Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபசாரத்துள் தள்ளப்படுகின்றனர் நாதியற்ற வடக்கு இளம் பெண்கள் - முதலமைச்சர் கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vikki.JPG

கணிகையர் இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்காக நாதியற்ற இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

"இளைஞர்களது உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய இன்று பல பிழையான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் உணர்வுகள், தங்களுக்குப் பாதகமாக ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுமோ (வழிப்படுத்தப்பட்டு) என்று எண்ணும் சிலரால் போதைப் பொருள்கள் இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் இதுவரை காலமும் இல்லாத இந்தப் பழக்கம் தற்போது பரவிவருகின்றது. 
 
இந்தப் பொறிக்குள் அகப்படாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் கணிகையர் இல்லங்கள் (விபசார விடுதிகள்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிகின்றேன். 
 
நாதியற்ற இளம் விதவைகள், வறுமையின் கோரப்பிடியில் வருந்தி நிற்கும் பல இளம் பெண்கள், இந்த இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்று அறிகின்றேன்.
 
கொழும்பில் இருக்கும்போது, பொலிஸாரின் உதவியுடனும், இராணுவத்தினரை ஈர்ப்பதற்காகவும் நடத்தப்படும் இந்த இடங்கள் பற்றி எனக்குத் தகவல்கள் கிடைத்தன'' என்றார் அவர்.
 
அதேநேரத்தில் தமிழ்த் தலைவர்களைத் தமிழர்களே கொலை செய்தமையை மன்னிக்க முடியாது என்றும் அவர் கூறினார். அவ்வாறான கொலைகள் இடம் பெற்றதால்தான் தன்னைப் போன்று ஓய்வு பெற்று ஒதுங்கி வாழ்ந்த மனிதர்கள் அரசியலுக்கு வரவேண்டியதாயிற்று என்றும் அவர் கவலைப்பட்டார். 
 
வலி. தென்மேற்கு பிரதேச இளைஞர் கழகச் சம்மேளனம் நடத்திய இரண்டாவது வருடாந்த இளைஞர் மாநாடு மானிப்பாய் பிரதேசசபை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 
 
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்த தாவது:
 
மாற்றப்படுகின்றார்கள்
எமது கலாசாரம், வாழ்க்கை முறை, உணர்வுபூர்வமான பாரம்பரியங்கள் யாவும் கைவிடப்படும் வகையில் இளைஞர்கள் மாற்றப்படுகின்றார்கள். பணம் ஒன்றே குறிக் கோளாகச் செயற்படும் பலரால் இளைஞர்கள் திசை மாற்றப்படுகின்றார்கள்.
 
கல்விக்கு முதலிடம் கொடுத்து வந்த இனம் எங்களது இனம். போரினால் கல்வியைத் தொடர முடியாமல் போனவர்கள் பலர். இதனால் எமது இனத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கின்றது. அதை நிரப்ப இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும்.
 
எமது அரசியல் கட்சிகள்கூட வயது முதிந்தவர்களைக் கொண்டே இயங்குகின்றன. அடுத்த கட்ட தலைவர்களாக அறிவு முதிர்ந்த இளைஞர், யுவதிகளை நாங்கள் இப்பொழு திருந்தே அடையாளம் கண்டு முன்னேற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
மன்னிக்க முடியாத குற்றம்
உங்களில் பலர் என்னை ஏசினாலும் ஒன்றைக் கூறி வைக்க விரும்புகின்றேன். அண்மைக் காலத்தில் எம்முடைய கொள்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்று எண்ணி எங்கள் அரசியல்வாதிகள் பலரைக் கொன்று குவித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று நான் திடமாக நம்புகின்றேன்.
 
இன்று என்னைப் போன்ற ஒரு ஓய்வுபெற்று, ஒதுங்கி வாழ்ந்த மனிதனை அரசியலுக்குள் கொண்டு வந்திருக் கின்றீர்கள் என்றால் எங்கள் அரசியல் தலைவர்களை நாங்கள் கொன்று குவித்தது தான் அதற்குக் காரணம் அல்லவா?
ஜனநாயகம் என்பதை உலகத்தின் பல நாடுகள் கட்டிக்காத்து வருகின்றன என்றால் அதற்குக் காரணம் வல்லாட்சி செய்வது வருத்தத்தையே உண்டுபண்ணும் என்பதை அவர்கள் கண்கூடாகக் கண்டது தான் என்றார்.

http://www.onlineuthayan.com/News_More.php?id=160212617303408950

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அடிக்கடி பிரேமானந்தா மாதிரியும் பேசுறார். யாருப்பா.. ஓய்வெடுக்கப் போனவரை கூப்பிட்டு அரசியலுக்க விட்டனீங்க. ஊரு உலகத்தில.. அரசியல் செய்ய ஆக்கள் இல்லையாமில்ல..ஐயா பதறுறார். சிங்கக் கொடியை தூக்கிறதும்... சிங்களவனுக்கு வலிக்காத மாதிரி நடிக்கிறதும் இல்லை ஐயா அரசியல். மக்களின் உரிமைக்காக இதய சுத்தியோட எதிரியோட முட்டி மோதி.. உரிமையை பெற்று.. மக்களிடம் கையளிக்கிறவன் தான் அரசியல்வாதி. உவர் எல்லாம்.. யஜ்ஜா இருந்து என்ன செய்தாரோ..???! சந்தேகமாவே இருக்குது. :lol::D

Edited by nedukkalapoovan

ஒய்வெடுக்கும் காலத்தில் அரசியல் செய்வது இரண்டாவது பிரச்சனை நெடுக்கர்.

