Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோர் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்த தாயும் மகளும் கடத்தப்பட்டுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

காணாமல் போனோர் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்த தாயும் மகளுமான குடும்பமொன்றினை இலங்கை படையினர் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.நவநீதம்பிள்ளையின் யாழ்.பொதுநூலக விஜயத்தின் போதும் கமருனின் விஜயத்தின் போதும் தனது காணாமல் போன சகோதரர்களை கண்டுபிடித்து தரக்கோரி கதறிய விபூசிகா –வயது 13 என்ற அச்சிறுமியின் கதறல் அனைவரதும் மனங்களை கலங்க வைத்திருந்தது.

இந்நிலையில் இறுதி யுத்தத்தின் பின்னராக எஞ்சிய தனது தாயுடன் முரசுமோட்டையினில் வசித்து வந்த குறித்த சிறுமியும் தாயுமே கடத்தப்பட்டுள்ளனர். எனினும் முன்னதாக படையினர் இளைஞன் ஒருவனை துரத்தி வந்ததாகவும் குறித்த இளைஞன்  இவர்களது வீட்டினூடாகவே தப்பி ஒடியிருந்ததாகவும் அதை தொடர்ந்து வீட்டை சுற்றி வளைத்துள்ள படையினர் தாய் மற்றும் மகளை கடத்தி சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

எனினும் துரத்தி வரப்பட்ட இளைஞர் யார் என்பது பற்றியோ அவர் எங்குள்ளார் என்பது பற்றியோ தகவல்கள் இல்லையென கூறப்படுகின்றது.குறித்த சிறுமியான விபூசிகா அண்மையிலேயே பெரியவளானதுடன் புலம்உறவுகள் சிலர் ஊடகவியலாளர்கள் ஊடாக அவளது கல்வியை தொடர வழி சமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104225/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாடு. இதற்கு இன்னும் கால அவகாசம் வழங்கினம்.. ஜனநாயகத்தை உச்ச அளவுக்கு கொண்டு போக.

 

எல்லாருமே பச்சைக்கள்ளர்.

 

இவர்களின் விடுதலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட எல்லோரும் வலுவாக உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். :icon_idea:

சிறுவனை துரத்திய கதை நடிக்கபட்ட நாடகமாதிரியிருக்கு.

 

இதில் கூட்டமைப்பு கூட்டு முன்னணியும் ஒன்றாக சேர்ந்து தேட வேண்டும் என்பது கோரிக்கை.

 

எந்த காம்பில் என்றது கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதை பிருத்தானிய தூதுவராலயம், ஐ.நா போன்றவற்றில் தெரியப்படுத்த வேண்டும்.

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக  உலகம் பூராகவும்  இந்த செய்தியைப்பரப்பவும் உறவுகளே............

உடனடியாக உலகம் பூராகவும் இந்த செய்தியைப்பரப்பவும் உறவுகளே............

அதற்கு தமிழ் ஆங்கில ஊடகவியலார்கள் தேவை.

அப்படி இருக்கும் இரண்டு பெரும் ராஜபக்சவின் பொக்கெட்டில்.

சும்மா தமிழ் புலோக்குகளில் போட்டு ஒப்பாரி வைக்கத்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

காணாமல் போனோர் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்த தாயும் மகளுமான குடும்பமொன்றினை இலங்கை படையினர் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.நவநீதம்பிள்ளையின் யாழ்.பொதுநூலக விஜயத்தின் போதும் கமருனின் விஜயத்தின் போதும் தனது காணாமல் போன சகோதரர்களை கண்டுபிடித்து தரக்கோரி கதறிய விபூசிகா –வயது 13 என்ற அச்சிறுமியின் கதறல் அனைவரதும் மனங்களை கலங்க வைத்திருந்தது.

