Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களே சட்டத்தை கையில் எடுக்கலாமா .......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது நியாயம். விரும்பிப் போய் கூட இருந்து.. போட்டோ எடுத்திட்டு.. இப்ப அவனை மட்டும் ஆக்களை ஏவி...அடிக்கிறது என்ன நியாயமோ தெரியல்ல. கூட போட்டோ எடுத்த 20 பேருக்கும் சேர்த்து  நல்ல அடி கொடுத்திருக்கலாம். அடியாலதான் இவர்களை திருத்த முடியும் என்று நம்புறவை..! :):lol:

  • Replies 138
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அது சினிமா ,சினிமாவில் பார்த்ததை நடைமுறையில் செய்ய வெளிக்கிட்டால் மரத்தை சுற்றி எல்லாம் பாட்டு பாடவேண்டிவரும் .

அவர்களை இழுத்ததற்கு காரணம் -  புலம்பெயர்நாடுகளில் எத்தனை அடாவடிகள்  ,வெருட்டுக்கள் விட்டு பணம் சேர்த்தார்கள் .Human Rights Watch பதிவுகள் வேணுமென்றால் தரலாம் .

என்ன  அநியாயம் இது?

எதற்கெடுத்தாலும்

அந்தப்படத்தை பாருங்கள்

இந்தப்படத்தைப்பாருங்கள்

அரசியலைப்படியுங்கள் என எழுதும் அர்யூன் அண்ணாவுக்கு என்ன  நடந்தது?????

புலம் பெயர் நாட்டில் புலிகள் எந்தவித வன்முறையும் செய்யவில்லை  என்பதற்கு

உங்களைப்போன்றவர்கள்

இன்னும் உலகில் நடமாடுவதே  பெரிய  உதாரணம் அண்ணை.........

அது நியாயம். விரும்பிப் போய் கூட இருந்து.. போட்டோ எடுத்திட்டு.. இப்ப அவனை மட்டும் ஆக்களை ஏவி...அடிக்கிறது என்ன நியாயமோ தெரியல்ல. கூட போட்டோ எடுத்த 20 பேருக்கும் சேர்த்து  நல்ல அடி கொடுத்திருக்கலாம். அடியாலதான் இவர்களை திருத்த முடியும் என்று நம்புறவை..! :):lol:

நெடுக்கு...

அந்த பெண்கள்

ஒருவரால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்ற  பொருளிலேயே  நாம் பேசுகின்றோம்.

இதையே

ஒரு பெண் பல ஆண்களை வலைவீசி  செய்திருந்தாலும் எழுதுவோம்

தயவு செய்து

பெண்கள் எல்லோரும் கெட்டவர்கள்

ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள் என வலுப்படுத்தாதீர்கள்........ :(

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. இங்கு உள்ள பதிவுகளையும்.. முகநூலில் செய்யப்படும் பிரச்சாரங்களையும் வைத்து நோக்குகின்ற போது.. இதில் நயவஞ்சகம் செய்வது அந்தப் பெண்கள் போலவே தென்படுகிறது. அவர்கள் கெட்டுக் குட்டிச் சுவரானதும் இல்லாமல்.. தங்களை இந்த இளைஞனை தண்டிப்பதன் மூலம்.. தூய்மைப்படுத்திக் காட்டவும் முனைகிறார்கள்.

நாங்கள்.. அந்த இளைஞனையும் தான் கண்டித்திருக்கிறோம். அதேவேளை அந்தப் பெண்கள் 20 பேரையும் வன்மையாக கண்டிக்கிறோம்.. அவர்களின் நடத்தைக்காக. எங்களுக்கு தெரியும்.. இங்குள்ள இளம்.. தமிழ் பெண்கள் எவ்வளவு மோசமாக எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று. ஒரு பையன் கேட்காமலே.. அவன் வீட்டில் தனியாக இருக்கும் வேளை பார்த்து.. போன் பண்ணி தாங்களா அவனிடம் தேடி வருகிறார்கள். அல்லது தாங்கள் பெற்றோர் இன்றி தனிய உள்ள சந்தர்ப்பத்தில் தங்கள் வீட்டுக்கே அவனை அழைக்கிறார்கள். இது இங்கு இங்கிலாந்திலும் நடக்குது. ஆக.. எம் பெண்களைப் பற்றி அறியாமல்.. இங்கு குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவில்லை..! எம் தமிழ் பெற்றோர் நிறையவே பிள்ளைகளால்.. குறிப்பாக பெண் பிள்ளைகளால்.. ஏய்க்கப்படுகிறார்கள். பலர் அது அறியாமல் இருக்கிறார்கள். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிலுக்கு....

