Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர்

Featured Replies

http://tamil.oneindia.in/movies/news/t-rajendar-family-converts-christian-193437.html

 

அதில் ஒரு கமெண்ட்  :)

 

1980 ல நான்தாண்டா மாஸு
இப்போ எனக்கு புடிச்சது ஏசு
எப்பவுமே புடிச்சது காசு...
சிம்பு மேல போடுவாங்க அடிக்கடி கேசு
இனிமே என் கிட்ட பாத்து பேசு

நான் இப்போ திமூகாவில ஊறிட்டேன்
லதிமுகா ஆரம்பிச்சி நாறிட்டேன்
பெருமை கிடைக்க பலபேர் காலை வாரிட்டேன்
கடைசியா கிறிஸ்துவத்துக்கு மாறிட்டேன்
மக்களே இதை நான் தெளிவா உங்களுக்கு கூறிட்டேன்

ஏ டண்டணக்கா இல்ல இல்ல
ஏ அல்லேலூயா அல்லேலூயா

  • கருத்துக்கள உறவுகள்

டீ ஆர் குடும்பம் மதம் மாறினது இருக்கட்டும் சிம்பு மாறிட்டாரோ :D

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ராமராஜனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஓக்கூர். தந்தை ராமையா. நாடக நடிகர். தாயார் வெள்ளையம்மாள். - தினமும் ஒரு நற்செய்தி 

ராமராஜனின் சகோதரர்கள் கருப்பையா, பாண்டி, சகோதரிகள் புஷ்ப வல்லி, வைராத்தாள். ராமராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர் குமரேசன். ராமராஜன் பிறந்த ஒரு ஆண்டிலேயே சொந்த ஊரில் இருந்து மேலூருக்கு வந்து விட்டனர். இதனால், நடிகர் ராமராஜன் மேலூர் அரசு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மேலூர் அரசு கலை கல்லூரியில் பி.யூ.சி படித்தார்.

சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால், சென்னைக்குப் போக வேண்டும். சென்னையில் யாருடைய ஆதரவை நாடிச் செல்வது என்ற கேள்வி எழுந்து, தயக்கத்தை உண்டாக்கியது. அந்த நேரத்தில், தங்கராஜ் என்ற நண்பர் மூலம் மேலூரில் 'ராஜா டூரிங் டாக்கீஸ்' என்ற திரையரங்கில் ராமராஜனுக்கு வேலை கிடைத்தது. அங்கு டிக்கெட் கிழித்து கொடுப்பது, கேஷியர் வேலை, மானேஜர் வேலை, படத்தை ஆப்பரேட் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்தார்.

இப்படி டிக்கெட் கிழிக்கும் வேளையில் இருந்து நடிகராகி, பின்பு நாடாளுமன்ற உறுப்பினரான திரு ராமராஜன் அவர்கள் சமீபத்தில் கோவையில் பகிர்ந்து கொண்ட சாட்சியை உங்கள் முன் வைக்கிறேன்..

சாட்சி: 

நான் பல நாட்களாக சாட்சி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சூழ்நிலைகள் சரியாக அமையாத காரணத்தினால் வர முடியவில்லை. நான் இங்கே இன்று வந்து நிற்கிறேன் என்றால் அது இயேசுவின் மிகபெரிய கிருபை. 

உலகம் முழுவதும் இருக்கும் ஒரே இறைவன் இயேசு கிறிஸ்து மாத்திரமே... நான் பல முறை தொலைகாட்சியிலும், மற்ற இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.. MBBS போன்று பல துறைகளில் சிறந்து விளங்குகிற மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத பல வியாதிகளை இயேசுவின் கிருபையால் குணப்படுத்துவதை பார்த்து வியந்திருக்கிறேன்.. என்னடா... கரகாட்டகாரன் படத்தில் மாங்குயிலே பூங்குயிலே என்று ஆடிகொண்டிருந்தவன் இங்கே கோவையில் சாட்சி சொல்லுகிறார் என்று.. வாழ்க்கையில் நடந்த ஓர் சம்பவத்தை பகிர்ந்து கொள்வது மிகப்பெரிய பாக்கியம். 

