Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகன், சாந்தன் பேரறிவாளன் நிரபராதி தமிழர்கள் மூவரும் விடுதலை. நளினியும் விடுதலை. தமிழக அரசு முடிவு. முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Santhosam mikka makilchchi

  • Replies 82
  • Views 5.3k
  • Created
  • Last Reply

ஆஹா.... இன்னொரு காலை.. இன்னொரு சந்தோசமான செய்தி. ஜெயலலிதா அம்மையாருக்கும் மிகவும் நன்றி.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

The real brain behind the scene is always unseen,As such the real heroes are always unsung.... Vaiko is a behind the scenes hero in legal battles for many political issues of the Tamils in tamilnaadu.... History will remembers you forever anna...

 

 

1899972_10152075434003113_1784487514_n.j

  • கருத்துக்கள உறவுகள்

மிக மகிழ்ச்சியான செய்தி.. நல்லவேளை.. ஐயா ஆட்சியில் இல்லை.. இருந்திருந்தால் நீதிபதி சதாசிவத்தை குறை கூறியிருப்பார். :blink: என்னத்தைச் சொன்னாலும் அம்மாவுக்கு தைரியம் அதிகம்.. :D

தமிழகத்தின் நாடியைப் பிடித்துப்பார்த்து செயற்பட்டிருக்கிறார் ஜே.

Home Run!!!

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ அவர்களின் பல்வேறு போராட்டங்களில் அவருக்கும் அவரது உழைப்புக்கும் ஆறிவாற்றாலுக்கும் சட்ட் போராட்டத்திற்க்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி...அவர் மீதான ஒரு சில விமர்சனங்களுக்கு அப்பால் கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு, ஸ்டார்லைற் ஆலைக்கு எதிரான வழக்கு, விடுதலைபுலிகள் மீதான தடையை நீக்குதல், மரண தண்டனை எதிர்ப்பு என ஒரு வழக்குரைஞராக கறுப்பு அங்கியை மாட்டிக் கொண்டு கோட்டு படிகள் ஏறி அவர் நடத்தும் சட்டப் போரட்டத்தின் முக்கிய பலன் இது. முக நூலெங்கும் வியாபித்திருக்கும் அம்மாவின் தீர்மானதிற்க்குப் பின்னால் இருக்கும் நெடிய முட் பாதையை செப்பனிட்ட தலைமைத் தொழிலாளகளில் முக்கியமானவார் அவர்.. நன்றி ஐயா... ஈழப் போரின் இறுதி நாட்களில் வைக்கோவிடம் இந்த அறிவு நிலையைத்தன் எதிர்பார்த்தோம் ஆனால் அவர் உணர்வின் உருவமாக மட்டுமே அப்போது இருந்தார்...அவர் இனியும் மற்றவர்கள் போல் கையை உயர்த்தி அறிக்கைக் கோமானாக இருக்காமல் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பார்.

 

## Somee Tharan via FB

அம்மாவின் தந்திரமான முடிவு.

தேர்தல் நேரம் மகனும்,மகளும் வந்து கருணை காட்டுவதாக தகப்பனின் கொலையை கிளறி ஆதாயம் பார்ப்பார்கள்.

இந்த முறை இதே எதிர்மறையாக நேரு குடும்பம் மீது பாயும். அப்பாவிகளை அடைத்து வைத்து வாக்கு வாங்கினார்கள் என்ற பழி விழும்.

எல்லோரும் அம்மாவுக்கும், ஐயா வைகோவிற்கும் நன்றி மடல் அனுப்புங்கோ.

The real brain behind the scene is always unseen,As such the real heroes are always unsung.... Vaiko is a behind the scenes hero in legal battles for many political issues of the Tamils in tamilnaadu.... History will remembers you forever anna...

1899972_10152075434003113_1784487514_n.j

தமிழ் நாட்டு புலிப்படை தலை நிமிர்ந்து வீர நடை போடும் படம் அருமையோ அருமை.

