Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடு தண்ணீரை யாழ். குடாநாட்டுக்கு கொடுக்கவே கூடாது; திட்டத்தை நிறுத்துங்கள் என்கின்றனர் விவசாயிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

iranaimadu.jpg

இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கிளிநொச்சி விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

 
இரணைமடுக் குளத்தின் நீரை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்றுக் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
 
இதன்பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகன் மேற்கண்டவாறு கூறினார்.
கிளிநொச்சி அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
 
இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கமக்காரர் சம்மேளனச் செயலர் முத்து சிவமோகன், யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் வழங்குவதன் அடிப்படையில் இரணைமடு குளத்தை புனரமைக்க வேண்டாம் என்று கூட்டத்தில் கோரினோம் என குறிப்பிட்டார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
யாழ்ப்பாணத்துக்கு இரணைமடுத் தண்ணீரை கொண்டு செல்வதை ஏற்கமுடியாது. இதற்கென ஏற்கனவே வழங்கப்பட்ட அறிக்கைகள் விவசாயிகளை புறம்தள்ளி தயாரிக்கப்பட்டுள்ளன. 
 
எமது குளத்தை எமது தேவைகளுக்காக மட்டுமே அபிவிருத்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் எமது பிரதேசத்தை அவதானித்து யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் வழங்குவது பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் முடிவெடுக்கலாம் என்று கூட்டத்தில் தெரிவித்தோம் - என்றார்.
 
இப்போது இந்தத் திட்டத்தை நிறுத்தும்படி கூறியுள்ளோம். ஆசிய அபிவிருத்தி வங்கி எமது நலனைக் கருத்தில் கொண்டு அறிக்கையைத் திருத்தம் செய்யுமானால் அது பற்றி மீண்டும் ஆராயமுடியும் என்றும் திட்டவட்டமாக கூறியதாக சிவமோகன் மேலும் தெரிவித்தார்.
 
இது பற்றி கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கருத்து வெளியிடுகையில், இந்தத் திட்டம் குறித்து கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடினோம். அவர்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
 
விவசாயிகளை பொறுத்த மட்டில் இந்தத் திட்டத்துக்கு முன்னர் அவர்கள் சம்மதம் தெரிவித்த போதும் தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளார்கள். யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதானால் இந்தத் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர்.
 
அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டுதான் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து என்றார். 
 
இந்தக் கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப் பணிப்பாளர் குரூஸ், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பணிப்பாளர் பாரதிதாசன் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=507462598725583866

  • Replies 94
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
இரணைமடுக் குளநீரை யாழ்பாணக் குடிநீர் தேவைக்காக எடுத்துச் செல்வது தொடர்பான களஆய்வுகள் உரையாடல்கள் மற்றும் சாத்தியமான வழிவகைகள் மூலம் சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்குச் சம்பந்தப்பட்ட தரப்புகள் முனைவதைவிடுத்து ஒருபெரும் பிரதேசப் பிரிவினைக்குத் தூபமிடும் செயல்களாய் விரிவதாகத் தெரிகின்றது. எனவே நிதானமாகவும் இதயசுத்தியுடனும் சிந்தித்து இது சாத்தியமா? சாத்தியமில்லையா? போன்ற வினாக்களூடாக விடைகான்பதே பொருத்தமாகும். வெறுமனே உணர்வெழுச்சியூடான அணுகுமுறைகளை அனைத்துத்தரப்பினரும் கைவிடவேண்டும்.
 
                  இரணைமடு ஒரு இயற்கையான ஊற்றல்ல அதன் பின்பகுதிகளில்(மாங்குளம் போன்ற பகுதிகளில்) பெறும் மழை கரணியமாக தேக்கப்படும் நீர் காலபோகம் பொய்கும்போது காலபோகத்துக்கும் வரையறுக்கப்பட்ட சிறுபோகச்செய்கைக்கு ஆதாரமாக இருப்பதோடு, சிறுபயிர்ச்செய்கைக்கு உதவுவதோடு விலங்கு வேளாண்மைக்கும் துணையாக இருக்கிறது. இதன்பயனாக கிளிநொச்சி மாவட்டத்தின் கணிசமான பொருளாதாரம் தொழிற்றுறை என்பனவற்றைத் தாங்கும் ஒரு தாயகவே இரணைமடு காட்சிதருகிறாள்.எனவே விவசாயம் விலங்குவேளாண்மை அதனோடு தொடர்புடைய பொறிகள் திருத்தகம் வியாபாரம் அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர் என விரிகிறது. அதனை அரசியலாக்காது அற்றாடம் உழைத்துவாழும் மக்களின் ஆதாரமாகப் பார்க்கவேண்டுமென சம்பந்தப்பட்ட அனைவரையும் யாழ்க்களத்தினூடாக வேண்டுகின்றேன். 
 
