Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள்.

 

எல்லோராலும் அறியப்படும் கவிஞர் ஊடகவியலாளர் தீபச்செல்வன் பல தடைகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது எழுத்துக்களால் உயர்ந்த இளைஞன். 2008 காலத்தில் வலைப்பூ வழியாகா உறவாகினார். இனக்கலவரம் மோசமடைந்த 83இல் பிறந்த தீபச்செல்வன் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் பல பணிகளில் இணைந்திருந்த துணிச்சல் மிக்கவன்.

 
2009 இல் நேசக்கரத்தோடு இணைந்து 2009யுத்த முடிவிற்குப் பின்னர் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வன்னியில் மீளக்குடியேறி மக்களுக்குமான உதவிகளை கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றிய நன்றிக்குரிய கவிஞன்.
 
தற்போது இந்தியாவில் தனது மேற்படிப்பைத் தொடரும் தீபச்செல்வன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து தீபச்செல்வன் மீது சேறடிக்கும் நடவடிக்கையில் சிலர் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டு வருவது வேதனை தருகிறது. பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் என பலரது பொய்யான கட்டுக்கதைகள் தீபச்செல்வனின் ஆற்றலை சிதைக்கும் வகையில் நடைபெற்று வருகிறது.
 
எப்படி தீபச்செல்வன் இந்தியாவில் வாழ முடியும் ? எவ்வாறு பணம் வருகிறது ? அவன் அணியும் உடுப்புகள் பற்றிக் கூட சிலர் முகநூலில் விமர்சித்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
 
ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்க நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்கு விடுமுறையைக் கழிக்கவும் இலங்கைக்கு இரகசிய பயணங்கள் போகவும் இங்குள்ளவர்களுக்கு முடியும் ஆனால் ஏழ்மையில் வாழ்ந்து தனது ஆற்றலால் தனது சொந்த உழைப்பில் வாழும் ஒரு இளைஞன் மீது ஏன் இத்தகைய காழ்ப்பணர்வு கொள்கிறது புலத்து பண்ணைப்படைப்பாளிகள் ?

 

தீபச்செல்வன் போன்றவர்கள் எங்களுக்கு இன்னும் பலர் வரவேண்டும். அவர்களை வாழ்த்தி வரவேற்காது விட்டாலும் பறவாயில்லை தூற்றி அவர்களது ஆற்றலை மண்போட்டு மூடாமல் விட்டாலே பேருதவியாக அமையும்.
 
எல்லா வகையிலும் அவனை வீழ்த்த எடுத்த முயற்சிகள் தோற்றுப்போக சிலரோ அவனுக்கு யாரோ உதவிய உதவிக்கு தாங்கள் உரிமைகோரும் கொடுமையும் மிரட்டலாக அங்கை எழுதுவேன் இங்கை எழுதுவேன் என்ற எச்சரிக்கையாகவும் தொடர்கிறது.
 
தீபச்செல்வன் மற்றவர்களிடம் கடமைப்படுவதையே விரும்பாத ஒருவர். காலம் அவனை ஒருமுறை கல்விக்காக உதவிகோர வைத்தது. அந்த உதவியை இந்த யாழ்களத்தின் கருத்தாளரான கிருபன் வழங்கியிருந்தார்.கிருபன் உதவியை தந்த போது பிரதி பலன் எதையும் கேட்கவுமில்லை. அந்த உதவியைக்கூட கிருபன் மறந்து போனாலும் தீபன் இன்னும் கிருபனின் உதவியை மறக்கவில்லை. ஆனால் அவனைத் தொடர்ந்து தொல்லை கொடுத்து மிரட்டல் விடுக்கும் பெருமையாளர்களுக்கு இது புரியுமா தெரியவில்லை. 
 
தொடர்ந்த தீபச்செல்வனின் வளர்ச்சியில் முடிந்தால் உதவலாம் அல்லது அவனது பாதையில் பொய்யான கதைகளை இட்டு நிரப்பி தொல்லை கொடுக்காமல் இருந்தாலே உதவி. 
 
சிலவேளை யாழிலும் தீபச்செல்வன் பற்றி புனைவாளரால் எழுதப்படக் கூடும். உண்மைகளை சக கருத்தாளர்களும் அறிய வேண்டுமென்பதற்காகவே இங்கே இவ்விடயத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
 
 

இப்படியான ஒரு பதிவை யாழில் பகிரங்கமாக எழுதச் சொல்லி தீபச்செல்வன் கேட்டவரா?

 

இதை எழுத அவர் சம்மதம் பெறப்பட்டதா?

 

இதில் அவருக்கு உதவியதாகச் சொல்லப்படுபவரின் சம்மதம் தானும் பெறப்பட்டதா?

 

எனக்குத் தெரியும் இவை அனைத்துக்கும் பதிலானது 'இல்லை'  என்பதே..

 

ஏனென்றால் தீபச்செல்வன் உங்களதும் உங்கள் உடன் பிறவா சகோதரம் சாத்திரியின் நோக்கம் புரிந்து நேசக்கரத்தினை விட்டு விலகியவர்

 

உங்கள் மீது குற்றச்சாட்டு எழுப்புகின்றோம் என்றவுடனேயே உங்கள் அமைப்புக்கு உதவியவர்கள் மற்றும் வேலை செய்தவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்கும் உங்கள் குணத்தினை மீண்டும் இங்கு காட்டி விட்டீர்கள்.

 

 

 

இனி எப்படி உங்களை நம்புவது? 

