Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1,2,3,...........05 செக்கன்கள் - உண்மைக்கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலிருந்து

டென்மார்க்  பயணம்.

அத்தானின் ஒரு வருட  துவசம் என்பதால்  பொருட்களையும் வாங்கி

அவசரமாக புறப்படுகின்றோம்.

இரவு ஓட்டம்

பலகாரச்சூடு  சமையல் என ஆட்கள் தேவை என்பதால்

யேர்மனி  சென்று அங்கிருக்கம் அக்காவையும் எற்றிக்கொண்டு

பயணம் தொடங்குகிறது.....

நான் தான் வாகனத்தை ஓட்டுகின்றேன்.

ஒரு 20 கிலோமீற்றர் (அக்காவீட்டிலிருந்து) போயிருப்பேன்..

வாகனம் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது..

நான் இறுதி வரிசையில் (வேகப்பாதை) ஓடிக்கொண்டிருக்கின்றேன்.

திடீரென எனது பாதை  முடிவடைவதற்கான பதாதை  ஒன்று கண்ணில் தெரிகிறது.

பாதை முடிவடைகிறது என்று தெரிகின்றதே தவிர

அது எத்தனை மீற்றரில்முடிவடைகிறது என்பதை வாசிக்கமுடியவில்லை.

முன்னால் பார்க்கின்றேன்

எனது பாதை முடிவடைந்து விட்டது தெரிகிறது

பக்கத்தில் பார்க்கின்றேன்

பெரிய ரக றக்  ஒன்று நல்ல வேகத்தில் என்னை மறைத்தபடி செல்கிறது..

ஒரு சில செக்கன்களே உள்ளன

பிரேக் பிடித்தாலும் நிறுத்தமுடியாது

லொறிக்குள் ஓரங்கட்டப்பட்டு குடும்பத்தடன் நசுக்கப்படுவேன்

வாகனத்தின்  வேகத்தை அதிகரிப்பதைத்தவிர வேறு வழியில்லை...

கால்கள் உடனடியாக செயற்பட

வாகனம் வேகம் எடுக்கிறது.......

1,2,3,...........05 செக்கன்கள் 

வாகனம் மணிக்கு 210 கிலோமீற்றர் வேகத்துக்கு மேலெழுகிறது...

எனது பக்கம் ஒரு இஞ்சி

லொறிப்பக்கம் ஒரு இஞ்சி இடைவெளியில் வாகனம் லொறிக்கு முன்னால்  நகர்கிறது..

லொறிக்காறன் ஒலி ஒளி பாய்ச்சி தடுமாறுகின்றான் என்பது பின்னால் தெரிகிறது...

ஆனாலும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியது எப்படி என நம்பமறுத்து 

ஆளையாள் நலம் விசாரிக்கின்றனர்..

அடுத்த சில கிலோமீற்றரில் ஒரு பார்க்கில் வாகனத்தை நிறுத்திய  நான்

வெளியில் நடந்து பார்க்கின்றேன்

காலைப்பார்க்கின்றேன்

என்னை நானே கிள்ளிப்பார்க்கின்றேன்

நடமாடுவது நான் தானா என...

(நாடுகள் மாறும் போது பதாதைகள் சம்பந்தமாக கவனமாக இருங்கள் உறவுகளே..)

  • கருத்துக்கள உறவுகள்

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :o வாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

அண்மையில் ஒருநாள் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அந்த வழித்தடத்தில் அவ்வளவு வாகனப்போக்குவரத்து இருக்காது. ஒரு திசையில் இரண்டு பாதைகள் இருக்கும்.

ஒரு வாகனம் பெருந்தெருவில் சேர வந்துகொண்டிருந்தது. அப்படி வந்தால் அவர்களுக்கு இடம் விடுவது வழமை. நானும் வேகப்பாதைக்கு மாறி இடம் கொடுத்தேன். :unsure: உள்நுழைந்த வாகனம் அப்படியே வேகப்பாதைக்குள்ளும் வர ஆரம்பித்தது. :o இவன் வந்தாலும் வருவான் என்று எதிர்பார்த்து ஓடியதால் அவசரமாக பிரேக் போட்டு தவிர்க்கக்கூடியதாக இருந்தது. :blink:

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :o வாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

வேகப் பாதையை காரணம் இல்லாமல் மூடமாட்டார்கள்.

