Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு : 10 பேர் பலி ? பதட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்;

தமிழர்கள் பலர். அவர்கள் பலவாறு பலரால் நொந்தவர்கள், பலருக்கு சக தமிழன் மீது அன்பும் பாசமும் காட்டுகிற தமிழ்நாட்டு தமிழர்களை பார்த்திருக்கிற சந்தர்ப்பமே இருந்திருக்காது..தமிழகம் என்றால் இந்தியா என்றும் அவர்களும் எங்களை அழித்தவர்கள் என்கிற உணர்வும் இருக்கிறது.

எரிமலை,

நாங்கள் எங்கே அழித்தோம் என கூற இயலுமா?

அழிவின் விளிம்பிலும் வாளாவிருந்தனேரே என மனத்தாங்கல்கள் இருப்பது நியாயம் தான்..

அப்படி பார்த்தால் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அழியும்போது இலங்கையின் பிற பகுதிகளில் வாழும் ஈழத்தமிழர்கள் ஏன் வாளாவிருந்தனர்? எங்களை விட அவர்கள் (கட்டுப்பாடுகள் இருந்தாலும்) கொதிதெழுந்து தெருவில் வந்து போராடியிருக்க வேண்டுமே?

ஏன் செய்யவில்லை?

மற்ற நாடுகளில் குறிப்பாக பாலஸ்தீனம் எகிப்து, லிபியா நாடுகளில் மக்களின் எழுச்சியை பார்த்திருப்பீர்கள்தானே?

தமிழகம் ஒரு உந்து சக்தியாக இருக்க இயலுமே தவிர ஈழத்தின் போராட்டத்தை இங்கே நடத்த இயலுமாவென ஈழத்தமிழர்கள் யோசித்து யதார்தத்தை உணர்தல் நன்று.

நன்றி

இலங்கையில் மற்ற இடங்களில் பேசாமல் தான் இருந்தவர்கள்.இது பற்றி யாழிலே எழுதியிருக்கிறோம்.அண்மையில் கூட எழுதியிருந்தேன்.ஆனால் அவர்களுக்காவது ஒரு மன்னிப்பு கொடுக்கலாம் அவர்களது உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் இருந்தது.ஆனால் அதையும் மீறி இரு தரப்பும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லி அவர்கள் போராடி இருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு,தமிழ் மொழியை பேசிக்கொண்டு பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் மிகப் பெரிய அவலம் நடக்கும் போது பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க கேடு கெட்ட,சூரணையற்ற தமிழ்நாட்டு தமிழனால் தான் முடியும்.அங்கே இருந்த 5% தமிழரை தவிர மற்றவர்களுக்கு மனிதாபிமானம் என்பதே இல்லை.தமிழக அரசியல்வாதிகள் உண்மை பேசவில்லை,தொலைக்காட்டிகள் மக்களை மழுங்கடித்தன என்பவற்றில் கொஞ்சம் உண்மையிருந்தால் அதை எல்லாம் மீறி தமிழர் என்ட உணர்வு இருக்க வேண்டாமோ!

இந்தியா தான் அழித்தது.ஆரம்பத்தில் இருந்தே இந்தியா மூடிக் கொண்டு தன்ட வேலையை பார்த்துக் கொண்டு இருந்தால் இவ்வளவு அழிவு எங்களுக்கு வந்திருக்காது.என்னைப் பொறுத்த வரை என்ட முதல் எதிரி இந்தியா,பின்னர் தான் இலங்கையரசு...வாலி ஏற்கனவே எழுதின மாதிரி தமிழ்நாட்டுக்காரர் முதலில் தாங்கள் தமிழ்ர் என்று நினைக்க வேண்டும்.அதற்குப் பிறகு தான் அவர்கள் இந்தியர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

...தமிழ்நாட்டில் இருந்து கொண்டு,தமிழ் மொழியை பேசிக்கொண்டு பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் மிகப் பெரிய அவலம் நடக்கும் போது பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க கேடு கெட்ட,சூரணையற்ற தமிழ்நாட்டு தமிழனால் தான் முடியும்.அங்கே இருந்த 5% தமிழரை தவிர மற்றவர்களுக்கு மனிதாபிமானம் என்பதே இல்லை.தமிழக அரசியல்வாதிகள் உண்மை பேசவில்லை,தொலைக்காட்டிகள் மக்களை மழுங்கடித்தன என்பவற்றில் கொஞ்சம் உண்மையிருந்தால் அதை எல்லாம் மீறி தமிழர் என்ட உணர்வு இருக்க வேண்டாமோ!