 

ஒரு பிரச்சனை என்றால் உங்கள் அமைப்பினூடாக உதவுகின்றவர்களின், உதவி பெறுகின்றவர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்த மாட்டீர்கள் என்பதுக்கு என்ன நிச்சயம்?

 

 

ரோட்டில் அம்மணமாக்கப்பட்டு ஓடுகின்றவர்களின் தோலை  பிசினஸ் பண்ணும் உங்களுக்கு என் கேள்விகள் கசப்பானவை தான்.

 

ஆனால் இரட்டை வேடம் போடுகின்றவர்களின் தோல் உரியும் காலம் இது

.

 

 

 

Edited by பூச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மன்னிக்கவும் மதிப்புக்குரிய பூச்சியண்ணா,
 
தீபச்செல்வனின் அனுமதியோடு தான் எழுதுகிறேன். எங்கேயோ முகமில்லாத பூச்சியின் கேள்விக்கு பயந்து எழுதேல்ல பூச்சி நெ......! ஒருவாரம் விடுமுறை எடுத்துள்ளேன் பல விடயங்கள் எழுத வேண்டும் பலல பணிகள் செய்ய வேண்டும். ஆக நேரம் கிடைத்திருக்கிறது. இதனால் அதிகம் இங்கு எழுதக்கூடியதாக இருக்கிறது.
 
மற்றும் உதவிய கிருபன் உங்களைப்போல கேள்வியில் வேள்வி செய்யும் ஆளில்லை. தனது உதவியை வெளிப்படையாகத்தான் செய்தார்.இது நிழலி உட்பட பலருக்குத் தெரியும். இதுபற்றி அப்போது திண்ணையில் நிழலி உட்பட பலர் பேசியிருந்தோம்.
 
சாத்திரியுடன் உங்களுக்கு ஏதும் தீர்க்கமுடியாத நோயிருந்தால் சாத்திரியிடம் மருந்தை வாங்கிக் கொள்ளுங்கள். இங்கு எனது எழுத்துக்குள் தொடர்பில்லாத ஆட்களை செருகி உங்கள் பெருந்தன்மையை நிலைநிறுத்தாதீர்கள்.
 
தீபச்செல்வன் படிப்பு காரணமாக ஊரில் அதிகம் நின்று செயற்பட முடியாமையால் தான் சிலகாலம் ஓய்வெடுத்துளானே தவிர நேசக்கரத்தை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிடவில்லை. நானும் தீபச்செல்வனும் தினமும் பேசிக்கொள்ள வேண்டிய தேவைகள் இருக்கிறது பேசுகிறோம் விடயங்களை பகிர்ந்து கொள்கிறோம். இவ்வளவும் உங்களுக்கு போதும்.
 
தீபச்செல்வன் மீது நடைபெறும் தாக்குதல்கள் பற்றி இங்கு கள உறவுகளாக விசுகு அண்ணா மற்றும் தமிழ்சூரியன் போன்ற பல கள உறவுகளுக்கு தெரிவித்திருந்தேன் தொலைபேசியில். ஆக இதில் எந்த ஒளிவு  மறைவும் இல்லை. ஒளிச்சிருந்து தீபச்செல்வனுக்கு எறியும் முகமில்லாதவர்களில் நீங்களும் இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

 


தீபச்செல்வன் கிளிநொச்சி மக்களுக்கு நேசக்கரம் ஊடாக பெறப்பட்ட உதவிகளை கொடுத்த சில இணைப்புகள் கீழ்வரும் இணைப்புகள் :-

 

http://nesakkaram.org/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

 

http://news.lankasri.com/show-RUmoyJSdkCLVi.html

 

http://nesakkaram.org/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE/

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4/

http://nesakkaram.org/ta/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2/


தீபச்செல்வனைக்கூட உங்கள் போன்ற கேள்வி நாயகர்கள் கேள்வி கேட்டார்கள். இன்னும் தொடர்ந்துஅவனைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்....! நீ எப்படி இலங்கையரசின் தடைகளைத் தாண்டி இந்தியா போய் வருகிறாய் ? படிக்கிறாய் ? அதேநேரம் பணம் எங்கிருந்து வருகிறது ? 
 
ஏன் உதவிபெற்ற பல்கலைக்கழக மாணவர்களே தீபன் பற்றி புரளியைக் கிழறிவிட்டு அவனை வேதனைப்படுத்தினார்கள். 
 
இப்போது தீபன் பற்றி பினாத்துவோர் சிலர் அவனது உழைப்பை , உயர்வை சேறடித்து அவனை ஒதுங்க வைக்கவே. 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சர்ச்சைகளில் கருத்து வைப்பது தேவையற்றது என்பதால் ஒதுங்கியிருப்பது வழமை. எனினும் எனது பெயரைக் கண்டதால் தெளிவுபடுத்தவேண்டியுள்ளது.

நீங்கள் மேலே குறிப்பிட்டபடி எதுவும் வெளிப்படையாக திரிகளில் பரிமாறப்படவில்லை. எல்லாமே தனிமடல் ஊடாகத்தான் பரிமாறப்பட்டிருந்தது. திண்ணையில் கதைத்தவை பற்றி எனக்கு நினைவில்லை. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் பணவிரபங்கள் வெளிப்படையாக பரிமாறப்படவில்லைதனிமடலில் பேசியிருந்தோம். இவ்வுதவி பற்றி திண்ணையில் பேசியிருந்தோம். உங்கள் உதவியை இன்னொருவர் தனது உதவியாக தீபச்செல்வனுக்கு அண்மையில் பிரச்சனை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  இவ்விடயம் தொடர்பில் தீபன் மிகுந்த வேதனையில் இருக்கிறான். 

