Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சகோதரர்கள் கோபிக்கக்கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சகோதரர்கள் கோபிக்கக்கூடாது என்று தாழ்மையாக வேண்டிக்கொண்டவனாக எழுதுகிறேன் . இன்று அத்தனை தமிழ் சகோதரர்களும் மகிந்த அரசின் அராஜகங்களை விமர்சித்தவர்களாக , இந்த அரசை திட்டித் தீர்த்தவர்களாக , சாபத்தின் மேல் சாபமிட்டவர்களாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் மனச்சாட்சியின்மீது கைவைத்தவர்களாக என்னுடைய இந்தப் பதிவிற்கு பதில் சொல்லவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் , முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் " மகிந்த ராஜாங்கத்தில் " இன்று சந்திக்கும் இத்தனை கொடுமைகளுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள் விடுதலைப் புலிகள்தவிர வேறு யாருமல்ல . 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாக மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்டபோது , வடக்கு, கிழக்கு தமிழ் வாக்காளர்களை , வாக்களிக்க விடாமல் பலவந்தமாக புலிகள் தடுத்ததால்தான் சுமார் ஒருலட்சம் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மகிந்த அன்று ஜனாதிபதியாக முடிந்தது . அன்று 80 % அதிகமான முஸ்லிம்கள் மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தபோது , சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தமிழ் வாக்காளர்கள் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தார்கள் . நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் பலம் என்ன என்பதை புலிகள் சரியாக புரிந்திருக்கவில்லையா என்று கேட்கத்தோன்றுகிறது . மன்னியுங்கள் , அந்த முட்டாள் தனத்திற்கு அவர்கள் கொடுத்தவிலை தலைவர் பிரபாகரனின் தலை மட்டுமல்ல . ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் ... காணி , நிலம் , வீடு மனை மட்டுமல்ல கடலும் பறிபோய் இருக்கிறது .... அளவிட முடியாத , எழுதி மாளாத இழப்புகள் நிறைய , நிறைய .......... ஜனநாயகம் என்கிற பசுத்தோலுக்குள் சர்வாதிகார சிங்கம் உறுமுகிறது . ஆட்சிக்கு வந்ததில் இருந்து அனைத்து கட்சிகளையும் துண்டாடி , அவற்றின் ஜனநாயக பலத்தை அழித்து , மகிந்த தனிக்காட்டு ராஜாவாகியது புலிகளின் கடைக்கண் அருளால்தான் . கொள்கை தான் உயிர் என்று கொக்கரித்த இடதுசாரி பயில்வான்களான மக்கள் விடுதலை முன்னணி ( JVP ) மூன்று துண்டுகளாக உடைந்தது . ஆட்சிகளை அமைத்த , கவிழ்த்த பலமான சிறுபான்மை கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டது . கடைசியில் எஞ்சிய கட்சியை காப்பாற்றுவற்ற்க்காக அண்டி வாழ வேண்டிய அபாக்கிய நிலைக்கு அது ஆளாகி அவமானத்தை சுமந்துகொண்டு அவதிப்படுகிறது . ஆண்டாண்டாண்டு காலம் ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சி அம்போவென்று ஆகிக்கிடக்கிறது . தமிழர்களின் உரிமைக்குரல் என்று முழங்குகிற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் மகிந்த அரசு பிடுங்கி எடுத்துத்தான் இருக்கிறது . இந்த பிரித்தாளும் தந்திரம் எந்தநாளும் பலிக்காது , என்றாவது ஒருநாள் இந்த உடைந்தவைகள் எல்லாம் ஒட்டிக்கொண்டு ஒன்றாகி எழுந்து வரலாம் என்பதை புரிந்து வைத்திருப்பதால்தான் , அந்த நிலை உருவாகும்போதும் ; உயிர்வாழ்வற்க்கான ஒட்சிசன் வழங்கியாக பௌத்தஇனவாதத்தை தீனி போட்டு மகிந்த அரசு வளர்த்து வருகிறது . மிகச் சுருக்கமாக சொல்வதானால் ..... அன்று புலிகள் விதைத்ததை இன்று தமிழ் பேசும் இரண்டு சிறுபான்மை சமூகங்களும் அறுவடை செய்யவேண்டி நேர்ந்திருக்கிறது . இது இப்படியே தொடரப்போவது இன்றைக்கு , நாளைக்கு , நாளையன்றைக்கு மட்டுமல்ல இன்னும் பல வருடங்களுக்கா அல்லது தசாப்தங்களுக்கா என்பது புரியவில்லை . நாமும் நம் சந்ததியும் கொடுக்கப்போகிற விலை என்ன என்பது எவருக்குமே தெரியாது . ஆனால்........ மகிந்த சகோதர்கள் சுமார் எழுபது கோடி ரூபாய்களுக்கே வாங்கியதாக மங்கள சமரவீரயும் சிறிபதி சூரிய ஆரச்சியும் சொன்னார்கள் . வாருங்கள் ....சப்தமாக பாடுவோம் ! யாரைத்தான் நம்புவதோ , ஏழையின் நெஞ்சம் .......

