Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைகளுக்கு தீவைப்பு: ஊரடங்கு சட்டத்தை மீறினால் கைது செய்யப்படுவர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. அரசியல் சட்டத்தால் பாதுகாப்பு கிடைக்கப் பெற்றவர்கள் அவர்கள்.

  • Replies 59
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எண்ணை ஊத்துவம் எண்டு பிளான் பண்ண, நீங்க இப்படி சொல்றீங்களே....

துரோகி விசுகு, ஒழிக.... :D  :lol:

 

உங்களை  சில  நாட்களாக  காணமுடியவில்லை

இப்படியான துரோகங்களைச்செய்தால்  எங்கிருந்தாலும் ஓடிவருவீர்கள் என்று தெரியும் :D

 

இங்கு என்னை  மிகவும் அவதானமாக அவதானிக்கிறீர்கள் என்றும் தெரிகிறது

என்னாலேயே

அங்கால

இங்கால

அரக்கமுடியவில்லை

இது தான் புலிகளும் தொடர்ந்து ஒரே பிடியில் பிடிவாதமாக நின்றார்கள் என்பதற்கான அணை.

 

முன்னர் எண்ணைய் ஊத்தவேண்டிய  விடயம்  என்று தான் எழுதி  வந்தேன்

இப்போ

அந்தக்கட்டத்தை தாண்டியாச்சு

இனி  உதவி  செய்யணும்

ஒரு பக்கம் துவக்கும் மறுபக்கம் கத்தி  வாள்

இதை  முதலில் சமன் படுத்தணும்

அப்படியே இந்தப்பகுதியை மேலே  கொண்டு வரணும்.....

புலம்பெயர் இசுலாமிய சகோதரங்கள் சிறி லங்கா பயங்கரவாதத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தவேண்டும்.

இசுலாமிய இணக்கவாத அரசியல்வாதிகளை நம்பி பிரயோசனம் இல்லை.

கே.எப்.சி பொரிச்ச கோழிக்கு வாயை பிழக்கும் கூட்டம், ஒரு போதும் தீர்வை பெற்று தரபோவதில்லை.தரபோவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1976/77 ஆம் ஆண்டு புத்தளத்தில் உள்ள பள்ளிவாசலில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.....இருந்தும் முஸ்லிம்கள் ஆத்திரமடையாமல் இணக்க அரசியல் செய்தபடியால்தான் இப்பொழுது விருச்சமாக வளர்ந்திருக்கின்றனர்...எனவே இணக்க அரசியல் வாழ்க;.....

  • தொடங்கியவர்
140616040228_aluthgama_vioelnce_muslims_

அளுத்கம வன்செயலில் 3 முஸ்லிம்கள் பலி

களுத்துறை மாவட்டம் அளுத்கமவில் கடும்போக்கு பௌத்தர்களுடன் நடந்த மோதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூறியுள்ளனர்.

கடந்த இருவருடங்களாக கடும்போக்கு சிங்கள பௌத்தவாதிகள் முஸ்லிம் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திவருகின்றனர். வழமையாக பௌத்த பிக்குமார் இவற்றுக்கு தலைமை தாங்குவது வழக்கம்.

 

இவை அண்மைய வருடங்களில் மத வன்முறைகளாக உருவெடுத்துள்ளன.

30 தொடக்கம், 40 வயதுகளைச் சேர்ந்த 3 முஸ்லிம்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததை அடுத்து முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சநிலை உருவாகியுள்ளது.

ஒரு மசூதிக்கு அருகே முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு வந்த குழு ஒன்றுக்கும், முஸ்லிம்களுக்கும் நேற்று இரவு நடந்த மோதலின் போது இது நடந்துள்ளது.

குறைந்தபட்சம் மேலும் 7 பேராவது இதில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் முதலில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பள்ளிவாசலில் இரத்தக்கறையை பிபிசி பார்த்துள்ளது.

அருகில் உள்ள தெருவில் பல இடங்களில் துப்பாக்கிக் குண்டு தாக்கிய அடையாளங்களும், இரத்தக்கறையும் காணப்பட்டன.

அதில் இருந்து சிறிது தூரத்தில் பல முஸ்லிம் வணிக நிலையங்கள் எரிக்கப்பட்டிருந்தன.