மற்றும் உங்கள் உதவி உங்கள் பெயரில் கணக்கறிக்கைகளில் உள்ளது. எல்லா வழிகளிலும் அவனது குரலை அடக்க எடுத்த முயற்சிகள் தோற்றதும் கடைசியில் அவனுக்கு நீங்கள் வழங்கிய உதவியையே கையில் எடுத்துள்ளார் குறித்த நபர்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வனை

இதுவும் கடந்து   போகக்கடவது............. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

2009ம் ஆண்டு வன்னி யுத்தம் நடந்தபோது அங்கு வந்து  தங்கியிருந்து  யுதத்தில் மாட்டுப்பட்டு மீண்டும் பல்கலைக்கழக  வகுப்புக்களிற்கு போக முடியாமல்  யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் பல்கலைக்களகம் சென்றபோது அவர்களிற்கான அனுமதி மறுக்கப் பட்டும் அவர்களிற்கான  அரச உதவி மற்றும் தங்குமிட வசதிகள் மறுக்கப் பட்ட மாணவர்களிற்கு நேசக்கரம் உதவியது. அன்று அந்த மாணவர்களின் நிலை பற்றி அவர்களை வைத்தே ஒரு ஆவணப்படம் எடுத்துத் தருமாறு நான் தீபச்செல்வனிடம் கேட்டுக் கொண்டதோடு அதற்காக 40 ஆயிரம் இலங்கை ரூபாய் பணமும் அனுப்பி வைத்திருந்தேன் . அது நேசக் கரத்திற்காக மக்கள் தந்த பணமே.ஆனால் படம் இன்றுவரை  எடுக்கப் படவில்லை  அந்தப் படத்தைப் பற்றித்தான்  நான் தீபச் செல்வனை இந்த வருடம் சென்னையில் நேரடிநாய் சந்தித்தபோது கேட்டிருந்தேன்.

 

சரி இங்கு சாந்தி சொன்னது போல் கிருபன் கொடுத்த பணமாகவே இருக்கட்டும்.2009ல் வன்னியில் இருந்:து போன மாணவர்களை  வைத்து  எடுக்கத் தொடங்கிய ஆவணப்படம் இன்னுமா எடுக்கப் படுகிறது . அந்த மாணவர்களே  பல்கலை கழகத்தை விட்டு வெளியேறி வேலை செய்யத் தொடங்கியிருப்பாங்கள்.அல்லது  குடும்பம் குட்டி என்று போயிருப்பாங்கள். தீபச் செல்வனே சென்னையிலை குடியேறிட்டான். அடுத்ததாக  அன்று கிருபனிற்கு எப்படி கணக்கு காட்டப் பட்டது?? யாரோ ஒருவரின் பெயரைப் போட்டு இந்த மாணவனிற்கு உதவப் பட்டது என்று காட்டப் பட்டிருக்குமே தவிர ஆவணப் படம் எடுப்பதற்காக கொடுக்கப் பட்டது என்று நிச்சயமாக சாந்தி சொல்லியிருக் கமாட்டார்.இனி கிருபனும் அந்தப் பணத்தைப் பற்றி ஆராய்ந்து கேட்டிருக்கமாட்டார். நம்பிக்கை அடிப்படையில் பேசாமல் இருந்து விட்டிருப்பார். இதைப் போல பல சந்தர்பப்ங்களில் பலருடைய பணங்கள்  வீணடிக்கப்பட்டது. மோசடிகளும் நடந்தது.இவை பற்றி நான்  கேட்கத் தொடங்கியபேதே எனக்கும் சாந்திக்குமான பிரச்சனைகள் தொடங்கியிருந்தது.

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கிருபன் நீங்கள் அனுப்பிய பணம் யாருக்கு யாரின் மூலம் அனுப்பினீங்கள் என்ற விபரத்தை ஒருமுறை சாத்திரி என்பவருக்கு தெரியப்படுத்துங்கள்.
 
தீபச்செல்வனுக்கு கிருபன் உதவிய பணம் பற்றி கிருபன் தான் சொல்ல வேணும்.
 
மற்றும்படி சாத்திரி தனது பணத்தையோ அல்லது வேறு யாரும் கொடுத்த பணத்தையோ நேசக்கரத்திற்கு தந்து அது எதுவும் தீபச்செல்வன் மோசடி செய்யவில்லை. 2010ம் ஆண்டு தான் நேசக்கரம் யேர்மனியில் சட்டப்படியான பதிவும் வங்கிக்கணக்கிலக்கமும் வந்தது. 
 
வளமை  போல சாத்திரி தனது இயல்பான குணத்தை இங்கும் வெளிப்படுத்தியுள்ளார். இதனை யாழ்கள உறவுகள் மட்டுமல்ல வாசகர்களும் புரிந்து கொள்வார்கள்.
 
