Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லைக்காவுக்கெதிரான புலம்பெயர்மக்களின் போராட்டம் ஆரம்பம்!

Featured Replies

மகிந்த ராஜபக்சவின் பங்காளி நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் தற்போது தமிழர்களின் தாயகத்திலும் தமிழகத்திலும் எதிர்ப்புக்களை சம்பாதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பாவிலும் தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளது.

lyca_poraddam_1.png

புலம்பெயர் தேசங்களில் லைக்கா மொபைல் தொடர்பாக தமிழர் அமைப்புக்கள் மௌனமாக இருக்கும் இவ்வேளையில் இவ்வெதிர்ப்பலைகள் ஐரோப்பாவில் பரவலாக ஆரம்பித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பிரான்சில் தமிழர் வர்த்தக மையங்களிலும் ஏனைய பிரதேசங்களில் பரவலாகவும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் மீதான எதிர்ப்புக்கள் அவர்கள் ஒட்டும் சுவரொட்டிகள் மீது காட்டப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

lyca_poraddam_2.png

நாளாந்தம் பரவலாக காணப்படும் லைக்கா விளம்பரங்கள் பதாதைகள் இனந்தெரியாத நபர்களால் ஒட்ட ஒட்ட கிழிக்கப்படுவதாகவும் இதனை இனந்தெரியாத நபர்கள் மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.http://www.pathivu.com/news/33233/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனந்தொியாதவா்களாலா? இல்லை Lebara ஆதரவாளா்களாலா? 
லைக்கா...லெபரா.. போட்டியால் சில இணையங்கள் வளா்ந்துவிட்ட தமிழகத்தில் பல அரசியல் வாதிகள் பணக்காரா் ஆகிட்டாங்க...! 

  • கருத்துக்கள உறவுகள்

லைக்காவும் லிபராவும் பெயர்கள் வேறு வேறு இருவரின் நோக்கமும் ஒன்றுதான் 

மக்கள் இந்த நிறுவனத்திற்கு எதிராகப் போராட வேண்டுமாயின் அதனை உரிய காரணங்களைக் கூறிப் பகிரங்கமாகவே போராடலாம். தரக்குறைவான இச்செயல் மக்கள் போராட்டம் என்ற பெயரில் இரு வியாபார நிறுவனங்களின் போட்டியாக அமையக் கூடாது. செய்தி நிறுவனங்களும் இதற்கு உடந்தையாக இல்லாமல் உறுதிப்படுத்தப்பட செய்திகளை வெளியிட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வியாபாரத்துக்காக அரசியலை இழுக்கக்கூடாது.
வெளியிலை இருக்கிற எங்கடை முக்காவாசியளும் லைக்கா மோபிளோடைதானே திரியுதுகள்.

அது மட்டும் அல்ல தமிழர்களின் வியாபாரத்தை நம்பி நடக்கும் நிறுவனம் அல்ல, இந்தியர், பாகிஸ்த்தானியர், கிழக்கு ஜரோப்பியர் என இவர்களது வாடிக்கையாளர் வட்டம் பெரிது,அதனால் தமிழரது வருமானம் என்பது அவர்களுக்கு பெருங்கடலில் சிறு துளி மட்டுமே

தொழில் நுட்பத்துக்கு அடுத்து வரும் தொழில் நுட்பம் ஆப்படிச்சுடும் பைபர் கேபிள்களின் அதிகரிப்பினால் யுனிட் விலை குறைய லைக்கும் லிபராவும் ஆட்சி அமைப்பு செய்தன.

14 நாடுகளுக்கு ரோமிங் இலவசம் என வீட்டின் அடிப்படைலை பக்கமா வந்து குந்தியிட்டான்  3ஜிநெட்வேர்க்.  அதில் இலங்ஙையும் ஒன்று பக்கத்திலைதான் இந்தியாவும் பாகிஸ்தானும் இவ்விரு நாட்டுக்கும் ரோமிங் இலவசம் என்றால் லையையும் பிராவையும் தேடவேண்டிவரும் பார்க்கலாம் இப்புதிய நெருக்கடியை தமிழர் நிறுவனங்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

லைக்காவுக்கெதிரான புலம்பெயர்மக்களின் போராட்டம் ஆரம்பம்!

இன்று  லா  சப்பல் போயிருந்தபோது

சில  விளம்பரங்கள் கிழிக்கப்பட்டிருப்பதை பார்த்தேன்

(மக்கள் கடை  உட்பட)

இங்கு வந்து பார்த்தால் அந்த படங்கள் இங்கும் கிடக்கின்றன...

நான் சீமானுக்குத்தான் நன்றி  சொல்வேன்

அவர் தான் இந்த போராட்டங்களது

களங்களை  தெரிவு செய்து அறிவித்தார்  என்றவகையில்.. :D 

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி படத்திற்கான தீர்வு!