இந்நிலையில் இறுதி யுத்தத்தின் பின்னராக எஞ்சிய தனது தாயுடன் முரசுமோட்டையினில் வசித்து வந்த குறித்த சிறுமியும் தாயுமே கடத்தப்பட்டுள்ளனர். எனினும் முன்னதாக படையினர் இளைஞன் ஒருவனை துரத்தி வந்ததாகவும் குறித்த இளைஞன்  இவர்களது வீட்டினூடாகவே தப்பி ஒடியிருந்ததாகவும் அதை தொடர்ந்து வீட்டை சுற்றி வளைத்துள்ள படையினர் தாய் மற்றும் மகளை கடத்தி சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

எனினும் துரத்தி வரப்பட்ட இளைஞர் யார் என்பது பற்றியோ அவர் எங்குள்ளார் என்பது பற்றியோ தகவல்கள் இல்லையென கூறப்படுகின்றது.குறித்த சிறுமியான விபூசிகா அண்மையிலேயே பெரியவளானதுடன் புலம்உறவுகள் சிலர் ஊடகவியலாளர்கள் ஊடாக அவளது கல்வியை தொடர வழி சமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104225/language/ta-IN/article.aspx

 

இவர்களை மீட்க என்ன செய்யப்போகின்றோம்.உடனேயே இதற்கு ஒரு முடிவு எடுத்து செயலில் இறங்கினால்த்தான் அவர்களைக்
காப்பாற்றமுடியும்.

இவர்களை மீட்க என்ன செய்யப்போகின்றோம்.உடனேயே இதற்கு ஒரு முடிவு எடுத்து செயலில் இறங்கினால்த்தான் அவர்களைக்
காப்பாற்றமுடியும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை எல்லாம் வேட்டி  சால்வை/ கோட் சூட்  போட்ட தலைவர்கள்  கதைக்க முடியாது.....;

 

ஒருவர் இருவர் கைத்தட்டுவதால், பெருச்சாளிகளுக்குத்தான் நன்மை ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BBC/tamil

 

'கிளிநொச்சியில் ஒரு பொலிஸ்காரர் காயம்' - பொலிஸ் பேச்சாளர்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 மார்ச், 2014 - 15:36 ஜிஎம்டி
Facebook Twitter Google+ பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக .
இலங்கைப் பொலிஸார் ( ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி பகுதியில் ஒரு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

கிளிநொச்சியில், தர்மபுரம் பகுதியில் ஒரு வீட்டை இராணுவத்தினர் சுற்றி வளைத்து, அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை அங்கு தடுத்து வைத்திருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்தப் பெண்களை தாம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை அறிய முற்பட்டபோது, அவர்களுடன் அங்கிருந்த யாரோ, தன்னை அவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை என்றும், அவர்கள் தம்மை பொலிஸார் என்று கூறியதாகவும், அங்கு ஒரு விசாரணை நடப்பதாக அவர்கள் கூறியதாகவும், சட்டத்தரணி கஜேந்திர குமார் பொன்னம்பலம் பிபிசிக்கு கூறியிருந்தார்.

இந்த விடயம் குறித்து பொலிஸ்தரப்பு பேச்சாளர் அஜித் ரோகண அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது ஒரு குற்றவியல் சம்பவம் என்று அவர் கூறினார்.

அந்த வீட்டுக்கு ஒரு கிரிமினல் குற்றவாளியை தேடி பொலிஸார் சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் அப்போது ஒரு பொலிஸ்காரருக்கு காலில் காயம் ஏற்பட்டு விட்டது என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

காயமடைந்த பொலிஸ்காரர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பதை தன்னால் உடனடியாக கூற முடியாது என்றும் அதனையடுத்து அங்கு பொலிஸார் விசாரணை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தச் சம்பவத்தில் இராணுவத்துக்கு சம்பந்தம் கிடையாது என்றும் அது ஒரு கிரிமினல் சம்பவம் மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டார்"""

 

நன்றி BBC;

