Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றோகன் குணரத்தின அவர்களுக்கு எதிரான அவதூறு வழக்கில் கனடிய தமிழர் பேரவைக்கு 53,000 டொலர்கள் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

றோகன் குணரத்தின அவர்களுக்கு எதிரான அவதூறு வழக்கில் கனடிய தமிழர் பேரவைக்கு 53,000 டொலர்கள் இழப்பீடு:நீதிமன்றம் உத்தரவு photo.png 

[Wednesday, 2014-02-19 12:52:47]
CTC-Press-Conference-180214seithycom-200

மே 2009 இல் வட சிறீலங்காவில் அரசு மேற்கொண்ட இறுதி இராணுவத் தாக்குதலில் அய்யன்னா சபையின் மதிப்பீட்டின்படி 40,000 - 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு முன்னர் சிறீலங்கா அரசு எல்லாத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களையும் மற்றும் தங்களுடன் கருத்து மாறுபட்ட அல்லது எதிராகப் பேசியவர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியது. சிறீலங்கா அரசு தனக்குள்ள பரந்துபட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்குலக அரசுகளதும் பொது மக்களதும் ஆதரவை வென்றெடுக்க இந்தத் தந்திரத்தை மேற்கொண்டது.

  

அதன் நிமித்தம் தனது பல்வேறு தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரக அலுவலகர்கள், செல்வாக்குத் திரட்டும் நிறுவனங்கள், அனுதாபிகள் மற்றும் முகவர்களைப் பயன்படுத்தியது. சிறீலங்கா அரசு மற்றும் அதன் அனுதாபிகளது இத்தகைய பரப்புரை பல தமிழர்கள் மீது மிக ஆழமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது. இந்த நிலை இன்றும் நீடிக்கிறது.

இப்படியான கறைபூசலில் ஈடுபவர்களில் சிறீலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட கல்விமானும் "பயங்கரவாதம் பற்றிய நிபுணர்" எனப் பெயரெடுத்த றோகன் குணரத்தின ஒருவராவர். இவர் சிங்கப்பூர், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு மையத்தின் தலைவர் (head of the International Centre for Political Violence and Terrorism Research at Nanyang Technological University in Singapore) ஆவர்.

2011 ஆம் ஆண்டு பெப்ரவரி இல் லக்பீம ஊடகம் "குணரத்தின இறுதிப் போரில் 1,400 பேர் மட்டுமே இறந்தார்கள், கனடா தமிழீழ விடுதலைப் புலிகளின் குகையாகத் தோற்றம் கொண்டுள்ளது என எச்சரிக்கிறார்" எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. மேலும் லக்பீம, குணரத்தினா சொன்னதாக அவரை மேற்கோள் காட்டி "தமிழீழ விடுதலைப் புலிகள் கனடிய தமிழ்க் காங்கிரஸ் என்ற பெயரில் இயங்குகிறது. இந்த அமைப்பு கனடாவில் உள்ள புலிகளது முக்கிய முகப்பு அமைப்பாகும்." தொடர்ந்து குணரத்தின "கனடிய அரசுக்கு இது தெரியும். இப்போது கனடிய அரசு அதுபற்றிய விசாரணையை மேற்கொண்டுள்ளது" எனச் சொன்னார்.

இப்படி அப்பட்டமான பொய்க் கூற்றுக்கள் பற்றி தெரியவந்தவுடன் - ஊடகங்களின் எதிர்மறை கவனிப்புக்கு மத்தியில் - கனடிய தமிழர் பேரவை றோகன் குணரத்தினத்துக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுத்தது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட பின்னர் சனவரி 01, 2014 இல் ஒன்ரேறியோ உயர் நீதிமன்ற நீதியரசர் Stephen E. Firestone கனடிய தமிழர் பேரவைக்கு சாதகமா தீர்ப்பு வழங்கினார். குணரத்தினா, கனடிய தமிழர் பேரவைக்கு 37,000 டொலர் பொது இழப்பாகவும் 16,000 டொலர் வழக்குச் செலவாகவும் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