நல்ல விடயம்தானே.. பெற்றோர் இருந்தால் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பினம்.. :D

இங்க உள்ள பிரச்சினை அவன் காதல் என்னும் பெயரில் ஏமாற்றிபெண்களை வலையில் போட்டது இங்கு உத்தமர்கள் உத்தமிகள் பற்றி அல்ல விவாதம் விரும்பி போகும் பெண்ணை எவரும் தடுக்க முடியாது ஆனால் அவன் இப்படி விரும்பி அழைத்து விட்டு பின்னர் படங்கள் எடுத்து தனக்கு தேவை என்றால் எப்பவும் வரணும் என்னும் தொனியில் அவர்களை இணக்க பண்ணியது (மிரட்டல் )காதலி கலியாணம் கட்டு அல்லது விடு அதை விடுத்து சில்லறை வேலை எதுக்கு நெடுக்கு அண்ணே .

  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டியது தவறு.. உடனே காவல்துறையை அணுகியிருக்க வேண்டும்.

மிரட்டியது தவறு.. உடனே காவல்துறையை அணுகியிருக்க வேண்டும்.

இசை மறுபடியும் முதலே இருந்தா முடில என்னால :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இசை மறுபடியும் முதலே இருந்தா முடில என்னால :icon_idea:

காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தப் பெண்கள் தமக்குத் தாமே சொல்லவேண்டியது.. "Oh well!!" :D

காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தப் பெண்கள் தமக்குத் தாமே சொல்லவேண்டியது.. "Oh well!!" :D

oh well இல்லை ஐரோப்பில் நோமல் :D :D :icon_idea:

இளைஞனை தாக்கும் வீடியோவில் நீ சிங்கள பெண்ணிடம் போ அல்லது வெள்ளைக்கார பெண்ணிடம் போ தமிழ் பெண்ணிடம் போகாதே என்று தாக்கியவர் உபதேசிக்கிறார். இவர்களா தமி்ழ் கலாச்சார காவலர்கள். மற்ற இனத்து பெண்களை என்னவென்றாலும் செய் தமிழ் பெண்களை மட்டும் விட்டுவிடு. நல்ல உபதேசம். ஏன் மற்ற இனத்து பெண்கள் மனிதர்கள் இல்லையா? இவர்கள் எந்த உலகில் வாழ்கிறார்கள். என்னை பொறுத்தவரை இளைஞரை தாக்கியவர் அந்த இளைஞரை விட மிகவும் கேவலமான நபர். தமிழ் மக்களை காட்டு மிராண்டிகள் அல்ல இவர்களின் செயல்களை ஆதரிப்பதற்கு. முதலில் தண்டனை வழங்கப்பட வேண்டியவர் அந்த இளைஞனை தாக்கிய அந்த காட்டுமிராண்டி நபரே என்பது எனது கருத்து.

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நானும் அவதானித்தேன் சிங்கள பெண்ணிடம் போ அல்லது வெள்ளைக்கார பெண்ணிடம் போ தமிழ் பெண்ணிடம் போகாதே என்று என்று கூறியதை

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை... எனக்கு ஒரு படமும்.. கண்ணில் படவில்லை.
ஏன்... தான், ஒழிச்சு வைச்சு இந்தப் படங்களை பார்த்து...