முகபுத்தகத்தில் இஸ்லாமிய அன்பர் ஒருவர் எழுதியது

Fb

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விதைத்ததை அறுவடை செய்கிறோம் அது எங்கள் பிரச்சினை. நீங்கள் இலங்கை முசிலிம்கள் உங்கள் அரசியலைப் பார்த்துக்கொள்ளுங்கள். சிங்களப்பேரினவாதத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு தமிழின அழிப்புக்குத் துணைநின்றதும் உங்கள் சமூகம்தான். இப்ப உங்களுக்கெதிராக அவர்கள் தங்கள் உண்மை முகத்தைக் காட்ட வெளிக்கிட்டதும் நியாயம் சொல்லவருகிறீர்கள்.

எமது இனத்தைப் பொறுத்தமட்டில் ரணிலும் ஒன்றுதான் மகிந்தவும் ஒன்றுதான். நாங்கள் சோரம் போன ஓர் இனமல்ல. இறுதிப் போரில் சிங்களம் வீரத்தினால் எமது போராளிகளை வீழ்த்திவிடவில்லை. வஞ்சகம் நிறைந்த இந்தியா மற்றும் உலக வல்லரசுகளின் நேரடிப் பங்களிப்புடன் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பும் முக்கியமானது.

Edited by யாழ்வாலி

நாங்கள் விதைத்ததை அறுவடை செய்கிரோம் அது எங்கள் பிரச்சினை. நீங்கள் இலங்கை முசிலிம்கள் உங்கள் அரசியலைப் பார்த்துக்கொள்ளுங்கள். சிங்களப்பேரினவாதத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு தமிழின அழிப்புக்குத் துணைநின்றதும் உங்கள் சமூகம்தான். இப்ப உங்களுக்கெதிராக அவர்கள் தங்கள் உண்மை முகத்தைக் காட்ட வெளிக்கிட்டதும் நியாயம் சொல்லவருகிறீர்கள்.

எமது இனத்தைப் பொறுத்தமட்டில் ரணிலும் ஒன்றுதான் மகிந்தவும் ஒன்றுதான். நாங்கள் சோரம் போன ஓர் இனமல்ல. இறுதிப் போரில் சிங்களம் வீரத்தினால் எமது போராளிகளை வீழ்த்திவிடவில்லை. வஞ்சகம் நிறைந்த இந்தியா மற்றும் உலக வல்லரசுகளின் நேரடிப் பங்களிப்புடன் இலங்கை முஸ்லிம்களி பங்களிப்பும் முக்கியமானது.

