Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இந்திய சுதந்திர தினம் எதிர்வரும் 15ல் அனுஸ்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6e481a23059523dee21de6db6e282c5c.jpg

இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
 
 இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு யாழ்.மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில்  காலை 9 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக இந்திய துணைத் தூரகத்தின் இணைப்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=469923320212434162

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு யாழ்.மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில்  காலை 9 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக இந்திய துணைத் தூரகத்தின் இணைப்பாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

அன்று பொதுமக்கள் எல்லோருக்கும் அல்வா கொடுக்கப்படுமா? :):lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று பொதுமக்கள் எல்லோருக்கும் அல்வா கொடுக்கப்படுமா? :):lol:

 

அன்றைய தினம் என்று அல்ல ஏற்க்கனவே இந்தியா ஈழ தமிழர்களுக்கு எண்பதுகளில் இருந்தே அல்வா கொடுத்துக் கொண்டு வருகிறது ....

இப்போது ஒரு படி மேலே சென்று யாழில் அல்வா கடையை திறந்துள்ளார்கள் இதனூடாக சுட சுட அல்வா கொடுக்கப் போகிறார்களாக்கும்.  

இந்தியா குடுத்த அல்வாவை அப்போவே வாங்கியிருந்தால், இப்போ இருக்கிற "எனிமா" குடிச்ச நிலை வந்திருக்காது....

 

ஜெய் கிந்...பாரதமாதாகி ஜே.....

 

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....மண்ணின் மைந்தன் ஆளும் இந்தியா வளமாக வரட்டும்......எங்களுக்கும் ஏதேனும் நியாயமாக செய்யட்டும் என்று எதிர்பார்ப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா குடுத்த அல்வாவை அப்போவே வாங்கியிருந்தால், இப்போ இருக்கிற "எனிமா" குடிச்ச நிலை வந்திருக்காது....

 

ஜெய் கிந்...பாரதமாதாகி ஜே.....

 

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....மண்ணின் மைந்தன் ஆளும் இந்தியா வளமாக வரட்டும்......எங்களுக்கும் ஏதேனும் நியாயமாக செய்யட்டும் என்று எதிர்பார்ப்போம்...

 

இந்தியா.... தமிழனுக்கு நன்மை செய்யும், என்று எதிர்பார்க்கும் நீங்கள் அரசியலுக்கு புதுசா....

 

"கடல் வத்தும் என்று..... குடல் வத்தி, செத்த கொக்கின்" கதை நாந்தானுக்கு தெரியாது போலை கிடக்கு.  :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் கிந்...பாரதமாதாகி ஜே.....

 

அப்படீன்னா...? :o  :huh:  :lol: 

 

 

...மண்ணின் மைந்தன் ஆளும் இந்தியா வளமாக வரட்டும்......எங்களுக்கும் ஏதேனும் நியாயமாக செய்யட்டும் என்று எதிர்பார்ப்போம்...

 

இன்னமும் சொந்த முயற்சியில் உங்கள் இலக்கை அடைய  சக உறவுகளுடன் இணைந்து நிற்க மனம் வரவில்லை?

 

இலவு காத்த கிளியாய் இருக்காதீர்கள்.. இந்தியா நிச்சயம் உங்களுக்கு நல்லது ஒன்றும் செய்யாது..முடிந்தால் இப்போதிருக்கும் நிலையை விட இழிநிலையில் தனக்கு சாதகமாக உங்களை ஆட்டுவித்து வைத்திருக்கவே விரும்பும்.

நீங்கள் 'ரொம்ப நல்லவர் அப்பு! :icon_mrgreen::lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படீன்னா...? :o  :huh:  :lol:

 

 

 

இன்னமும் சொந்த முயற்சியில் உங்கள் இலக்கை அடைய  சக உறவுகளுடன் இணைந்து நிற்க மனம் வரவில்லை?

