Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் தப்பித்துக்கொள்ள காணொளி தயாரிப்பு!! சூசையின் மனைவி சத்தியதேவியின் காணொளி இங்கே!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சனி, பிப்ரவரி 1, 2014 - 05:04 மணி தமிழீழம் | யேசுதாசன், கொழும்பு
ஜெனீவாவில் தப்பித்துக்கொள்ள காணொளி தயாரிப்பு!! சூசையின் மனைவி சத்தியதேவியின் காணொளி இங்கே!!
 
ஜெனீவாவில் தப்பித்துக்கொள்ள 20 நிமிடக் காணொளியைத் தயாரிக்கிறது மகிந்த அரசாங்கம்!! சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆதாரக் காணொளிக்குப் பதிலாக 20 நிமிட ஆவணக் காணொளியைச் சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வருகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் மீதுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே இக்காணொளி தயாரிக்கப்படுகின்றது. வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன அல்லது கொலை செய்யப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரைக் வைத்தே இக்காணொளி தயாரிக்கப்படுகின்றது. அத்துடன் போருக்குப் பின்னரான அமைதி நிலை குறித்தும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாம். தற்போது இக்காணொளி தயாரிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் இலங்கை அரசு திரையிடவுள்ள வீடியோ! – சனல்4 குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாம்.

பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்கு பதிலளிக்கும் வகையில்- ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் இலங்கை வீடியோ ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் 20 நிமிட காட்சிகளைக் கொண்ட இந்த வீடியோ வெளியிடப்படவுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கடத்தப்பட்ட காணாமல்போனவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களினால் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.இது சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வரும் நோக்கில் இந்த வீடியோ காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

http://seithy.com/breifNews.php?newsID=102661&category=TamilNews&language=tamil

இராணுவ அடக்கு முறையில் இருப்பவர்கள் இராணுவத்தின் சொல்படியே சொல்லவேண்டும் என்பது இலங்கையின் ஏன் பர்ர்வையிடுவர்களுக்கு புரியாது? அல்லது முன்கூட்டியே திரையிடமுன் தெரியப்படுத்தல், பொய்யான தயாரிப்பு...யுத்தக்குற்றங்கள்,மனித்வுரிமை மீறல்கள், கொலைகளை மறைக்க திசை திருப்பல் தயாரிப்பு எனமுன்கூட்டியே அறிவித்தால்...எடுபடாது...

வெளியே இருக்கும் சாத்திரியாரையே இந்தியாவுக்கு கூப்பிட்டு எழுதி கொடுத்து வாசிக்க விடும் போது இவர்களை பற்றி பேசி பலன் என்ன. கையில் அகப்பட்டவர்களை எளிதில் அவர்கள் போக விட போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கூப்பிட்டு சாஸ்திரியை பேச வைக்கும் அளவிற்கு அவர் பெரிய [முக்கியத்துவம் உள்ள]ஆளா என்ன :o

இந்தியா கூப்பிட்டு சாஸ்திரியை பேச வைக்கும் அளவிற்கு அவர் பெரிய [முக்கியத்துவம் உள்ள]ஆளா என்ன :o

எதிரா கதைத்தால் றோ தான் .இப்படியே பழகிவிட்டார்கள் .

பனியில் தடுக்கிவிழுந்தாலும் றோ றோ றோ .

  • கருத்துக்கள உறவுகள்

உவையை வெளில விடுற நோக்கமே இல்லைப் போல. அமெரிக்காவுக்கு முள்ளிவாய்க்கால் வைத்தியர்களைப் போக விட்டதால வந்த பிரச்சனையை கோத்தா நல்லா விளங்கிக் கொண்டிருக்கிறார். :lol::D

எதிரா கதைத்தால் றோ தான் .இப்படியே பழகிவிட்டார்கள் .

பனியில் தடுக்கிவிழுந்தாலும் றோ றோ றோ .

