Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை!

Featured Replies

இப்போ நடக்கும் இந்த கூத்து முழு வக்கிரமானது....அந்த நாட்டுக்கும் பொருந்தாத உடுப்புகளை அந்த பிள்ளைகளுக்கு போட்டு..ஒரு கோமாளித்தனமான...பார்ப்பவர்களை உணர்ச்சியூட்டி கோமாளியாக்குகிரார்கள்...கொஞ்சகாலம் ஒரு வலது குறைந்த பிள்ளையை வைத்து வேடிக்கை காட்டினார்கள்...... எல்லாம் Rupert Murdoch இன் விளையாட்டு......

 

எப்படி 1கக் தங்கம் இவர்களால் கொடுக்க முடியும்? எவ்வளவு மக்களின் தலைகளில் மிளகாய் அரைகிறார்கள்....

பாடுவது முழுக்க தரம்குறைந்த சினிமா பாட்டுகள்.....கேவலமான நிகழ்ச்சி இது.....

 

ஏன்தான் மற்ற சிறிய தமிழ் தொலைக்காட்சியூடகங்கள் சுத்தமான தமிழ் பாட்டுகளை சிறுவர்களை பாட சொல்லி குறைந்த பரிசில் களை வழங்கி தங்களது பார்வையாளர் வட்டத்தை உயர்த்த முயலவில்லை....இதை பார்க்கவும் ஊக்கப்படுத்தவும் ஒரு சிறு கூட்டம் இருக்கும்...சிறியளவில் ஆரம்பித்து பின் வளர்க்கலாம்...

  • Replies 53
  • Views 13.3k
  • Created
  • Last Reply

ஜேர்மனி RTL  தொலைக்காட்சி வருடாவருடம் DSDS  என்னும் பாடல் போட்டியை நடத்துவது வழக்கம். பொதுவாக ரீன் ஏஜ் பிள்ளைகளே பங்கு பற்றுவர். ஒரு முறை போட்டியில் பங்குபற்றி இறுதி தேர்வுக்கு தெரிவு செய்யபட்ட போட்டியாளர்  17 வயதாக  இருந்ததால் தொலைக்காட்சி நிர்வாகம் தனது நிகழ்ச்சி நேரத்தையே மாற்றவேண்டி இருந்தது. 18  வயதிற்கு குறைந்தவர்களை வைத்து எந்த மேடை Live  நிகழ்வும் இரவு 10 மணிக்கு பின்னர் நடத்த கூடாது என்ற சட்டத்தின் அடிப்படையில் பல மில்லியன் ஈரோ பெறுமதியான ஸ்பொன்சர் நிறுவனங்கள் இருந்தும் நிகழ்ச்சி நேரம் மாற்றபட்டு இரவு 10 மணிக்கு முன்பே இறுதி போட்டி நிறைவுக்கு வந்தது. இது போல தமிழக அரசும் சில சட்டங்களை உருவாக்கி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கட்டுபாடுகளை விதிப்பதன் மூலம் இதனை தடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் முன்பு ஏ.வி. ரமணன் வழங்கிய சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன். இந்த வணிகக்கூத்துகள் ஒன்றும் இருக்கவில்லை. :huh:

இந்த நேரத்தில் முன்பு ஏ.வி. ரமணன் வழங்கிய சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன். இந்த வணிகக்கூத்துகள் ஒன்றும் இருக்கவில்லை. :huh:

 

உண்மை, ஒரு அருமையான நிகழ்ச்சி. அதிலும் எனக்கு ஒரு பாடலை தொடங்கி இன்னொரு பாடலுடன் இசையில் கோர்த்து முடிப்பது மிகவும் பிடிக்கும் பகுதி.

 

இளையராஜாவால் பழிவாங்கப்பட்டவர்களில் ஏ.வி.ரமணனும் அவர் மனைவி உமா ரமணனும் அடங்குவர் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் முன்பு ஏ.வி. ரமணன் வழங்கிய சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன். இந்த வணிகக்கூத்துகள் ஒன்றும் இருக்கவில்லை. :huh:

 

அந்த நிகழ்ச்சியின், ஒளிப்பதிவு ஒன்றாவது இருந்தால்..... இணைத்து விடுங்களேன் இசை.