எனக்கும் ஒரு மீசை வைத்து முறுக்கவேண்டும் போல் இருக்கிறது. :D

  • கருத்துக்கள உறவுகள்
மூவர் விடுதலை தொடர்பான வழக்கில் நேற்று வெளியான தீர்ப்பையடுத்து, இன்று தமிழக முதலமைச்சர், எழுவரையும் 3 நாட்களுக்குள் விடுதலை செய்ய வேண்டும். தவறினால், இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 432 இல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தானே அவர்களை விடுதலை செய்வேன் என்று அறிவித்துள்ளார். 
 
சட்டப்படி இது சாத்தியமில்லை என்பதே உண்மை நிலவரம். குற்றவியல் சட்டப் பிரிவு 432, சிறையில் வாடுபவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது என்பது உண்மையே. ஆனால், பிரிவு 435 இந்த அதிகாரத்தை மட்டுப்படுத்துகிறது. 
 
பிரிவு 435 இன்படி 1973 ஆண்டு இயற்றப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின் வரம்புகளை மீறியவையாக மத்திய அரசு இயற்றும் சட்டங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படும் அல்லது மத்திய அரசின் நிறுவனங்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வழக்குகளிலும், மாநில அரசு சுயேச்சையாக விடுவிக்கும் அதிகாரத்தையோ பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தையோ பிரயோகிக்க முடியாது. மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகே அத்தகைய முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று மிகக் குறிப்பாக வரையறுக்கிறது. 
 
மூவர் விடுதலை வழக்கோ இந்தியக் குற்றவியல் சட்டத்தின் வரம்புகளை மீறிய தடாவின் கீழ் விசாரிக்கப்பட்டது. சிபிஐ யால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை மேற்கொண்டது. ஆகையால், பிரிவு 435 இன்படி மாநில அரசுக்கு எழுவரை விடுவிக்க சட்ட நுணுக்கத்தின்படி அதிகாரம் கிடையாது. 
 
ஆனால், இந்த சட்ட நுணுக்களைப் புறக்கணித்து தமிழக முதலமைச்சர் விடுவித்திருக்கும் அறிவிக்கை, மிகச்சாதுர்யமான அரசியல் காய் நகர்த்தல் என்பதை கவனத்தில் இருத்த வேண்டும். 
 
இத்தகைய அறிவிப்பை வெளியிட்டதன் மூலம், முதலமைச்சர் அனைத்து தமிழர் தரப்பின் ஆதரவையும் தன் பக்கம் திருப்பிக் கொண்டுள்ளார். இனி, மத்திய அரசு இச்சட்ட நுணுக்கத்தை காரணம் காட்டி விடுதலையை மறுத்தால், ஒட்டுமொத்த கோபமும் காங்கிரசுக்கு எதிராகத் திரும்பும். நெருக்கடியில் இருந்து தப்பிக்க விடுதலை செய்தாலும் அதன் பெருமையும் முதலமைச்சரையே சேர்வதாக இருக்கும். 
 
அவ்வகையில், முதலமைச்சரின் இன்றைய அறிவிப்பு சாதுர்யமானது மட்டுமல்ல தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் நலனிற்குமே எதிரானதாகும். திசை திருப்புவதாகும். 
 
இவற்றைக் கவனத்தில் கொண்டு நிதானத்துடன் நிலைமையை சீர்தூக்கி மதிப்பிட்டு நமது அரசியல் கோரிக்கைகளை நகர்த்துவதே நமது நலன்களுக்கு நல்லது என்பதை மனம் கொள்ள வேண்டும். 
 
குறிப்பு: காலையில் இருந்து அனைவரையும் போல நானும் மகிழ்ச்சியாகவே இருந்தேன். மதிய அளவில் நண்பர் Sala Marx தொடர்பு கொண்டு இவ்விடயம் குறித்து எச்சரித்தவுடன், தொடர்பான ஆவணங்களை வாசித்து பரிசீலனை செய்து இதை எழுதுகிறேன். நண்பருக்கு எனது நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
 
 
___________________
 
"Lawyer Yug Mohit Chaudhry who represented three convicts whose sentences were commuted by the Supreme Court yesterday said they could be released only after the Centre was consulted since the prosecution was done by a central agency." 
 