தமிழன் என்ற உணர்வு கம்மிதான்.

ஆனால் மனிதாபிமானம் இருந்தபடியால் தான் தீக்குளிப்புகள் மற்றும் தற்கொலைகள். இங்கே எத்தனை பேருக்கு ஈழத்தில் நடக்கும் அவலங்கள் தெரியுமென நினைக்கிறீர்கள்? துயரங்கள் தன்வீட்டு வாசலுக்கு வராதவரை அனைவரும் தப்பித்துக்கொள்ளவே பார்ப்பர்.

ஏன் ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கேயே இருந்து போராடவில்லை? ஏன் வெளிநாட்டிற்கு ஓடவேண்டும்?

நீங்கள் நாட்டைவிட்டு ஓடலாம், ஆனால் ஈழம் பற்றி அதிகம் தெரியாத தமிழ்நாட்டுத் தமிழர்கள் உங்களுக்காக போராட வேண்டும்?

நல்ல நியாயமம்மா.

முதலில் நீங்கள் ஒற்றுமையாக அனைவரும் துணிந்து களத்தில் நில்லுங்கள், போராட்ட நியாயத்தை சரியாக பரப்புரை செய்யுங்கள்,

பின்னர் தமிழரென்ன, உலகமே ஆதரவுடன் நிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தான் அழித்தது.ஆரம்பத்தில் இருந்தே இந்தியா மூடிக் கொண்டு தன்ட வேலையை பார்த்துக் கொண்டு இருந்தால் இவ்வளவு அழிவு எங்களுக்கு வந்திருக்காது.என்னைப் பொறுத்த வரை என்ட முதல் எதிரி இந்தியா,பின்னர் தான் இலங்கையரசு...

நடந்த நிகழ்வுகளால் தான் வளர்த்துவிட்ட இயக்கங்கள், தன்னைமீறி தமக்கே வினையாக வந்துவிடுமோவென தில்லிக்கு தவறாக சொல்லப்பட்ட செய்திகளுக்கு தமிழக தமிழர்கள் எப்படி பொறுப்பாக முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்ற உணர்வு கம்மிதான்.

ஆனால் மனிதாபிமானம் இருந்தபடியால் தான் தீக்குளிப்புகள் மற்றும் தற்கொலைகள். இங்கே எத்தனை பேருக்கு ஈழத்தில் நடக்கும் அவலங்கள் தெரியுமென நினைக்கிறீர்கள்? துயரங்கள் தன்வீட்டு வாசலுக்கு வராதவரை அனைவரும் தப்பித்துக்கொள்ளவே பார்ப்பர்.

ஏன் ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கேயே இருந்து போராடவில்லை? ஏன் வெளிநாட்டிற்கு ஓடவேண்டும்?

நீங்கள் நாட்டைவிட்டு ஓடலாம், ஆனால் ஈழம் பற்றி அதிகம் தெரியாத தமிழ்நாட்டுத் தமிழர்கள் உங்களுக்காக போராட வேண்டும்?

நல்ல நியாயமம்மா.

முதலில் நீங்கள் ஒற்றுமையாக அனைவரும் துணிந்து களத்தில் நில்லுங்கள், போராட்ட நியாயத்தை சரியாக பரப்புரை செய்யுங்கள்,

பின்னர் தமிழரென்ன, உலகமே ஆதரவுடன் நிற்கும்.

