Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Featured Replies

"சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள்" கவிஞர் ஜெயபாலன்:

Voice_CI.jpg

முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பிரபல தென்னிந்திய நடிகரும் ஈழத்துக் கவிஞருமான வ.ஐ.ச. ஜெயபாலன் தெரிவித்தார். 

 
இது தொடர்பில் வ.ஐ.ச. ஜெயபாலன் குளோபல் தமிழ் செய்திகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்தாவது: 
 
உலகத் தமிழர்களே தமிழ் நாடு தமிழ் உணர்வாளர்களே தமிழக அரசியல் கட்சிகளே இந்திய முற்போக்காளர்களே பொதுபல சேன போன்ற இலங்கை சிங்கள பெளத்த பாசிச சக்திகள் அழுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்புத் தாக்குதல்களுக்கு எதிடராக குரல் கொடுங்கள்.
 
மேற்க்கு நாடுகளிலும் மத்தியகிழக்கிலும் வாழும் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். தமிழகத்திலுள்ள தமிழ் இஸ்லாமிய தமிழர் அமைப்புகள் தென்னிலங்கை முஸ்லிம்கலைப் பாதுகாக்க தெருவில் இறங்கிக் குரல் கொடுக்கவேன்டும். தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்க தவறக்கூடாது. 
 
லண்டனிலும் ஏனைய உலக நகரங்கலிலும் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்றுதிரண்டு தென்னிலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேன்டும். இவற்றுக்கான வேண்டுகோள் கூட்டமைப்பு தலைவர்களிடமிருந்தும் தலைவர் சம்பந்தரிடமிருந்தும் வரவேன்டும்.
 
உலகத் தமிழர்களும் தம்ழக தமிழ் உணர்வாளர்களும் தமிழக அரசும் தமிழ் பேசும் முஸ்லிம்களை சிங்கள பேரினவாதக் கொலைக்கரங்களில் இருந்து காப்பாற்றிடக் கொதித்தெழுந்து குரல் கொடுக்க வேண்டிய தருணமிது 
 
உலகம் முழுவதிலும் தமிழகத்திலும் உள்ள தமிழ் அமைப்புகளும் தமிழ் ஊடகங்களும் சிங்கள பேரினவாதிகளால் அழுத்கம முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தெருவில் இறங்கிப் போராட வேண்டும். 2009ல் முள்ளிவாய்க்காலில் எங்கள்மீது இனக்கொலையை கட்டவிழ்த்த அதே சக்திகள் கொலைவெறியோடு அழுத்கம வீதிகளில் அலைகின்றன. அந்த சிங்கள பெள்த்த பாசிச வாதிகளை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தப்ப விட்டுவிடக்கூடாது. 
 
உலக, தமிழக வீதிகளில் இறங்கி அழுத்கம படுகொலைகளை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவேன்டுமென உலகத் தமிழகளிடம் வேண்டுகிறேன்.                        
 
சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள். எல்லா தரப்பிலும் தவறு இருக்கு. ஆனால் முதல் எதிரி ஏனையோர் என பேதப் படுதுவதில் இருந்தே வரலாறில் வெற்றிபெற்ற எல்லா அரசியல் நடவடிக்கைகளும் ஆரம்பித்தன. எல்லோரையும் முதல் எதிரியாக்கி தனிமைப் படாமல் விடுபடவேன்டும். 
என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

குளோபல் தமிழ் செய்தி

 

 

 

  • Replies 54
  • Views 3.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அட பார்ரா.. 40,000 தமிழர்களை ஓரிரு நாளில் கொன்று தள்ளும் போது கூட விடுக்காத அறகூவலை இவர் இப்ப விடுக்கிறார். எல்லாம் அங்க நல்லா வட்டிலப்பம் திண்ட ஞாபகத்தில போல..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்பு

 

 

இது ஒரு இன அழிப்பு என்று எதனை வைத்து சொல்கின்றார்? வேண்டுமென்றால் மத அழிப்பு என்று போடலாம். 

இன்றைய இலங்கை முஸ்லீம் நிலைமை .

ஜெர்மனிய சிந்தனையாளரான மார்டின் நீய்மொய்லர் அவர்களது 'முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்' என்ற கவிதை வரியே ஞபகத்திற்கு வருகின்றது.

'முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்...
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் யூதன் அல்ல!!!
பின்னர் அவர்கள் பொது உடைமைவாதிகளுக்காக வந்தார்கள்...
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் பொது உடைமைவாதி அல்ல!!!
பின்னர் அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக வந்தார்கள்...
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் தொழிற்சங்கத்து உறுப்பினன் அல்ல!!!
பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள்...
ஆதரவுக் குரலுக்காக சுற்றியும் பார்த்தேன்
எனக்கென குரல் கொடுக்க எவரும் எஞ்சி இருக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு இன அழிப்பு என்று எதனை வைத்து சொல்கின்றார்? வேண்டுமென்றால் மத அழிப்பு என்று போடலாம். 

 

போடலாம் இல்லை. அப்படிதான் நவநீதம் பிள்ளையின் அறிக்கையும் குறிப்பிடுகிறது. இந்தியாவில் இருந்து வெளியிடப்பட்டுள்ள கட்டண அறிக்கைகளும் கூறுகின்றன.

 

முஸ்லீம்கள் தனி இனம் அல்ல. சில தனித்துவ மத அடையாளங்களைக் கொண்ட தமிழ் அல்லது சிங்களம் பேசும் சமூகம். அவ்வளவே..! முஸ்லீம்கள் தனி இனம் என்றால்.. இலங்கையில் உள்ள கிறீஸ்தவர்களும் தனி இனமாவர். :icon_idea:

இவர் எப்பவும் சொந்த இனத்துக்கு எதிராக.. தன் சுய இலாபங்களுக்கா.. நாசூக்காக நஞ்சு பாய்ச்சும் ஒருவர். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிறகு இந்த பஞ்சாயத்தை வைக்கலாம்.

இப்போது நாம் சேர்ந்து குரல் கொடுப்பது சிறி லண்கன்சுக்கு நெருக்கடியை கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் அறிக்கை விட்டிட்டார்......டக்கிள்ஸும் ,அம்மாணும் அறிக்கை விட்டா நல்லம்...:D

விடுதலைப்புலிகளுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை தங்களது சுயநலத்துக்காக அதி தீவிரமான பகை முரண்பாடாக சித்தரித்து அதன் மூலம் பதவி அதிகாரம் பணம் என்று சுகபோக வாழக்கை வாழ்ந்த இசுலாமிய தலைமைகள் பௌத்த சிங்கள பேரினவாதமும் அதை போசித்து வளர்க்கின்ற சிறீலங்கா அரசும் தமிழ் பேசும் மக்களின் எதிரி என்பதை இசுலாமிய மக்களுக்கு உணர்த்து மறுத்து மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்திருக்கிறார்கள்.

விடுதலைப்;புலிகள் தங்கள் தவறுகளை உணாந்து மன்னிப்புக்கேட்டு நேசக்கரம் நீட்டிய போது அதை தட்டிவிட்ட இந்தத் தலைமைகள் பௌத்த சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து அவர்களை அழிப்பதற்கும் தழிழீழ விடுதலைப்போராட்டத்தை தோற்கடிப்பதற்கும் துணைபோன வரலாறு மன்னிக்க முடியாத ஒன்று.

முள்ளிவாய்க்காலில் தமிழ் இனம் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டதை நியாப்படுத்தி பௌத்த சிங்களப் பேரினவாதிகளுடன் பாற்சோறு உண்டு மகிழ்ந்த இந்த சந்தர்ப்பவாத இசுலாமிய தலைமைகளின் ஈனத்தனம் மனிதாபிமானம் உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

விடுதலைப்புலிகளின் ஆயுத பலமும் அவர்களது போராட்டமும் தான் தமிழர்களை மட்டுமல்ல இசுலாமியர்களையும் பௌத்த சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து காத்தது என்பது தான் அப்பட்டமான உண்மை.

