Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம்

வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014 02:15
index(12).jpeg-எம்.றொசாந்த் 

கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார்.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு இந்திய அரசாங்கம் பல உதவிகளைச் செய்துள்ளது. இந்தக் கைத்தொழில்பேட்டை புனரமைப்பு செய்யப்பட்டதால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இங்கு முதலீடுகளைச் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இக்கைத்தொழில்பேட்டை உதவும். இந்த கைத்தொழிற்பேட்டையால் உள்ளூர் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கின்றோம். 

இந்தக் கைத்தொழிற்பேட்டை முழுமையாக பூர்த்தி அடைந்ததும், 2 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புக்களும் மறைமுகமாக 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.

வடமாகாணத்திற்கான புகையிரத சேவைக்கான புனரமைப்பு வேலைகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அப்பணிகள் முடிவடைந்து அடுத்த மாதமளவில் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதனூடாகவும் இக்கைத்தொழில் பேட்டை விருத்தி அடையும். 

இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் மிகப்பாரிய செயற்றிட்டங்களை இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது.

துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்புக்கான அடிக்கல் புதன்கிழமை (27) நாட்டப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் 145 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்தப்புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும். 

யாழ்ப்பாணத்தில் மிகச்சிறந்த முறையிலே மிகப்பெரிய கலாச்சார மண்டபம் ஒன்று இந்திய உதவித்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இதற்கு 1.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அதன் பணிகள் பூர்த்தி அடையும்.

நாங்கள் ஒரு காலத்தை எதிர்பார்க்கின்றோம். அதாவது, கதிர்காமத்தில் ஒரு புகையிரத டிக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு இந்த நாட்டுக்குள் உள்ள அனைத்து இடங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் சில முக்கிய நகரங்களுக்கு பயணிப்பதற்கான காலம் உதயம் ஆகும் என்பதாகும்.

இந்தியாவின் புதிய அரசாங்கமான பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கமும் தொடர்ந்து இலங்கைக்கு உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது என்பதையும் மகிழ்வுடன் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/124226-2014-08-27-11-46-59.html
  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் ஒரு காலத்தை எதிர்பார்க்கின்றோம். அதாவது, கதிர்காமத்தில் ஒரு புகையிரத டிக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு இந்த நாட்டுக்குள் உள்ள அனைத்து இடங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் சில முக்கிய நகரங்களுக்கு பயணிப்பதற்கான காலம் உதயம் ஆகும் என்பதாகும்.
ஆகா.... ஆகா..... நீங்கள் எதிர்பார்த்த காலம் வந்துவிட்டது...இனி என்ன?கதிர்காமத்தில் டிக்கட் எடுத்தால் விசா இல்லாமல் இமயமலைக்கு போகலாம் என்று சொல்லுறீயள் அத்துடன்.....இந்திய நாணயம் இருந்தால் போதும் என்றும் சொல்லவாறீயள்.........வென்றிட்டீங்களடா
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் டிக்கெட் எடுத்து புரசில்சுக்கும் பரிசுக்கும் போவதை போல்.

நல்ல திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் டிக்கெட் எடுத்து புரசில்சுக்கும் பரிசுக்கும் போவதை போல்.

நல்ல திட்டம்.

சிங்களவர்கள் ஒமாமே?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் ஒமாமே?

ஏன் அவையைக்கேட்கணும்....???

இந்தியா சொன்னால்  சரிதானே... :(

  • கருத்துக்கள உறவுகள்

Cost benefit ratio 1 இலும் அதிகமாக இருக்கிறதா...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவையைக்கேட்கணும்....???

இந்தியா சொன்னால்  சரிதானே... :(

இந்தியா சர்வதிகாரிகள் ஆட்சி செய்யிற நாடே....காந்திய நாடு சிங்களவ்ரின் இறையாண்மையை மதிக்கும்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சர்வதிகாரிகள் ஆட்சி செய்யிற நாடே....காந்திய நாடு சிங்களவ்ரின் இறையாண்மையை மதிக்கும்.... :D

அது சரி

கதிர்காமத்திலிருந்து புகையிரதம் எங்க   போகுதாம்?

எனக்கு சிங்களவனின் அரசியல் நல்லா விளங்கும்...

புகையிரதம் போகும் இடம்

கச்சைதீவு கிடைத்ததுபோல்  விரைவில் சிங்களவனுக்கு இனாமாகும்... :(

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி

கதிர்காமத்திலிருந்து புகையிரதம் எங்க   போகுதாம்?

எனக்கு சிங்களவனின் அரசியல் நல்லா விளங்கும்...

புகையிரதம் போகும் இடம்

கச்சைதீவு கிடைத்ததுபோல்  விரைவில் சிங்களவனுக்கு இனாமாகும்... :(

என்ன சிங்ககொடி செங்கோட்டையில் பறக்குமோ......

