Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைகளுக்கு தீவைப்பு: ஊரடங்கு சட்டத்தை மீறினால் கைது செய்யப்படுவர்!

Featured Replies

தர்ஹா நகரில் 10 கடைகள் தீ வைத்து எறிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன தெரிவித்தார்.
D65sd6s50dfsd60f.jpg
பொதுபல சேனா அமைப்பினரால்  தர்ஹாநகரில் இன்று மாலை நடத்தப்பட்ட  ஆர்ப்பாட்டத்தினையடுத்தே மேற்படி பதற்ற நிலை அங்கு உருவாகியுள்ளது.
 
இதேவேளை அளுத்கம மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. அளுதகம பொலிஸ் பிரிவுக்கு மாலை 6.45 மணி முதலும் பேருவளைக்கு 7.45 மணிக்கு பின்னரும் இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.
 
ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன, ஊரடங்கு காலப்பகுதியில் பாதைகளில் பயணிப்பது, ஒன்று கூடுவது நடமாடுவது என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
 
ஊரடங்கு சட்டதை மீறி செயற்படுபவர்கள் கைது செய்யப்பட்டு 1983 ஆம் ஆண்டின் குற்றவியல் தண்டனை சட்டக் கோவையின் 10 ஆம் சரத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்கப்படடும் எனவும் குறிப்பிட்டார்.
 
virakesari 
 
பள்ளிவாசல், வீடுகள் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு
 
அளுத்கம, தர்ஹா நகரில் அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.D5d40s5d0sd.jpg
 
தர்ஹா நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ வைக்கப்பட்டள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
 
தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதனையடுத்தே  நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டிருந்ததோடு ஊரடங்கு சட்டத்தையும் பிறப்பித்துள்ளனர்.

 

virakesari

  • Replies 59
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்து, அங்கு இன்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம் ஒன்றை நடத்த பொலிஸார் அனுமதி அளித்ததை அடுத்தே இந்த மோதல்கள் நடந்துள்ளன.

 

அந்தக் கூட்டத்தை அடுத்து பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களின் பகுதிகளை நோக்கி, முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற போதே அந்த மோதல்கள் வெடித்துள்ளன.

இதில் முஸ்லிம்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன, ஊர்வலமாகச் சென்ற சிங்களவர்களுக்கு கல் வீசப்பட்டிருக்கிறது. பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தச் சம்பவங்களில் எவை முதலிலும், எவை பின்னரும் நடந்தன என்பது தெரியவில்லை.

முஸ்லிம்களின் வீடுகளும் மசூதிகளும் கல்வீசித்தாக்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

உள்ளுர் செய்தியாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். தான் தனது சொந்த சிங்கள மக்களாலேயே தாக்கப்பட்டதாக உள்ளூர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

140615163126_aluthgama_vioelnce_muslims_

வன்செயல்கள் பல பகுதிகளுக்கும் பரவியதன் காரணமாக, அபாயகரமான நிலைமை இருப்பதாகவும், குழப்பமாக இருப்பதாகவும், அளுத்கமவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிடுவதில் உள்ளூர் ஊடகங்கள் சுயதணிக்கை போக்கை கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட செய்தியைத் தவிர வேறு செய்திகளைக் காணமுடியவில்லை.

இன்றைய சம்பவங்கள் குறித்து எதனையும் ஒளி/ஒலிபரப்ப வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து சில ஊடகங்களுக்கு உத்தரவு வந்ததாக சில வட்டாரங்கள் கூறுகின்றன.

அளுத்கமவில் முஸ்லிம் இளைஞர்களுக்கும் பொதுபல சேனாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்த மோதல்களை அடுத்த கலவரங்கள் குறித்து களுத்துறை மாவட்ட சமாதானக் கவுன்ஸிலின் செயலரான எம்.எச்.எம். ஹுசைன் மத் அவர்களின் செவ்வியை இங்கு கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/06/140615_aluthgamariots.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இசுலாமிய  சகோதரர்களுக்கு

எம்மால் முடிந்தவரை ஆறுதலும் ஒத்துழைப்பும் வழங்குவோமாக.........