கருத்துச் சொல்பவர்களைப் பார்க்க.... சரியான பொறாமையாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டுக்கு வந்தவர்கள் புலம் பெயர் வாழ் தமிழர்களை ஒரு அச்சுறுத்தலுக்குள் உள்ளாக்கி வைக்க விரும்புகின்றார்கள் அதனால் தான் இப்பிடி நடவடிக்கைகள் இப்பொழுது நீண்டநாட்களாக இயங்கி வரும் புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் காதலர் பூங்காவாக நட்பின் பாலமாக பல திருமணங்கள் நடைபெறுவதற்கு காரணமாக இருந்த paristamil chat இப்பொழுது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்குன்றது தங்கள் இணையத்தை பிரபலமாக்க நினைக்கும் இவர்கள் தமிழ் கலாச்சார காவலர்கள் என்ற போர்வையில் நடமாட தொடக்கி இருக்கின்றார்கள்

http://www.yarlnatham.com/2014/01/photos.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்

விளக்குமாறு தூக்கும் வேலையை...
எந்த மூஞ்சூறும் செய்யக் கூடாது.

நாம்... நாமாக திருந்த வேண்டும்.
அதற்கு முதலில்... சமுதாயத்தை, திருத்த நல்ல தலைவன் வேண்டும்.
இப்போது.... தமிழருக்கு நல்ல தலைவன் இல்லை, என்பதே... என் கவலை.

யாழ் களத்திற்கு நன்றி!

இந்தத் தாக்குதல் பெரும்பாலான தமிழர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை கொடுத்துள்ளது. பலர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. கண்டிப்பதற்கு தயங்கிக் கொண்டிருந்தார்கள்.

யாழ் களத்தில் சுண்டல் தன்மையாக ஆரம்பித்து வைத்தார். முகநூலிலும் நான் கண்டனத்தை மென்மையாகத்தான் ஆரம்பித்து வைத்தேன். ஐரோப்பியத் தமிழர்களிடம் ஒரு அச்சம் பரவியிருந்தது உண்மை. கண்டனத்தை பதிவு செய்வதற்கு கடுமையாக தயங்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்த விவாதத்தில் கூட அதிகமாக அவுஸ்ரேலிய, அமெரிக்கக் கண்டங்களில் வாழ்பவர்கள்தான் தமது எதிர்ப்பை வன்மையாகத் தெரிவித்துள்ளார்கள்.

எது எப்படியோ, கடைசியில் தாக்குதல் நடத்தியவர்களை "முட்டாள்கள், காவாலிகள், காட்டுமிராண்டிகள்" என்று கடுமையான முறையில் தமது கண்டனத்தை உறவுகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

யாழ் களத்திற்கு மீண்டும் நன்றி

சுவிஸில் வேறு நாட்டு பிரஜைகள் குற்றம் செய்தால் ஒன்றும் செய்ய மாட்டார்களா ?

புலிகள் அழிந்தாலும் அவர்கள் பல பிற்போக்குத்தனங்களை எமது இனத்திற்குள் விதைத்து விட்டு சென்றுவிட்டார்கள் .இவற்றிலெல்லாம் இருந்து விடுபடுவது ஒன்றும் இலகுவானதல்ல,குறிப்பாக புலம் பெயர் தேசங்களில் .

தமிழர்களின் ஆதாமும் ஏவாளும் புலிகள் என்பது போல் கருத்து தெரிவித்திருக்கின்றீர்கள். தமிழர்களிடையே இப்படியான வன்முறைகள் புலிகளுக்கு முன்பே இருப்பதை நீங்கள் அறியவில்லையா?  கீழைத்தேச ஆசியர்களிடம்  உள்ள இவ்வாறான தவறான பார்வைகள், பழைமைவாத கண்ணோட்டங்கள் தொடர்ச்சியான ஆக்கபூர்வமான விவாதங்கள் மூலம்  திருத்தபட வேண்டும்.  சமூக விவாதங்களுக்குள் தேவையில்லாமல் அரசியலை இழுத்து இதை ஒரு அரசியல் விவாதமாக்கவேண்டாம். உங்கள் எதிரிகளை இதற்குள் மாட்டிவிடவேண்டும் என்ற சின்னத்தனம் உங்கள்  இந்த கருத்தில் தெரிகிறது. 

