Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் 1.2 பில்லியன் செலவில் பிரமாண்ட கலாசார நிலையம்! - இந்தியா அமைக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத்தில் 1.2 பில்லியன் செலவில் பிரமாண்ட கலாசார நிலையம்! - இந்தியா அமைக்கிறது. 
[Tuesday, 2014-06-10 09:05:55]
jaffna-culturel-centre-100614-150.jpg
பாரம்பரிய கலாசார அடையாளங்களை உள்ளடக்கும் வகையில் மிக நவீன வசதிகளுடன் கூடிய கலை மற்றும் கலாசாரம் தொடர்பான அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் வகையிலான கலாசார நிலையம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்திய உதவியுடன், 1.2 பில்லியன் ரூபா செலவில் மூன்று வருடங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கலாசார நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கையின் சார்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க மற்றும் இந்தியாவின் சார்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே. சிங்ஹா ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
  
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நூலகத்துக்கு அருகாமையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மத்திய நிலையத்தில் நாட்டிய மேடை மற்றும் மிதக்கும் மேடை என்பன உள்ளடக்கப்படவுள்ளன. இதன் மூலம் வட மாகாணத்தின் விசேடமாக யாழ்ப்பாண மக்களின் கலாசார உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியாக்கப்படும் நிலையில் நாட்டின் ஏனைய மக்களின் கலாசார தொடர்புகள் வலுவடைவதுடன் யாழ்ப்பாணத்தின் பழமை வாய்ந்த கலாசார மரபுரிமைகளும் பேணப்படும்.
 
மேலும் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் 600 ஆசனங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் கலை அரங்கம் இணைய ஆய்வு வசதிகள் பல்மொழி நூலகம் என்பன உள்ளடக்கப்படவுள்ளன. இலங்கை வாஸ்து சாஸ்திரவியலாளர்கள் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தேசிய திட்டமிடல் போட்டியில் முன்வைக்கப்பட்ட 29 திட்டங்களிலேயே இந்த மத்திய நிலையத்துக்கான திட்டம் தெரிவு செய்யப்பட்டது. யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மேலும் இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் பி. குமரன்இ முதல் செயலர் ஜஸ்டின் மொஹான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அனுராத குமாரசிறி மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் பாஷ்வர குணரட்ன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=111039&category=TamilNews&language=tamil
jaffna-culturel-centre-100614-seithy(2).
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு திட்டங்களுக்கு கூடுதல் நிதி கேட்டு ஜெயா அங்க சண்டை போடுறா.. யாழ்ப்பாணத்துக்கு தேவையில்லாத கலாச்சார மண்டபம்.. :wub:

மிக நல்ல விஷயம்.
 
இதன் மூலம் யாழ்ப்பாணத்திலேயே பெரிய கலை  நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் என்பன‌ நடத்தக் கூடியதாக இருக்கும். கொழும்பில் வைக்கத்தேவையில்லை. யாழ்ப்பாணம் முன்பு போல் மீண்டும் தன் முதன்மை நிலையை அடைவதற்கு உதவக்கூடிய பல விசயங்களில் இதுவும் ஒன்று.  
 
முதன்மை நிலையை அடைதல் என்பது பல முனைகளில் முயற்சி செய்து அடைகின்ற ஒன்று. கட்டமைப்புகள் [ Infra structure ] , போக்குவரத்து, தொலைத் தொடர்பு வசதி, கல்வி, மருத்துவம், உற்பத்தித் தொழிற்துறை இப்படி பல.
 
ஒரு நகரம் முதன்மை நிலைய அடையும் போது பல நன்மைகள் ஏற்படுகின்றது. முக்கியமாக கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்மக்கள் யாழ் நோக்கி இடம்பெயர்வர். வெளிநாடுகளில் இருந்தும் தமிழர் மீண்டும் யாழ் நோக்கி இடம்பெயரத் தூண்டப்படுவர்.

புலம் பெயர்கள் அந்த மண்டபத்தில் போய் கல்யாண வீடு..பூப்புனித நீராட்டு விழாக்களை செய்தால் என்ன செய்வது???? (கெலிகொப்டரில் போய்...)

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்கள் அந்த மண்டபத்தில் போய் கல்யாண வீடு..பூப்புனித நீராட்டு விழாக்களை செய்தால் என்ன செய்வது???? (கெலிகொப்டரில் போய்...)