சூப்பர் சகோ .நான் எழுத துடித்தேன் .இன்று தவிர்க்க நினைத்தேன் ..........நன்றிகள் 

ஆட்சிகளை அமைத்த , கவிழ்த்த பலமான சிறுபான்மை கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டது . கடைசியில் எஞ்சிய கட்சியை காப்பாற்றுவற்ற்க்காக அண்டி வாழ வேண்டிய அபாக்கிய நிலைக்கு அது ஆளாகி அவமானத்தை சுமந்துகொண்டு அவதிப்படுகிறது .

 

மு.கா பிரபாகரன்  பிறக்க முதல் சுக்கு நூறு ஆகத்தொடங்கிவிட்டது. அரசுகளை கவிழ்த்தவர்களின் கெலிக்கோப்டரை கவிழ்த்தது பிரபாகரன் அல்ல. கவிழ்த்தவர்கள் தாங்களேதான் தங்களுக்கு ஆப்புவைத்தார்கள். 

 

கொழும்பில் வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை என ஏமாற்ற முயன்றது பிரபாகரனால் அல்ல. கிழக்கில் கூட்டமைப்புடன் சேர மறுத்தது புலிகள் இருந்த போது அல்ல. ஜெனிவாவுக்கு போய் வந்தது புலிகள் மிரட்டி அல்ல. கப்பல் மந்திரிப் பதவி கேட்கச் சொல்லிகொடுத்தது பிரபாகரன் அல்ல.

Edited by மல்லையூரான்

ஆகா வாலி , மல்லை அண்ணா இருவரும் யதார்த்தமான கருத்துக்கள் .எனக்கும் எழுதணும்போல ஆனால் இன்றுள்ள நிலையில் ஒரு சமூகத்திற்கு கருத்து வைப்பதை தவிர்க்க நினைக்கிறேன் ........ :)
 
.பச்சையை தேடுகிறேன் ,முடியல ...........
  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் பலம் என்ன என்பதை புலிகள் சரியாக புரிந்திருக்கவில்லையா என்று கேட்கத்தோன்றுகிறது .

ஜே ஆர் காலத்தில் இருந்தே ஜனாதிபதிகள் நிறைவேற்று அதிகாரத்துடன் இருக்கினம்.. இதில் மகிந்தருக்கு மட்டும் என்ன சிறப்பு? :unsure:

மற்றது.. 80% இஸ்லாமிய மக்கள் எதிர்த்து வாக்களித்துவிட்டு பிறகு மகிந்தரின் மந்திரிசபையை அலங்கரிப்பது எதற்கு?? :rolleyes:

மற்றது.. 80% இஸ்லாமிய மக்கள் எதிர்த்து வாக்களித்துவிட்டு பிறகு மகிந்தரின் மந்திரிசபையை அலங்கரிப்பது எதற்கு?? :rolleyes:

ஒரு வசனம் எழுதணும்போல உள்ளது .அது யாழ்கள விதி முறைக்கு எதிரானது............. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள பிரச்சனை 'வலு' சிம்பிள்!

 

'தேன்கூடும்'  தேனீக்களும்!

 

இலங்கை என்பது கூடு! சிங்களவர்களும், முஸ்லிம்களும், ஆண் தேனீக்கள்! ஜனாதிபதி ' இராணித் தேனீ" ! பிக்குகள் ' ராணியை' ப்  பாதுகாப்பவர்கள்!

 

தமிழர்கள், கூலித் தேனீக்கள்!

 

'தேன்' - தமிழர்களின் அயராத முயற்சி, தான் அனுபவிக்காமல் வருங்காலத்துக்குச் சேர்த்து வைத்த சொத்து!

 

கூலித் தேனீக்களின் தேவை, தேன் கூட்டுக்கு எப்பவுமே இருக்கும்!

 

எனவே அவை முற்றாக அழிக்கப்பட மாட்டா! :D

 

கூலித் தேனீக்கள் இல்லாவிட்டால் 'தேன்கூடு' எப்பவோ கலைந்து போயிருக்கும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் என்ற பெயரில்... யாரும்... எழுதுவான். சுண்டல்... அதை நம்புறீங்களா?