தனது மகன் அல்லது மகள்  வேறு இன பெண்ணை அல்லது ஆணை காதலிக்கும் ஒரே காரணத்திற்காக  இருவரும் குடும்ப உறுப்பினர்களாலேயே கொலை செய்யப்பட்ட கெளரவ கொலைகள் என்று கூறப்படும் கொலைகள் ஆசிய வட இந்திய  பழமைவாதிகளால் ஐரோப்பாவில் பல மேற்கொள்ளபட்டுள்ளது.  இதற்கும் உங்கள் எதிரிகளை மாட்டிவிடுவீர்களா?  எம்மவர்கள் தமது கலாச்சாரத்தை மறுசீரமைக்காமல் கால மாற்றங்களுகேற்ப நெகிழ்ச்சித்தன்மை இல்லாத  பழமை வாதிகளாக உள்ளமை, சாதி பிரச்சனைகள்,நிறுவனபடுத்தபடாத பணக்கொடுக்கல் வாங்கல்கள்  போன்றவையே இவ்வாறான வன்முறைகளுக்கான அடிப்படை என்பது எனது கருத்து.  இதில் புலிகளையோ புளொட்டையோ அல்லது வேறு போராட்ட இயங்கங்களையோ  குற்றம் சாட்டி அரசியல் மயப்படுத்துவது  முட்டாள்தனம்.

Edited by tulpen

ருல்பான் நீங்கள் கொஞ்சம் சீரியசாக எழுதியதால் அதற்கான பதில் .

நீங்கள் இரண்டு வேறுபட்ட விடயங்களை போட்டு குழப்பிவிட்டீர்கள் .குடும்ப வன்முறையோ கௌரவ கொலைகளோ மேற்குறிப்பபிட்ட சம்பவதிற்குள் அடங்காது .

நாட்டில் இயக்கங்கள் வந்த பின்னர்தான் தாங்கள் சட்டத்தை கையில் எடுத்து வீதியில் கட்டி வைத்து தண்டனை கொடுத்தார்கள் ,இவ்வாறு கொலை செய்யப்படவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது (கோழி களவேடுத்தவன் தொடங்கி சாராயம் காச்சினவன் வரை ).

எனது வீட்டிற்கு அருகில் இருந்த கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியின் உப அதிபர் இந்தியன் ஆமி இருந்த காலத்தில் அவரின் ஆங்கில புலமைக்காக மீடிஎற்றராக இருந்தார் ,அவரை காட்டி கொடுக்கின்றார் என்று போட்டார்கள் .நீங்களும் துரோகி என்று துப்பி விட்டு போயிருப்பீர்கள் .இவற்றின் விளைவுகள் தான் இன்று தமிழ் இனம் அனுபவிப்பது .

நான் எனது பிள்ளையை தண்டிப்பதற்கும் இவர் பிழையானவர் என்று வேறு ஒருவர் தண்டிப்பதற்கும் வித்தியாசம் இருக்கு

புலம் பெயர்ந்த தேசங்களில் 1985 களுக்கு முதல் இருந்த வன்முறை ,குற்றசெயல்களுக்கும் அதற்கு பின்னர் நடந்தவற்றிற்கும்

இடையில் இருக்கும் புள்ளிவிபரங்களை பார்த்தால் தெரியும் .

பாதிக்கபட்ட அந்த பெண்களின் உறவினர்கள் யாராவது அந்த பெடியனுக்கு அடித்திருந்தால் இந்த விடயம் இப்படி விவாதத்திற்கே வந்திராது .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ஆதாமும் ஏவாளும் புலிகள் என்பது போல் கருத்து தெரிவித்திருக்கின்றீர்கள். தமிழர்களிடையே இப்படியான வன்முறைகள் புலிகளுக்கு முன்பே இருப்பதை நீங்கள் அறியவில்லையா?  கீழைத்தேச ஆசியர்களிடம்  உள்ள இவ்வாறான தவறான பார்வைகள், பழைமைவாத கண்ணோட்டங்கள் தொடர்ச்சியான ஆக்கபூர்வமான விவாதங்கள் மூலம்  திருத்தபட வேண்டும்.  சமூக விவாதங்களுக்குள் தேவையில்லாமல் அரசியலை இழுத்து இதை ஒரு அரசியல் விவாதமாக்கவேண்டாம். உங்கள் எதிரிகளை இதற்குள் மாட்டிவிடவேண்டும் என்ற சின்னத்தனம் உங்கள்  இந்த கருத்தில் தெரிகிறது. 