தனது எழுத்து மூல காரணங்களில் நீதியரசர் Firestone "(குணரத்தின) கூறியவை நேரிடையாக அல்லது இழிவு படுத்துமுகமான தெளிவான அவதூறாகும். காரணம் கனடிய தமிழர் பேரவை வன்முறை மற்றும் சட்டத்துக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது எனச் சுட்டின. மேலும் "இந்தக் கூற்றுக்கள் அய்யப்பாட்டுக்கு இடமில்லாதவை. மறுத்துரைக்க முடியாதவை. உண்மையில் அவை ஆதாரமற்றவை. உண்மைக்கு மாறானவை" நீதியரசர் குறிப்பிட்டார்.

கனடிய தமிழர் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி வரவேற்றார். தொடர்ந்து "நீதிமன்றத்தின் தீர்ப்பு கனடிய தமிழர் பேரவை, அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரது நேர்மையை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு இனக் குழுமத்தை அழிப்பதற்கு உள்ள சரியான வழி என்னவென்றால் அந்தக் குழுமத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எங்கே தங்களை பயங்கரவாதத்தின் அனுதாபிகள் என்றோ அல்லது பயங்கரவாதிகள் என்றோ முத்திரையிடப்பட்டு விடுவோமா என அச்சப்பட வைப்பது ஆகும்" என பூபாலபிள்ளை சொன்னார். "சிறீலங்கா அரசும் அதன் அனுதாபிகளும் நீண்ட காலமாக தமிழர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி வந்துள்ளார்கள். இப்போது கிடைத்துள்ள நீதிமன்றத் தீர்ப்பு கனடிய தமிழர் பேரவைக்கு அல்ல தமிழ்மக்களுக்கே சொந்தமான வெற்றியாகும்.

கனடிய தமிழர் பேரவையின் சட்ட வழக்கறிஞர் டானியல் இனி (Daniel Iny of Sack Goldblatt Mitchell LLP) பேசும் போது "ஆதாய நோக்கற்ற கனடிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கு அதன் நற்பெயரும் நாணயமும்தான் உயிர்நாடி. கனடிய தமிழர் பேரவைக்கு அவமானம் தேடித்தருவதாக குணரத்தினாவின் கூற்றுக்கள் அமைந்திருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது கனடிய தமிழர் பேரவைக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் ஆறுதல் தருவதாக உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இன்னும் இரண்டு வாரத்தில் அய்க்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட இருக்கிறது. சிறீலங்காவின் மனித உரிமை நிலைமை பற்றி பன்னாட்டு நாடுகளது கூடுதலான கவனத்தை மனித உரிமைப் பேரவை மீண்டும் ஈர்த்துள்ளது. போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய கவனத்தைத் திசை திருப்புவதற்கு சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான தனது பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நெருக்கடியான கட்டத்தில் தமிழர்களது படிமத்தை சிறீலங்கா மற்றும் அதன் அனுதாபிகளால் கறைப்படுத்த எடுக்கும் முயற்சியை முறியடிக்க கனடிய தமிழர் பேரவை தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தும் என்பதை அறியத்தருகிறது.

ஊடக உசாவல்களுக்கும் நேர்காணல்களுக்கும் கனடிய தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளையோடு தொடர்பு கொள்ளவும்.

தொ.பே. எண் 905 -784 -7034.

கனடிய தமிழர் பேரவையின் தலைமையகம் 416 - 240 -0078.

 

CTC-Press-Conference-180214seithycom%20(

 

 

CTC-Press-Conference-180214seithycom%20(

 

 

CTC-Press-Conference-180214seithycom%20(

 

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103978&category=TamilNews&language=tamil

நல்லதொரு தீர்ப்பு சரியான நேரத்தில் கிடைத்திருக்கு 

 

இதை பகிரங்கப்படுத்துவதோடு பிறநாட்டு பிதிநிதிகளுக்கும் சார்பற்ற அமைப்புக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

கனடிய தமிழர் பேரவைக்கு மிக்க நன்றி.