நாங்கள் தமிழர்கள்

எப்பொழுதும் எவரையாவது எதிர்பார்த்துத்தான் பழக்கம்

பிரபாகரன் என்பவர் இதற்கு ஒரு முன் மாதிரியாக வந்து

நாம் செய்யணும் என்றார்

செய்தும் காட்டினார்

அவரை விட்டுவிட்டு

இன்னும் எதையோ  பேசுகின்றோம் எழுதுகின்றோம்

அவருக்கு  கூட  பாடங்கள் நடாத்துகின்றோம்

இதில் ராயவன்னியன் எந்த  மூலைக்கு......?? :(  :(  :(

தமிழகம் என்ன  செய்தது என்பதை அவரவர் அறிவார்

அந்த மக்களை பேய்க்காட்டி காரியம் சாதித்தோரை

எமக்காக மட்டுமே அம்மக்கள் ஊரைவிட்டே துரத்தியுள்ளனர்

இனியும்  

அவரோடு  இணையாமல்   எமக்கு எதுவுமில்லை

முதலில் நண்பர் யார்?

உடன்பிறப்பு யார் என்பதை  தமிழன் உணரணும்

அந்த உணர்வை  நாம் வளர்த்துக்கொள்ளணும்

சகோதர  பாசத்தக்குள் நாமே நஞ்சு விதைப்பதை  எம்மவர் நிறுத்தணும் :(  :(

தமிழ் நாட்டு தமிழன் தன்னை இந்தியன் என்று நினைப்பதில் இங்குள்ளவர்களுக்கு ஏன் கடுக்குதோ தெரியாது...இப்போது இங்கு வரும் நிறைய பேர் மேற்கு நாடுகளில் உள்ளார்கள்..அந்த மேற்கு நாடுகள் எல்லாம் (canada, uk, usa) எல்லாம் இலங்கைக்கு உதவி செய்தன...இப்போதும் இலங்கையை தாஜா செய்து தங்களுக்கு அடிபணிய வைக்க முயலுகின்றனவே தவிர தண்டிப்பதாகவோ....அல்லது தமிழருக்கு எல்லாத்தையும் கொடு என்று சொல்லுவதாகவோ தெரியவில்லை...அந்த நாடுகளை இவர்களால் ஏதாவது கேட்க்க முடியுமா?

ஊருக்கு இளிச்சவாய் இந்தியா என்பதால் ஏறி ஏறி குதிக்கிறார்கள்...இதையே புலிகளின் தலைவரும் செய்து...முழு அழிவும் தேடி வந்தது.....

ரதி சொல்லுவதை பார்த்தால்..சண்டை நடந்த நேரம் தமிழ்நாடும் பற்றி எரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்கிறார் போல்....ஏன்????

90 தொடக்கம் 2009 மட்டும் "ஈழத்தவர்கள்" இந்தியாவை மதித்தார்களா???? (மருத்துவம் பார்க்கவும், கோயிலுக்கு செல்லவும் மட்டுமே இந்தியா தேவை..இந்தியரை எல்லாம் அந்த கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்கள் மாதிரி நடத்தி விட்டு...இப்போ குமுறுகிறார்கள்)

500 தமிழ்நாட்டு மீனவர்கள் செத்ததுக்கே தமிழ்நாடு பொங்கி எழுந்ததா?? இல்லை என்றால் ஏன்??? அதற்க்கு விடை தெரிந்தால்...ஈழ தமிழருக்கும் விடை கிடைக்கும்......

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, எரிமலை, வாலி போன்றவ்களின் கருத்துக்களை கருத்தில் எடுக்காமல் இருப்பது நல்லது. ஈழ நிலவரம் என்ன என்று தெரியாமல் இருந்த தமிழகம் போன்று தமிழக நிலவரம் என்ன என்பதைத் தெரியாமல் இருக்கும் ஈழத்தமிழர்கள் இவர்கள்! :o:D

முதலில்

நான் இப்படி வாசித்தேன்

ஈழ நிலவரம் என்ன என்று தெரியாமல் இருந்த தமிழகம் போன்று ஈழ நிலவரம் என்ன என்பதைத் தெரியாமல் இருக்கும் ஈழத்தமிழர்கள் இவர்கள்!  என்று

