Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள பெளத்த பாசிச சக்திகளிடமிருந்து அழுத்கம முஸ்லிம்களை பாதுகாப்போம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SAVE ALUTHGAMA MUSLIM FROM THE SINHALA NEO NAZI FORCES SUCH AS BBS
I BEG MY FRIENDS TO SHARE THIS. PLEASE TAKE THIS MASSEGE TO THE TAMILS OF THE WORLD AND TAMILNADU.

உலகத் தமிழர்களே தமிழ் நாடு தமிழ் உணர்வாளர்களே தமிழக அரசியல் கட்சிகளே இந்திய முற்போக்காளர்களே பொதுபல சேன போன்ற இலங்கை சிங்கள பெளத்த பாசிச சக்திகள் அழுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்புத் தாக்குதல்களுக்கு எதிடராக குரல் கொடுங்கள்.

உலகத் தமிழர்களும் தம்ழக தமிழ் உணர்வாளர்களும் தமிழக அரசும் தமிழ் பேசும் முஸ்லிம்களை சிங்கள பேரினவாதக் கொலைக்கரங்களில் இருந்து காப்பாற்றிடக் கொதித்தெழுந்து குரல் கொடுக்க வேண்டிய தருணமிது 

உலகம் முழுவதிலும் தமிழகத்திலும் உள்ள தமிழ் அமைப்புகளும் தமிழ் ஊடகங்களும் சிங்கள பேரினவாதிகளால் அழுத்கம முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தெருவில் இறங்கிப் போராட வேண்டும். 2009ல் முள்ளிவாய்க்காலில் எங்கள்மீது இனக்கொலையை கட்டவிழ்த்த அதே சக்திகள் கொலைவெறியோடு அழுத்கம வீதிகளில் அலைகின்றன. அந்த சிங்கள பெள்த்த பாசிச வாதிகளை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தப்ப விட்டுவிடக்கூடாது.

உலக தமிழக வீதிகளில் இறங்கி அழுத்கம படுகொலைகளை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவேன்டுமென உலகத் தமிழகளிடம் வேண்டுகிறேன்.                         

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Top of Form

 

  • கருத்துக்கள உறவுகள்

போங்க கவிஞரே சும்மா காமடி பண்ணாம....... அவங்க அண்ணன் தம்பிங்க அடிபட்டுகிறாங்க நமக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

னன்புக்குரிய சுண்டல், விமர்சனங்களுக்கு அப்பால் அழுத்கம முஸ்லிம் மக்கள் பாதுகாப்புக்காக நீங்கள் குரல்கொடுக்க வேணுமென பணிவன்புடன் மன்றாடுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் அப்பாவித் தமிழ்மக்களை ஜிஹாத் குழுவினர் போரைச் சாதகமாக வைத்துத் திட்டமிட்டுக் கொன்றொழித்த போதும், பல தமிழ்க் கிராமங்களை  அடியோடு இல்லாமலாக்கியபோதும்  இந்தக் கவிஞர் எங்கு போனார்?

 

ஆடுகளத்திலே கொக் விட்டுக்கொண்டிருந்தாரா?  என்ன புதிதாகப் பெரிய இன ஒற்றுமை   வேண்டிக் கிடக்கிறது?  

தமிழனைக் கொல்லடா என்று தமிழைத்தவிர வேறு ஒரு மொழியையும் தெரியாத நாய்களின் வெறிக்குரலை இரு காதாலும் கேட்டவர்கள் எப்படி இந்தப் பிதற்றல்களை ஏற்றுக் கொள்ள முடியும்.

தமிழர்களே வாயைப் பொதத்திக்கொண்டு உங்கள் வேலையைப் பாருங்கள்.  அவர்கள் அவர்களது பிரச்சனையைப் பார்த்துக் கொள்ளட்டும்.  நமக்கேன் வீண்வம்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நீதியமைச்சரே ஒரு முஸ்லிம். அவர் பார்த்துக்கொள்வார் தானே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய கரு, தமிழர் முஸ்லிம்கள் இடையிலான மோதல்களில் இரண்டு பக்கத்தையும் அவர்கள் அவர்கள் குகைகளிலே சந்தித்து விமர்சித்தவன் பேச்சுவார்த்தை நடத்தியவன் நான் நான். இரு தரப்புக்குமிடைஅஞ்சல்காரனாகவும் செயல்ப்பட்டிருக்கிறேன். என் நடுநிலையால்தான் இரண்டுபக்கத்திலும் என்னால் செயல்பட முடிந்தது.