அருச்சுன்:

இந்த தலைவர்களின் பரியார்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் புலிகளை எதிர்க்கிறார்கள் என்று கருத்து பட கருத்து வைத்து உங்களை நீங்கள் சேட்டை காட்டுகிறீர்கள்.  புலிகள் உங்களை மிரடின்னால் மட்டும் நீங்கள் பரிதாபமா. இலங்கை அரசிடம் சிக்கி போய்விட்ட இவர்களுக்கு கொஞ்சம் இரக்கம் கலந்து பேசுங்கள்.

அர்ஜுன் அண்ணா இங்கு எழுதினது சாத்திரி அண்ணா புலிகளுக்கு எதிராக கதைத்தால் அவர் றோ என்று மற்றவர்கள் கூறுகிறார்கள் என. இந்த திரியிலுள்ள செய்தி பற்றி அவர் கதைக்கவில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உவையை வெளில விடுற நோக்கமே இல்லைப் போல. அமெரிக்காவுக்கு முள்ளிவாய்க்கால் வைத்தியர்களைப் போக விட்டதால வந்த பிரச்சனையை கோத்தா நல்லா விளங்கிக் கொண்டிருக்கிறார். :lol::D

ஆக, இப்போது என்னதான் சொல்ல வருகிறா இவ? சிங்கள அரசாலும், ராணுவத்தாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை, இருப்பதெல்லாம் தமிழ் மக்களால் வரக்கூடிய பிரச்சினை மட்டுமே என்றா??

பகிடி என்னவென்றால், புலிகள் இருக்கும்வரை மாற்றியக்கங்களையும் அரசுக்கு ஆதரவான தமிழர்களையும் துரோகிகள் என்றும், தேசியத்துக்கு எதிரானவர்கள் என்றும் சொல்லி வந்தோம். இப்போது என்னெவென்றால், யாரைத் தேசியம் என்று அழைத்தோமோ அவர்களே மற்றைய எல்லாரையும் தூக்கிச் சாப்பிடுமளவிற்கு சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் கருணாம்மான், புலிகளின் ஆயுத முகவர் கே. பீ, புலிகளின் ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர், புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ், புலிகளின் தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா, புலிகளின் மூத்த தளபதிகள் கேணல் ராம், கேணல் நகுலன், கிழக்கு மாகாண புலிகளின் தளபதிகளில் ஒருவர் பிள்லையான், கேணல் பதுமன்,....இப்போது புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் புலிகள் கடற்புலிகள் தளபதி சூசையின் மனைவி...இவர்கள் எல்லாருமே அரசு மிகவும் நல்லது, எங்களுக்குப் பிரச்சினையில்லை ஆனால் தமிழர்களால்த்தான் பிரச்சினை என்கிறார்கள். 

என்னதான் தேசியம் பேசி வந்தாலும், தனக்கென்றுவரும்போது காட்சிமாற்றும் ஒரு இனம்தான் நாங்கள். எங்களுக்கு சுதந்திரமும், விடுதலையும் ஒரு கேடா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்நிலைக்கைதிகள் அவர்கள்.. முஸ்லீம் தீவிரவாதிகள் பிடித்த வெள்ளைக்காரர்களும் காலில் விழுந்துதான் தப்பி வந்துள்ளார்கள் ரகுநாதன்.

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்நிலைக்கைதிகள் அவர்கள்.. முஸ்லீம் தீவிரவாதிகள் பிடித்த வெள்ளைக்காரர்களும் காலில் விழுந்துதான் தப்பி வந்துள்ளார்கள் ரகுநாதன்.

நீங்கள் சொல்வது சரியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனாலும், அனந்தி சசிதரன் போன்றவர்களும் எம்மத்தியில் இன்னும் இருக்கிறார்கள் என்று எண்ணும்போது மேலே குறிப்பிட்டவர்கள் உண்மையாகவே சூழ்நிலைக் கைதிகளா அல்லது இயக்கம் இருக்கும்வரை தமது செல்வாக்கிற்காக ஒட்டிக்கொண்டவர்களா என்று தெரியவில்லை. காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப எம்மை மாற்றிக்கொள்வதில் பெயர் பெற்ற இனம் நாங்கள் இசை. எதுவும் நடக்கலாம். 