இவை இரண்டும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

3fe0ee685e0e12fb7f52a1d9670f5555.jpg

கிளிநொச்சியில் தாயும் மகளும் இன்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
கிளிநொச்சி தருமபுரம் முசிலம்பிட்டி வீட்டுத்திட்டத்தில் தன் பெண்பிள்ளையுடன் கணவனையும் ஆண் பிள்ளைகளையும் இழந்த நிலையில் வசித்து வந்த ஜெயக்குமாரியின் வீட்டினுள் புகுந்த பொலிசார் அவரையும் அவரது 13 வயது மகளையும் கைதுசெய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
ஜெயக்குமாரியின் மூத்த மகன் போராட்டத்தில் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு மகன்கள் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு காணாமற் போயுள்ளனர். 
 
இந் நிலையில் தன் பிள்ளைகளை தேடித் தருமாறு எல்லாப் போராட்டங்களிலும் ஜெயக்குமாரி தன் பெண் பிள்ளையுடன் கலந்துகொண்டு வந்ததுடன்,  தன் பிள்ளைகள் தொடர்பாக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டு வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரினதும் கைது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
குறித்த கைதுச் சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=641552736313460154

நாம் என்ன செய்ய முடியும் அவள் " விடுதலை " க்காக இறைவனை பிரார்த்திப்பதை தவிர ...

Girle4_CI.jpg

 

நாம் என்ன செய்ய முடியும் அவள் " விடுதலை " க்காக இறைவனை பிரார்த்திப்பதை தவிர ...

என் அண்ணாவ தாங்கோ .., " " என் அண்ணாவ எங்கே மறைச்சு வைச்சிருக்கிறீங்க... "என காணாமல்போனவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் ஒரு சிறுமி கதறி அழுவாள் .

அந்த சிறுமி மூன்று அண்ணன்களுக்கு நான்காவதாக பிறந்தவள். முதல் இரண்டு அண்ணாகளையும் பறிகொடுத்து விட்டாள் மூன்றாவது அண்ணனை தொலைத்து விட்டு தன் தாயுடன் சேர்ந்து தேடிக்கொண்டு இருக்கின்றாள்.

இவள் காணாமல் போனவர்களின் உறவுகளால் நாடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு தன் அண்ணாவை மீட்பதற்காக கதறி அழுவாள்.

புளியம்பொக்கணை முசுறன்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமி தர்மபுரம் மகா வித்தியாலையத்தில் தரம் 8 லில் கல்வி கற்று வருகிறாள் 

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் மூன்று அண்ணன்களுக்கு நான்கவதாக பிறந்தவளே விபூசிகா என்னும் அந்த சிறுமி 

இவள் சிறு வயதாக இருந்த போதே தகப்பனார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் .அதன் பின்னர் இவளது தாயார் கூலி வேலை செய்தும் வீட்டில் இருந்து கடைகளுக்கு சாப்பாடு செய்து கொடுத்தும் அதன் மூலம் வரும் வருமானத்திலையே இவர்களை வளர்த்து வந்தார் 

இந் நிலையில் சிறுமியின் மூத்த அண்ணன் படித்து கொண்டிருந்த காலப்பகுதியில் 2006ம் ஆண்டு 10 மாதம் 20 ம் திகதி வீட்டுக்கு அருகாமையில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்ப்பட்டார்.

அதன் பின்னர் திருகோணமலையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என கருதி அந்த சிறுமியின் தாய் தன் ஏனைய மூன்று பிள்ளைகளுடனும் வன்னிப்பகுதிக்கு வந்து குடியேறினாள் 

பின்னர் யுத்தம் காரணமாக ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து சென்று 2009ம் ஆண்டு 5ம் மாதம் 5ம் திகதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்த போது அங்கு வீசப்பட்ட எறிகணைக்கு தனது இரண்டாவது அண்ணனையும் பறிகொடுத்தாள் 

அதன் பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்ற வேளை 2009ம் ஆண்டு 5ம் மாதம் 15ம் திகதி தன் மூன்றாவது அண்ணனையும் தொலைத்து விட்டாள் .