உள்ளூர் வேலைவாய்ப்புக்கள், உள்ளூர் கலைஞர்கள் போன்றவர்களின் வளர்ச்சிக்கு இது உதவும்..!

மிக நல்ல விஷயம்.
 
இதன் மூலம் யாழ்ப்பாணத்திலேயே பெரிய கலை  நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் என்பன‌ நடத்தக் கூடியதாக இருக்கும். கொழும்பில் வைக்கத்தேவையில்லை. யாழ்ப்பாணம் முன்பு போல் மீண்டும் தன் முதன்மை நிலையை அடைவதற்கு உதவக்கூடிய பல விசயங்களில் இதுவும் ஒன்று.  
 
முதன்மை நிலையை அடைதல் என்பது பல முனைகளில் முயற்சி செய்து அடைகின்ற ஒன்று. கட்டமைப்புகள் [ Infra structure ] , போக்குவரத்து, தொலைத் தொடர்பு வசதி, கல்வி, மருத்துவம், உற்பத்தித் தொழிற்துறை இப்படி பல.
 
ஒரு நகரம் முதன்மை நிலைய அடையும் போது பல நன்மைகள் ஏற்படுகின்றது. முக்கியமாக கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்மக்கள் யாழ் நோக்கி இடம்பெயர்வர். வெளிநாடுகளில் இருந்தும் தமிழர் மீண்டும் யாழ் நோக்கி இடம்பெயரத் தூண்டப்படுவர்.

இந்தியா அல்லது சிறிலங்கா ஏதும் செய்தால் குண்டு வைக்கும் மனப்பான்மையில் இருந்து பலர் மாறியதே பெரியவிடயம் .

இது முழங்கால்

knee_lig.jpeg

இது மொட்டந்தலை
 
bald-head.jpg

நோ கொன்பூஷன் பிளீஷ் !!

  • கருத்துக்கள உறவுகள்

இது முழங்கால்

knee_lig.jpeg

இது மொட்டந்தலை
 
bald-head.jpg

நோ கொன்பூஷன் பிளீஷ் !!

பச்சை முடிஞ்சிட்டுதையா.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். வீரசிங்கம் மண்டபம் அமைந்தபோது ஏற்பட்டதுபோன்ற பெருமகிழ்ச்சி மீழ்கிறது. இதுபோல கிழக்கு மாகாணத்திலும் அமைக்கப்படாவேண்டும் என்பது கோரிக்கை.

வடகிழக்கு மாகாணத்தில் உள்ள கல்விக் கூடங்களையும் நூலகங்களை மேம்படுத்தும் பணிகளிலும் இந்தியா உதவ வேண்டுமென்பது விருப்பம்.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல விஷயம்.
 
இதன் மூலம் யாழ்ப்பாணத்திலேயே பெரிய கலை  நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் என்பன‌ நடத்தக் கூடியதாக இருக்கும். கொழும்பில் வைக்கத்தேவையில்லை. யாழ்ப்பாணம் முன்பு போல் மீண்டும் தன் முதன்மை நிலையை அடைவதற்கு உதவக்கூடிய பல விசயங்களில் இதுவும் ஒன்று.  
 
முதன்மை நிலையை அடைதல் என்பது பல முனைகளில் முயற்சி செய்து அடைகின்ற ஒன்று. கட்டமைப்புகள் [ Infra structure ] , போக்குவரத்து, தொலைத் தொடர்பு வசதி, கல்வி, மருத்துவம், உற்பத்தித் தொழிற்துறை இப்படி பல.
 
ஒரு நகரம் முதன்மை நிலைய அடையும் போது பல நன்மைகள் ஏற்படுகின்றது. முக்கியமாக கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்மக்கள் யாழ் நோக்கி இடம்பெயர்வர். வெளிநாடுகளில் இருந்தும் தமிழர் மீண்டும் யாழ் நோக்கி இடம்பெயரத் தூண்டப்படுவர்.

நல்லாச் சொன்னீங்கள்.

