Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பர் சிங்கர் - 4

Featured Replies

13 லட்சத்து 77 041 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.ஒரு குறுஞ்செய்திக்கு 6 ரூபாவாம். ஏர்டெல் காரங்க போட்ட காச எடுத்திருப்பாங்க போல.. :icon_idea:

  • Replies 88
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி ஆரம்பித்து கொஞ்ச நேரத்தால் தான் இணையத்தில் live ஆக போட்டார்கள். எனவே இனி தான் அதில் போடுவார்கள்.

திவாகருக்கு வெற்றி என தான் twitter இல் போட்டுள்ளார்கள். இரண்டாமிடம் சையத்துக்கும் மூன்றாம் இடம் சரத் சந்தோஷுக்குமாம். :) :) :) :) :) :)

வாழ்த்துக்கள்.

இணையத்தில் நேரடி ஒளிபரப்பு தளத்தில், கருத்துக்கள் பக்கத்தில் திவாகர் வெற்றி என்று போட்டார்கள்.. :D அங்கேயிருந்துதான் எடுத்தேன்.. :wub:

இறுதி முடிவு இணையத்திலும் பார்த்து விட்டோம். :)

முதலாம் இடம் ( title winner )- திவாகர்
இரண்டாம் இடம் ( runner up)- சையத் சுபகான்
மூன்றாமிடம் (2nd runner up) - சரத் சந்தோஷ்

முதல் மூன்று இடத்தையும் பிடிக்காத இருவர் - சோனியா, பார்வதி

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி ஈட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எனது திறமையின் அடிப்படையில் தெரிவு: :D

1. திவாகர்

2. சையத் சுபகான்

3. சரத் சந்தோஷ்

4. பார்வதி

5. சோனியா

நாங்க அப்பவே சொல்லிட்டம்ல! :D

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியொ திவாகர் வந்தது சந்தோசம், பொடியனுக்கு ஒரு வீடு...நல்ல விடயம்...!  :D

போட்டியிட்டவர்களில்...

திவாகர், சையத் சுபகான்  - தமிழ்
சரத் சந்தோஷ் - தெலுங்கு
பார்வதி, சோனியா - மலையாளம்

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போட்டியில் பையங்களின் ஆதிக்கமே இருந்துள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எப்போட்டியாகினும் கடைசியில் பார்ப்பது தான் வழக்கம். அந்த வகையில்.. பார்த்ததில் திவாகருக்கு வழக்கப்பட்ட முதலிடம் தரமானது என்பது எங்கள் கணிப்பு. :)

13 லட்சத்து 77 041 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.ஒரு குறுஞ்செய்திக்கு 6 ரூபாவாம். ஏர்டெல் காரங்க போட்ட காச எடுத்திருப்பாங்க போல.. :icon_idea:

நாங்கள் இணையதளத்தில் இலவசமாக வாக்களித்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இணையதளத்தில் இலவசமாக வாக்களித்தோம்.

வீட்டில இன்ரநெட்டுக்கு யாரு காசு கொடுக்கிறது. இலவசமாமில்ல...! :)

இப்படியான நிகழ்ச்சிகளை சீரியஸா எடுக்கத் தேவையில்ல. ஒரு பொழுதுபோக்கிற்கு பார்க்கலாம். சிலர் சீரியஸா எடுத்து.. காசு செலவு செய்து.. வாக்குப் போட்டு.. முடியல்ல.

அதுமட்டுமல்லாமல்.. விஜய் ரீவி.. பாடகர்களை வைச்சு.. விளம்பரமும் செய்யுது. ஆக மொத்தத்தில்.. டபிள் வருமானம் அவர்களுக்கு. இது முழுக்க முழுக்க வர்த்தக நோக்குடைய நிகழ்ச்சி. அதில் உதிரியாக சில திறமையாளர்கள் வெளிக்காட்டப்படுகின்றனர். அவ்வளவே.

வாக்குப் போட்டிட்டு.. ரீவி முன்னாடி குந்தி இருந்த நமக்கு..???! :lol::D

Edited by nedukkalapoovan

நான் freewifi தான் பயன்படுத்துகிறேன். எனக்கு internet இலவசம். :)

நான் சூப்பர் சிங்கர் பார்ப்பதில்லை. இந்த சூப்பர் சிங்கர் கூட நான் தொடர்ச்சியாக பார்த்ததில்லை. கொஞ்ச நாள் முன்னம் திண்ணையில் இதுபற்றிய உரையாடல் ஒன்றின் பின்னர் youtube இல் திவாகரின் பாடல்களை தேடி அதிலும் எனக்கு பிடித்த பாடல்களை மட்டுமே அவர் எவ்வாறு பாடியுள்ளார் என கேட்டேன். திவாகர் பாடிய பாடல்களிலேயே இன்னும் பல பாடல்களை நான் கேட்கவில்லை.

இதே போல் தான் மற்றவர்களினதும்...