கரு தயவு செய்து அழுத்கம முஸ்லிம்களுக்கக குரல்கொடுத்து புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வையுங்கள். 

ஐயா மதிப்பிற்குரிய கவிஞரே. 
எங்களை விட தங்களால் தான் இதில் நிறைய விடயங்கள் முஸ்லிம் மக்களுக்காக செய்ய முடியும். தங்கள் தனிப்பட்ட செல்வாக்கினால் நோர்வே அரசு இந்திய அரசு மூலம் தாங்கள் உதவியை நாடலாம். தாங்கள் உடனடியாக ஜோர்டானுக்கு விஜயம் செய்து அடுத்த ஐநா பொது செயலாளராக வர இருக்கும் ஜோர்டான் இளவரசரை தாங்கள் உடனடியாக சந்தித்து அவரிடம் விடயத்தை ஆதாரங்களுடன் விளக்கி அவர் மூலம் இதற்கு நல்ல முடிவை கொண்டுவரலாம். உடனே அதை செய்யுங்கள் ஐயா. இல்லாவிட்டால் நாளை அவரிடமே நீதியமைச்சர் கக்கீம் போய் அது ஒரு பிரச்சினையும் இல்லை நாங்கள் அண்ணன் தம்பி சும்ம விளையாட்டாக அடிபட்டம். சிங்களவன் அடிச்சால் எங்களுக்கு வலிக்காது. சும்மா முசுப்பாத்தியாக நாங்கள் அடி வாங்குவம் என்று நிச்சயம் சொல்லுவார்.  :D  :D  :D 

Edited by seeman

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய சீமான் அன்புகுரிய இசைகலைஞன்,

தமிழர்கள் நலனை முஸ்லிம்கள் நலன்களோடும்  மலையக தமிழர்களது நலன்களோடு மட்டுமல்ல எங்களை ஆதரிக்கும் சிங்கள சிறு குழுக்களோடும் இணக்க வேண்டிய தருணமிது.

விமர்சிப்பதோடு நிற்க்காமல் அழுத்கம முஸ்லிம்களின் பாத்ஹுகாப்புக்காக குரல்கொடுத்து புதிய கதவுகளை திறக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய சீமான் அன்புகுரிய இசைகலைஞன்,

தமிழர்கள் நலனை முஸ்லிம்கள் நலன்களோடும்  மலையக தமிழர்களது நலன்களோடு மட்டுமல்ல எங்களை ஆதரிக்கும் சிங்கள சிறு குழுக்களோடும் இணக்க வேண்டிய தருணமிது.

விமர்சிப்பதோடு நிற்க்காமல் அழுத்கம முஸ்லிம்களின் பாத்ஹுகாப்புக்காக குரல்கொடுத்து புதிய கதவுகளை திறக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

 

குரல் கொடுப்பதில் பிரச்சினையில்லை கவிஞரே.. (குரல் கொடுத்தும் என்ன ஆகப் போகுது?? :D )

ஒரே ஒரு உதவி செய்யுங்கள்.. யாராவது ஒரு முஸ்லிம் தலைவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தால் அந்த இணைப்பை இங்கே இணைத்து விடுங்கோ.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய சீமான், ஒரு தனிமனிதனாய் என்னால் இயன்றதைச் செய்வேன் என்பதை நீங்கள் நம்பலாம். உங்கள் ஆதரவை கோரிப் பெறுவது உட்பட என்னால் இயன்றதைச் செய்யவேனும்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே யாரை நம்பி அவர்களுக்காக குரல்கொடுக்க சொல்கிறீர்கள் ...?

நாளைக்கே எம்மையும் சிங்களவனையும் கோர்த்து விட்டு அப்பீட்டாகி விடுவான் ***

சிங்களவனிடம் மீண்டும் வாங்கிக்கட்ட எங்களால் முடியாது. இதற்காக நீங்கள் மன்றாட வேண்டிய அவசியமென்ன 

நாங்கள் உதவியும் செய்யவில்லை உபத்திரவமும் செய்யவில்லை,இது எங்களுக்கு அவசியமற்ற விடயம் 

இப்ப கூப்பாடு போடும் கூட்டங்கள் தான் ஒரு காலத்தில் தமிழனின் குருதி காயும் முன்பே கட்டிபிடித்துக்கொண்டு  பால் சோறு (கிரிபத்) ஊட்டி மகிழ்ந்தவர்கள், "என்ன சரி அவரு யுத்தம் ஒன்ற முடிச்சி வச்சிருக்காரு தானே வா அவரு தான் எங்க சனாதிபதி "

என்று பேசி மகிழ்ந்ததும் இதே வாய்கள்தான், இது மாமன்,மச்சான்.சகலை பிரச்சினை  அவங்க அவங்களுக்குள்ளேயே 

விட்டுக்கொடுத்து, சுட்டுக்கொடுத்து வாழுற பார்ட்டி . நமக்கேன் வேண்டாத வேலை.