யாழ்ப்பாணம் தமிழர்களின் கலாச்சார பூமி. அங்கு கலாச்சார நிலயம் மிக மேம்பாட்டுடன் இருக்கும்போது தான் அந்த இடம் நோக்கி தமிழர்கள் நகர்வார்கள். தமிழர்கள் தமிழர்களின் பிரதேசங்களில் இருக்கும்போதுதான் தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

ஆனால் என்னுமொரு விசயத்தையும் கவனத்தில் எடுத்துக்கவேணும். யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் பழுதாகிக்கொண்டிருக்கின்றது. கலாச்சார மையம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு குடிநீர்ப்பிரச்சனையும் முக்கியம். இந்தியா அதற்கும் எதாவது செய்தால் தமிழர்கள் இந்தியாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள்.

நடுவில் பசில்: "1.2 பில்லியனில எப்படியாவது 30% அடிச்சிடோனும். "

உள்ளூர் வேலைவாய்ப்புக்கள், உள்ளூர் கலைஞர்கள் போன்றவர்களின் வளர்ச்சிக்கு இது உதவும்..!

நீங்கள் நிலையம் அமைப்பதை சொன்னீர்களா?

இது தான் எனது எண்ணமும்...ஆனால் இது எங்கள் புலம்பெயர் தேசிய போராளிகளுக்கு பிடிக்காதே...அதுவும் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து செய்யும் விடயங்கள் என்றால்..இரட்டிப்பு கடுப்பு வருமே...... :)

(கல்யாணம்..ப்போபுனித நீராட்டு விழா என்றாலும் சரி)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அல்லது சிறிலங்கா ஏதும் செய்தால் குண்டு வைக்கும் மனப்பான்மையில் இருந்து பலர் மாறியதே பெரியவிடயம் .

ஏன் இவர்கள் குண்டு வைக்கவில்லையோ? இப்போ ஏனிந்த நல்ல பிள்ளை நடிப்பு? தலையாய பிரச்சனைக்கு ஒரு தீர்வை எடுப்பம் என்றில்லை.ரெயினை விடுதல், நீச்சல் குளம் கட்டல் இப்படி வெளிநாடுகளுக்கு படம் காட்ட வேண்டியது தான்.இளிச்ச வாய் நிலையில் இருந்து எப்போ சிந்திக்கும் நிலைக்கு வருவதாக எண்ணம்? :D

Edited by kalyani

என்ன கொடுமை சரவணன் (அர்ஜூன்) இது...

30 வருடமாக அரசாண்டவர்களால் முடியவில்லை.....

இரண்டாம் உலக யுத்தம் முடிந்த அடுத்த மாதமே (கிழமை என்றும் சொல்லலாம்) ஐரோப்பியா எல்லாம் கட்டி முடித்து மக்கள் எல்லாம் மகிழ்ச்சி கடலில் குளித்தார்கள் என்கிற மாதிரி இலங்கையை எதிர்பார்கிறார்கள்.....

இரண்டாம் உலக யுத்தம் முடிய அமேரிக்கா/இங்கிலாந்து சொன்னதை ஜேர்மனும், ஜப்பானும் கேட்டமாதிரி கேட்டால் சிலவேளை புல்லட் ட்ரெயினும் யாழ் வரலாம்.....

எல்லாவற்றையும் குழப்பி கொட்டாமல் இருந்திருந்தால்  இது போல பல கட்டிடங்களுக்கு இப்ப இருபது இருபத்திஐந்து வயது வந்திருக்கும் கடைசி இப்ப என்றாலும் வருகுது என்று சந்தோசப்படவேண்டியதுதான் .

பலரின்   இந்த மனமாற்றம் உண்மையில் எனக்கு பெரிய சந்தோசம் .யுத்தம் இவர்களையெல்லாம் ஆக்கபபூர்வமாக எதையும் சிந்திக்காமல் வைத்திருந்தது என்பதுதான் மிக உண்மை .

இதில் சிலர் முன்னமே நாங்கள் அப்படிதான் என்று மெல்ல பல்டி கூட அடிக்கின்றார்கள் . :icon_mrgreen:

ஏன் இவர்கள் குண்டு வைக்கவில்லையோ? இப்போ ஏனிந்த நல்ல பிள்ளை நடிப்பு? தலையாய பிரச்சனைக்கு ஒரு தீர்வை எடுப்பம் என்றில்லை.ரெயினை விடுதல், நீச்சல் குளம் கட்டல் இப்படி வெளிநாடுகளுக்கு படம் காட்ட வேண்டியது தான்.இளிச்ச வாய் நிலையில் இருந்து எப்போ சிந்திக்கும் நிலைக்கு வருவதாக எண்ணம்? :D

