Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வா...என்னை வருடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பை ஏற்று வருடலாம் என்று வந்தேன்!! :D ஏமாந்து போனேன் :o

…….என் தேவதை வருகிறாள் அவளின் வருகையை என் மனம் உணர்கிறது. படுக்கை அறைக்கதவைச் சாத்தியவள் என்னைக் கவனியாததுபோல குளியல் அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்…..குளிக்கிறாள் போலும்..குளித்து வரட்டும். ஈரம் சொட்டச் சொட்ட அந்த அழகான கூந்தலை  இரவின் மெல்லிய ஆடையில், அவள் அள்ளி முடிந்திருப்பதை இரசிப்பதே தனி சுகந்தான்….ம் வந்து விட்டாள் நான் என்னைத் தயாராக்கிக் கொண்டேன்.   “வா…. என்னை வருடு.” அவளின் தொடுகைக்காக கசியத் தொடங்கினேன். அவள் துளியேனும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் தொட்டால் நான் சிலிர்ப்பேன்…அவள் தொட்டால் நான் துளிர்ப்பேன். அவள் தொட்டால் நான் நிமிர்வேன் அவள் தொடுகை என்னை வீரியமாக்கும். அந்த விரல்களின் வருடல் எவ்வளவு சுகமானது……. சந்தன சோப்பின் வாசனை மிக மிக அருகில் அவளின் மெல்லிய மூச்சின் வெப்பம் சிறிதாக என்னில் பரவியது. எனக்குள் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் படபடத்தன…. அவளின் கூரிய விழிகளில் இருந்து தீர்க்கமான ஒரு பார்வை என்னைக் குறிவைத்து இறங்குகிறது……… மெல்லக்கண்களை  மூடிக்கொள்கிறாள்..எட்டி இழுத்து அவளை அணைக்கலாமா என்று தோன்றியது முடியவில்லை அசைவற்று நிற்கிறேன். சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.

இதெல்லாம் ரொம்ம டூ மச்!!!

சகாரா அக்காவின் முத்திரையே தனி. ஒவ்வொரு படைப்பும் நளினமாகவும் புதுமையாகவும் இருக்கும். தொடக்கத்தில் ஒரு பீடிகையுடன் வந்து இறுதியில் வாசகர்களை ஒரு புதிய தளத்துக்குள் விட்டுச் சென்று விடுவா. மிகுதிக் காட்சிகளை வாசகனே உய்த்தறிந்துகொள்ளவேண்டும். அதுவே அவவின் படைபுக்களின் வெற்றி என எண்ணுகின்றேன். வாழ்த்துக்கள் அக்கா! :)

  • Replies 81
  • Views 9.2k
  • Created
  • Last Reply
என் பங்கிற்கு எனது புரிதலையும் வைத்து விடுகிறேன். உண்மை கதைசொல்லிக்கே வெளிச்சம்.
 
இந்தக்கதையினை முடிவு இப்படி இருக்கிறது: 'சாளரங்களின் திரைச்சீலையினை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த (உண்மையில் உறக்கத்திலிருந்த என்று எழுதியிருப்பின் இன்னமும் பொருந்தியிருக்கும் என்பது எனது அபிப்பிராயம்) துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத்தொடங்குகிறேன்'
 
ஒரு வரியில் சொல்வதனால், இரசிக்காது விடப்பட்ட எறவுஸ்ட்(இதுக்குத் தமிழ் தெரியவில்லை) பெண்மையின் பார்வையில் தான் கதை இருக்கிறது. அதனால் தான் கணவன் படுத்திருந்தான் என்பதைக் காட்டிலும் உறக்கத்திலிருந்தான் என்பது அதிகம் பொருந்தும் என்பது எனது அபிப்பிராயம்.
 
இந்தக் கதையின் ஆரம்பத்தில் வரும் சாளரமும் முடிவில் வரும் சாளரமும் முற்றிலும் வேறுவேறானவை. கதையின் ஆரம்பத்தில் கதைசொல்லி தனது வீட்டு ஜன்னல் ஊடாகத் தான் பார்த்துக்கொண்டு நிற்கிறார். வெளியில் காற்றும் பனிப்பூக்கள் போன்ற பனியும் கதைசொல்லிக்கு ஒரு தியானநிலையினை உருவாக்கி விடுகின்றன. 'எவ்வளவு நேரத்திற்குத் தான் இவற்றை ரசிப்பது?' என்ற இடத்தில் கதைசொல்லியின் அகம் ஆதிக்கம் எடுத்துக்கொள்கிறது. கதையின் முடிவில் மூடப்பட்ட திரைச்சீலை திறக்கப்பட்ட இடம் இது. 
 
அகத்தின் திரைச்சீலை திறக்கப்பட்ட பின்னர், அனைத்தும் அவள் தன்னைச் சார்ந்து தான் பேசுகிறாள். 'அவள் கரங்களின் தொடுகைக்காக மனதுள் ஏக்கங்கள் குமைந்து கொண்டிருந்தன' என்பது முதல் இவ்வாறு ஏகப்பட்ட மனந்திறந்த வசனங்கள் அவளது மனநிலையின் தாபத்தினையே பேசுகின்றன. புறக்கணிப்பு அல்லது அலட்சியப்படுத்தப்படல் அல்லது வேண்டாது விடப்படல் என்பன வேண்டுமாயின் எல்லோரிற்கும் தெரிந்திராததாய் இருக்கலாம், ஆனால் எறவுசல் அனைவருக்கும் பரிட்சயமான உணர்வு தானே. எறவுஸ்ட் நிலையில் அவள் தனது உணர்வை தன்னில் இருந்து பிரித்தெடுத்து ஒரு பிற மனிசி ஆக்கிப் பேசியுள்ளளாள். அவளிற்குள் அந்ததத் தருணத்தில் அது அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
 
எழுத்துநடை அற்புதமாக விரிகிறது. தானே சிருஸ்ட்டித்த பிறமனிசி சார்ந்து தன்னை அவள் ஒரு தேவதையாக வர்ணிக்கிறாள். இது இட்டுக்கட்டப்பட்டதல்ல. அவள் அத்தருணத்தில் தன்னை அப்படித் தான் உணர்கிறாள். வெண்டைக்காய் விரல், குளித்து விட்டு ஈர முடியுடன் இரவுடையில் வரல் என அனைத்திலும் உணர்வு கொப்புளிக்கிறது. 
 