தனது மகன் அல்லது மகள்  வேறு இன பெண்ணை அல்லது ஆணை காதலிக்கும் ஒரே காரணத்திற்காக  இருவரும் குடும்ப உறுப்பினர்களாலேயே கொலை செய்யப்பட்ட கெளரவ கொலைகள் என்று கூறப்படும் கொலைகள் ஆசிய வட இந்திய  பழமைவாதிகளால் ஐரோப்பாவில் பல மேற்கொள்ளபட்டுள்ளது.  இதற்கும் உங்கள் எதிரிகளை மாட்டிவிடுவீர்களா?  எம்மவர்கள் தமது கலாச்சாரத்தை மறுசீரமைக்காமல் கால மாற்றங்களுகேற்ப நெகிழ்ச்சித்தன்மை இல்லாத  பழமை வாதிகளாக உள்ளமை, சாதி பிரச்சனைகள்,நிறுவனபடுத்தபடாத பணக்கொடுக்கல் வாங்கல்கள்  போன்றவையே இவ்வாறான வன்முறைகளுக்கான அடிப்படை என்பது எனது கருத்து.  இதில் புலிகளையோ புளொட்டையோ அல்லது வேறு போராட்ட இயங்கங்களையோ  குற்றம் சாட்டி அரசியல் மயப்படுத்துவது  முட்டாள்தனம்.

ஏன் அவ்வளவு தூரம்

டயானா.................???

இவரது கொலைக்குள் அவ்வளவும் இருக்கு............

கௌரவம்

மதவெறி

இனவெறி

பணம்

புகழ்

சட்டத்தை கையிலெடுத்தல்

..................

.................

????????????

Edited by விசுகு

இளைஞனை தாக்கும் வீடியோவில் நீ சிங்கள பெண்ணிடம் போ அல்லது வெள்ளைக்கார பெண்ணிடம் போ தமிழ் பெண்ணிடம் போகாதே என்று தாக்கியவர் உபதேசிக்கிறார். இவர்களா தமி்ழ் கலாச்சார காவலர்கள். மற்ற இனத்து பெண்களை என்னவென்றாலும் செய் தமிழ் பெண்களை மட்டும் விட்டுவிடு. நல்ல உபதேசம். ஏன் மற்ற இனத்து பெண்கள் மனிதர்கள் இல்லையா? இவர்கள் எந்த உலகில் வாழ்கிறார்கள். என்னை பொறுத்தவரை இளைஞரை தாக்கியவர் அந்த இளைஞரை விட மிகவும் கேவலமான நபர். தமிழ் மக்களை காட்டு மிராண்டிகள் அல்ல இவர்களின் செயல்களை ஆதரிப்பதற்கு. முதலில் தண்டனை வழங்கப்பட வேண்டியவர் அந்த இளைஞனை தாக்கிய அந்த காட்டுமிராண்டி நபரே என்பது எனது கருத்து.

உபதேசம் என்றும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லும் நீங்கள் அவர்கள் சொல்வது போல் ஒரு சிங்கள பெண்ணை அல்லது வேறு பெண்ணை  தொட்டு இருந்தா நிலைமை எப்படி இருந்து இருக்கும் தெரியுமா இலங்கை தமிழர் பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு பாரிஸ் காவல் துறை கைது விலங்குடன் படம் இங்கமட்டும் இல்லை இலங்கையில் வீரகேசரி வரை வந்து இருக்கும் .

இலங்கை அரசு ஒரு கண்டனம் தெரிவிச்சு அறிக்கை விடும் இது தமிழர் ஆகிட்டே கேட்க ஆள் இல்லை நாதியில்லை எமக்கு ஒரு பிரச்சினை என்றால் கண்டிக்க ஒரு நாடு இல்லை அதனால் எல்லோருக்கும் சுகமா இருக்கு ஏறி மிதிக்க .

இதை ஒரு ஆபிரிக்க பெண்ணுக்கு அல்லது முஸ்லிம் பெண்ணுக்கு செய்தது இருந்தா அவரின் கழுத்து இருந்திருக்காது அதுக்குதான் அவர்கள் அப்படி பேசுறான் முடிச்சா அங்கின கைவை என்று நீங்கள் தப்ப எல்லாத்தையும் எடுத்து அறிவாளித்தனம  வியாக்கினம் செய்வதை லைக்பன்னலாம் செயல் படுத்த முடியாது .