ஒப்பிட்டுப் பார்க்க.... இலகுவாக இருக்கும். :)

சூப்பர் சிங்கர் ,ஜோடி இரண்டும் இன்றுவரை தவறாது பார்த்து வருகின்றேன் .நேற்றும் Film fare விழா பார்த்தேன் .கமல் தொட்டு ரகுமான் வரை அங்கு இருந்தார்கள் .

இப்படியான நிகழ்சிகளில் பல விடயங்கள் எனக்கும் உடன்பாடில்லை ஆனால் வணிக மயமாக்கப்பட்ட உலகில் இவைகள்  எல்லாம் மிக சாதாரணம் .எமது கலாச்சாரத்தை நாம் கட்டிப்பிடித்துக்கொண்டுஇருக்கலாம் என்று கனவு காணவேண்டாம் கால மாற்றத்தில் அதுவும் மாறிக்கொண்டுதான் போகும் .

 

இதில் இருக்கும் அரசியல் என்று நான் சொன்னது -அங்கு நடக்கும் முறைகேடுகள் ,பிழையான தீர்ப்புகள்,மிக செயற்கையான எடுப்புகள் ,நடிப்புகள் தான் .

வக்கிரம் பற்றி -சிறுவர்களுக்கு அந்த வயதில் சொல்லி கொடுப்பதை ஒப்பிவிக்கத்தான் தெரியுமே ஒழிய அதில் இருக்கும் கருத்தோ அல்லது வக்கிரமா தெரியாது .வயது போனவர்களுக்கு தான் இவற்றை கேட்க வக்கிரம் ஆக இருக்கும் .போட்டியில் பங்கு பற்றும் பலருக்கு தமிழும் தெரியாது அதன் அர்த்தமும் தெரியாது .

 

"நேற்று ராத்திரி யம்மா " என்று பாடுவதற்கும் "பழமுதிர் சோலையிலே " என்று பாடுவதற்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது .உச்சரிப்பு ராகம் ,தாளம் தான் அவர்களுக்கு முக்கியம் .

 

எம் ஜி ஆரின் படங்கள் போல வக்கிரமான படங்கள் எதுவுமில்லை (நாளை நமதே ,நினைத்ததை முடிப்பவன் ,ரிக்சாகாரன் பார்த்தால் தெரியும் ) பட்ட பகலில் கனடாவில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகள் சொல்லாது எதுவும் இங்கு சொல்ல படவில்லை .

 

சிறுவர்கள் வஞ்சகம் இல்லாமல் மிக தெளிவாக இருக்கினார்கள் வயது போனவர்கள் தான் இப்பவும் ரொம்ப துள்ளிக்கொண்டு நிற்கின்றார்கள்  :(

எந்த தமிழ் தொலைக்காட்சி சனலும் பார்ப்பதில்லை என்பதால் சுப்பர் சிங் என்றால் என்ன அது எப்படி நடை மாறுகிறது என்பது கூட எனக்கு தெரியாது. மேற்படி கட்டுரையை வாசித்து அதிலுள்ள காணொலி அடிப்படையிலேயே கருத்து தெரிவித்தேன். தொலைக்காட்சி ஊடகங்கள் தொடர்பில் ஐரோப்பாவில் உள்ள சட்டங்களை இயற்றுவதன் மூலம் அல்லது இருக்கும் சட்டங்களை இறுக்கமாக அமுல்ப்படுத்துவதன் மூலம் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். இதற்கும். கலாச்சாரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிறுவர் சிறுமியர் பாலியல் அசைவுகளை வெளிப் படுத்தும். அங்க அசைவுகளை மேற்கொள்ளுவதை மேற்கத்தைய சமுகமும் விரும்புவதில்லை. அதை ஊக்குவிப்பதும். இல்லை. 18 வயதிற்குட்பட்டோர் டிஸ்கோ கிளப் செல்வதற்கு அனுமதி இல்லை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவால் பழிவாங்கப்பட்டவர்களில் ஏ.வி.ரமணனும் அவர் மனைவி உமா ரமணனும் அடங்குவர் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இப்படி நான் கேள்விப்படவில்லை. ஏ.வி. ரமணன் புகழ்பெற்ற பாடகராக இருந்ததில்லை. இளையராஜா ஜிகே வெங்கடேஷ் இடம் உதவியாளராக இருந்த சமயத்தில் எஸ் ஜானகி அவர்களுடன் அதிகமாக பணியாற்றியதால், பின்பு தனது இசையில் அதிக வாய்ப்புகளை வழங்கியதாக கேள்விப்பட்டுள்ளேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆக்கத்தில் கூறப்பட்டுள்ள அங்கலாய்ப்பு ஞாயமானதே.