பல ஆண்களிற்கு மயக்கம் பிறக்கும். காரணம் ஆணும் பெண்ணும் பல படி வேறானவர்கள். பெண்ணின் எறவுஸ்ட் நிலையில் அவளிற்கு அவளைப் புகழ்வது மிகப்பிடிக்கும். அது ஒரு சிம்பனி என்று வைத்துக்கொள்ளலாம்.
 
'நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத்தொடங்குகிறேன்' என்ற கடைசிவரி, தன்நிலை எந்தச் சந்தேகமும் இன்றிப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதற்காகவே அற்புதமாக வை;ககப்பட்டிருக்கிறது.
 
இவ்வளவும் நடந்தது தெரியாமல் அவள் கணவன் அவள் விளக்கணைத்த சமையலறையில் விளைந்ததை உண்டு தூங்கிக் கிடக்கிறான். அவளது அகத்தின் திரைச்சீலை வலிந்து இழுத்து மூடப்படுகிறது.
 
இந்தக்கதையில் என்ன சிக்கல் என்றால், இந்தக் கதை பிறந்த இடம் பிரத்தியேகமானது. அந்தப் பிரத்தியேக இடத்தில் இதனைக் கதைசொல்லியால் தங்குதடையின்றிப் பேசமுடியும். ஆனால் பொதுக்களத்தில் போட்டபோது, எச்சரிக்கை உணர்வுகள் படைப்பை வெனறு கிளம்பி விடுகின்றன. அதனால் பூனையும் பேனையும் அனுசரிக்கப்படுகின்றன.
 
கதையின் அளவைத் தாண்டி ஏற்கனவே பொழிப்பு வந்து விட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் இன்னமும் பேசலாம்.
 
குறிப்பு: இது ஒரு வாசகனாய் எனது புரிதல் மட்டுமே. 

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் என்ட புத்திக்கு :huh: எட்டின வரை ஒரு கணவன் தனது மனைவியின் ஸ்பரிசத்திற்கு :lol: ஏங்குவதாக கதை எழுதப்பட்டு உள்ளது :unsure:

யாழ்வாலியின் பதிவை வாசித்ததும் தான் கணவன் அப்பாவியாய் கட்டிலில் நித்திரை கொள்கிறார் என புரிந்து கொண்டேன் :lol:
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாறா காப்பாத்துங்கோ..!!! படுக்கப்போனாலும் படுக்க முடியவில்லை.! "என்னைவிட உங்களுக்கு சகாறாத் தங்கச்சியின் கதைதான் முக்கியமோ...??" மனிசியின் புலம்பல் தாங்கமுடியவில்லை..!!!!!!

படுக்க

படுக்க...........

என்று எல்லா  இடமும் எழுதுகிறார்

எதுவாக  இருக்கும்...............?? :lol:  :D  :D

Edited by விசுகு

  • தொடங்கியவர்

முதலில என்னைக் காப்பாற்ற வழி தெரியேல்லை :icon_mrgreen:  இப்ப இவர் ஒருத்தர் தன்னைக் காப்பாற்று என்று புலம்புகிறார்... புலம்பலை சமாளிச்சு வன்முறையில் அகத்துடையாள் இறங்காமல் காப்பாற்ற ஏதாவது வழி தேடுவதை விட்டுவிட்டு மீண்டும்  மீண்டும் இங்கே திரிந்தால் பிறகு எங்களால் மட்டுமில்லை எவராலும் காப்பாற்ற முடியாது சொல்லீட்டன்...இந்தப்பக்கம் எட்டியும் பாக்கவேண்டாம்...நம்ம இலையான் கில்லர் திரிபதாதியைப்பார்த்து ஓட்டம் எடுப்பதுபோல் ஓடிப் போய்விடுங்கள் :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் என்ட புத்திக்கு :huh: எட்டின வரை ஒரு கணவன் தனது மனைவியின் ஸ்பரிசத்திற்கு :lol: ஏங்குவதாக கதை எழுதப்பட்டு உள்ளது :unsure:

ரதி

உங்கள் பார்வையில் கணவன்,

இசையின் பார்வையில் திரைச்சீலை

ரோமியோவின் பார்வையில் கிளுகிளுப்பான புத்தகம்

அர்யூனின் பார்வையில் பேனா

மல்லையின் பார்வையில் பூக்கன்று, சென்ட்பாட்டில்,பேனா?

பாஞ்சின் பார்வையில் இறக்கையின் வாரிசு????கிகி

கவிதையின் பார்வையில் அது..படைப்பாளியின் கரு எதுவோ அது….எதுப்பா????

தமிழினியின் பார்வையில் பேனா

நிலாக்கா பார்வையில் பேனா

சாந்தியின் பார்வையில் குழப்பம்

விசுகரின பார்வையில் தன்நிலை

சுமேயின் பார்வையில் பூனை

உண்மையிலேயே சொல்லப் போனால் இக்கதையை கற்பனைக்குள் உரித்தெடுக்கும்போது இவ்வளவு தூரத்திற்கு வாசிப்போரைச் சென்றடையும் என்று சற்றேனும் நினைக்கவில்லை. இது ஒரு எதிர்பாராத திணறல்தான். என் மீதான நட்பாலா அல்லது இக்கதைமீதான பார்வையால் பதிவிடல்களா என்பதையும் பிரித்தறிய முடியாமல் ஒரு திகைப்பில் என் நிலை…….

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆண் வாசகர்களை மட்டம் தட்டும் கதை..! எனது கண்டனங்கள். :lol::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் ஆழமான விமர்சனம் அற்புதமாக சகாராவின் கதையை உடைத்தெறிகிறது. நான் கூட காலை எழுதும்போது எண்ணினேன் மற்றவர் சார்ந்து தன்  முடிவை மாற்ருகிறாரோ என்று. ஆனாலும் எழுத முடியவில்லை.