 

கருணாவை.... பாதுகாத்து கொழும்பிற்கு, கொண்டு சென்ற...
அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க,
ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டார நாயக்க,
இவர்களின்... மனதில், என்ன குரூர எண்ணம் இருந்திருக்க வேண்டும்.
இனியும்... இவர்கள், இலங்கை அரசில் கால் வைக்க முடியாது.
என்று... எம் போராட்டத்தை... அழிக்க, பின் நின்ற கருணாவும், பிள்ளையானும், இப்போ... எங்கே?
டக்ளஸ், சங்கரி உசிர் ஊசலாடுது.

 

இலங்கை... முஸ்லீம்களை, என்றும் நான் நம்பத் தயாரில்லை... என்பது வேறு விடயம்.

எழுதியவர் யாரென்பது முக்கியமா அல்லது என்ன எழுதியிருக்கின்றார் என்பது முக்கியமா ?

அவர் எவராகவும் இருக்கட்டும் எழுதியது அவ்வளவும் உண்மை .இதைவிட இன்னமும் அதிகமாக இலங்கையில் இருந்து வந்த பத்திரிகையாளர் சொன்னார் . (யாழ் இந்து மாணவன் தான் )

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து மாணவர்களில், எவ்வளவு... மேன்மை பெற்றவர்கள் உள்ளார்களோ....
அவ்வளவுக்கும்... கீழ்மை பெற்றவர்களும் உள்ளதை... உங்கள் மூலம் அறிந்து வியப்படைந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விதைத்ததை அறுவடை செய்கிறோம் அது எங்கள் பிரச்சினை.

ஆம், எங்கள் பிரச்சினை. இனிமேல் இந்த நச்சு விதைகளை எவரும் விதைப்பதற்கு நாங்கள் இடமளிக்க போவதும் இல்லை.

 

எமது இனத்தைப் பொறுத்தமட்டில் ரணிலும் ஒன்றுதான் மகிந்தவும் ஒன்றுதான்.

  • தமிழருக்கு விடுதலை புலிகள் தலைமையில் இடைக்கால நிருவாகத்தை,  விடுதலை புலிகள் கேட்டுக்கொண்ட படி கொடுக்க முடிவெடுத்து அதை அறிவித்த ஒரே காரணத்துக்காக சந்திரிக்காவால்  பதவி அகற்றப்பட்ட ரணிலும் -
  • விடுதலை புலிகள் ரணிலுக்கு வாக்களிக்காமல் தமிழ் மக்களை புறக்கணிக்க வைத்ததால் பதவிக்கு வந்து, பின் அதே தமிழ் மக்களையும் விடுதலை புலிகளையும் ஓட்டு மொத்தமாக கொன்றோளித்த மகிந்தவும் -
தமிழ் மக்களுக்கு ஒன்றாக தெரிந்தால், இந்த தமிழ் மக்களுக்கு அந்த மஹிந்தவே என்றென்றும் தலைவராக அமைவதே பொருத்தமாக தெரிகிறது.

 

கருணாவை.... பாதுகாத்து கொழும்பிற்கு, கொண்டு சென்ற...

அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க,

ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டார நாயக்க,

இவர்களின்... மனதில், என்ன குரூர எண்ணம் இருந்திருக்க வேண்டும்.

அந்த கருணாவை எங்கோ இருந்து கொண்டு வந்து தளபதியாக்கி, கிழக்கு மாகாணத்தில் படை பலத்தை கட்டி எழுப்ப விட்டவர்கள் மனதில், என்ன குரூர எண்ணம் இருந்திருக்க வேண்டும்? அந்த நச்சு விதைகளுக்கு இனி எம்மக்கள் மத்தியில் இடம் இல்லை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

-----

அந்த கருணாவை எங்கோ இருந்து கொண்டு வந்து தளபதியாக்கி, கிழக்கு மாகாணத்தில் படை பலத்தை கட்டி எழுப்ப விட்டவர்கள் மனதில், என்ன குரூர எண்ணம் இருந்திருக்க வேண்டும்? அந்த நச்சு விதைகளுக்கு இனி எம்மக்கள் மத்தியில் இடம் இல்லை.

