Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரம்பிக்கப் போகிறது வடக்கின் போர்

Featured Replies

வடக்கின் சமரில் எதுவும் நிகழலாம் என்ற நிலை


யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் 108ஆவது வடக்கின் சமரில் எதுவும் நிகழலாம் என்ற நிலை இன்றைய நாள் ஆட்டநேர முடிவின்போது காணப்பட்டது.

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட இப் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவின்போது யாழ். மத்திய கல்லூரி அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கட் மீதமிருக்க யாழ். மத்திய கல்லூரி அணி 124 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

மத்திய கல்லூரி அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் கே. சன்சயன் (26), ஜூனியஸ் கனிஸ்டன் (15), பீ. ஹிரோஜன் (13), எஸ். சௌமிதரன் (12) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைத் தொட்டனர்.

பந்துவீச்சில் ஆர். லோகாதீஸ்வர் 13 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 27 ஓவர்கள் பந்துவீசி 38 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இப்போதைக்கு இந்தப் போட்டியில் 91 ஓட்டங்களுக்கு 11 விக்கட்களைக் கைப்பற்றியுள்ளார்.
நேற்றுக்காலை தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கட் இழப்புக்கு 50 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த செய்ன்ற் ஜோன்ஸ் அணி, எஞ்சிய நான்கு விக்கட்களையும் இழந்த போது அதன் மொத்த எண்ணிக்கை 122 ஓட்டங்களாக இருந்தது.

எம். நிலோஜன் (22 ஓட்டங்கள்), ஆர். லோகாதீஸ்வர் (21 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் கடைசி விக்கட்டில் பகிர்ந்த 54 ஓட்டங்களே செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கு கைகொடுத்தது.

மத்திய கல்லூரி பந்துவீச்சில் பி. நிரூபன் 6 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 17 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களையும் எஸ். மதுசன் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களையும் எஸ். அலன்ராஜ் 4 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் கைப்பற்றினர்.

முதலாவது இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரி 162 ஓட்டங்களையும் செய்ன்ற் ஜோன்ஸ் 122 ஓட்டங்களையும் பெற்றன. மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

 

 

http://www.virakesari.lk/?q=node/362143

  • Replies 69
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வடக்கின் போரில் முறுகல்
 
 
யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்ஜோன்ஸ்  கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வரும் துடுப்பாட்ட போட்டிக்கு ரசிகர்கள் இடையூறு விளைவித்ததாக  தெரியவருகின்றது.

இன்றைய ஆட்டம் தேநீர் இடைவேளைக்காக இடைநிறுத்தப்பட்ட போது  மதுபோதையில் மைதானத்துக்குள் உள்நுழைந்த மத்திய கல்லூரி ரசிகர்கள் விக்கட்டினை பிடுங்கி குழப்பம் விளைவித்தனர்.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசார் மைதானத்துக்குள் நுழைந்து ரசிகர்களை வெளியேறுமாறு பணித்தனர் எனினும் வெளியேற மறுத்த ரசிகர்களுக்கும் பொலிசாருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டு தணிந்ததுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=743322741114380060#sthash.ugZoqfBi.dpuf

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
இதன் பிரகாரம் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கட் மீதமிருக்க யாழ். மத்திய கல்லூரி அணி 124 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

 

 

தமிழ் ஊடகக்காரர்களுக்கு மொழிகள் மட்டுமல்ல.. கணிதமும் பிரச்சனை.

 

94+40= 134 .. சாருங்க. :)

 

இன்றைய ஆட்டம் தேநீர் இடைவேளைக்காக இடைநிறுத்தப்பட்ட போது  மதுபோதையில் மைதானத்துக்குள் உள்நுழைந்த மத்திய கல்லூரி ரசிகர்கள் விக்கட்டினை பிடுங்கி குழப்பம் விளைவித்தனர்.

 

 

 

செரியான குழப்படி பெடியங்கள் போலக் கிடக்கு. பாவம் வேம்படிஸ் பெண்கள்.

 

சுண்டிக்குள் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள், பரியோவான் கல்லூரி ஜென்றில்மன் களை நண்பர்காள கிடைக்க. :)

  • கருத்துக்கள உறவுகள்

செரியான குழப்படி பெடியங்கள் போலக் கிடக்கு. பாவம் வேம்படிஸ் பெண்கள்.