தவறு கதையை செம்மைப்படுத்தி உயர்வைத்தந்திருக்கிறது... உடைத் தெறிய முடியாதபடி பலப்படுத்தியிருக்கிறது.. :wub:

இன்னுமொருவன் இவ்விடத்தில் இரண்டு விதமாக வெளிப்பட்டிருக்கிறார் ஒன்று தலைசிறந்த விமர்சகனாக இன்னொன்று தேடல் நிறைந்த வாசகனாக.. அவருடைய விமர்சனத்திற்கும் தேடலுக்கும் பதில் அளிக்கவேண்டிய நிலையிலிருக்கிறேன்... யாழின் சேர்வர் மாற்றத்தில் சற்று தாமதிக்கிறேன். :rolleyes:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் ஆழமான விமர்சனம் அற்புதமாக சகாராவின் கதையை உடைத்தெறிகிறது. நான் கூட காலை எழுதும்போது எண்ணினேன் மற்றவர் சார்ந்து தன்  முடிவை மாற்ருகிறாரோ என்று. ஆனாலும் எழுத முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

படுக்க

படுக்க...........

என்று எல்லா  இடமும் எழுதுகிறார்

எதுவாக  இருக்கும்...............?? :lol:  :D  :D

நீங்கள் பலே கில்லாடி...!. ஒப்புக்கொள்கிறேன்...!! :D

எழுதிவிட்டுத்தான் யோசித்தேன்! யாராவது வருவார்கள் என்று!! :rolleyes:

"நினைத்தேன் வந்தாய் நூறுவயது." :wub:

எல்லா எழுத்தாளர்களினதும் எழுத்துக்களில் ஒரு பகுதி சொந்த அனுபவம் மற்றயது துய படைப்பு. அதில் எது என்ன விகிதம் என்பது படைப்புக்கும் எழுத்தாளனுக்கும் மாறுபடும். 

வலவையின் கதையின் விமர்சனத்தில் இன்னுமொருவன் சற்று அதமிதியமாகவே ஆராந்திருந்தார்.

(வலவை மறுத்தாலும், ஏற்றாலும்) இதில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு இயல்பு மாற்றத்தை உறவுகளுடன்  பகிந்து கொள்ள தன்னை அறியாமல் இந்த கதை பாணியை தெரிந்தெடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதை விவரிக்க அவர் தனது சமையைல், குளியல் அறைகளை கொண்டுவந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். 

அதில் அவர் -ஒரு எழுத்தாளன் - ஒரு வீடு-  ஒரு இரவின் முடிவு என்று கதையை அமைக்கவில்லை. தனது பழைய "பலவற்றில் தோய்ந்த கலகலப்பான வாழ்க்கை" இப்போது திசை மாறி, சிலவற்றில் கடமையாக மட்டும் முடிந்துவிடுறது என்ற தனது புது அனுபவத்தை சொல்லத்தான் வந்தார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கதையில் வரும் பெண் வல்வை என்பதையும், காட்சிகள் அவரின் பொழுது முடிவடையும் விதம் என்றதை விளங்கிகொள்ள முடிந்தால் அவரின் முயற்சியின் பெரும்பகுதியை வெற்றியே. 

இது விடுகதையாக முடிந்துவிட்டதா அல்லது கதையாக இருக்கிறதா என்றது அவரின் சொல்ல வந்ததின் தோல்வி வெற்றியில் போய்முடியாது. அவர் சொல்லவந்தது அவரின் அனுபவனம். அது நன்றாக சொல்லப்படுகிறது. 

அது விடுகதையானதா அல்ல இன்னமும் கதையாக இருக்கிறதா என்பது யாழின் வாசகர்களின் தொழில் துரவுகளின் அவசியம் எவ்வளவில் இருக்கிறது என்பதை சுட்டும் அளவுக்கு, வல்வை பக்கத்தில் இருந்து எதையும் சுட்டாது. அவரின் பக்கத்தில் அது அவர் தெரிந்த உதாரணத்தில் இருந்த ஒரு சின்ன technical glitch என்பதற்கு மேல் போகாது.

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை ஒரு தலை சிறந்த எழுத்தாளர், கவிஞர் !

எழுத வேண்டும் என்ற 'தாகம்' அவரிடம் நிறைய உண்டு !

ஆனால், அவர் தனது கற்பனைகளைக் காகிதத்தில் துப்ப நினைக்கும் போதெல்லாம், எதுவோ ஒன்று இடைஞ்சலாக வந்து தடுத்து விடுகின்றது!

அதற்கு, முள்ளிவாய்க்கால் சம்பவங்களும், நம்பியிருந்த 'இந்தியா' என்ற நந்தியின் செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம்!

அதாவது அவரது எண்ணங்களுக்கு 'வடிகாலமைக்கும்' பேனா, நீண்ட காலமாகக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது!

தனது ஏக்கங்களையும், தாகங்களையுமே 'பேனாவின்' மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது எனது கணிப்பு!

தோற்றுப்போனவனை விடவும் 'துவண்டு போனவனின்' மனநிலையே, அவரது கதை மூலம் வெளிப்படுகின்றது!

மீண்டு வாருங்கள், எங்கள் அபிமான கவிதாயினியே! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"எனது கதை சொல்லாத எதையும் நான் கதைக்கு வெளியே சொல்லிவிட முடியாது"
 
அந்தக்கூற்று கதைசொல்லிக்கு மட்டுமே பொருத்தமானது. வாசகனிற்கு அல்ல. மனிதனை ஒத்த அகத்தோடான றோபோட்டை விஞ்ஞானத்தால் இப்போதைக்கு உருவாக்க முடியாது என்பது மட்டும் போதுமானது மனிதனின் அகத்தின் பிரமிப்பை உணர்த்துவதற்கு. 
 