அரசாங்க ஆதரவுடன் பௌத்தர்கள் இனவாதத்தை பரப்புவதாக உள்ளூர்க்காரர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், இந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொறுமை காக்குமாறும் இலங்கை ஜனாதிபதி தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

 

அளுத்கம சம்பவத்தை கண்டித்து திருகோணமலை சட்டத்தரணிகள் போராட்டம்
140616085934_trinco_bar_304x171_bbc_nocr

அளுத்கம சம்பவத்தை கண்டித்து திருகோணமலை சட்டத்தரணிகள் போராட்டம்

களுத்துறை மாவட்டம் பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து இன்று திங்கட்கிழமை நண்பகல் திருகோணமலையில் சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக வீதியில் கூடிய சட்டத்தரணிகள், பேருவளை மற்றும் அழுத்கம சம்பவங்களை கண்டிக்கும் வகையிலான வாசக அட்டைகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

 

''சிறுபான்மை இனத்தவர்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் இனவாத, கொடூரமான மற்றும் நாகரீகமற்ற தாக்குதல்கள்'' என்று தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் எழுதப்பட்ட அந்த வாசக அட்டைகளில் குறிப்பிடப்பட்டு, அரசாங்கத்திடம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டும் என்ற வேண்டுகோளும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் பெற்றுள்ள முஸ்லிம் பங்காளி கட்சிகள் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அந்த கட்சிகளுக்கு உள்ளேயும் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் . அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக இருக்கின்றன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவு குறித்து இன்று கூடி ஆராயவிருப்பதாக கூறப்படுகின்றது.

அதேவேளை கிழக்கு மாகாண சபையின் துணை தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான எம். எஸ். சுபைர் தமது கட்சி தலைவருக்கு எழுதியுள்ள அவசர கடிதமொன்றில், அரசிற்கு வழங்கும் ஆதரவை மீளாய்வு செய்யுமாறு கேட்டுள்ளதாக தெரியவருகின்றது.

bbc tamil

  • கருத்துக்கள உறவுகள்

1976/77 ஆம் ஆண்டு புத்தளத்தில் உள்ள பள்ளிவாசலில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.....இருந்தும் முஸ்லிம்கள் ஆத்திரமடையாமல் இணக்க அரசியல் செய்தபடியால்தான் இப்பொழுது விருச்சமாக வளர்ந்திருக்கின்றனர்...எனவே இணக்க அரசியல் வாழ்க;.....

 

அந்த  நேரத்தில் தமிழர்களே  கண்ணுக்குள் குத்திக்கொண்டிருந்தார்கள்

இப்போ

அவர்களின் கதையை  முடிச்சாச்சு

வெற்றி  மமதை வேறு....

அடுத்தது யார்??

படிச்சு படிச்சு

அழுது புரண்டு கெஞ்சி  கேட்டோம்

காட்டிக்கொடுக்காமலாவது இருங்கோ என்று.......

“In this country we still have a Sinhala police; we still have a Sinhala army. After today if a single Marakkalaya or some other paraya (alien) touches a single Sinhalese…..it will be their end.”

Galagoda-Atte Gnanasara Thera (Aluthgama – 15.6.2014)

இந்த நாட்டின் காவல் துறை, இராணுவம் எல்லோரும் சிங்களவர். யாராவது மரகலாயா, பறைய இனத்தவர் சிங்களவரை தொட்டால் அது அவர்களின் முடிவாகும்.

இலங்கை முஸ்லிம்கள் முழுமையாக தமிழர்களோடு இணைய வேண்டிய தருணம் இதுதான்............

  • கருத்துக்கள உறவுகள்
 
 
2 hrs · 

இந்த அட்டூழியங்கள் தமிழர்களுக்கு புதிது அல்ல. இதையெல்லாம் வலியுடன் அனுபவித்தவர்கள் நாங்கள். எங்கள் சொத்துகளும், உயிர்களும் எங்கள் கண்கள் முன்னே பறிக்கப்பட்டன. எரித்து அழிக்கப்பட்டன. நடந்து முடிந்த யுத்த வெற்றியின் பிறகு நம்பிக்கையுடன் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சாப்பிட்டதாகவும், இன்று அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவும் ஐதேக மாகாணசபை உறுப்பினர் நண்பர் முஜிபுர் ரஹ்மான் இங்கே சொன்னார். யுத்தம் நின்றுவிட்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், நாங்கள் பட்டாசு கொளுத்தவில்லை. அந்த யுத்தம் நடததப்பட்ட முறையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாட்டை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில், இனவாத அடிப்படையில் நடத்தப்பட்ட யுத்தம் அது என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான் அதே இனவாதம் இன்று அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதும் பாய்கிறது.  fb.com