 

சுண்டிக்குள் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள், பரியோவான் கல்லூரி ஜென்றில்மன் களை நண்பர்காள கிடைக்க. :)

 

பரி யோவான் ரசிகர்கள் தான் மத்திய கல்லூரிக் காரர் மாதிரி உடையணிந்து சென்று குழப்பம் விளைவித்ததாக பி.பி.சி சொல்கிறது! :icon_mrgreen:

பரி யோவான் ரசிகர்கள் தான் மத்திய கல்லூரிக் காரர் மாதிரி உடையணிந்து சென்று குழப்பம் விளைவித்ததாக பி.பி.சி சொல்கிறது! :icon_mrgreen:

 

பிபிசி யில் இருக்கும் 'றோ' காரர்களின் விளையாட்டு இது... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் வாழ்கலையில சாகசம் அப்பா..பாவம் SJC பொடியள் மனம் நொந்து போடுவங்கள் ...நெடுகலும் தோத்த சரியில்லை ..பிழைச்சு போகட்டும்

இதெல்லாம் வாழ்கலையில சாகசம் அப்பா..பாவம் SJC பொடியள் மனம் நொந்து போடுவங்கள் ...நெடுகலும் தோத்த சரியில்லை ..பிழைச்சு போகட்டும்

 

என்ன செய்கிறது இப்படி என்றாலும் சொல்லி தப்ப வேண்டியதுதான் :icon_mrgreen:  நல்ல காலம் இங்க நிழலி தான் ஒரு ஆள் பரியோவான் கல்லூரி போல :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றக்கள் பயத்தில இருக்கினம் ...முதல் இன்னிக்ஸ் மாதிரி 60 க்குள் சுருண்டலும் என்று :)

என்ன செய்கிறது இப்படி என்றாலும் சொல்லி தப்ப வேண்டியதுதான் :icon_mrgreen:  நல்ல காலம் இங்க நிழலி தான் ஒரு ஆள் பரியோவான் கல்லூரி போல :D:lol:

 

நாங்கள் வீரர்கள்.. வெற்றியையும் தோல்வியையும் சமமாக எடுப்பவர்களாக்கும்

 

(எதுக்கும் இப்பவே இப்படிச் சொல்லி வைப்பம் )

  • கருத்துக்கள உறவுகள்

நான் மத்திய கல்லூரிக்குத்தான்... சப்போட்.
எனக்கு சென் ஜோன்ஸ் மாணவர்களை... கண்ணிலும், காட்டக் கூடாது.
மாணவிகளில்... வேம்படியை விட, சுண்டுக்குளிக்குத் தான் என் ஆதரவு.mo13.gif:D

வெற்றியை தீர்மனிக்கும் இறுதி கட்டத்தில் இரு அணிகளும் பெரும் சமர் 27-02
news

வடக்கின் போர் என்று வர்ணிக்கப்படும் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகள் மோதும் துடுப்பாட்ட போட்டியில் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி முதல் இனிங்சஸில் 162 ஓட்டங்களையும் இரண்டவது இனிங்ஸில் 94 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி  முதல் இனிங்சஸில்   122  ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது
இரண்டாவது .இனிங்ஸில் 134 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்து ஆடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி  அணி 27  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்து ஆடி வருகின்றது

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=784922742615222276#sthash.RdGP0Ntu.dpuf

என்ன எல்லாம் 27/2 உடன் நின்று விட்டுது :o   'றோ' காரர்  போட்டியை குழப்பி விட்டார்களா :icon_mrgreen:

பொன் அணிகளின் போர்": சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் மோதலில் பலி


பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையில் இன்று நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில்  ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி, இன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

50 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் 40 பந்து பரிமாற்றம் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலையே குறித்த இளைஞன் மைதானத்திலுள் வைத்து  அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலையானவர் பிரதான வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24 ) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையார் ஆவார்.

மோதல் சம்பவம் நடைபெற்ற மைதானத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் மோதலை தடுக்காமல் அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும் மைதானத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்திலையே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதிலும் மேலதிக பொலிசாரை அழைத்து மோதலை தடுக்காமல் இருந்ததாவும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.