மொழியினை அனைவரும் ஒருவாறு பயன்படுத்துவதில்லை. ஆழ்மனதின் வெளிப்பாடுகளை அடித்துக்கூறிவிட அனைவராலும் முடிந்துவிடுவதில்லை. இதனால் தான் ஒவ்வொரு நூலும் அதன் வாசகரளவு எண்ணிக்கையான பிரதிகளைக் கொண்டிருப்பதாகப் பேசப்படுகிறது. மொழி கலாச்சாரம் முதலிய அனைத்தும் அந்நியமான இரு மனிதர்களிற்கிடையே மொழியைத் தாண்டிய அதிர்வு சாத்தியப்படுகிறது. மனிதனிற்கும் விலங்குளிற்குமிடையே அதிர்வு சாத்தியப்படுகிறது. 
 
நான் நினைக்கிறேன், இயற்கையின் கூர்ப்பைப்போல, பொளிப்புரை இலக்கியத்தின் கூர்ப்பு. ஏதோ ஒன்று உள்ளிற்குள் பிசைய, படைப்பாளி அதனை ஏதோ ஒரு வடிவில் வைத்துவிடுகிறார். படைப்பாளி அந்தப் படைப்பை வைத்தநேரத்தில, உள்ளுரத் தனக்கிருந்த அந்த அதிர்விற்கு மட்டுமே அவர் உண்மையாக இருக்கிறார். அந்த அதிர்வின் பிரகாரம் ஏதோ ஒரு வகையில் அதை வெளிப்படுத்திவிடுகிறார். ஆனால், வெளிப்படுத்தியதன் பின்னர், தான் வெளிப்படுத்தியதற்குப் பொளிப்புரை வழங்க பிறிதொரு தருணத்தில் அவர் முயலின், அவரின் பொளிப்புரை கூட அவரது படைப்பிற்குக் காரணமான உணர்விற்கு உண்மையாக இருக்கமுடியாது (இதைத்தான் ஜெயகாந்தன் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்). அதற்கு இரு காரணங்கள். ஒன்று உள்ளார்ந்த அதிர்வை ஆட்டிகுலேட் பண்ணுவது எல்லோரிற்கும் எப்போதும் சாத்தியப்படுவதில்லை. இரண்டாவது, படைப்பை வெளியில் போட்டதன் பின்னர் பீட்பாக்லூப் ஆரம்பித்துவிடும் (அதாவது உள்ளுணுர்வு எப்படியோ பிறந்தது. அது படைப்பிற்குக் காரணமானது. அந்த வகையில் உள்ணுணர்வின் வெளிப்பாடு படைப்பு. ஆனால் படைப்புப் பிறந்த மாத்திரத்தில் படைப்பு, மீண்டும் உள்ணுர்விற்கு உள்ளீடாகத் தொடங்கிவிடும். ஆதனால் உள்ளீடு சற்று மாறி, புதிய வெளிப்பாடு தோன்றும்..இவ்வாறு வெளியீடு உள்ளீட்டில் மாறிமாறி செல்வாக்குச் செலுத்துவதையே பீட்பாக்லூப் என்று கூறியுள்ளேன்). இந்த பீட்பாக்லூப்பின் காரணம் ஒரு படைப்புச் சார்ந்து மற்றவர்களின் எதிர்வினை மட்டுமல்ல, எழுதியவரே தான் எழுதியதைப் படிக்கும் போது வாசகராகிவிடுகிறார்.
 
இந்தக் கதையில் கூட, பேனை, பூனை அது இது என்று ஏகப்பட்ட விடயங்களை, 'யாரின் பார்வையில் இக்கதை கூறப்பட்டது?' என்ற கேள்வி சார்ந்து சகாரா தற்போது அனுசரிக்கிறார். ஆனால் அந்தக் கேள்விக்கான பதில் உண்மையில் கதையிலேயே உண்மையாக இருக்கிறது. என்னபை; பொறுத்தவரை அது பேனையும் இல்லை பூனையும் இல்லை. ஆனால், பொளிப்புரையின் ஆதிக்கத்தில் கதை இப்போது மருவத்தொடங்கி விட்டது. கதை கருத்தரித்த புள்ளிக்கு எழுத்தாளர் மீண்டு உண்மையில் தனக்குத் தானே ஏன் இந்தக் கதை எழுதப்பட்டது என்று சிந்திப்பதற்கு இனிப் பிரயத்தனம் அதிகம் தேவைப்படும். பொளிப்புரைகளிற்கு முந்திய கதை மிக அழகாக இருந்தது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அந்தவகையில் கிருபனின் ஆதங்கத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்.
 
சகாரா கதைகளில் அவர் இணைக்கும் படங்களை எங்கிருந்து எவ்வாறு தேடிப்பிடிக்கிறாரோ தெரியாது. ஆனால் அவை அற்புதம். படம்பார் பாடம் படி என்ற எங்களின் பால பாடம் சார்ந்து இன்று எத்தனையோ ஆய்வுகள் ஆமாம் என்று தலையாட்டி ஆமோதிக்கின்றன. படங்களின் பங்கு உங்கள் கதைகளில் அபாரம்.

