எனவே போய் மாட்டுப்பட போகிறவர்கள் கவனம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ப.சி. இசை வாழ்த்துக்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

விருது பெற்ற பானாச் சீனா இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாக்களித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி கூறிக் கொள்வதோடு விருது வழங்கிய குழுவினருக்கும் இந்தத் திரியை சோர்வின்றி நடத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும், முக்கியமாக யாழ் இணையத்துக்கும் நன்றி கூறிக்கொள்வதோடு யாழ்களத்தில் இணைந்து அனைத்து உறவுகளுடனும் உறவாடுவதிலும் பெருமை கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குமாரசாமி அண்ணா, கோமகன், அஞ்சரன் ,மற்றும் அனைத்து யாழ்கள உறவுகளுக்கும்..! :D

இந்த விருதை ஏனைய பகிடிச் சிங்கங்களின் சார்பாகவும் வாங்கிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.. :wub: இத்தருணத்தில் எம் ஐயன் வள்ளுவனின் குறளில் இருந்து ஒன்றை எடுத்துச் சொல்லி விடை பெறுகிறேன்.. அதாவது.. :unsure:

எவ்வதை செய்தார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

பகிடிவதை செய்தவர்க்கு.. :(

அவ்வகையில் உங்களையெல்லாம் நான் வதைக்கவில்லை என்கிற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.. நன்றி.. :D

 

எவ்வதை செய்தாலும் இசைக்கலைஞன் கலைஞனே

அவன் வதையும் தேன் வதைபோல் இனிக்கும். :wub:

 

பகிடிச் சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்!!! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களைத் தெரிவித்த சுவி அண்ணா, புத்தன், புங்கை, பாஞ்ச் மற்றும் மனதுக்குள் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்..! :lol:

  • தொடங்கியவர்

வணக்கம்!!! வணக்கம்!! ரசிகப் பெருமக்களே மீண்டும் சிட்ணியில்  ஓர் இதமான மாலைப் பொழுதில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம்  :D  . இன்று நான் உங்களுக்கு அறிமுகப் படுத்தப் போவது எதிலும் ஒரு வித்தியாசமானவரை . இவர் அரிஸ்ரோட்டலும் பிளேட்டோவும் கலந்த ஒரு கலவை :icon_mrgreen: . ஒரு  கருத்தை எழுதுவது எப்படி என்று இவரிடம் பழகவேண்டும் . கருத்துக்கள் என்ற கடுகை குறுக்கி அதில் மிளகின் காரத்தைப் பரப்புவதில் இவர் கில்லாடி . இந்த விருதுக்கான தெரிவிலேயும் பலத்த போட்டியே காணப் பட்டது . இறுதியில் [36.54%]  வாக்குகளைப் பெற்று இந்த " ஒளிச்சுடர் " விருதை தன்வசமாக்கிக் கொண்ட எமது அன்புக்குரிய கிருபனை மேடைக்கு அழைக்கின்றேன்  :D  . இவருக்கு விருதை வழங்க எமது " கேள்வியின் நாயகியாம் " ரதி இங்கே எனதருகில் ஒளிச்சுடரை நேரே பார்க்கும் பதட்டத்துடன் கூடிய  ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றார்  :lol:  :D  .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

விருதுகளைப் பெற்ற ,பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கிருபன்..!

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியா சிட்ணியா

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கிருபன்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நடைபெற்ற யாழ்கள உறவுகளின் கலக்கல் விழாவிற்கு சிட்னியில் வசிக்கும் மூத்த உறுப்பினரான என்னை அழைக்காததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.