Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு மேலும் ஒரு ஆண்டு காலஅவகாசம் அளிக்கும் அமெரிக்கத் தீர்மான நகல்! - மனிதஉரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு மேலும் ஒரு ஆண்டு காலஅவகாசம் அளிக்கும் அமெரிக்கத் தீர்மான நகல்! - மனிதஉரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி. 

[Tuesday, 2014-03-04 17:40:37]
UNHRC-040314-150.jpg

இலங்கை தொடர்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் கூட்டுச்சேர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ள பிரேரணையின் நகல் வடிவம் நேற்று மாலை வெளியிடப்பட்டது.அந்த வடிவத்தைப் பார்த்து மனித உரிமை ஆர்வலர்களும், நோக்கர்களும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் அதிர்ந்து போயுள்ளனர். இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பில் தீவிரமான விசாரணை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வடிவத்தில் இந்தப் பிரேரணை இருக்கும் என்று பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இலங்கையில் நடைபெற்றவை தொடர்பில் விசாரிக்கச் சர்வதேச விசாரணைகளை பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுவதற்கு இந்த அமர்வில் முன்முயற்சி எடுக்கப்படும் என்று பலரும் நம்பியிருந்தனர்.

  

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் இலங்கை தொடர்பான தமது அறிக்கையில் அதனையே பரிந்துரை செய்தும் இருந்தார்.ஆனால், பிரேரணையின் நகல் வடிவம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. இன்னமும் உள்நாட்டுக்குள் எடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகள் பற்றியே அது பேசுகின்றது. அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மதிப்பீடு செய்து 2014 செப்ரெம்பரில் நடைபெறும் 27 ஆவது கூட்டத்தொடரில் வாய் மூலமும், 2015 மார்ச்சில் நடைபெறும் 28 ஆவது கூட்டத்தொடரில் விரிவாக எழுத்து மூலமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்போதைய பிரேரணை வடிவம் சிபாரிசு செய்கிறது.இந்தப் பிரேரணை வடிவம் யுத்தம் முடிந்தும் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் மேலும் ஒருவருட காலத்தை இலங்கை அரசுத் தரப்புக்கு இழுத்தடிப்பதற்கு வழங்கப்போகின்றது.

ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமான சூழலில் இலங்கை தொடர்பான தமது பிரேரணையின் நகல் வடிவத்தை அமெரிக்கா, பிரிட்டன், மொண்டாரிகோ, மெஸிடோனியா, மொறீஸியஸ் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து பல தரப்பினரதும் பார்வைக்காகச் சுற்றுக்கு விட்டன.

உள்கட்டுமானங்களை மீளக் கட்டியெழுப்புதல், கண்ணிவெடியகற்றுதல், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தல் போன்றவற்றில் இலங்கை அரசின் செயற்பாட்டை வரவேற்றுள்ள இந்த வரைவு, நீதி நிலைநாட்டப்படல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், இராணுவ மயப்படுத்தலை நீக்குதல், வாழ்வாதாரங்களை மீள உருவாக்குதல், இந்த விடயங்களில் சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினரை முழுப் பங்காளர்களாக்குதல் போன்ற அம்சங்களில் இன்னும் பெருமளவு வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றது.

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலையும் அதில் வாக்காளர்கள் அதிகளவில் பங்குபற்றியமையும் வரவேற்றுள்ள இந்தப் பிரேரணை, அதேசமயம் தேர்தல் வன்முறைகள், வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்பட்டமையையும் சுட்டிக்காட்டுகின்றது.ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது அவரைச் சந்தித்தோர் உட்பட சிவில் சமூக உறுப்பினர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை குறித்து முன்மொழிவில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் அல்லது பால் இனத்துவ வன்முறைகள், பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்தல், சட்டவிரோதப் படுகொலைகள், சித்திரவதை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் கூட்டுச் சேருதல் மற்றும் அமைதியாக ஒன்று கூடுதல் போன்றவற்றுக்கும் எதிரான மீறல்கள், மனித உரிமைகளை பாதுகாப்போர், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் ஊடகவிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது பதிலடி நடவடிக்கைகள், நீதிச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான மிரட்டல்கள் என்பன மோசமான விதத்தில் அதிகரித்து வருகின்றமை குறித்து இந்த வரைவில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சமய நம்பிக்கைகளுக்கு எதிராக - குறிப்பாக இலங்கையில் சிறுபான்மையின மதப் பிரிவினரான இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்றோருக்கு எதிராக திடீரென மோசமாக அதிகரித்து வரும் வன்முறைகள் அபாய எச்சரிக்கையை எழுப்புவதாக பிரேரணை வெளிப்படுத்துகிறது.