 

இலவு காத்த கிளியாய் இருக்காதீர்கள்.. இந்தியா நிச்சயம் உங்களுக்கு நல்லது ஒன்றும் செய்யாது..முடிந்தால் இப்போதிருக்கும் நிலையை விட இழிநிலையில் தனக்கு சாதகமாக உங்களை ஆட்டுவித்து வைத்திருக்கவே விரும்பும்.

நீங்கள் 'ரொம்ப நல்லவர் அப்பு! :icon_mrgreen::lol:

 

 

எங்கட ஊரில ஒரு அருமையான பழமொழி ஒன்று சொல்லுவார்கள், வன்னியன்!

 

அது நான் இந்த நேரத்தில நினைவுக்கு வந்து தொலைக்குது! :o

 

 

எள்ளுக்காயுது எண்ணெய்யாகிறதுக்கு....!

 

அதோட சேர்ந்து எலிப்புழுக்கையும் காயுது....என்னவாகிறதுக்கு?  :D

அப்படீன்னா...? :o  :huh:  :lol:

 

 

 

இன்னமும் சொந்த முயற்சியில் உங்கள் இலக்கை அடைய  சக உறவுகளுடன் இணைந்து நிற்க மனம் வரவில்லை?

 

இலவு காத்த கிளியாய் இருக்காதீர்கள்.. இந்தியா நிச்சயம் உங்களுக்கு நல்லது ஒன்றும் செய்யாது..முடிந்தால் இப்போதிருக்கும் நிலையை விட இழிநிலையில் தனக்கு சாதகமாக உங்களை ஆட்டுவித்து வைத்திருக்கவே விரும்பும்.

நீங்கள் 'ரொம்ப நல்லவர் அப்பு! :icon_mrgreen::lol:

 

 

நம்பிக்கை தான் வாழ்க்கை...

அமெரிக்காவோடு சேர்ந்த சிங்கப்பூர்/கனடா போன்ற நாடுகள் எப்படி இருக்கிறார்களோ அப்படி நாங்களும் இந்தியாவும் ஒரு காலத்தில் வரலாம்....

 

இந்தியா என்ன வைச்சு கொண்டா வஞ்சகம் செய்கிறது...

பிள்ளையாரே பெருச்சளியில் போகும் பொது பூசாரி புல்லெட் கேக்கலாமா? :)

இந்தியா வழம் பெற்று அங்கும் எல்லா மக்களும் சகல வளம் பெற்று வாழும் போது ... எங்கள் வாழ்வும் மலரும் :)

  • கருத்துக்கள உறவுகள்

------

எள்ளுக்காயுது எண்ணெய்யாகிறதுக்கு....!

 

அதோட சேர்ந்து எலிப்புழுக்கையும் காயுது....என்னவாகிறதுக்கு?  :D

 

ஸ்ரீலங்காவில் இப்போ... ஒட்டுக்குழுக்களை அரசு கணக்கெடுப்பதில்லை.

"ஆடின காலும், பாடின வாயும்... சும்மா இருக்காது" என்று சொல்வார்கள்.

எல்லாம்.... பழக்கதோசம் தான்..... :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

....

அமெரிக்காவோடு சேர்ந்த சிங்கப்பூர்/கனடா போன்ற நாடுகள் எப்படி இருக்கிறார்களோ அப்படி நாங்களும் இந்தியாவும் ஒரு காலத்தில் வரலாம்....

 

இந்தியா என்ன வைச்சு கொண்டா வஞ்சகம் செய்கிறது... (?????????)

 

........

 

இந்தியா வளம் பெற்று அங்கும் எல்லா மக்களும் சகல வளம் பெற்று வாழும் போது (????????????) ... எங்கள் வாழ்வும் மலரும் :)

 

இப்படி அநியாயத்திற்கு அப்பாவியா, நகைச்சுவை சொல்லக்கூடாது  நாந்தான்..! :lol:

உங்களை, ஈழத்தமிழர்களை நல்லூர் கந்தனும், கோணேச்வரனும், கதிகாமனும் முடிந்தால் காப்பாற்றற்றும்.. :o:)

 