இது இன்னொரு பெரிய உண்மையை விளக்குகிறது. வீட்டுத்தலைவன் இல்லாவிட்டால் குடும்பம் குழம்புவதுபோல் ஆளாளுக்கு முடிந்ததை செய்கிறார்கள். மற்றும்படி அவர்களும் எம்மைப்போல் ஒருவரே.. அனந்தி சசிதரன் போன்றவர்கள் ஒரு சிலரே..

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, இப்போது என்னதான் சொல்ல வருகிறா இவ? சிங்கள அரசாலும், ராணுவத்தாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை, இருப்பதெல்லாம் தமிழ் மக்களால் வரக்கூடிய பிரச்சினை மட்டுமே என்றா??

பகிடி என்னவென்றால், புலிகள் இருக்கும்வரை மாற்றியக்கங்களையும் அரசுக்கு ஆதரவான தமிழர்களையும் துரோகிகள் என்றும், தேசியத்துக்கு எதிரானவர்கள் என்றும் சொல்லி வந்தோம். இப்போது என்னெவென்றால், யாரைத் தேசியம் என்று அழைத்தோமோ அவர்களே மற்றைய எல்லாரையும் தூக்கிச் சாப்பிடுமளவிற்கு சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் கருணாம்மான், புலிகளின் ஆயுத முகவர் கே. பீ, புலிகளின் ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர், புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ், புலிகளின் தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா, புலிகளின் மூத்த தளபதிகள் கேணல் ராம், கேணல் நகுலன், கிழக்கு மாகாண புலிகளின் தளபதிகளில் ஒருவர் பிள்லையான், கேணல் பதுமன்,....இப்போது புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் புலிகள் கடற்புலிகள் தளபதி சூசையின் மனைவி...இவர்கள் எல்லாருமே அரசு மிகவும் நல்லது, எங்களுக்குப் பிரச்சினையில்லை ஆனால் தமிழர்களால்த்தான் பிரச்சினை என்கிறார்கள். 

என்னதான் தேசியம் பேசி வந்தாலும், தனக்கென்றுவரும்போது காட்சிமாற்றும் ஒரு இனம்தான் நாங்கள். எங்களுக்கு சுதந்திரமும், விடுதலையும் ஒரு கேடா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 

நீங்கள் அவுஸ்ரெலியாவில் வாழ்ந்து கொண்டு இதுவும் எழுதுவிங்கள் இதுக்கு மேலையும் எழுதுவிங்கள்.....முந்தி கைதாக்கின டாக்குதர் மாரும் இவர்களை போல தான் கதைத்தினம் பிறக்கு அமெரிக்கா போனாப் பிறக்கு எப்படி அறிக்கை விட்டவை என்று பார்த்திர்கள் தானே....ரகு அண்ணா ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கோ இவர்கள் சிறிலங்கா ரானுவத்தின் கண்கானிப்பில் இருக்கும் ஆட்கள்...அவங்கள் என்ன சொல்ல சொல்லுறாங்கலோ அதை தான் இவையும் சொல்லனும்...இல்லாட்டி இவைக்கும் வெள்ளை மாடி தான்.........ஒரு நாள் எங்கட இலக்கை நாங்கள் அடையேக்க இவர்கள் வாயாளே வரும் எல்லா உண்மைகளும் அது மட்டும் பொறுமையா இருங்கள் துரோகி பட்டம் குடுக்காமல் :)

அர்ஜுன் அண்ணா இங்கு எழுதினது சாத்திரி அண்ணா புலிகளுக்கு எதிராக கதைத்தால் அவர் றோ என்று மற்றவர்கள் கூறுகிறார்கள் என. இந்த திரியிலுள்ள செய்தி பற்றி அவர் கதைக்கவில்லை என நினைக்கிறேன்.