நான் மதுரை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து சினிமா வாய்ப்பை தேடி சென்னை வந்தேன். அங்கே உதவி டைரக்டர், டைரக்டர் பின் நடிகர் என்று வளர்ந்து பல திரைப்படங்களில் நடித்தேன். அனைத்து படங்களும் மிகபெரிய வெற்றியை கண்டது. எல்லோருக்கும் ராமராஜன் யார் என்று தெரிந்தது. பின்பு அரசியலில் அறிமுகமாகி மாண்புமிகு அம்மா புரட்சிதலைவி ஜெயலலிதா மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனேன்.. இந்த பாதையில் வந்து கொண்டு இருந்த பொது எல்லோருக்கும் வரும் சோதனை போல எனக்கும் சோதனை வர ஆரம்பித்தது. 

2010 ம் ஆண்டு ஓர் இடத்திற்கு என் காரில் சென்று கொண்டிருந்தேன். அந்நேரத்தில் மிகப்பெரிய கார் விபத்தில் மாட்டி கொண்டேன். அந்த கார் விபத்தில் என் நண்பர் அந்த இடத்திலேயே மரித்து விட்டார். என்னுடன் இருந்த இன்னொரு நண்பர் பால்தங்கராஜன் என்பவரும் இருந்தார். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 15 நாட்களாக சுய நினைவை இழந்து படுத்த படுக்கையாக இருந்தேன். 

அங்கு வந்த பலரும் என்னை பார்த்து இவர் பிழைப்பாரா, பேசுவாரா, பழைய நினைவுகள் வருமா என்று வருத்தப்பட்டனர். பால்தங்கராஜ் இயேசுவை வழிபட்டு கொண்டிருப்பவர். அவர் என்னை மருத்தவமனையில் முழுவதுமாக கவனித்து கொண்டார். சுயநினைவு திரும்பினவுடன் நான் புலம்ப ஆரம்பித்தேன். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை..

இதை கவனித்த தங்கராஜ் அவர்கள் "தைரியமாக இருங்கள், ஒன்றும் ஆகாது. நான் ஓர் போதகரை அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு ஓர் போதகரை அழைத்து வந்தார். அந்த போதகர் என் தலையில் கை வைத்து ஜெபம் செய்தார். எனக்கு ஏசுவே நேராக வந்து என் தலையில் கைவைத்தது போல உணர்ந்தேன். 

நான் இன்று உங்கள் முன் நின்று பேசுகிறேன். பல இடங்களுக்கு போகிறேன் என்றால் அதற்கு இயேசு கிறிஸ்துவே காரணம். முன்பெல்லாம் ஓர் பிரச்சினை என்றால் பல கோவில்களுக்கு சென்று வருவோம். ஆனால் மனதார இயேசுவை நினைத்தால் குணமாகும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். வாழ்க்கையில் நமக்கு பிரச்சினை அதிகமாக வருவதுண்டு. அந்த நேரத்தில் நம்மோடு இருப்பவர் கர்த்தர் மாத்திரமே... 

கர்த்தரை நம்பினோர் கைவிடப்படமாட்டார். பிரட்சினைகள் வரும்போது பல யோசனைகள் நம் மனதில் தோன்றி சஞ்சலப்படும். அந்நேரத்தில் ஆலயத்திற்குள் சென்று இயேசுவை உண்மையாய் வணங்குவோம் என்றால் தேவன் பதில் கொடுப்பார். நான் கதை சொல்லவில்லை. என் கண்முன் பார்த்த சம்பவங்கள் அது.

நான் நடிகர் செந்திலையும் அழைத்தேன். அவரும் பல நிலைகளில் கஷ்டப்பட்டு பல இடங்களுக்கு சென்று பிறகு இயேசுவை வணங்க ஆரம்பித்தார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று சாட்சி சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். ஆனால் அவர் வேறு வேலைகள் இருப்பதால் வர முடியவில்லை. 

கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாக கர்த்தர் உனக்கு துணை நிர்ப்பார் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. இந்த சாட்சியை பகிர்ந்து கொள்ள செய்த ஏசுவிற்கு ஆல்லேலூயா ஸ்தோத்திரம் என்று கூறி முடிக்கிறேன்...

ஆமென்...

 

www.facebook.com/GoodNewsDailytamil

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர்களும் நடிகைகளும் சாதாரண மனிதர்களே. தாங்கள் விரும்பிய சமயத்துக்கு மாறுவது அல்லது அதைப் பின்பற்றுவது அவரவர் சொந்த விடயம். ஆனால் அவர்களைத் தூக்கிப் பிடித்து தலையில் ஆடுவதும் அவர்களை வைத்து விளம்பரம் செய்வதும் கேவலமானது. இப்படியான விசிலடிச்சான் குஞ்சுகளாக தமிழர்கள் இருப்பது துன்பகரமான நிகழ்வுகள். ஒருவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதும் அதனைப் பகிரங்கப் படுத்தத் தூண்டுவதும் அருவருப்பான செயல்கள்.