இதனை விட நான் செய்த திட்டங்கள் யாவுக்குமான அதாவது யாழ்நேசக்கரமாக இயங்கிய காலத்தில் செய்த உதவிகளுக்கான பணம் அனுப்பியோர் அந்தப்பணம் செயற்படுத்தப்பட்ட திட்டம் அப்போது பங்களித்த யாவருக்கும் ஆதாரங்கள் வழங்கப்பட்டது இதே களத்தின் ஊடாக. குறிப்பாக டண் அவர்கள் மற்றும் யம்முபேபி அவுஸ்ரேலியா ஆகியோர் தொடர்போடு இருந்து செய்தவற்றுக்கும் சாத்திரிக்கும் எவ்வித தொடர்புமில்லை. 
 
தீபச்செல்வன் ஒருசதமும் சாத்திரியின் பணத்தில் உதவியை பெறவில்லை. மற்றும் உதவிகள் தந்தவர்களுக்கு அது சென்ற பயனாளிகள் தொடக்கம் பொது உதவிகள் வரையில் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டது. சாத்திரி சொல்லும் பொய்யில் எவ்வித உண்மையும் இல்லை. கடந்த வருடம் நேசக்கரம் மீது இவர் சுமத்திய குற்றச்சாட்டுகளில் இப்போது கூறுவதும் வந்ததே. 
 
தீபச்செல்வன் ஒரு போதும் மற்றவரின் காசில் வாழ ஆசைப்பட்டோ அல்லது மற்றவரின் தியாகத்தில் குளிர்காய்ந்தோ வாழ்ந்து பழகியவனில்லை. இன்னும் தனது படிப்பு தனது குடும்பத்துக்காகவும் வேலை செய்தே தனது செலவுகளை சமாளிக்கிறான். 
 
அவனது நல்ல குணத்தை நேசக்கரத்திற்கு உதவி புரிந்த ஒரு குடும்பம் 2011இல் இலங்கை போனபோது நேரடியாகவே அவனைச் சந்தித்து யேர்மனி திரும்பியிருந்தார்கள். அவனை தங்கது உறவுப் பெண்ணொருவருக்கு திருமணம் செய்யக்கூட ஆசைப்பட்டார்கள். அந்தக் குடும்பம் மிகவும் வசதி படைத்த குடும்பம். ஆனால் வசதியையோ பணத்iதையோ விரும்பாமல் தனது இலட்சியத்தை அந்தக் குடும்பத்துக்கு கூறுமாறு சொல்லியிருந்தான். அத்தகைய பணத்தை விரும்பாத சுயமரியாதை உள்ள இளைஞன். இவனது வளர்ச்சியை பொறுக்கமாட்டாமல் சுமத்தும் பழிகளுக்கு தீபச்செல்வனோ நானோ எதையும் செய்ய முடியாது. 

குறிப்பாக 2011வரையும் பொதுத்திட்டங்கள் எதுவும் நடந்ததில்லை. தனிப்பட்ட குடும்பங்களுக்கான மாணவர்களுக்கான உதவிகளே வழங்கப்பட்டது. அவற்றுக்கான வங்கியில் வைப்பிடப்பட்டதற்கான வங்கி ரசீது , மற்றும் உதவிபெற்றோரின் கடிதங்களும் உரியவர்களுக்கு அனுப்பப்பட்டது. 
 
 
பிரான்ஸ் உறவுகளான சுவியண்ணா விசுகு அண்ணா ஆகியோரின் சாத்திரியை நம்பி சாத்திரியின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய பணத்தினை சாத்திரி என்ன செய்தார் அது எவ்வாறு இழுபட்டு நேசக்கரத்தை அடைந்தது என்ற விபரம் போன வருடம் இதே களத்தில் உரையாடப்பட்டது.  சுவியண்ணாவும் நானும் இது பற்றி பரிமாறிய செய்திகள் மின்னஞ்சலில் இருக்கிறது.
 
மற்றும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் என சேகரிக்கும் பணமானது அந்தந்த திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதும் அதனை செய்து முடித்தமைக்கான ஆதாரங்களும் இங்கு செய்திகள் மூலமும் உதவியவர்களுக்கும் தெரியப்படுத்தி வழங்கப்படுவதே இன்றுவரையான வளமை. இதில் மேலதிகமாக எவ்வித உதவியும் யாரும் உதவுவதில்லை. 
 
நேசக்கரம் பற்றி அக்கறைப்படும் சாத்திரியும் செய்திகளில் படித்து அறிந்திருப்பாரென்றே நினைக்கிறோம்.

 

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உதவி பெற்ற மாணவர்கள் யாரும் சாகவில்லை. தீபச்செல்வனால் தான் அன்று பல்கலைக்கழக மாணவர்கள் பலர் உயிர் காக்கப்பட்டது. 
 
சாத்திரியின் தொல்லைகள் தொடர்ந்த போது நேசக்கரத்திலிருந்து  நீக்கிய பின்னர் தானாக தன்னை நீதவானாக நிறுவுதற்காக மோசடி என்ற பொய்யை எழுதத் தொடங்கியிருந்தார். இதுபோல நேசம் உணவு உற்பத்தி பற்றி கடந்த வருடம் தனது விசாரணையை தொடங்கியிருந்தார். அது பற்றி தெளிவான பதிலும் முன்னேற்றமும் பற்றி நேற்று முன்தினம் கணக்கும் முன்னேற்றம் பற்றிய விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இதுபோல சாத்திரி சுமத்திய அனைத்து குற்றச் சாட்டுகளுக்குமான பதில்கள் மெல்ல மெல்ல உண்மைகளோடு வரும்.
 