இளசுகளின் எதிர்காலம் தான் இங்கே முதலாவது நெடுக்கர்

இந்தாள் படிச்ச பண்பான மனுஷன்..மரியாதையா கதைக்குது...எங்களுக்கு தான் பிடிக்கல்ல.. :))

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு கேள்வி.. இவர் சொல்லுற அரசியல்வாதிகள் அரசியல் செய்யேக்க.. யாழ்ப்பாணத்தில சண்டியர் இருக்கேல்லையோ.. விபச்சாரம் இருக்கேல்லையோ.. யாழ் மாணவர்களிடம் குடிப்பழக்கம்.. புகை.. போதை இருக்கல்லையோ.

இதுகளை இல்லாமல் செய்ததே... புலிகள் வந்த பின் தான். அரசியல் தலைவர்கள் என்போர் மக்களின் பிரதிநிதிகள். மக்களுக்கு வேண்டியதை முதலில செய்யனும். அதுக்கு அப்புறம் தான் ரெம்பக் கதைக்கனும்.

கொழும்பில.. இருந்து அரசியல் செய்யுறவையால.. கொழும்பில விபச்சாரத்தை கட்டுப்படுத்த முடிஞ்சுதா..???! போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த முடிஞ்சுதா இல்லை. ஆனால்... புலிகளால் முடிஞ்சுதே. அதெப்படி..???! உங்களிடம் ஆயுதம் இருக்குது தானே... ஏன் முடியல்ல...??????????????????????!

அடிப்படையில்.. ஊழலும்.. ஒழுங்கீனமான அரசியல் தலைமைகளும்.. சுயநலமும்.. பணத்தாசையும்.. பதவி ஆசையும் தான்.. இதுகளைச் செய்விக்குதே தவிர... அதனை தமிழர்களும்.. வளர்க்கில்லை என்று ஐயா கவலைப்படுறாரோ என்னவோ.. ஆனால் ஐயாவின் சில பேச்சுக்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத வரட்சிப் போக்கில் இருக்கிறது.

படிச்சவை எல்லாம் சரியாச் சிந்திக்கினம் என்றால்.. உலகம் இப்ப.. சூரியனிடத்தில் இருந்து இடம்பெயர்ந்து எங்கையோ போய்க்கொண்டிருக்கும். படிச்சவை தான் அதிகம் தவறு செய்பவர்களாக.. தவறான வழியில் சிந்திப்பவர்களாக.. அல்லது தவறு செய்திட்டு மறைக்கலாம் என்று நம்புவர்களாக உள்ளனர். :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு கேள்வி.. இவர் சொல்லுற அரசியல்வாதிகள் அரசியல் செய்யேக்க.. யாழ்ப்பாணத்தில சண்டியர் இருக்கேல்லையோ.. விபச்சாரம் இருக்கேல்லையோ.. யாழ் மாணவர்களிடம் குடிப்பழக்கம்.. புகை.. போதை இருக்கல்லையோ.

இதுகளை இல்லாமல் செய்ததே... புலிகள் வந்த பின் தான்.

நல்லது செய்தார்கள்.

அரசியல் தலைவர்கள் என்போர் மக்களின் பிரதிநிதிகள். மக்களுக்கு வேண்டியதை முதலில செய்யனும். அதுக்கு அப்புறம் தான் ரெம்பக் கதைக்கனும்.

புலிகள் அரசியல் தலைவர்களாக மட்டும் இருந்து உதாரணம் காட்டியிருந்தால் இன்றைய தலைவர்கள் அதை பின்பற்றலாம். புலிகளின் வழியை முதலமைச்சரும் பயன்படுத்தினால் அவரும் பயங்கரவாதி என்று ஒதுக்கப்படுவார். வேறு வழி காட்ட மாட்டீர்களா?

படிச்சவை எல்லாம் சரியாச் சிந்திக்கினம் என்றால்.. உலகம் இப்ப.. சூரியனிடத்தில் இருந்து இடம்பெயர்ந்து எங்கையோ போய்க்கொண்டிருக்கும். படிச்சவை தான் அதிகம் தவறு செய்பவர்களாக.. தவறான வழியில் சிந்திப்பவர்களாக.. அல்லது தவறு செய்திட்டு மறைக்கலாம் என்று நம்புவர்களாக உள்ளனர்.