அதன் பின்னர் தனது தாயுடன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்துவிட்டாள் . தன் மூன்றாவது அண்ணனனையும் பறிகொடுத்து விட்டதாக நினைதிருந்த வேளையில் தான் L.L.R.C புத்தகத்தில் தன் அண்ணனின் படம் இருப்பதாக அறிந்து கொண்டாள் 

அவள் அந்த புத்தகத்தை பார்த்த போது புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் போராளிகள் என சில இளைஞர்கள் உடல் பயிற்சி செய்யும் படம் இருந்தது. அந்த இளைஞர்களுக்குள் தனது மூன்றாவது அண்ணனும் இருப்பதை கண்டாள் 

அதன் பின்னரே தன் அண்ணன் உயிருடன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில் அவனை தேடி அலைந்து கொண்டும் அண்ணனை மீட்பதற்காகவும் கதறி அழுது கொண்டு இருக்கிறாள்.

கணவனையும் இழந்து மூத்த இரண்டு ஆண் பிள்ளைகளையும் இழந்து மூன்றாவது ஆண் மகனையும் தொலைத்து விட்டு நான்காவது பெண் பிள்ளையுடன் சேர்ந்து தொலைந்து போன தன் மூன்றாவது மகனை பற்றிய தகவல் அறிய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு கதறி அழுது கொண்டு இருக்கிறாள் அந்த சிறுமியின் தாய்

தொலைந்த தன் மூன்றாவது மகனை பற்றிய தவல்களை அறிய அந்த தாய் செல்லாத இடம் இல்லை எங்கும் அவனை பற்றிய தகவல்களை அந்த தாயால் அறிய முடியவில்லை 

தன் மகன் இன்றும் உயிருடன் ஏதோ ஓர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்றே அந்த தாய் நம்புகிறாள்.

தன் மகனை உடனே விடுதலை செய்யாவிட்டாலும் அவனை பற்றிய தகவல்களையாவது தெரிவியுங்கள் என்று கோரியே அனைத்து போராட்டங்களிலும் அந்த தாய் கலந்து கொண்டு கதறி அழுகிறாள்.

அதேவேளை அந்த தாய் தனது நான்காவது பிள்ளையான அந்த சிறுமியின் எதிர்காலம் பற்றியும் கவலையுடன் இருக்கிறாள். 

குறித்த சிறுமி பற்றி தாய் கூறுகையில் 

இவள் அண்ணா வேணும் என்று அழுது கொண்டு இருக்கிறாள். படிப்பில் கவனம் செலுத்துகிறாள் இல்லை. வீட்டிலும் வெறித்து பார்த்து கொண்டு இருப்பாள். திடீர் திடீர் என அண்ணா வேணும் என அழுவாள். 

ஏம்மா அண்ணாவை விடுனம் இல்லை ? அண்ணாவை எங்கே தடுத்து வைச்சிருபாங்கள் ? அண்ணாவை இன்னுமா சித்திரவதைப்படுத்துவாங்க ? எப்ப அம்மா அண்ணாவை விட்டுவாங்க ? என்றெல்லாம் கேட்டு அழுவாள் எனக்கு என்ன சொல்லுரதேன்றே தெரியாமல் இருக்கும் 

பள்ளிக்கூடம் போகாமல் என்னோடு போராட்டங்களில் கலந்து கொண்டு அண்ணா வேணும் என்று அழுகிறாள். பள்ளிக்கூடம் போய் படி என்றா அண்ணா முதல்ல வரட்டும் அப்புறம் படிக்கலாம் என்கிறாள்.இப்ப இவளை நினைச்சு இவள் எதிர்காலத்தை நினைத்து எனக்கு கவலையாக இருக்கிறது.என அன்று ஒருநாள் அவள் தாயார் கூறினார் 

அந்த சிறுமியோ என் அண்ணா எங்கே ? என் அண்ணாவ எங்கே வைச்சிருக்கிறீங்க ? ஏன் என் அண்ணாவை என்கிட்ட இருந்து பிரிச்சு ஏன் என்னை அநாதை ஆக்கினீங்க ? எனக்கு என் அண்ணா வேணும் என கதறி அழுது கொண்டே இருந்தவள் இன்று அவளும் கடத்தப்பட்டு விட்டாளாம்.