தமிழ் பேசும் மக்கள் மீது மீண்டும் ஒரு இனக்கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்ற பயம் தான் பௌத்த சிங்கள பேரினிவாதத்தை 1983 ல் இருந்து 2009 ம் ஆண்டு வரை முடக்கி வைத்திருந்தது என்ற உண்மையை இசுலாமிய மக்கள் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ் பேசும் மக்களை பிளவு படுத்துவதன் மூலம் தான்-வடக்கு கிழக்கை ஒன்று சேரவிடாமல் தடுப்பதன் மூலம் தான் தங்களது மேலாதிக்கத்தை நிறுவ முடியும் என்பதை உணாந்துகொண்ட பௌத்த சிங்களப் பேரினவாதிகள் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் தாக்கம் காரணமாகவே இசுலாமியர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கும் தங்களது நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கும் இசுலாமிய தலைமைகளுக்கு அமைச்சுப் பதவிகளையும் சலுகைகளையும் வழங்கினார்கள்.

பௌத்த சிங்கள பேரினவாதத்தை போசித்து வளர்க்கும் ஒரு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு இசுலாமிய சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்த சந்தர்ப்பவாத தலைமைகள் கூறுவதை இசுலாமிய மக்கள் இனியும் நம்புவார்களாக இருந்தால் இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் பல முள்ளிவாய்க்கால்களை அவர்களுக்கு பரிசாகத் தரும் என்பதே கசப்பான உண்மையாகும்.

இலங்கைத் தீவில் இந்த சந்தர்ப்பவாத இசுலாமிய தலைமைகளின் அரசியல் சாணக்கியம் தான் இசுலாமிர்களை பாதுகாத்தது என்று இனியும் எவராது நம்புவார்களாக இருந்தால் அவர்களைவிட அறிவிலிகள் வேறு யாரும் இருக்க முடியாது?

 

 

 

 

https://www.facebook.com/groups/191129747729027/

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் நீட்டியபோது தட்டிவிட்டவர்கள் இப்போது இருபக்கத்தாலும் கைவிடப்பட்டவர்கள் ஆகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

விடுதலைப்புலிகளின் ஆயுத பலமும் அவர்களது போராட்டமும் தான் தமிழர்களை மட்டுமல்ல இசுலாமியர்களையும் பௌத்த சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து காத்தது என்பது தான் அப்பட்டமான உண்மை.

தமிழ் பேசும் மக்கள் மீது மீண்டும் ஒரு இனக்கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்ற பயம் தான் பௌத்த சிங்கள பேரினிவாதத்தை 1983 ல் இருந்து 2009 ம் ஆண்டு வரை முடக்கி வைத்திருந்தது என்ற உண்மையை இசுலாமிய மக்கள் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும்.

 

நன்றி  அண்ணா.......

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இடையில கிளிநொச்சியை.. மாங்குளத்தை கைப்பற்றி சந்திரிக்கா - அனுரத்த வெற்றி விழாக் கொண்டாடேக்கையும் மாவனல்லையில.. பாணந்துறையில அடி வாங்கினவை தானே.

 

அவைக்கு இதெல்லாம் யுயுபி. தமிழர்கள் தான் அவர்களுக்கு வேண்டாத ஆட்கள். :lol::rolleyes:


பாசக்கார அண்ணன் அடிக்கிறானுன்னுட்டு இருப்பினம். !!!!!

நேசக்கரம் நீட்டியபோது தட்டிவிட்டவர்கள் இப்போது இருபக்கத்தாலும் கைவிடப்பட்டவர்கள் ஆகின்றனர்.

அண்ணா என் கருத்து.

நாங்கள் திரும்பவும் நீட்டவேண்டும்.

எம்மை சுற்றிவர 20+ இசுலாமிய நாடுகள் உள்ளன.

இந்திய குண்டு சட்டியில் மட்டும் குதிரை ஓட்ட முற்படாமல் நாம் எமது டிப்லோமசியை வளர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி விக்.. நீங்கள் தப்புக்கணக்குப் போடுறீங்க.

 

முஸ்லீம்கள் சிங்களவர்களிடம் அடிவாங்குவது இது முதற்தடவையும் அல்ல. தமிழர்கள் முஸ்லீம்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவது மட்டுமல்ல.. சகோதரத்தை காப்பாற்ற போராடுவது இன்று நேற்றும் அல்ல. ஆனால்..அதற்குப் பிரதியீடாக.. தமிழர்களின் காலை வாருவது என்பது அவர்களின் வழமை. இதற்காக எல்லாம் முஸ்லீம் நாடுகளை வைச்சு இந்தியாவை வசப்படுத்தலாம் என்றது சரிப்பட்டு வராது. ஒருவேளை சீனா வசப்படலாம்.. எமது நிலத்திற்காக. ஆனால்.. முஸ்லீம் நாடுகள்.. நடக்க எதுவும் இல்லை. அல்கா வந்து சொன்னால் ஏதேனும் அதிசயம் நடக்கலாம்.