மீண்டும்  கூர்ந்து வாசித்துத்தான் உங்கள் அர்த்தத்ததை புரிந்து கொண்டேன்

அப்பாடா...... :o  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மற்ற இடங்களில் பேசாமல் தான் இருந்தவர்கள்.இது பற்றி யாழிலே எழுதியிருக்கிறோம்.அண்மையில் கூட எழுதியிருந்தேன்.ஆனால் அவர்களுக்காவது ஒரு மன்னிப்பு கொடுக்கலாம் அவர்களது உயிருக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் இருந்தது.ஆனால் அதையும் மீறி இரு தரப்பும் யுத்தத்தை நிறுத்தச் சொல்லி அவர்கள் போராடி இருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு,தமிழ் மொழியை பேசிக்கொண்டு பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் மிகப் பெரிய அவலம் நடக்கும் போது பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க கேடு கெட்ட,சூரணையற்ற தமிழ்நாட்டு தமிழனால் தான் முடியும்.அங்கே இருந்த 5% தமிழரை தவிர மற்றவர்களுக்கு மனிதாபிமானம் என்பதே இல்லை.தமிழக அரசியல்வாதிகள் உண்மை பேசவில்லை,தொலைக்காட்டிகள் மக்களை மழுங்கடித்தன என்பவற்றில் கொஞ்சம் உண்மையிருந்தால் அதை எல்லாம் மீறி தமிழர் என்ட உணர்வு இருக்க வேண்டாமோ!

இந்தியா தான் அழித்தது.ஆரம்பத்தில் இருந்தே இந்தியா மூடிக் கொண்டு தன்ட வேலையை பார்த்துக் கொண்டு இருந்தால் இவ்வளவு அழிவு எங்களுக்கு வந்திருக்காது.என்னைப் பொறுத்த வரை என்ட முதல் எதிரி இந்தியா,பின்னர் தான் இலங்கையரசு...வாலி ஏற்கனவே எழுதின மாதிரி தமிழ்நாட்டுக்காரர் முதலில் தாங்கள் தமிழ்ர் என்று நினைக்க வேண்டும்.அதற்குப் பிறகு தான் அவர்கள் இந்தியர்கள்.

இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் வரப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் இந்த நாட்டில் வரப்போவதில்லை என்பது அடிப்படையான விடயம்.

அதற்காக இந்தியா சொல்வது எல்லாவற்றையும் செய்யப்போகின்றோம் என்பதும் எந்தக் காலத்திலும் நடைபெறப்போவதுமில்லை.

எங்களுடைய கொள்கைகளின் அடிப்படையிலேயேதான் தீர்வு வரும்.

ஆனால் அதை இந்தியாவைப் புறந்தள்ளிச் செய்யமுடியாது.

இந்தியாவை நாங்கள் எங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலே ஓர் அடிப்படை விடயம் உள்ளது.

ஒரு நாட்டைக் குறிவைத்து நிறைவேற்றுகின்ற எந்தத் தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவாக வாக்களிப்பதில்லை.

உதாரணத்துக்கு சிரியாவில் நடைபெறுகிற விசாரணை தொடர்பில் அவர்கள் ஆதரித்து வாக்களிக்கவில்லை.

வடகொரியா விவகாரத்திலும் கூட வாக்களிக்கவில்லை.

அவர்களுடைய பொதுவான கொள்கை ஒரு நாட்டைக் குறிவைத்து நிறைவேற்றுகின்ற தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை என்பதாகும்.

ஆனாலும், இரண்டே இரண்டு தடவைகள் அதற்கு விதிவிலக்காகச் செயற்பட்டிருக்கிறார்கள்.

அது இலங்கை சம்பந்தமான 2012, 2013ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்.

அதற்கு காரணம், தமிழ்நாட்டிலே இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எழுந்த கோசங்கள்.