இந்தியாவுடன் மிக மிக நல்லுறவைப் பேணும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தன் அவர்கள் பி.பி.சி வானொலிக்கு இவ்வாரம் வழங்கிய பேட்டியில் இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்ததற்கான காரணங்களை தெளிவாக கூறியுள்ளார். பேச்சுவார்தை மேசையில் தாம் காத்திருந்து அரச தரப்பினர் வராததால் திரும்பி சென்றதாக வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். 2012 ஜனவரி மாதம் நடைபெற்ற இச்சம்பவம். குறித்து நிச்சயமாக இந்தியாவிற்கு தெரிந்திருக்கும். ஆனால் மென் போக்குடன் செயற்படும் தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியல் தீர்வு காணுமாறு அலங்கை அரசிற்கு எந்த அழுத்தமும் கொடுக்காது தொடர்ந்து இலங்கை அரசால் நிகழ்த்தப்படும் அநீதிகளை வேடிக்கை பார்க்கும் இந்தியா எமக்கு உதவுமா?

இந்தியாவை பொறுத்தவரை அடங்கி ஒடுங்கி "வீட்டு நாய்" போல வாழ் என்பதே அவர்கள் தமிழருக்கு வழங்கும் தீர்வு. தந்தை செல்வா காலத்திலிருந்து இன்றைய திரு சம்பந்தன் காலம் வரை இதே நிலைப்பாட்டிலேயே இந்திய ஆளும் வர்க்கம் உள்ளது. ( எந்தக் கட்சி ஆட்சயில் இருந்தாலும்) நான் குறிப்பிட்டது இந்திய மக்களை அல்ல. இந்திய மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் போது அவர்களை வாழ்ததவேண்ட கடப்பாடு எமக்கு உண்டு.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சுதந்திரம் பெற்றது என்பதே ஒரு பெரிய பொய்.

 

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல்வேறு மொழி வழி.. நில வழி.. பூர்வீக இனங்கள் வாழும்.. பல்வேறு சுதந்திர தேசங்கள் அடங்கி இருந்த ஒரு பிராந்தியத்தை.. ஆங்கிலேயர்கள்.. பீரங்கிகளால்.. அடிமைப்படுத்தி.. ஒன்றிணைத்து.. இறுதியில்.. ஆட்சி அதிகாரத்தை.. வடக்கு ஹிந்தி மொழி அதிகார வர்க்கத்திடம் கையளித்த நிகழ்வே.. இன்று இந்திய சுதந்திர தினம் என்று கொண்டாடப்படுகிறது.

 

உண்மையில்.. அடிமைப்படுத்தப்பட்ட தேசங்களும் மக்களும்.... பிரித்தானிய ஆங்கிலேயர்களிடம் இருந்து.. வடக்கு ஹிந்திய ஹிந்துதுவா வெறியர்களிடம் கைமாறப்பட்ட ஒரு மனித வரலாற்றுத் துயரே இந்த நாள்.

 

இலங்கைத் தீவிலும் இதே தான் நிகழ்ந்தது. மொழி வழி.. நில வழி.. பூர்வீக தேசிய இனமாக வாழ்ந்த தமிழர்களை அடக்கி ஆண்டு.. அவர்களின் நிலத்தைப் பறித்து..அதிகாரத்தைப் பறித்த.. ஆங்கிலேயர்கள்.. சிங்களவர்களிடம் அதைக் கையளித்த நிகழ்வே.. சிறீலங்காவின் சுதந்திர தினம்.

 

ஆக அடிப்படையில்.. ஹிந்தியர்களுக்கும்.. சிங்களவர்களுக்கும் நன்மை செய்த ஆங்கிலேயர்கள்.. மற்றைய பூர்வீக தேசிய இன மக்களை ஒடுங்கி வாழ்.. ஒதுங்கி வாழ் என்ற சிந்தனைக்குள் அடக்கிச் சென்ற இந்த நிகழ்வை.. இந்திய உபகண்டத்தில்.. நிலமிழந்து.. மொழி இழந்து.. ஆட்சி உரிமை இழந்து..சுதந்திரம் இழந்து.. அடிமைப்பட்டு வாழும்.. தேசிய இன மக்கள் அனைவரும்.. புறக்கணிக்க வேண்டும்.