இம்முறை தான் final ஐ இணையத்தில் live ஆக பார்த்தேன். :rolleyes: இரு திறமையுள்ள தமிழர்கள் வெல்ல வேண்டும் என நினைத்து முடிவை தெரிந்து கொள்ளும் ஆவலில் பார்த்தேன். :) மற்றபடி இதனால் எமக்கு நன்மை இல்லை. ஆனால் இரு தமிழர்கள் முதலிரு இடங்களை பிடித்துக்கொண்ட மகிழ்ச்சி. :)

வீட்டில இன்ரநெட்டுக்கு யாரு காசு கொடுக்கிறது. இலவசமாமில்ல...! :)

இப்படியான நிகழ்ச்சிகளை சீரியஸா எடுக்கத் தேவையில்ல. ஒரு பொழுதுபோக்கிற்கு பார்க்கலாம். சிலர் சீரியஸா எடுத்து.. காசு செலவு செய்து.. வாக்குப் போட்டு.. முடியல்ல.

அதுமட்டுமல்லாமல்.. விஜய் ரீவி.. பாடகர்களை வைச்சு.. விளம்பரமும் செய்யுது. ஆக மொத்தத்தில்.. டபிள் வருமானம் அவர்களுக்கு. இது முழுக்க முழுக்க வர்த்தக நோக்குடைய நிகழ்ச்சி. அதில் உதிரியாக சில திறமையாளர்கள் வெளிக்காட்டப்படுகின்றனர். அவ்வளவே.

வாக்குப் போட்டிட்டு.. ரீவி முன்னாடி குந்தி இருந்த நமக்கு..???! :lol::D

நமக்கு என்ன என்று கேட்டால் ஒவ்வொரு விடயத்திலும் கேட்கலாம்? அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் நாகேஷ் சொல்லுவார், '10 குதிரை ஓடுறதை பத்தாயிரம் பேர் பாகிறாங்க.. அந்த பத்தாயிரம் பேற் ஓடினால் ஒரு குதிரையாவது இருந்து பார்க்குமா?' என்று.

அப்படி கலை.. விளையாட்டு என்று பல விடயங்களில் இத்தகைய கேள்வி தவிர்க்கப்பட வேண்டியது.  :lol:

எதற்கும் ஒருமுறை திவாகரை பாருங்க!!

http://www.dailymotion.com/video/k4ld8uaIHRGGL65jXh3

Edited by sOliyAn

எதற்கும் ஒருமுறை திவாகரை பாருங்க!!

http://www.dailymotion.com/video/k4ld8uaIHRGGL65jXh3

நன்றி இணைப்பிற்கு. மீண்டும் இந்த பாடலை பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். :D

நிர்வாகம் முடிந்தால் இதை நேரடியாக திரியில் இணைத்து விடுங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வெளிநாடுகளில் தமிழர்கள் தொலைக்காட்சி என்று பார்க்கையில்..........ஒரு வடக்கத்தைய தொலைக்காட்சியை விட சன்ரிவி குழுமம் எவ்வளவோ திறம்.
ஓசியெண்டால் பொலிடோலையும் அமிர்தமாய் குடிப்பான் தமிழன். :D

இது A.R. ரகுமான் நடத்தும் இலவச music class (The Sunshine Orchestra) . கஷ்டப்பட்ட மக்களிலிருந்து தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்றுவிக்கிறார். சூப்பர் சிங்கர் 4 நிகழ்வில் ஒரு நாள் ரகுமான் கலந்து கொண்ட போது இதையும் போட்டுக்காட்டியதாக பார்த்தேன். இன்னும் பார்க்காதவர்களுக்காக இணைக்கிறேன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்தியாவில் இலவசம் என்பதும் ஒருவகை விளம்பரம்தான்.
இந்தியாவில் நடக்கும் இலவசங்களை கணக்கிலிட்டால் அங்கே பஞ்சத்திற்கே இடமிருக்காது. :icon_idea:
 
சிங்கன் வருமானவரிக்கு கணக்கு காட்டோணுமெல்லே????  :(
அதுக்கு :lol:  :D

அனைத்தையும் கொச்சைப்படுத்தினால் அப்படியே கொச்சைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டியது தான்.

புதியவர்களுக்கு பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் கொடுக்கிறார். அது போல் கஷ்டப்பட்ட மக்களில் சிலரை தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்கிறார். 4 வருடங்களாக music class நடத்தியும் எம்மில் யாருக்காவது தெரியுமா? விளம்பரம் தான் நோக்கமாக இருந்தால் 4 வருடங்களுக்கு முன்னமே அவர் சொல்லியிருக்கலாம்.

ரகுமானுக்கு விளம்பரத்துக்காக இலவசமாக எதையும் நடத்தி விளம்பரம் தேடி வாழ வேண்டிய அவசியமில்லை. அந்தளவுக்கு அவர் நிலை தாழ்ந்து போகவில்லை.

இது ரகுமான் போன வருடம் வெளியிட்ட வீடியோ. சூப்பர் சிங்கர் 4 இல் கலந்து கொண்ட போது விஜய் டிவி குழுவினர் அங்கும் இதை போட்டதாக பார்த்ததால் இந்த திரியிலும் இணைத்துள்ளேன்.