பிரதேசமென்ற பேச்சுக்கே இடமின்றி  தமிழர்கள் பற்றிய விடயமாக இது ஆய்வுசெய்யப்பட்டு மாற்றுவழிகளைக்காண வேண்டும். அதேவேளை யாழ்க்குடா உட்பட அனைத்துப்பகுதிகளிலும் மழைநீரைச் சேமிக்கும் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதூடாக நீர்தேவையைப் பூர்த்திசெய்ய நாம் சிந்திக்க வேண்டும். 

கேரளா, கர்நாடக, தமிழ் நாடு தண்ணி அரசியல் போல கிடக்கு?

யாழில் கூரை நீர் சேமிப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றனவா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சினையை தொடக்கி வைச்சவர் யாருப்பா? சாட்சாத் நம்ம மேட்டுக்குடி எடிக்கேட்டட் பமிழி புகழ் விக்கியர்.

 

அவனவன் கோவணத்துக்கும்,கஞ்சிக்கும் அலையேக்கிலை இரணைமடு விவசாயிகளை கூப்பிட்டு கூட்டம் போட்டு இரணைமடு தண்ணீர் யாழிற்க்கு வேணும் என்று அவசர அவசரமாய் கோரிக்கை விடப்பட்டதின் காரணம் என்ன? 

 

யாராவது யாழில் தண்ணீரின்றி மயங்கி விழுந்ததாய் கதை உள்ளதா? சில வேளை யாழில் குடியேற்றபடவிருக்கும் சிங்கள குடும்பங்களுக்கு நீந்தி விளையாட தண்ணீர் தேவையாய் இருக்கலாம் சம்பந்தி என்ற முறையில் விக்கியரின் தசை ஆடுதாக்கும்.

 

வடமாகாணசபை நிர்வாகம் நடத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி விட்டு தீக்கோழி போல் தலையை மன்னுக்குள் புதைத்தவாறு  நீங்கள் இதற்க்கு மாத்திரம் ஒத்துழைப்பு கிடைக்குமாக்கும்  :icon_idea: தமிர்களை பிரிப்பதற்க்கு அருமையான சந்தர்ப்பம் இது இதற்க்கு ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் அதிகாரிகள் அதிகாரிகளாய் இருக்கமாட்டார்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே .

 

இரணைமடு தண்ணீயேதான் வேணுமாம் விக்கியருக்கு ஏன் இதையே மாத்தி மகாவலி தண்ணியேதான் வடக்கிற்க்கு வேணும் என்று கேட்க்க திரணி கிடையாது அது வீணே கடலில் கலக்குது.

 

இரணை தண்ணீர் விவகாரம் முதலே தொடங்க பெற்றது விக்கி அய்யா சும்ம கிச்சு கிச்சு மூட்டினவர் என்றமாதிரியாண நழுவல் வழுவல் கருத்துக்களை விட்டு ஆக்கபூர்வமாய் விக்கியர் செய்தது சரியென தர்க்கிப்பவர்களை எதிர்பார்க்கின்றேன் . :D

 

 

Edited by பெருமாள்

இத்தாள் ஆசிய அபிவிருத்து வங்கி பொறியியளார்களை விக்கிதான் நியமிக்கிறார் என்கிறார். 

 

 

கலோ!

 

இது ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டம்.

 

 

சும்மா ஓடி ஓடி சிங்கள மோடையாகளுக்கு எழுதுகிற குப்பை எழுதுகிறார். இலங்கைக்கு என்று ஒதுக்கும் காசை கிளினொச்சியில் செல்வழிக்க வேண்டாம் என்றால் கோத்தா மட்ட்க்கி பிடிக்க வழி கண்டுபிடிக்கிறார் போல் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாள் ஆசிய அபிவிருத்து வங்கி பொறியியளார்களை விக்கிதான் நியமிக்கிறார் என்கிறார். 