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்த அட்டூழியங்கள் தமிழர்களுக்கு புதிது அல்ல. இதையெல்லாம் வலியுடன் அனுபவித்தவர்கள் நாங்கள். எங்கள் சொத்துகளும், உயிர்களும் எங்கள் கண்கள் முன்னே பறிக்கப்பட்டன. எரித்து அழிக்கப்பட்டன. நடந்து முடிந்த யுத்த வெற்றியின் பிறகு நம்பிக்கையுடன் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சாப்பிட்டதாகவும், இன்று அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவும் ஐதேக மாகாணசபை உறுப்பினர் நண்பர் முஜிபுர் ரஹ்மான் இங்கே சொன்னார். யுத்தம் நின்றுவிட்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், நாங்கள் பட்டாசு கொளுத்தவில்லை. அந்த யுத்தம் நடததப்பட்ட முறையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாட்டை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில், இனவாத அடிப்படையில் நடத்தப்பட்ட யுத்தம் அது என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான் அதே இனவாதம் இன்று அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதும் பாய்கிறது.  fb.com

 

 

எல்லாம் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது முஜிபுர் ரஹ்மானின் கூற்றில் இருந்து தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இஸ்லாமியருக்கு கொம்பு சீவுங்கள். ஆனால் அவர்கள் வலு கெட்டிக்காரர். உங்கள் மகுடிக்கு எடுபடமாட்டீனம்.

நல்லா இஸ்லாமியருக்கு கொம்பு சீவுங்கள். ஆனால் அவர்கள் வலு கெட்டிக்காரர். உங்கள் மகுடிக்கு எடுபடமாட்டீனம்.

பொரிச்ச கோழிக்கு அல்லது தார் தெருவிற்கு எடுபடுவினமே?

பலபிட்டிய பகுதியில் தற்போது பதட்ட நிலை நிலவுவதாக அங்கிருந்து தகவல்

பலபிட்டிய பகுதியில் தற்போது பதட்ட நிலை நிலவுவதாக அங்கிருந்து தகவல்

ஜூலை கலவரம் இன்னொன்று உருவாக்க சிறி லண்கன்ஸ் முற்படுகிறார்கள்.

நடக்கும் கலவரங்களினால் பாதிக்கப்படப் போவது தமிழர் தான் ஏன் என்றால், இனி தென் இலங்கை முஸ்லீம்கள் அனைவரும் தமிழர் பிர்தேசம் நோக்கி இடம்பெயெருவீனம், பின்னர் தமிழரது நிலத்தை கைப்பற்றிக்கொள்வர்கள்,கிழக்கு மாகாணம் எப்படி 1930ளில் இடம்பெயர்ந்த முஸ்லீம்களால் கைப்பற்றப்பட்டதோ அதே போல் இனி வன்னியும் தமிழரது கைவிட்டு முஸ்லீம்கள் கைவசமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை, எங்கட அரசியல் வாதிகள் இஸ்லாம் மதம் பின்பற்றும் தமிழர்கள்,தமிழ் பேசும் இஸ்லாமியர்,தேங்காய் பூவும் புட்டும் போல,கொத்து ரொட்டியும் இறைச்சியும் போல என்று வசன்ம் பேசுவீனம்,சிங்களவன் தெளிவாகத்தான் இருக்கிறான் தந்து பிரதேசத்தை விட்டு முஸ்லீமை விரட்டி அடிக்கிறான், எங்கட சனம் எப்ப தான் இஸ்லாமியருக்கு எதிராக விழித்து எழ போகுதோ

  • தொடங்கியவர்
கோத்தாபய ராஜபக்ஸவின் படைகள் பார்த்திருக்க அளுத்கம பேருவளையில் அரங்கேற்றப்பட்ட அடாவடித்தனங்கள் video

 

 

global tamil news

  • தொடங்கியவர்

முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்: சம்பந்தன்

 

 

sampanthan(30).jpgஅளுத்கமை - தர்ஹாநகரிலும் பேருவளையிலும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டவை, முற்கூட்டியே திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாகவே தோன்றுகின்றன. எனவே, அந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் இத்தகைய சம்பவங்கள் திரும்பவும் இடம்பெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்துவதற்கு பொருத்தமான பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கின்றது. 