நன்றி துளசி ,

இந்த திரிக்குள் சாத்திரியும் இந்தியாவும்  எங்கே வந்தார்கள் அது கூட விளங்கவில்லை .

அது அவராக எழுதுவதில்லை வாசிக்காமலே கை எழுதும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அவுஸ்ரெலியாவில் வாழ்ந்து கொண்டு இதுவும் எழுதுவிங்கள் இதுக்கு மேலையும் எழுதுவிங்கள்.....முந்தி கைதாக்கின டாக்குதர் மாரும் இவர்களை போல தான் கதைத்தினம் பிறக்கு அமெரிக்கா போனாப் பிறக்கு எப்படி அறிக்கை விட்டவை என்று பார்த்திர்கள் தானே....ரகு அண்ணா ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கோ இவர்கள் சிறிலங்கா ரானுவத்தின் கண்கானிப்பில் இருக்கும் ஆட்கள்...அவங்கள் என்ன சொல்ல சொல்லுறாங்கலோ அதை தான் இவையும் சொல்லனும்...இல்லாட்டி இவைக்கும் வெள்ளை மாடி தான்.........ஒரு நாள் எங்கட இலக்கை நாங்கள் அடையேக்க இவர்கள் வாயாளே வரும் எல்லா உண்மைகளும் அது மட்டும் பொறுமையா இருங்கள் துரோகி பட்டம் குடுக்காமல் :)

யாருக்கும் துரோகிப் பட்டம் கொடுக்கும் எண்ணம் எனக்கில்லை. அனந்தி சசிதரன் போன்றவர்களும் அங்கேயேதான் இருக்கிறார்கள், இவர்களும் அங்கேயேதான் இருக்கிறார்கள். ஆனால் இருவரும் பேசும் முறைக்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. தமிழ்ச்செல்வனின் மனைவியின் செவ்வியைப் பார்க்கும்போது ஒருவர் எழுதிக் கொடுத்ததை வாசிக்குமால்ப்போல் தெரியவில்லை. ஆனால் சூசையின் மனைவி தயங்கித் தயங்கிப் பேசுவதைப் பார்த்தால் நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் நான் கூறிய பட்டியலில் இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள். எல்லோரையும் சூழ்நிலைக் கைதிகள் என்று என்னால் நம்பமுடியவில்லை. 

நான் அவுஸ்திரேலியாவில் இருப்பதால் மட்டும் இப்படி எழுதவில்லை. ஊரிலிருந்தாலும் இப்படித்தான் எண்ணுவேன், என்ன, வெளியே பேசமுடியாதிருக்கும், அவ்வளவுதான். 

அதுவேதான்.

அதைத்தான் நான் எழுதினேன். துளசி அவசரபட்டு உங்கள் பக்கம் எழுதிவிட்டா. 

இந்த களத்தில் அரசும், ரோவும் ஏன் இந்த நேரத்தில் இந்த திருகுதாளம் ஆடுகிறார்கள் என்றதை யாருக்கு விள்ஙகாவிட்டாலும் உங்களுக்கு அது விளங்காமல் போயிருக்காது. மூடி மறைத்து இனி என்ன அருச்சுன்? உங்களுக்கு தெரியும் ரோ சாத்திரியாரை கூப்பிடுவத்தையும், அரசு இவர்களுக்கு மிண்டு கொடுப்பத்தையும் ஒரே நோக்கத்தில் நடப்பவை என்றூ.