யேசுவே...........

இசுலாமிய  சகோதரர்களுக்கு

எம்மால் முடிந்தவரை ஆறுதலும் ஒத்துழைப்பும் வழங்குவோமாக.........

 

நாங்கள் உதவிக்கு போக அவையள் எங்களை அடிவாங்க வைத்துவிட்டு தப்பி போய்விடுவினம்.

           நேசக்கரம் மூலம் அவையளுக்கு பணம் சேகரித்து அனுப்பலாம் சாந்தி அக்காவிடம் சொல்லி அதற்குரிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

அளுத்கம - பேருவளைப் பகுதிகளுக்கான தொலைபேசி இணைப்புக்கள் செயலிழக்க வைக்கப்பட்டு உள்ளதாக பிரதேச தகவல்கள் கூறுகின்றன.

 

fb.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான ரீதியல் யாவருக்கும் உதவ வேண்டும். இதில் மாற்று கருத்தில்லை. ஆனால் நாங்கள் அடி பட்டு கிடந்த போது, எரியிற வீட்டில் பிடிங்கினவங்கல்தான் அதிகம். முதலில் நாங்கள் பட்ட காயத்தை ஆற்றுவோம், பின்பு பிறருக்கு உதவி செய்வதை யோசிப்போம்.

  • தொடங்கியவர்
அளுத்கமையில் ஒருவர் பலி.

 

அளுத்கமையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தி தெரிவிக்கிறது. பலர் காயமுற்ற நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 
இவ்வுயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, இன்னமும் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
 

இலங்கை ஊடகங்கள் பேருவலை பகுதியில் ஊரடங்கு சட்டம் போட்டதை மாத்திரம் சொல்லிவிட்டு, அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெரும் தாக்குதல்களை தெளிவாக மறைக்கின்றன


வெலிபிட்டிய பள்ளியை பாதுகாக்க துணிவுடன் எதிர்த்துப் போராடிய முஸ்லிம் இளைஞர்கள்! ஒன்றரை மணி நேர போராட்டத்தில் ஏழு பேர் மீது துப்பாக்கி சூடு. ஒருவர் கவலைக்கிடம் !  போராடிய சகோதரர் தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமாரே...இப்ப ச்றிது நேரத்துக்கு முன்னர்தான்...ஹக்கீமு சொன்னவர் அரசாங்கதுக்கு தொல்லை கொடுக்க மாட்டன் என்று...நாங்கள் ஆட்சியை நிர்ணயிக்கிற சக்தி என்று...இப்பா மஹிந்த போன இடத்திலை மதநல்லிணக்கம்  னம்முடைய நாட்டில் கடைப்பிடிக்கிறன் என்று அறிக்கை விட இவர் பெருமாள் மாடு மாதிரி தலையாட்டுவார்...போதாக்குறைக்கு முல்லை ..வன்னி மன்னாரில் காணி பிடிக்கவெண்டால் சீனாவும் மூனாவும் ஒன்றாக வருவினம்....இவை செய்த அட்டுழியத்திற்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்

 

  • தொடங்கியவர்


ALUTHGAMA-1.jpg

 

ALUTHGAMA.jpg

 

தீதும் நன்றும் பிறர் தர வரா என்று சிங்களவன் அறியும் காலம் மிக விரைவில் .

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் இதனை ஐநா மனித உரிமை பேரவையில் இப்படிச் சொல்வார்..

 

அளுத்கமையில்.. மனித உரிமைகளோ.. முஸ்லீம்களின் உரிமைகளோ.. சிங்களவர்களின் உரிமைகளோ.. எதுவுமோ மீறப்படவில்லை.

 

பழைய டயர்களை கொழுத்திய போது தீ பரவியதால்... ஏற்பட்ட அசம்பாவிதத்தை ஊடகங்கள் தவறாகக் காட்டிவிட்டன.