வேகப்பாதையில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளில், ஒரு வரிசை அடுத்த வரிசையுடன் இணைந்திருக்கும்... அதில் லொறிக்காரன் கட்டுப்பாட்டுக்கு மிஞ்சிய வேகத்தில் வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

விசுகரின் சமயோசிதம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டது. பாராட்டுகள்!

பிறேமனுக்கால் சென்றிருந்தாலும், பிறேமனுக்குள் இது நிகழ்ந்திருக்காது.

ஏன் தெரியுமோ... விளங்கினால் சரி!!  :o  :lol:

விசுகர் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் மயிர்கூச்செறியும் சாகசம் புரிந்து கும்பத்தை காப்பாற்றியிருக்கிறார். புலியென்றால் சும்மாவா? இப்ப விசுகண்ணை மாணிக்கமாக இருந்தாலும் ஒருகாலத்தில் பாட்சாவாக ஒரு கலக்கு கலக்கியவர் அல்லவா.  :D

  • கருத்துக்கள உறவுகள்

பாதை முடிவிற்கு வந்துவிட்டபோதும், முடிவிற்கு ஊடாகவும் வேகத்தை அதிகரிக்கக்கூடிய வசதி யேர்மனியில் மட்டுமே உள்ளது. இதனை ஒரு பாடமாகவும் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் சமயோசிதம் சரியான நேரத்தில் கை கொடுத்துதவியது....!

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்...!!

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தில் இருந்து தப்புவதற்கு வேகமாகச் காரைச் செலுத்தி லொறியை முந்தியது உதவியது எனினும் லொறியின் சாரதியும் அவதானமாக இல்லாமல் ஓடியிருந்தால் பெருவிபத்து நடந்திருக்கலாம்.

பலருடன் பயணிக்கும்போது கவனம் சிதறிவிடச் சாத்தியம் அதிகம். இதுதான் பாதை முடிவதை நேரத்துக்கு முந்தி அவதானிக்காமல் விட்டதற்குக் காரணம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, தனது சமயோசிதத்தை கடைசி வினாடியில் பாவித்ததால்... பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது.
வாகனத்தில்..... குடும்பத்துடன் பயணிக்கும் போது கூடுதலானவரை முதலாவது அதி வேகப் பாதையை...

மற்ற வாகனங்களை தவிர்க்க முடியாத கட்டத்தில் முந்துவதற்கு பாவிக்கலாம்.
மற்றும் படி.... மூன்றாவது பாதையில் நிதானமாக ஓடிக் கொண்டிருப்பது, எப்போதும் பாதுகாப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகள் இளைஞர்களை உசுப்பேத்தும். ஒரு பெரிய விபத்திலிருந்து நீங்களும்,உங்கள் குடும்பமும் தப்பியது மகிழ்ச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேகப்பாதையையே முடித்துவிட்டார்களா?? :oவாகனப் பாதுகாப்பு என்பது நூறு வீதம் எம் கையில் இல்லை என்பதற்கு நல்லதொரு உதாரணம். எல்லோரும் பாதுகாப்பாக வந்தது மகிழ்ச்சி விசுகு அண்ணா... :huh:

அண்மையில் ஒருநாள் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். அந்த வழித்தடத்தில் அவ்வளவு வாகனப்போக்குவரத்து இருக்காது. ஒரு திசையில் இரண்டு பாதைகள் இருக்கும்.

ஒரு வாகனம் பெருந்தெருவில் சேர வந்துகொண்டிருந்தது. அப்படி வந்தால் அவர்களுக்கு இடம் விடுவது வழமை. நானும் வேகப்பாதைக்கு மாறி இடம் கொடுத்தேன். :unsure:உள்நுழைந்த வாகனம் அப்படியே வேகப்பாதைக்குள்ளும் வர ஆரம்பித்தது. :o இவன் வந்தாலும் வருவான் என்று எதிர்பார்த்து ஓடியதால் அவசரமாக பிரேக் போட்டு தவிர்க்கக்கூடியதாக இருந்தது. :blink:

ஒன்றில் முதலில் காட்டிய  பதாதையை  நான் கவனிக்காமல் இருந்திருக்கணும்

அல்லது அந்த முதலாவது பதாதை போன பின் இந்த பாதைக்குள் (highway)  நான் வந்திருக்கவேண்டும்..

பிரான்சின் பதாதைகள் பழக்கப்பட்டவை......