 

எவரும் எதையும் பின்பற்றி விட்டுப் போகட்டும். ராமராசனுக்கு இயேசு அற்புதம் நிகழ்த்தினாரா இல்லையா என்பது அவருக்கே வெளிச்சம்.

 

தொடர்பான காணொளி

///http://www.youtube.com/watch?v=98Lck6x30EQ///

Edited by யாழ்வாலி

  • தொடங்கியவர்

நடிகர் செந்திலும் ....

 

இந்துமதத்திற்கு வந்த சோதனை....

 

மேற்கு நாடுகளில் தேவாலயங்கள் விற்கப்படுவது போல்...இந்தியாவில் கோவில்களும் விற்கப்படும் நாள் தொலைவில் இல்லை போலும்...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மதம் மாறுவது எல்லாம் demand போன நடிகர்கள்.....

இந்தியாவை சுற்றி இஸ்லாமிய மதம் பரப்பப்பட்டும் இன்றும் இந்தியாவில் எத்தனையோ முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கு பிறகும் இந்துமதம் நீடித்து நிலைத்து நிக்குது ஆகவே ஒரு சிலர் மாறுகின்றார்கள் என்றதுக்காக கோவில்கள் விற்பனை செய்யப்படும் என்பதெல்லாம் கற்பனை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மதம் மாறுவது எல்லாம் demand போன நடிகர்கள்.....

இந்தியாவை சுற்றி இஸ்லாமிய மதம் பரப்பப்பட்டும் இன்றும் இந்தியாவில் எத்தனையோ முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கு பிறகும் இந்துமதம் நீடித்து நிலைத்து நிக்குது ஆகவே ஒரு சிலர் மாறுகின்றார்கள் என்றதுக்காக கோவில்கள் விற்பனை செய்யப்படும் என்பதெல்லாம் கற்பனை

 

 

அவர் அப்படித்தான் எழுதுவார்

தமிழர்கள்  துடித்தால் மகிழ்ச்சி  அவருக்கு.. :(  :(

வேற எதை அவரிடம் எதிர்பார்க்கின்றீர்கள்??

இதுக்கெல்லாம் நீங்கள் உணர்ச்சி  வசப்படுவது அநாவசியம்..... :(

மதம் பரப்பும் சாத்தான்களை விரட்டி அடிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
நான் நினைக்கிறேன் இந்து மத மக்கள் மதம் மாறுவதை தடுக்கவே.
ராஜேந்தர் அவர்கள் மதம் மாறி இருப்பார் என்று.
அவர் மேடையில் ஏறி ........... ஜேசுவை பற்றி பேச தொடங்கினால் ..........
அனேக அல்லலுயா கூட்டம் ...........
இதிலும்விட நரகம் மேல் என்று ஓடவே சாத்தியம் உண்டு.
  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தினர் தான் சமயம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தினர் தான் சமயம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் :(

 

அவர்களுடைய மதத்தின் புனிதங்கள் வர்களுக்கு புரியவில்லை.
நீ இன்ன தொழில் செய்பவன் .... கோவிலுக்குள் வாராதே என்று எமது சமய 
முதியோர்கள் தடுப்பதை அவர்கள் துன்பமாக பார்கிறார்கள் போல்.
அது எவளு இன்பம் என்பதை தடுப்பவர்கள்தான் அறிவார்கள்.
இவர்களுக்கு இடுக்கண் வரும்கால் நக தெரியவில்லை
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்


கர்த்தர் நடிகர்கள் மூலமாக வருகின்றார் என்பது என் கண்டுபிடிப்பு.. அதனால் குதிரைவித்த பிசாசினைப் பின்பற்றுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்


பிசாசு இல்லை என்று சொல்பவர்களுக்காக...


பிசாசுகள் மீது நம்பிக்கை வருகின்றது... பிசாசினை ஆவியாக மாற்றலாம் வாருங்கள்!!!

 

  • கருத்துக்கள உறவுகள்

பிசாசு அனுப்பப்படுகின்றதா?

 

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்


பிசாசுகளை விரட்டி அடிக்க பல வழிகள்  இருக்கிறது.
இந்தியாவில் பிறந்து இந்து பாலை குடித்து வளந்தவர்களை எளிதாக .........
பேய் பிசாசிடம் இருந்து பிரிக்க முடியாது.
உலக மகா பேயோடு வாழ்ந்த அதிர்வு பரம்பரைக்கும் இருக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=rzfVNyAOGY0

 

நாகொடு சாமி 

  • கருத்துக்கள உறவுகள்

unnecessary !