 

நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று அமைத்து இதனை நாங்களே உள்நாட்டில் விசாரிச்சுக்குவம். நீங்கள் வெளியார் தலையிட வேண்டாம்.

 

எனி பழைய டயர்களை கொழுத்த எனது நீதியமைச்சு நீதிமன்றத் தடை வாங்கும் என்பதை இம்மன்றுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

 

நன்றி.

 

----------------------

 

இப்படியாப்பட்ட தலைவர்கள் இணக்க அரசியல் என்று சொல்லிக் கொண்டு சோர அரசியல் செய்ய தயாராக உள்ள நிலையில்.. சிங்களவன் என்ன செய்யமாட்டான். இதுவும் செய்வான்.. இன்னும் செய்வான். !!!

  • தொடங்கியவர்

மகிந்தசகோதரர்கள் நாட்டில் இல்லாதநேரம் அரங்கேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான பொதுபலசேனாவின் தாண்டவம்.

 

mu0_CI.png

கொழும்பில் இருந்து கிடைத்த தகவலின்படி  தெஹிவளையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பிரபல மருந்தகம் (ஹார்கோட்ஸ்) ஒன்றின் மீது இனவெறியர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த மருந்தகத்தின் ஒரு பகுதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.


முஸ்லீம் மக்களுக்கும் அவர்களது சொத்துகளுக்கும் இன்று பௌத்த இனவாதிகள் தொடர்ச்சியாக சேதங்களைஏற்படுத்தி வரும் நிலையில் அளுத்கமை சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணை 
நடத்தும் என பொலிவியாவில் இருந்து  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். 
தனது சகோதரனான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் ஆசீர்வாதத்துடன் பொதுபலசேனா செய்துவரும் சேஸ்டைகளை கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதி விசாரணை நடத்தப் போகிறாராராம்..

globaltamilnews.net

இதற்கிடையில் அளுத்கமப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடும் சீற்றமும் அதிருப்தியும் அடைந்து இருக்கிறாராம்.


தற்போது பொலீவியா நாட்டில் 'ஜி.77' நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அவசரமாகத் தொடர்புகொண்டு பேசினாராம்.  அப்போது தமது கடும் விசனத்தை வெளியிட்ட ரவூப் ஹக்கீம், இனிமேலும் அரசில் தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாது என்பதை ஜனாதிபதிக்கு மநைமுகமாக தெரியப்படுத்தினாராம்...


அதுமட்டும் இன்றி இது குறித்து திங்கள் அல்லது செவ்வாய் அவர் ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பாராம். ஜனாதிபதி வெளிநாடு போயிருக்கும் இச்சமயத்தில் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டில் இல்லாத நேரம் பொதுபலசேனாவின் வெறியாட்டத்தை நடத்த அனுமதியை கொடுத்த மகிந்த சகோதரர்களிடம் முஸ்லீம் அமைச்சர்கள் நீதி கேட்பார்களாம்... 

  • கருத்துக்கள உறவுகள்

புகை மூட்டங்கள் 1983 ஜூலை நினைவுகளை ஞாபகப்படுத்தின.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பொத்திக்கொண்டிருந்து  வேடிக்கை பார்ப்பதே நல்லது . 

நாங்கள் பொத்திக்கொண்டிருந்து  வேடிக்கை பார்ப்பதே நல்லது . 

 

இதுவே சரி...இவ்வளவு நாளும் நாங்கள் பட்ட அவலத்திற்கு ஒரு விடுதலை.......

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை பார்க்கத்தேவையில்லை. நம்ம சோலியை பார்த்துகொள்வோம்.

13, சமஸ்டி என்று நாம் அடையவேண்டியது எவ்வளவோ கிடக்கு. இதுக்குள்ள இன்னொருவரின் பிரச்சினையில் போய் தலையை கொடுக்க முடியாது.

புகை மூட்டங்கள் 1983 ஜூலை நினைவுகளை ஞாபகப்படுத்தின.