அகதிகளின் நிலைமை அதுதான் மொழி அறிவு சட்ட அறிவு எல்லாம் குறைவு எல்லோரும் ஐரோப்பா வரும்போது பபப்பா தான் வருடங்கள் கடந்து போக பெரியாள்  ஆகும் அவ்வளவுதான் ...

யாழ் களத்திற்கு நன்றி!

இந்தத் தாக்குதல் பெரும்பாலான தமிழர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை கொடுத்துள்ளது. பலர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. கண்டிப்பதற்கு தயங்கிக் கொண்டிருந்தார்கள்.

யாழ் களத்தில் சுண்டல் தன்மையாக ஆரம்பித்து வைத்தார். முகநூலிலும் நான் கண்டனத்தை மென்மையாகத்தான் ஆரம்பித்து வைத்தேன். ஐரோப்பியத் தமிழர்களிடம் ஒரு அச்சம் பரவியிருந்தது உண்மை. கண்டனத்தை பதிவு செய்வதற்கு கடுமையாக தயங்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்த விவாதத்தில் கூட அதிகமாக அவுஸ்ரேலிய, அமெரிக்கக் கண்டங்களில் வாழ்பவர்கள்தான் தமது எதிர்ப்பை வன்மையாகத் தெரிவித்துள்ளார்கள்.

எது எப்படியோ, கடைசியில் தாக்குதல் நடத்தியவர்களை "முட்டாள்கள், காவாலிகள், காட்டுமிராண்டிகள்" என்று கடுமையான முறையில் தமது கண்டனத்தை உறவுகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

யாழ் களத்திற்கு மீண்டும் நன்றி

ஆமா ஐரோப்பா பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் சொல்லுறார் ஒரு பயம் பரவுதாம் மக்களே அவதானம் என்று துள் விற்கிறவன் முதல் கொண்டு துப்பாக்கி விக்கிறவன் எல்லாம் கண்ணுக்கு தெரியாது அடிச்சன் பயம் கட்டுறான் முழுமையா ஐரோப்பா கலாச்சார வாழ்வியலுக்கு மாறி இருக்கும் நிங்கள் எல்லாம் தமிழில் எழுதி  விவாதிப்பதே பெருமையா இருக்கு பாருங்கோ .

உங்க நாட்டில் உள்ள மொழியில் எடுத்து சொல்லுங்க தமிழர் சிலர் காட்டு மிராண்டிகள் ..காவாளிகள் அவர்களுடன் பழகுவது கவனம் என்று சொல்லி வையுங்கள்  ஏனெனில் நிங்கள் ஐரோப்பியன்  ஆகிட்டே ..

இந்தச் சம்பவத்தில் குற்றம் செய்ததாக கருதப்படுபவரும் அதற்கு தண்டனை கொடுத்தவர்களும் ஒரே வகைக்குள் அடங்குபவர்கள். இருவரும் சட்டத்தை மதிக்காதவர்கள்.

பாலியல் சார்ந்த விடயங்களானால் தமிழர்கள் ஐந சபை சட்டத்தை கூட கையில் எடுப்பார்கள் ஏனெனில் அது இன ஒடுக்குமுறையை விட மோசமாக தமிழர்களை பாதிக்கவல்லது. தமிழர்களின் சிந்தனை முறை எப்போதும் கவட்டுடன் சம்மந்தப்பட்டது.

ம்ம் 35 வருடம் கவட்டுடன் இருந்தது இப்பதான் கொஞ்சம் மேல வருது உங்க சிந்தனை குட் .