ஆகா! அருமையான வழி காட்டியிருக்கிரீர்களே? படிப்பறிவு மிகக்குறைந்தவர்களாக பார்த்து அவர்களை தமிழர் தலைவர்களாக்கினால் இந்த விபச்சாரம், சண்டியர், குடிப்பழக்கம்.. புகை.. போதை .. எல்லாவற்றிற்கும் தீர்வு கண்டுவிடுவார்கள் என்பது போல கூறுகிறீர்கள். அப்படியே செய்து விடுங்கள்.

படிப்பறிவு உள்ளோரில் கணிசமானோர் தமது தாய்நாடு தொடர்பான சமூக அக்கறையுடன் காணப்படுவார்கள். தனது நாட்டின் எதிர்கால சந்ததி குறித்த அதீத அக்கறையை காண்பிப்பார்கள். அதனால் எதிர் கால திட்டங்கள் தொடர்பில். தூரநோக்குடன் செயற்படுவார்கள். தமது தாயகம், மொழி, நாட்டின் பாரம்பரியம் போன்றவற்றை எந்த போலித்தனமும் இன்றி நேசிப்பவர்களாக இருப்பார்கள். தமது வரலாற்றைப் போற்றி பாதுகாப்பார்கள் அதேவேளை காலத்திற்கேற்ப கலாச்சார மாறுதல்களை புதுமைகளை,நவீனத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். நான் கூறியது ஐரோப்பிய நாடுகளில் உள்ள படித்தவர்ளைப் பற்றிய நான் பார்த்த கணிப்பீடு.

எமது ஆசிய நாடுகளில் படித்தவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் நாட்டின் வளங்களை எப்படி தமது குடும்ப கஜானாவிற்கு கொண்டு செல்லலாம் என்பதில் மிகவும் திறமையாக செயற்படுவார்கள். எதிர்கால சந்ததி குறித்து இவர்களுக்குக்கும் அக்கறை உண்டு. ஆனால் தமது பிள்ளைகளுடன் அந்த அக்கறையை நிறுத்திக் கொள்வார்கள். சமூகவியல். சிந்தனையை வளர்த்து கொள்வதை விட தான். படித்தவன் என்ற திமிரை அளவிற்கு அதிகமாக வளர்த்து கொள்வார்கள். பழைமையான தமது பெருமைபேண் வரலாற்றை பாதுகாக்க மாட்டார்கள். அதேவேளை பழைய பஞ்சாங்கங்களாக காட்டுமிராண்டித்தனமான மூடப்பழக்கங்களை வளர்ப்பார்கள் நான் கூறியதில் மிகச்சிறிய அளவில் விதிவிலக்குகளும் இருக்கலாம்.

நான் கூறிய இந்த கருத்தை, வெள்ளையர் செய்வது சரி, என்ற ஐரோப்பிய மோகத்தில் கூறுவதாக, சில ஆசிய படித்தவர்கள் குற்றம் சாட்டி, தம்மை தூயவர்களாக காட்டி,மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்க இதையும் திறமையாக பயன்படுத்துவார்கள்.

Edited by tulpen

tulpen:  நீங்கள் சொல்லுவது படித்த எல்லா தமிழருக்கும் பொருந்துமா?

 நான் நினைக்கவில்லை படித்த எல்லாரும் அடுத்தவரை சுரண்டி பிழைப்பவர்கள் என்று.....

இல்லை என்றால்..அடுத்தவரை சுரண்டவில்லை என்றால் படிப்பறிவு இல்லாதவர்களா? (தொழிழுக்கு மட்டும் அறிவை வளர்த்தவர்கள் :) )

Edited by naanthaan

நான்தான் நான் கூறியது பெரும்பாலோர் பற்றியது. எந்த விடயத்திற்கும் விதிவிலக்குகள் உண்டு. உங்களை அந்த விதிவிலக்குகளுக்கு உதாரணமாக கொள்ளலாம்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அரசியல் தலைவர்களாக மட்டும் இருந்து உதாரணம் காட்டியிருந்தால் இன்றைய தலைவர்கள் அதை பின்பற்றலாம். புலிகளின் வழியை முதலமைச்சரும் பயன்படுத்தினால் அவரும் பயங்கரவாதி என்று ஒதுக்கப்படுவார். வேறு வழி காட்ட மாட்டீர்களா?

ஆகா! அருமையான வழி காட்டியிருக்கிரீர்களே? படிப்பறிவு மிகக்குறைந்தவர்களாக பார்த்து அவர்களை தமிழர் தலைவர்களாக்கினால் இந்த விபச்சாரம், சண்டியர், குடிப்பழக்கம்.. புகை.. போதை .. எல்லாவற்றிற்கும் தீர்வு கண்டுவிடுவார்கள் என்பது போல கூறுகிறீர்கள். அப்படியே செய்து விடுங்கள்.