இந்தியாவிலிருந்து எங்கேயோ இருக்கிற தாய்லாந்துக்கு train விட போறாங்க (முதலே ஓடியிமிருக்கு)..பக்கத்திலே உள்ள ceylon க்கு விட இயலாதா.......ஹாய்..ஜாலி...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து எங்கேயோ இருக்கிற தாய்லாந்துக்கு train விட போறாங்க (முதலே ஓடியிமிருக்கு)..பக்கத்திலே உள்ள ceylon க்கு விட இயலாதா.......ஹாய்..ஜாலி...

வாழ்த்துக்கள்

ஒரு அடிமையால

இன்னொரு அடிமைக்கு இதைத்தான்  சொல்லமுடியும்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து எங்கேயோ இருக்கிற தாய்லாந்துக்கு train விட போறாங்க (முதலே ஓடியிமிருக்கு)..பக்கத்திலே உள்ள ceylon க்கு விட இயலாதா.......ஹாய்..ஜாலி...

இந்தியா - தாய்லாந்து train. Service.... ஏதாவது proof இருக்கிறதா....Trans Asian train was a concept...only

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம்

வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014 02:15

கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதை வடகத்தியான் விரும்பவில்லை போலும்..

வடக்கத்தியான்கள் ஒன்று சேர தமிழ் நாட்டின் மீதா பயணம்?

இன்னும் என்னென்ன கருமங்கள் நடக்கப் போகுதோ! :o

தலையெழுத்து..!! :wub:

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமத்தில இருந்து இந்தியாவுக்கு என்ன பறக்கும் ரயிலா விடப்போறியள்.

முதலில தமிழ்நாட்டுக்கு ஒழுங்கா.. ரெயில்வே பஜட்டில ஒதுக்கீடு செய்யிற வழியைப் பாருங்கைய்யா. தமிழக அரசு.. இம்முறை மத்திய பஜட்டில்.. தமிழக ரெயில்வேக்கு போதிய ஒதுக்கீடு இல்லை என்று அழுகுது. அதைக் கவனிக்க வழில்ல... கதிர்காமத்தில இருந்து குஜராத்துக்கு ரயில் விடுற கனவு காண்கிறார்.. இந்திய துணைத்தூதுவர். ரெம்பப் பெரிய கனவு ஐயா. இந்தியா வல்லரசாகும் வரை இது சாத்தியமில்லை. அங்கால பாகிஸ்தான்.. விமானப்படை தளபதி வந்திருக்கிறார் அதனைக் கவனியுங்க.

ஏலவே பாகிஸ்தான்.. இந்தியாவின் தென்மண்டலம் வரை பறந்து தாக்கவல்ல ஏவுகணைகளை பரிசோதிச்சிக்கிட்டு இருக்காம். அதனையும் கவனிங்க..!

கூடச் சீனா வேற..! :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய அபிவிருத்தி வங்கி இதை பற்றி எப்பவோ யோசிக்க தொடங்கியாச்சு.

http://www.adbi.org/files/2013.05.05.book.connecting.south.asia.southeast.asia.interim.report.pdf

தலைமன்னர்-ராமேஸ்வரம் இடையே பறக்கும் ரயில் விடுவது ஒன்றும் பெரிய விசயமில்லை.

இதற்கு சமாந்தரமாக E தர 3தட நெடுஞ்சாலைகளும் அமையுமாம்.

முதல் கட்டமாக ஒவ்வொரு நாடும் அதன் பெரு நகரங்களை இணைப்பது (இந்தியாவின் 4 நகரங்களை இணைக்கும் தங்க நாற்கரம், இலங்கையில் கொழும்பு-கண்டி-மாத்தறை-யாழ்-திருமலை E நெட்வேர்க்). அடுத்த கட்டமாக இப்படியான நெட்வேர்க்குகளை இண்டர்லிங் பண்ணி ஒரு pan Asian transport network.

பரிஸ் லண்டனிடையே நிலக்கீழ் ரயில் ஓடும் போது இது சாத்தியமே.

அரசியற்பூகோள காரணிகள் இடம் தருமா என்பதே கேள்வி.

இந்தியாவையும் இலங்கையையும்  பாலம் மூலம் இணைப்பது  சேது கால்வாய் திட்டத்தை குழி தோண்டி புதைக்க எடுக்கும் சிங்களத்தின்  நரித்தன நடவடிக்கை... !!!  

இராமர் பாலத்தை நம்பும்  இந்திய மத்திய அரசு கூட  இதுக்கு இணங்கலாம்...   ஆனால் தமிழகத்துக்கு இந்த பாலத்தை விட  சேது கால்வாயே வருவாயை கொண்டு வரும்... 

சேது கால்வாய் ஈழத்தமிழருக்கும் விடிவையும் கொண்டு வரும்.. 