 

 

கலோ!

 

இது ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டம்.

 

 

சும்மா ஓடி ஓடி சிங்கள மோடையாகளுக்கு எழுதுகிற குப்பை எழுதுகிறார். இலங்கைக்கு என்று ஒதுக்கும் காசை கிளினொச்சியில் செல்வழிக்க வேண்டாம் என்றால் கோத்தா மட்ட்க்கி பிடிக்க வழி கண்டுபிடிக்கிறார் போல் இருக்கு.

முதலில் எந்த புத்திசாலியாவது நீர் சேமிப்பு வாழ்வாதாரங்களை சீரமைப்புகளை மேற் கொள்ளாது இரணைக்குளபயணளர்களே நீருக்கு அல்லாடும் போது வட கிழக்கில் தமிழர்களுக்கு தீர்க்கவேண்டிய எத்தினையோ தலையாய பிரச்சினைகள் தவிர்த்து ஆசிய அபிவிருத்திவங்கிக்கும்,விக்கியருக்கும் இந்த விடயத்தில் ஆர்வமேன்?

 

மல்லை நீங்கள் இக்கேள்விக்கு அசமந்தமாய் விடையழிப்பதை தவிர்த்து இதேன் தமிழர்களை பிரிக்கின்றது அவ்வாறில்லாமல் எல்லோரும் பயன்பெறும் வண்ணம் உள்ளவாறு உங்கள் கருத்து பகிர்தலை தொடருங்கள் இவ்விடயத்தில் என்னை குப்பை கிப்பை ஏசுவதை தவிர்த்து பண்பாக எழுத பழகுங்கள் முரண்பாடான கருத்துக்களை போட்டுதற்காலிக வெற்றிகள் பயன்அற்றவை.

ஏன் பிரசுரிக்கிறது?:

வடமாகாண சபைக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இல்லை; அதை தீர்மானம் எடுக்க விடக்கூடாது; அது கொழும்பு, யாழ்ப்பாண, திருகோணமலை, மட்டக்களப்பு, நயினாதீவு, புங்குடுதீவு, தலைமன்னார், காத்தாங்குடி. மன்னர், காங்கேசந்துறை கிளினொச்சி............(வேறு தெரிந்தஊர்களின் பெயர்கள்) மையவாதத்தால் அவஸ்தைப்படுகிறது. யாழில் மக்கள் தெரிந்த பிரதி நிதிகளை, 135,000 வாக்கால் வந்த விக்கினேஸ்வரனை, விட பதியுதின் நியமித்த விஜயலக்சுமிக்கு ஆதரவு கூட யாழ்ப்பாணத்தார் கிளினொச்சியை அடக்கியாள வல்வெட்டிதுறை பிரபாகரனை அங்கே அனுப்பியவர்கள். அதை மாற்றி அமைப்பதை அவர்கள் விரும்புகிறார்கள் இல்லை; பிரதேசவாதம் பிடித்த விக்கினேஸ்வரனை ஒதுக்க அரசுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் வேண்டும், ஆசிய அபிவிருத்து வங்கி மைவாதாத்தால் அவஸ்த்தை படுகிறது, அரைகுறை இடது தோழர்கள் ஆசிய அபிவிருத்து வங்கியை முற்றாக ஒழித்து கிளினொச்சி விவசாயிகளை காப்பற்ற உதவ வேண்டும்; அந்த போர்வையில் வடமாகாணதுக்கு இனிமேல் கிடைக்க இருக்கும் வெளிநாட்டு உதவிகளை குழப்பியடிக்க வழி கண்டுபிடிக்க வேண்டும், தன்ரை கண்ணை தான் குத்த, கோடரிகாம்பாக மாறி தனது தாய் மரத்தை வெட்டி விடுத்த கிளிநொச்சி அரைகுறைகள் முன்னால் வரவேண்டும்.......

 

மற்றும்படி ஆசிய அபிவிருத்து வங்கியின் பொறியியலாளர்கள் ஏன் திட்டத்தை முன்னால் கொண்டு போகலாம் என்று எழுதியிருக்கத்தக்க குறிப்புகளை பற்றி கவலைப்படக்கூடாது. 