 

இது.. ஆங்கிலேய அதிகார மையம்.. ஹிந்திய.. சிங்கள அதிகார மையங்களிடம் அதிகாரத்தை கையளித்த ஒரு நிகழ்வே அன்றி.. இதில் சுதந்திரம் என்ற வார்த்தை பிரயோகத்திற்கே இடமில்லை.

 

உண்மையில்.. மக்களின் சுதந்திரம்.. முற்றாக பறிக்கப்பட்டு அது.. ஒரு சில மொழி வழி ஆங்கிலேய தலையாட்டி அதிகாரக்கூட்டத்திடம் கையளிக்கப்பட்ட நிகழ்வே இது.

 

இதனை சிங்களவர்களும்.. ஹிந்தியர்களும் கூடி இருந்து கொண்டாடுவது ஆச்சரியமில்லை. ஆனால் ஐரோப்பியர்களின்  வருகைக்கு முன் தமிழர்கள் உட்பட இந்தியாவில் இலங்கையில்.. வாழ்ந்த.. மொழி வழி.. நில வழி.. தேசிய இன மக்கள் அனுபவித்த சுதந்திரம்.. இன்று அங்கு இல்லை.

 

இதனை.. மறந்து.. மறைத்து.. வெறும் சாக்கிலேட்டுக்குள்.. ஹிந்திய.. சிங்கள தேசிய கீதங்களை ஒளித்து வைத்து ஹிந்திய.. சிங்களக் கொடிகளை விண் முட்ட பறக்க விடுவது.. ஹிந்தியர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பெருமையாக சுதந்திரமாக தென்படலாம்.. பாராண்ட நாம் தமிழருக்கு அது அடிமையின் நிகழ்வாகவே உள்ளது..!

 

இது தமிழர்கள் உட்பட பல்வேறு மொழி வழி.. நில வழி தேசிய இனங்களுக்கு சுதந்திர நாளே அல்ல. இருந்த சுதந்திரத்தை இழந்து... அடிமைப்பட்ட.. நாள்..! அடிமை விலங்கொடிக்க போராடத் தூண்ட வேண்டிய நாள்...!!!

 

 

(பெரிய பிரித்தானியா என்று சொல்லிக் கொண்ட தேசம்.. இன்று.. இங்கிலாந்து.. ஸ்காட்லாந்து.. அயர்லாந்து என்று பிரிந்து போயுள்ளது. ஒரு மொழி பேசும் வெவ்வேறு பூர்வீக வழி மக்களை அங்கு அடக்கி ஆண்டதன்.. பெறுநிலையே.. இன்று பெரிய பிரித்தானியா என்ற மாயை அரசு.. சிதைந்து சின்னாபின்னமாகி.. பல்வேறு தேசிய இன மக்களின் சுதந்திர தேசமாக மிளிரக் காரணமாகி உள்ளது.

 

இந்த நிலை இந்தியா.. சிலேன்.. என்று ஆங்கிலேயர்கள்.. உருவாக்கிய.. ஹிந்தியர்களும்.. சிங்களவர்களும் கட்டிக்காக்கும் மாயைகளுக்கும் ஓர் நாள் வரும். அதை வர வைக்க வேண்டிய பொறுப்பு.. விழிப்புணர்வு... ஆண்டு.. இன்று.. அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களிடம் வந்தால்.. அது விரைந்து நடக்கும்.!)

 

Edited by nedukkalapoovan

ஜெய் கிந்...பாரதமாதாகி ஜே.....

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....மண்ணின் மைந்தன் ஆளும் இந்தியா வளமாக வரட்டும்......எங்களுக்கும் ஏதேனும் நியாயமாக செய்யட்டும் என்று எதிர்பார்ப்போம்...