மேற்படி சம்பவங்கள் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கோரியிருக்கின்றார். அந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:- 

அளுத்கமை - தர்ஹாநகரிலும் பேருவளையிலும் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் மிகுந்த கவலையைக்குரியவை; மனதை சஞ்சலத்துக்கு உட்படுத்துபவை. முஸ்லிம் சமூகத்தின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதல்களுக்கு இலக்காகி பலத்த சேதமடைந்திருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுள் மூவர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. 

பெரும்பான்மை இனத்தவர்களின் தீவிரப் போக்குடைய இரு இயக்கங்கள் கூட்டம் நடத்திவிட்டு வீதி வழியாக ஊர்வலம் போன சமயம் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் முன்னரே திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தோன்றுகின்றது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்த போதிலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாயினும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் அவர்களால் தடுக்க முடியவில்லை. இது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் விழிப்பில்லாத நிலையில் இருந்துள்ளனர் என்பதையே காட்டுகின்றது. 

கடந்த காலத்திலும் முழு நாட்டுக்கும் தீங்கை ஏற்படுத்தக் கூடிய இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. தவறிழைத்தவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் இத்தகைய சம்பவங்கள் மீள இடம்பெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்துவதற்காக வேறு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

tamilmirror

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பவங்களைப் பார்க்கும்போது எனக்குள் எழுந்த முதலவாது எண்ணம் என்னவென்றால், முஸ்லீம்களுக்கு நாங்கள் செய்ததைக் காட்டிலும் சிங்களவர் அதிகமான அநியாயத்தைச் செய்துவிட்டார்களா இல்லையா என்பதுதான். ஏனென்றால், காத்தான்குடி , ஏறாவூர் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், யாழ்ப்பாண மன்னார் முஸ்லீம்களின் வெளியேற்றம் என்பவற்றுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களால் முஸ்லீம்கள் பட்ட துன்பம் தமிழரால் ஏற்பட்டதைவிடக் குறைவென்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 

 

இங்கே சிங்களவர்களை மட்டுமே இனவாதிகள் என்று குறிப்பிடுவதன் மூலம், நாம் இனவாதிகள் அல்ல என்று நாம் நினைப்பது தவறு. இன்று அளுத் கமவில் நடந்தது இனவாதம் என்றால், 1990 களில் வடக்குக் கிழக்கில் முஸ்லீம்களுக்கெதிராகத் தமிழரும், தமிழருக்கெதிராக முஸ்லீம்களும் செய்தது என்ன? 

 

இலங்கையில் நாம் ஒருவருக்கொருவர் இனவாதத்தில் சளைத்தவர்கள் அல்ல. எல்லோருமே இனவாதிகள் தான். ஆனால் என்ன, அரச பலமுள்ளவன் லட்சக்கணக்கில் மற்றைய இனத்தவனை அழிக்கிறான், மற்றைய இனத்தவனோ தனது சக்திக்குற்பட்டு மற்றைய இனங்களை அழிக்கிறான். இதுதான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பவங்களைப் பார்க்கும்போது எனக்குள் எழுந்த முதலவாது எண்ணம் என்னவென்றால், முஸ்லீம்களுக்கு நாங்கள் செய்ததைக் காட்டிலும் சிங்களவர் அதிகமான அநியாயத்தைச் செய்துவிட்டார்களா இல்லையா என்பதுதான். ஏனென்றால், காத்தான்குடி , ஏறாவூர் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், யாழ்ப்பாண மன்னார் முஸ்லீம்களின் வெளியேற்றம் என்பவற்றுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களால் முஸ்லீம்கள் பட்ட துன்பம் தமிழரால் ஏற்பட்டதைவிடக் குறைவென்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இங்கே சிங்களவர்களை மட்டுமே இனவாதிகள் என்று குறிப்பிடுவதன் மூலம், நாம் இனவாதிகள் அல்ல என்று நாம் நினைப்பது தவறு. இன்று அளுத் கமவில் நடந்தது இனவாதம் என்றால், 1990 களில் வடக்குக் கிழக்கில் முஸ்லீம்களுக்கெதிராகத் தமிழரும், தமிழருக்கெதிராக முஸ்லீம்களும் செய்தது என்ன?