நீங்க தேவையில்லாத விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறியள் .....இதெல்லாம் அவங்களுக்கு ஒரு விசயமில்லை 

அவங்கட முக்கிய  பிரச்சினை  புலி  90 இல யாழை விட்டு வெளியேற்றியதும் , காத்தான்குடி பள்ளிவாசலில வெட்டினதும் தான் 

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அளுத்கம,பேருவல.....

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் 'அளுத்கம' என்பது தொடர்ச்சியான தமிழினப்படுகொலையின் ஒரங்கமே.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களை இஸ்லாமியர்களாக்கிப் பின் முஸ்லீம்-இந்து என முறுகலை ஏற்படுத்தி வளர்த்தது.

தமிழர்களை அழித்த பிறகு,அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும்,தமிழகத்தினுடான தொடர்பெல்லையில் 'முஸ்லீம்களை' குடியேற்றவும் நடத்தப்படுகிற,ஒரு தொலைநோக்குக் கொண்ட நாடகமிது.

பாகிஸ்தான்,சௌதி அரேபியாவுடன் மீள்குடியேற்றம் செய்ய றிசார்ட் பதியுதீன் தயார் நிலையில் உள்ளார்.

மோடிக்கு ஓடியாட வேலையிருக்கிறது.

முஸ்லீம்கள் மேல் நடத்தப்படும் இனவெறித்தாக்குதல்களை நாம் கண்டிக்கிறோம். ஆனால் முஸ்லீம்களுக்காக குரல் கொடுப்பது பொது பல சேனாவின் அடுத்த இலக்காக அங்கு அழிந்து போய் இருக்கும் எம்முடைய மக்களை  வலிந்து கொண்டுபோய் நிறுத்தும் செயல். 
 
மனோ கணேசன் முஸ்லீம்களுக்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குரல் கொடுக்க முற்பட்ட போது ஒரு முஸ்லீம் அரசியல்வாதி " இது முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடைப்பட்ட பிரச்சனை. தமிழன் நீ யார் நடுவில் கேள்வி கேட்க ?" என்று கேட்டவர்.
 
ஆகவே பொயட் நீங்கள் வாய் பொத்தி மௌனமாக இருக்க வேண்டும்.  
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் மேல் இன மத வெறிகொண்டு நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது இனத்தின் ஒரு பகுதி அழித்தொழிக்கப்பட்டபோது எதையும் செய்யமுடியாதவர்களாக இருந்தோம். இன்று முஸ்லிம்கள் கொல்லப்படும்போதும் அப்படித்தான் இருக்கின்றோம். இதில் மாற்றம் வருவதும் எமது கையில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய கரு, தமிழர் முஸ்லிம்கள் இடையிலான மோதல்களில் இரண்டு பக்கத்தையும் அவர்கள் அவர்கள் குகைகளிலே சந்தித்து விமர்சித்தவன் பேச்சுவார்த்தை நடத்தியவன் நான் நான். இரு தரப்புக்குமிடைஅஞ்சல்காரனாகவும் செயல்ப்பட்டிருக்கிறேன். என் நடுநிலையால்தான் இரண்டுபக்கத்திலும் என்னால் செயல்பட முடிந்தது.

கரு தயவு செய்து அழுத்கம முஸ்லிம்களுக்கக குரல்கொடுத்து புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வையுங்கள். 

 

ஏற்கனவே சில குகைகள் கண்ட அனுபவம் தங்களுக்கே உரித்தானது. அப்படியே ஒருமுறை சிங்க குகையையும் எட்டி பார்க்கலாமே ?
 
இதில் தமிழக தமிழர்கள் என்ன செய்ய முடியும் ?
 
அழுத்தகம என்ன மதுரைக்கு அருகிலா இருக்கிறது ?
 
 
இதில் அழுத்தகம உச்ளிம்களை பாதுகாக்கும் எண்ணத்தை விட .........
............... அரசியல் நிறைய இருக்கிறது.
 