நல்லிணக்கத்துக்கு மிக அடிப்படையான அரசியல் அதிகாரத்தை பரவலாக்குவது, நாட்டின் மக்கள் அனைவரும் மனித உரிமைகளை அனுபவிப்பது ஆகியவை உட்பட தான் பகிரங்கமாக ஒப்புக் கொண்ட அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றுமாறு இலங்கை அரசை மேற்படி பிரேரணை முன்மொழிவு வேண்டியுள்ளது.

பரவலாக இடம்பெற்ற சட்டவிரோதக் கொலைகள், பலவந்தமாக ஆட்களைக் கடத்திக் காணாமற் போகச் செய்தல் ஆகியன தொடர்பில் நம்பகமான விசாரணை செய்தல் -

வடக்கு இலங்கையை இராணுவ மயத்திலிருந்து விடுவித்தல் - காணிப் பிணக்கு விடயங்களில் பக்கச்சார்பற்ற தீர்வுக்கான பொறிமுறையை நடைமுறைப்படுத்தல் -

தடுப்புக் காவல் நடவடிக்கைகள் தொடர்பான கொள்கைகளை மீள மதிப்பீடு செய்தல் -

முன்னர் செயற்பட்ட சுயாதீன சிவில் நிறுவனங்களை மீளவும் வலிமைப்படுத்துதல் -

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் அரசியல் தீர்வை எட்டுதல்-

எல்லோருக்குமுரிய கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை மேம்படுத்திப் பாதுகாத்தலும், சட்ட ஆட்சியின் மறுசீரமைப்புக்கு வழிசெய்தலும் -

போன்ற விடயங்கள் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இந்தப் பிரேரணை முன்மொழிவு வரவேற்றிருக்கின்றது.

ஆனால் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசு வரைந்துள்ள தேசிய நடவடிக்கைத் திட்டம் அந்த பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்குப் போதுமானதேயல்ல என்பதை இந்தப் பிரேரணை முன்மொழிவு வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இதேசமயத்தில், இந்த பிரேரணை முன்மொழி சில விடயங்களை தெளிவாக வலியுறுத்த முற்பட்டிருக்கின்றது.

தனியாட்களுக்கு எதிரான நீதி விசாரணை, இழப்பீடுகள் வழங்கல், உண்மையைக் கண்டறிதல், நிறுவனமயப்பட்ட மறுசீரமைப்பு, பொது ஊழியர் மற்றும் ஊழியர்களை ஒருநிலைப்படுத்தல் போன்றவை உட்பட பரந்தளவில் நீதியை நிலை நாட்டுவதற்காக சட்டமுறையான மற்றும் சட்ட வழியற்ற ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்; அதன் மூலம் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த வேண்டும்; நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிட்டவேண்டும்; நல்லிணக்கமும் முரண்பாடு நீங்கலும் மேம்படுத்தப்பட வேண்டும்; பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்யும் சுயாதீன முறைமை ஸ்தாபிக்கப்பட வேண்டும்; அரச நிறுவனங்கள் மீது நம்பிக்கை கொள்ளும் முறைமை மீள உருவாக்கப்பட வேண்டும்; அத்தோடு சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைவாக சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்த வேண்டும். - இப்படியெல்லாம் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தின் போது சுற்றுக்கு விடப்பட்ட பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் பின்வரும் விடயங்களை அந்த முன்மொழி மீள நினைவூட்டி, மீளச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

* உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைத் திட்டம்.

* மனித உரிமை மீறல்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைமைகள், போக்குகள் அவற்றைக் கண்டறிவதன் மூலம் சரியான நீதி விசாரணைத் திட்டத்துக்கு வழி செய்தல்.

* மோசமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள் போன்றவற்றில் ஈடுபட்டோருக்கு சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்து விலக்களிப்பதை முடிவுக் கொண்டு வந்து, அவர்களை சரியான நீதி விசாரணைகளின் முன் நிறுத்துவதில் அரசுக்கு உள்ள பொறுப்பு.

* உண்மையைக் கண்டறிந்து, நிலைநாட்டி, நீதி எட்டப்படுவதை உறுதிப்படுத்துவதில் தேசிய பொறிமுறை தொடர்ந்து தவறிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, ஆகவே, அத்தகைய மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் குறித்து மேலும் விசாரிக்க மனித உரிமைகள் கவுன்ஸில் தானாகவே ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறையை ஸ்தாபிப்பதோடு, உள்நாட்டில் பொறுப்புக் கூறுவது தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனையும் கண்காணிக்க வேண்டும் என முடிவு செய்து அதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள பரிந்துரை.