 

தமிழ் நாட்டில் அல்ல முழு இந்தியாவிலும் கூட (ஏன் இலங்கையில் கூட) தாங்களாக சுயமாக இவ்வாறான நிகழ்வுகளை தயாரிப்பதில்லை.பெரும்பாலும் இவை எல்லாம் மேற்கத்தைய நாடுகளில் நடாத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்சிகளின் பிரதி விம்பங்களே.

 

அர்ஜுன் கூறியது போல் வணிக மயமாக்கப்பட்ட உலகில் இவைகள் எல்லாம் சாதாரணம் தான்.
கூடிய விரைவில் இவை எல்லாம் எங்கள் ஊரிலும் (தாயகத்திலும்) அரங்கேறும்.

 

எங்கள் பிள்ளைகள் பார்க்கும், கேட்கும் ஜஸ்டின் பீபர், சலீனா கோமாஸ், கோடி சிம்சன், விலோ ஸ்மித் (11 வயது), மைலி சைரஸ் ... இன்றைய புகழ் நட்சத்திரங்கள் இப்படி தான் வந்தவர்கள். 

எமக்கு விருப்பமோ, விருப்பம் இல்லையோ, பார்த்தால் என்ன தவிர்த்தால் என்ன ... இதுவும் கடந்து போகும்.

 

ஊரில அவனவன் கைத்தொலைபேசியில் பப்ளிக்கில் (p)பொனோக்ரப்ஹி காமலீலைகள் பார்த்துக்கொண்டு திரியிறான் ... அதுக்கு தான் என்ன தான் செய்யலாம்.

 

- குப்பையிலும் குண்டுமணி...சேற்றிலும் செந்தாமரை... இப்படி இந்த பிள்ளைகளில் இருந்து நாளைய நட்சத்திரம் உருவாகத்தான் செய்கிறார்கள். (பாடகர்... கார்த்திக்)

 

- நானும் முன்னரை போல பெரிதாக இந்த நிகழ்வுகளை பார்ப்பதில்லை (எல்லோரும் கூறிய அதே காரணங்கள் தான்)

- நமக்கு எப்படி இவை இப்போது திகட்டி பார்க்காமல் விடுகிறோமோ அதே போல் அங்கும் நடக்கும்)

 

பின்குறிப்பு: சரி இவை தான் எமக்கு பிடிக்க வில்லை ...உள்ளூர் கலைஞர்கள் தயாரித்து வழங்கும் "வணிக மயம் ஆக்கப்படாத"  நிகழ்சிகளும் பிடிக்குது இல்லையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை பொய் எப்பிடியிருந்தாலும் சரி.....குழந்தையள் எப்பிடி நாசமாய்ப்போனாலும் சரி.......ஊரோடை ஒத்துப்போகோணும் எண்டு சொல்ல வரீனம்.

சூப்பர் சிங்கர் ,ஜோடி இரண்டும் இன்றுவரை தவறாது பார்த்து வருகின்றேன் .நேற்றும் Film fare விழா பார்த்தேன் .கமல் தொட்டு ரகுமான் வரை அங்கு இருந்தார்கள் .