உங்களுக்கு ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகிறேன் (இது ஆதாரமற்றது அதனால் இதை இன்று நிறுவ முடியாது, ஆனால்  கடந்த கால எதிர்வினைகள் எதிர்காலமாக மாறும் உலகில் இதை  சொல்ல முடிகிறது) 
தமிழ் நாட்டு உறவுகளும் எல்லா தமிழர்களும் முஸ்லீம்களை பாதுகாத்தாலும் ........
உங்களை போன்றவர்களால் முஸ்லீம்களுக்கு என்றுமே ஆபத்துதான்.
 
நீங்கள் மேலே எழுதியதில் ஏதும் அர்த்தமிருக்கிறதா ?
அழுத்தகம முலீம்களை தமிழர்கள் எவ்வாறு பாதுகாக்க முடியும்? எங்களுக்கு வீடில்லை ஊரில்லை தெருவில் நிற்கிறோம்.
இதில் உங்கள் சுய விளம்பரம் தவிர்த்து ஏதும் இருந்தால் சுட்டி காட்டுங்கள்.
 
ஏன் நீங்கள் வசிக்கும் நாடுகளில் பாகிஸ்தான் சவூதி அரேபியா போன்ற முஸ்லீம் நாடுகளின் துதராலயங்கள்  இல்லையா? அங்கு போய் ஒருமுறை கதவை தட்டி பார்க்கலாமே ?
அது சிலவேளை சிங்களவர்களுக்கு பாதகமாகிவிடும் என்ற உங்கள் கருசனையும் நாடகமும்.
தமிழர்களுக்கு  மட்டுமல்ல முஸ்லீம்களுக்கும் ஆபத்தானது.
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைச் சபையில சிறிலங்காவுக்கு சார்பாக முஸ்லிம் நாடுகள் தான் நின்றன.அவர்கள் அப்படி ஆதரவு கொடுக்க வேணும் முஸ்லிம் தலைவர்கள்தான் ஒவ்வொரு நாட்டுக்கும் ஓடி ஓடி ஆதரவு கேட்டார்கள். பாகிஸ்தான் பார்த்துக் கொள்ளும்.நாங்களே அடிவாங்கி எழும்பி நடக்க முடியாமல் இருக்கிறம்.எங்களுக்கு சிங்களவன் அடிக்கேக்கை முஸ்லிம் சேர்ந்து நின்றுதான் அடித்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியச் சகோதரர்களில் எமக்கு அனுதாபம் இருக்கு, ஆனால் அதை வெளிக்காட்டி மணோ கணேசன் அவர்களைப்போல் மூக்குடைபடுவதற்கு எவரும் தயாரில்லை. நாம் ஏதாவது சொல்லப்போனல் அவர்களுக்குத் தங்களது சிங்கள விசுவாசம்மீது சிங்களத்துக்குச் சந்தேகம்வந்துவிடுமோ என எம்மைப் புறம்தள்ளி வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். தவிர தங்களுக்கு இக்கட்டுகள் வரும்போது தொட்டுக்கச் சட்ணிபோல் தமிழர்தரப்புடன் நாம் எதிர்காலத்தில் சமாந்தரமாக அரசியல் செய்யப்போகிறோம் எனக்கூறி தங்களது தேவைகளுக்கான பேரம்பேசும் பலத்தினை அதிகரித்து பின்னர் அதை மறந்தேபோய்விடுவர்.

 

முன்னர் அஸ்ரப் அவர்கள் தமிழர்களும் முஸ்லீம்களும் புட்டும் தேங்காய்த்துருவலும் எனக்கூறியது இப்போது ராவூப் ஹக்கீம் காலத்தில் முஸ்லீம்களும் சிங்களவர்களும் என்றாகிவிட்டது.

 

இனிமேல் தமிழர் தரப்பில் இஸ்லாமியர்களும் அல்லாதோரும் சேர்ந்துவாழலாம் செர்ந்து குரல்கொடுக்கலாம் சேர்ந்து உரிமைபெறலாம் என்பது எக்காலத்திலும் இயலாதவிடையமாகிப்போய்விட்டது.