 

இதில் எத்தனை கோமாளிகள், கூட்டமைப்பு எம்.பீக்கள் பொது மக்களுடன் சேர்ந்த்து முல்லைத்தீவு, கிளிநொச்சி விவசாய காணிகளை அபகரிப்பதை எதிர்க்க முயன்றபோது தோழ் கொடுத்தார்கள்?


விக்கினேஸ்வரன் மக்களால் தெரிய்ப்பட்டவர். அவர் மீது பொருளாதார, சமூக, விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாமல் கரி பூசுவதை தவிர்த்து பண்பாக எழுத பழகுங்கள். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தண்ணீர்ப்பிரச்சினை யாருக்கு அதிகம் இருந்திருக்கும்..? யாழ்ப்பாண தீபகற்பத்தில் அழுங்குப் பிடியாக ஒட்டிக்கொண்டிருக்கும் இராணுவத்துக்குத்தான்.. வன்னியில் புலிகள் இருந்தபோது அங்கிருந்து எடுக்க முடியவில்லை. இப்ப எடுக்க திட்டம் போட்டுவிட்டார்கள். திட்டம் போட்டு ஆசிய வங்கியிடம் அனுமதி பெற்று தங்கள் வேலையை கொண்டு செல்கிறார்கள். இதற்குள் தமிழர்களுக்குள் அடிபாடு வேறு.

தெருக்கள் போடுவதும் இதுபோலத்தான். மக்களுக்கான அபிவிருத்தி எனும் பெயரில் இராணுவத்துக்கான போக்குவரத்து வசதிகள். புகையிரதமும் செல்ல வெளிக்கிட்டால் இராணுவத் தேவைகள் குறைந்த செலவில் பூர்த்தியாகும். இராணுவத்தை வைத்து விவசாயமும் செய்யலாம். பொருளாதார அபிவிருத்தியைக் காட்டி சிங்கள குடியேற்ற இனப்பரம்பலுக்கு வழி சமைக்கலாம்.

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பதுபோல தமிழர்களும் இதற்குள் ஒட்டிப் பிழைக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தண்ணீர்ப்பிரச்சினை யாருக்கு அதிகம் இருந்திருக்கும்..? யாழ்ப்பாண தீபகற்பத்தில் அழுங்குப் பிடியாக ஒட்டிக்கொண்டிருக்கும் இராணுவத்துக்குத்தான்.. வன்னியில் புலிகள் இருந்தபோது அங்கிருந்து எடுக்க முடியவில்லை. இப்ப எடுக்க திட்டம் போட்டுவிட்டார்கள். திட்டம் போட்டு ஆசிய வங்கியிடம் அனுமதி பெற்று தங்கள் வேலையை கொண்டு செல்கிறார்கள். இதற்குள் தமிழர்களுக்குள் அடிபாடு வேறு.

தெருக்கள் போடுவதும் இதுபோலத்தான். மக்களுக்கான அபிவிருத்தி எனும் பெயரில் இராணுவத்துக்கான போக்குவரத்து வசதிகள். புகையிரதமும் செல்ல வெளிக்கிட்டால் இராணுவத் தேவைகள் குறைந்த செலவில் பூர்த்தியாகும். இராணுவத்தை வைத்து விவசாயமும் செய்யலாம். பொருளாதார அபிவிருத்தியைக் காட்டி சிங்கள குடியேற்ற இனப்பரம்பலுக்கு வழி சமைக்கலாம்.

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பதுபோல தமிழர்களும் இதற்குள் ஒட்டிப் பிழைக்க வேண்டியதுதான்.