 

 
மயூரப்பிரியன், நன்றி: முகப்புத்தகம்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தன சகோதரர்களுக்காக   மிகவும் ஊக்கமுடன்  ஆர்பாட்டங்களில் கூட் டங்களில் கலந்துகொண்ட பெண் ..எங்க அண்ணவை தாங்கோ ..என்று அழுத் கண்ணீர் உலகம் எங்கும் கேட்டு இருக்கும். இவளுக்கும் சோதனைக் காலமா ....?

  • கருத்துக்கள உறவுகள்

இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கடத்தல் என்றே யூகிக்கலாம்.படையினரால் துரத்தப்பட்ட இளைஞன் படையினரின் புலனாய்வு உறுப்பினராகவே இருக்கும்.இந்த நிலையில் இவர்களே விசாரிக்க வேண்டும் என்று அமரிக்கத் தீர்மானம் சொல்வது வேடிக்கை??????????

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில், தர்மபுரம் பகுதியில் ஒரு வீட்டை இராணுவத்தினர் சுற்றி வளைத்து, அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை அங்கு தடுத்து வைத்திருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்திருந்தனர். அந்தப் பெண்களை தாம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை அறிய முற்பட்டபோது, அவர்களுடன் அங்கிருந்த யாரோ, என்னை அவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை, அவர்கள் தம்மை பொலிஸார் என்று கூறிய, அங்கு ஒரு விசாரணை நடப்பதாக தெரிவித்தனர். திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைவர் - தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/03/140313_killinochiincident.shtml)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் விபூசிகாவும் தாயாரும்? - விடுதலையாகினர் என மற்றும் ஒரு தகவல்: உறுதிப்படுத்த முடியவில்லை:

 

 

 

girl%202_CI.jpg

 

வடக்கில் இடம்பெற்ற மனித உரிமைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட தாய் ஜெயக்குமாரியும் அவரது புதல்வி விபூசிகாவும் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் இருப்பதாக வவுனியாவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறிதொரு தகவல் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தொடர்ந்த அழுத்தங்களால் விபூசிகா விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்ற போதிலும் அவர்களின் கையடக்கத் தொலைபேசி செயற்பாட்டில் இல்லததனால் அதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

நேற்றைய தினம் இலங்கைப் படைப் புலனாய்வாரள்களால் அரங்கேற்றப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிப் பிரயோக நாடகமும் அதனைத் தொடர்ந்து தப்பியோடியதாக காட்டப்படும் இளைஞரும் அவரைத் தேடுவதாக நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளும், இவற்றோடு நீண்ட காலமாக இலக்கு வைக்கப்பட்ட மகனைத் தேடும் ஜெயக்குமாரி மற்றும் அண்ணனைத் தேடும் விபூசிகா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவர்களை தூக்கியமையும் இப்போ பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைப்பு, விசாரணை, சுற்றிவளைப்பு எனத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தொடர்ந்து 400ற்கு மேற்பட்ட படையினரால் சுற்றி வளைக்கப்ட்டுள்ள தர்மபுரம் பகுதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதி ராஜா மற்றும் சரவணபவன் உள்ளிட்ட குழு சென்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனிவா சவால்களை எதிர்கொள்வதற்காக அண்மையில் தேடப்படுவதாக கூறப்பட்ட அப்பாவி இளைஞரான டிப்பர் சாரதி கஜீபன் செல்வநாயகம், மற்றும் அவருடன் 20 புலிகள் தர்மபுரத்தில் தொழிற்படுவதாகவும் புலிகள் தம்மை மீள் அமைத்து வருவதாகவும் சர்வதேசத்திற்கு காட்டும் முயற்சியே தர்மபுரம் நாடகம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104267/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
தருமபுரத்தில் நேற்று கைதான விபூசிகாவும் பாலேந்திரன் ஜெயகுமாரியும்  இன்று மாலை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகள் விபூசிகா விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் பிள்ளையின் நிலைமையை கருத்திற்கொண்டு தாயார் பாலேந்திரன் ஜெயகுமாரியும் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=882932740114613968#sthash.LjEls4UE.dpuf