சிலர்  சோற்றைப்பற்றி  பேசுவர்

சிலர் சதந்திரம பற்றி பேசுவர்

நீங்கள் இரண்டும் கிடைக்கும் என்கிறீர்களா??

வரவேற்கப்படவேண்டிய  கருத்து

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சேதுக்கால்வாயும் அமையலாம் பாலமும் அமையலாம். Both plans can mutually coexist. பாலம் எண்டா கடலுக்க சீமேந்த கொட்டி நிரப்புவது மட்டுமில்லை.

கீழே கப்பல் போக மேலே மேற்கிளம்பும் பாலங்கள் எவ்வளோ இருக்கு. லண்டனின் tower bridge நீராவி யந்திர காலத்திலேயே இந்த பொறிமுறையில் அமைந்தது.

என்ன ராமர் பாலத்தை bigger scale இல் செய்யவேண்டும்.

இன்னும் 1000 வருடங்களுக்கு பிறகு மனிதர்கள் இந்திய இலங்கை நாடுகளில் பிறந்த பின்னர் இப்படிப்பட்ட கனவு சாத்தியப்படலாம்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதை வடகத்தியான் விரும்பவில்லை போலும்..

வடக்கத்தியான்கள் ஒன்று சேர தமிழ் நாட்டின் மீதா பயணம்?

இன்னும் என்னென்ன கருமங்கள் நடக்கப் போகுதோ! :o

தலையெழுத்து..!! :wub:

அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

சேதுக்கால்வாயும் அமையலாம் பாலமும் அமையலாம். Both plans can mutually coexist. பாலம் எண்டா கடலுக்க சீமேந்த கொட்டி நிரப்புவது மட்டுமில்லை.

கீழே கப்பல் போக மேலே மேற்கிளம்பும் பாலங்கள் எவ்வளோ இருக்கு. லண்டனின் tower bridge நீராவி யந்திர காலத்திலேயே இந்த பொறிமுறையில் அமைந்தது.

என்ன ராமர் பாலத்தை bigger scale இல் செய்யவேண்டும்.

ஈழம் சாத்தியமில்லை ....ஆனால் இதெல்லாம் சாத்தியம்.....கதிர்காமத்தில் கவுன்கொண்டயை கொடுத்து ஏறினால் இமயமலை அடிவாரத்தில் போய் இறங்கலாம் பின்பு அங்கிருந்து திரும்பி வருவதற்கு ஒரு சப்பாத்தியை கொடுத்தால் மீண்டும் கதிர்காமாம் வந்தடையலாம்......

Edited by putthan

இமயமலை உச்சியில் இருந்து கேபிள் கார் விட்டால் கதிர்காமத்தில் வந்து இறங்கலாம்.. எரிபொருள் செலவு மிச்சம்.. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி மலை ஏறும் எரிபொருட்செலவை இசை பொறுப்பெடுப்பார் :)

உங்கள் போராட்ட வழிமுறை போல் இதுவும் ஒரு single way ticket தானா?

திரும்பி மலை ஏறும் எரிபொருட்செலவை இசை பொறுப்பெடுப்பார் :)

உங்கள் போராட்ட வழிமுறை போல் இதுவும் ஒரு single way ticket தானா?

  • கருத்துக்கள உறவுகள்

:)

உங்கள் போராட்ட வழிமுறை போல் இதுவும் ஒரு single way ticket தானா?

உண்மையை சொன்னமைக்கு நன்றிகள்......போராட்டங்கள் இலக்கை நோக்கித்தான் செல்லும்...வன்வெ டிக்கட்தான்.....திரும்பிவந்தால் அதற்கு பெயர் இலக்கற்றவன்....

  • கருத்துக்கள உறவுகள்

இதை பிரபாவும், கொள்கைக்காக இறுதிவரை போராடி மாண்ட அவர் சகாக்களும் சொன்னால் நம்பலாம். அவர்கள் வன் வே டிக்கெட் இல்லை. அதுக்கும் மேல்.

வவுனியாவுக்கு (13A) அப்பால் டிரெயினே ஓடாதபோது, கிளிநொச்சி (சமஸ்டி) வரையாவது பஸ்ஸில் போகும் வாய்ப்பை மறுத்து, யாழ்ப்பாணம் (தனிநாடு) தான் போவோம் என்றார்கள்.

அவர்களின் நெகிழ்வு இல்லாமையை கண்டிக்கும் அதே வேளை கொள்கை உ ருதியை நான் பாராட்ட தவறுவதில்லை.

ஆனா நாங்க அப்படியா? அவுசுக்கு அகதியா ஓடும் போதே கைகாவலா ரிட்டேர்ன் டிக்கெட் எடுத்து போன ஆக்கள்.

நாங்க வன் வே டிக்கெட் எண்டு மார் தட்டுவது - புலி வீரம் இல்லை. புலிகேசி வீரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.