 

நம்பிக்கெட தமிழர்கள் எனியும் தயார் இல்லை. :icon_idea:

Edited by nedukkalapoovan

தமிழர்களுக்கு இனி இழப்பதற்கு எதுவுமில்லை. எனவே சேர்ந்து மீண்டும்அடி வாங்குவதை விடுத்து வேடிக்கை பார்ப்பதே இப்ப இருக்கும் ஒரே வழி.  விளைவுகள் எமக்கு சாதகமாக வரின் அதனை பயன்படுத்துவோம்.

முஸ்லிம்கள் போன்று எரியும் தீயில் எண்ணெய் விட்டு அநியாயத்துக்கு துணை போகாது, எதுவும் செய்யாது நல்ல பிள்ளைகளாக வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஒண்டுக்கிருந்து முன்னப் பின்ன எதையாச்சும் செய்து எங்கட சாமானுகளக் காப்பாத்தித் தாறத  வுட்டுப்போட்டு  சும்மா எழுதிக்கிட்டு இருக்கிரீங்க.

முஸ்லிம் தலைமைகள் ஒன்றும் நல்லவர்கள் இல்லை இதே போல அரசிடம் சோரம் போன தமிழ் தலைமைகளும் பல இருக்கு .

ஆனால் இந்த சிங்கள முஸ்லிம்களின் பிரச்சனைக்குள் சிலர் வந்து  -------- புதைத்துவிட நினைகின்றார்கள் .

 

 

Edited by நிழலி
பொருத்தமற்ற கருத்தும் சொல்லும் நீக்கப்பட்டது

இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்த்து குரல் கொடுப்பது சரியா தவறா ? என்று விவாதம் நடத்தும் நேரமல்ல இது.
 
சிறீலங்கா அரசாங்கம் தாங்கள் சனநாயக வழிநடப்பவர்கள் என்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களுடைய அரசாங்கம் என்று அனைத்துலக அரங்கில்; தன்னை நிலை நிறுத்தி வருகிறது.
நாங்கள் அதன் மீது இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு மற்றும் போர் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்ற போது எங்கள் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் வன்முறையாளர்கள் என்று அது நிறுவ முற்படுகிறது.
இந்த உலக ஒழுங்கில் சிறீலங்காவின் நடிப்பை நம்பவும் பல நாடுகள் இருக்கின்றன.
தற்போது நடந்த கலவரம் அரசாங்கத்தால் போசித்துவளர்க்கப்படும்  பௌத்த சிங்கள பேரினவாத அமைப்பொன்றால் திட்டமிட்ட நடத்தப்பட்ட சனநாயக விரோத நடவடிக்கையாகும்.சர்வதேச சட்டங்களின் படி இது அப்பட்டமான பயங்கரவாத நடவடிக்iகாயகும்.
இந்த அமைப்பை வழிநடத்துவது சிறீலங்கா புலனாய்வுதுறை அதிகாரிகள் என்றும் அவர்களது பெயர்களை வெளியிட இருப்பதாகவும் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.சிறீலங்கா பாதுகாப்பு செயலர் இந்த அமைப்பினருடன் தொடர்பில் இருப்பதற்கு நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன.
 
சிறீலங்கா அரச பயங்கரவாதம் பௌத்த சிங்கள பேரினவாதம்; கோலாச்சும் இலங்கைத் தீவில் நாங்கள் அவர்களுடன் ஒருபோதும் சேர்ந்து வாழ முடியாது தமிழீழம் என்ற நாடு உருவாவதிலே எமது  மக்களுக்கான பாதுகாப்பு தங்கியுள்ளது என்பதை சர்வதேச அரங்கில் நிலைநாட்ட இந்த இனக்கலவரத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டும்.
 

 

சிறீலங்கா அரசாங்கம் தாங்கள் சனநாயக வழிநடப்பவர்கள் என்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களுடைய அரசாங்கம் என்று அனைத்துலக அரங்கில்; தன்னை நிலை நிறுத்தி வருகிறது.