இதைத்தான் விளக்கியிருந்தேன். இப்போது மூவரின் வழக்குரைஞரே இதை வலியுறுத்தியிருக்கிறார். கவனியுங்கள்!
 
 
## Valar Mathi via FB

 

காலம் தாழ்த்தப்பட்ட முடிவாயினும் இப்போழுதாவதே விடுதலை பெற போகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

ஜெயலலிதா தேர்தலை முன்னிட்டு இந்த முடிவை எடுத்தாலும் நன்றி கூறியே ஆக வேண்டும்.

 

ஆனாலும் விடுதலை செய்யப்பட்ட பின்னரே மகிழ்ச்சியடைய முடியும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடுதலையை ஈழ விடுதலையின்  முதல் படியாகவே பார்க்கிறேன் : சீமான்

 

ராஜீவ்காந்தி கொலை  வழக்கில் 23 வருடங்கள் சிறையில் இருந்த முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகியோர் தூக்குத்தண்டனையில் இருந்து விடுதலை செய்யப் படுகிறார்கள்.
 

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். 23 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் போராட்டத்துக்கும், தங்கை செங்கொடியின் உயிர் தியாகத்துக்கும் கிடைத்த வெற்றி. தலைமை நீதிபதி சதாசிவம், மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி ஆகியோரின் பங்கும் 7 பேரின் விடுதலையில் மகத்தானது.
 

போராட்டமும், புரட்சியும் எப்போதும் தோற்றுப் போகாது என்பதற்கு இந்த விடுதலையே உதாரணமாகும். அற்புதம் அம்மாளின் மனநிலையில் இருந்து தாய் போல தமிழக முதல்–அமைச்சர் சிந்தித்து பார்த்திருக்கிறார்.
 
அதனால் தான் கோரிக்கை வைக்கும் முன்னரே விடுதலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை தமிழ் தேசியமே வரவேற்கிறது. இந்த விடுதலையை ஈழ விடுதலையின் முதல் படியாகவே பார்க்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=116751


தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்து இனத்தின் மானம் காத்த  முதல்வருக்கு நன்றி :
இயக்குநர் சேரன்
.

 

seran%20jayalalitha.jpg

 

 

திரைப்பட இயக்குநர் சேரன் தனது முகநூல் பக்கத்தில்,  ‘’மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது.. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள்... நிறைய அமைப்புகள் விடுதலை வேண்டி போராட்டம் நடத்தியது.  செங்கொடி என்ற இளம்வயது தங்கை தீக்குளித்தாள். 


இதெல்லாம் தாண்டி ஒரு தாய் தன் மகனை இளம் வயதில் எதெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அதையெல்லாம் தொலைத்துவிட்ட மகனை மீட்க 23 வருடங்கள் தொடர்ந்து சிறைக்கும் வீட்டுக்கும் நடந்திருக்கிறாள்.  அது எவ்வளவு துயரம் எவ்வளவு கடினம் என்று யாருக்கும் தெரியாது.

தன் மகன் தனக்கு மீண்டும் வருவான் உயிரோடு என்ற நம்பிக்கையில் காத்திருந்த, பார்க்கும் தலைவர்களிடம் எல்லாம் கதறி அழுத அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி என்பதே உண்மை.
 

எத்தனை முறை நடந்தார் எத்தனை மைல் நடந்தார் என்பதை யார் அறிவார்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு மூவருக்கும் தூக்கு உறுதி என கோர்ட்டும் மத்திய அரசும் உத்தரவிட்டபோது இந்த தாய் எப்படி துடித்தாள் என்பதை அருகில் இருந்து பார்த்தேன்.  கிட்டதட்ட மரணக்குழிக்கு அருகில் சென்று வந்திருக்கும் மூவரின் உயிரையும் மீட்டுகொண்டுவந்த அந்த தாய்க்கு முதல்வணக்கம்.  இதில் பங்கெடுத்த அனைத்து தமிழர்களுக்கும் தலைவர்களூக்கும் என் நன்றிகள்.