லொடக்கு வாயன் ரோகன் ஜெனோசைட்ரத்னா இனி வாயை திறக்க யோசிப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
சரியான காத்திரமான நடவடிக்கை. கனேடிய தமிழ் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!
 
இனி சிங்கப்பூர் பயங்கரவாதி புரபசர் காசு தரமுடியாது என்று இழுத்தடிப்பார். மேல் முறையீட்டுக்கும் போகலாம்.
 
ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்ட ஊழியரை நீங்கள் வேலையில் வைத்திருக்கலாமா என நன்யாங் பல்கலைக்கழகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 

சரியான காத்திரமான நடவடிக்கை. கனேடிய தமிழ் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..!
 
இனி சிங்கப்பூர் பயங்கரவாதி புரபசர் காசு தரமுடியாது என்று இழுத்தடிப்பார். மேல் முறையீட்டுக்கும் போகலாம்.
 
ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்ட ஊழியரை நீங்கள் வேலையில் வைத்திருக்கலாமா என நன்யாங் பல்கலைக்கழகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 

 

மிகவும் சாத்தியமான விடயம் இசை அண்ணா.

ஒரு சர்வதேச குற்றவாளியை பதவியில் வைத்திருப்பதை கண்டித்து உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் நான்யாங் பல்கலைகழகத்திற்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமல்ல சிங்கப்பூர் அரசுக்கும் அழுத்தம் கொடுத்து ரொஹானை சிங்கபூரிலிருந்து துரத்த வேண்டும். 

மிகவும் சாத்தியமான விடயம் இசை அண்ணா.

ஒரு சர்வதேச குற்றவாளியை பதவியில் வைத்திருப்பதை கண்டித்து உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் நான்யாங் பல்கலைகழகத்திற்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமல்ல சிங்கப்பூர் அரசுக்கும் அழுத்தம் கொடுத்து ரொஹானை சிங்கபூரிலிருந்து துரத்த வேண்டும்.

உங்கள் திட்டங்களை அமோதிக்கிறேன்.

மற்றும் கனடாவில் காவி திரிந்த அல்லகைகளையும் கவனிக்கவேண்டும்.

இப்பவே ஒரு மினஞ்சல் போட்டுவிட்டேன்(ஓசி தானே தட்டி தள்ளுங்கள்.)

யாரங்கே, அழையுங்கள் எங்கள் பிரச்சார பீரங்கிகள் துளசியையும், சுபேசையும்.

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தை செலுத்தா விட்டால் நோண்டி நொங்கெடுத்து காயப் போட பல வழிகள் இருக்கு. யூதர்கள் இந்த மான நஷ்ட வழக்கு வழிகளைப் பயன் படுத்துவது போல நாங்களும் இப்ப ஆரம்பித்திருக்கிறோம். நல்ல அறி குறி.  இங்கே ஒரு பாகிஸ்தான் நாட்டு பேராசிரியர் யூதர்களை பயங்கரவாதிகள் என்று பத்திரிகையில் கட்டுரை எழுதியதால் ஒரு யூத இனத்தவர் மான நஷ்ட வழக்குப் போட்டு பெரும் தொகை நஷ்ட ஈடாகத் தீர்ந்தது. ஒரே தடவையில் கொடுக்க முடியாத அந்தத் தொகையை மாதா மாதம் mortgage போல தனது சம்பளத்தில் இருந்து வெட்டிக் கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் பேராசிரியர். அப்படி ஏதாவது கவித்துவமாகச் செய்தால் இனி சும்மா வாயைத் திறக்கக் கூடாது எண்டு மாதா மாதம் நினைவு படுத்தலாம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தை செலுத்தா விட்டால் நோண்டி நொங்கெடுத்து காயப் போட பல வழிகள் இருக்கு. யூதர்கள் இந்த மான நஷ்ட வழக்கு வழிகளைப் பயன் படுத்துவது போல நாங்களும் இப்ப ஆரம்பித்திருக்கிறோம். நல்ல அறி குறி.  இங்கே ஒரு பாகிஸ்தான் நாட்டு பேராசிரியர் யூதர்களை பயங்கரவாதிகள் என்று பத்திரிகையில் கட்டுரை எழுதியதால் ஒரு யூத இனத்தவர் மான நஷ்ட வழக்குப் போட்டு பெரும் தொகை நஷ்ட ஈடாகத் தீர்ந்தது. ஒரே தடவையில் கொடுக்க முடியாத அந்தத் தொகையை மாதா மாதம் mortgage போல தனது சம்பளத்தில் இருந்து வெட்டிக் கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் பேராசிரியர். அப்படி ஏதாவது கவித்துவமாகச் செய்தால் இனி சும்மா வாயைத் திறக்கக் கூடாது எண்டு மாதா மாதம் நினைவு படுத்தலாம்! :D