இசை உங்களுக்கு விளங்குது அத்துடன் இவ்விடயத்தில் வழமையாண கல்லுக்கு கல்  பொல்லுக்கு பொல் என்பதிலிருந்து விலகி ஆக்கபூர்வமாய் கருத்துக்களை கொண்டு வருமாறு கேட்டும் வழமையாக உள்ள ஊமை ஊரை கெடுத்த கதை மாதிரி "லப லப" பதில் பாவம் இவர்களால் ஒரு வரையறைக்கு மேல் சிந்திக்க விடவில்லை அவர்களின் விசுவாச தண்மை மீண்டும் நன்றி இசை (கவணம் சுண்டல் நீங்கள் பகிடிக்கு எழுதுவதை சிலபேர் சீரியசா எடுக்க போகுதுகள்) :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் தீவுப்பகுதியைச்சேர்ந்தவன் என்பதால்

தண்ணீர்ப்பிரச்சினையின் தாக்கத்தை அறிவேன்

என்ன  வழியாகினும்

எவ்வளவு  செலவளித்தாயினும்

தண்ணீரை  எமது ஊருக்கு கொண்டுவர  பலவழிகளிலும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம்

ஆனால்

தாயகத்தை விரும்புபவன் என்ற  ரீதியில்

வன்னியைக்காயவைத்து

வேண்டவே   வேண்டாம்......

 

இது

ரத்தம்  வேண்டும் என்பதற்காக

இதயத்தை  புடுங்கி  செல்வதற்கு ஒப்பாகும்........... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில நீர் மிதமா இருக்கிறதால தானே வல்லுனர்களின் அறிக்கையின் படி இந்த திட்டமே செயல்ப்பாட்டுக்கு வருது இதில எங்க வன்னி காய போகுது?

நான் தீவுப்பகுதியைச்சேர்ந்தவன் என்பதால்

தண்ணீர்ப்பிரச்சினையின் தாக்கத்தை அறிவேன்

என்ன  வழியாகினும்

எவ்வளவு  செலவளித்தாயினும்

தண்ணீரை  எமது ஊருக்கு கொண்டுவர  பலவழிகளிலும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம்

ஆனால்

தாயகத்தை விரும்புபவன் என்ற  ரீதியில்

வன்னியைக்காயவைத்து

வேண்டவே   வேண்டாம்......

 

இது

ரத்தம்  வேண்டும் என்பதற்காக

இதயத்தை  புடுங்கி  செல்வதற்கு ஒப்பாகும்........... :(  :(  :(

 

அண்ணா இது ரோ நன்கு திட்டமிட்டு கர்நாடகா தமிழ் நாட்டு காவெரி பிரச்ச்னையை போல் பெரிதாக முயற்சி செய்யீனம், அதை தூபம் போட்டு வளர்க்கவே இது செய்தியாக்கப்பட்டு இங்கே ஒருவர் வந்து வன்னி மக்கள் மீது விஷத்தை காழ்ப்புணர்ச்சியை தூண்டுகிறார், இதை சுண்டலின் கருத்துக்களை நிர்வாகம் நீக்க வேண்டும்,

  • கருத்துக்கள உறவுகள்

இத்தோடா நாட்டாண்மை வந்து தீர்ப்ப சொல்லிட்டாருப்பா நீக்குங்க

இத்தோடா நாட்டாண்மை வந்து தீர்ப்ப சொல்லிட்டாருப்பா நீக்குங்க

 

இப்ப நாங்கள் இருக்கிற நிலைமையில் இந்த தண்ணி தான் ரொம்ப முக்கியம், எமது இனம் மீது காழ்ப்புணர்ச்சியை கொட்டி விட்டு எமக்கு உள்ளேயே சண்டை பிடிக்க வேண்டும் என்பதா உங்கள் அவா? உங்களது கருத்துக்களே உங்களது நோக்கம் என்ன என்பதை காட்டுகிறது !!!