முக்கியமாக தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்து இனத்தின் மானம் காத்த மூவரின் உயிர்காத்த தமிழக முதல்வருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=116762

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஈழத்தை இதற்குள் இழுக்காமல் கதைத்திருக்கலாம். தப்பில்லை. ஆனால் விவாதப்படும் ஒரு விடயம் மட்டுமல்லாமல், சரி, பிழை பார்க்கப்படும் தருணத்தில் ஈழத்தை இழுப்பது எதிர்தரப்பாக இருப்பவர்களுக்கு வாய்ப்பைக் கொடுப்பதோடு, முரண் அரசியலை உருவாக்கிவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
அது ஒரு நீண்ட கடினமான பாதை.......
 
இன்று வரை அவரை நான் பார்த்ததில்லை, அவர் எந்த ஊர் என்று கூடத் தெரியாது, ஆனாலும், அவர் மீது காரணமற்ற ஒரு மிதமான அன்பு இருந்து கொண்டே இருந்தது எப்போதும், கால வெள்ளத்தில் அந்த மனிதரின் தலைக்கு மேலே தொங்கிய தூக்குக் கயிற்றின் உறுத்தலும், அழுத்தமும் எனது வாழ்வின் கணங்களிலும் நுழைந்திருந்தது.
 
2008 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வராய் இருந்த கலைஞருக்கு கைகளைக் கீறிக் குருதியில் தோய்த்து ஒரு கடிதம் எழுதினேன், தமிழகத்தில் இல்லையென்றாலும் வாழ்கிற பெங்களூர் மாநகரில் என்னால் இயன்ற போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறேன், பல்வேறு தமிழ் அமைப்புகள் நிகழ்த்திய போராட்டங்களில் தவறாது கலந்து கொண்டிருக்கிறேன். 
 
அன்றைய கர்நாடக காவல்துறை இணை ஆணையர் (டாக்டர் ரமேஷ்) அலுவலகத்தில் அவரோடு ஒரு மணி நேரம் விவாதம் செய்து அனுமதி பெற்றுப் போராடி இருக்கிறேன், கர்நாடக உளவுத் துறை அதிகாரிகளால் மிரட்டப்பட்டிருக்கிறேன். 
 
இன்றைய தமிழக முதல்வரின் தீர்மானம் என்னைப் போல தனது மொழியின் மீதும், தனது சமூகத்தின் மீதும் அன்பு கொண்ட எண்ணற்ற மனிதர்களின் கூட்டுழைப்பில் உருவானது, இதனை என்னுடைய வாழ்வின் நிறைவான வெற்றியாகவும் என்னால் பார்க்க முடிகிறது. இந்த வெற்றி முகமறியாத பல மனிதர்களின் உழைப்பிலும், தீவிர எண்ணங்களாலும் உருவாக்கப்பட்டது என்று நான் முழுமையாக நம்புகிறேன். 
 
நான் வாழ்கிற வாழ்க்கை நிறைவான சமூக அக்கறை கொண்ட வாழ்க்கை என்கிற பெருமிதம் இந்தக் கணங்களில் தோன்றுகிறது, இந்த நேரத்தில் விழித்திரைகளில் பலரது முகங்கள் நிழலாடுகிறது. 
 
தூக்கு விதிக்கப்பட்ட மனிதர்களில் பெரும்பாலானவர்கள் குற்றமற்றவர்கள் என்று முதல் நாளில் இருந்து இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிற எனது தந்தையார், முதல் நாளில் இருந்து இன்று வரை போராடும் திரு.வை.கோ, வழக்கை நிதிச் சிக்கல்களில் இருந்து காப்பாற்றிய ஐயா.நெடுமாறன்.
 
பிறகு தமிழக வீதிகளில் மூவரின் விடுதலையை ஒரு அரசியல் பொருளாக மாற்றிக் காட்டிய அண்ணன் சீமான், தொடர்ந்து இடை விடாது குரல் கொடுத்து வந்திருக்கிற அண்ணன் திருமா, இணையத்தில் பல சறுக்கல்கள் இருந்தாலும் திரும்பத் திரும்ப எழுந்து தனது குரலைப் பதிவு செய்யும் தம்பி பாக்கியராசன், வழக்கறிஞர் மணி செந்தில். 
 