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், 20-25 வருடமாக புலம்பெயர்ந்து இருப்பவர்கள் ஐரோப்பிய வாழ்வியலுக்குச் சிறுகச் சிறுகப் பழகியிருக்கின்றனர். இன்னும் 10 வருடங்களில் உங்களின் நிலைமையும் அப்படித்தான் இருக்கும்; அதைவிட உங்கள் பிள்ளைகளின் வாழ்வும் ஐரோப்பிய வாழ்வாகத்தான் இருக்கும். அத்தோடு ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளே நன்றாகத் தமிழை எழுதவும், பரீட்சைகளில் சித்தியடையவும் செய்கின்றார்கள். எனவே ஐரோப்பிய வாழ்வியலை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்களோடு மினக்கெடக்கூடாது என்ற தொனியில் எழுதுவது ஏதோ தாயகத்தில் இருக்கும் தமிழர்களும் அண்மையில் புலம்பெயர்ந்தவர்களும்தான் தமிழைக் கட்டிக் காக்கின்றார்கள் என்பதாகப் படுகின்றது. உண்மை நிலை அப்படி இல்லை.

இந்தத் திரியில் உள்ள செய்தி சொல்லுவது என்னவென்றால் ஒரு தமிழன் பல இளம்பெண்களை காதல் என்று வலைவிரித்து மோசம் செய்திருக்கின்றான். அவர்களது அரைகுறை நிர்வாணப்படங்களைக் காட்டி அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றான். இது இந்த மேற்குநாட்டுச் சட்டப்படி கடுமையான குற்றம். ஆனால் இவற்றையெல்லாம் சட்டப்படி அணுகாமல் அடி, உதை போட்டால் எல்லாம் சரிவரும் என்று நினைப்பது மடைமைத்தனமானது. இன்னும் சிறிது காலத்தில் அவன் வேறு ஒரு நகரத்திற்கு அல்லது நாட்டிற்குப் போய் இதே வேலைகளைத் தொடரலாம். மேலும் பல பெண்கள் பாதிக்கப்படலாம். உண்மையில் இவற்றைத் தடுக்கவேண்டும் என்றால் அவனைப் பல வருடங்கள் சிறையில் தள்ளுவதற்கான வேலைகளைப் பார்க்கவேண்டும். ஆனால் இப்பெண்களின் பெற்றோர்கள் தமது குடும்பக் கெளரவத்திற்காக மூடிமறைப்பதையும், இருட்டடி கொடுப்பதையும் வழியாகத் தெரிந்தெடுத்துள்ளார்கள் போலிருகின்றது. அது நிரந்தரமான தீர்வு எதையும் தரப்போவதில்லை.

அடுத்தது, இளம்பெண்கள் ஏன் இப்படியான வலைகளில் வீழ்கின்றார்கள் என்பதையும் சிந்திக்கவேண்டும். தமிழர்கள் பெரும்பாலும் தம்பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்ப்பதும், எப்போதும் கண்காணிப்புக்குள் வைத்திருப்பதும் அவர்கள் பெற்றோர்களின் கட்டுப்பாடுகளை மீறி எதையாவது செய்யத்தூண்டுகின்றன. பிள்ளைகள் வீட்டுக்காரர்களுக்கு ஒரு முகத்தையும், வெளிநண்பர்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டி சிறுவயதில் இருந்தே வாழப்பழகின்றார்கள். இதை ஒரு சமூகப் பிரச்சினையாக எடுத்து அணுகவேண்டும்.

என்னைப் பொறுத்தவரை அறியாப் பருவத்தினரை ஏமாற்றிய இளைஞனுக்குக் கடுமையான தண்டனை சட்டப்படி கொடுக்கவேண்டும். அதேவேளை சட்டத்தில் கையில் எடுத்தவர்கள் சமூகத்தைக் காக்கவெளிக்கிட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இவர்களும் ஒரு வன்முறைக் குழுவினராகவே உள்ளனர். இவர்களையும் திருத்தி எடுக்கவேண்டும்.
 
இங்கு விவாதம் 2009பின் வந்த காவாளிகள் ..காட்டு மிராண்டிகள் இவர்கள் தண்டிக்க படவேண்டியவர்கள் என்று முன்னம் வந்தவர்கள் தரக்குறைவா இங்கு விமர்சனம் செய்வதுதான் ஏற்றுகொள்ள முடியவில்லை இங்கு எவரும் சமூகத்தை காப்பதா சொலவில்லை நாங்களா அப்படி ஒரு கருவை உருவாகி பிரச்சாரம் பண்ணுறம் அவ்வளவுதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.