ஆனால் நாட்டுக்கு நாடு வித்தியாசமானவை

(வீதிப்போக்குவரத்து ஒழுங்குகள் ஒரே மாதிரியாக இருந்தபோதும் காட்டும்,  எழுதும் முறைகள் வித்தியாசமானவை)

இந்த வீதியில்  இந்த வேகத்தில் ஆயிரம்  கிலோமீற்றருக்கும் அதிகமாக ஓடவேண்டியிருந்ததாலும்

அப்பொழுது தான் உள்நுழைந்து  ஓடத்தொடங்கியிருந்ததாலும்  கொஞ்சம் அசட்டையீனம் இருந்திருக்கலாம்  என்று படுகிறது.

நன்றி  தம்பி  இசை

அன்புக்கும் கருத்துக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேகப் பாதையை காரணம் இல்லாமல் மூடமாட்டார்கள்.

வேகப்பாதையில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளில், ஒரு வரிசை அடுத்த வரிசையுடன் இணைந்திருக்கும்... அதில் லொறிக்காரன் கட்டுப்பாட்டுக்கு மிஞ்சிய வேகத்தில் வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

விசுகரின் சமயோசிதம் எல்லோரையும் காப்பாற்றிவிட்டது. பாராட்டுகள்!

பிறேமனுக்கால் சென்றிருந்தாலும், பிறேமனுக்குள் இது நிகழ்ந்திருக்காது.

ஏன் தெரியுமோ... விளங்கினால் சரி!!  :o  :lol:

பதாதையை  நான் தான் கவனிக்கவில்லை சோழியான்....

லொறிக்காறன் 2வது வரிசையில்

வேகத்தில் தான் வந்தான்...

அதேநேரம் நான் தப்பியதற்கு

பக்கத்தில் வந்தது  லாறி  என்பதும் ஒரு  காரணம்

இல்லாது விட்டால் வேகமெடுத்து முந்திச்செல்லமுடியாது   போயிருக்கும்.....

ஆனால் பிரேக்  பிடித்து பின்னால் நுளைந்திருக்கலாம் (பின்னால் வாகனங்கள் இல்லாதுவிடில்)

பிரேமனால் தான் சென்றேன்

ஆனால் அதற்கு இன்னும் 600 கிலோமீற்றர் போகணுமே..

நன்றி  அன்புக்கும்  கருத்துக்கும்

விசுகர் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் மயிர்கூச்செறியும் சாகசம் புரிந்து கும்பத்தை காப்பாற்றியிருக்கிறார். புலியென்றால் சும்மாவா? இப்ப விசுகண்ணை மாணிக்கமாக இருந்தாலும் ஒருகாலத்தில் பாட்சாவாக ஒரு கலக்கு கலக்கியவர் அல்லவா.  :D

உண்மையில் இப்ப நினைத்தாலும்  தப்பியதை நம்பமுடியவில்லை..

மற்றும்படி

அப்ப  இல்லை

இப்பவும்  பாட்சாதான்...... :D

(எனக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது)

நன்றி  அன்புக்கும்  கருத்துக்கும்..

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதை முடிவிற்கு வந்துவிட்டபோதும், முடிவிற்கு ஊடாகவும் வேகத்தை அதிகரிக்கக்கூடிய வசதி யேர்மனியில் மட்டுமே உள்ளது. இதனை ஒரு பாடமாகவும் கொள்ளலாம்.

இல்லை

உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.....

திடீரென எனது கண்ணுக்கு முன் சில மீற்றர்களில் வீதி முடிவடைந்ததைக்கண்டேன்

இரண்டே இரண்டு  வழிகள் தான்

வேகப்படுத்தி முன்னுக்கு உள்நுழையணும்

அல்லது பிரேக்  பண்ணி அதே இடத்தில் நிறுத்தணும்..

பிரேக் செய்து நிறுத்தக்கூட இடம் போதாது என்பதால் ஒரே தெரிவு

வேகப்படுத்துதல்

தற்கொலைக்கு ஒப்பானது

வரும் லொறி பின்னால் ஒரு சிறு தட்டு தட்டினாலும் வாகனம் வட்டமடிக்க ஆரம்பிக்கும்.... :(  :(  :(

எனது பிள்ளைகள் 3 பேர் புது வாகனசாரதி பத்திரக்காறர்கள்

அவர்கள் வாகனத்தை செலுத்தியிருந்தால்

மூளை உடனே பிரேக்கில்தான் கால்வைக்கச்சொல்லும்

நான் செலுத்தியதால் 30 வருடத்துக்கு மேலான எனது அனுபவம் 

சில நொடிகளில் நிதானமாக முடிவேடுத்திருக்கு என்று பின்னர் நினைத்தேன்...