 

அந்த... மீன் பாடும் தேன் நாட்டை... கடந்த நான்கு வருடத்தில், குட்டிச் சுவராக்கியதை... நாம் காண்கின்றோம்.

அதை... நாம், என்றும் அனுமதிக்க முடியாது.

தமிழீழம் என்பது, வடக்கும் கிழக்கும் சேர்ந்தது என்பதை... உங்கள் மனதில், ஆணியடித்து வைத்துச் சொல்கின்றேன்.

உங்களைப் போன்ற, அரை குறை அறிவாளிகளால்... முழுத்தமிழினினமும் நடுத் தெருவில்... அநாதையாய் நிற்கிற்து என்பதை மறக்க வேண்டாம்.

எழுதியது யாராயிருந்தாலும், எழுதப்பட்ட விடயம் உண்மைதான் என்ற அர்ஜூனின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது.

தமிழருக்கான பிரச்சனைகள் ஏதோ 2005 இல் தான் தொடங்கியதாக அதுவும் மகிந்த ஜனாதிபதியானதால்தான் ஏற்பட்டதா?

ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் தீர்ந்திருக்குமா?

இப்படிக் கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். அப்போது விடைகள் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா ஈழ தமிழ் நெஞ்சங்களே, தய்வு செய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

 

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல் தாழ்வு'.

 

இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்களோ, அத்தனையையும் மறந்து விடுங்கள். தமிழர்களாக ஒன்று சேருங்கள். ஈழத்தில் முஸ்லீம் என தனிப் பிரிவு இல்லை என்று ஒன்று படுங்கள். நீங்கள் தமிழர்கள்தாம். முஸ்லீம் என்பது உங்களின் இன்றைய மதம். அவ்வளவே. யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான், திரிகோணமலையான்.......என உங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளைக்களைந்து 'தமிழர்களாக' ஒன்று படுங்கள்- ம்லையகத்தமிழர்களையும் சேர்த்துத்தான். தமிழர்களாக இன்று ஒன்று பட்டால் மட்டுமே நமக்கு வாழ்வு உண்டு.

 

தமிழ் நாட்டுத் தமிழர்கள் இன்று அடக்கி ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் உலகின் எப்பகுதியில் வசித்தாலும் தமிழர்களாக ஒன்று பட்டு நிற்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். இல்லையேல் நாம் அழிக்கப்பட்டு விடுவோம். யதார்த்தத்தை உண்ரும் காலம், சமயம் இதுதான். நம் குழந்தைகளுக்கு நாம் என்னத்தை விட்டுச் செல்லப் போகிறோம்? கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், பிரபாகரனுக்கு ஒரு கருணா மட்டும் இல்லாதிருந்தால் தமிழினத்தின் கதி வேறாக இருந்திருக்கும். வடக்கத்தியான், கிழக்கத்தியானை ந்ம்புங்கள். கிழக்கத்தியான் வடக்கத்தியானை ந்ம்புங்கள் வேறுபாடுகளை மனம் திறந்து உங்களுக்குள் பேசுங்கள். வேறுபாடுகள் வெளிவர அவசியமேயில்லை.