இன்னுயிர் ஈந்த செங்கொடி, முத்துக்குமரன், வழக்கறிஞர் கயல், மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி, ராஜ்குமார் பழனிச்சாமி, Save Tamils இயக்கத்தின் பெங்களூர் செயல்வீரர் நற்றமிழன் பழனிச்சாமி, வழக்கறிஞர் ஸ்ரீதர், ஐயா தமிழ்மறவன், தமிழ் மக்களின் அரசியலுக்கு ஒரு புதிய அடையாளம் கொடுத்த புதிய தலைமுறையின் திரு. பாரிவேந்தர் (பச்சமுத்து), ஒரு நாள் முழுதும் போராட்ட களத்தில் இருந்த எனது அன்பு மகள் நிறைமொழி, போராட்டங்களுக்குச் செல்கிற போதெல்லாம் தடை சொல்லாத துணைவியார் இன்னும் எண்ணற்ற முகங்கள்.
 
இவர்கள் எல்லோரையும் இப்போதே சந்தித்து கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது இப்போது, ஆனாலும், அவரவர் வாழ்வின் பாதையில் ஓடிக் கொண்டிருப்பார்கள், என்னைப் போலவே, இறுதியாக எனது பல்லாயிரம் ஆண்டு கால மொழியின் இந்தச் சொற்களில் அவர்கள் அனைவரும் இணைந்தே இருப்பார்கள், தமிழே எம்மை இணைக்கிறது எல்லா வேறுபாடுகளில் இருந்தும்.
 
தமிழக முதல்வர் அம்மாவுக்கும், பாசப் போராட்டம் நிகழ்த்தி வென்று காட்டிய அற்புதம் அம்மாவுக்கும் நன்றியெல்லாம் கிடையாது ஒரு ராயல் ஓ. பி. எஸ் பாணிக் கும்பிடு, கலைஞரையும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல வச்ச உங்க டைமிங் சென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, 
 
சோ. ராமசாமி, சுப்புரமணியசாமி, அமெரிக்க ஆப்ரிக்க நாராயணசாமிகள், காங்கிரஸ் கொரடா மொரடா A B C D E F G H இளங்கோவன் போன்ற இன விரோதக் காமெடி பீசுகளுக்கு ஒரு வேண்டுகோள் "எங்களை ஒன்றிணைக்க இன்று போல் என்றும் ஓயாது நீங்கள் பாடுபட வேண்டும்".
 
"விடுதலை என்பது யாராலும் உங்களுக்கு வழங்கப்படுவதல்ல, நீங்களே போராடிப் பெற்றுக் கொள்வது" என்கிற யாரோ ஒரு அறிஞனின் சொற்கள் நினைவுக்கு வருகிறது.
 
The intellectual bench of tamil political groups & alliances get the entire credit. Cheers to all.
 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்

கொல்லப்பட்டுவிட்டதாக  கருதப்பட்ட மூவரை 

உயிருடன் கண்டால் வரும் சந்தோசம் வருகிறது.

அவர்கள் வசந்தம் வீசவும்

தங்களுக்கான  ஒரு வாழ்வை நிம்மதியாக வாழவும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலையில் வீண் பழி சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை - சத்தியம் தொலைக்காட்சியின் பார்வை

 

 

சந்தோசமான செய்தி !

ஜெயலலிதா அம்மையாருக்கும் மிகவும் நன்றி.

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். மேலே இசை அண்ணா கூறியது போன்று கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் இவ்விடயத்தை தடுத்து தனது இந்திய விசுவாசத்தைக் காண்பித்திருப்பார். ஜெயலலிதா அம்மையார் துணிச்சலாக முடிவு எடுத்திருக்கின்றார். அவருக்கு உலகத் தமிழினம் நன்றி கூறி நிற்கின்றது.

ராஜீவ் கொலையில் வீண் பழி சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை

சூட்டொடு சூடாக, பென்னாம் பெரிய தொகை காசு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படவேண்டும்...