ஆகவே அரசியல் காரணங்களுக்காக தங்களுடைய நாட்டின் வெளியுறவுக் கொள்கையிலேயே மாற்றத்தினை ஏற்படுத்தி அந்தத் தீர்மானங்களுக்காக வாக்களித்தார்கள்.

இந்தத் தடவை ஒரு வித்தியாசம் ஏற்பட்டது.

இந்த ஆண்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டிலே எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ, கோசமோ இருக்கவில்லை.

இதற்குக் காரணம் இந்தத் தீர்மானம் பிரியோசனமில்லை என்ற பொய்யான பரப்புரையின் பிரதிபலிப்புத்தான் தமிழ்நாட்டில் எந்த அழுத்தமும் ஏற்படாமைக்கான காரணம்.

அத்துடன் அமெரிக்காவுக்கு எதிரான ஊர்வலங்கள் நடத்தப்படுவதற்கும் அதுவே காரணமாகியது.

அமெரிக்க நிறுவனங்களுக்கு கல்லெறிந்தார்கள்.

அவ்வாறான அழுத்தம் இல்லாமை காரணமாகவே இந்தியா தனது சாதாரண வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையிலே ஒரு நாட்டைக் குறிவைத்து தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்காமல் இருக்கக் கூடியதாக இருந்தது.” என்று அவர்மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20140503110443 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்ற உணர்வு கம்மிதான்.

ஆனால் மனிதாபிமானம் இருந்தபடியால் தான் தீக்குளிப்புகள் மற்றும் தற்கொலைகள். இங்கே எத்தனை பேருக்கு ஈழத்தில் நடக்கும் அவலங்கள் தெரியுமென நினைக்கிறீர்கள்? துயரங்கள் தன்வீட்டு வாசலுக்கு வராதவரை அனைவரும் தப்பித்துக்கொள்ளவே பார்ப்பர்.

ஏன் ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கேயே இருந்து போராடவில்லை? ஏன் வெளிநாட்டிற்கு ஓடவேண்டும்?

நீங்கள் நாட்டைவிட்டு ஓடலாம், ஆனால் ஈழம் பற்றி அதிகம் தெரியாத தமிழ்நாட்டுத் தமிழர்கள் உங்களுக்காக போராட வேண்டும்?

நல்ல நியாயமம்மா.

முதலில் நீங்கள் ஒற்றுமையாக அனைவரும் துணிந்து களத்தில் நில்லுங்கள், போராட்ட நியாயத்தை சரியாக பரப்புரை செய்யுங்கள்,

பின்னர் தமிழரென்ன, உலகமே ஆதரவுடன் நிற்கும்.

வன்னியன் அண்ணா நீங்கள் எழுதினது உண்மை தான் என்டாலும் நான் எழுதுவது கடைசி யுத்தத்தை பற்றி.அந்த கொடூர நேரத்திலும் தமிழ்நாட்டு தமிழர்கள் அமைதியாக இருந்ததைப் பற்றி.இதற்கு மேல் இத் திரியில் எழுதி விரயமாக்க விரும்பவில்லை.எழுதினால் எப்படியும் வெட்டுவார்கள்.

நான்தான் எல்லா நாடுகளும் சேர்ந்து அழித்தனன என்பது உண்மை.ஆனால் இந்தியா எங்கட பக்கத்து நாடு.அவர்கள் நினைச்சிருந்தால் அழிவைத் தடுத்திருக்கலாம்.அவர்களை மீறி வேறோரு நாடும் இலங்கைக்கு உதவி இருக்காது.எல்லாத்தையும் விட‌ தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எங்கட தாய் மொழியை பேசுபவர்களாக இருக்கிறார்களே,நாங்கள் இருவரும் ஒரே இனம் எமக்காக குரல் கொடுக்கவில்லை என்ட ஒரு கோபம் தான்.