 

தமிழனாக இருப்போம். தரணிக்கு வழி காட்டுவோம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளிடம் போராட்டத்தில் இருந்த ஆளுமை அரசியல் ராஜதந்திர நகர்வுகளில் இருக்க வில்லை என்பது தான் உண்மை போராட்டம் தோல்வி அடைந்ததற்கு அதுவும் ஒரு காரணம்.....எந்த ஆட்சி வரவேண்டும் என்று எதிர்பாத்தார்களோ அதே ஆட்சியால் அழிக்கப்பட்ட ஒரு துன்பியல் சம்பவம் இனி வரலாறுகளில் பதிவாகும்......விரும்பியோ விரும்பாமலோ இனி ஒரு 10 , 15 ஆண்டுகளுக்கு ராஜபக்ஸ ஆட்சி தான் என்று எனக்கு தெரிந்த ஒரு ஐ தே க நண்பர் கூறினார்.....

  • கருத்துக்கள உறவுகள்

இதை  எழுதிய  உறவுக்கு...

எம்மை நோக்கி  கை  நீட்டும்போது

உங்களை  நாலு விரல்கள் கேள்வி கேட்குதே..

அதற்கு பதில் சொன்னீர்களா????

 

உங்கள் வீட்டை துப்பரவு செய்யுங்கள்

உங்களை  வழி  நடாத்தும் ஒரு தலைவரை  தெரிவு செய்யுங்கள்

அவரின் சொல்வழி கேட்டு  நடக்கும்  தொண்டர்களை உருவாக்குங்கள்

பொது நலம் சார்ந்து இனம் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளுக்குள் சுயநல லாபங்களுக்காக முதுகில் குத்துவதை நிறுத்துங்கள்

பொது நலம் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளுக்குள் லாபநட்டம் பாராதீர்கள்....

 

 

அடுத்து

அத்தனையும் உண்மை என்பவர்களுக்கு........

ரணில் வந்திருந்தால்.............?

உங்கள் அரசியல் அறிவுப்படி விளக்கம்  தாருங்கள்

 

விடுதலைப்புலிகளிடம் போராட்டத்தில் இருந்த ஆளுமை அரசியல் ராஜதந்திர நகர்வுகளில் இருக்க வில்லை என்பது தான் உண்மை போராட்டம் தோல்வி அடைந்ததற்கு அதுவும் ஒரு காரணம்.....எந்த ஆட்சி வரவேண்டும் என்று எதிர்பாத்தார்களோ அதே ஆட்சியால் அழிக்கப்பட்ட ஒரு துன்பியல் சம்பவம் இனி வரலாறுகளில் பதிவாகும்......விரும்பியோ விரும்பாமலோ இனி ஒரு 10 , 15 ஆண்டுகளுக்கு ராஜபக்ஸ ஆட்சி தான் என்று எனக்கு தெரிந்த ஒரு ஐ தே க நண்பர் கூறினார்.....

 

மிகவும்  தப்பான விவாதம் இது.

சிறீலங்காவோ

சர்வதேசமோ அரசியலை கையிலேயே  எடுக்கவில்லை  என்பது தான் உண்மை

அப்படி எடுத்திருந்தால்

புலிகளிடம் அதிலும் மண் கவ்வவேண்டி  வரும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்ததே காரணம்.

அதற்காகவே தேவையற்ற விதத்தில்

அரசியலைத்தவிர்த்து

வேறு வகை சீண்டுதல்களை  தொடர்ந்து செய்தனர்.

இடைக்கால  நிர்வாக சபையை அமைக்க ஒத்துக்கொண்ட சிறீலங்காவும் சர்வதேசமும் அதன் வடிவமைப்பைப்பார்த்து

அதனை  வடிவமைத்தவர்களைப்பார்த்து  மிரண்டே

அதனை தவிர்த்தனர்.  வெறுத்தனர்.

இது தான் வரலாறு.............

 

தோல்விக்கு காரணம்

அரசியல் தெரியாமை  அல்ல

அதனைத்தொட எதிரியும் அதன் கூட்டாளிகளும் பயந்ததே...........

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்பட்ட செய்தி: புலிகளின் செய்கையின் அறுவடைதான் இப்போதுள்ள நிலைமை.