நன்றி  கருத்துக்கும்  நேரத்துக்கும்

உங்களின் சமயோசிதம் சரியான நேரத்தில் கை கொடுத்துதவியது....!

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்...!!

நன்றியண்ணா...

எனது அனுபவங்கள் மற்றவர்கள் ஒருவருக்கேனும் பாடமாக அமையணும் என்பதற்காகவே பதிகின்றேன்

விபத்தில் இருந்து தப்புவதற்கு வேகமாகச் காரைச் செலுத்தி லொறியை முந்தியது உதவியது எனினும் லொறியின் சாரதியும் அவதானமாக இல்லாமல் ஓடியிருந்தால் பெருவிபத்து நடந்திருக்கலாம்.

பலருடன் பயணிக்கும்போது கவனம் சிதறிவிடச் சாத்தியம் அதிகம். இதுதான் பாதை முடிவதை நேரத்துக்கு முந்தி அவதானிக்காமல் விட்டதற்குக் காரணம் என நினைக்கின்றேன்.

உண்மை கிருபன்

நீங்கள் சொல்லும் 2  காரணங்களும் உண்மை

அந்த லொறிச்சாரதி  சிறிது பிரேக் செய்தும் மற்றப்பக்கதால் சிறிது விலகியும் இருக்கலாம்

இந்த தப்புதலில் நிச்சயம் அவரது பங்கும் உண்டு என்று தான் நானும் நினைக்கின்றேன்....

நன்றி  நேரத்துக்கும்  கருத்துக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, தனது சமயோசிதத்தை கடைசி வினாடியில் பாவித்ததால்... பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது.

வாகனத்தில்..... குடும்பத்துடன் பயணிக்கும் போது கூடுதலானவரை முதலாவது அதி வேகப் பாதையை...

மற்ற வாகனங்களை தவிர்க்க முடியாத கட்டத்தில் முந்துவதற்கு பாவிக்கலாம்.

மற்றும் படி.... மூன்றாவது பாதையில் நிதானமாக ஓடிக் கொண்டிருப்பது, எப்போதும் பாதுகாப்பானது.

சிறி  நானொரு கார் ஓட்ட வெறியன்..

எனக்கு பொழுது போக்கு இது ஒன்று தான்..

எனது  வாகனம் ஓடத்தொடங்கினால் அது வேகப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்..

அடுத்த பாதையில் எவருமில்லாது விட்டால் மட்டுமே அந்தப்பாதைக்கு போவதுண்டு..

நான் மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் பல ஆயிரம் கிலோமீற்றர்கள் ஓடியிருக்கின்றேன் :(  :(  :(

இதன் அர்த்தம் 240க்கு மேல் என்னால் ஓடமுடியாது என்பதல்ல

எனது எந்தக்காரும் இதற்கு மேல் ஓடாதது தான் காரணம்...

2012 இல் சுவிசில்

100க்கு பதிலாக 170 ஓடி   பிடிவிராந்து போட்டிருந்தார்கள்

தண்டனைப்பணத்தைக்கட்டி இப்பத்தான் அங்கால போகக்கூடியதாக இருக்கு..

எனது பிள்ளைகளும்  இதன்படியே  பார்த்து வளர்ந்தவர்கள்

அவர்கள் சாரதிப்பத்திரம் எடுத்தபோது

அவர்களுக்கான எனது அறிவுரை

அப்பாவிடமிருந்து ஒரே ஒரு விடயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றக்கூடாது

அது எனது கார் ஓட்டம் என்பது தான்.

பிரான்சில் அடக்கி விட்டார்கள்

யேர்மனியில் சில இடங்களில் திறந்து விடுகிறார்கள்....

ஆனாலும் ஓடக்கூடிய  இடத்தில் தான் ஓட்டம்

12 புள்ளிகளும்

50க்கு 50 இன்சுரன்சும் வைத்துள்ளவன்...