இன்னுமொருவன்,

முதலில் விமர்சனம் ஒன்றை முன்வைத்து இந்தப்படைப்பின் உருவாக்கத்தை தேட முயற்சித்திருக்கிறீர்கள் தலை வணங்குகிறேன். உங்கள் தேடலில் புலப்படாத ஏதோ ஒன்றை வாசிப்பாளர்களின் பதிவுகளுக்கூடாகவும் அதற்கு கருத்திட்ட என்னுடைய பதிவுகளூடாகவும் உங்கள் முயற்சி முன்னேறியிருக்கிறது. இந்த விமர்சகனின் பார்வை கூர்ப்படைந்து வெற்றி பெறுவது புறவெளியை விட்டு அகவெளியில் பயணிக்கும் போதுதான் வாசகரின் கேள்வி சார்ந்து அனுசரித்து பதில் வழங்கல் என்பது அவர்களின் கருத்தை ஏற்புடையதாக்கி இன்னும் அவர்களின் மனதில் தோன்றும் விடயங்களை அறியும் ஆவலாக இருக்கும் என்பது விமர்சகர் அறியாத ஒன்றல்ல. அடித்துச் சொல்லப்படும் கருவுக்குப் பன்முகம் கிடையாது. இதுதான் இன்னதுதான் என்று விட்டால் வாசகர் மேற்கொண்டு இப்படைப்புப் பற்றி பேச முன்வரமாட்டார். வாசகரை சிந்திக்கத் தூண்டி தேடலில் உட்கார்த்தி வைப்பது அவ்வளவு இலகுவான விடயமும் அல்ல…. தேடல் ஏற்படவேண்டுமானால் படைப்பு மீள மீள வாசிக்கத்தூண்டவேண்டும். பொழிப்புரைகள் விமர்சனங்கள் என்பன ஒரு படைப்பின் அடிப்படை நோக்கையே மாற்றிவிடக்கூடியன. பொழிப்புரைகளுக்குப் பின்னால் கதை மருவிவேறு உருவங் கொள்வதும் சாத்தியமானது. இப்போது இவ்வளவு கருத்துப்பதிவு பொழிப்புரைகளுக்குப் பின்னால் மீண்டும் ஆரம்பக்கதையை வாசிப்போமானால் என்னை இப்போது எந்தப் பொழிப்புரை அதிகமாக கவர்ந்திருக்கிறதோ அதுவே அந்தப்படைப்பில் தெளிவாகப் புலப்படுவதுபோல் தோன்றும். ஏனெனில் என்னை ஈர்த்திருக்கும் தன்மையை மட்டுமே அதிகமாக மனம் நாடச் சொல்லும். நான் எழுதும்போது இருந்ததை விட அனைவரின் கருத்துக்களையும் வாசித்தபின்னால் எனக்கே நான் எழுதியவை புதுமையாகவும் வெவ்வேறு பரிமாணம் கொண்டவையாகவும் காட்சி அளித்து மீள மீள வாசிக்கத்தூண்டுகிறது. நல்ல காலம் கதை சிறிதாக அமைந்துவிட்டது. நிச்சயமாக நீங்கள் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை. உங்களுக்குக் கிடைத்திருக்கும் அனுபவங்களினூடாகவே உங்கள் விமர்சனம் இவ்வளவு தெளிவாக வெளிவருகிறது என்பதை உணர முடிகிறது. அத்தோடு இந்த படங்கள் இணைப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்….ஒருவரை முதலில் கவர்வது காட்சி அதன் பின்னரே மற்றவை எவையாகிலும்….. மனதை வசைக்கும் காட்சிகள் தென்படும்போது சில கணம் அதனிடத்தில் நின்று நிலைப்பது உண்மைதானே… கதை வடிவங்களுக்கும் நிச்சயமாக காட்சி என்பது இன்றியமையாதது என்பது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.. அதைப்போல்தான் தலைப்புகளும்….. சும்மா கவனமின்றி ஏனோ தானோ என்று வாசிப்பவரையும் இதற்குள் என்ன இருக்கும் என்று உள் நுழைந்து வாசிக்கத் தூண்டுவதில் தலைப்புகளுக்கும் பெரும் பங்கு உண்டு. அதற்கு மேலே பதியப்பட்டிருக்கும் பதிவகளே நல்ல சாட்சி. நகைச்சுவையாகக்கூட நண்பர்கள் பதிவிட்டிருக்கலாம் இருப்பினும் அவர்களை அந்த தலைப்பு ஈர்த்திருப்பதனால்தான் குறும்பாகவும் அவர்களால் இங்கு வந்து பதிவை இட்டுச் செல்ல முடிந்திருக்கிறது…..

அடுத்து உங்கள் பங்கிற்கு வைத்த வாசகன் கருத்தைப்பற்றியும் தொடர்கிறேன்……. அதற்கு முன்னால் இன்னும் சிலருக்குப் பதிவிட்டுவிட்டு தொடர எண்ணுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளங்காத கதைகள் எத்தனையோ படித்திருக்கின்றோம். சில வேளைகளில் கதாசிரியர் நினைத்துப் பார்த்திராத விளக்கங்கள் கூட கதைக்குப் பொருந்தி வரும்! <_<

"எனது கதை சொல்லாத எதையும் நான் கதைக்கு வெளியே சொல்லிவிட முடியாது" என்ற ஜெயகாந்தன் சொல்லியிருப்பதாக அண்மையில் படித்திருந்தேன். :icon_idea: எனவே பதவுரை, பொழிப்புரைகள் எல்லாம் தேவையா?

பி.கு: நான் பச்சை போட்டது "வருடு" என்ற சொல் தந்த கிறக்கத்தினால்தான் :icon_mrgreen:

இது ரொம்பக் கொடுமை கிருமி :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பை ஏற்று வருடலாம் என்று வந்தேன்!! :D ஏமாந்து போனேன் :o

என்ன ஏமாற்றம்????

ஒரு மகவைத் தாய் வருடுவதில்லையா?

ஒரு தந்தை மகளின் தலையை வருடி பெருமிதம் கொள்வதில்லையா?

ஒரு அண்ணன் தங்கையின் தலையை வருடி பாசத்தைப் பொழிவதில்லையா?.....

இதில் என்ன ஏமாற்ம் உங்களுக்கு?

தாயானால் அச்சம் தொலைத்துவிட்டு அனைத்தையும் உங்களிடம் பேசலாம்

தந்தையானால் பணிவோடு அறிவுரைகளை நான் எதிர்பார்க்கலாம்

அண்ணன் என்றால் எல்லாவிடயத்திலும் ஏட்டிக்குப் போட்டியிடலாம்.....

இதில் எனக்கு நீங்கள் தாயா, தந்தையா, அண்ணனா? :lol:  :lol:  :D

இன்னுமொருவனின் விளக்கத்துடன் ஒத்துப் போகமுடிகின்றது. கதாசிரியர் படைப்பை உருவாக்குவதற்கான அதிர்வை படைப்பிலேயே தருவது இலகுவானதல்ல. சிறந்த மொழியாள்கை உள்ளவர்களாலேயே அதுமுடியும். அந்த வகையில் சகாறாவின் கதை சிறந்த மொழியாளுமையோடு விளங்குகின்றது. கதையா, விடுகதையா என்ற மயக்கத்தைத்தான் பின்னூட்டங்கள் தருகின்றன.