 

Edited by பிழம்பு

அவர்கள் போராட்டங்களில் முன்னால் நின்றபோது அதிலிருந்த ஆபத்தை சுட்டிக்காட்டி அறிவுரை கூறத்தவறிய TNA யும், TNPA யும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும். 

 

TNA shocked at Kilinochchi arrest
By admin on March 14, 2014
1609976_298633180284225_769801751_n-300x225The Tamil National Alliance (TNA) has protested in the strongest terms the arrest of a widow named Balendra Jeyakumari and her thirteen-year-old daughter Vidushika from Dharmapuram in the Kilinochchi District last evening.

The police claims that gunshots were heard in the vicinity of their home and that a policeman was injured. They also claim that the alleged attackers appeared to have taken shelter in Jeyakumari’s house.

Jeyakumari and Vidushika are active participants in most protests conducted by families of the disappeared in the Northern Province. Jeyakumari’s two sons were killed in the war and the third went missing after she handed him over to the military in May 2009. Vidushika is her only remaining child.

The TNA says a massive contingent of several hundred security personnel surrounded Jeyakumari’s house last afternoon, confiscated their mobile telephones and interrogated them for over four hours before taking them away.

They were reportedly held in Vavuniya overnight and were to be produced before a Magistrate today. However, as of 3.00pm, they are yet to be produced. TNA Members of Parliament Mavai Senathirajah and E. Saranapavan have been at the Magistrate’s Court premises the whole of today.

“We have now heard reports that Jeyakumari and Vidushika may be detained by an Order of the Secretary, Ministry of Defence under the draconian Prevention of Terrorism Act, thereby circumventing the legal requirement that they be produced before a Magistrate within twenty-four hours of arrest. The TNA is shocked and appalled at the conduct of the authorities in this regard. The high-handed conduct of the government, even while its human rights record is under scrutiny at the current sessions of the Human Rights Council, is illustrative of the government’s disdainful conduct towards the Human Rights Council,” the TNA said.

The TNA has demanded that Jeyakumari and Vidushika be produced before a Magistrate forthwith and released. The TNA says it remains deeply concerned for the safety and wellbeing of Jeyakumari and Vidushika, particularly given the context of reported widespread sexual violence against women in the Northern Province. (Colombo Gazette)

 

http://colombogazette.com/2014/03/14/tna-shocked-at-kilinochchi-arrest/

Edited by மல்லையூரன்

சர்வதேசத்தை பற்றியோ அல்லது ஜெனிவா பிரேரணை பற்றியோ சிங்களம் ஏதும் அலட்டிகொள்வதாக தெரியவில்லை. இலங்கையில் தான் வைத்தது தான் சட்டம் என்று நிறுவ நிற்கின்றான் .

இது எங்கே போய் முடியும் என்பதில் தான் தமிழனின் எதிர்காலம் இருக்கு.

நாட்டில் இருந்து குரல் கொடுப்பவர்கள் பாடுதான் பிரச்சனை ,ஏனென்று எவனும் கேட்பாரற்று  நாதியில்லாமல் போய்விட்டோம் .