இவ்வளவு விடயங்களையும் அப்பட்டமாக - வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை அந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பில் உரிய பரிந்துரைகளை முன்வைப்பதில் பெரும் தவறிழைத்திருப்பதாகவே பாதிக்கப்பட்ட தரப்பினரும் நோக்கர்களும் கருதுகின்றார்கள்.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், நீதியின் ஆட்சி ஆகியவற்றுக்கு எதிரான மீறல்கள் குறித்து விலாவாரியாக - விவரமாக - கோடிகாட்டிய இந்தப் பிரேரணை மீண்டும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வாக தேசிய மட்டத்தில் நடைபெறும் விசாரணைப் பொறிமுறை குறித்தே பிரஸ்தாபித்திருக்கின்றமை ஆச்சரியத்துக்குரியதாகும்.

தேசிய மட்ட விசாரணைப் பொறிமுறை நடவடிக்கை தெளிவான பெறுபேற்றைத் தரத் தவறுமிடத்து சுயாதீனமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணையே அவசியம் என்ற முடிவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தமது பரிந்துரையில் குறிப்பிட்டிருப்பதை இந்த முன்மொழிவு வரவேற்றுள்ளது; ஆனால் அதை உடனடியாக முன்னெடுக்கும்படி அது குறிப்பிடவில்லை.

அதற்கு மாறாக -பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகியவை தொடர்பில் முன்னெடுக்கப்படும் தேசிய மட்ட (அதாவது நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும்) நடவடிக்கைகள், இரு தரப்புகளினாலும் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகள் ஆகியவை குறித்து கண்காணித்து, மதிப்பீடு செய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை இந்தப் பிரேரணை வடிவம் கோரியிருக்கிறது.

அதேநேரம் இந்த மதிப்பீடு குறித்து தனது அவதானிப்பை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 27 ஆவது கூட்டத் தொடரில் (2014 செப்ரெம்பரில்) வாய் மூலமும், 28 ஆவது கூட்டத் தொடரில் (2015 மார்ச்சிலும்) அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஆணையாளரைக் கோருகிறது இந்த முன்மொழிவு.

இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவின் வடிவத்திலேயே இந்தப் பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்படுமானால் அது இரண்டு விடயங்களை வெளிப்படுத்தி நிற்கும்.

1. இலங்கையில் யுத்த காலத்தில் இழைக்கப்பட்ட கொரடூரங்களுக்கு சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணைப் பொறிமுறை இப்போதைக்கு இல்லை. தற்போதைக்கு நாட்டுக்குள் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படக்கூடிய விசாரணைப் பொறிமுறையே தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

2. இவ்விடயத்தில் இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டு பிடித்தால் கூட அடுத்த ஆண்டு செப்டெம்பர் வரை - அதாவது அடுத்த ஒரு ஆண்டுக்கு - இலங்கை எதிரான அழுத்தமான நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பது இப்போதே தெளிவாகிவிடும்.

இதே சமயம் இந்த ஆண்டு இறுதியுடன் தற்போதைய ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையின் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்த வருடம் மார்ச்சில் இலங்கை விவகாரம் எடுக்கப்படும் போது புதிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பதவியேற்றிருப்பார். அவரின் கீழ் இதே உத்வேகத்தோடு இவ்விடயம் எடுக்கப்படுமா என்பதும் சந்தேகமே.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104907&category=TamilNews&language=tamil

எல்லாமே வெறும் கண்துடைப்பு. ஐநாவோ, சர்வதேச நாடுகளோ ஒன்றுமே செய்யபோவதில்லை. வெறும் கண்டனம், உள்நாட்டு விசாரணையோடு எல்லாமே முடிந்து விடும். சர்வதேச விசாரணை ஒரு போதுமே நடைபெறாது. தலைவர் மீண்டும் வருவதை தவிர தமிழர்களுக்கு வேறு எந்த நாதியும் கிடையாது.

அடுத்த வருடம் பான்கி மதிரி ஒருவர் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பதவியேற்றால் எல்லாமே பூசி மெழுகி மறைக்கப்பட்டுவிடும்.ஆயுட்கால் மன்னர் மஹிந்தவை ஒன்றுமே செய்யமுடியாது. மஹிந்தவை இரண்டு தடவையும் ஜனாதிபதியாக்கிய தலைவரால் மட்டுமே மஹிந்தவை அகற்ற முடியும். 

 

சர்வதேச விசாரணை சர்வஜன வாக்கெடுப்பு எல்லாமே ஒரு மாயை. அதனை நம்பி மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் நம்மவர்களின் நிலை தான் பரிதாபம். உக்ரெய்ன் விடயத்தில் பிசியாக இருக்கும் அமெரிக்காவுக்கு எமது பிரச்சினைக்கெல்லாம் நேரம் இருக்காது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாமே எதிர்பார்த்ததுதான்....

 

மஹிந்தவை இரண்டு தடவையும் ஜனாதிபதியாக்கிய தலைவரால் மட்டுமே மஹிந்தவை அகற்ற முடியும். 