நீங்களும் பயங்கரவாதப் பூச்சாண்டியைக் காட்டிக் கொண்டே.. மக்களை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான்.. அடக்கி ஆளப்போறீங்கன்னு பார்ப்பமே. ஏகாதபத்தியத்தின்.. இன்றைய ஆக்கிரமிப்புக்கான உச்சரிப்பே பயங்கரவாதம். ஏகாதபத்தியத்தின் கையில் பலமான ஆயுதம்.. தொழிலுநுட்பம் இருக்கிற திமிரில்.. அது அதனை விட பலம் குறைந்த ஆயுதங்களை.. பயங்கரவாதமாக்கி பார்க்கிறது. ஆனால்.. புலிகள் செய்த அரசியலோடு ஒப்பிடும் போது அமெரிக்காவும் சிறீலங்காவும் ரஷ்சியாவும் சீனாவும் இந்தியாவும் செய்வது மிக மோசமான பயங்கரவாத அரசியலாகும். அதை எல்லாம் கண்டிக்கவோ.. நிறுத்தவோ.. உங்களால் முடியாது. புலிகள் போன்ற நியாயமான.. பலவீனமான அமைப்புக்கள் மீதுதான்.. புகைச்சலை வெளிப்படுத்த முடியும். குண்டுகளைக் கொட்டி.. இராணுவ விற்பன்னத்தை நிரூபிக்க முடியும்.

நெல்சன் மண்டேலாவுக்கு மகுடம் சூட்டுபவர்கள்.. அவர் என்ன படிச்சார் என்று பார்த்தா சூட்டுகிறார்கள். முன்னாள் பயங்கரவாதிக்கு.. இன்று.. நோபல் பரிசும். முக்கிய நகரங்கள் எங்கும் சிலையும்.. அவரைப் பற்றிப் பேசுதலே பெருமிதமும் என்ற நிலை.

விக்னேஸ்வரனைப் பொறுத்தவரை.. அவர் தன்னை இன்னும் நீதிபதின்னு நினைச்சுக் கிட்டு இருக்கிறார். தான் சொல்வது நியாயம் தர்மம் என்று. ஆனால் அவர் எங்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண மனிதன். நீதிபதிகள் ஒன்றும் கடவுளின் வரம் பெற்றவர்களோ.. அவர்கள் 100% நீதியானவர்களோ என்றில்லை. விக்னேஸ்வரன்.. பிரபாகரனிடத்தில் இருந்திருந்தால்.. நிச்சயம்.. பிரபாகரனை விட மோசமாக நடந்து கொண்டிருப்பார். அந்த நிலையில் இருந்து தான்.. நாம் சில விடயங்களைப் பார்க்க வேண்டும்.

தலைமைத்துவம் என்பது.. முகாமைத்துவம் படிப்பதால்.. பண்ணுவதால் வருவதில்லை. அது கூடப் பிறக்கிறது..! விக்னேஸ்வரனிடம் பிரபாகரனிடம் காணப்பட்ட தலைமைத்துவப் பண்புகளில்.. 10% கூட இல்லை. அவருக்கு வீழ்ந்த விருப்பு வாக்குகளின் பின்னால் கூட பிரபாகரன் மாவீரன்.. தமிழர்களின் வீரன் என்ற உச்சரிப்புக்கள் தான்.. உள்ளது. அதை மறந்திட வேண்டாம். விக்னேஸ்வரன்.. காலத்துக்கு ஒவ்வாததும் பேசுவார். கடந்து போனதை பற்றியும் பேசிட்டு இருப்பார். அது கூட அறிவு பூர்வமானது அல்ல. தேவை.. நிகழ்காலம்.. எதிர்காலம் குறித்த சிந்தனைகளும் செயற்பாடுகளுமே.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் தலைவர்கள் (புலிகள் அமைப்புச் சாராதவர்கள்)  யாரும்.. யோக்கியமான அரசியல்வாதிகள்.. கிடையாது. என்னைக் கேட்டால் வின்கேஸ்வரனும் கூட. பிள்ளையான் போன்றவர்கள் கூட வெறுத்து ஒதுக்கிய.. ஒரு முட்டாள் பதவியில்.. இத்தனை நாள்.. குந்தி இருப்பதே வேஸ்டு. :lol::)

இது அரசியல். விடுதலை புலிகளுக்கும் உங்களுக்கும் செய்வதற்கு கடினமான காரியம்.

நெல்சன் மண்டேலாவுக்கு மகுடம் சூட்டுபவர்கள்.. அவர் என்ன படிச்சார் என்று பார்த்தா சூட்டுகிறார்கள். முன்னாள் பயங்கரவாதிக்கு.. இன்று.. நோபல் பரிசும். முக்கிய நகரங்கள் எங்கும் சிலையும்.. அவரைப் பற்றிப் பேசுதலே பெருமிதமும் என்ற நிலை.

இது தான் அரசியல்வாதிகள் செய்வது. பிரபாகரனுக்கும் தேவை வரும்போது இதை அரசியல்வாதிகள் செய்வார்கள். தமிழ்நாட்டில் இன்றே செய்கிறார்கள்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் தலைவர்கள் (புலிகள் அமைப்புச் சாராதவர்கள்)  யாரும்.. யோக்கியமான அரசியல்வாதிகள்.. கிடையாது.