 

 

நவம் அண்ணை,

 

இது தொடர்பாக கேள்வி இருக்கின்றது எனக்கு. உலகம் உண்மையிலேயே இலங்கை அரசாங்கத்தினை பற்றி இவ்வாறு நம்புகின்றதா? அல்லது உலகம் தன் நலன்களை பேணிக் கொள்வதற்காக நம்புவதாக நடிக்கின்றதா?

 

என்னை பொறுத்தவரைக்கும் உலகத்துக்கு சிறிலங்கா அரசு ஒரு பேரினவாத அரசு என்றும் பயங்கரவாத அரசு என்றும் நன்கு தெரியும். ஆனால் தம் நலன்களுக்காக அதனை அவை ஆதரிக்கின்றன.

 

இலங்கை அரசினை ஆதரிப்பதன் மூலம் தங்கள் மனித உரிமை முகமூடி கிழிந்து போகும் என்ற நிலையை இலங்கை அரசு ஏற்படுத்தும் வரைக்கும் உலகம் இப்படித்தான் தொடர்ந்து நடிக்கும். அப்படிப் பட்டதொரு நிலையை இலங்கை பேரினவாத அரசு விரைவில் தானே தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும். ஏனெனில் புலிகளை அழித்த வெற்றி கொடுத்த வெறி அதன் கண்களை மூடிவிட்டது. தானே தனக்கு சவக் குழியை கிண்டுகின்றது. இதனை தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு சாதகமான வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது என்று நினைக்கின்றேன். அது வரைக்கும் இந்த கலவரத்தினை வேடிக்கை பார்பது ஒன்றே தமிழர்கள் செய்ய வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

நவம் அண்ணை,

 

இது தொடர்பாக கேள்வி இருக்கின்றது எனக்கு. உலகம் உண்மையிலேயே இலங்கை அரசாங்கத்தினை பற்றி இவ்வாறு நம்புகின்றதா? அல்லது உலகம் தன் நலன்களை பேணிக் கொள்வதற்காக நம்புவதாக நடிக்கின்றதா?

 

என்னை பொறுத்தவரைக்கும் உலகத்துக்கு சிறிலங்கா அரசு ஒரு பேரினவாத அரசு என்றும் பயங்கரவாத அரசு என்றும் நன்கு தெரியும். ஆனால் தம் நலன்களுக்காக அதனை அவை ஆதரிக்கின்றன.

 

இலங்கை அரசினை ஆதரிப்பதன் மூலம் தங்கள் மனித உரிமை முகமூடி கிழிந்து போகும் என்ற நிலையை இலங்கை அரசு ஏற்படுத்தும் வரைக்கும் உலகம் இப்படித்தான் தொடர்ந்து நடிக்கும். அப்படிப் பட்டதொரு நிலையை இலங்கை பேரினவாத அரசு விரைவில் தானே தனக்கு ஏற்படுத்திக் கொள்ளும். ஏனெனில் புலிகளை அழித்த வெற்றி கொடுத்த வெறி அதன் கண்களை மூடிவிட்டது. தானே தனக்கு சவக் குழியை கிண்டுகின்றது. இதனை தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு சாதகமான வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது என்று நினைக்கின்றேன். அது வரைக்கும் இந்த கலவரத்தினை வேடிக்கை பார்பது ஒன்றே தமிழர்கள் செய்ய வேண்டியது.

 

வேடிக்கை  பார்ப்பது  மட்டும் போதாது

இதை  பிரசாரம்  செய்யணும்

உலக நாடுகளுக்கம்

சர்வதேச  மக்களுக்கும்  காவிச்செல்லும் பணியை  நாம் செய்யணும்....

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்பு

இசுலாம் ஒரு மதம் - இனம் அல்ல. இசுலாமை பின்பற்றும் முஸ்லிம் ஒரு மதத்தவரே அன்றி இனத்தவர் அல்ல.

 

இது ஒரு இன அழிப்பு என்று எதனை வைத்து சொல்கின்றார்? வேண்டுமென்றால் மத அழிப்பு என்று போடலாம்.