இப்படியான நிகழ்சிகளில் பல விடயங்கள் எனக்கும் உடன்பாடில்லை ஆனால் வணிக மயமாக்கப்பட்ட உலகில் இவைகள்  எல்லாம் மிக சாதாரணம் .எமது கலாச்சாரத்தை நாம் கட்டிப்பிடித்துக்கொண்டுஇருக்கலாம் என்று கனவு காணவேண்டாம் கால மாற்றத்தில் அதுவும் மாறிக்கொண்டுதான் போகும் .

 

இதில் இருக்கும் அரசியல் என்று நான் சொன்னது -அங்கு நடக்கும் முறைகேடுகள் ,பிழையான தீர்ப்புகள்,மிக செயற்கையான எடுப்புகள் ,நடிப்புகள் தான் .

வக்கிரம் பற்றி -சிறுவர்களுக்கு அந்த வயதில் சொல்லி கொடுப்பதை ஒப்பிவிக்கத்தான் தெரியுமே ஒழிய அதில் இருக்கும் கருத்தோ அல்லது வக்கிரமா தெரியாது .வயது போனவர்களுக்கு தான் இவற்றை கேட்க வக்கிரம் ஆக இருக்கும் .போட்டியில் பங்கு பற்றும் பலருக்கு தமிழும் தெரியாது அதன் அர்த்தமும் தெரியாது .

 

"நேற்று ராத்திரி யம்மா " என்று பாடுவதற்கும் "பழமுதிர் சோலையிலே " என்று பாடுவதற்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது .உச்சரிப்பு ராகம் ,தாளம் தான் அவர்களுக்கு முக்கியம் .

 

எம் ஜி ஆரின் படங்கள் போல வக்கிரமான படங்கள் எதுவுமில்லை (நாளை நமதே ,நினைத்ததை முடிப்பவன் ,ரிக்சாகாரன் பார்த்தால் தெரியும் ) பட்ட பகலில் கனடாவில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகள் சொல்லாது எதுவும் இங்கு சொல்ல படவில்லை .

 

சிறுவர்கள் வஞ்சகம் இல்லாமல் மிக தெளிவாக இருக்கினார்கள் வயது போனவர்கள் தான் இப்பவும் ரொம்ப துள்ளிக்கொண்டு நிற்கின்றார்கள்  :(

 

நீங்கள் சொன்னது சரி..பாதிபேருக்கு மேல் தமிழே தெரியாது...பிறகு எப்படி தமிழ் பாட்டு நிகழ்ச்சி உணர்வு பூர்வமாக இருக்கும்.....இது கண்கட்டு வித்தை தானே.... ஏமாற்றுகிறார்கள் தானே???? அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பான்????? அதை நாம் புறக்கணிக்க வேண்டும் தானே....மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்றால் எதிர் குரல் கோட்டுக்க தானே வேண்டும்??

 

குழந்தைகளை குழந்தைகள் வகிரமமாக சீரழிப்பதில்லை...வயது வந்த அரக்கர்கள் தான் செய்வது....இந்த நிகழ்ச்சியும் சிறிய குழந்தைகளை வைத்து அப்படி பட்ட அரக்கர்களுக்கு/அவர்களின் எண்ணங்களுக்கு தீனியாக்குகிறார்கள் ...

 

கொஞ்ச காலத்துக்கு முன் அமெரிக்காவிலும் சிறு பெண் பிள்ளைகளுக்கு பெரியவர்கள் மாதிரி உடுப்பு உடுத்தி நிகழ்சிகள் (சரியான பெயரை மறந்து விட்டேன்) செய்து பின் அது மக்களின் எதிர்ப்பால் காணாமல் போனது போல்...இதுவும் காணாமல் போகவேண்டும் என்பதே எனது விருப்பம்...

நான் சொல்லுவது..நான் அவதானித்த வகையில்

-பிள்ளை களுக்கு ஒவ்வாத உடுப்புகள் போட விஜய் டிவி பணிக்கிறது..

-பார்வையாளர்களை வீணாக உணர்சியூட்டுகிரார்கள்...

-அதில் பங்கேற்கிறவர்கள் உண்மையான உணர்சிகளை காட்டுவதில்லை..அவர்களின் செயல் பாடுகள் முழுக்க நடிப்பாக தெரிகிறது...