இலங்கையில் நாம் ஒருவருக்கொருவர் இனவாதத்தில் சளைத்தவர்கள் அல்ல. எல்லோருமே இனவாதிகள் தான். ஆனால் என்ன, அரச பலமுள்ளவன் லட்சக்கணக்கில் மற்றைய இனத்தவனை அழிக்கிறான், மற்றைய இனத்தவனோ தனது சக்திக்குற்பட்டு மற்றைய இனங்களை அழிக்கிறான். இதுதான் வித்தியாசம்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெ ளியேற்றப்பட்டதற்கு இனவாதம் காரணமல்ல. இலங்கைத் தீவில் ஆயுதப் போராட்ட காலத்திற்கு முன்னம் தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பிரச்சினை இருந்ததாக அறியவில்லை. ஆனால் சிங்களவனுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்தது. (1915)

ஆயுதப் போராட்டம் ஆரம்பமானவுடன் தமிழ் இனவாதம் ஆரம்பமானதா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் கலவரங்களினால் பாதிக்கப்படப் போவது தமிழர் தான் ஏன் என்றால், இனி தென் இலங்கை முஸ்லீம்கள் அனைவரும் தமிழர் பிர்தேசம் நோக்கி இடம்பெயெருவீனம், பின்னர் தமிழரது நிலத்தை கைப்பற்றிக்கொள்வர்கள்,கிழக்கு மாகாணம் எப்படி 1930ளில் இடம்பெயர்ந்த முஸ்லீம்களால் கைப்பற்றப்பட்டதோ அதே போல் இனி வன்னியும் தமிழரது கைவிட்டு முஸ்லீம்கள் கைவசமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை, எங்கட அரசியல் வாதிகள் இஸ்லாம் மதம் பின்பற்றும் தமிழர்கள்,தமிழ் பேசும் இஸ்லாமியர்,தேங்காய் பூவும் புட்டும் போல,கொத்து ரொட்டியும் இறைச்சியும் போல என்று வசன்ம் பேசுவீனம்,சிங்களவன் தெளிவாகத்தான் இருக்கிறான் தந்து பிரதேசத்தை விட்டு முஸ்லீமை விரட்டி அடிக்கிறான், எங்கட சனம் எப்ப தான் இஸ்லாமியருக்கு எதிராக விழித்து எழ போகுதோ

 

சிந்திக்க வேண்டிய... நல்ல கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேனையை வளர ஊக்குவித்தவர் மகிந்தா. இனி அவர் சொல்படி நடக்காமல் நன்றாக வளர்ந்து ஒரு நாள் மகிந்தாவையும் அழித்தாலும் அழிக்கலாம்.

முஸ்லிம்களுக்கு இது தேவை என்றுதான் எம்மவர் பலரின் கருத்து (நான் உட்பட ).

முஸ்லிம்கள் பலர் யாழ்பாணத்தை விட்டு புலிகள் தம்மை வெளியேற்றும் போது தமிழர்கள் மௌனமாக இருந்தார்கள் எனவே தாம் தமிழர்கள் அழிக்கபடும் போது மௌனமாக இருந்ததாக படம் காட்டுகின்றார்கள்.

புலிகள் டெலோவை ,ஈ பியை ,அமிர்தலிங்கத்தை அழிக்கும் போதும் தமிழன் குரல் கொடுக்கவில்லை .தமிழர்கள் புலிகளுக்கு பயந்து எதற்கும் குரல் கொடுக்க தயங்கியர்வகளாக இருந்தபோது உங்களின் வெளியேற்றத்திற்கு குரல் கொடுப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

புளோட் தங்களின் பெண் போராளிகளோடு வல்லுறவு செய்த போதும், பள்ளி மாணவிகளை வைத்திருந்தபோதும், பணத்தைக் கொள்ளையடித்து கொழும்பிலும், படுகொலைகள் செய்தும், உள்சண்டை என்று சொந்த சகோதரர்களை அழித்தபோதும், வெளிநாடுகளில் வந்து பதுங்கி வாழ்ந்தபோதும், வாய் திறக்காதவர்கள் எம் மக்கள். அப்படியிருக்கின்றபோது முஸ்லீம்களுக்கு வாய் திறப்பார்களா என்ன? பொதுவாக மனதில் தோன்றுகின்ற கேள்வி. அமிர்தலிங்கம் கொன்ற விதம் தவறாக இருக்கலாம். ஆனால் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் உள்ளதா? இத்தனை இளைஞர்களைப் போராட்டம் என்று வீதியில் இறக்கி அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்து விட்டு, தன் அரசியல் வாழ்வினை ருசிக்க முனைந்த ஒரு வஞ்சகனைத் தண்டித்ததில் தப்பில்லை. எனவே செத்துப் போன ஒருவர் என்பதற்காக >>>>>>>>> நியாயப்படுத்தல்களைச் செய்ய முனைவது அருவருக்கத் தக்கது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கோர்ட் சூட் அணிந்த முஸ்லிம் அமைச்சர்கள் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டும் - மனோ கணேசன்:-