 

எனக்கு தனியான ஒரு நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை பெரிதாக இருந்ததில்லை.  (ஆசை இருந்தது என்பது வேறு விடயம்) அதற்கு காரணம் இராணுவ ரீதியாக பெரும்பலம் கொண்டதாக எமது இராணுவ பலம் இருந்தாலும் தமிழீழத்தை அங்கீகரிக்கும் நிலையில் ஒரு நாடுமே இல்லாததே காரணமாக இருந்தது.

 

ஆனால் தற்போது நடைபெறும் சில சம்பவங்கள் தமிழருக்கு தமிழீழம் கிடைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசத்தை பற்றியோ அல்லது ஜெனிவா பிரேரணை பற்றியோ சிங்களம் ஏதும் அலட்டிகொள்வதாக தெரியவில்லை. இலங்கையில் தான் வைத்தது தான் சட்டம் என்று நிறுவ நிற்கின்றான் .

இது எங்கே போய் முடியும் என்பதில் தான் தமிழனின் எதிர்காலம் இருக்கு.

நாட்டில் இருந்து குரல் கொடுப்பவர்கள் பாடுதான் பிரச்சனை ,ஏனென்று எவனும் கேட்பாரற்று  நாதியில்லாமல் போய்விட்டோம் .

 

நீங்கள் சொல்லுவது 100 வீதம் உண்மையோ தெரியாது ஆனால் அதுதான் கூடியப்பங்கு நடைபெறுகிறது. எங்களுக்கான பாதை அது இனியும் ஒரு ஆயுத போராடமோ அல்லது சாத்வீக முறையிலானதோ எதுவுமே இலகுவாக இருக்க போவதில்லை ....ஒருவர் இருவர் போராட மிகுதி பேர் பார்த்த்து கொண்டு இருந்தால் முந்தைய முடிவுகள் தொடங்க முன்பே வரும் ..எங்கள் சமூகத்தில் தொடர்ந்து இருக்கும் ஏற்ற தாழ்வுகள் , தொடர்ந்து ஒரு இருக்கப் போகிறது ...தொடர்ந்தும் ஒருபகுதி சிங்களத்த்தில் தங்கி இருக்கத்‌தான் போகிறது , இன்னுமொரு பகுதி இருக்கிற நிலமைகளை பயன்படுதித்தி ஆளை ஆள் சுரண்டத்தான் போகிறது ...

நீங்கள் உங்கள் பழைய  அனுபவங்களில் சொன்னது/செய்தது போன்று (ஊர் விட்ட்டு போய் இயக்கத்தில் சேருவதுவதை சொல்லுகிறேன் ), சில வெளிநாடுகளில்/உள்நாடுகளில் உள்ளவர்கள் தீவிரமாக செயற்படுவார்கள் , இன்னும் கொன்ச பேர் இங்குள்ள கட்டமைப்புகளுக்குள் போய் விஞ்ஞானி மெய்ஞானி,( இசைஞானி............ )ஆக வருவார்கள். அவை எலவே இருக்கிற (ஏற்ரத்தாழ்வு ) பிரச்சனைகளை அப்படியே தொடர்ந்து இருக்க செய்யும் ...

ஆனால் இதுவே முடிவோ தெரியாது. சிங்களவர்களில் எப்படி ஒரு பெரிய மன மற்றம் எதிர்பார்க்கிறோமே , அதைவிட பெரிய மன /தலைமைத்துவ மாற்தை தமிழ் சமூகம் எதிபாகிறது.

ஒவ்வொரு பூவும் , பின்சும் , காயும், கனியும் , தமிழ் சாதி என்று எண்ணாத வரைக்கும் , ஆள்பவர்களும் ஆளப்படுவார்களும், படித்த்தவர்களும் பாமரர்களும் , பள்ளர்களும் வேளாரர்களும் , கரையாரும் ஆம்பத்தரும்,, ........................தொடர்து இருப்பார்கள் ..அப்படி இருக்கும் வரைக்கும் சிங்கள்வர்களை இராசா ஆகவும், வேலைதருபவர் ஆகவும் , மணப்பெண் /ஆண் தருபவர்ஆகவும், கூலி வேலை செய்பவனாகவும் , மேசனாகவும் , தச்சன் அகவும் , கொல்லன் ஆகவும் ...யாதுமாகியும் இருப்பார்கள் ...