நல்லது. ஆனால் நம்பமுடியவில்லை.

 

துன்பம் ஒருநாள், இன்பம் இன்னொருநாள்.

 

வடக்கு கிழக்கிலிலும் வெடி கொழுத்தி கொண்டாட்டடும்.

 

இனி மதுரையை எரித்த முல்லைதீவு வற்றாப்பளை அம்மன் கோவிலில் முள்ளை முள்ளால் எடுத்த தேவதை செங்கொடிக்கும் சிலை வைத்து வணங்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். மேலே இசை அண்ணா கூறியது போன்று கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் இவ்விடயத்தை தடுத்து தனது இந்திய விசுவாசத்தைக் காண்பித்திருப்பார். ஜெயலலிதா அம்மையார் துணிச்சலாக முடிவு எடுத்திருக்கின்றார். அவருக்கு உலகத் தமிழினம் நன்றி கூறி நிற்கின்றது.

 

இது தான் உண்மை... அந்த ---- தானும் ஒரு ஆள் என்று இப்ப அறிக்கை விடுது....கட்டு மரத்தை இப்ப ஒருதரும் மனிசரா மதிக்கிறது இல்லை...

Edited by நிழலி
ஒருமையிலும் அநாகரீகமாகவும் எழுதப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சூட்டொடு சூடாக, பென்னாம் பெரிய தொகை காசு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படவேண்டும்...

 

குற்றச்சாட்டில் இருந்து அவர்கள் விடுதலை பெறவில்லை என்பதைக் கணக்கில் கொள்க. அவர்கள் விடுதலையாவது கருணை மனு தொடர்பான கால இழுத்தடிப்பினால்...

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நாட்களுக்குள் மத்திய அரசு தமது முடிவை அறிவிக்கவேண்டும் அல்லது தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யும் என்றுதான் ஜெயலலிதா கூறி உள்ளார் அப்படி என்றால் மூன்று நாட்களுக்குள் காங்கிரஸின் மத்திய அரசு கைதிகளை விடுவிக்க முடியாது என்று முடிவை அறிவிக்குமானால் அப்பொழுது தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு மயக்கமான நிலையே இருக்கிறது.. அத்துடன் உள்துறை அமைச்சகம் எங்கள் அனுமதியில்லாமல் கைதிகளை விடுவிக்க முடியாது என்று ஒரு அறிக்கை வேறு விட்டிருக்கிறது....தெளிவில்லாத மிகக்குழப்பமானதொரு சூழல் கைதிகள் விடுதலை தொடர்பில் நிலவுகிறது என்பதுதான் உண்மை.. :(

  • கருத்துக்கள உறவுகள்

விடுவிப்பார்கள் என்றே நினைக்கின்றேன். மத்தியில் உள்ள சிலர் உணர்வுரீதியான பதில்களைத் தான் சொல்கின்றார்கள். ஆனால் உள்துறை விடுவிக்க மறுத்தால் திரும்ப அதற்காக வழக்குப் போடும் வாய்ப்பு வரலாம். ஏன் விடுவிக்க முடியாது என்பதற்காக?   மற்றும்படி தீர்ப்பில் கூட நீதிபதி விடுவிப்பது தொடர்பாகச் சொன்னது கூட, இப்படி ஏதாவது இழுபறி நிலைக்கு வரக்கூடாது என்பதற்காக இருக்கலாம்.  நேரடியான சந்தேகநபர்களாகக் கூட  இவர்கள் இல்லை என்று எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களுக்குக் கூடத் தெரியும். ஆனால் அதை அகம்பாவ எண்ணத்தோடு தான் நோக்குகின்றார்கள் போலுள்ளது...

Edited by தூயவன்

மிகவும் நல்ல செய்தி .

ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

1743563_215484401985593_1029460341_n.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசாரும்

சோனியாவும் அடக்கி  வாசிக்கவேண்டிய  சூழ்நிலை  தமிழகத்தில்  இன்று

எனவே

நம்பிக்கை  கொள்ளலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.