திங்கள் வரை யாழ் களத்துக்கு வரமாட்டேன் உறவுகளே. எங்களது பெண்கள் அபிவிருத்தி மன்றத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக பெண்கள் தினத்திற்கு லண்டன் போகிறேன். திங்களின் பிறகு சாத்திரியின் நேசக்கரம் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதில் தருகிறேன்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்கள் உதவி எப்படி போனது தீபச்செல்வனுக்கு என்பதனை நீங்கள் தெரிவிப்பதன் மூலம் தீபச்செல்வனின் நேர்மையை மற்றவர்கள் அறிய நீங்களே உதவ வேண்டும். 

 

தீபச்செல்வனின் உதவி பற்றி நிழலியும் அறிவார். நிழலியிடமும் உதவி கேட்கப்பட்டிருந்தது. தீபச்செல்வன் தற்போது பரீட்சையில் இருப்பதால் உடனடியாக தனது பதிலினை வழங்க முடியாதுள்ளார். விரைவில் இங்கு சாத்திரி சுமத்திய குற்றச்சாட்டுக்கு தனது பதிலினை தருவார்.

 

ஒருவன் மீது திட்டமிட்டு செய்யப்படும் அவதூறுக்கு இந்த உதவி விடயம் தொடர்பாக பேசியவர்கள் அனைவரும் இங்கு தங்கள் பதிலினை பதிவு செய்து தீபச்செல்வன் மீதான பழியைப் போக்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

தீபச்செல்வனின் உதவி பற்றி நிழலியும் அறிவார். நிழலியிடமும் உதவி கேட்கப்பட்டிருந்தது.

 

ஓம்.. ஒரு சக நண்பனாக கேட்டு இருந்தார்.  அந்த நேரத்தில் வேலை இழந்து இருந்தமையால் உதவ முடியவில்லை.

 

தனிப்பட்ட ரீடியில் இந்த திரியில் கதைக்கும் விடயங்கள் தீபச்செல்வனது மனசை நோகடித்து விடுமோ என்று வேதனையாக இருக்கு. உலகில் எல்லாருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் மற்றவர்களின் உதவிகள் கண்டிப்பாக தேவையாக இருக்கும். எனக்கும் பல தடவை இவ்வாறான உதவிகள்  மற்றவர்களிடம் இருந்து தேவைப்பட்டு இருக்கு.  அப்படி ஒரு தேவை ஒரு சக மனிசனாக, உறவாக இருக்கும் தீபச்செல்வனுக்கும் ஏற்பட்டு இருந்தது. ஆனால் அதனையே ஒரு விவாதமாக இங்கு கதைக்கப்படுவதை காண உண்மையில் வேதனையாக இருக்கு. :( :( :(

:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஆளை மாத்தி ஆள் கல் எறியுங்கோ.

ஆனால் எல்லா கற்களுமே எங்கள் மக்கள் மேல் தான் விழுகின்றன என்று மறந்திடாமல் கல்லை எறியுங்கோ. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.. ஒரு சக நண்பனாக கேட்டு இருந்தார்.  அந்த நேரத்தில் வேலை இழந்து இருந்தமையால் உதவ முடியவில்லை.

 

தனிப்பட்ட ரீடியில் இந்த திரியில் கதைக்கும் விடயங்கள் தீபச்செல்வனது மனசை நோகடித்து விடுமோ என்று வேதனையாக இருக்கு. உலகில் எல்லாருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் மற்றவர்களின் உதவிகள் கண்டிப்பாக தேவையாக இருக்கும். எனக்கும் பல தடவை இவ்வாறான உதவிகள்  மற்றவர்களிடம் இருந்து தேவைப்பட்டு இருக்கு.  அப்படி ஒரு தேவை ஒரு சக மனிசனாக, உறவாக இருக்கும் தீபச்செல்வனுக்கும் ஏற்பட்டு இருந்தது. ஆனால் அதனையே ஒரு விவாதமாக இங்கு கதைக்கப்படுவதை காண உண்மையில் வேதனையாக இருக்கு. :( :( :(

:mellow:

 

இதைத்தான்  நானும் எழுத நினைத்தேன்

 

அதுவும் முள்ளிவாய்காலால் வந்து நின்றபோது செய்யப்பட்ட  உதவி  என்பது எல்லொருக்குமே  அன்று தேவைப்படட  ஒன்று.  அதுவும் நாற்பதாயிரம் இலங்கை ரூபா.

மனித நேயம் அழிந்து வருவதையே  எங்கும் காணமுடிகிறது :(  :(  :(

பாவம் 

தீபச்செல்வன்

அவரும் முள்ளிவாய்க்காலில்  புலிகள் செய்த குற்றங்கள்  என்று  தலைப்பிட்டு  எழுதி  வாழ்ந்திக்கலாம்...... :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எனது பெயரும் வருவதால்  நானும் இதைச் சொல்ல வேண்டும் , இந்த நேசக்கரத்தை இங்கு ஆரம்பிக்கும் போது நாங்கள்யாரும் பெரிய அளவிலே பங்களிப்பு செய்ய வேண்டும் என தொடங்கவில்லை. அன்று எமது மக்களுக்கு முடிந்தவரை சிறு சிறி உதவிகள் செய்தாலே போதும் என நினைத்தோம் . அதனால் மாதம் 10 /20 €  ஈரோக்கள் அன்றாட செலவுடன் செலவாய் சேர்த்து அனுப்புவோம் என்றுதான் தொடங்கி னடத்தி வந்தது . அதில் எனது பணம் நேரடியாய் அனுப்பச் செலவுகூட என்பதால் சாத்திரி மூலமாக அனுப்பி வந்தேன். நான் கொடுத்த பணம் ஒரு சதம் கூடக் குறையாமல் சாத்திரியும் நேசக்கரத்துக்கு அனுப்பி வந்தார், அதேபோல் சாந்தியும் அந்தந்த மாதங்களிலேயே பதிந்து வந்துள்ளார். ஆகவே இருவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்.