-வறுமையானவர்களை வைத்து விளையாட்டு காட்டுகிறார்கள்...

 

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

நுகர்வுக் கலாச்சாரம் அதிகரித்துச் செல்லும்போது சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவது இயல்பு. நிலைமை இவ்வாறு இருக்கும்போது சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கங்களை நடத்துவதால் பலன் ஏதும் இல்லை என்று வாதிடுவதால் பலனில்லை.

கயிறு இழுக்கும் போட்டி போல இரு பக்கமும் இழுத்தால்தான் ஒரு சமநிலை கிடைக்க வழி உண்டாகும். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் முன்பு இந்த நிகழ்ச்சியை விரும்பி பாத்தேன் யாழிலும் இணைத்தும் இருந்தேன் இப்போது பார்ப்பதை நிறுத்தி விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
குப்பையிலும் குண்டுமணி...சேற்றிலும் செந்தாமரை... இப்படி இந்த பிள்ளைகளில் இருந்து நாளைய நட்சத்திரம் உருவாகத்தான் செய்கிறார்கள். (பாடகர்... கார்த்திக்)

 

 

 

 
கார்த்திக், இசை மேலே கூறிய ஏ.வி ரமணனின் சப்தஸ்வரங்கள் மூலம் உள்வாங்கப்பட்டவர்.

கொஞ்சகாலம் ஒரு வலது குறைந்த பிள்ளையை வைத்து வேடிக்கை காட்டினார்கள்...... எல்லாம்

என்னபா எழுதறது எண்டால் எதுவும் எழுதிவியளோ??

வாய் பேச முடியாத பிள்ளயா பாடிச்சு?

பார்வை திறன் இல்லாத பிள்ள ரொம்ப திறமாதானே பாடிச்சு?

பிள்ளகளிண்ட பாடலை கேப்பீங்களா இல்லை உடம்பை உற்று பார்பீகளா?

என்னபா இங்க பலரும் கேவலமாய் எழுதிற கருத்துகளை விடவும் கேவலமாயா பாட்டு போட்டி போகுது??

குருக்கள் கும்பல் குசு விடலாம். சரிதான்பின்ன.

  • 4 weeks later...

குண்டன்: பிள்ளை பாடினதை நான் பிழை சொல்லவில்லை...அந்த பிள்ளையை Star TV பாவித்து தங்களுக்கும் தங்களது நிகழ்ச்சிக்கும் ஆட்களை சேர்கிறார்கள்...

 

Star TV அந்த பிள்ளையையும் அது வளரும் மடத்தையும் பற்றி உண்மையிலேயே கரிசனையானவர்கள் என்றால் அந்த மடத்தை நடத்துவதற்கான செலவை ஒரு பத்து வருடத்துக்கு (அல்லது ஒருவருடத்துக்கு தானும்) ஏற்கிறதா என்று அறிந்து சொல்லுங்கள் ..நான் எனது எண்ணத்தை திருத்துகிறேன்....

 

  • 2 months later...
  • தொடங்கியவர்

சூறையாடப்படும் குழந்தை பருவம்!

 

Tamil_News_large_1120517.jpg

 

'ரியாலிட்டி ஷோ'வில் பங்கேற்கும் குழந்தை களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூறும்,
குழந்தைகள் நல மருத்துவர் யமுனா: கலை என்பது இயல்பாக வர வேண்டும்; அது தான் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும். ஆனால், இப்போது கட்டாயப்படுத்தி வர வைக்கின்றனர். பரிசுக்கு ஆசைப்படும் பெற்றோர் தான், பிள்ளைகளை ரியாலிட்டி ஷோவுக்கு தயார்படுத்துகின்றனர்.
 
'நாங்க உனக்கு பொம்மை, சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அதேபோல, நீ நல்ல பாடி, ஆடி பரிசு அறிவிச்சிருக்கிற அந்த வீட்டை வாங்கிக் கொடுக்கணும்' என்பது மாதிரி துாண்டி
விடுவதை, ஆரோக்கிய மான அணுகுமுறையாக எப்படி எடுக்க முடியும்?
 