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்
எங்கள் மதத்தில் இருக்கும் அழுக்கை மறைக்க அடுத்த மதத்தை நாடும்.
அயோக்கியத்தனங்களை இனியாவது கைவிட்டு.
கேடு கெட்டு போய்  கொண்டிருக்கும் இந்துமத்ததை ............பற்றி கொஞ்சமாவது சிந்திக்க தொடங்கவேண்டும்.
 
எங்களிடம் இந்துமதம் வரும்போது கேள்விகள் இருக்கவில்லை .....
பயத்தினால்தான் கடவுளை நம்பினோம்.
 
உண்மையில் கேள்விகள் வந்தபோது ....
விடைகள் இருக்கவில்லை.
 
அடுத்த தலைமுறை .... குறிப்பாக புலம்பெயர்ந்தவர்கள் .. கேள்விகள் கேட்கிறார்கள்.
பெறோரிடம் விடைகள் இல்லை.
ஒரு வேதாந்தத்தை நெடு நாளுக்கு வாழவைக்க முடியாது.
 
விசர் கூத்தாடுவதை நிறுத்திவிட்டு.
தனது மதத்தை ஏற்று ...... அதை புனிதமாக்குபவனே உண்மையான மதவாதி.
அடுத்த மதத்தின் கேவலங்களோடு ... இந்துமதத்தை வாழ வைக்க நினைப்பது மிகவும் அருவெறுப்பானது.
 
ஆயுள்வேதம் ...
யோகா ...
சித்தம் .....
என்று பல அருமைகள் இந்து மதத்துடன் ஒட்டி இருக்கிறது.
அவை இந்தியாவில் இலங்கையில் இலாது போவதற்கு விசர் கூத்தாடும் கூத்தாடிகளே முதல் காரணம்.
 
அருமைகள் மறைந்து .....
வெறும் பித்தலாட்டங்கள் இன்று மதமாக இருக்கிறது. 
அதனால்தான் பலர் மதம் பிடித்து அலைகிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளான சாமிகள் பற்றிய தகவல்கள் வரும்போதோ, தண்டிக்கும்போது அதை இந்துக்கள் ஏற்கின்றார்கள். குற்றவாளிச் சாமிகள் பற்றிய நீதிமன்றத் தீர்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.  இதில் இந்து என்ற  வரையறை இல்லை. அதில் தெளிவாகத் தான் இருக்கின்றார்கள்.

தவிர, இடையிடையே நீங்கள் ஏதோ ஞானி மாிதரி எழுதிக் கொண்டிருப்பது கொஞ்சம் சகிக்க முடியாமல் இருக்கின்றது. முற்றுப்புள்ளிகளுக்கு முற்றுப்புள்ளி  இல்லையா?

 

மதவெறி பற்றிக் கதைப்பதே, இப்படியான பிள்ளைபிடிகாரர்களால் தான்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் 

உங்களுக்கு கிறிஸ்தவம் மீது என்ன கோபமோ யாமறியோம் பராபரமே 

 

 

குற்றவாளிகளான சாமிகள் பற்றிய தகவல்கள் வரும்போதோ, தண்டிக்கும்போது அதை இந்துக்கள் ஏற்கின்றார்கள். குற்றவாளிச் சாமிகள் பற்றிய நீதிமன்றத் தீர்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.  இதில் இந்து என்ற  வரையறை இல்லை. அதில் தெளிவாகத் தான் இருக்கின்றார்கள்.

அன்ன இன்னும் அம்மா அப்பா சாமிகள் இந்தியாவில் அருள் பாலித்துகொண்டு தான் இருக்கிறார்கள்
அதை நம்பி அங்க ஒரு கூட்டமும் இங்கிருந்து ஒரு கூட்டமும் பின்னுக்கு திரிஞ்சு கொண்டு தான் இருக்கு 

நித்தியானந்தா இன்னும் குண்டலினியை எழுப்பிக்கொண்டு தான் இருக்கிறார் 

HomoSex சாய்பாபாவை இன்னும் ஒரு கூட்டம் கும்பிட்டு கொண்டு தான் திரியுது நிறைய Duplicate சாய் பாபாக்களும் வந்து கொண்டிருக்கிறார்கள் 

 

பாவம் பிரேமானந்தா இவர்களை போல் பிரபல்யம் அடைய முன் மாட்டியதால் கம்பி எண்ணுகிறார்

 

இவையனைத்தையும் இந்து மதத்தை கேவலப்படுத்த நான் சொல்லவில்லை குற்றம் எங்கும்  உள்ளது  அது மதத்தில் அல்ல

பின்பற்றுபவர் மனத்தில்  

 

எந்த மதத்தை பின்பற்றுபவர்களானாலும் அதனை உண்மையாக பின்பற்றினால் இப்படி உங்களை போல் மதம் பிடித்து திரிய மாட்டார்கள் .....