கல்யாணி,

ரயிலை விடுவதும் நீச்சள் குளம் கட்டுவதும் கலாச்சார மண்டபங்களை அமைப்பதும் ஈசன் குறிப்பிட்டுள்ளது போன்ற உள்ளகக் கட்டமைப்பை (Infrastructure) இனை விருத்தி செய்யும் விடயங்கள்.  30 வருடப் போரால் அடிப்படைக் கட்டுமானங்கள் எல்லாம் அழிந்து மனிதவள அபிவிருத்தி எல்லாம் சீரழிந்து போயிருக்கும் நிலையில் இவற்றினை மீண்டும் கட்டமைப்பது மக்களுக்கு மிகவும் அவசியமானது.  

போர் நிறுத்த காலங்களில் கூட தமிழர் தரப்புகள் பேச்சு வார்த்தைகளில் முதலில் வலியுறுத்திய விடயம்,  இடைக்கால அபிவிருத்தியும் அடிப்படைக் கட்டுமானங்களில் செய்ய வேண்டிய திருத்தங்களும் தான்.  நிரந்தர தீர்வுக்கு பின் தான் இவற்றை கட்டமைக்க வேண்டும் என்று காத்திருந்தால் எம் சமூகம் இன்னும் இன்னும் பின்னுக்கு போய் அனைத்துக்கும் தெற்கை அண்டி பிழைக்க வேண்டிய நிலையே தொடர்ந்து தக்க வைக்கப்படும்.

நிரந்த தீர்வு எவ்வளவு அவசியமோ அதேயளவு உட்கட்டமைப்புகளின் அபிவிருத்தி மிக அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலன்பெயர்ஸ் ஒருக்கா யாழ்ப்பாணம் காகில்ஸ் ஸ்குயர் ற்கு போய் பார்க்கவேணும். கேஎப்சி, இத்தாலி பீசா கடை, ஐஸ்கிறீம் சனம் படு ஜொலி பாருங்கோ.

ஏசி ரெயின் 3 மணிக்கு கொழும்பில ஏறினா 8.30 பளையில அடிக்கிறான். ரோடெல்லாம் கார்பெட். 24 மணி நேர மின்சாரம்.

திருவிழாக்கள், அது இது என்று சனம் ரொம்ப பிசி. நிரந்தர தீர்வு( ஒன்றுபட்ட இலங்கைக்குள்) வருமோ தெரியாது ஆனால் உட்கட்டுமானம் கிடுகிடு என வளர்கிறது.

புலம் பெயர்சுக்கு, கே.எப்.சி, இத்தாலி பிட்சா கடை , ஐஸ்கிரீம் எல்லாம் இங்கேயே பக்கத்தில இருக்கு!

என்னத்துக்கு மினக்கட்டுக் 'கார்கில்ஸ் ஸ்குயருக்குப்' போக வேண்டும் என நினைக்கிறீர்கள், கோசான்? :o

முதுகு கடிச்சால், சுவரில தேய்க்கிறதை விட்டிட்டு, ஏன் தான் யாழில வந்து தேய்க்கிறீங்களோ? :icon_idea:   

  • கருத்துக்கள உறவுகள்

புலன்பெயர்ஸ் ஒருக்கா யாழ்ப்பாணம் காகில்ஸ் ஸ்குயர் ற்கு போய் பார்க்கவேணும். கேஎப்சி, இத்தாலி பீசா கடை, ஐஸ்கிறீம் சனம் படு ஜொலி பாருங்கோ.

ஏசி ரெயின் 3 மணிக்கு கொழும்பில ஏறினா 8.30 பளையில அடிக்கிறான். ரோடெல்லாம் கார்பெட். 24 மணி நேர மின்சாரம்.

திருவிழாக்கள், அது இது என்று சனம் ரொம்ப பிசி. நிரந்தர தீர்வு( ஒன்றுபட்ட இலங்கைக்குள்) வருமோ தெரியாது ஆனால் உட்கட்டுமானம் கிடுகிடு என வளர்கிறது.

