Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் 2016 இல் காணமல் போய்டுவார்.....ஹா ஹா..என்றைக்கும் ஈழத்தமிழர் விடையம் தமிழக மக்களின் ஓட்டுக்களை கவரபோவதே இல்லை....

வெறும் நோட்டும்.....பிரியாணியும்...இலவசங்களும்........தாஸ்மாக்கும் தான் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகள்

  • Replies 474
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எது மிகைப்படுத்தல்????

2016 இல் சீமான் மறுதலிக்கப்படமுடியாத  சக்தியாக தமிழகத்தில் இருப்பார் என்பதா??

 

ஆமாம். சீமான், வைக்கோ, நெடுமாறன் போன்றோர் தமிழகத்தின் தனித்தன்மையை காத்துவைப்பதற்கு உதவுவார்கள்,

 

ஆனால் இங்குள்ள மக்கள் அந்த இன உணர்வோடு சில புறக் காரணிகளையும் மனதில் சேர்த்துக்கொண்டே வாக்குகளை முடிவு செய்கின்றனர்.

விருப்பம் என்பதற்கும் கள நிலவரம் என்பதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது.

 

எல்லா கட்சிகளுக்கும் இருப்பதைப் போல எத்தனை சதவீத வாக்கு வங்கியை சீமான் தனதாக்கீக் கொள்ளப் போகின்றார் என்பதே இப்போதுள்ள கேள்வி..

 

அந்த வாக்கு வங்கி 15 சதவீதத்தைத் தாண்டினால் மகிழ்ச்சி.. அதிலும் அவர் கவரப் போவது தமிழர் ஆதரவு வாக்குகள் என்பதால் மதிமுக உள்ளிட்டவர்களின் வாக்குகளெ அதிகம் பிரியப் போகிறது.

 

தமிழ் ஆதரவு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் ஓரரளவுக்குப் பலமான சக்தியாக மாறலாம்... ஆனால் அவர்களுக்கிடையில் கொள்கையளவீல் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. 
ஏதாவது பிரளயம் ஏற்பட்டாலே ஒழிய அடுத்த 10 வருடங்கள் திராவிடக் கட்சிகள் மிளகாய் அரைக்கும் அரசியல் தான் தமிழகத்தில் தொடரப் போகின்றது.... :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்
கூட்டணி    முடிவு
பா ஜ க                  119
காங்கிரஸ்           20
மாற்று அணி       06
மற்ற கட்சிகள்     23
ஆம் ஆத்மி          01




 

இந்திய தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தந்த ராசவன்னியனுக்கும் சக கள உறவுகளுக்கும் எம் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். சீமான், வைக்கோ, நெடுமாறன் போன்றோர் தமிழகத்தின் தனித்தன்மையை காத்துவைப்பதற்கு உதவுவார்கள்,

 

ஆனால் இங்குள்ள மக்கள் அந்த இன உணர்வோடு சில புறக் காரணிகளையும் மனதில் சேர்த்துக்கொண்டே வாக்குகளை முடிவு செய்கின்றனர்.

 

 

நான் வேறு ஒரு வகையில் கணிக்கின்றேன்

 

தமிழருக்கு துரோகம் செய்த காங்கிரசும் திமுகவும் ஒதுக்கப்பட்டுள்ள  நிலையில்

அதிமுகவுக்கான ஒரு சந்தர்ப்பமாக  இது இருக்கும்

அவரும் இதிலிருந்து நழுவும் பட்சத்தில்

2016 இல் சீமான் தேர்தலைச்சந்திப்பாராயின்  

அவரும் ஒரு சக்தியாக  தமிழகத்தில் வருவார்

அத்துடன் மிக முக்கியமாக

அண்ணா  மற்றும் MGR போன்றோர்களது வாரிசுகள் ரசிகர்கள் மற்றும் வாக்காளர்கள் குறைந்து

இளம்வயசினர் அதிகம்

நாம் தமிழரையே விரும்பவர் என்பது எனது கணிப்பீடாகும்

பார்க்கலாம்

காலம் பதில் சொல்லட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

 

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். அவர் இணைந்த ஒருசில நாட்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் இணைந்தனர்.

rajini%2817%29.jpg

இந்நிலையில், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்தில், ''சரித்திர புகழ்வாய்ந்த வெற்றிக்காக நரேந்திரமோடி ஜி, உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகத்தான வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28023

  • கருத்துக்கள உறவுகள்

எது மிகைப்படுத்தல்????