எந்த நேரமும் பிராக்டிஸ், பிராக்டிஸ் என்று அதே நினைப்பாக இருப்பதால், ரியாலிட்டி ஷோக்களுக்கு தயாராகிற பிள்ளைகள் சரியாக சாப்பிடுவது, துாங்குவது இல்லை; விளையாடுவதும் கிடையாது.
மேலும், பள்ளியில் இந்தப் பிள்ளைகளை புகழ் பெற்றவர்களாக பார்க்கின்றனர். நாம் ஒரு பிரபலம் என்று அந்தப் பிள்ளைகளுக்கு தெரிய வரும்போது, அதை பக்குவமாக கையாள முடியாமல் தம்மை பெரிய ஆளாக நினைத்து கொள்ளும் மனோபாவம் வந்துவிடும். அது, மற்ற பிள்ளைகளிடம் கூட இயல்பாக கலந்து பழக முடியாமல் செய்யலாம்.
 
அடிக்கடி லீவ் போட வேண்டி வருவதால், பரீட்சை நேரங்களில் சரியாக படிக்காமல், மதிப்பெண் வாங்க முடியாது. ஒரு கட்டத்தில், 'நாம் பாடினால் பணம், பரிசு புகழெல்லாம் கிடைக்குது. படிச்சா என்ன கிடைக்கும்?' என, தப்பாக யோசிக்க ஆரம்பிக்கலாம்.
 
வெற்றியின் மமதையை மனதில் துாக்கி வைக்கிறதும், தோல்வியடையறது பெருங்குற்றம் என்கிற மனோபாவத்தை வளர்க்குறதையும் தான், இந்த ரியாலிட்டி ஷோக்கள் செய்கின்றன. அதனால் பங்கேற்கும் பிள்ளைகள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவர்.
 
அதுமட்டுமின்றி, போட்டிகளில் தோல்வியடைந்த பிள்ளைகள், 'நான் ஜெயிச்சுடுவேன்னு நினைச்சேன். தோத்துட்டேனே... இப்போ எப்படி மத்த பசங்க முகத்துல முழிப்பேன். கலாய்ப்பாங்களே...'ன்னு புலம்பியபடி, பள்ளிக்கு போவதிலும் தயக்கம் காட்டுவர்.
 
அந்தந்தப் பருவத்தில் தான், குறிப்பிட்ட விஷயங்களை அனுபவிக்க முடியும். அதிலேயும் குழந்தைப் பருவத்தில் மட்டுமே தான் அனுபவிக்க முடியும்ன்னு எவ்வளவோ உள்ளது. அந்த உன்னதமான விஷயங்கள் எதையுமே அனுபவிக்க முடியாமல், இது மாதிரிப் பிள்ளைகள் வளர்கின்றனர். அதாவது, அவர்களுக்குத் தெரியாமல் அவங்களது குழந்தைப் பருவம் முற்றிலுமாக சூறையாடப்படுகிறது.
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சூறையாடப்படும் குழந்தை பருவம்!

 

Tamil_News_large_1120517.jpg

 

 

 

 

இணைப்பிறகு நன்றி ஆதவன்.

 

மாணவர்களுக்கு கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் அவ்வப்போது இருக்கலாமே தவிர.... ஒரு எல்லைக்கு முதல் அதுவே பாடமாக இருக்கக்கூடாது.

இது ( மாபெரும் அல்ல ) மோசமான பாலியல் வன்முறை நண்பர்களே .நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் பாடும்போது அதை ரசிக்காமல் நடுவர்களை எட்டி எட்டிப் பார்க்கும் பெற்றோரைப் பார்த்தால் வாழ்க்கை வெறுக்கும்.. :unsure:

இப்படித்தான் எல்லாம் இருக்க வேண்டும் என்று விதிமுறை விதிக்க நாங்கள் யார் ?

இப்படியாவது சந்தோசமாக இருக்கின்றார்களே என்று சந்தோசமாக பார்த்துவிட்டு போக வேண்டியத்துதான் .