அண்ணை

புலம் பெயர் தமிழரோடுதான் ஒட்டவில்லை  என்று பார்த்தால்

தாயகத்தமிழரோடும் ஒட்டவில்லை

அப்போ ஒட்டோ..............??? :(

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141410&hl=

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நான் தாயக தமிழரோடு வலு ஒட்டு. சனம் கடந்த 30 வருடத்தை விட இப்பதான் கூட சந்தோசமாயிருக்கு, உட்கட்டுமானம் வளர்கிறது என்பதே நான் சொல்ல வந்ததது..

அங்க சனம் உடனடிவாழ்க்கை, நீண்ட கால தீர்வு என்பன பற்றி தீர்க்கமா புரிச்ஞ்சு வச்சிருக்கு. புலம் பெயர்சுக்குதான் இது மண்டைல ஏற மறுக்குது.

கோசான்,

பிரச்சனை என்றவுடன் ஓடி வந்து குண்டு வெடிக்கும் போது அங்கால எத்தனை இங்கால எத்தனை என்று ஸ்கோர் கேட்டு கொண்டு இருந்தவர்களுக்கு இப்ப உதுகளை கேட்க கடுக்குது :icon_mrgreen:

அதைவிட வேடிக்கை மக்கள் எப்ப குண்டு வைத்தவர்கள் திரும்ப வருவார்கள் என்று  தேடி அலைகின்றார்களாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணி,

ரயிலை விடுவதும் நீச்சள் குளம் கட்டுவதும் கலாச்சார மண்டபங்களை அமைப்பதும் ஈசன் குறிப்பிட்டுள்ளது போன்ற உள்ளகக் கட்டமைப்பை (Infrastructure) இனை விருத்தி செய்யும் விடயங்கள்.  30 வருடப் போரால் அடிப்படைக் கட்டுமானங்கள் எல்லாம் அழிந்து மனிதவள அபிவிருத்தி எல்லாம் சீரழிந்து போயிருக்கும் நிலையில் இவற்றினை மீண்டும் கட்டமைப்பது மக்களுக்கு மிகவும் அவசியமானது.  

போர் நிறுத்த காலங்களில் கூட தமிழர் தரப்புகள் பேச்சு வார்த்தைகளில் முதலில் வலியுறுத்திய விடயம்,  இடைக்கால அபிவிருத்தியும் அடிப்படைக் கட்டுமானங்களில் செய்ய வேண்டிய திருத்தங்களும் தான்.  நிரந்தர தீர்வுக்கு பின் தான் இவற்றை கட்டமைக்க வேண்டும் என்று காத்திருந்தால் எம் சமூகம் இன்னும் இன்னும் பின்னுக்கு போய் அனைத்துக்கும் தெற்கை அண்டி பிழைக்க வேண்டிய நிலையே தொடர்ந்து தக்க வைக்கப்படும்.

நிரந்த தீர்வு எவ்வளவு அவசியமோ அதேயளவு உட்கட்டமைப்புகளின் அபிவிருத்தி மிக அவசியம்.