ஒரே நாட்டுக்குள் இருந்தால் பிரச்சினையில்லை.. ஆனால் சிங்கப்பூரில் உல்ளவரை கறப்பது கஷ்டம்தானே.. அப்படியெ சிங்கப்பூர் அரசாங்கம் நெருக்கினாலும் இலங்கைக்கு ஓடி மகிந்தரின் துண்டுக்குப் பின்னால் ஒளிக்க சந்தர்ப்பம் இருக்கு..

காசைக் கட்டினால் குற்றத்தை ஒத்துக்கொண்டது ஆகிவிடும். அப்போது இவர் இவ்வளவு நாள் சொன்னதில் எவ்வளவு பொய் இருந்திருக்கும் என்கிற கேள்வி எழும். :D

மகிழ்ச்சியான செய்திகள் .எம் காதுகளை  வந்து அடையத்தொடங்கி விட்டது ..................இந்த வேகத்தில் பயணிப்போம் .....................இந்த விடயத்தில் காத்திரமாக செயலாற்றிய கனடியத்தமிழர் பேரவைக்கு மனமார்ந்த நன்றிகள் .

ஒரே நாட்டுக்குள் இருந்தால் பிரச்சினையில்லை.. ஆனால் சிங்கப்பூரில் உல்ளவரை கறப்பது கஷ்டம்தானே.. அப்படியெ சிங்கப்பூர் அரசாங்கம் நெருக்கினாலும் இலங்கைக்கு ஓடி மகிந்தரின் துண்டுக்குப் பின்னால் ஒளிக்க சந்தர்ப்பம் இருக்கு..

காசைக் கட்டினால் குற்றத்தை ஒத்துக்கொண்டது ஆகிவிடும். அப்போது இவர் இவ்வளவு நாள் சொன்னதில் எவ்வளவு பொய் இருந்திருக்கும் என்கிற கேள்வி எழும். :D

அண்ணா, கனடிய சட்டத்தின் படி தண்டனை காசை கட்டாவிட்டால் இவர் கனடாவிற்குள் வர முடியாது என்று நினைக்கிறேன்.

இவன் நாடு நாடா போய் புழுகு மூட்டையை அவிழ்ப்பதை குறைத்தாலே பெரிய அனுகூலம்.

இனி கண்டபாட்டுக்கு புலி வாந்தி எடுப்போரும் பொத்திவிடுவார்கள்.

கனடிய தமிழ் பேரவை சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். இனி எல்லா பேரவையும் வழக்கு போடா தொடங்கிடுவினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Search Results for Rohan

 

 

Back   | Close

Contact the university;

 

Inter-varsity contacts & co-operation / international visitors

(Office of International Affairs) OIA-Visit@ntu.edu.sg    

Tel:  (65) 65923106 Research & development 

(Research Support Office) d-rso@ntu.edu.sg

Tel:  (65) 67906468

Fax: (65) 67912397 Innovation & technology transfer 

(Nanyang Innovation & Enterprise Office) innovation@ntu.edu.sg

Tel:  (65) 67904954

Fax: (65) 67921737 Media contact

(Corporate Communications Office)

MediaEnquiry@ntu.edu.sg

Fax: (65) 67918494

 

Edited by முல்லை

நன்றி முல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பணம் முக்கியமில்லை என்பது ஒரு கருத்து!