நன்றி கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ரொம்ம டூ மச்!!!

சகாரா அக்காவின் முத்திரையே தனி. ஒவ்வொரு படைப்பும் நளினமாகவும் புதுமையாகவும் இருக்கும். தொடக்கத்தில் ஒரு பீடிகையுடன் வந்து இறுதியில் வாசகர்களை ஒரு புதிய தளத்துக்குள் விட்டுச் சென்று விடுவா. மிகுதிக் காட்சிகளை வாசகனே உய்த்தறிந்துகொள்ளவேண்டும். அதுவே அவவின் படைபுக்களின் வெற்றி என எண்ணுகின்றேன். வாழ்த்துக்கள் அக்கா! :)

டூ மச் என்றால் என்ன? :unsure:

நன்றி வாலி...

உண்மையாக படைப்புகள் வெற்றி பெறுவது என்பது படைப்பாளியைக்காட்டிலும் வாசகரின் கைகளிலேயே தங்கி இருக்கிறது. உண்மையில் இங்கு பதிவிட்டவர்கள் ஆரம்பத்திலேயே நகைச்சுவையாக சில பதிவுகளை மேற் கொண்டதாலேயே இப்பதிவு இவ்வளவு தூரம் பேசுபொருள் ஆகியிருக்கிறது. விளங்காத பையன்மாதிரி இசை முழுசிக் கொண்டு ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து வந்தவர்களும் சேர்ந்து மெருகேற்றி உயர்த்தி விட்டிருக்கிறார்கள். உண்மையில் இங்கு பதிவிட்ட நண்பர்களுக்கும் பச்சைப்புள்ளிகளை வழங்கி எனக்குள் உற்சாகத்தை விதைத்த மற்றவர்களுக்கும் நான் இவ்விடத்தில் நன்றி உரைக்க கடமைப்பட்டுள்ளேன். :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வையின்.... எழுத்துக்களில் ஒரு, வீரியமும், திரிலும் இருக்கும்.

அதை... விட, அவ போடும்.. தலைப்பும் அழகானது.

வாழ்த்துக்கள்... வல்வை சகாறா. :)  

நன்றி தமிழ்சிறீ

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சின் பார்வையில் இறக்கையின் வாரிசு????கிகி[/size]

அதென்ன எனக்குமட்டும் நாலு கேள்விக்குறி????  வல்வை சகாறாவுக்கே விளங்காவிட்டால் நான் எந்த வளையில் போய் முட்ட...!!!! :o

புராதன காலத்தில், மடல் எழுதும் எழுதுகோலாக இருந்த பறவைகளின் இறக்கைதான் இன்று பேனாவாகப் பிறந்துள்ளது!...  இறக்கையின் வாரிசு!. :icon_idea:

உங்கள் கேள்விக்குப் பதிலளித்தேன்!. எங்கள் கேள்விக்குப் பதில் எப்போது வரும்?....  :(

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் பங்கிற்கு எனது புரிதலையும் வைத்து விடுகிறேன். உண்மை கதைசொல்லிக்கே வெளிச்சம்.
 
இந்தக்கதையினை முடிவு இப்படி இருக்கிறது: 'சாளரங்களின் திரைச்சீலையினை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த (உண்மையில் உறக்கத்திலிருந்த என்று எழுதியிருப்பின் இன்னமும் பொருந்தியிருக்கும் என்பது எனது அபிப்பிராயம்) துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத்தொடங்குகிறேன்'
 
ஒரு வரியில் சொல்வதனால், இரசிக்காது விடப்பட்ட எறவுஸ்ட்(இதுக்குத் தமிழ் தெரியவில்லை) பெண்மையின் பார்வையில் தான் கதை இருக்கிறது. அதனால் தான் கணவன் படுத்திருந்தான் என்பதைக் காட்டிலும் உறக்கத்திலிருந்தான் என்பது அதிகம் பொருந்தும் என்பது எனது அபிப்பிராயம்.
 
இந்தக் கதையின் ஆரம்பத்தில் வரும் சாளரமும் முடிவில் வரும் சாளரமும் முற்றிலும் வேறுவேறானவை. கதையின் ஆரம்பத்தில் கதைசொல்லி தனது வீட்டு ஜன்னல் ஊடாகத் தான் பார்த்துக்கொண்டு நிற்கிறார். வெளியில் காற்றும் பனிப்பூக்கள் போன்ற பனியும் கதைசொல்லிக்கு ஒரு தியானநிலையினை உருவாக்கி விடுகின்றன. 'எவ்வளவு நேரத்திற்குத் தான் இவற்றை ரசிப்பது?' என்ற இடத்தில் கதைசொல்லியின் அகம் ஆதிக்கம் எடுத்துக்கொள்கிறது. கதையின் முடிவில் மூடப்பட்ட திரைச்சீலை திறக்கப்பட்ட இடம் இது. 
 
அகத்தின் திரைச்சீலை திறக்கப்பட்ட பின்னர், அனைத்தும் அவள் தன்னைச் சார்ந்து தான் பேசுகிறாள். 'அவள் கரங்களின் தொடுகைக்காக மனதுள் ஏக்கங்கள் குமைந்து கொண்டிருந்தன' என்பது முதல் இவ்வாறு ஏகப்பட்ட மனந்திறந்த வசனங்கள் அவளது மனநிலையின் தாபத்தினையே பேசுகின்றன. புறக்கணிப்பு அல்லது அலட்சியப்படுத்தப்படல் அல்லது வேண்டாது விடப்படல் என்பன வேண்டுமாயின் எல்லோரிற்கும் தெரிந்திராததாய் இருக்கலாம், ஆனால் எறவுசல் அனைவருக்கும் பரிட்சயமான உணர்வு தானே. எறவுஸ்ட் நிலையில் அவள் தனது உணர்வை தன்னில் இருந்து பிரித்தெடுத்து ஒரு பிற மனிசி ஆக்கிப் பேசியுள்ளளாள். அவளிற்குள் அந்ததத் தருணத்தில் அது அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
 
எழுத்துநடை அற்புதமாக விரிகிறது. தானே சிருஸ்ட்டித்த பிறமனிசி சார்ந்து தன்னை அவள் ஒரு தேவதையாக வர்ணிக்கிறாள். இது இட்டுக்கட்டப்பட்டதல்ல. அவள் அத்தருணத்தில் தன்னை அப்படித் தான் உணர்கிறாள். வெண்டைக்காய் விரல், குளித்து விட்டு ஈர முடியுடன் இரவுடையில் வரல் என அனைத்திலும் உணர்வு கொப்புளிக்கிறது. 
 