 

குறும்பு..... :lol: :lol:..அண்ணன் தமிழ்நாட்டு சீமானோ?

 

ஆரம்பமே அதிரடியா இருக்கு..இது நகல் தானே...அசலில் எப்படி இருக்கோ தெரியாது...

Edited by naanthaan

குறும்பு..... :lol: :lol:..அண்ணன் தமிழ்நாட்டு சீமானோ?

 

ஆரம்பமே அதிரடியா இருக்கு..இது நகல் தானே...அசலில் எப்படி இருக்கோ தெரியாது...

 

அண்ணன் தமிழீழ சீமான். நகலே இப்படி அதிரடியென்றால் அசல் எப்படியிருக்கும்.  :D  :D  :D 

அண்ணன் தமிழீழ சீமான். நகலே இப்படி அதிரடியென்றால் அசல் எப்படியிருக்கும்.  :D  :D  :D 

 

உங்களை சொல்லல..அமெரிக்க தீர்மானத்தை சொன்னேன்...

உங்களை சொல்லல..அமெரிக்க தீர்மானத்தை சொன்னேன்...

 

நானும் என்னை சொல்லல. அமெரிக்க தீர்மானத்தைதான் சொன்னேன்.  :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அதீத நம்பிக்கையோடு எதிர்பார்த்த ஒரு அணியின் தோல்வியைத் தாங்கிக்கொள்வது கடினம். :o:blink: சாதாரண ஒரு அணி; வென்றால் மகிழ்ச்சி...! தோற்றால் தொடர்வது? முயற்சியில் நம்பிக்கை...!! தொடருவோம்....!!!. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

50 வருடங்கள் இலங்கைக்கு கொடுத்தாலும் மனித உரிமை கொள்கையில் சிறிலங்கா எந்த மாற்றத்தையும் உலகுக்கு காட்ட போவதில்லை....பல்லாயிரம் ஆண்டுகளாக நூலகம் எரிப்பதும்....சிறுபான்மையினரை நிர்வாணமாக எரிப்பதும் தான் அவர்களின் மனித உரிமை

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தமிழர்தரப்புக்கு இருக்கும் ஒரேயொரு தெரிவு, அழுதும் அவள்பிள்ளையை, அவளே பெத்துக்கொள்ளவேண்டுமென்பதுபோல், தண்டனையை நாமே கொடுத்திடல்வேண்டும் எனும் நிலைப்பாட்டை எடுப்பதுவே. நாம் கொடுக்கும் அடி பலமானதாகவும் இனிமேல் சிங்களமென்ன சர்வதேசமுமே எமது விடையத்தில் முக்கி முனகி எழுந்திருக்கமுடியாதபடியாக இருக்கவெண்டும்.

 

பந்து அவர்களது கைகளிலிருந்து எமது கைகளுக்கு வந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
இந்த செய்தி எமது வழக்கமான மொழிபெயர்ப்புத் தவறோ என்று தோன்றுகின்றது.
 
அமரிக்கா, தானே மேலும் அவகாசம் கொடுக்கும் அளவுக்கு மனித உரிமைகள் சபையில் அதிகாரம் கொண்டதல்ல. 
 
நவி பிள்ளையின் சிபார்சான சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தரும் அமெரிக்க தீர்மானம், அது குறித்த முன்னேற்ற விபரங்களை வரும் செப்டம்பர், மார்ச் மாதங்களில் சபைக்கு தரவேண்டும் என்று கோரி நிக்கிறது.
 
இது குறித்து கொழும்பு பத்திரிகைகள் எதுவும் குறியாமல், புலம் பெயர் அமைப்புகள், அமெரிக்க அறிக்கை குறித்து அதிருப்தி என வெறுமனே தெரிவிக்கின்றன. 
 
  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானம் வரும்வரை பொறுத்திருப்பதே நல்லது. 

 

ஆனாலும், சேர்ந்தே அழித்த சர்வதேசம் எமக்கு ஒரு நியாயமான தீர்வொன்றைத்தரும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையும் சேர்ந்து இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தேடுவது நல்லது.

அதையும் விட இப்பவே இந்த தீர்மானத்தை இலங்கை வரவேற்றால் இன்னும் நல்லது.

எதோ என்னால் இயன்ற இலங்கைக்கான அறிவுரை. :icon_idea:


கோச்சடையான் படம் மாதிரி இருக்கு சர்வதேச விசாரணை. எப்போ வரும் என்று யாருக்கும் தெரியாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியா, சர்வதேசம் எல்லாருக்குமான அமிலப் பரீட்சை. இவர்களால் எதுவுமே முடியாது என்பதே இங்கு நிறுவப்படுகிறது.

சர்வதேச விசாரணை...

 

 

Ennatha_4_zps4fa0e514.jpg

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.