2016 இல் சீமான் மறுதலிக்கப்படமுடியாத  சக்தியாக தமிழகத்தில் இருப்பார் என்பதா??

வேணாம் அண்ணே  இப்பிடி சொல்லி திரிஞ்ச ஆள் ஒருத்தர் இப்ப இங்க வாறதேயில்லை  :(

  • கருத்துக்கள உறவுகள்

நேருவுக்குப் பின்  சிரித்திக் கொண்டு கம்பீரமாய்  நடக்கும் ஒரு பிரதமர் ...! :)

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விக்கு பொறுப்பேற்கிறோம்: சோனியா, ராகுல் பேட்டி

 

 மக்களவை தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் இருவரும் தெரிவித்தனர்.

சோனியா கூறியதாவது: "மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்றுக் கொள்கிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

மிகவும் மோசமான தோல்வி:

 

 

இதே போல் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து, இது மோசமான தோல்வி என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "தோல்விக்கான காரணம் குறித்து நிறைய யோசிக்க வேண்டும். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" எனவும் அவர் தெரிவித்தார். 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6016619.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேருவுக்குப் பின்  சிரித்திக் கொண்டு கம்பீரமாய்  நடக்கும் ஒரு பிரதமர் ...! :)

 

ஏங்க சுவி, நல்ல காரியம் நடந்துகொண்டிருக்கும் போது அந்த பீடையை ஞாபகப் படுத்துகிறீர்கள்? :wub:

 

அந்தாளால், அவர் குடும்பத்தால் தமிழர்களுக்கும், இந்தியாவிற்கும் பிடித்த சனி விலகும் நேரத்தில் திருஷ்டி மாதிரி இதை சொல்கிறீர்களே? :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி நிலைக்கு இதுவரை எந்தக் கட்சியுமே தகுதி பெறவில்லை. :o

மோடிக்கு விக்கீனேஸ்வரன் வாழ்த்து...

  • கருத்துக்கள உறவுகள்

TOTAL LOK SABHA SEATS = 543, SEATS NEEDED FOR MAJORITY = 272
BJP
Alliance
Leading
170
Won 163
CONGRESS
Alliance
Leading
30
Won 32
OTHERS
Leading
108
Won 40
BJP
BJP
Leading
135
Won 148
INC
INC
Leading
21
Won 24
TMC
TMC
Leading
19
Won 15
BSP
BSP
Leading
1
Won 0
AIADMK
AIADMK
Leading
30
Won 7
SP
SP
Leading
5
Won 1
TDP
TDP
Leading
15
Won 0
YSRC
YSRC
Leading
9
Won 0
BJD
BJD
Leading
20
Won 0
RJD
RJD
Leading
3
Won 0
DMK
DMK
Leading
0
Won 0
NCP
NCP
Leading
4
Won 2
JD(U)
JD(U)
Leading
1
Won 1
JD(S)
JD(S)
Leading
1
Won 1
AAP
AAP
Leading
3
Won 1
LEFT
LEFT
Leading
11
Won 4
SHIV SENA
SHIV SENA
Leading
12
Won 6
TRS
TRS
Leading
10
Won 1
SAD
SAD
Leading
3
Won 1
NC
NC
Leading
0
Won 0

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்க சுவி, நல்ல காரியம் நடந்துகொண்டிருக்கும் போது அந்த பீடையை ஞாபகப் படுத்துகிறீர்கள்? :wub:

 

அந்தாளால், அவர் குடும்பத்தால் தமிழர்களுக்கும், இந்தியாவிற்கும் பிடித்த சனி விலகும் நேரத்தில் திருஷ்டி மாதிரி இதை சொல்கிறீர்களே? :lol:ளிந்நி

 

 

இந்திராகாந்தி வரை நல்லாத்தான் போய்க்கொண்டு இருந்தது,  அதன் பின்தான் டபில் ஏழரை பிடிச்சது. இப்ப தொலைஞ்சது ...! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். சீமான், வைக்கோ, நெடுமாறன் போன்றோர் தமிழகத்தின் தனித்தன்மையை காத்துவைப்பதற்கு உதவுவார்கள்,

 

ஆனால் இங்குள்ள மக்கள் அந்த இன உணர்வோடு சில புறக் காரணிகளையும் மனதில் சேர்த்துக்கொண்டே வாக்குகளை முடிவு செய்கின்றனர்.