 

கடந்த சில மாதங்களாக எனக்கு சிறிது சிரமமாய் இருப்பதால் பணம் அனுப்பவில்லை. ஆயினும் நான் இரண்டொரு மாதங்களில் இருந்து வழமைபோல் அனுப்புவேன்.

 

நான் விரும்புவது தயவு செய்து நீங்கள் இருவருமே ஈகோவை விட்டு  நாகாக்க வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களைச் சுருக்கமாகச் சொல்லவேண்டியுள்ளது.

1) சாந்தி அக்காவுக்கும் சாத்திரிக்கும் உள்ள தனிப்பட்ட தகராறில் தீபச்செல்வன் இழுக்கப்பட்டுள்ளது போன்று நானும் இழுக்கப்பட்டிருப்பதாகக் கருதுகின்றேன்.

2)பல வருடங்களுக்கு முன்னர் வெளிப்படையாகத் தெரியாமல் செய்த உதவியை பொதுத் தளத்திற்கு கொண்டு வந்து விவாதிப்பது பிழையானது. இதுவரை நான் அந்த உதவியை நேசக்கரம் ஊடாகச் செய்யவில்லை என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். சாந்தி அக்கா இடையில் தனிமடலினூடாக ஒருங்கிணைப்பு செய்திருந்தாலும் நேரடியான உதவியாகவே இருந்தது. நேசக்கரம் கணக்கறிக்கையில் இது வராமல் இருந்திருக்கவேண்டும்.

3) சாத்திரி பணம் கொடுத்தாரா இல்லையா என்பதைப் பற்றி அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

4) எந்த வகையில் எனது உதவி போய்ச் சேர்ந்தது என்று பொதுவெளியில் அலசுவது மிகவும் தவறான விடயம். அதைச் சாந்தி அக்கா கோரியதும் தவறானது.

4) நேசக்கரம் அமைப்பை கொண்டு நடாத்தும் சாந்தி அக்காவும், பொது வெளியில் அரசியல் செய்யும் சாத்திரியும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டும். உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குள் மற்றவர்களை உள்நுழைக்கவேண்டாம்.

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இரண்டு பெரும் ஓரமாக நின்று விளையாடுங்கப்பா... எதுக்கு நடுத்தெருவிலே விளையாடி கொண்டு இருக்கிறீங்கள்.

வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்திலே வரும் ஒரு காட்சி.. :lol:

காலத்துக்கு ஏற்ற கருத்து கிருபன்.

பச்சை இல்லை குத்த.

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பச்சை இல்லைக் கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அன்பின் சாத்திரி!
 
என்னுடைய நேர்காணல்களையும் கட்டுரைகளையும் வாசித்தால் என் தங்கை குறித்து நீங்கள் அறிந்திருக்க இயலும். நீங்கள் அவள் குறித்து எழுதியது அவளது பாதுகாப்பிற்கு பிரச்சினையான தகவலாக மாறலாம். அதனால்தான் அதை நீக்கச் சொன்னேன். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் நாசூக்காக நோகடிக்கும் ஆபத்து விளைவிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தீர்கள். 
 
உங்கள் மகளை 'எனது இளவரசி' என்று அழைக்கும் நீங்கள் மற்றவர்களின் பிள்ளைகளையும் மனிதர்களாக மதியுங்கள். உயிரோடு இருப்பவர்களை கோரமாக இறந்தவர்களாக சித்திரிக்காதீர்கள்.  நாங்கள் வாழும் சூழலை புரிந்துகொள்ளுங்கள். இது எவ்வளவு பொறுப்பில்லாத அறமற்ற செயல். 
 
உயிரோடு இருப்பவரை இறந்தவர் என்று எழுதுகிறீர்கள். ஆபத்தில் வசிப்பவர்களின் பெயர்களை போட்டு ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். முள்ளிவாய்க்கால் யுத்தமும் மரணமும் உயிர் தப்பியிருத்தலும் உங்கள் நகைச்சுவை விளையாட்டிற்குரிய பொருள்களாகிவிட்டன. 
 
நீங்கள் முகப்புத்தகத்தில் எழுதிய தமிழ் கவி அக்கா பற்றிய குறிப்பில் நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டே வன்னியிலிருந்து என்று எழுதியாக குறிப்பிட்டுள்ளீர்கள். நான் 2010வரையில் எனது முகத்தையோ இருப்பிடத்தையோ காட்டவில்லை. 
 
சோபாசக்திக்கு வழங்கிய நேர்காணலில் நான் எப்போது எங்கிருந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறன். 'வன்னியிலிருந்து' என்று ஒருபோதும் நான் குறிப்பிடவில்லை. வாசித்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். 
 
உண்மையில் உங்களை நான் சென்னையில் சந்திக்க விரும்பவில்லை. நீங்கள் சஜந்தனுடன் இருக்கிறீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன். உங்களை நான் சந்தித்த நேரம் முழுவதும் கார்திக் மற்றும் சஜயந்தன் உடனிருந்தனர். நீங்கள் என்னிடம் பணம் கேட்டீர்களா? இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். 
 