வந்த கருத்துக்களில் அதிகமானவை: இல்லையில்லை. எல்லாம் மற்றவர்களின் பிழை.

இன்றைய யதார்த்தம்: தமிழர்களின் வக்கற்ற நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்பட்ட செய்தி: புலிகளின் செய்கையின் அறுவடைதான் இப்போதுள்ள நிலைமை.

வந்த கருத்துக்களில் அதிகமானவை: இல்லையில்லை. எல்லாம் மற்றவர்களின் பிழை.

இன்றைய யதார்த்தம்: தமிழர்களின் வக்கற்ற நிலை.

 

 

சரி

புலிகள் மகிந்தவைக்கொண்டு வந்தனர்.........??

ரணில் வந்திருந்தால்

பாலும் தேனும் கொட்டியிருக்குமா???? :(  :(

சரி

புலிகள் மகிந்தவைக்கொண்டு வந்தனர்.........??

ரணில் வந்திருந்தால்

பாலும் தேனும் கொட்டியிருக்குமா???? :(  :(

 

 

விசுகுவின் கருத்து தான் என் கருத்தும்.. ^_^

  • கருத்துக்கள உறவுகள்

சரி

புலிகள் மகிந்தவைக்கொண்டு வந்தனர்.........??

ரணில் வந்திருந்தால்

பாலும் தேனும் கொட்டியிருக்குமா???? :(  :(

ரணில் வந்திருந்தால் தேனும் பாலும் கொட்டியிருக்காது என்பதால் மகிந்தவைக் கொண்டுவந்ததுதான் சரியான முடிவு என்று புலிகளின் செய்கையை நியாயப்படுத்துவதாக உள்ளது உங்கள் கருத்து.

ரணில் வந்திருந்தால் கோத்தபாய பாதுகாப்புச் செயலராக வந்திருக்கமாட்டார். அதனால் வன்னியில் பல்லாயிரம் மக்களும் புலிகளின் தலைமையும் பூண்டோடு அழிந்திருக்கமாட்டார்கள் என்று பதில் வாதம் வைப்பது இலகு. இவையெல்லாம் நடந்துமுடிந்த சம்பவங்களை மாற்றமுடியாது என்பதால் பிரயோசனமற்றவை.

தற்போது தமிழர்கள் வக்கற்ற நிலையில் இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேற என்னவழி என்று ஆராய்வதுதான் பொருத்தமானது.

இன்னுமொரு விடயம்:

தமிழீழம் வேண்டும் என்று நினைக்கும்போது வடக்கு-கிழக்கில் வாழும் முஸ்லிம்களை தமிழ்பேசும் மக்கள் என்று அழைப்போம். தமிழீழம் கிடைக்குமா என்ற சந்தேகம் வரும்போது முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழர்களின் போராட்டத்தை அழித்தார்கள் என்று சொல்வோம்.

கசப்பான உண்மை: முஸ்லிம்களில் ஏறக்குறைய அனைவருமே தமிழர்களின் பிரிவினைவாதப் போருக்கு ஆதரவோ உதவியோ செய்யவில்லை. தமிழர்களில் அதிகம் பேர் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆயுதப்போரின்போது தமக்கிருந்த வசதி, வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்தார்கள், தமது குடும்பங்களையும் வரவழைத்துக்கொண்டார்கள். இதனால் எஞ்சியிருந்தவர்கள் தமக்குத் தெரிந்த வழியில் போராடி அதுவும் முடிவுக்கு வந்துவிட்டது. இன்னும் சில வருடங்களில் வடக்கிலும் சிங்களவர்கள் பல பகுதிகளிலும் குடியேறி தமிழர்களின் பெரும்பான்மையைக் குறைக்கும்போது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இலங்கை சிங்களவர்களின் நாடுதான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைமை வந்துசேரும்.