அதேசமயம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் பொலிசாரின் அசண்டையீனத்தால் தான் இந்த கொலை நிகழ்ந்ததாகவும் குறித்த பொலிசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு ஊடகங்களே துணைபுரிய வேண்டும் என கோரி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை காரியாலயம் முன்பாக சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அதேவேளை யாழில் நடைபெற்று வரும் மற்றுமொரு துடுப்பாட்ட போட்டியான 'வடக்கின் பெருஞ் சமர்'' என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி,யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையிலான 108 ஆவது துடுப்பாட்ட  போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையானதால் ஏற்பட்ட குழப்ப நிலையினால் போட்டி, முடிவு எதுவுமின்றிக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.virakesari.lk/?q=node/362160

மத்தியஸ்தரினால் மீளப்பெறப்பட்ட தீர்ப்பை ஒரு தரப்பு மறுத்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது

யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கட் போட்டி, மத்தியஸ்தரின் மீளப்பெறப்பட்ட தீர்ப்பு ஒன்றின் காரணமாக மூன்றாம் நாள் காலை 10.45 மணியுடன் ஆட்டம் கைவிடப்பட்டது.
போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலையில் இன்று


மத்தியஸ்தரினால் மீளப்பெறப்பட்ட தீர்ப்பை ஒரு தரப்பு மறுத்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது

யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கட் போட்டி, மத்தியஸ்தரின் மீளப்பெறப்பட்ட தீர்ப்பு ஒன்றின் காரணமாக மூன்றாம் நாள் காலை 10.45 மணியுடன் ஆட்டம் கைவிடப்பட்டது.
போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலையில் இன்று காலை தொடரப்பட்ட ஆட்டத்தில் 125 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு செய்ன்ற் ஜோன்ஸ் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது. அவ்வணி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களை இழந்திருந்தபோது எஸ். மதுசனின் பந்துவிச்சில் பீ. துவாரகசீலனை விக்கட்காப்பாளர் ஜூனியஸ் கனிஸ்டன் ஸ்டம்ப் செய்து கேள்வி எழுப்ப மத்தியஸ்தர் ஆட்டமிழப்புக்கான சமிக்ஞையைக் கொடுத்தார். ஆனால்; விக்கட்களின் மேலுள்ள பெய்ல்ஸ் விழாததை அவதானித்த பிரதான மத்தியஸ்தர் அது ஆட்டமிழப்பல்ல என்பதை மற்றைய மத்தியஸ்தருக்கு எடுத்துக்காட்ட அவர் தனது தீர்ப்பை மீளப்பெற்று துவாரகசீலன் ஆட்டமிழக்கவில்லை என அறிவித்தார்.

இதனை அடுத்து மத்தியஸ்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்தய அணியினர் போட்டியைத் தொடர மறுத்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் 162 ஒட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்களையும் பெற்றது.

செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்ளையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் கைவிடப்பட்டபோது 2 விக்கட்களை இழந்து 25 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

 

http://www.virakesari.lk/?q=node/362166

  • கருத்துக்கள உறவுகள்

சச்சினுக்கு ஏன் பத்மஶ்ரீ விருதெல்லாம் கொடுக்கினம் என்டு இப்பதான் கொஞ்சம் விளங்குது...!

நடுவர்களின் செயற்பாடே போட்டி கைவிடப்பட காரணம் : அதிபர்
 

 

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது என யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்  அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் கவலை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சென்றல் நைற் ஒன்று கூடல் நிகழ்வு சனிக்கிழமைஇரவு 7.30 மணிக்கு கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் பழைய மாணவ சங்கத் தலைவர் எஸ்.தமிழ்அழகன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியானது, வரலாற்றுப் பாரம்பரியத்தினை கொண்ட வடமாகாணத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இடம்பெற்று வருகின்றது. இரு பாடசாலைகளும் வரலாற்றுப் பாரம்பரியங்களைக்கொண்ட புகழ்பூத்த கல்லூரிகளாக விளங்குகின்றது.

இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையில் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற போட்டியானது கைவிடப்பட்டமை கவலையளிக்கின்றது. இம்முறை  வடக்கின்பெரும் போர் போட்டியில் ஏதாவது ஒரு பாடசாலை வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த எங்களுக்கு நடுவர்களின் தவறான செயற்பாடு காரணமாக போட்டி கைவிடப்பட்டமை அதிர்ச்சியளிக்கின்றது.

இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையில் நீண்ட நட்புப்பாரம்பரியம் காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் நூற்றாண்டினைத் தாண்டியும் இப்போட்டியினை நடத்தி வருகின்றோம்.

இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்களும் மாணவர்களும் போட்டியை நடாத்துவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை பாராட்டிற்குரியது.

ஆனால் எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பினை ஏற்படுத்திக்கொண்டிருந்த போட்டியில் நடுவர்களின் செயற்பாடு போட்டியினை கைவிடும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட பாடசாலைகளின் போட்டிக்கு நடுவர்களாக கடமையாற்றுபவர்கள் பொறுப்புணர்வுடன் நடுநிலையாக தமது கடமைகளை ஆற்ற வேண்டியது முக்கியமாக அமைக்கின்றது.