மற்றவர்களுக்கு பதில் எழுதுபதை விட எருமை மாட்டை குளிப்பாட்டலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, எரிமலை, வாலி போன்றவ்களின் கருத்துக்களை கருத்தில் எடுக்காமல் இருப்பது நல்லது. ஈழ நிலவரம் என்ன என்று தெரியாமல் இருந்த தமிழகம் போன்று தமிழக நிலவரம் என்ன என்பதைத் தெரியாமல் இருக்கும் ஈழத்தமிழர்கள் இவர்கள்! :o:D

தமிழகத்துத் தமிழர்கள் போல எங்களுக்கும் உலக நடப்பு குறிப்பாக தமிழக நடப்புத் தெரியாது என்று எண்ணும் உங்கள் கருத்துக் குறித்தும், அததனை வாசித்து தெளிவான விசுகு அண்ணாவின் அறிவு குறித்தும் வியக்கின்றேன்!

"ஏன் ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கேயே இருந்து போராடவில்லை? ஏன் வெளிநாட்டிற்கு ஓடவேண்டும்?

நீங்கள் நாட்டைவிட்டு ஓடலாம், ஆனால் ஈழம் பற்றி அதிகம் தெரியாத தமிழ்நாட்டுத் தமிழர்கள் உங்களுக்காக போராட வேண்டும்?"

ராஜவன்னியனின் இந்த கருத்திற்கு பதில் எம்மவரிடம் குறிப்பாக போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்களிடம் இல்லை .

தன்னை போன்றவர்களை தான் ராஜவன்னியன் சொல்கின்றார் என்பது கூட விளங்காமல் அதற்குள் ,

"

பிரபாகரன் என்பவர் இதற்கு ஒரு முன் மாதிரியாக வந்து

நாம் செய்யணும் என்றார்

செய்தும் காட்டினார்

அவரை விட்டுவிட்டு

இன்னும் எதையோ  பேசுகின்றோம் எழுதுகின்றோம் " 

.பிரபாகரன் மட்டுமல்ல போரடப்போனவர்கள் எல்லோரும் விடுதலைக்காக தான் போனார்கள் உங்கள் போன்றவர்களை தவிர .போரட்டத்தில் நடந்த பிழைகளை விமர்சனம் செய்வதை இதற்குள் இழுத்து அண்ணை தான் தப்பிக்கபார்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்பவர் இதற்கு ஒரு முன் மாதிரியாக வந்து

நாம் செய்யணும் என்றார்

செய்தும் காட்டினார்

அவரை விட்டுவிட்டு

இன்னும் எதையோ  பேசுகின்றோம் எழுதுகின்றோம் " 

.

அர்யூனையே புரிந்து கொள்வது கஸ்டமாகவுள்ளது இதுக்குள்ளை?.........................................................

மூவாயிரம் கால வரலாற்றை நோக்கையில் கரிகாலன் காலம் முதற்கொண்டு கருணாநிதி காலம் வரை சிங்களவனுக்கும் தமிழனுக்கும் பிரச்னை இருந்துகொண்டேதான் இருக்கிறது அதில் தமிழகத்தின் பங்கு தவிர்க்க முடியாததாகவும் இருந்திருக்கிறது. இனிமேலும் அது அப்படித்தான் இருக்கும். இன்று தமிழகம் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறது ஆனால் என்றுமே அதே நிலை நீடிக்காது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது. 
 
> கஜபாகுவை வெற்றி கொண்ட கரிகாலன் 
> அட்டதத்தனை அடக்கி வைத்த நரசிம்மவர்மன் 
> மித்தசேனனை கொன்ற பரிந்தான் 
> ஐந்தாம் மகிந்தனை வென்ற ராஜேந்திர சோழன் 
ஜடாவர்மன் வீரபாண்டியன், அரிகேசரி பராக்கிரமபாண்டியன் இன்னும் இலங்கையில் போர் நடாத்திய தமிழக மன்னர்களை நிறையக் கூறலாம்.
 
தொடர்ச்சியான கால இடைவெளிகளில் இந்தப் போர் நடந்து கொண்டே இருந்திருக்கிறது. 
 