பிள்ளையானையும், கருணாவையும் யோக்கியமான அரசியல்வாதிகள் என்கிறீர்கள். விக்நேஸ்வரன் யோக்கியம்றவர் என்கிறீர்கள். இதனை படிப்பவர்களுக்கு புரியும் உங்கள் கணிப்பு.

என்னைக் கேட்டால் வின்கேஸ்வரனும் கூட. பிள்ளையான் போன்றவர்கள் கூட வெறுத்து ஒதுக்கிய.. ஒரு முட்டாள் பதவியில்.. இத்தனை நாள்.. குந்தி இருப்பதே வேஸ்டு.

இந்த 30 வருட ஆயுத போராட்டத்தை விடவா? அதனுடன் ஒப்பிடுகையில் எதுவுமே வீணல்ல. வடக்கு மாகாணத்தில் 72% மக்கள் இவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்கள் இதை வீண் என்று நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

a. இது அரசியல். விடுதலை புலிகளுக்கும் உங்களுக்கும் செய்வதற்கு கடினமான காரியம்.

b. இது தான் அரசியல்வாதிகள் செய்வது. பிரபாகரனுக்கும் தேவை வரும்போது இதை அரசியல்வாதிகள் செய்வார்கள். தமிழ்நாட்டில் இன்றே செய்கிறார்கள்.

c.பிள்ளையானையும், கருணாவையும் யோக்கியமான அரசியல்வாதிகள் என்கிறீர்கள். விக்நேஸ்வரன் யோக்கியம்றவர் என்கிறீர்கள். இதனை படிப்பவர்களுக்கு புரியும் உங்கள் கணிப்பு.

d. இந்த 30 வருட ஆயுத போராட்டத்தை விடவா? அதனுடன் ஒப்பிடுகையில் எதுவுமே வீணல்ல. வடக்கு மாகாணத்தில் 72% மக்கள் இவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்கள் இதை வீண் என்று நினைக்கவில்லை.

a. ஆமாம்.. 1948 இல் இருந்து விடுதலைப்புலிகள் தானே நாட்டை ஆண்டார்கள். உங்கள் அரசியல்வாதிகள் தூக்கத்தில் இருந்தவையாக்கும். தந்தை செல்வா அளவிற்கு.. ஒரு அரசியல்வாதி.. சிங்களவனோடு.. அரசியல் இராஜதந்திர ரீதியில்.. போராடிச் சலித்ததாகத் தெரியவில்லை.  அந்த வகையில்.. நாம் அரசியலை வரலாற்றில் இருந்து படித்துக் கொள்கிறோம். நீங்கள் உங்களின் உளுத்துபோன சலாம் பாடலை எல்லாம் அரசியல் என்று நினைக்காதீர்கள்.

b. பிரபாகரனை எப்போதும் மதிக்கிற மக்கள் தான் இப்போதும் மதிக்கிறார்கள். பிற்பாடும் மதிப்பார்கள். அவர் சிலைக்கு.. விருதுக்காகப் போராடவில்லை. மக்களின் விடிவுக்காகப் போராடினார். குறிக்கோளில்.. அவரும் மண்டேலாவும் ஒன்று தான். ஆனாலும் மண்டேலாவின் இறுதிக்காலம்.. துன்புறுத்தியவனின் பாதணியையே துடைக்கும் படியானது வேதனை.

c. படிக்காத பிள்ளையானே ஒரு தவணை இருந்து பார்த்து வேண்டாம் என்று ஒதுங்கிய இடத்தில் தான்..அவருக்கே விளங்கின அரசியல்.. விக்னேஸ்வரன் ஐயாக்கு இப்ப தான் விளங்குது எனும் போது.. ஒருவேளை பிரபாகரனின் பாசறையில் இருந்த போது.. பிள்ளையான் கூட கொஞ்சம் அரசியல் படிச்சிருப்பாரோ என்று தோன்றுகிறது. :)  தேர்தலுக்கு முன்னாடி எல்லாம் முடியும் என்பது போன்ற படங்காட்டல். தேர்தல் முடிந்த பின்.. ஒன்றுமே இல்லை என்ற பாடம். இதனை தான் புலிகள்.. ஒப்பந்தம் எழுத முதலே அதன் வரைபை பார்த்திட்டே சொல்லிட்டார்களே..! அவர்களுக்கு நீங்கள் அரசியல் படிப்பிக்க முடியாது. அந்தளவுக்கு உங்களிடம் தீர்க்கதரிசன.. மதிநுட்பம் இல்லை.