என் தங்கை பற்றிய தகவலை கண்டபோது நான் மிகவும் வேதனையடைந்தேன். நாங்கள் இந்த யுத்தத்தில் எல்லாமும் இழந்தோம். இன்றைக்கு உயிர்களைத் தவிர எங்களிடம் எதுவுமில்லை. அதற்கும் நீங்கள் ஊறு விளைவிக்கிறீர்கள் என்பதால்தான் கவலையுற்று உங்களை மீண்டும் பேஸ்புக்கிலிருந்து நீக்கினேன். 
 
அதன் பின்னர் நீங்கள் பேஸ்பக்கில் மெசேஜ் வழியாகவே 30ருபா வாங்கியதாக எழுதியிருந்தீர்கள். (ஆதாரம் இணைத்துள்ளேன்) பின்னர் யாழில் 40ஆயிரம் வாங்கியதாககவும் அதை நேரில் கேட்டதாககவும் எழுதியுள்ளீர்கள். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
 
நான் உங்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் வைத்திருக்கவில்லை. நேசக்கரம் கொடுக்கல் வாங்கல் எல்லாமும் சாந்தி அக்காவுடனேயே. எனவே அவருக்கு தான் தெரியப்படுத்தினேன். 
 
"தீபச்செல்வன் சென்னையில் குடியேறி விட்டான்" என்று எழுதுகிறீர்கள். திருநெல்வேலியில் கல்வி கற்கிறேன் என்று நானே உங்களிடமே சொன்னேன். பொய்யான தகவல்ககளையும் பொய்யும் நஞ்சும் கலந்த வார்த்தைகளையும்  மிக மிக எளிதாக மற்றவர்மீது வீசி விடுகிறீர்கள். 
 
நீங்கள் தொடர்ந்தும் இப்பிடிப் பொய்யான கதைகளையே எதுவரை எழுதுவீர்கள்? ஒரு சில நாட்களுக்கு இடையிலேயே நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு மாற்றி மாற்றி பொய் சொல்கிறீர்கள். 
 
இவை எல்லாம் உங்கள் பொய் முகத்திற்குத் சாட்சி!
 
இனியும் நீங்கள் என்ன பொய் சொல்லப் போகிறீர்களோ தெரியவில்லை. அதற்காக நான் பதில் அளிக்கப் போவதில்லை. யாழ் இணையம் வரை வந்திருப்பதனாலும் நண்பர்கள் சிலர் இவ்விடயத்தில் இழுக்கப்பட்டமையாலும் இதை எழுதுகிறேன். 
 
இத்தகைய ஒரு கடிதத்தை தவிர்க்கவே விரும்பினேன். எழுத வேண்டிய நிலை வந்துவிட்டது. அதற்காக வருந்துகிறேன்.  
 
அன்போடு தீபச்செல்வன்
 
(சாத்திரிக்கு முகப்புத்தகம் வாயிலாக அனுப்பப்பட்ட கடிதம்)
 
 
10009467_10152064496398801_555966281_n.j1977578_10152064496503801_484079583_o.jp
  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன்

முள்ளிவாய்க்காலால் வெளியில் வந்து கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானத்தோடு நடந்தவர்களில்  எழுதியவர்களில் நீங்களும் ஒருவர்.

உங்களையும் கொன்றுவிட்டோம்.

இதற்கு மேல் என்னால் எழுதமுடியவில்லை............

 

இதுவும் கடந்து  போகக்கடவது............... :(  :(  :(

விசுகு,

 

தனி ஒரு சுயநல பொய்யனுக்காக , நீங்கள் 'கொன்றுவிட்டோம்' என்று பன்மையில் எழுதுவது மிகத் தவறு.

நாம் ஒரு போதும் நேர்மைக்காக நீதிக்காக நின்றவர்களைக் கைவிடோம் என்பதே உண்மை.

 

இந்தத் திரியில் எழுதிய அத்தனை பேரின் கருத்துக்களையும் வாசித்தால் இது புரியும்.  

 

வாய்மையே இறுதியில் வெல்லும். 

 

வருத்தக்காரே உங்களுக்கு ஐயோ கேடு ................சாகப்போகிறீர்கள் ........... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்


2014-01-28 nesakkaram <nesakkaram@googlemail.com>

திரு.சாத்திரி அவர்களுக்கு,
 
நேசக்கரத்தின் யாழ்வன்னி மாவட்ட இணைப்பாளராக 2009 தொடக்கம் இயங்கிய தீபச்செல்வன் இன்றொரு தகவலை மடலிட்டுள்ளார்
.(தீபச்செல்வன் தற்போதும் நேசக்கரத்தின் உறுப்பினராகவே இருக்கிறார். அவர் இப்போதும் தேவைகளைப் பொறுத்து நேசக்கரத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்)
 
எங்களது சக பணியாளரான தீபச்செல்வன் இன்று அனுப்பிய செய்தி எமது நிர்வாகக்குழுவினருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. 
 
தங்களிடமிருந்து தீபச்செல்வன் 2வருடங்கள் முன்னர் 30ஆயிரம் ரூபா பணம் பெற்றதாகவும் பல்கலைக்கழகமாணவர்கள் தொடர்பான ஆவணப்படம் எடுப்பதற்கு நீங்கள் வழங்கிய பணத்தை அவர் தராமல் விட்டதோடு உங்களது ஆவணப்படத்தை இன்னும் தரவில்லையென நீங்கள் தீபச்செல்வன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளதாகவும் அறியத்தந்துள்ளார். 
 