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நிபுணர்களே ஆராய்ந்து அறிக்கை கொடுத்து விட்டார்கள் நீர் மிதமிஞ்சி இருப்பதால் இன்னுமொரு பிரதேசத்துக்கு கொண்டு போய் அந்த மக்களின் தாகத்தை தீர்க்க முடியும் என்று ஆசிய வங்கி ஒரு ப்ராஜெக்ட் இல் இன்வெஸ்ட் பண்ணுது எண்டா சும்மா அதைப்பற்றி படிக்காமல் நன்மை தீமைகளை ஆராயாமல் இன்வெஸ்ட் பண்ண மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் உள்ள கிணற்று தண்ணீர் பொஸ்பரஸ் காரணமாக குடிக்க முடியாமல் மஞ்சல் நிறத்தில் உள்ளது.இரணைமடு தண்ணீர் அவர்களுக்கே போதுமானதாக இல்லை இதில எங்க மற்றவர்களுக்கு கொடுப்பது :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நிபுணர்களால் அலசி ஆராயயப்பட்டு வன்னி மக்களின் விவசாயம் குடிநீர் தரவைகள் போக மிஞ்சுகின்ற உபரி நீரைத்தான் யாழ்ப்பாணம் கொண்டு செல்ல திட்டம் .... திட்டங்களை அறியாமல் சும்மா குய்யோ மையோ எண்டு குதிக்க கூடா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசத்தின் வளங்கள் அந்த மண்ணில் வாழும் மக்கள் எல்லோருக்குமானது. இது எனது அது உனது என்ற அடிபாட்டுக்கு எந்த முகாந்தரமும் இல்லை. அதேவேளை அந்தந்த வளம்.. அப்பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட பின் மீதம் இருப்பின் மற்றைய பகுதிகளுக்கு பகிரப்படுவதே நியாயம். அந்த வகையில்.. இரணைமடுக் குளத்தின் நீர் இருப்பை அதிகரித்து.. அது வன்னியில் நீர்த்தேவைகளை பூரணமாக பூர்த்தி செய்த பின்.. குடா நாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுப்பதில் எந்த நியாயமும் இல்லை.

 

வன்னி வாழ் மக்களும்.. குடா நாட்டு மக்களும் தமிழர்களே. போரால் பாதிக்கப்பட்ட மக்களே. அந்த வகையில்..  இங்கு.. நீரைக் காட்டி.. தமிழ் மக்களை பிராந்திய ரீதியில் பிரிக்கும் செயலில் ஈடுபடுவது தமிழீழ தேசத்தின் அடிப்படை தர்மங்களுக்கு எம் போராளிகள் காட்டிச் சென்ற வழிகாட்டலுக்கு மாறானது என்பதை.. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புக்களும் புரிந்து கொண்டு புரிந்துணர்வோடு செயற்பட முன் வர வேண்டும்.

 

அநாவசிய முரண்பாடுகளும்.. சீண்டு முடிதல்களும் தமிழர்களுக்குள் எந்த உய்வையும் ஏற்படுத்தாது. மேலும்.. இத்தனை கால.. இழப்புக்களுக்கு எந்த மதிப்பையும்.. பெறுமதியையும் வழங்காத செயலாகவே அது கருதப்பட வேண்டி இருக்கும். :icon_idea:

Edited by nedukkalapoovan

எமது நாட்டில் வெளிநாடுகளில் உள்ளது போல ஒழுங்காக தண்ணீர் வடிந்தோட வழியில்லை .மலசலம் கூட ஒரு கிடங்கில் போய் தங்குகின்றது .கிணற்றை விட்டு சற்று தள்ளி அந்த கிடங்குகள் இருப்பதால் பாதிப்பு எதுவும் இல்லை ஆனால் இப்போது உயர் மாடி கட்டிடதொகுதிகளும் நகரை நோக்கி மக்கள் நகர அவ்வளவு கழிவுகளும் நிலத்தில் ஊறி கிணற்று தண்ணீருக்குள் தான் வந்து அடையும் .யாழ்பாணத்தில் சில இடங்களில் கிணற்று தண்ணி இப்போதே மணப்பதாக சொல்லுகின்றார்கள் .

அதைவிட யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை நெடுக இருந்தது .

இந்த விடயத்தில் நிபுணத்துவமானவர்கள் இது பற்றி ஆராய்ந்து அடுத்த கட்டத்திற்கு போகவேண்டும் .

இரணைமடு திட்டம் பற்றிய  ஒப்பந்தம்  ஒன்று வெகுவிரைவில் காலவதியாகின்றது அதனால் தான் இந்த விடயமே செய்திகளில் வருகின்றது .

வழக்கம் போல றோ ,சி ஐ ஏ ,ஸ்கொட்லன்ட்யார்ட் என்று இழுத்து முன்பு அரசியல் தெரியமாமல் இருந்தவர்கள் போல இருக்கவேண்டாம் . 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி போடுங்க ......