 

நியாயம் ,நீதி ,நல்லது, கெட்டது ,உண்மை, பொய் இப்படி எல்லாம் இருக்கா என்ன ?

நேற்று " ஜீவா" படம் பார்க்கும் போது யாழ் இந்துவில் தமது பந்தங்களை டீமில் தெரிவு செய்தவர்கள் வந்து போனார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
 
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தற்போது, முதல் 7 போட்டியாளர்களில் ஒருவர். தனது கடும் முயற்சியாலும், திறமையாலும் படிப்படியாக முன்னேறிவருகிறார். நடுவர்களால் பல முறை பாராட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். மேலும் தமிழகத்தின் முன்னணி பாடகர்கள், இசையமைப்பாளர்கள் பலரும் பாராட்டியும், ஆசிவழங்கியும் வருகிறார்கள்.
கனடாவில் வாழும் ஈழத்தமிழ் சிறுமியாகிய ஜெஸிக்காவின் திறமை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்தில் சிறந்ததொரு பின்னணிப்பாடகியாக மாறும் சகல தகுதிகளும் ஜெஸிக்காவிடம் நிறைந்துள்ளது.
ஜெஸிக்காவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். :wub:

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

"ஓர் ஈழப்பெண் மகள் Jessica விஜய் டிவி இல். Jessica தந்தை Jude Rajasingam ஹாட்லி இல் எங்கள் வகுப்பு நண்பர் என்றறிந்ததில் மனம் மிகவும் மகிழ்கிறது"

"எம் ( Point Pedro ) மண்ணின் மைந்தனின் மகளின் திறமையில் குறை காணும் மனோ, சித்திரா போன்ற நடுவர்கள் மலையால தெலுங்கு தாய் மொழி குழந்தைகளின் தமிழ் வார்த்தைப் பிழைகளை கண்டு கொள்வதில்லை. இன்றைய சுற்றில் Barath Haripriya Pravasthi ஆகியோருக்கு மனோவின் shower, திறமையாக "பார்த்த ஞாபகம் இல்லையோ" , பாடிய Jasicca வுக்கு Shower இல்லை. இது Vijey TV யின் அரசியல் நாடகம். வாழ்த்துக்கள் Jasicca . வாழ்க உன் குரல் . வளரட்டும் உன் புகழ் பார் எங்கும்....."

Facebook comments

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இம்முறை இப்போட்டியில் யார் வெல்லுவார்கள்

  • 1 year later...
  • தொடங்கியவர்

எல்லை மீறுகிறது குழந்தைகள் நிகழ்ச்சி- குவிந்த புகார்கள்

குழந்தைகள் நிகழ்ச்சி முதலில் ஏதோ கேம் ஷோ போல் தொடங்கியது. பிறகு ஆடல், பாடல் என வந்து பெரியவர்கள் கலந்துக்கொள்ளும் ரியாலிட்டி ஷோக்களாக மாறிவிட்டது.

இதில் வயதிற்கு மீறி இவர்கள் செய்யும் மற்றும் பேசுவது பலருக்கும் மன வருத்ததை தருகிறது, தொகுப்பாளார், உங்கள் அம்மாவிற்கு விஜய், அஜித் இவர்களில் யார் ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்டுள்ளனர்.

அதற்கு ஒரு குழந்தை அஜித் என்று பதில் சொல்ல அனைவரும் கைத்தட்டி ரசிக்கிறார்கள், இவை ரசிக்க வேண்டிய விஷயமில்லை.

அதேபோல் எலிமினேஷன் என்பதில் ஒருவரை நீக்குவதில் மனதளவில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகின்றது. டெல்லியில் இப்படி ஒரு நிகழ்ச்சியில் தான் ஒரு குழந்தை தன் குரலையே இழந்தது.

இதுபோல் TRP-க்காக குழந்தைகளை வைத்து அதிமேதாவிகள் போல் நிகழ்ச்சி நடத்துவதை உடனே நிறுத்தங்கள் என மக்களிடமிருந்து புகார்கள் குவிந்து வருகின்றதாம்.

http://www.cineulagam.com/tv/06/132785

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.