 

எமை அழித்தொழிக்கும்போது வாழாவிருந்தவர்கள் அரசுக்குச் சாமரம்வீசி ஒட்டுண்ணிகளாக ஒட்டியிருந்தவர்கள் கிழக்குமாகாண சபையை மகிந்தவுக்குத் தாரை வார்த்தவர்கள் அரசுக்கட்டில்கள் பெறுமதிவாய்த பதிவிகளில் அலங்கரித்தவர்கள் இவர்கள் என்ன கேடுகெட்டும்போகட்டும்

 

கவிஞர் புலியின் குகைக்குள் போய்வந்தேன் புளட்டின் குகைக்குள் போய்வந்தேன் எனும் பழைய கதைகளை எவ்வளவு நாட்களுக்குத்தான் ஒட்டப்போகிறீர்கள்? புலி எப்போதோ பூனையாகி மியாவ் எனக் கத்தவே முடியாமல் முடங்கிவிட்டது. சித்தார்த்தன் கூத்தமைப்புடன் ஐக்கியமாகிவிட்டார். பரந்தன் ராஜன் தலைமையில் இந்திய சௌத்புளொக்கும் புலனாய்வுப்பிரிவும் ஆயுதப்போராட்டம் எனும் பெயரில் தமிழர் அழிப்பு நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க நாள் பார்த்துக்கொண்டு இருக்கு. கூத்தமைப்பை கனைக்கவும் சிணுங்கவும் முறைக்கவும் ஊழையிடவும், சர்க்கஸ் மிருகங்கள் போல் இந்தியா பழக்கப்படுத்தி வைத்திருக்கு.

 

சண்டிலிப்பாயிலிருந்து குடும்பிகட்டிய ஒரு புதுச்சண்டியனை கொம்பு சீவி வேற களத்தில இந்தியா இறக்கியிருக்கு விக்கு வினாயகம் வகையறாக்கள் சொல்லுக்கேட்காட்டில் எதாவது செய்திடுவம் எனப் பயம்காட்ட இவையெல்லாம் எங்கள் மண்ணில் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக நடைபெறுகின்றது......

 

இதை விட்டுட்டு வேலை மினக்கட சகோதர்களது(?)  சண்டையில் தலையிடச்சொல்லுறியள் இப்ப மூண்டுதலைதானே உருண்டிருக்கு முள்ளிவாய்காலில உருண்டதுக்குச் சமமாகவர இன்னும் எவ்வளவோ இருக்கு அதுவரைக்கும் பொறுமையாக இருங்கோ

 

ராவுப் ஹக்கீம் ரிஸாத் பதியுதீன் அஸ்வர் இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ராவூப் ஹக்கீம் இப்பதான் வெட்கப்பட ஆரம்பித்திருக்கிறார் இனிமேல் மற்றவர்களும் வெட்கப்பட ஆரம்பித்து எதாவது முடிவுக்கு வருவார்கள் பேசாமல் வேடிக்கை பாருங்கள் அவர்களும் அதுதானே செய்தார்கள் எங்கள் தலையில் நெருப்பள்ளிக்கொட்டும்போது.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

அளுத்கம முஸ்லீம்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் தாக்குதல் எப்படியோ அப்படியானது தான் கிழக்கில் கல்முனை.. மூதூர் மற்றும் மட்டு மாவட்டத்தில்.. இருந்தும்.. மன்னாரில் இருந்தும் எம் மக்கள் முஸ்லீம்களால் விரட்டி அடிக்கப்பட்டமை.

 

இப்போது.. சிங்கள பேரினவாதத்திற்கு போட்டியாக தமிழர் நிலத்தைப் பறிப்பவர்களும்.. இதே முஸ்லீம்கள் தான்.

 

சிங்களப் பேரினவாதத்தின் இந்தத் தாக்குதலை கண்டிக்கக் கேட்போர்.. முஸ்லீம்கள் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வரும் அடக்குமுறைகளை.. நிலப்பறிப்புக்களைப் பற்றி எதற்கு மெளனம் காக்கிறார்கள்.

 

எந்த ஒரு முஸ்லீம் பள்ளிவாசலாவது.. முள்ளிவாய்க்கால் பெருந்துயருக்கு அனுதாபம் சொல்லி இருக்கிறதா..??! எந்த ஒரு முஸ்லீம் அரசியல்வாதியாவது அந்த மக்களுக்கு அஞ்சலி செய்திருக்கிறானா../ளாவா..??!

 

மனிதாபிமானத்தை அது உள்ளவர்களிடம் தான் காட்ட வேண்டும். சிங்களவர்களிடமும்.. முஸ்லீம்களிடமும் அதைக் காட்டுவது வீண் வேலை..! :icon_idea:


இது கவிஞரின்.. செந்நன்றிக்கடன் அடைப்பு. அதற்கு ஏன் யாழ் உறவுகளை எல்லாம் அழைக்கிறார். யாழ் உறவுகள் ஹக்கீமுக்கு செந்நன்றிக்கடன்பட்டவர்களா.. இல்லையே..??! :icon_idea:

அளுத்கம,பேருவல.....