d. 48 இல் இருந்து கணக்குப் பார்த்தால்... நீங்கள் அரசியல்வாதிகள் போராடின காலம் தான் அதிகம். கிடைத்தது.. உள்ளுராட்சி சபைகள். 30 வருட போராட்டத்தில்.. குறைந்தது.. மாகாண சபை..! இப்போ. அந்த உள்ளூராட்சி சபை அரசியல்வாதிகளே மாகாண சபை என்ற மண்குதிரையை நம்பியே போட்டிகளில் பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அரசியல் சாணக்கியப் பேச்சுக்கு குறைச்சல் இல்லை. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் பயங்கரவாதப் பூச்சாண்டியைக் காட்டிக் கொண்டே.. மக்களை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான்.. அடக்கி ஆளப்போறீங்கன்னு பார்ப்பமே. ஏகாதபத்தியத்தின்.. இன்றைய ஆக்கிரமிப்புக்கான உச்சரிப்பே பயங்கரவாதம். ஏகாதபத்தியத்தின் கையில் பலமான ஆயுதம்.. தொழிலுநுட்பம் இருக்கிற திமிரில்.. அது அதனை விட பலம் குறைந்த ஆயுதங்களை.. பயங்கரவாதமாக்கி பார்க்கிறது. ஆனால்.. புலிகள் செய்த அரசியலோடு ஒப்பிடும் போது அமெரிக்காவும் சிறீலங்காவும் ரஷ்சியாவும் சீனாவும் இந்தியாவும் செய்வது மிக மோசமான பயங்கரவாத அரசியலாகும். அதை எல்லாம் கண்டிக்கவோ.. நிறுத்தவோ.. உங்களால் முடியாது. புலிகள் போன்ற நியாயமான.. பலவீனமான அமைப்புக்கள் மீதுதான்.. புகைச்சலை வெளிப்படுத்த முடியும். குண்டுகளைக் கொட்டி.. இராணுவ விற்பன்னத்தை நிரூபிக்க முடியும்.

நெல்சன் மண்டேலாவுக்கு மகுடம் சூட்டுபவர்கள்.. அவர் என்ன படிச்சார் என்று பார்த்தா சூட்டுகிறார்கள். முன்னாள் பயங்கரவாதிக்கு.. இன்று.. நோபல் பரிசும். முக்கிய நகரங்கள் எங்கும் சிலையும்.. அவரைப் பற்றிப் பேசுதலே பெருமிதமும் என்ற நிலை.

விக்னேஸ்வரனைப் பொறுத்தவரை.. அவர் தன்னை இன்னும் நீதிபதின்னு நினைச்சுக் கிட்டு இருக்கிறார். தான் சொல்வது நியாயம் தர்மம் என்று. ஆனால் அவர் எங்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண மனிதன். நீதிபதிகள் ஒன்றும் கடவுளின் வரம் பெற்றவர்களோ.. அவர்கள் 100% நீதியானவர்களோ என்றில்லை. விக்னேஸ்வரன்.. பிரபாகரனிடத்தில் இருந்திருந்தால்.. நிச்சயம்.. பிரபாகரனை விட மோசமாக நடந்து கொண்டிருப்பார். அந்த நிலையில் இருந்து தான்.. நாம் சில விடயங்களைப் பார்க்க வேண்டும்.

தலைமைத்துவம் என்பது.. முகாமைத்துவம் படிப்பதால்.. பண்ணுவதால் வருவதில்லை. அது கூடப் பிறக்கிறது..! விக்னேஸ்வரனிடம் பிரபாகரனிடம் காணப்பட்ட தலைமைத்துவப் பண்புகளில்.. 10% கூட இல்லை. அவருக்கு வீழ்ந்த விருப்பு வாக்குகளின் பின்னால் கூட பிரபாகரன் மாவீரன்.. தமிழர்களின் வீரன் என்ற உச்சரிப்புக்கள் தான்.. உள்ளது. அதை மறந்திட வேண்டாம். விக்னேஸ்வரன்.. காலத்துக்கு ஒவ்வாததும் பேசுவார். கடந்து போனதை பற்றியும் பேசிட்டு இருப்பார். அது கூட அறிவு பூர்வமானது அல்ல. தேவை.. நிகழ்காலம்.. எதிர்காலம் குறித்த சிந்தனைகளும் செயற்பாடுகளுமே.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் தலைவர்கள் (புலிகள் அமைப்புச் சாராதவர்கள்)  யாரும்.. யோக்கியமான அரசியல்வாதிகள்.. கிடையாது. என்னைக் கேட்டால் வின்கேஸ்வரனும் கூட. பிள்ளையான் போன்றவர்கள் கூட வெறுத்து ஒதுக்கிய.. ஒரு முட்டாள் பதவியில்.. இத்தனை நாள்.. குந்தி இருப்பதே வேஸ்டு. :lol::)

இதன் மூலம் நீங்கள் தலைவர் மோசமாக நடந்து கொண்டார் என்று ஒத்துக் கொள்கிறீர்களா?....எழுதும் முன் யோசித்து எழுதுங்கள் :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் நீங்கள் தலைவர் மோசமாக நடந்து கொண்டார் என்று ஒத்துக் கொள்கிறீர்களா?....எழுதும் முன் யோசித்து எழுதுங்கள் :icon_idea:

நிறையவே யோசிச்சுத்தான் எழுதுகிறோம். வேணுன்னா நீங்களும் கொஞ்சம் யோசிச்சுச் சொல்லுங்க.

விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டுக்களோடு ஒப்பிட்டு நோக்கிச் சொல்லப்பட்ட கருத்து. எங்கள் கருத்து அல்ல. எங்கள் கருத்தை தெளிவாக சொல்லி இருக்கிறோம். தேசிய தலைவர் தலைமைப் பண்பிற்கு ஏற்ப சரியாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறார் என்று. ஆகவே விளங்காட்டி ஒரு வரிசை வைச்சு அர்த்தம் புரியாமல்.. கேள்வி கேட்கக் கூடாது. முழுவதையும் படிச்சுப் புரிந்து அர்த்தம் கொள்ளனும். அது சரிப்பட்டு வராதுன்னா.. பேசாமல் இருப்பது மேல். எமக்கு நேரச் சேமிப்பு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன்.. பிரபாகரனிடத்தில் இருந்திருந்தால்.. நிச்சயம்.. பிரபாகரனை விட மோசமாக நடந்து கொண்டிருப்பார்.

பிரபாகரனை விட மோசமாக ????

பிரபாகரன் மோசமாக நடந்து கொண்டாரா? எப்போது?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை விட மோசமாக ????

பிரபாகரன் மோசமாக நடந்து கொண்டாரா? எப்போது?

இதனை மக்களுக்காகப் போராடிய.. பிரபாகரனையும்.. புலிகளையும்.. இதர தமிழ் போராளிகளையும்.. பயங்கரவாதிகள்..வன்முறைவாதிகள்.. தீவிரவாதிகள்.. என்று உச்சரித்துக் கொண்டிருந்தவர்களையும்.. கொண்டிருப்பவர்களையும்.. சட்டத்தின் மூலம்.. அவர்களை தண்டிக்க பிடிவிறாந்துகள்... உட்பட.. பலவற்றை பிறப்பித்து.. நின்றவர்களையும் போய் கேளுங்கள்...! தம்மை மிதவாத.. சிங்களவர்கள் மதிக்க வேண்டிய அரசியல்வாதிகளாகக் காட்டிக் கொள்ள அரசியல் செய்வோரிடமும் போய் கேளுங்கள்.

எங்களைப் பொறுத்த வரை தேசிய தலைவரின் நடவடிக்கைகள் எப்போதும் நீதியின் தர்மத்தின் பால் இருந்ததுடன்.. அநீதிகளை உடனடியாக தண்டிக்கும்.. தட்டிகேட்கும்.. துணிச்சலுடன் இருந்ததுடன்.. எப்படியாவது...மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்திட வேண்டும் என்ற வாஞ்சையின் அடிப்படையில் நல்ல தலைமைத்துவத்தோடு.. வழிகாட்டலோடு இருந்தது என்பதே கருத்தாகும். :)

Edited by nedukkalapoovan

ஒரு கதை அடிபட்டது ஆரம்ப காலத்தில் ஒரு வங்கிகொள்ளையின் பின் தப்பி ஓடும் போது இரு கூலி தொழிலாளிகள் விட்டு கலைத்ததாகவும்...அவர்களிடம் இருந்து தப்புவதற்காக அவர்களை சுட்டு கொன்றதாகவும்....அதுவும் தர்ம வழியா?

இல்லைனா அதை அப்படியே லூசிலே தமிழீழ கணக்கில் விட்டு விடுவோமா?

:unsure:

முதல் கோணல்...முற்றும் கோணல்.....

ஆதாரம் இருக்கா?

சுருட்டுக்காக எட்டி மிரித்தவனை மாவீரன் என்று யாருடையோ ஒற்றை கை எலும்பை வைத்து கூபாவில் செய்யும் விபச்சாரத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை?

உங்கட தர்மம் கோணலா போகிறது தெரியவில்லை.

$5 விபச்சாரிகளை உலகத்திற்கு தந்த சேகுவாரா, காஸ்ட்ரோ எல்லாம் மாவுவீரர்கள். (நம்பிறம்)

புரளி கிளப்புறதென்றால் லொயிக் சிறி லங்கன்ஸ் பார்பதில்லையோ?

தலைவரே ஒப்புகொண்டவிடயத்திற்கு ஆதாரம் கேட்கின்றீர்கள் .

எனது கை முறிந்து யாழ் வைத்தியசாலையில்(JAN 10 1981) இருக்கும் போது தான் வன்னியசிங்கம் மகன் உட்பட இன்னும் சில சுருட்டு தொழிலார்களை அங்கு கொண்டுவந்தார்கள் .வன்னியசிங்கதின் நகை கடை கொள்ளை அடிக்கும் போது அவர்களின்  சுருட்டுகுடிலில் இருந்தவர்கள் தடுக்க போக துப்பாக்கி சூடு நடாத்தி இருவர் மரணம் .சிலர் காயம் அடைந்திருந்தார்கள் .