குடும்பி இலங்கை வராமல் விட்டத்துக்கு தான் அவர் தேர்தல் கண்காணிக்கிறார் என்றார் சோனியா. நாங்கு  தேர்தலும் தோற்றது மட்டுமல்லாது சரித்திரதில் முதல் முறை வந்த அம் அதாம் கட்சியிடம் நெருப்படி வாங்கி மூன்றாவதாக வந்த சாதனையை குடும்பி இலங்கை வரம்மல் தேர்தல் கண்காணித்து பெற்ற சாதனையாக சோனியா அறிவித்துவிட்டா. இப்போது தன்னும் ரோசம் இருந்தால் இந்த கட்சி தனது நிலைப்பாட்டை வெளியில் சொல்லுமா? இலங்கைக்காக றோ வேலை செய்யவில்லை என்று நீங்கள் வாத்தாட தயாராக வந்து இறங்கியதை துளசி கவனிக்கவில்லை.

இந்த தலைவர்களின் பாரியார்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் புலிகளை எதிர்க்கிறார்கள் என்று கருத்து பட அர்ஜுன் அண்ணா கருத்து வைத்ததாக நீங்கள் கூறியதை தான் இல்லை என குறிப்பிட்டேன். ரதி அக்கா எழுதியதையும் அதற்கு அர்ஜுன் அண்ணா எழுதியதையும் பாருங்கள். சாத்திரி அண்ணா தொடர்பான கருத்துக்கே அவர் பதில் எழுதியிருந்தார்.

அதை தான் சுட்டிக்காட்டினேன்.

Edited by துளசி

முதலில் அவர் சாத்திரியின் கருத்துக்கு எழுதிய கருத்துக்குதான் நான் பதில் எழுதினேண் என்றதை மேலே பாருங்கள்.

அருச்சுன் சாத்தியாரை நியாயப்படுத்தி இவர்களையும் நியாயப்படுத்துகிறார்.

அவர் அதை செய்யாவிட்டால், தான் ஒற்றை வரி நக்கல் அடிக்க, நீங்கள் விளங்கப்படுத்தாமல் தானே விளக்கமாக எழுதியிருக்க வேண்டும்.  ஒற்றை வரியில் பல கருத்துக்கள் வைப்பரை உங்கள் சந்தோசத்துக்கு நீங்கள் விளங்கப்படுத்துங்கள். ஆனால் அவர் ஒற்றை வரி நக்கலுடன் பல தோணிகளில் கால் வைத்து விவாதங்களில் இருந்து சறுக்குவது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் உங்களை இழுத்துவிட்டு அவர் ஓடிவிட்டார்.

இவை எல்லாமே ரோவும் இந்திய காங்கிரசும், அரசும் சேர்ந்த்து ஒரு நேரத்தில் விடும் ஜில்மாலகள். உண்மையில் அதை புரிந்துகொள்ளமுடியால் அவர் பதில் வைக்கிறா என்று நீங்கள் எழுத வந்து இப்படி விள்ளக்கமில்லாத அரசியல் செயலாளர் எங்களுக்கு வேண்டாம் என்று புளட் கைவிட்டத்தாக விள்ண்கபடுத்துகிறீர்கள்.  

"இந்த தலைவர்களின் பாரியார்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் புலிகளை எதிர்க்கிறார்கள் என்று கருத்து பட அர்ஜுன் அண்ணா கருத்து வைத்ததார்". அது நீங்கள் வைக்காத கருத்து. உங்களை மாதிரி இலவச வக்கீல்களை நான் ஏற்க மாட்டேன். அவர் வந்து தான் வைத்த கருத்தை விளங்கப்படுத்தட்டும்.

இலக்குவணன் ஏன் முடி சூட்டுவிழாவில் சிரித்தான் என்று நீங்கள் விளங்கப்படுத்தாதீர்கள். அதை அவனுக்கு விட்டுவிடுங்கள். இல்லையேல் அது முட்டள்ளத்தனம் என்று கமபரும் சொல்லியிருக்கிறார்.