பல ஆண்களிற்கு மயக்கம் பிறக்கும். காரணம் ஆணும் பெண்ணும் பல படி வேறானவர்கள். பெண்ணின் எறவுஸ்ட் நிலையில் அவளிற்கு அவளைப் புகழ்வது மிகப்பிடிக்கும். அது ஒரு சிம்பனி என்று வைத்துக்கொள்ளலாம்.
 
'நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத்தொடங்குகிறேன்' என்ற கடைசிவரி, தன்நிலை எந்தச் சந்தேகமும் இன்றிப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதற்காகவே அற்புதமாக வை;ககப்பட்டிருக்கிறது.
 
இவ்வளவும் நடந்தது தெரியாமல் அவள் கணவன் அவள் விளக்கணைத்த சமையலறையில் விளைந்ததை உண்டு தூங்கிக் கிடக்கிறான். அவளது அகத்தின் திரைச்சீலை வலிந்து இழுத்து மூடப்படுகிறது.
 
இந்தக்கதையில் என்ன சிக்கல் என்றால், இந்தக் கதை பிறந்த இடம் பிரத்தியேகமானது. அந்தப் பிரத்தியேக இடத்தில் இதனைக் கதைசொல்லியால் தங்குதடையின்றிப் பேசமுடியும். ஆனால் பொதுக்களத்தில் போட்டபோது, எச்சரிக்கை உணர்வுகள் படைப்பை வெனறு கிளம்பி விடுகின்றன. அதனால் பூனையும் பேனையும் அனுசரிக்கப்படுகின்றன.
 
கதையின் அளவைத் தாண்டி ஏற்கனவே பொழிப்பு வந்து விட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் இன்னமும் பேசலாம்.
 
குறிப்பு: இது ஒரு வாசகனாய் எனது புரிதல் மட்டுமே. 

கதையின் அளவைத் தாண்டி ஏற்கனவே பொழிப்பு வந்து விட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் இன்னமும் பேசலாம்.

சுத்த மோசமான வாசகப்பேனா போல் இருக்கிறது……….. :icon_mrgreen:  :icon_mrgreen: 

இந்த வாசகனின் அகவெளி அபாரம் ஆனால் ஒரு சிறு இழையில் தடம் புரட்டி படைப்பாளியை விழி பிதுங்க வைத்திருப்பது வாசகனின் சாமர்த்தியம். இவரென்ன இப்படி எழுதுகிறாரே என்று கோபத்திற்குப் பதில் இந்த வாசகனின் அகவெளி எழுத்தியலில் பிடிப்பு ஏற்படுகிறது… படைப்பாளி உபயோகித்த அதே யுக்தியை வைத்தே படைப்பின் அகவெளியை அலசியிருக்கிறது வாசகனின் பேனா. வாசகர்களைக் கலாய்க்க படைப்பாளி முன்வைத்த பொறியில் படைப்பாளியை மாட்டிவிட்டு நெஞ்சு நிமிர்த்துகிறது வாசகனின் பேனா. எப்போதுமே இன்னுமொருவன் முன்வைக்கும் விமர்சனமாகட்டும், வாசக எண்ணங்களாகட்டும் முத்திரை பதிப்பனவாகவே இருக்கின்றன.

எப்போதும் ஒரு படைப்பாளி என்பவர் அவர் கொடுக்கப்போகும் கருப் பொருளுக்குரிய அகவெளியைத் தனதாக உணர்ந்து எழுதினால்தான் அவர் எழுதும் படைப்பு வெற்றியடையும். செத்தவீட்டில் பிணமாக, திருமணவீட்டில் மணமக்களாக, பிரசவிப்பில் தாயாக, சனனத்தில் சிசுவாக, ஓடும் நதியினில் நீராக, ஏன் மனித உணர்வில் கலந்த நவரசங்களை எழுதமுனையும் வேளையில் சோகமாய், கோபமாய், தாபமாய், காதலாய், வெறுப்பாய், வியப்பாய், வீரமாய், பயமாய், சமநிலையாய் அவ்விடங்களுக்கு ஏற்ப எழுதும்போது அகவெளியில் அவ்வுணர்வுகளில் மூழ்கி எழும்போதுதான் சிறப்பான படைப்பிலக்கியம் தோன்றும் என்பதை சிறு இழையில் தடம்புரட்டி  திசை மாற்றக்கூடிய வாசகன் புரியாததல்ல.

இந்தக் கதையில் ஒரு ஆணாக படைப்பாளி மாறியிருப்பதை வாசகன் ஏற்றுக் கொள்ளவில்லை காரணம் வாசகனுக்கு புறநிலை பிம்பம் மனதிற்குள் ஆணித்தரமாக அமர்ந்திருப்பதாக இருக்கலாம். ஒரு ஆண் வருடலுக்கான தேடல்களுடன் அவாவுறும்போது நிச்சயமாக இவ்வுணர்வுகளைக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது…. வெளிப்படையாக சிலிர்ப்பதும், துளிர்ப்பதும், நிமிர்வதும், வீரியம் பெறுவதும் என்பதான சொற்கள் ஆண்களுக்கே உரித்துடையதாக சாரும் என்பதை வாசகன் அறியாதது போல் பாசாங்கு செய்வது எழுதிய என் மனதில் குறும்பான முறுவலை ஏற்படுத்துகிறது…..