 

 

உண்மை.. :D புறக்காரணிகள்தான் அவரை முன்னுக்குத் தள்ளிவிடும்..  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவின் வி.என்.பி வெங்கட்ராமன் வெற்றி!


முதல்ல ஒரு Gillette வாங்கிக்கொடுங்கப்பா..
10294254_10152026649431104_9265811680859

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு தானும் ஒரு காரணம் என்று நடிகர் விஜய் சொன்ன போது விழுந்து விழுந்து சிரிச்சதுக்குப் பிறகு இப்பதான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வென்றதுக்கும் தானும் ஒரு காரணம் என்று சீமான் அண்ணை சொன்னதுக்கு விழுந்து விழுந்து சிரிக்கின்றன். :icon_mrgreen:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அட நிழலிக்கு ஒரு பச்சை குத்துவம் எண்டா  கையிருப்பில் இல்லியே 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு தானும் ஒரு காரணம் என்று நடிகர் விஜய் சொன்ன போது விழுந்து விழுந்து சிரிச்சதுக்குப் பிறகு இப்பதான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வென்றதுக்கும் தானும் ஒரு காரணம் என்று சீமான் அண்ணை சொன்னதுக்கு விழுந்து விழுந்து சிரிக்கின்றன். :icon_mrgreen:

 

  • 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழககாங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் ஐந்தை தவிர, மிகுதி எல்லா தொகுதிகளிலும் நாம் தமிழர் பிரச்சாரம் செய்தது. அந்த ஐந்து தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வென்றது. மிகுது 15 தொகுதிகளிலும் தோற்றது. இது ஒரு தற்செயலான நிகழ்வு எனலாம்.
  • 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தது நாம் தமிழர். திமுக தனது பணபலத்தால் வென்றுவிடும் (திமுக + காங்கிரஸ் வலுவான கூட்டணி) என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 200 தொகுதிகளுக்கும் மேல் வென்று ஆட்சியைப் பிடித்தது அதிமுக. இதுவும் ஒரு தற்செயலான நிகழ்வுவாகும். :D
  • 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தும், திமுக, காங்கிரஸ், தேமுதிகவை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தது நாம் தமிழர் கட்சி.. அதிமுக வரலாறு காணாத வெற்றியை கூட்டணி இல்லாமலே பெற்றுக் கொள்கிறது. காங்கிரஸ், திமுக, தேமுதிகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.. :huh:

இதிலிருந்து இரண்டு விடயங்களை சிந்திக்கலாம்.

 

  • நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் ஓரளவுக்கு எடுபடுகிறது. அல்லது,
  • எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை அக்கட்சி சரியாக கணிக்கிறது. :D
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கனபேருக்கு ஆன்டிசீமானோமோஃபியா பிடித்தாட்டுக்கிறது.. :)

ஒண்டும் செய்யேலாது!

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க. வெற்றி பண பலத்தால் உருவாக்கப்பட்டது: விஜயகாந்த்

 

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல், பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அவரின் ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் துயரங்கள் நீங்கிடும். லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சி நடைபெறும்.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வறுமை ஒழியும். உலக அரங்கில் இந்தியா வல்லரசாக மாறிடும் என்ற நம்பிக்கையோடு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நரேந்திர மோடிக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், அ.தி.மு.க மற்றும் தி.மு.க.விற்கு மாற்றாக இந்த கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆளும் கட்சியினர் தங்களுடைய அதிகார பலம், பண பலம் மூலம் இந்த தேர்தலை சந்தித்துள்ளனர். கடைசி இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக பணம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, ஆதாரங்களுடன் வெளி வந்துள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்றும், பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவதே சாலாக இருந்தது என்றும், இந்த தேர்தல் பொது மக்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் நடத்தப்பட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல், பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றியாகும். இருந்த போதிலும், இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறது. மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் தே.மு.தி.க தொடர்ந்து பணியாற்றும்" என்று தெரிவித்துள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28017

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.