 

ஒரு பேராசிரியர் எனவும், பயங்கரவாத நிபுணர் எனவும் தன்னைத் தானே பிரகடனப்படுத்திய ஒருவரின், 'முகமூடி' கிழித்தெறியப் பட்டுள்ளது என்பதே முக்கியமானது!

 

அதாவது இவரதும், சிங்கள அரசினதும் ' credibility' கேள்விக்குறியாகி உள்ளது!

 

நல்ல தமிழ் உவமையில் சொன்னால், 'நாளைக்கு இவர் 'வெள்ளை வேட்டி' கட்டிக்கொண்டு எப்படி வெளியே போவது?'  :lol:

அட இதுக்கு என்ன எழுத என்றதுதான் புரிய மாட்டேன்கிறது. நம்ம் ரோகனாதேரருக்கும் இதுதான் கதியா? 

 

இத்தாலியா பாதுகப்புக்கொள்ளைகள் போய், சிங்கள இராஜதந்திரத்துக்கு சீனன், ஈரானியன் யாரும் இல்லாமல் போய், இப்போ புலிப்பயங்கவாதிகள் வெளியே வருவதுமட்டுமல்ல, அந்த பிரசாரம் செய்பவர்கள் ஒரு கணக்கும் போட்டு கட்ட வேண்டிவருகிறதா?

 

கோட்டால் தீர்கப்ட்ட பின்னர் அது மற்றைய கடன்களுடன்(Debts) கணக்கு வைக்கப்படும். சில சந்தர்பங்களில் கோட்டு தீர்ப்புக் மற்றய கடன்களை முதன்மை கூட. சிங்கப்பூர் சர்வதேச வியாபாரத்தில் இருப்பது. எனவே சர்வதேச கடன்ங்கள் மீளப்பெறும் சட்டங்கள் நேர்த்தியாக இருக்கும். தேரர் ரோகன் அவ்வளவு இலகுவாக சுத்த முடியாது. சில Debt Collecting கம்பனிகள் கோட்டு தீர்ப்பு கடனகளை தாங்களே வாங்குவார்கள். இதை சர்வதேச கடன் மீளப்பெறும் கம்பனிக்கு விற்றுவிடலாம். விற்பவர், வட்டி கடனை மீளப்பெறும் செல்வு போன்றவற்றுக்கு முற்பணம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். இதனல் 80% 85% மட்டும்தான் விற்கும் போது கிடைக்கும். சில வக்கீல்கள் மான நட்ட வழக்கையே கமிசன் கணக்கில் எடுப்பார்கள். வழக்கு வென்றால் 35% தொடக்கம் 50% பிடித்துவிடுவார்கள். ஆனால் கிடைத்தபணத்துக்கு வழக்கு வென்ற்வர் வரி கட்ட வேண்டும். இதனால் வக்கீல்களின் பங்கு முதலில் சரியான வழியில் தீர்மானிக்கப்படாவிட்டால் வென்ற வழக்குக்கு கையால் போட்டு வரி கட்ட வேண்டி வந்துவிடும்.   

 

இவரின் கட்டுரைகளை, பதிப்பகங்களாள் வெளிவிடப் பட்ட புத்தகங்களை  மீள பெறவைக்க முயல வேண்டும்.

இவரின் கட்டுரைகளை, பதிப்பகங்களாள் வெளிவிடப் பட்ட புத்தகங்களை  மீள பெறவைக்க முயல வேண்டும்.