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் 'அளுத்கம' என்பது தொடர்ச்சியான தமிழினப்படுகொலையின் ஒரங்கமே.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களை இஸ்லாமியர்களாக்கிப் பின் முஸ்லீம்-இந்து என முறுகலை ஏற்படுத்தி வளர்த்தது.

தமிழர்களை அழித்த பிறகு,அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும்,தமிழகத்தினுடான தொடர்பெல்லையில் 'முஸ்லீம்களை' குடியேற்றவும் நடத்தப்படுகிற,ஒரு தொலைநோக்குக் கொண்ட நாடகமிது.

பாகிஸ்தான்,சௌதி அரேபியாவுடன் மீள்குடியேற்றம் செய்ய றிசார்ட் பதியுதீன் தயார் நிலையில் உள்ளார்.

மோடிக்கு ஓடியாட வேலையிருக்கிறது.

 

இதை தான் நானும் சந்தேகிக்கிறேன், தமிழ் நிலம் எல்லம் இஸ்லாமியமயபபடுத்தப் போகிறது இனிமேல் வன்னியில் மாவீரர் குடும்பங்கள் எல்லாம் இனி மதம் மாற வேண்டியது தான்

அளுத்கம முஸ்லீம்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் தாக்குதல் எப்படியோ அப்படியானது தான் கிழக்கில் கல்முனை.. மூதூர் மற்றும் மட்டு மாவட்டத்தில்.. இருந்தும்.. மன்னாரில் இருந்தும் எம் மக்கள் முஸ்லீம்களால் விரட்டி அடிக்கப்பட்டமை.

 

இப்போது.. சிங்கள பேரினவாதத்திற்கு போட்டியாக தமிழர் நிலத்தைப் பறிப்பவர்களும்.. இதே முஸ்லீம்கள் தான்.

 

சிங்களப் பேரினவாதத்தின் இந்தத் தாக்குதலை கண்டிக்கக் கேட்போர்.. முஸ்லீம்கள் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வரும் அடக்குமுறைகளை.. நிலப்பறிப்புக்களைப் பற்றி எதற்கு மெளனம் காக்கிறார்கள்.

 

எந்த ஒரு முஸ்லீம் பள்ளிவாசலாவது.. முள்ளிவாய்க்கால் பெருந்துயருக்கு அனுதாபம் சொல்லி இருக்கிறதா..??! எந்த ஒரு முஸ்லீம் அரசியல்வாதியாவது அந்த மக்களுக்கு அஞ்சலி செய்திருக்கிறானா../ளாவா..??!

 

மனிதாபிமானத்தை அது உள்ளவர்களிடம் தான் காட்ட வேண்டும். சிங்களவர்களிடமும்.. முஸ்லீம்களிடமும் அதைக் காட்டுவது வீண் வேலை..! :icon_idea:

இது கவிஞரின்.. செந்நன்றிக்கடன் அடைப்பு. அதற்கு ஏன் யாழ் உறவுகளை எல்லாம் அழைக்கிறார். யாழ் உறவுகள் ஹக்கீமுக்கு செந்நன்றிக்கடன்பட்டவர்களா.. இல்லையே..??! :icon_idea:

 

வன்னியும் முஸ்லீமிடம் பறிபோகப்போகிறதே, அதுக்கு என்ன செய்யப் போகிறோம் ??

  • கருத்துக்கள உறவுகள்

பொயெட் அவர்களே, நீங்கள் பயப்பட வேண்டாம். தமிழர்களை முள்ளிவாய்க்காலில் சுற்றிவளைத்து அனைத்து நாடுகளினது ஆசீர்வாதத்துடன் அடித்ததுபோல உங்களது நண்பர்களை மகிந்த அழிக்கப்போவதில்லை. அப்படியொன்று நடக்கும் பட்சத்தில் உலக முஸ்லீம் நாடுகளோ அல்லது அல்கயிடாவோ அல்லது, ஐஸிஸோ நிச்சயம் இலங்கை முஸ்லீம்களுக்காக களத்தில் இறங்கும். ஆகவே, பயத்தை விடுங்கள். எங்களுக்கு நடந்த அழிவு நிச்சயம் உங்களின் நண்பர்களுக்கு நடக்கப்போவதில்லை.