Edited by மல்லையூரன்

கடவுளே எனது கண்ணில் பட்டதை நான் சுட்டிக்காட்டினேன். :D

மற்றபடி அர்ஜுன் அண்ணாவே வந்து உங்களுக்கு பதில் எழுதட்டும். :)
 
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே எனது கண்ணில் பட்டதை நான் சுட்டிக்காட்டினேன். :D

மற்றபடி அர்ஜுன் அண்ணாவே வந்து உங்களுக்கு பதில் எழுதட்டும். :)

இந்த திரியில் அவர் மக்களுக்கு செய்யவேண்டிய சேவையை செவ்வனவே செய்துவிட்டார்.
கடந்த 30 வருடமாக அவர் உழைக்கும் உழைப்பை பற்றி அவரே எத்தனை திரியில் எழுதி இருக்கிறார்.
(வேறு யாருக்கும் தெரிந்தால் தானே எழுத முடியும் அப்படி என்று நீங்கள் கேட்பதாக இருந்தால் அவரையே கேளுங்கள்)
நாளைக்கு யாரவது யாழ்பாணத்தில் இரண்டு ஆடுகள் குட்டி போட்டிருக்கிறது என்று ஒரு செய்தியை யாரவது இணைத்தால்.....
இதைதான் நாங்கள் கடந்த 30 வருடமாக சொல்லிவருகிறோம் என்று எழுத வருவார்.

உலகில் நடந்த போர் குற்றங்கள் தனிநபர்கள் மீது தான் நடத்தபட்டன அரசு மீது நடத்தமுடியாது அது மாறுபடும் மகிந்தகுடும்பம் எப்போ அரசைவிட்டு போகிறார்களோ அப்போது கைது செய்யபட்டு விசாரிக்கபடுவார்கள் இதை தமிழ் தரப்பிலும் நடத்தபடும் இது காலம் எடுக்கும் ஆனால் புலத்தில் தமிழர் ஏன் இதற்கு பின்னால் அரசியல் செய்கிறார்கள் ஏன் வேக நடைபோரட்டம் எங்கள் மீது சர்வதேசம் பாரிய குற்றம் சுமத்தும் அப்போது எங்கே முகம் காட்டபோகிறீர்கள் 2002ல் சமாதானம் ஏற்பட்டபோது நாங்கள் வெற்றியென்று பீத்தினோம்
2009ல் தோல்வி என்று அழுதோம் இதுவும் அது தான்

இந்த திரியில் அவர் மக்களுக்கு செய்யவேண்டிய சேவையை செவ்வனவே செய்துவிட்டார்.
கடந்த 30 வருடமாக அவர் உழைக்கும் உழைப்பை பற்றி அவரே எத்தனை திரியில் எழுதி இருக்கிறார்.
(வேறு யாருக்கும் தெரிந்தால் தானே எழுத முடியும் அப்படி என்று நீங்கள் கேட்பதாக இருந்தால் அவரையே கேளுங்கள்)
நாளைக்கு யாரவது யாழ்பாணத்தில் இரண்டு ஆடுகள் குட்டி போட்டிருக்கிறது என்று ஒரு செய்தியை யாரவது இணைத்தால்.....
இதைதான் நாங்கள் கடந்த 30 வருடமாக சொல்லிவருகிறோம் என்று எழுத வருவார்.

தாங்கமுடியவில்லை மருது, அர்ஜுன் அதை விட இன்னும் ஒன்றையும் கூறுவார், புலிகள் இல்லா விட்டால் அந்த ஆடு நான்கு குட்டி போடும் என்று