இவனுங்க நினைக்கிறாங்க எதோ ஆசிய அபிவிருத்தி வங்கி நம்ம தெரு மூலையில இருக்கிற அண்ணாச்சி கடை மாதிரி ன்னு எம்புட்டு பேர் எவளவு ஆராட்சி பண்ணி இந்த விஷயமே நடக்குது விபரம் தெரியாத பசங்க சும்மா றோ அது இதுன்னு பூச்சாண்டி காட்டிட்டு

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உதவி வழங்கும் சர்வதேச நிறுவனங்களுக்குப் பின்னாலும்.. ஆதிக்க சக்திகளின் நலன் காக்கும் நோக்கம் உண்டு. அதனையும் நாம் புரிந்து கொண்டு தான் செயற்பட வேண்டி உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விடையத்திலும் அப்பிடி சொல்ல முடியாது அதுவும் இதுக்கு செலவளிக்கிற காச வேற ஒரு நாட்டில் கொண்டு போய் முதல் இட்டார்கள் என்றால் எங்களால் கிடைக்கும் நன்மைகளை விட கூட கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டியில் தண்ணிப் பிரச்சினையா சுண்டல்?? :wub::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டியில் தண்ணி பிரச்சனை இல்லை எண்டதுக்காக என்னுடைய சேவையை அளவெட்டியோடு மட்டும் மட்டுப்படுத்தி விட முடியாது ஒட்டுமொத்த குடா நாடும் என்னுடைய ஊர் போல தான் ஆகவே அந்த மக்களுக்கான என்னுடைய சேவை தொடரும் இரணைமடு நீரை யாழ்ப்பாணம் கொண்டு போகாமல் நாம் ஓய்ந்து விடப்போவதில்லை :D

நிற்க இந்த ஆறு அளவெட்டிக்குள்ளாள தான் ஊடறுத்து பாயுது

Valukkai Aru is a seasonal river in Northern Province, Sri Lanka.[1] It is the only river on the Jaffna Peninsula. The river rises near Tellippalai, before flowing south-west through Kandarodai, Sandilipay and Vaddukoddai. The river empties into Jaffna Lagoon near Araly.[2]

எமது நாட்டில் வெளிநாடுகளில் உள்ளது போல ஒழுங்காக தண்ணீர் வடிந்தோட வழியில்லை .மலசலம் கூட ஒரு கிடங்கில் போய் தங்குகின்றது .கிணற்றை விட்டு சற்று தள்ளி அந்த கிடங்குகள் இருப்பதால் பாதிப்பு எதுவும் இல்லை ஆனால் இப்போது உயர் மாடி கட்டிடதொகுதிகளும் நகரை நோக்கி மக்கள் நகர அவ்வளவு கழிவுகளும் நிலத்தில் ஊறி கிணற்று தண்ணீருக்குள் தான் வந்து அடையும் .யாழ்பாணத்தில் சில இடங்களில் கிணற்று தண்ணி இப்போதே மணப்பதாக சொல்லுகின்றார்கள் .

அதைவிட யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை நெடுக இருந்தது .

இந்த விடயத்தில் நிபுணத்துவமானவர்கள் இது பற்றி ஆராய்ந்து அடுத்த கட்டத்திற்கு போகவேண்டும் .

இரணைமடு திட்டம் பற்றிய  ஒப்பந்தம்  ஒன்று வெகுவிரைவில் காலவதியாகின்றது அதனால் தான் இந்த விடயமே செய்திகளில் வருகின்றது .

வழக்கம் போல றோ ,சி ஐ ஏ ,ஸ்கொட்லன்ட்யார்ட் என்று இழுத்து முன்பு அரசியல் தெரியமாமல் இருந்தவர்கள் போல இருக்கவேண்டாம் . 

 

இங்கே ஒன்று தெளிவாக தெரிகிறது, வன்னி விவசாயிகள் தண்ணி அனுப்புவதை விருமபவில்லை அப்படியானால் ஏன் வற்புற்த்தி தண்ணி அனுப்ப வேண்டும், யாழில் தண்ணி பிரச்சனை என்றால் அதுக்கு வேறு வழி பார்க்கலாம்,ஆனால் இங்கெ நடப்பது என்ன்வென்றால் இரணைமடு தண்ணி தான் வேண்டு என்று அடம் பிடிப்பதைப் பார்த்தால் இது அரசியல் நகர்வாகவே தெரிகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.