 

மல்லை இவன் ஒரு பொய்யன் என 2003 ம் ஆண்டிலேயே பத்திரிகைகள் சொல்லியும் இன்னும் இவர் தான் கடவுள் என சிங்கப்பூர் காசு பிசாசுகள் இவரை மடியில் தூக்கி வைத்திருக்கினம். அதுவும் சிகப்பூருக்கு பூகள் சேர்த்த்த, அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான மறைந்த திரு. ராஜரத்னம் அவர்களின் பெயரில் இயங்கும் சர்வதேச கட்கை நிலையத்தில் இவன் ஆய்வாளரும் பேராசிரியராகவும் உள்ளமை சிங்கபூரின் அதிசயங்களில் ஒன்று. 

இந்த பயங்கரவாதம் ஒரு பாரிய வியாபாரம். அதில் பிரச்சார பீரங்கி இந்த ரோஹன். இவன் ஒரு வழக்கில் நிபுனானாக ஆஜர் ஆக இருந்தபோது ஒரு சட்ட அலுவகம் எங்களை அணுகி இவர் பற்றியும் இவரின் ஆய்வுகள் பற்றியும் விபரம் கேட்டனர். இது நடந்தது ௨௦௦௫ மட்டில். அப்பொழுது இவர் தொடர்பாக வந்த விபரங்களையும் இவரின் புத்தகம் பற்றியும் தொகுத்த்து கொடுத்திருந்தோம். அதில் உள்ள சில விடய்ங்களை இன்று colombo telegraph இவர் தொடர்பான செய்தியில் பதிந்தேன். ஆனால் சிலவற்றை தணிக்கை செய்துலார்கள். இருந்தாலும் இதோ இவரின் லீலைகள் - வாசியுங்கள்
 
 
"Rohan is one of the qualified researchers in Terrorism"
 
Is he?. Let's see what the Age in Australia, the Scopp in NZ, Critical Asian Studies, a peer-reviewed journal etc say about this man's expertise in the area.
 
Excerpts from an investigative piece on the man from the Age of July 20,  2003 (http://www.theage.com.au/articles/2003/07/20/1058545648013.html)
 
"Members of Australia’s intelligence community, and in particular ASIO, are known to be dismissive of many of Gunaratna’s more sensational statements, such as claims that alleged military chief of the Jemaah Islamiyah network and senior al-Qaeda member Hambali had regularly visited Australia." 
 
"In Britain, The Observer newspaper’s home affairs editor and long-time writer on Islamic terrorist groups, Martin Bright, describes Gunaratna as "the least reliable of the experts on bin Laden". He says Gunaratna is often used by the British authorities as an expert witness in the prosecution of Islamist terror suspects because they can rely on him to be apocalyptic." 
 
Gunaratne's claim: "Gunaratna was principal investigator of the United Nations’ Terrorism Prevention Branch and he has served as a consultant on terrorism to several governments and corporations. 
 
The truth: After The Sunday Age made detailed checks on Gunaratna’s biographical details, he confirmed last week that there was no such position as principal investigator at the UN’s Terrorism Prevention Branch and he worked there in 2001-02 as a research consultant. 
 
Gunaratne's claim: "..was called to address the United Nations, the US Congress and the Australian Parliament in the wake of September 11, 2001" 
 
The truth: He also confirmed that, rather than directly addressing the UN, Congress and the Australian Parliament, he had actually spoken at a seminar organised by the parliamentary library, given evidence to a congressional hearing on terrorism and delivered a research paper to a conference on terrorism organised by the UN’s Department for Disarmament Affairs. 
 
Claim: Gunaratna says his expertise on al-Qaeda comes from interviews with the group’s "penultimate leadership" and rank and file members, hundreds of documents seized after the invasion of Afghanistan and the debriefings of al-Qaeda suspects in more than a dozen countries.
 
It was that kind of information that led him in March to state definitively that Australian David Hicks, who has been detained at Guantanamo Bay in Cuba after his capture in Afghanistan, was "not a member of al-Qaeda", "did not plan to attack civilian targets", "never intended to attack a civilian target" and was a "romantic" not taken seriously by other Taliban fighters. 
 