 

 

Gotabaya%20Rajapaksa%20Bodu%20BalaSena1_

பொதுபல சேனையின் பொதுசெயலர் ஞானசார தேரரை திட்டி தீர்ப்பதில் பயனில்லை. தான் என்ன செய்ய போகின்றேன் என்பதை பற்றி முன்னறிவித்தல் கொடுத்துதான் அனைத்தையும் அவர் செய்கிறார். நடந்துள்ள அட்டூழியங்களுக்கு, தட்டிக்கொடுத்து, யாமிருக்க பயமேன் என்று சொல்லி, இந்த பொதுபல சேனையை ஊட்டி வளர்க்கும் அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். இதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உணரவேண்டும். இந்த அரசுக்குள்ளே குடியிருக்கும் கோர்ட் சூட் அணிந்த முஸ்லிம் அமைச்சர்கள் இந்த அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டும். அது என்ன  வைத்தியம் என நான் சொல்ல மாட்டேன். அதை தங்களுக்கு வாக்களித்து தெரிவு செய்த, கிழக்கு, மத்திய, மேற்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் மக்களிடமே, அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்  கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் இவர்களுக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் செய்யும் நிலைமை விரைவில் உருவாகலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று நடத்திய விசேட ஊடக மாநாட்டில் சிங்கள, ஆங்கில மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

 

இந்த அட்டூழியங்கள் தமிழர்களுக்கு புதிது அல்ல. இதையெல்லாம் வலியுடன் அனுபவித்தவர்கள் நாங்கள். எங்கள் சொத்துகளும், உயிர்களும் எங்கள் கண்கள் முன்னே பறிக்கப்பட்டன. எரித்து அழிக்கப்பட்டன. நடந்து முடிந்த யுத்த வெற்றியின் பிறகு நம்பிக்கையுடன் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சாப்பிட்டதாகவும், இன்று அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவும் ஐதேக மாகாணசபை உறுப்பினர் நண்பர் முஜிபுர் ரஹ்மான் இங்கே சொன்னார்.

 

யுத்தம் நின்றுவிட்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், நாங்கள் பட்டாசு கொளுத்தவில்லை. அந்த யுத்தம் நடததப்பட்ட முறையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாட்டை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில், இனவாத அடிப்படையில் நடத்தப்பட்ட யுத்தம் அது என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான்  அதே இனவாதம் இன்று அப்பாவி முஸ்லிம் மக்கள்  மீதும் பாய்கிறது.

 

எனக்கு வலது புறத்தில் அமர்ந்துள்ள நண்பர் அசாத் சாலி கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் மீது பலத்த நம்பிக்கை வைத்திருந்தார். 2012 ம் வருடம் எங்கள் பிரச்சினையின்  மீது ஐநா மனித உரிமை  பேரவையில் அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட வேளையில், அவர் ஆயிரக்கணக்கான  முஸ்லிம் மக்களை  அழைத்து கொண்டு அரசுக்கு ஆதரவாக காலி வீதியில் ஊர்வலம் போனார். ஆனால், அது நடந்து ஒருவாரத்தில் முதல் பள்ளிவாசல் இனவாதிகளால்  அடித்து நொறுக்கப்பட்டது. அத்துடன் அரசிலிருந்து அவரும் வெளியேறினார்.  இந்த அரசின் மீது முஸ்லிம் மக்களுக்கு இருந்த நம்பிக்கையும் அடியோடு  தகர்ந்தது.              