உண்மை உண்மை நானும் உங்கள் பக்கம் தான். எஜமான் வளமாக வாழ்ந்தால் அவர் உதறும் எச்சில் கையில் இருந்து அதிக சோறு விழும். நாக்கை நீட்டிக் கொண்டு நானும் உங்கள் பக்கத்தில் காத்திருக்கிறேன். வாழ்க வளமுடன் நல் வாழ்த்துக் கள் எஜமான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுதந்திர கொண்டடத்திட்கு ஆடை சுதந்திரம் பெற்ற நடிகைகள் யாரும் வரவில்லையா?? 

2500 வீரர்களைக் கொண்ட அமெரிக்க படைத்தளம் ஒன்றை அமைப்பதற்கு அவுஸ்திரேலியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. படைத்தளம் இந்து சமுத்திரம் மற்றும் பசுபிக் சமுத்திரங்கள் சந்திக்கும் பகுதியில் உருவாகிறது.
 
இந்து‍ - பசுபிக் பிராந்தியத்தில் தன் நலன்களைப் பேணும் வகையில் இவ்வொப்பந்தம் இருக்கும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
 
இதே நேரம் இராக்கிய அரசாங்கத்திற்கு சகல தரப்பினரையும் உள்ளடக்கும் விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையையும் அமெரிக்கா வளங்கியிருக்கிறது.
 
இந்த நிகழ்வுகளுக்கு சமாந்தரமாக இலங்கை அரசாங்கத்தின் மேல் போர்க்குற்ற விசாரணை, இராசதந்திர அழுத்தங்கள் என்பவற்றையும் அமெரிக்கா பிரயோகிப்பது எமக்கு சாதகமான நிலை ஒன்று உருவாகுவதாக எடுக்கலாம்.
 
இந்தப் பிராந்தியத்தை அமெரிக்கா கண்டும் காணாமல் இருக்கப் போவதில்லை என்பது உறுதி. சிறிது காலத்திற்கு முன்பு அமெரிக்காவை தொடர்ந்தும் முதன் நிலையில் பேண தாம் பாடுபடப் போவதாக ஒபாமா கூறியிருந்தார்.
 
அமெரிக்கா இலங்கையை இறுக்கும் பட்சத்தில் அதனை ராசதந்திர ரீதியில் காக்கும் வல்லமை இந்தியாவிடம் இல்லையென்பதை நாம் உணரவேண்டும்.
 
அதே நேரம் தமிழர் பிரச்சனையைத் தவிர இலங்கையின் மேல் அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவிடம் வேறு எதுவும் இல்லை என்பதையும் நாம் அறிய வெண்டும்.
 
சுப்புசாமி பா.ஜ.க. விடம் இலங்கை விவகாரத்தை சாணக்கியமாக தன்னால் கையாள முடியும் என்று சொல்லியிருக்க வாய்ப்பு உண்டு. மத்திய அரசின் அணுகுமுறையில் எமக்கு எதிரான மாற்றம் எதுவும் தெரியுமானால் அங்கே சுப்புசாமியின் கை இருக்கும். பல நாடுகளை இலங்கை சமாளிக்கும் வல்லமையப் பார்க்கும் போது சுப்புசாமியின் பருப்பு இந்தியாவில் அவியலாம், இலங்கையில் அவியாது.
 
கூடிக் கழித்துப் பார்த்தால் முன்பு போல் இந்திய அரசாங்கம் தமிழருக்கு எதிராகச் செயற்படும் என்று அஞ்சத் தேவையில்லை. இந்தியாவைப் பகைக்கும் விதமான போக்குகளைக் கைவிட்டு இந்தியாவின் நட்பை நாம் பலப்படுத்த வேண்டும். ( அமெரிக்கா தான் தீர்வைப் பெற்றுத் தரும் என்றாலும் கூட, இந்திய ஆதரவு இதற்கு அவசியம் ) 

இந்தியா குடுத்த அல்வாவை அப்போவே வாங்கியிருந்தால், இப்போ இருக்கிற "எனிமா" குடிச்ச நிலை வந்திருக்காது....

ஜெய் கிந்...பாரதமாதாகி ஜே.....

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....மண்ணின் மைந்தன் ஆளும் இந்தியா வளமாக வரட்டும்......எங்களுக்கும் ஏதேனும் நியாயமாக செய்யட்டும் என்று எதிர்பார்ப்போம்...