நாம் வெளிநாட்டில் இருந்து கொண்டு அங்குள்ள 4 கஷ்டப்பட்ட சனம் முன்னுக்கு வருவதையும் எள்ளி நகையாடிக்கொண்டே இருப்போம். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்தையும் கொச்சைப்படுத்தினால் அப்படியே கொச்சைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டியது தான்.

புதியவர்களுக்கு பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் கொடுக்கிறார். அது போல் கஷ்டப்பட்ட மக்களில் சிலரை தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்கிறார். 4 வருடங்களாக music class நடத்தியும் எம்மில் யாருக்காவது தெரியுமா? விளம்பரம் தான் நோக்கமாக இருந்தால் 4 வருடங்களுக்கு முன்னமே அவர் சொல்லியிருக்கலாம்.

ரகுமானுக்கு இலவசமாக எதையும் நடத்தி விளம்பரம் தேடி வாழ வேண்டிய அவசியமில்லை. அந்தளவுக்கு அவர் நிலை தாழ்ந்து போகவில்லை.

இது ரகுமான் இவ்வருடம் வெளியிட்ட வீடியோ. சூப்பர் சிங்கர் 4 இல் கலந்து கொண்ட போது விஜய் டிவி குழுவினர் அங்கும் இதை போட்டதாக பார்த்ததால் இந்த திரியிலும் இணைத்துள்ளேன்.

நாம் வெளிநாட்டில் இருந்து கொண்டு அங்குள்ள 4 கஷ்டப்பட்ட சனம் முன்னுக்கு வருவதையும் எள்ளி நகையாடிக்கொண்டே இருப்போம். :)

mukeshampani01.jpg

ரகுமானின் இசைக்கல்லூரியை திறக்க பணக்காரமுதலைகளா கிடைத்தார்கள்?
 
ஏன் தமிழ்நாட்டில் ஒரு முதுமையான சங்கீத பாகவதர் கிடைக்கவில்லை?

ஏற்கனவே பல இசை வகுப்புகளை நடத்துகிறார். 4 வருடத்துக்கு முன்னமிருந்து நடத்தி வரும் இசை வகுப்பு பற்றி நான் கதைக்கிறேன். போன வருடம் திறந்த இசை கல்லூரி பற்றி நீங்கள் கதைக்கிறீர்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் அதை ரகுமானிடமே கேளுங்கள்.

முன்னர் ஒரு திரியில் என்னுடன் சண்டை பிடிப்பதாக நினைத்து தமிழக உறவுகளை கொச்சைப்படுத்தியது போல் இத்திரியிலும் வேண்டாம். நன்றி.

ரகுமான் சம்பந்தமாக ஓரிரு நடவடிக்கைகள் மட்டும்தான் உங்களுக்கு தெரியும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.
 
எல்லா புகழும் இறைவனுக்கே. :lol:
 
முன்னர் எப்போது தமிழ்நாட்டு உறவுகளை கொச்சைப்படுத்தியிருந்தேன்? 

ரகுமான் சம்பந்தமாக ஓரிரு நடவடிக்கைகள் மட்டும்தான் உங்களுக்கு தெரியும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.
 
எல்லா புகழும் இறைவனுக்கே. :lol:
 
முன்னர் எப்போது தமிழ்நாட்டு உறவுகளை கொச்சைப்படுத்தியிருந்தேன்? 

எனக்கு ரகுமான் பற்றி எவ்வளவு தெரியும் என்பது பற்றி இங்கு நான் எதுவும் எழுதவில்லை. ரகுமான் விளம்பரத்துக்காக இசைக்கல்லூரி ஆரம்பித்ததாக நான் இப்பொழுதும் நினைக்கவில்லை. தனது கல்லூரியில் ஏழைகளுக்கு இடமுண்டு என அவர் கூறியமை அவரது இயல்பான உதவும் குணம். புதிய பாடகர்களை தனது இசையில் அறிமுகப்படுத்தி வருபவர். திறமையுள்ளவர்களை பாராட்டி ஊக்குவிப்பவர். அவர் செய்யும் நன்மைகளை வரவேற்பேன்.

மற்றபடி நான் ரகுமானின் இசைக்கு ரசிகை என்பதற்காக ரகுமானை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரகம் கிடையாது. :)

உங்களுக்கு பதில் எழுதுவது வீண். இத்துடன் உங்களுக்கு பதிலளிப்பதை நிறுத்துகிறேன். :)

நிறுத்தாதீர்கள்...நான் எங்கே தமிழ்நாட்டு உறவுகளை கொச்சைப்படுத்தினேன் என கூறுங்கள்.அதன் பின் வீண் விவகாரங்களை தீர்மானியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு. மீண்டும் இந்த பாடலை பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். :D

நிர்வாகம் முடிந்தால் இதை நேரடியாக திரியில் இணைத்து விடுங்கள். :rolleyes:

ஒரு தமிழினிற்க்காக இதையாவது செய்யாட்டி........

http://youtu.be/kZhg21o8X38

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.