தீபச்செல்வன் உங்களிடம் எவ்வித பணமும் பெறவில்லையென்பதனையும் தெரிவித்துள்ளார். அவரது கல்விக்கு யாழ் இணைய உறவான திரு.கிருபன் மட்டுமே அவருக்கு கல்விக்கு உதவினார். மற்றும் நேசக்கரம் அனைத்துலக அமைப்பாளர் திருமதி.சாந்தி ரமேஷ் வவுனியன் ஆகிய நான் தனிப்பட்ட உதவியாக அவரது கல்விக்காக உதவியுள்ளேன். இதைவிட உங்களிடமிருந்து எவ்வித பணத்தையும் பெறவில்லை என்று தான் எமக்குத் தெரியும். 
 
அவர்மீது நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதானால் நீங்கள் தீபனுக்கு பணம் அனுப்பியதற்கான வங்கி ரசீது அல்லது ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் அறியத்தாருங்கள்.
 
தீபச்செல்வன் பற்றி எமது நிர்வாகமும் தாயகத்தில் பணியாற்றும் பணியாளர்களும் நன்கு அறிவார்கள்.யாரிடமும் பணத்தை வாங்காத நேர்மையான நபர். நேசக்கரம் கூட அவரை வைத்து பல வேலைத்திட்டங்களை செய்துள்ளது. அவற்றுக்கான பண கொடுக்கல் வாங்கலில் ஒருபோதும் நேர்மை தவறியதில்லை. அதற்கான சகல ஆதாரங்களும் உதவி பெற்றவர்களின் ஒப்பம் வீடியோ ஓடியோ பதிவுகளுடன் உடனுக்குடன் தந்துதவிய எமது நம்பிக்கைக்கு உரிய ஒரு பணியாளர் என்பதனையும் இத்தால் தங்களுக்கு அறியத்தருகிறோம்.
 
தீபச்செல்வனும்  திருமதி.சாந்தி ரமேஷ் வவுனியன் உட்பட மேலும் சில பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் முயற்சியில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது சில வருடங்கள் ஆரம்பமாகி. எமக்கான முழுமையான வளங்கள் இல்லாமையால் அந்த ஆவணப்படத்தை நாம் இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. இதில் தீபச்செல்வனின் பங்கானது மிகவும் அளப்பரியது. இது தவிர யாருக்கும் ஆவணப்படம் எடுத்துக் கொடுக்க முன்வரவில்லை. 
 
தயைகூர்ந்து நீங்கள் அவருக்கு பணம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் இருப்பின் தந்துதவுங்கள் மேலதிக விசாரணைகளை நாம் செய்ய அது உதவியாக இருக்கும்.
 
முக்கியகுறிப்பு :- உங்கள் பதிலினை எழுத்துமூலம் அறியத்தருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். தொலைபேசி உரையாடல்கள் சட்டப்படி சட்ட நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது என்பதனை தாங்களும் அறிவீர்கள்.
 
(திரு.சாத்திரி அவர்களுக்கான இம்மடலினை சாந்தி ரமேஷ் வவுனியன், ஜனன் இருவரும் எழுதியுள்ளோம். இம்மடலின் பிரதிகள் நேசக்கரம் தாயக அனைத்துலக செயற்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது)
 
இங்ஙனம்
 
நேசக்கரம் அனைத்துலக அமைப்பாளர் சாந்தி ரமேஷ் வவுனியன் (யேர்மனி)
நேசக்கரம் தாயக அமைப்பாளர்  ஜனன் (இலங்கை)

 
--

"Lassen Sie uns helfen unsere Brüder und Schwestern"

*Let us help our brothers and sisters*



Capture_zpse16b1c6b.png
--
விழ விழ எழுவோம்
cleardot.gif

 

Edited by sathiri

என்ன விளையாட்டு இது?

உணர்வு பூர்வமாக எழுதுபவர்களை மட்டம் தட்டுவதாக இருக்கிறது.....

 

இது நேசக்கரத்தை விழசெய்யும் முயற்சி போலுள்ளது....... very bad....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விளையாட்டு இது?

உணர்வு பூர்வமாக எழுதுபவர்களை மட்டம் தட்டுவதாக இருக்கிறது.....

 

இது நேசக்கரத்தை விழசெய்யும் முயற்சி போலுள்ளது....... very bad....

 

அதுதான் கேக்கிறம் இன்னமுமா எங்களை நம்பறீங்கள்  எண்டு உங்களிற்கே இது கேனைத்தனமா இல்லையா  போய் வேலையை பாப்பிங்களா.??பங்கு பிரிப்பதில் எங்களிற்குள் சின்னப் பிரச்சனை  அதுதான் நானும் சாந்தியும் சண்டை போடுறமாம் இதை நாலுபேர் நிண்டு வேடிக்கை பாப்பாங்களாம்..போவீங்களா.

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களே உங்களுடைய அயோக்கியத்தனத்தை தெரிவிப்பதால் நீங்கள் நல்லவனாக முடியுமா?

சோபாசக்தி என்பவர் முகநூலில் கூறியவாறு நீங்கள் அடியாள் மட்டுமல்ல... கொலைகளூக்கும் அதன் திசைதிருப்பல்களூக்கும் உடந்தையாகிய தமிழ் சமூக விரோதியும்கூட!! பொது விசயங்களில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.