 

இன்று இந்த அரசில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதற்கு மேலும் அங்கு ஏன் இருக்கின்றார்களோ என எனக்கு தெரியவில்லை. போதும் என்ற நிலைமை இன்று உருவாகிவிட்டது. உள்ளே இருந்தபடி சில காரியங்கள் ஆற்றலாம் என்ற நிலைமை கடந்து விட்டது. இந்த அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது. அது நடந்தால்தான் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதிகளை அடக்கியே ஆக வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு ஏற்படும்.

 

இன்று தமிழர் பிரச்சினை உலக பிரச்சினையாகிவிட்டது. நீங்கள் பாராளுமன்றத்தில் விவாதித்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, சர்வதேச விசாரணை நிச்சயம் நடக்கும் என்ற நிலைமை உருவாகிவிட்டது. உள்நாட்டில் நியாயம் இல்லையென்றால் நாங்கள் வெளிநாட்டுக்குதான் போவோம். அது எங்கள் உரிமை. அதை இன்று முஸ்லிம் மக்களும் செய்ய வேண்டும். ஐநா மனித உரிமை பேரவையில் அரசுக்கு ஆதரவாக முஸ்லிம் அரபு நாடுகளின் ஆதரவை பெற்று தந்தவர்கள், இனி தங்கள் பிரச்சினையை உலகிற்கு கொண்டு போக வேண்டும்.

 

எல்லாம் நடந்து முடிந்த பின், ‘சட்டத்தை கைகளில் எடுக்க எவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம்’ என நாட்டுத்தலைவர்  சொல்கிறார். இது ஒரு நகைச்சுவை. இனி சட்டத்தில் என்ன மிச்சம் மிகுதி இருக்கிறது என்று நான் கேட்கிறேன். தாம் அதிகாரபூர்வமற்ற போலீஸ் படையை அமைக்க போவதாக பொதுபல சேனையின் பொது செயலாளர் ஞானசார தேரர் சொல்லி நீண்ட நாட்களாகி விட்டது. இது ஒரு சட்ட விரோத பயங்கரவாத கருத்து. தான் என்ன செய்ய போகின்றேன் என்பதை பற்றி முன்னறிவித்தல் கொடுத்துதான் அனைத்தையும் அவர் செய்கிறார். அவர் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இன்று அந்த சட்ட விரோத போலிஸ் படைக்கு, சட்டபூர்வ போலிஸ் பயந்துகொண்டு இருக்கிறது. நாட்டை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு செயலாளர், இந்த சட்டவிரோத போலிஸ் படைக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். இவைதான் மறுக்கமுடியாத உண்மைகள். 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108218/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தை இந்தியன் ஆமியின் செல்லுக்க விட்டு சாகடிக்கனும் என்றது தான் என்னுடைய ஆசையா இருந்தது. ஏன்னா அது அவருக்கு கொழும்பில்.. இருக்கேக்க.. ரப்பர் செல்லா எல்லோ தெரிஞ்சது.

 

அவர் வடக்குக் கிழக்கு பக்கமே தலைவைச்சுப் படுக்கேல்ல. அதனால ரப்பர் செல்லில மாட்டுப்படாத காரணத்தால்.. நிஜ புள்ளட்டுக்கு மாட்டுப்பட்டார். அமிர்தலிங்கத்தின் சாவுக்கு ஒரு உண்மைத் தமிழன்.. மனிதன்.. வருந்தமாட்டான். இங்க சிலர் வருந்துவினம். அவை யார் என்பது உலகிற்கே தெரியும்.

 

இங்க சிலருக்கு பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும்.. துரோகிகள் அழிக்கப்படுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரியல்ல.

 

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கு அழுகிறவை.. கல்முனை.. மூதூர்.. கிண்ணியா.. நிலாவெளி.. சம்பாந்துறை.. என்று பல வடக்குக் கிழக்கு ஊர்களில் இருந்து முஸ்லீம்களால்.. எமது மக்கள் உடுக்கத் துணி கூட இல்லாமல் வெட்டியும் கொத்தியும் வெளியேற்றப்பட்டதற்கு ஏன் அழுகினம் இல்ல. அப்பவும் எமது மக்கள் மெளனமாகத்தான் இருந்தவை அகதி முகாம்களில். இப்ப கூட.. சம்பூரில் இருந்தும்.. வலி வடக்கில் இருந்தும் அடித்து விரட்டப்பட்ட நிலையிலும் மெளனமா அகதி முகாமில தான் இருக்கினம்..!
 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.