 

நான் ஒரு கிறிஸ்தவன் ஆனாலும் எல்லா மதத்தையும் மதிக்கிறேன் ,பௌத்தத்தையும் தான் காரணம் பௌத்தம் இங்கே கொலைகளை செய்யவில்லை பௌத்த மதம் பிடித்தவர்கள் தான் அதனை செய்தார்கள் 

 

என்னுடைய இந்து நண்பர்களை விட எனக்கு புராணங்களிலும் இதிஹாசங்களிலும் அறிவு அதிகம் அதனை பெருமையாக கூட நான் சில நேரம் நண்பர்களிடம் சொல்வதுண்டு 

 

இறுதியாக ஒன்றை கூறுகிறேன் உடனே மதம் பரப்புகிறேன் என்று தூக்கிக் கொண்டு வந்துவிடாதீர்கள் 

இது கிறீஸ்தவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் என்று எதிர் பார்க்கிறேன்

இயேசு இரண்டு வசனங்கள் கூறியிருக்கிறார்

1. உங்களுள் ஒரு பாவமும் அறியாதவர்கள் அவள் மீது முதற்கல்லை எறியுங்கள்

2. நீ உண் கண்ணிலிருக்கும் உத்திரத்தை உணராமல் உண் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை பார்க்கிறதென்ன

உன் கண்ணில் இருக்கும் விட்டத்தை எடுத்து ஏறி பின் உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாக கண் தெரியும்

 

விளக்கம் அவசியமில்லை என்று நினைக்கிறேன் தொப்பி அளவானவர்கள் எடுத்து போட்டு கொள்ளுங்கள் 

 

 

Edited by Atonk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பிறப்பில் இந்து மதமாக இருந்தாலும், எனக்குக் கிறிஸ்தவத்தையும் மிகவும் பிடிக்கும்.  சேர்ச்சில் அவர்கள் பூசை செய்யும் விதம், பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் விதம் மற்றும் பைபளில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள்  மிகவும் பிடிக்கும்.  எமது ஐயர்களைவிடச் சேர்ச்சைச் சேர்ந்தவர்கள் எமக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள்.  எமது பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வைச் சொல்வார்கள் அல்லது மிகவும் ஆறுதலாக இருப்பார்கள்.  இதனை எமது ஐயர்மார் செய்து நான் கேள்விப்பட்டதுகூட இல்லை.  அதேபோல, இந்து மதத்தில் மூலம் எமக்குச் சொல்லப்பட்ட பல விடயங்கள் மூடநம்பிக்கைகளாகவே எமக்குத் தென்பட்டது.  நாம் அவற்றை வெளிநாட்டிற்கு வந்து பின்பு பிரித்தறிந்த பின்னரே அவற்றின் உண்மையான விபரங்கள் தெரிய வந்தன.

 

 

மதங்கள் என்பறை மனிதனால் உருவாக்கப்பட்டவை.  தூயவன் குறிப்பிடும் மதங்கள் 21ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் சில சுயநல மனிதர்களால் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவை.  அதனை வைத்து முழுக் கிறிஸ்தவத்தையும் குறை கூறுவது பொருத்தமற்றது என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை.  கத்தோலிக்கம், கிறிஸ்தவம் வேறு.  இவர் குறிப்பிடும் மதங்கள் வேறு.  இவற்றின் வேறுபாடுகளை அறிந்துவிட்டு இங்கு எழுதட்டும்.  மேலதிகமாக விவாதிக்கலாம்.  ஆனால், அரைகுறையாக தெரிந்து கொண்டு எழுதுபவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது.

 

முடிந்தால் ஆங்கிலத்திலுள்ள பைபிளை வாசியுங்கள்.  ஏனெனில், தமிழில் பைபிளை மொழிபெயர்த்திருக்கும் விதம் புதியவர்களுக்கு தவறான கண்ணோட்டத்தையே ஏற்படுத்தும். 

பூசலும் ஏசலும் எதற்கு ????? :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.