 

ஆனால், இங்கே இந்தத் திரியை திறந்ததன் நோக்கமே உங்களது உயிர் நண்பரான ஹக்கீம் நீங்கள் ஏதாவது செய்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளத்தான் என்றால், நான் மேலே சொன்னவற்றை வாபஸ் வாங்கிவிடுகிறேன். 

கவிஞரே உடனடியாக கக்கீமுடன் கதைத்து தலிபான்களையும் அல்கைடாக்களையும் இலங்கையில் களமிறக்கி சிங்களவனுக்கு ஒரு மரண அடி கொடுப்பது தான் தங்கல் உயிருக்குயிரான இசுலாமிய சகோதரர்கலை காப்பாற்ற தங்களுக்கு வரலாறு விட்ட ஒரே வழி  :D  :D  :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய ரகுநந்தன், எலா தரப்பில் இருந்தும் சரமாரியாக குற்றச்சாட்டுக்கள் வீசப்படலாம். ஆனால் இனியேனும் நாழை வெற்றிபெற இன்று எது செய்யவேனும் என சிந்திக்க வேண்டாமா?

 

எல்லா நெருக்கடிகளிலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் நமக்கு அனுதாபமாக இருந்தார்கள் என்பதைக் குற்றம் சுமத்தும் பலர் அறிந்திருக்கவில்லை.

எங்கள் அவசரத்தேவை தேசிய சர்வதேசிய அரசியல் வெளியை புதிது புதிதாக உருவாக்குவதும் அகலப் படுத்துவதாகும். உலக அரசியல் இராணுவ வரலாறு முழுவதிலும் போதிய அரசியல் வெளியில்லாமல் உருவாக்கப்பட்ட இராணுவ வெளிகள் எல்லாம்  மணல் மீது கட்டிய மாழிகையாகச் சிதைதிருக்கிறது. 

 

விமர்சனம் மட்டுமே எமக்கு கைவந்தகலை. விமர்சனத்தில் இருந்து எதிரிக்கு பதில் சொல்ல கற்றுகொள்ளல்லாம். ஆனால் சுய விமர்சனத்தில் இருந்து மட்டுமே தோல்வியில் இருந்து வெற்றிக்குப் போகும் மார்க்கத்தை நாம் கற்றுக்கொள்ள முடியும். காலம் கடக்கிற தருணத்தில் விழித்துக்கொண்டு புதிதாக அரசியல் வெளிகளை உருவாக்கி தமது இராணுவ தேட்டங்களை பாதுகாத்து விடுதலை அடைந்த தெற்க்குச் சூடான், பொஸ்னியா, கொசோவோ  போன்ற புதிய நாடுகளின் அனுபவங்களில் இருந்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்ளவேனும். 

 

இதுவரை நாம் ஐநா மேற்குநாடுகள். மனித உரிமை இயக்கங்கள் நவிப்பிள்ளையின் உறுதி தமிழ்நாட்டு அழுத்தம் என்பவை உருவாக்கிய சிறிய அரசியல் வெளியிலேயே செயல்ப்படுகிறோம். அதனை அகலபடுத்தாமையும் புதிய அரசியல் வெளிகளை உருவாக்காதமையும்தான் நாம் எதிர்நோக்கும் பாரிய  பிரச்சினை.

இன்று முஸ்லிம் மக்களுக்கும் அதே பிரச்சினை. சரனாகதிகளின்மூலம் பேரம்பேசும் சக்தியை தக்கவைப்பதே அவர்களது அரசியலாக இருந்தது. இன்று அவர்களும் அரசியல் போராட்ட வெளிகளை உருவாக்க முனைகிறார்கள்.

 

இந்த தருணத்தில் தமிழ்பேசும் முஸ்லிம் சகோதரர்களுக்குக் கைகொடுத்து சிங்கள பெள்த்த பாசிச சக்திகளை முடக்குவதே பெரு வெற்றியாகும். இதன் மூலம் அரசியல் வெளிகளை நாமும் முஸ்லிம் மக்களும் விரிவு படுத்திட வேன்டும். இது எப்பவும் குறிப்பிடத்தக்க பொதுப் போராட்ட வெளிகளை உருவாக்கும். இதுதான் தமிழ் மக்கலுக்கும் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுக்கிருக்கும் ஒரே தெரிவு. 