(இவையே அதிக கூடிய புள்ளிகளும் சலுகைகளும்)

நன்றி  சிறி

வருகைக்கும் அன்புக்கும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகள் இளைஞர்களை உசுப்பேத்தும். ஒரு பெரிய விபத்திலிருந்து நீங்களும்,உங்கள் குடும்பமும் தப்பியது மகிழ்ச்சி

உசுப்பேத்த எழுதவில்லை ரதி

எனது அனுபவங்களை எழுதி

கவனம் என்றே எழுதினேன்...

காரணம் நாடுகளுக்கு போகும் போது மிக மிக அவதானமாக இருக்கணும்

பழக்கப்பட்ட பாதைகளுக்கும் பழக்கப்பட்ட பதாதைகளுக்கும் சிரமங்கள் இருக்காது

ஆனால் புதுபாதைகளும் மொழிகளும் தடுமாற வைத்துவிடும்...

மற்றும்படி

கார் ஒட்டத்தில் நானொரு வெறியன்

என்னிடமுள்ள ஒரேயொரு கெட்டபழக்கமும் இதுதான்....

இதையும் மற்றவர்களின் நலனுக்காகவே சொல்கின்றேன்..

நன்றி சகோதரி

அன்புக்கும் வருகைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களனைவரும் பிழைத்துக்கொண்டது மகிழ்ச்சியே, எனினும் புதிய இடங்களில் வாகனம் ஓட்டும்போது வாகனச்சாரதியான நீங்களே மற்ற அனைவருக்கும் பொறுப்பாளியாகி விடுகின்றீர்கள். இனி சிரத்தையுடன் புதிய இடங்களில் வாகனத்தைச் செலுத்துவீர்களென நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 வேகமான ஓட்டம், கவனக்குறைவு , மற்றைய வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவு, அதிக அலட்டல்கள் , இப்படிப் பல காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.

கன ரக வாகனங்கள்  ஜேர்மன் வெகப்பாதைகளில் 100 கிலோ மீற்றர் வேகத்திற்கு அதிகமாக ஓடத் தடை உள்ளது.
ஒரு வேகப்பாதை முடிவடைவதை 1000 மீற்றருக்கு முன்னரே அறியத்தந்திருப்பார்கள். அதை அப்படியே தொடர்ந்து 3 ,4 தடவைகள் 600 மீ ,400 மீ,  200 மீ என மீளவும் அறியத்தருவார்கள்.

எல்லை மீறிய ஓட்டங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு எந்த காப்புறுதி நிறுவனங்களும் நஸ்ட ஈடு தரமாட்டாது.

ஊரில் வாடகைக் கார் வைத்திருக்கும் எங்கள் அயலவர் ஒவ்வொரு நாளும் அந்தக்காருக்குக் கற்பூரம் காட்டி  வழிபட்டுவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். கேட்டால்  அது கடவுள் மாதிரி என்பார்.

வாகனம் ஒரு போக்குவரத்திற்கு உதவும்  சாதனமே தவிர யாருக்கும் பொழுது போக்கும் சாதனமாக இருக்கக் கூடாது. அந்த வகையில் விசுகு அண்ணை இனிமேல் இப்படியான வாகன ஓட்டங்களைத் தவிர்ப்பார் என நினைக்கின்றேன்.

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாய் நாஷனல் வீதிகளிலும் (ஒரே வீதியில் எதிரெதிராய் வாகனங்கள் வரும் வீதி). இப்படியான  சம்பவங்கள் நேர்வதுண்டு. ஆனால் அங்கு ஒரு வாகனத்தை முந்தும்போது வலு அவதானமாய் தூரத்தில் வரும் வாகனங்களைக் கவனித்து செய்யிறது.இங்கு அவர் இதை எதிர்பார்க்கவில்லை. லொறிக்காரன் ஒரே வேகத்தில் தான் 90 ல் சென்ருகொண்டிருப்பான், குறைக்கமாட்டான். நாம் 130ல் வேகமாய் அவரைத் தான்டிவிட முடியும், தான்டவில்லையெனில் தாட்டுப்போடும்...!

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை

உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.....