நாங்களும்/நான்  பொழுது போகாத நேரத்தில் ..யாழும் கூழும் என்று பொழுதை போக்குவோம் ..

அனந்தி எழிலன் UNHRC யில் பேசிய பேச்சில் இதைப் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

Ms Ananthi Sasitharan “As I speak here today, the Sri Lankan Army has arrested a 13-year-old girl, Vipooshika Balendran, who comes to every protest, crying and seeking to free her brother. Her arrest is as an open threat against every child protesting injustices,” 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயக்குமாரியும் ,மகளும் கைது செய்யப்பட்டதை கண்டித்தும்,விடுதலையை வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம்:தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு 

[Friday, 2014-03-14 20:38:04]
TNPF150A.jpg

நேற்றைய தினம் 13.03.2014 அன்று தர்மபுரம் பகுதியில்வைத்து காணாமல் போனவர்களின் பெற்றோர் ஜெயக்குமாரியும் அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது கைதை கண்டித்தும் விடுதலையை வலியுறுத்தியும் நாளை (15.03.2014) சனிக்கிழமை மு.ப 11.00 மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா நகரில் இடம்பெற இருக்கின்றது. இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.

நன்றி

செ.கஜேந்திரன்

பொதுச் செயலாளர்

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105668&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

f9c6ca9a88507d0cb3b9ef05e075f0be.jpg

தருமபுரத்தில் நேற்று கைதான விபூசிகாவும் பாலேந்திரன் ஜெயகுமாரியும்  இன்று மாலை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகள் விபூசிகா விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் பிள்ளையின் நிலைமையை கருத்திற்கொண்டு தாயார் பாலேந்திரன் ஜெயகுமாரியும் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=391832740115185697

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஜெயக்குமாரி பூசாமுகாமில் - விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு -
14 மார்ச் 2014
lg-share-en.gif
 

 

missing%20people%20relatives_CI.jpg

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13.03.14) பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பெரும் எடுப்பிலான சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதுடைய மகளும் இன்று வெள்ளியிரவு (14.03.14) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

தாயாராகிய ஜெயக்குமாரிக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேல் விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம், அவருடைய 14 வயது மகளாகிய விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்திய தேவைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குற்றவாளி ஒருவரைத் தேடிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது அந்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததையடுத்து, அந்த உத்தியோகத்தர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரால் தேடப்பட்டுவரும் குற்றவாளி ஒருவரைத் தமது வீட்டில் தங்க வைத்திருந்தார் என்பதற்காகவே, விஜயக்குமாரி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு கவலை

இதேவேளை, வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரையில் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த விஜயக்குமாரியின் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும், சுற்றிவளைப்பு காரணத்தினாலும் பெண்களான தாயும் மகளும் கைது செய்யப்பட்டு எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விபரம் தெரியாத நிலை நீடித்திருந்ததாலும், அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியதாக, அங்கு சென்று திரும்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்திற்கும், இந்தப் பெண்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் குற்றமற்ற அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்.

காணமல் போயுள்ள தனது மகனுடைய விடுதலைக்காகப் போராட்டம் நடத்தியமைக்காகவே இந்தப் பெண்ணும் அவருடைய மகளும் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும், முறைப்படி யாழ் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், வவுனியா சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104287/language/ta-IN/article.aspx

தாய்க்கு தடுப்புக் காவலாம். மகளுக்கு நன்னடத்தையாம். கிளிநொச்சி நீதிமன்றத்தின் தீர்ப்பு. பீரிஸ் பயங்கரவாதத்திற்கான ஆதாரம் கிடைக்கப்பெற்றதாகக் கூறுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.