 

இலங்கை முஸ்லிம்கள் அரபிய வழித்தோன்றல்கள். இசுலாம் தோன்ற முதலே அரபியர்கள் இலங்கையுடன் வணிகம் செய்து வந்திருக்கிறார்கள். அவர்கள் குடியேறிய பிரதேசத்தில் பேசப்பட்ட தமிழ் மொழியில் இருந்து மருவிய அரபித்தமிழ் பேசும் அராபியர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இது பிரான்சில் அடுத்த நூறு வருடங்களின் பின் வாழப்போகும் தமிழ் தெரியாத 'ஈழத்தமிழர்கள்" போன்ற இனமாகும்.

 

 

முஸ்லீம்கள் தனி இனம் அல்ல. சில தனித்துவ மத அடையாளங்களைக் கொண்ட தமிழ் அல்லது சிங்களம் பேசும் சமூகம். அவ்வளவே..!

தவறு. அவர்கள் தனி இனம்.அரபிய வழித்தோன்றல்கள். அவர்கள் பேசும் தமிழ் அரபித்தமிழ். அது வித்தியாசமான மருவிய மொழி. எப்படி பதினெட்டாம் நூற்றாண்டில் மலையாளம் தமிழில் இருந்து உருவானதோ அப்படி அரபித் தமிழும் உருவானது.

 

முஸ்லீம்கள் தனி இனம் என்றால்.. இலங்கையில் உள்ள கிறீஸ்தவர்களும் தனி இனமாவர்.

ஐரோப்பிய கலப்புள்ள கிறீஸ்தவர் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்கள் பறங்கியர் ஆவர். மதம் மாறிய தமிழரும் சிங்களவரும் அந்த அந்த இனத்தவரே. முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அரபிய வழித்தோன்றல்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் யூட்.. நீங்கள் இலங்கை முஸ்லீம்கள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து இதனைச் சொல்வதால் நாங்கள் நம்பத்தான் வேண்டும்.

 

அதுசரி.. தற்போதைய.. அரேபியர் நல்ல வெள்ளையா இருக்கினம்.. இவை மட்டும் எப்படி.. இன்னும் தமிழர்களின் கலரில இருக்கினம்.

 

எதுக்கும் சிங்களவர்களும் இவர்களுக்கும் தொடர்பிருக்கோன்னும் ஒரு மரபணு ஆராய்ச்சி செய்தால் என்ன..??!

 

தனி இனமோ இல்லையோ என்பதைத் தீர்மானிக்க பல நவீன வழிமுறைகள் உள்ளன. ஆனால் அதனை அல்காவின் பெயரால் அமுல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன. அமுல்படுத்தினால்.. எல்லாம் வெளிக்கும்..! :lol::icon_idea:

முஸ்லீம்கள் பற்றி கதைப்பவர்கள் சுன்னத்து செய்ய வேண்டும் என்று அஸ்வர் MP கூறியதை கவிஞர் மறந்திட்டார்.

இதுவரை சிங்கள பௌத்த இனவாத பூதம் தமிழர்களை விழுங்கிவந்துள்ளது, இப்போது முஸ்லீம் மக்களையும் விழுங்கத்தொடங்கியுள்ளது. இது எங்கு போய் முடியுமோ தெரியாது.. ஆனால் ஒரு கரைகண்டு தான் முடியும்.. இலங்கை பௌத்த சிங்கள மக்களுக்கு மட்டுமே என்னும் கொலை வெறிதான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் தீர்வில்லாமல் செய்துள்ளது. இதனை ஒரு பெரிய சக்தி கையாண்டு தீர்க்குமட்டும் தொடரும். இது அடக்கமுடியாதது ஏன் எனில் ஒவ்வொரு அரசும் இதற்கு பிண்ணனியில் ஊக்கம் கொடுத்து அரசபடைகளையும் பயன்படுத்துகின்றன காடையருக்கு பாதுகாப்பிற்கு, ஊரடங்கு சட்டமும் அதற்குத்தான். இதனை எல்லாம் முஸ்லிம் நாடுகளும் புரிந்து, இலங்கையை கட்டுக்குள் கொண்டுவருவது கல்லில் நார் உரிப்பது போன்றது.. தமிழர்களுக்கு இவ்வளவும் நடந்தும் புலிகளைத்தவிர எவரும் சிங்களத்தை அடக்கமுடியவில்லை... இந்த அரச பயங்கரவாதத்தை எப்படி கையாள்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.