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்னும் புதிசில்ல. இந்திய அமைதிப் படை என்று வந்த அரக்கர் படை.. கற்றுக் கொடுத்ததன் மிச்சம் மீதி தான் இது. தளபதிகளின் மனைவிமாரை வைச்சு படம் காட்டிறது.. சிங்கள கிளர்ச்சித் தலைவர்.. ஜே வி பி தலைவர்... ரோகண விஜயவீரவின் மனைவி முதல்.. தமிழீழ விடுதலைப்புலிகளின் கேர்ணல் கிட்டுவின் மனைவி வரை இப்படி பாவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது சிங்களம் வழமையாகச் செய்யும் ஒன்று தான். இது.. அதன் தொடர்ச்சி. மகிந்தரின் பாணியில். அவ்வளவே. !!!! இதனை தமிழ் மக்கள் சரியான வரலாற்றுச் சான்றுகளோடு எதிர்கொள்வதோடு.. சிங்களத்தின் இந்த நீண்ட நாள் கயமையையும் இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்த புலம்பெயர் இளையோர் ஒரு காணொளியை தயாரிக்கனும். அதனை இதற்கு சமாந்திரமாக ஜெனிவாவில் வெளிவிடனும். !!! முக்கியஸ்தர்களின் மனைவிமார் என்ற ஒரே காரணத்திற்காக.. இந்த பெண்கள் மீது ஆட்சியாளர்கள் செய்யும் கொடுமைகளை இச்சந்தர்ப்பத்தில் வெளிக்காட்டுவது நல்லது. கூடிய கருத்துருவாக்கத்தை தக்க வைக்கும் சாதாரண மக்கள் மத்தியிலும் கூட. !!!

  • கருத்துக்கள உறவுகள்

போரினால் அதிகளவில் பாதிக்கப்பட்டது சாதாரண பொது மக்களே ஆனால் அவர்களது இழப்புகளை நினைவு கூரும் ஜுலை 25 நிகழ்வு பின் தள்ளப்பட்டு அந் இடத்தை மாவீரர் தினம் எடுத்து கொண்டது எமது மக்கள் மிகவும் நல்லவர்கள் தமது துன்பங்களை பின் வைத்துவிட்டு தமக்காக போரிட்டவர்கள் என்ற வகையில் புலிகளுக்கே எல்லா வகையிலும் முன்னுரிமை கொடுத்தார்கள் மாவீரர் தினத்திற்கு கொடுக்கும் அதே மரியாதையை மக்கள் ஜுலை 25 கொடுக்க வேண்டும்,சிங்களம்,பிராந்திய வல்லரசு மற்றும் உலக வல்லரசுகள் எம்மை பயன்படுத்துகிறார்கள் எமது சிதனையில் மாற்றம் வேண்டும், இந்த ஒளிப்பேழை உலகத்திற்கல்ல ஏனெனில் அப்பாவிப்பொதுமக்களின் மேல் மனித உரிமையை மீறின சிஙள அரசு அதற்கான பதிலாக இதனை உலகத்திற்கு காட்டமுடியாது இது உலகத்தமிழர்களுக்கானது முதலில் ஒப்பாரி வைப்பதை நிறுத்த வேண்டும்,முன்னால் போராளி என்பதல்லாம் சாதாரண மக்களுக்கு அடுத்த நிலையில் வைத்து பார்க்க முன் வரவேண்டும் ஏனெனில் அவர்களை விட பொது மக்கள் தான் அதிகம் தியாகம் செய்தவர்கள் பொது மக்கள் சந்தர்ப்பவாதிகள் அல்ல. இனம் என்ற உடலில் அவ்வினத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் போராளிகள் என்பது ஒரு அவயமே,சிலவேளைகளில் அது சீர்கெட்டால் அது உடலுக்கு ஆபத்தாக முடியும் இதனால்தான் பாதிக்கப்பட்ட உறுப்புகளை மருத்துவர்கள் நீக்குகிறார்கள் இவ்வாறே தமிழினமும் காலத்திற்கு காலம் பல அரசியல் கட்சிகள்,பல இயக்கங்களை கழட்டி விட்டிருக்கிறார்கள் ஆனால் விடுதலை புலிகள் தாம் இருக்கும் வரை இறுதி வரை (2009)சரியாகத்தான் இருந்தார்கள் அதற்காகத்தான் எமது மக்கள் எப்போதும் மரியாதை செலுத்துகிறார்கள் அவர்கள் இல்லாவிடத்தில் முன்னால் போராளிகள் என்றும் அவர்களோடு இருந்தவர்கள் என்பவர்களின் கருத்துகளை காது கொடுப்பது என்பது இன அழிவில் முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.