இலங்கை முஸ்லீம்கள் தங்களை தமிழர்கள் என்று அழைக்காமல் இருக்கலாம்
புலம் பெயர் தமிழர்கள் மேற்கிந்திய நாடுகளில் தங்கி தங்களது மூன்றாவது தலைமுறைகளில் தமிழர் என்பதை மறந்தும் போகலாம்.
ஆனால் இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களுடனான தமிழகத் தமிழர்களின் உறவு என்றும் நீடித்திருக்கும் என்பதே உண்மை. இதுதான் வரலாறு காட்டுவது.
  • கருத்துக்கள உறவுகள்

(சரியான) வரலாறு எப்போதுமே ஒரு நல்ல வழிகாட்டி.. ஆழமான கருத்துக்கு நன்றி இளம்பிறையன்!

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு இப்படியும் சொல்கிறது......

இலங்கையின் பூர்வீக நாகர் இனத் தலைவி குவேனியைக் கொன்ற விசயனுக்கும் அவனது 700 கூட்டாளிகளுக்கும் தென்னிந்தியாவின் பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் கொடுத்தார்கள் என்பதாக. விசயன் பாண்டிய இளவரசியை மணம் முடித்தான்.

தமிழகத்தின் இந்த வரலாறும் தொடரும்.......

Edited by வாலி

இதிலிருந்து தெரிவது என்ன? :unsure: தமிழகத்தை கைக்குள் போட்டுக் கொள்பவருக்கே வெற்றி நிச்சயமாகிறது. :D

இதிலிருந்து தெரிவது என்ன? :unsure: தமிழகத்தை கைக்குள் போட்டுக் கொள்பவருக்கே வெற்றி நிச்சயமாகிறது. :D

இதைத்தான் நானும் எண்ணியிருந்தேன். 
 
தமிழகத்து அரசர்களுடன் நல்லுறவைப் பேணி தொடர்புகளைக் கொண்டிருந்த ஈழத்து அரசர்கள் ஆபத்தில் சிக்கியபோது, அங்கிருந்து படைபல உதவி கிடைத்தது என்பது உண்மை வரலாறு.
  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியன் காறித் துப்பினாலும் தமிழகத்தின் ஆரிய அடிமைத்தனச் சேவகமும் வெள்ளைத்தோல் மோகமும் போகாது. :D

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியன் காறித் துப்பினாலும் தமிழகத்தின் ஆரிய அடிமைத்தனச் சேவகமும் வெள்ளைத்தோல் மோகமும் போகாது. :D

இது ஒரு தற்காலிகப் பின்னடைவு. மன்னர் காலத்தில் டில்லியைக் கேட்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் இன்று ஒரு அறிக்கை விடுவதானாலும் டில்லி என்ன நினைக்குமோ என பயப்படுகிறார்கள்.

ஆனாலும் இந்த நிலைமை இப்போது மாறி வருகிறது. இதற்குத்தான் நாம் தமிழர், மே 17 போன்ற இயக்கங்களை தூற்றாமல் இருக்க வேண்டும் என்று சொல்வது. :D

வரலாறு இப்படியும் சொல்கிறது......

இலங்கையின் பூர்வீக நாகர் இனத் தலைவி குவேனியைக் கொன்ற விசயனுக்கும் அவனது 700 கூட்டாளிகளுக்கும் தென்னிந்தியாவின் பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் கொடுத்தார்கள் என்பதாக. விசயன் பாண்டிய இளவரசியை மணம் முடித்தான்.

தமிழகத்தின் இந்த வரலாறும் தொடரும்.......