 

 

 

இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை! தங்க தாம்பாளத்தில ரணில் உங்களுக்கு தீர்வுத்திட்டத்தை தந்த மாதரி ரணிலுக்கு ஏன் வக்காலத்து வாங்குறீங்க?!  நடந்துமுடிந்த சம்பவங்களை மாற்றமுடியாது என்பதால் வாதம் பிரயோசனமற்றது! இதில் மட்டும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

. இன்னும் சில வருடங்களில் வடக்கிலும் சிங்களவர்கள் பல பகுதிகளிலும் குடியேறி தமிழர்களின் பெரும்பான்மையைக் குறைக்கும்போது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இலங்கை சிங்களவர்களின் நாடுதான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைமை வந்துசேரும்.

 

உங்கள் எழுத்தின் மூலமே இது தான்

இதற்கு  எதற்கு மகிந்தவை  இழுக்கிறீர்கள் என்று தான் புரியவில்லை

ஏதோ  மகிந்த போய்விட்டால்

அல்லது மகிந்த வராதிருந்தால்

எல்லாம் சரியாகிவிடும் என்ற வாதத்தையே  நான் எதிர்த்தேன்..

அதையே  இந்த திரி  சொல்லி  நிற்பதால்..........

 

மகிந்த வந்ததனால்

உலகத்துகத்தை பகைத்துக்கொண்டு செய்யவேண்டியுள்ளது

ரணிலோ

சந்திரிகாவோ இருந்திருந்தால்

உலகத்தை அரவணைத்துக்கொண்டு செய்திருப்பார்கள் என்பது தான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் வந்தாலோ மகிந்த வந்தாலோ எல்லாம் ஒரே நிலைதான் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை மாறாது மாறவும் போவதில்லை எத்தனை தலைமுறையானாலும்,வங்குரோத்தான ஒரு நாட்டில் இதற்கு மேல் எதுவும் எதிபார்க்கக்கூடாது இதனால் புதிதாக பாதிக்கப்படுவது சாதாரண தமிழ் மக்கள் அல்ல ( அவர்கள் நிலை எப்பொழுதும் ஒரே மாதிரித்தான்) புலிகள் இல்லா இந்த நிலயில் சிங்களவர்கள், முஸ்லீம்கள்,ஒட்டுக்குளுகளே அதிகம் பாதிப்படைவார்கள், அவகளுக்குத்தான் இப்ப புலிகள் தேவை ஆனால் காலப்போக்கில் அவர்களும் பழகிவிடுவார்கள்.

இராணுவ சமநிலை என்ற பதத்தின் ஊடாக தமிழர்தரப்பு உலக அரங்கில் ஆபாத்தானவர்களா விம்பம் உருவாக்கபட்டு மேற்கத்தை வெளியில் திறந்து விட்டு உள்ளக முரண்பாடுகளை உருவாக்கி ஒட்டுமொத்த உலக தாபனங்களின் ஆதரவுடன் அழிக்கபட்டது இதில் மகிந்த என்ற குடும்பத்தை சந்திரிகாவும் ரணிலும் விடுதலை புலிகள் பக்கம் 2005ல் உலக புலநாய்களின் ஆதரவுடன் உட்புகுத்தி தாங்கள் தப்பித்தவர்கள் இது கண்டி சிங்களத்தின் அதி உச்ச ராசதந்திரம்.
இந்த விடயத்தில் பால அண்னையும் ஒதுக்கபட்டுதான் முடிவு எடுக்கபட்டது பணம்தான் அங்கே முக்கியகாரணி நாங்கள் தான் எங்கள் போரட்ட தற்கொலைக்கு காரணம்

 

 

 

 

 

:rolleyes: ஞாபகங்கள் என்பது, ஒவ்வொன்றிற்கும் நாம் தரும் முக்கியத்துவத்தைப்பொறுத்து மிகக் குறுகிய காலத்திற்கு நினைவில் இருப்பவை, நீண்ட காலம் நினைவில் இருப்பவை :rolleyes: 

 

Edited by bismar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.