 

ஜூலை 83 கலவரத்தில தமிழனுக்கு உதவின சிங்களவரும் கன பேர். ஆனால் அப்பிடியான முஸ்லீமை சந்திக்கேலை. பதிலாக சிங்களவர் எரித்த அல்லது சூறையாடிய தமிழரின் மிச்சங்களை அள்ள சிங்களவனா வேசம்போட்டவங்களைத்தான் கண்டேன்.  :o

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தசகோதரர்கள் நாட்டில் இல்லாதநேரம் அரங்கேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான பொதுபலசேனாவின் தாண்டவம்.

 

mu0_CI.png

கொழும்பில் இருந்து கிடைத்த தகவலின்படி  தெஹிவளையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பிரபல மருந்தகம் (ஹார்கோட்ஸ்) ஒன்றின் மீது இனவெறியர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த மருந்தகத்தின் ஒரு பகுதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லீம் மக்களுக்கும் அவர்களது சொத்துகளுக்கும் இன்று பௌத்த இனவாதிகள் தொடர்ச்சியாக சேதங்களைஏற்படுத்தி வரும் நிலையில் அளுத்கமை சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணை 

நடத்தும் என பொலிவியாவில் இருந்து  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். 

தனது சகோதரனான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் ஆசீர்வாதத்துடன் பொதுபலசேனா செய்துவரும் சேஸ்டைகளை கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதி விசாரணை நடத்தப் போகிறாராராம்..

globaltamilnews.net

இதற்கிடையில் அளுத்கமப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடும் சீற்றமும் அதிருப்தியும் அடைந்து இருக்கிறாராம்.

தற்போது பொலீவியா நாட்டில் 'ஜி.77' நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அவசரமாகத் தொடர்புகொண்டு பேசினாராம்.  அப்போது தமது கடும் விசனத்தை வெளியிட்ட ரவூப் ஹக்கீம், இனிமேலும் அரசில் தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாது என்பதை ஜனாதிபதிக்கு மநைமுகமாக தெரியப்படுத்தினாராம்...

அதுமட்டும் இன்றி இது குறித்து திங்கள் அல்லது செவ்வாய் அவர் ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பாராம். ஜனாதிபதி வெளிநாடு போயிருக்கும் இச்சமயத்தில் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டில் இல்லாத நேரம் பொதுபலசேனாவின் வெறியாட்டத்தை நடத்த அனுமதியை கொடுத்த மகிந்த சகோதரர்களிடம் முஸ்லீம் அமைச்சர்கள் நீதி கேட்பார்களாம்... 

 

இந்த வருடத்தின் மிகப் பெர்ய நகைச்சுவை

இசுலாமிய  சகோதரர்களுக்கு

எம்மால் முடிந்தவரை ஆறுதலும் ஒத்துழைப்பும் வழங்குவோமாக.........

(இந்தியாவின் உதவியுடன் உலக நாடுகளால் அல்லது இந்தியாவால் வெகு விரைவில் அழிவை எதிர் நோக்கும் இலங்கை)

சிறிலங்காவிலும் தலிபான்கள் – புலனாய்வுப் பிரிவுக்கு அனைத்துலக காவல்துறை தகவல்

[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2014, 00:14 GMT ] [ தா.அருணாசலம் ]

சிறிலங்காவுக்குள் தலிபான் தீவிரவாதிகள் செயற்படுவதாக, அனைத்துலக காவல்துறையினால், சிறிலங்கா புலனாய்வு முகவர் அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

மத்தியகிழக்கு மற்றும் ஏனைய ஆசிய நாடுகளுக்கு இடையிலான பயணங்களுக்கான ஒரு இடைத்தங்கல் நாடாக, தலிபான்கள் சிறிலங்காவைப் பயன்படுத்தி வருவதாக,அனைத்துலக காவல்துறை தெரிவித்துள்ளது. 

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, தலிபான்கள் சிலர் சிறிலங்காவுக்குள் நுழைந்திருக்கலாம் என்று சிறிலங்காவின் புலனாய்வுச் சேவைகள் கருத்து வெளியிட்டுள்ளன. 