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர்,

எதிர்காலம்பற்ரிய உங்கள் அபிப்பிராயம் யாழ்களத்தவர்கள் அனைவராலும் அறியமுடிகிறது ஆனால் நாங்கள் முஸ்லீம்களுக்காகக் கொடுக்கின்ற  குரல் மறுதரப்பிலிருந்து சம்பந்தப்பட்டவர்களால் மறுதலிக்கப்படும் எனும் கருத்தே உண்மையானது. கடந்தகாலங்கள் இவர்களுடன் கசப்பான அனுபவங்களையே தந்துள்ளது.

 

இவர்களுக்கு நாங்கள் செய்த தவறு குடாநாட்டிலிருந்து அப்புறப்படுத்தியதே அதை அக்காலங்களில் தவிர்க்கமுடியாது போனதே காரணம் இல்லையேல் ஏகப்பட்ட இஸ்லாமியர்களது பிணங்கள் ஐந்துசந்தியில் அடிக்கடி வெள்ளைபிரட்டிக்கிடந்திருக்கும் அதன்காரணமாக மிகப்பெரிய அரசியல் மற்றும் இராணுவப்பின்னடைவு தமிழர்தரப்பில் நடந்திருக்கும், இவர்களை வைத்து பெரிய ஆட்டங்களை சிங்களம் நடாத்திமுடித்திருக்கும். இதைவிளங்காதது போல் யாரும் இங்கு கருத்தாட முடியாது யதார்தம் இதுவே.

 

ஆனால் இவர்கள் செய்யும் திருக்கூத்துக்கள் சகிக்கக்கூடியனவல்ல. அவர்களுக்கு ஆதரவான எமது குரல்கள அவர்கள் முதலில் அங்கீகரிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் அதற்கான அடிப்படை நாகரீகமாவதுவேண்டும்.

 

எமது ஆதரவுக் குரலை இவர்கள் தங்கள் பேரம்பேசும் சக்தியை உயர்த்துவதற்காகப் பயன்படுத்துவதை எம்மால் அனுமதிக்க முடியாது

 

கிழக்கு மாகாணசபையை அற்பகாரணங்களுக்காக மகிந்தவிடம் தாரைவார்த்தவர் உங்கள் நண்பர் ராவுப் ஹக்கீம். இப்போது வடமாகாண சபையும் தமிழர் நிர்வாகத்தில் இருக்கும்போது வடக்குக் கிழக்கிற்கான பலம் இருவர் இணைந்த தமிழர் தரப்பில் இருந்திருந்தால் சிங்களமும் சர்வதேசமும் எமது பலத்தின் அளவினை அதிகரித்து மதிப்பிட்டிருக்கும்.

 

மாறாக உங்கள் நண்பர் ராவுப் ஹக்கீம் ஒரு தலைவருக்கான மக்கள் தொண்டனுக்கான குறைந்தபட்சத் தகுதிகளே இல்லாதவர்.

பாதிக்கப்பட்ட இஸ்லாமியர் ஒருவர் தெருவில் நின்று கூக்குரலிடுகிறார் இவர் என்னடாவென்றால் காரிலிருந்து இறங்காமலேயே அரசியல் செய்கிறார்

 

இக்கட்டிலிருந்து விடுவிக்கப் பாடுபட்டதற்காக உங்கள் சார்பாக ராவுப் ஹக்கீமுக்கு யாழ் களம் ஒரு நன்றியைச் சொல்லலாம்.

 

மத்தப்படி இவர்களுக்காகக் குரல்கொடுப்பது சுத்த வேஸ்ட் காரணம் அதற்கான எதிர்வினை அவர்கள்பக்கத்திலிருந்து வராது பதிலாக வசவுகளே வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புகுரிய எழுஞாயிறு, யாழ் முஸ்லிம்கள் விடயத்தில் யாழ்முஸ்லிம் அகதிகள் அமைப்புகளோடும் விடுதலைப்புலிகளோடும் ஆரம்பத்திலிருந்தே தொடர்பில் இருந்தவன் என்கிற வகையில் உங்களது ஆய்வில் சில தவறுகள் :உள்ளது என்பதை பதிவு செய்கிறேன். ஆனாலும் இன்று அதுவல்ல பிரச்சினை. அழுத்கம முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதன்மூலம் புதிய அரசியல் பாலங்களைக் கட்டும் முயற்சியில் உங்கள் ஆதரவுக் கருத்தும் அனுதாபமும் தேவை. அதுதான் பிரச்சினை..தயவு செய்து உங்கள் நிலையை மீழாய்வு செய்யுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.