Are Independence Day Pledges Now Empty Rhetoric In India ?

| by N.S.Venkataraman

( August 12, 2014 , Chennai, Sri Lanka Guardian) As yet another Independence Day would be celebrated in India , on 15th August, the nation will go through the usual ritual of taking pledges and listening to the President over TV and Prime Minister addressing from Red fort. All these have become customary and official events without real participation of people or any visible enthusiasm from the common man.

While we hail the event of getting independence from the Britishers, now many people wonder as to whether it is a case of jumping from the frying pan to fire.

In the independent India at the present juncture, the matter haunting the people is the widespread corruption not only in the official machinery but practically in every aspect such as in commercial establishments, educational institutions, hospitals , judiciary and even in religious places. Common men are now inevitably bowing to such demand for bribery for any dealings with government or other agencies. He appears to have lost the confidence to fight against such corrupt conditions and has now virtually become synical , thinking that there is no hope for any improvement in the conditions in foreseeable future.

The grim fact is that the corruption has become the order of the day in India today and the corrupt persons are no more feeling ashamed or have any sense of fear. It is not correct to damn only the politicians for the corrupt practices , as corruption has spread its tentacles far and wide and deep in almost every aspect of life. The most distressing scenario is that people themselves have an active participation in the corrupt dealings as giver or taker and in most probably without any guilt complex.

In recent times, any political leadership that promise to eradicate corruption in the government and public life have received overwhelming support from the people. The immediate examples are the Aam Aadmi party and Mr. Modi’s stewardship of the recent election campaign for BJP. While Aam Aadmi party has convincingly failed to meet the expectations of the people due to its quixotic behaviour, Mr. Narendra Modi is yet to take effective steps , that would give confidence to the people that corruption free India would become a reality now or in the near future.

Many people are not protesting against corrupt conditions due to their helplessness and they are reconciling themselves to situation by thinking that corruption is only an additional cost for them. This is the most stupid way of viewing corruption in the country , as corruption inevitably weakens the fibre ad fabric of the country steadily just like termite.

The people who are most affected by corruption are those who cannot pay bribe money and cannot meet the exhorbitant demands of the increasingly greedy and fearless corrupt persons . Well qualified persons may be denied jobs in the government because they cannot afford to pay. Competent organisations may not be able to get the contracts because they do not have the wherewithal to find the money for paying bribes. In the process, efficiency and industrial and economic progress with equitable income and opportunities become the casualty .

In such conditions, one wonders whether independence day pledges and address to the nation by President and Prime Minister have become an empty rhetoric , leaving the country with no better conditions , with just one more Independence day passing by.

http://www.srilankaguardian.org/2014/08/are-independence-day-pledges-now-empty.html?m=1

நாங்கள் இந்தியாவிற்கும் நாலு கொடுத்து எங்கட தீர்வை எடுக்க நிற்கின்றம்  ஒட்டுக்குழுக்கள் வழக்கம் போல அதை குழப்ப நிக்கினம் . 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இந்தியாவிற்கும் நாலு கொடுத்து எங்கட தீர்வை எடுக்க நிற்கின்றம்  ஒட்டுக்குழுக்கள் வழக்கம் போல அதை குழப்ப நிக்கினம் . 

ஆண்மை குறைபாடு உள்ளதுகள் பிள்ளை பெறுங்கள் என்று நீங்கள்தான் முக்கி கொண்டு இருக்குறீங்கள் தவிர.
கைகால் வழங்காத மூளை கோளறு உடைய ஓட்டுணிகள் குழப்புங்கள் என்று யாரும் சொல்வதில்லை.
 
ஆண்மைகோளாறு  உள்ளதுகளை சேர்த்துதான் பிள்ளை பெற வேண்டும் என்று நீங்கள்தான் சொல்லிவருகிறீர்கள்.
 
நாம் சொல்வது ....
சிங்களவன் தீர்வை வைத்தாலும். இந்தியா என்ற கரிதேசம் அதை விடாது என்பதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.