அவர்கள் கொழும்பு மற்றும் காத்தான்குடியில், உள்ள உள்ளூர்காரர்களுடன் இணைந்து கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில், ஈடுபடுவதாகவும் புலனாய்வுப் பிரிவுகள் நம்புகின்றன. 

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயற்படும். இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தலிபான், உலகளாவிய ரீதியாக தடை செய்யப்பட்டுள்ள ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

https://www.colombotelegraph.com/index.php/video-this-will-be-the-end-of-all-muslims-gnanasara-says-prior-to-riots/

சர்வதேச விசாரணை என்ற இழை இறுக்கப்படும் நிலையில் கொஞ்சம் பொறுமையாக இருந்து இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்ட பின்னர் முஸ்லிம்களை அழித்தொழிக்கும் செயலைத் தொடங்கியிருக்கலாம். கொஞ்சம் அவசரப்பட்டிட்டாங்களோ!

எல்லாம் நன்மைக்கே!

  • கருத்துக்கள உறவுகள்
10425186_10202019534001179_7494043765497

முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக் கொடுக்க தாம் தயாராக இருப்பதாகவும் முஸ்லிம் இனவாதத் தலைவர்களையும் அந்த வகுப்புகளுக்கு வருமாறும் பொதுபல சேனா அழைப்பு விடுத்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பு கடந்த செவ்வாயன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டிலே அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் ஒருபோதும் முஸ்லிம்களின் விடயத்தில் கடுமையாகச் செயற்பட்டதில்லை. முஸ்லிம் தலைவர்கள் எமது பொறுமையைப் பரிசோதிக்கிறார்களா என்ற பிரச்சினை எமக்கு உள்ளது.

பௌத்தர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அநீதிகளை நீக்குவதற்கு இந்நாட்டின் உயர் இடமோ உயர் நிலையிலுள்ளவர்களோ நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

( நவமணியில் வெளியான செய்தியின் ஒரு சிறு பகுதி இது. குறித்த செய்தியை முழுமையாக வெளியிட முடியாதுள்ளது. நவமணியில் இந்தச் செயதி எழுதப்பட்டுள்ள விதம் மயக்கமாகவுள்ளதால் சில பகுதிகளை மட்டும் நான் பயன்படுத்தும் தமிழ்மொழி நடையில் மேலே தந்துள்ளேன். – ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

https://www.facebook.com/

 

  • கருத்துக்கள உறவுகள்

இசுலாமிய  சகோதரர்களுக்கு

எம்மால் முடிந்தவரை ஆறுதலும் ஒத்துழைப்பும் வழங்குவோமாக.........

 

நாங்க எண்ணை ஊத்துவம் எண்டு பிளான் பண்ண, நீங்க இப்படி சொல்றீங்களே....

துரோகி விசுகு, ஒழிக.... :D  :lol:

  • தொடங்கியவர்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்கள் மூவர் சுட்டுக் கொலை!

 

dt-3.jpg

அளுத்கமை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நேற்று இரவு வல்பிட்டிய பள்ளிவாசலில் பேரின வெறியர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் எண்பதுக்கு மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்ததாகவும் இன்று அதிகாலை வேளையே அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வல்பிட்டிய பள்ளிவாசலை அடித்து நொறுக்க திரண்டு வந்த பேரின வெறியர்களுடன் போராடிய நிலையிலேயே நிராயுத பாணிகளாக இருந்த முஸ்லிம் சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அறிய முடிகிறது.
இதன்போது மேலும் என்பது பேர் அளவில் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

death.jpg

 

Aluthgama-3.jpg

Aluthgama-14.jpg

 

Aluthgama-10.jpgAluthgama-7.jpg

 

 

Aluthgama-15.jpg

dt-4.jpg

 

 

dt-1.jpg

 

 

dt-2.jpg

http://metromirror.lk/?p=36208

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.