குட்டிமணி தலைமயில் போனவர்கள் பிரபா ,சிறி சபா ,ஒபரே தேவன் முக்கியமானவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைப் பொறுத்த வரை தேசிய தலைவரின் நடவடிக்கைகள் எப்போதும் நீதியின் தர்மத்தின் பால் இருந்ததுடன்.. அநீதிகளை உடனடியாக தண்டிக்கும்.. தட்டிகேட்கும்.. துணிச்சலுடன் இருந்ததுடன்.. எப்படியாவது...மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்திட வேண்டும் என்ற வாஞ்சையின் அடிப்படையில் நல்ல தலைமைத்துவத்தோடு.. வழிகாட்டலோடு இருந்தது என்பதே கருத்தாகும். :)

அதனால் தானா "பிரபாகரனை விட மோசமாக" என்று எழுதினீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தானா "பிரபாகரனை விட மோசமாக" என்று எழுதினீர்கள்?

நீங்கள் வின்கேஸ்வரனை காப்பாற்ற இவ்வளவு வெகுளியாக நடிக்க வேண்டிய அவசியமில்லையே. அவரிடமே கேளுங்க.. எந்தத் தமிழ் தலைவர்களை யார் யார் சுட்டதால்... இன்று இந்த வயசான காலத்தில்... அவர் முதலமைச்சர் ஆக வேண்டி வந்தது என்று அவருக்குத் தானே தெரிஞ்சிருக்கும்..! அந்த வகையில்.. முதலில் அந்த தொக்கிற்கு.. பதில் எடுத்துத் தந்தீங்கன்னா... மிச்சம் பேச செளகரியமாக இருக்கும். :lol::icon_idea:

தலைவரே ஒப்புகொண்டவிடயத்திற்கு ஆதாரம் கேட்கின்றீர்கள் .

எனது கை முறிந்து யாழ் வைத்தியசாலையில்(JAN 10 1981) இருக்கும் போது தான் வன்னியசிங்கம் மகன் உட்பட இன்னும் சில சுருட்டு தொழிலார்களை அங்கு கொண்டுவந்தார்கள் .வன்னியசிங்கதின் நகை கடை கொள்ளை அடிக்கும் போது அவர்களின் சுருட்டுகுடிலில் இருந்தவர்கள் தடுக்க போக துப்பாக்கி சூடு நடாத்தி இருவர் மரணம் .சிலர் காயம் அடைந்திருந்தார்கள் .

குட்டிமணி தலைமயில் போனவர்கள் பிரபா ,சிறி சபா ,ஒபரே தேவன் முக்கியமானவர்கள் .

யார் அவர்களை சுட்டார்கள்? குட்டிமணி தலைமை தாங்கினது என்கிறீர்கள்?

மற்றவர்கள் என்றால்..என்ன ஏது என்று விசாரிக்காமலேயே குற்றம் குறை கூறுவார்கள்..ஆனால் தலைவர் என்றால் சுட்டு செத்தவனே எழும்பி வந்து சத்தியம் செய்தாலும் சாட்சி கேப்பார்கள்...இப்போது தெரியுதா ஏன் தலைவர் "மௌனித்தார்" என்று... :)

விவசாயி...இது காணும்..

அப்ப சாட்சி இல்லையா?

ஐ.நா.வில நாங்கள் செத்தவர்களை நிரூபிக்க செத்தவர்களா வந்து சாட்சியம் சொல்கிறார்கள்?

எனக்கும் ஆசுபத்திரில காயப்பட்டவருக்கு பக்கத்தில் 30 வருசத்திற்கு முன் படுத்திருந்தவரின் சாட்சியம் கேட்டு காணும் என்றாகிவிட்டது.

இல்லாத புலியை குறை சொல்வதை விடுத்து சிறி லங்கா விபச்சார புள்ளிகளை பற்றி பதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரே ஒப்புகொண்டவிடயத்திற்கு ஆதாரம் கேட்கின்றீர்கள் .

எனது கை முறிந்து யாழ் வைத்தியசாலையில்(JAN 10 1981) இருக்கும் போது தான் வன்னியசிங்கம் மகன் உட்பட இன்னும் சில சுருட்டு தொழிலார்களை அங்கு கொண்டுவந்தார்கள் .வன்னியசிங்கதின் நகை கடை கொள்ளை அடிக்கும் போது அவர்களின்  சுருட்டுகுடிலில் இருந்தவர்கள் தடுக்க போக துப்பாக்கி சூடு நடாத்தி இருவர் மரணம் .சிலர் காயம் அடைந்திருந்தார்கள் .

குட்டிமணி தலைமயில் போனவர்கள் பிரபா ,சிறி சபா ,ஒபரே தேவன் முக்கியமானவர்கள் .

கிளிநொச்சியில் வன்னி மக்களின் அடைவு நகைகளை கோடி கோடியாக கொள்ளை அடித்தாவர் உமா மகேஸ்வரன்.  கிண்ணியா முஸ்லிம் மக்களின் பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்தவர் உமா.என்னப்பா மாக்சிசவாதம், மக்கள் போராட்டம் என்றீர்கள். பிறகேன் மக்களின் பணத்தை கொள்ளை அடித்தீர்கள்? பிரபாகரன் அடித்தால் பிழை. உமா அடித்தால் சரியோ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.