வாசகரே ஒரு ஆணின் தொடுகை ஒரு பெண்மையை நாணவைக்கும், இந்நாணத்தினூடாக ஆணின் தேடலை இரட்டிப்பாக்கி நிமிர்வின்றி ஒடுங்கிய பெண்மைக்குள் உளவியல் தேடல் கொள்ளும் சிலிர்ப்பதும் , துளிர்ப்பதும் சாத்தியமானாலும் நிமிர்வும், வீரியமும் ஆண்மைக்கே சொந்தமாகி விடுகிறது. இவை என்னுடைய அக நுகர்வில் அறிந்தவை… அடக்கடவுளே…இதென்ன ஒரு வாசகனுக்குப் பதில் அளிக்க இன்னொரு படைப்பிற்குரிய வசீகரமாக சக்திகளை விரயம் செய்கிறேன். ஆதலால் இது பெருங்காதல் கொண்ட ஆணின் தேடலாக இப்படைப்பை உருவாக்க என்னையே ஆணாகப் பாவனை செய்து கொண்டேன்  ஊடல், கூடல் அறியாத பச்சைப்பாலகர்கள் இல்லைத்தானே. புறநிலை பிம்பத்தை அகத்திற்குள் போட்டுப் பார்க்காமல் அவ்விடத்தில் எதிர் பால் விம்பத்தை போட்டு பார்க்கும்படி வாசகப்பேனாவிறகு வேண்டுகோள் விடுக்கிறேன்… :rolleyes:  :rolleyes: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஆண் வாசகர்களை மட்டம் தட்டும் கதை..! எனது கண்டனங்கள். :lol::)

எப்பிடி நெடுக்கு?????

பத்தி பத்தியா எழுதியென்டாலும் விளக்கம் தாங்கோ  :icon_mrgreen:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை ஒரு தலை சிறந்த எழுத்தாளர், கவிஞர் !

எழுத வேண்டும் என்ற 'தாகம்' அவரிடம் நிறைய உண்டு !

ஆனால், அவர் தனது கற்பனைகளைக் காகிதத்தில் துப்ப நினைக்கும் போதெல்லாம், எதுவோ ஒன்று இடைஞ்சலாக வந்து தடுத்து விடுகின்றது!

அதற்கு, முள்ளிவாய்க்கால் சம்பவங்களும், நம்பியிருந்த 'இந்தியா' என்ற நந்தியின் செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம்!

அதாவது அவரது எண்ணங்களுக்கு 'வடிகாலமைக்கும்' பேனா, நீண்ட காலமாகக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது!

தனது ஏக்கங்களையும், தாகங்களையுமே 'பேனாவின்' மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது எனது கணிப்பு!

தோற்றுப்போனவனை விடவும் 'துவண்டு போனவனின்' மனநிலையே, அவரது கதை மூலம் வெளிப்படுகின்றது!

மீண்டு வாருங்கள், எங்கள் அபிமான கவிதாயினியே! :D

வருவதற்கான பெருமுயற்சியில்தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன எனக்குமட்டும் நாலு கேள்விக்குறி????  வல்வை சகாறாவுக்கே விளங்காவிட்டால் நான் எந்த வளையில் போய் முட்ட...!!!! :o

புராதன காலத்தில், மடல் எழுதும் எழுதுகோலாக இருந்த பறவைகளின் இறக்கைதான் இன்று பேனாவாகப் பிறந்துள்ளது!...  இறக்கையின் வாரிசு!. :icon_idea:

உங்கள் கேள்விக்குப் பதிலளித்தேன்!. எங்கள் கேள்விக்குப் பதில் எப்போது வரும்?....  :(

இப்பிடி ஏதாவது ஏடாகூடமாக குறியீடுகளைப் போட்டால்த்தானே நீங்கள் மறுபடியும் மறுபடியும் இங்கு வந்து அதனை அறியும் ஆவலில் நேரத்தைச் செலவிடுவீர்கள் :icon_idea: ..... அப்படி நடந்தால்தானே என்னுடைய அக்கையார் உங்களை நன்றாக மொத்து மொத்தென்று மத்தளம் வாசிக்கலாம். :D ... என்னுடைய அகவெளியில் மொத்துப்படும் மத்தளம் :lol: ஆகா... என்னமாய் தாளமிடுகிறது... அதை இரசிக்கக் கொடுத்து வைக்கவேண்டும். :wub:

உங்களுடைய கேள்வி என்ன எதற்கும் திரும்ப கேளுங்கோ.... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி நெடுக்கு?????

பத்தி பத்தியா எழுதியென்டாலும் விளக்கம் தாங்கோ  :icon_mrgreen:  

இதுக்கு பத்தி எல்லாம் தேவையில்ல.. பக்கங்களை எண்ணிப் பாருங்கோ. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி ஏதாவது ஏடாகூடமாக குறியீடுகளைப் போட்டால்த்தானே நீங்கள் மறுபடியும் மறுபடியும் இங்கு வந்து அதனை அறியும் ஆவலில் நேரத்தைச் செலவிடுவீர்கள் :icon_idea: ..... அப்படி நடந்தால்தானே என்னுடைய அக்கையார் உங்களை நன்றாக மொத்து மொத்தென்று மத்தளம் வாசிக்கலாம். :D ... என்னுடைய அகவெளியில் மொத்துப்படும் மத்தளம் :lol: ஆகா... என்னமாய் தாளமிடுகிறது... அதை இரசிக்கக் கொடுத்து வைக்கவேண்டும். :wub:

உங்களுடைய கேள்வி என்ன எதற்கும் திரும்ப கேளுங்கோ.... :icon_mrgreen:

ஆனாலும் இது ரெம்ப...... ரெம்ப... அதிகம். பாவம் நெடுக்குத் தம்பி.! பக்கங்களாக எழுதியும் பலனில்லை எனும்போது நான் எம்மாத்திரம் கவிதாயினியே..??  :o:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.