-நடக்காது என்று தெரிந்தும், நடந்தால் நல்லதுதானே என்று எழுதிவைக்கிறேன்.....

(சுபாஷ்கரனின் நண்பர்கள் யாராவது இதை அவர் காதுக்கு கொண்டு செல்லுங்கப்பா)

இலங்கை அரசுக்கும் லைக்காவுக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் எவ்வளவுதான் "கத்தி" "கத்தி" சொன்னாலும் யாரும் நம்பப்போவதில்லை...... ஏன்னா உண்மை அதுதானே? ( இலங்கை Telicom colombo, sri lanka ஆதரவில்லாமல் நீங்கள் வண்டி ஓட்ட முடியாது ) எனவே இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே போகும்.

எனவே, கத்தி படத்தில் வரும் முழுமையான ஆதாயத்தையும் வன்னியில் பாதிக்கப்பட்ட, இன்னும் கஷ்டப்படும் மக்களுக்கு சென்று சேரக்கூடிய வகையில் ஒரு அறக்கட்டளை அமைத்து, இப்படத்தை எதிர்ப்பவர்களுக்கே அதை கொண்டு சேர்க்கும் பொறுப்பை கொடுத்து விடுங்கள். ( அரசால் ஏற்படும் பிரச்சனைகளையும் உங்களால் சமாளிக்க முடியும் ) CHOGM Sri Lanka க்கு கொட்டி கொடுத்ததை விட நீங்கள் இப்படத்துக்கு செலவு செய்திருக்க மாட்டீர்கள், இதை விட்டுக்கொடுப்பதால் நீங்கள் நஷ்டமடையப்போவதும் இல்லை !!!!

படமும் பிரச்சனையின்றி வெளிவரும், பாதிக்கப்பட்ட மக்களும் நன்மையடைவார்கள்....... இப்படி நடந்தால் எல்லோர்க்கும் நல்லது! நடக்குமா????

Fb

சுபாஷ்கரனை  அறிவேன் சுண்டல்

ரொம்ப  தடிப்பு பிடித்த காய்

ஒன்றை  செய்து முடிக்கவேண்டுமாயின்

கோடி போனாலும் கவலைப்படமாட்டார்

இழந்ததை

ஏதாவது வழியில் (என்னவழி என்றாலும்)  எடுத்தே ஆவார்

எப்பொழுதும்

தலை கீழாக சிந்திப்பவர்

இவருடன்  நரி  விளையாட்டு  மட்டுமே சரிவரும்

அதுவும் தெரிந்தால் போச்சு.  :(

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும் சில இடங்களில் பலமான காற்றுக்கு லைக்கா போட்டுக்கள் உடைந்தும்... கழன்றும் விழுந்துள்ளன. பதிவு இணையத்தளம்.. உடனடியா இதனை காற்றும் லைக்காவை புறக்கணிப்பதாக செய்தி வெளியிட்டால்.. உலகம் பூரா அது பரவ வாய்ப்புள்ளது. :lol::D  சில இடங்களில் குடிகாரர்கள் பியர் போத்தலால் எறிந்தும் உடைத்திருக்கிறார்கள். லைக்காவை குடிகாரர்கள் புறக்கணிக்கிறார்கள் என்றும் செய்தி போட்டால்.. குடிமக்களும்.. ஒத்துழைப்பார்கள். :lol:

லைக்காவை புறக்கணிக்கனுன்னா.. அவங்க மொபைல்ல புறக்கணிங்க.. அவங்களட்ட எயார் ரிக்கட் போடுறதை நிறுத்துங்க.. அவங்க விளம்பரங்களை.. விளம்பரப் பலகைகளை.. ஸ்ரிக்கர்களை வர்த்தக ஸ்தாபனங்கள்.. கடைகள்.. வாகனங்களில் இருந்து அகற்றுங்கள். அவங்களட்ட ஸ்பென்சர் பெற்று நிகழ்வுகள் நடத்துவதை (குறிப்பாக கோவில்கள்) நிறுத்துங்கள்.

லைக்கா நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வேலையாட்களை வைத்திருப்பது தொடர்பில்.. ஆதாரத்துடன் கூடிய புகார்களை அனுப்புங்கள். லைக்கா மொபைல் விளம்பரம் செய்தபடிக்கு சேவை நேரத்தை வழங்காதவிடத்து வாடிக்கையாளர்கள் அரசுகளுக்கு முறைப்பாடுகளைக் கையளியுங்கள். இப்படி எத்தனையோ செய்யலாம். ஆனால்..???????!

அது எதுவும்... செய்யமாட்டாம். சீமானும் கத்தியும் தான் இப்ப பதிவுக்கும் சிலருக்கும் பிரச்சனை..???!

இது அவங்கட பழைய விளம்பரங்கள் சிலவற்றை கிழித்து புதிசை ஒட்ட வழிசெய்வது எல்லாம் லைக்காவுக்கு எதிரான போராட்டமா..??! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.