||சர்வதேசத்தை ஏமாற்றிய காலம் கடந்துவிட்டது – ஐக்கிய தேசியக் கட்சி http://senpakam.org/docs/2014/06/12/news/srilanka-news/15865/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/ சர்வதேசத்தை ஏமாற்றிய காலம் கடந்துவிட்டது. சர்வதேச விசாரணைக்கு இடமளித்து ஒத்துழைப்பினை வழங்குவதே ஒரே வழியாகும். அதனைத் தடுத்தால் அத்துமீறிய சர்வதேச விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இதன் விளைவுகள் மிக மோசமாக அமையுமெனவும் எச்சரித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 26ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் இடம்பெற்ற போது இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான விசாரணைகுழு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்ந்தும் அரசாங்கம் இவ்விசாரணைக்கு மறுப்புத் தெரிவிக்கின்றமை குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் வினவிய போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச விசாரணையொன்று இடம்பெறுவதை தடுத்திருக்க முடியும் என்னும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அச்சந்தர்ப்பத்தினை தவறவிட்டார். ஆரம்பத்தில் இருந்தே இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் இருக்கும் போது அரசாங்கம் சுயாதீன உள்நாட்டு விசாரணையொன்றை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கண்டிருக்குமாயின் இன்று சர்வதேச அரங்கில் தலைகுனிய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. யுத்தம் முடிவடைந்து மிக நீண்ட கால அவகாசம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும். அவை தொடர்பில் எவரும் கவனத்திற்கொள்ளவில்லை. இப்போது காலம் கடந்த பின்னர் உள்நாட்டு சுயாதீன விசாரணனைகளை செய்வது, சர்வதேச விசாரணையினை எதிர்த்து போராடுவது என்பதற்கெல்லாம் வெறுமனே மக்களை ஏமாற்றும் வேலையாகும்.|| மகிந்தவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சருக்கே மகிந்தவின் திருவிளையாடல்களை இப்போ எதிர்க்கட்சியில் இருந்து சொல்ல வேண்டிய நிலை. இது தான் என்னைப்போன்ற சாமானிய மக்களுக்கும் உள்ள சந்தேகம். காலத்தை கடத்தல், ஏதாவது செய்வதாக சாக்கு போக்கு சொல்லல் இது சிங்கள கட்சி அனைத்துக்கும் பொது அம்சம். தமிழ் மக்கள் நம்பும் படியாக சிங்கள அரசுகள் எதுவும் செய்யவில்லை. இவ்வளவு காலமும் நடித்தே சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அபிவிருத்தியும் இந்தவகையில் அடங்கும் என்பது என் போன்றவர்களின் சந்தேகமும். ஏன் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசின் மேல் இன்னும் சந்தேகம் உள்ளது?? உண்மையாக தமிழர்களுக்கு தீர்வு கொடுக்க இலங்கை அரசுக்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? புலிகள் அடிக்கிறார்கள் என்ற நொண்டிச்சாட்டு இனி செல்லாது. மேலும் அபிவிருத்தியை எதிர்க்கிறேன் என்று எனது கருத்தை திசை திருப்ப வேண்டாம்.

Edited by kalyani

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணி

உட்கட்டுமான வளர்ச்சி, நிவாரணம் குறுகிய நோக்கு.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டித் தீர்வு நீண்டகால நோக்கு.

ஒன்றுக்காய் இன்னொன்றை இழக்கமுடியாது.

சித்திரம் தேவைதான் ஆனால் இப்போ உடனடித்தேவை சுவரை தக்க வைப்பதே.

தெற்க்கின் இனவாத போக்கு இலங்கை வரலாறு தெரிந்த யாருக்கும் தெரிந்த விடயமே.

ஆனால் புலிகளால் கையறுநிலையில் கைவிடப்பட்டபின், சாம, பேத, தான (தண்டம் மட்டும் வேண்டாம்) முறையில் எம் நீண்ட மற்றும் குறுகிய நோக்குகள் நோக்கி நகர்வதே மக்கள் முன் இப்போதுள்ள ஒரே தெரிவு.

தீர்வை தராமல் இழுத்தடித்து ஈற்றில் எம்மை சுவடழிப்பதே இனவாதிகளின் ஒரே நோக்கு. மீண்டும் ஆயுதப் போராட்டம் என்பதும், தோற்றுப்போன புலிகளின் வழியை தொடர்வதும், தனிநாட்டு கோசமிடுவதும், இனவாதிகளின் வேலையை மிகச்சுலபமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