Samesault: Eyebrows were raised among fellow intelligence analysts when Gunaratna reversed his position on Hicks two weeks ago, after the US announced the Australian was one of six detainees it had enough evidence against to put before a military tribunal. This time Gunaratna, said Hicks had undergone "more advance and more specialised training" with al-Qaeda, which "had some special plans for him". 
 
The claim: In his book Inside al-Qaeda .... The source for the information was Indian intelligence interrogations of Mohammed Afroz, a 25-year-old Muslim and suspected member of al-Qaeda, arrested in Mumbai on October 3, 2001. --
 
The reality: Afroz was released by an Indian court on indefinite bail in April, 2001 after Indian police failed to bring charges.... It was reported after his release that New Delhi police believed Mumbai police made up the sensational claims allegedly made by Afroz. 
 
from Scoop in Nz - Scoop: Terrorism Expertise of Rohan Gunaratna Questioned - David Small, 24 August 2004
 
"Gunaratna is a self-styled expert on Islamic groups and terrorism. He is still being described as “the former principle (sic) investigator for the United Nations Terrorism Prevention branch” [sunday Star-Times. 15 August 2004] although Australian journalists have established that no such post has ever existed."
 
 
Also read - War on Error and the Southern Fire: How terrorism analysts get it wrong - Michael K. Connors, Critical Asian Studies journal
 
இத்தோடு இவரின் புத்தகங்களில் உள்ள factual errors பற்றி amazon.com reviews வாசியுங்கள் 

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புதல்வன். கனடாவின் சிபிசி வானொலியும் (மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் முக்கியமான ஆங்கில ஊடகம்) இவரின் கூற்றுக்களை ஒலிபரப்பிய கூத்துக்களும் நடந்தது.

இவனுடைய ஆங்கிலத்தை எப்படி சமாளித்தார்கள் ? கொடுமை!!
 
 
இவனை தூக்கிவிட்ட விசயம் இவன் LTTE சண்டை போடும் நாட்டைச் சேர்ந்தவன் என்பது தான். LTTE என்ற நான்கு எழுத்துத் தான் தூக்கிவிட்டது.
 
மற்றப்படி இவன் சொல்லும் விசயங்கள் முக்கால் வாசி கற்பனை. 
 
முதலாவது... 
 
சக்தி மிக்க புலனாய்வு நிருவனங்களுக்கே கிடைக்காத தகவல்கள் எப்படி இவனுக்குக் கிடைத்தது ? அது வாய்ப்பில்லை. ஆகவே இவன் கற்பனையில் இயற்றி விட்ட ரீல்கள் தான் அவை.
 
புலனாய்வு நிறுவனங்களும் பொறுத்துப் பார்த்திருப்பார்கள். தாங்க முடியாத கட்டத்தில் கோவணத்தில் கை வைத்திருப்பார்கள்.
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன்சீ கப்பல் வந்த பொழுது அதில் உள்ளவர்களை அடையாளம் காட்டுவதற்காக ரொகான் குனரெட்னாவை RCMP யினர் கனடாவுக்கு அழைத்திருந்தனர் .அந்த நேரத்தில் கனேடிய தமிழ் காங்கிரசிட்கு மொன்றியலில் இருந்து முன்னால் புலிப்போராளி தொடர்பு கொண்டு தான் ரோகன குனரெட்னாவால் அனுப்பப் பட்டனான் அதாவது இங்குள்ள தமிழர்களுக்கெதிராக வேலை செய்வதற்கு ,போரளியுடைய சாட்சியமும் ரோகனவுக்கேதிராக மாறியது .

மற்றப்படி இவன் சொல்லும் விசயங்கள் முக்கால் வாசி கற்பனை. 

 

முதலாவது... 

 

சக்தி மிக்க புலனாய்வு நிருவனங்களுக்கே கிடைக்காத தகவல்கள் எப்படி இவனுக்குக் கிடைத்தது ? அது வாய்ப்பில்லை. ஆகவே இவன் கற்பனையில் இயற்றி விட்ட ரீல்கள் தான் அவை.

நீங்கள் சொல்ல்வது முற்றிலும் உண்மை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.