குவேனி விசயன் மீது காதல் கொண்டு அவனை திருமணம் செய்து கொள்கிறாள். விசயன் அவளது உதவியுடன் அங்கு வாழ்ந்த பூர்வீக குடிகளை அடக்கி இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு ஆட்சி நடத்துகிறான். பின்பு இன்னொரு மனம் முடிக்க பாண்டிய மன்னரின் உதவியை நாடுகிறான். அன்றைய காலகட்டத்தில் ஒரு மன்னன் எத்தனை பெண்களை வேண்டுமென்றாலும் மணக்கலாம். அவரும் தனது மகளை மனம் செய்து கொடுக்கிறாள். பாண்டிய இளவரசியை மனம் செய்து கொண்ட விஜயன், குவேனியையும் இரண்டு குழந்தைகளையும் காட்டுக்குள் துரத்தி விடுகிறான். விசயனின் ஆதரவை இழந்த நிலையில் தனது இனத்தைக் காட்டிக் கொடுத்த குவேனியை இயக்கர் இன மக்களே கொன்று விடுகிறார்கள். இதுதான் நான் அறிந்த வரலாறு.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

நிற்க, கருத்துக்குப் பதில் பின்பு பதிலுக்குப் பதில் என்று எழுதி படிப்பவர்கள் மனதில் ஒருவர் பற்றி மற்றோருவருக்கு வெறுப்பை விதைக்க விரும்பவில்லை. எந்த விடுதலைப் போராட்டத்திலும் நூறு சதவீத மக்கள் கலந்து கொண்டதே இல்லை. இந்திய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சதவீதம் வெறும் 2 சதவீதமே. இலங்கையில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்ட மக்களின் சதவீதம் அனைவரும் அறிந்ததே. தமிழக மக்களில் பெரும்பான்மையினர் இலங்கைத் தமிழர்களை தங்கள் சொந்த பந்தங்களாகவே கருதுகிறார்கள் அதனால் தான் புலம்பெயர் தேசங்களை விட தமிழகத்தில் அதிக தீக்குளிப்புகளும் தற்கொலைகளும். இலங்கையில் வாழும் மக்களுக்கும், புலம்பெயர் மக்களுக்கும் உள்ள நிர்பந்தங்கள் போலவே தமிழக மக்களுக்கும் சில எல்லைகளுக்கு அப்பால் சென்ற போராட தற்போதுள்ள அரசியல் சூழல் ஒவ்வாது. இதுதான் களச் சூழல்.

இதில் நீ செத்தால் நான் கண்டுகொள்ள மாட்டேன் எனபது உங்கள் நிலைப்பாடு. நன்று. வாழ்க !!

தமிழ் பேசும் ஒருவனுக்கு துயர் என்றால் நான் கலங்குவேன் அது இலங்கைத் தமிழனாலும் சரி..  பர்மியத் தமிழனாலும் சரி. முடிந்தால் களத்தில் இறங்கிப் போராடுவேன், போராடியும் இருக்கிறேன். சக இனத்தவனாக மனிதனாக எப்பொழுதும் இதைச் செய்வேன். இது என் நிலைப்பாடு !!

  • கருத்துக்கள உறவுகள்

....தமிழ் பேசும் ஒருவனுக்கு துயர் என்றால் நான் கலங்குவேன் அது இலங்கைத் தமிழனாலும் சரி..  பர்மியத் தமிழனாலும் சரி. முடிந்தால் களத்தில் இறங்கிப் போராடுவேன், போராடியும் இருக்கிறேன். சக இனத்தவனாக, மனிதனாக எப்பொழுதும் இதைச் செய்வேன். இது என் நிலைப்பாடு !!

sermain.gif Good one.

இனி இந்தியாவை ஆழ ஒரு தனிக்கட்சியால் முடியாத காரியம் போலுள்ளது...ஆகவே எப்போதும் மத்தியரசு பிராந்திய கட்சிகளின் ஆதரவிலேயே பிழைக்க முடியும்...இதற்காகவே தான் காந்தியும் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரசை கலைக்க சொல்லியிருப்பார்....

ஆகவே பிராந்திய கட்சிகள் ஊழல் செய்யாவிட்டால் மத்தியரசை வழிநடத்த முடியும்...ஆகவே தமிழ்நாடும் சரியானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதே நல்லது.... வரலாறின்படியும் நல்ல அரசர்களே வல்லமையான அரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.....

கருணாநிதி குடும்பத்தோடு கொள்ளையடித்த படியால்...2009 இல் வாய்மூடி வாளா இருந்திருக்கலாம்...
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.