||சர்வதேசத்தை ஏமாற்றிய காலம் கடந்துவிட்டது – ஐக்கிய தேசியக் கட்சி http://senpakam.org/docs/2014/06/12/news/srilanka-news/15865/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/ சர்வதேசத்தை ஏமாற்றிய காலம் கடந்துவிட்டது. சர்வதேச விசாரணைக்கு இடமளித்து ஒத்துழைப்பினை வழங்குவதே ஒரே வழியாகும். அதனைத் தடுத்தால் அத்துமீறிய சர்வதேச விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இதன் விளைவுகள் மிக மோசமாக அமையுமெனவும் எச்சரித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 26ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் இடம்பெற்ற போது இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான விசாரணைகுழு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்ந்தும் அரசாங்கம் இவ்விசாரணைக்கு மறுப்புத் தெரிவிக்கின்றமை குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் வினவிய போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச விசாரணையொன்று இடம்பெறுவதை தடுத்திருக்க முடியும் என்னும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அச்சந்தர்ப்பத்தினை தவறவிட்டார். ஆரம்பத்தில் இருந்தே இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் இருக்கும் போது அரசாங்கம் சுயாதீன உள்நாட்டு விசாரணையொன்றை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கண்டிருக்குமாயின் இன்று சர்வதேச அரங்கில் தலைகுனிய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. யுத்தம் முடிவடைந்து மிக நீண்ட கால அவகாசம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும். அவை தொடர்பில் எவரும் கவனத்திற்கொள்ளவில்லை. இப்போது காலம் கடந்த பின்னர் உள்நாட்டு சுயாதீன விசாரணனைகளை செய்வது, சர்வதேச விசாரணையினை எதிர்த்து போராடுவது என்பதற்கெல்லாம் வெறுமனே மக்களை ஏமாற்றும் வேலையாகும்.|| மகிந்தவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சருக்கே மகிந்தவின் திருவிளையாடல்களை இப்போ எதிர்க்கட்சியில் இருந்து சொல்ல வேண்டிய நிலை. இது தான் என்னைப்போன்ற சாமானிய மக்களுக்கும் உள்ள சந்தேகம். காலத்தை கடத்தல், ஏதாவது செய்வதாக சாக்கு போக்கு சொல்லல் இது சிங்கள கட்சி அனைத்துக்கும் பொது அம்சம். தமிழ் மக்கள் நம்பும் படியாக சிங்கள அரசுகள் எதுவும் செய்யவில்லை. இவ்வளவு காலமும் நடித்தே சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அபிவிருத்தியும் இந்தவகையில் அடங்கும் என்பது என் போன்றவர்களின் சந்தேகமும். ஏன் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசின் மேல் இன்னும் சந்தேகம் உள்ளது?? உண்மையாக தமிழர்களுக்கு தீர்வு கொடுக்க இலங்கை அரசுக்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? புலிகள் அடிக்கிறார்கள் என்ற நொண்டிச்சாட்டு இனி செல்லாது. மேலும் அபிவிருத்தியை எதிர்க்கிறேன் என்று எனது கருத்தை திசை திருப்ப வேண்டாம்.

இது குழந்தை பிள்ளைக்கும் தெரியும் ........
இப்ப நித்திரை மாதிரி நடித்தால்தான் .......... தங்களை அறிவாளிகள் என்று காட்டலாம்.
அதுதான் நித்த்ரிரை மாதிரி நடிக்கினம்.
 
போர் நடந்த மக்களின் அடிப்படை வசதிக்கு ... நீச்சல் குளத்திற்கும் என்ன தொடர்பு என்பது புரியவில்லை.
மக்கள் இன்னமும் தடுப்பு முகாமில் இருக்கிறார்கள்.
சம்பூர் மக்களுக்கே சம்பூர் மறந்துபோச்சு 
 
பெண்கள் விபச்சாரம் செய்தால் .......... அடிப்படை வசதி இல்லையாம் எல்லாம் புலி செய்த வேலையாம்.
அதே திகதியில் 1.4 பில்லியன் உட்கட்டுமானம் பற்றி அடுத்த திரியில் புழுங்கி போகிறார்கள்.
 
மேல்தட்டு வர்க்கம் ஆகிரமிப்பளர்களுடன் கை கோர்த்துக்கொண்டு சுவருக்கு  வர்ணம் அடிகிறார்கள்.
அப்படியே நாமும் மெய்சிலிர்த்து போக வேண்டியதுதான்.
 
கூலங்குளம் அணுமின் நிலையத்திற்கு தமிழ்நாட்டில் பிரச்சனை கொடுக்கிறார்கள் ....
 
அதையும் அப்பிடியே ஆனையிறவு பக்கம் கொண்டுவந்தால் வெறும் 20km கம்பிகளுடன் மின்சாரத்தை இந்தியா கொண்டு போவதோடு. புலிகள் போட்டுத்தள்ளிய கல்விமான்கள் போக ..... தப்பிய கவரிமான்களுக்கு வேலைவாய்ப்பும் வந்து சேரும். என்ன கொஞ்சம் இங்கே நிக்குது மற்றதுகள் கொழும்பில் நிற்கினம் ... 24மணிநேர போத்தல் டிலிவரி இருந்தால் போவினம்.

இது முழங்கால்

knee_lig.jpeg

இது மொட்டந்தலை
 
bald-head.jpg

நோ கொன்பூஷன் பிளீஷ் !!

முடியல வயிறு நோகுது ........ :D  :D .....பச்சை முடிந்துவிட்டது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.