அடுத்து வருகின்ற வடக்கின் பெரும் போர் போட்டி இவ்வாறான குறைகள் நீக்கப்பட்டு சிறந்த முறையில் நடாத்தப்படவுள்ளது. எமது பாடசாலையினை பொறுத்தவரையில் பழைய மாணவர்களுடைய செயற்பாடு பாராட்டிற்கு உரியதாக விளங்குகின்றது என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=490342745716691531#sthash.3IzD8K4Z.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நிஞாயமாக  ஸ்டம்ப் பண்னும்போது போல்ஸ் விழாவிட்டால் அது அவுட்டாகாது, சிலசமயம்  அம்பயர் தவறாகக் கொடுத்திருந்தால் அதை இரண்டு அணிக் கப்டனும் நடுவர்களும் தமக்குள் பேசித் தீர்த்து  தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும். அதுதான் விளையாட்டுக்கும் , பாடசாலைகளின் மாண்புக்கும் அழகு. வெற்றி தோல்வி  எல்லாம் அதற்கப்புறம்தான். யாழின் இரு பிரதான பாடசாலைகளிடமே  பண்புக்குப் பஞ்சம் என்டால் என்ன சொல்வது. இதன் மேல் அதிபர்கள் ,விளையாட்டு ஆசிரியர்கள் தலையிட்டாவது அதைத் தீர்த்து விளையாட விட்டிருக்க வேண்டும்.

 

அதை விட்டிட்டு  உலகெங்கிலுமுள்ள  லட்சக்கணக்கான ரசிகர்களையும், மாணவர்கள் , ஆசிரியர்களையும் ஏமாற்றிவிட்டார்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்களைக் குறைசொல்லும் மத்திய கல்லூரி அதிபரின் கூற்று அதிர்ச்சியளிக்கின்றது! :o

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்த என்ர வாயை அதிபர் தன் வாயைத் திறந்து கிளறிப் போட்டார்.

 

ஒரு நடுவர் தவறான தீர்ப்புக் கொடுக்க, மற்றைய நடுவர் (பிரதான நடுவர்) ஆதாரத்தோடு தீர்ப்பை மாற்றிக் கொடுக்கிறார். பின்னர் இரண்டு நடுவர்களும் ஒரே தீர்ப்பை பரி யோவான் அணிக்கு சார்பாக கொடுக்கின்றனர். விடயம் இவ்வளவு எளிதானது.

 

மத்திய கல்லூரி அணியும் , பழைய மாணவர்களும் தீர்ப்பை மாத்தி எழுதும் படி நடுவர்களை நிர்ப்பந்திக்கும் வகையில் நடந்து கொண்டதால் போட்டி கைவிடப் பட்டது. இதில் நடுவர்களிலும் பிழை இல்லை, பரி யோவான் அணியிலும் பிழை இல்லை. Sportmanship என்றாலே என்ன எண்டு தெரியாத மத்திய கல்லூரி அணியினரின் தலைமை, பழைய மாணவர்கள், இப்ப சொன்ன கருத்தை வைத்துப் பார்க்கும் போது கல்லூரியின் அதிபர்/விளையாட்டுப் பொறுப்பாசிரியர், இவர்களில் தான் முழுப் பிழையும். இந்த லட்சணத்தில் அடுத்த ஆண்டுப் போட்டியைப் பற்றியும் இப்பவே திட்டம் வேற!

 

ஒரு யோசனை:

 

அடுத்த போட்டிக்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து நடுவராக வைக்கலாம். அல்லது "நடுவர் தீர்ப்புகள் இறுதியானவை" என்ற விதி எங்களுக்குச் சரி வராததால் நடுவர் இல்லாமலே "தெருக் கீரிக்கட்டு" மாதிரி விளையாடலாம்! 

 

விளையாட்டு என்றால் பந்தை விசுக்குறதும் மட்டையைச் சுழற்றுறதும் மட்டும் தான் எண்ட ஐடியாவோட மாணவர்களின் நேரத்தையும் சக்தியையும் வீணாக்காமல் ஒரு இரண்டு வருஷத்துக்கு கீரிக்கட்டைச் சுருட்டி வைச்சுப் போட்டு மனப்பாங்கை முதலில திருத்துங்கோ! "பாரம்பரியம் பன்னாடை" எண்டு டயலாக் விட்டுக் கொண்டு இருக்காம ஒழுக்கமாக விளையாடுங்கோ அல்லது சும்மா இருங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.