திடீரென எனது கண்ணுக்கு முன் சில மீற்றர்களில் வீதி முடிவடைந்ததைக்கண்டேன்

விசுகு அவர்களே! பாதை முடிவடைந்தாலும் பல மீற்றர் தூரத்திற்கு வாகனத்தைச் செலுத்திச் செல்லக்கூடிய இடப்பரப்பு உள்ளதையே குறிப்பிட்டேன். அந்த இடப்பரப்பு வாகனம் செலுத்துவதற்குரிய இடமல்ல... ஆனாலும் அந்த இடப்பரப்பு நீங்கள் விபத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயம் ஒரு காரணமாக அமைந்திருக்கும். இந்த அமைப்பை வேறு நாடுகளில் நான் கண்டதில்லை.   

1987_01.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விசுகரின் அந்த நேர திடசங்கர்ப்பத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது. அதிவேக வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும்.அதிவேக வாகன ஓட்டு பிரியரான விசுகருக்கு இப்படியான செயல்கள் முதற்தடவையாக இருக்காது.  :icon_idea:
 
எல்லாம் இமைப்பொழுதில் நடந்து முடிந்துவிடும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி  நானொரு கார் ஓட்ட வெறியன்..

எனக்கு பொழுது போக்கு இது ஒன்று தான்..

எனது  வாகனம் ஓடத்தொடங்கினால் அது வேகப்பாதையில் தொடர்ந்து பயணிக்கும்..

அடுத்த பாதையில் எவருமில்லாது விட்டால் மட்டுமே அந்தப்பாதைக்கு போவதுண்டு..

நான் மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் பல ஆயிரம் கிலோமீற்றர்கள் ஓடியிருக்கின்றேன் :(  :(  :(

இதன் அர்த்தம் 240க்கு மேல் என்னால் ஓடமுடியாது என்பதல்ல

எனது எந்தக்காரும் இதற்கு மேல் ஓடாதது தான் காரணம்...

2012 இல் சுவிசில்

100க்கு பதிலாக 170 ஓடி   பிடிவிராந்து போட்டிருந்தார்கள்

தண்டனைப்பணத்தைக்கட்டி இப்பத்தான் அங்கால போகக்கூடியதாக இருக்கு..

எனது பிள்ளைகளும்  இதன்படியே  பார்த்து வளர்ந்தவர்கள்

அவர்கள் சாரதிப்பத்திரம் எடுத்தபோது

அவர்களுக்கான எனது அறிவுரை

அப்பாவிடமிருந்து ஒரே ஒரு விடயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றக்கூடாது

அது எனது கார் ஓட்டம் என்பது தான்.

பிரான்சில் அடக்கி விட்டார்கள்

யேர்மனியில் சில இடங்களில் திறந்து விடுகிறார்கள்....

ஆனாலும் ஓடக்கூடிய  இடத்தில் தான் ஓட்டம்

12 புள்ளிகளும்

50க்கு 50 இன்சுரன்சும் வைத்துள்ளவன்...

(இவையே அதிக கூடிய புள்ளிகளும் சலுகைகளும்)

நன்றி  சிறி

வருகைக்கும் அன்புக்கும்.....

விசுகர்! நேரம் இருந்தால் சொல்லுங்கோ ஒருநாளைக்கு நாங்கள் இரண்டு பேரும் போட்டிக்கு ஓடிப்பாப்பம்.. :lol:  :D

விசுகர்! நேரம் இருந்தால் சொல்லுங்கோ ஒருநாளைக்கு நாங்கள் இரண்டு பேரும் போட்டிக்கு ஓடிப்பாப்பம்.. :lol:  :D

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

ஒரு காரில என்னென்டைய்யா ரெண்டு பேர் ரேஸ் ஓடுவது ? 
 
ஒவ்வொருவரும் தங்கட காரில ரேஸ் ஓடுவமே என்டு கேக்கிறார்.
 
:D  :D  :lol:  :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடலாம் குசா அண்ணை அதற்கு பரிமளம் மாமி அநுமதி தர மாட்டா.  :D  :D  :lol:

பரிமளத்திட்டை எல்லாத்தையும் சொல்லுறதுக்கு நான் என்ன அரிச்சந்திரன் பரம்பரையே????  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களனைவரும் பிழைத்துக்கொண்டது மகிழ்ச்சியே, எனினும் புதிய இடங்களில் வாகனம் ஓட்டும்போது வாகனச்சாரதியான நீங்களே மற்ற அனைவருக்கும் பொறுப்பாளியாகி விடுகின்றீர்கள். இனி சிரத்தையுடன் புதிய இடங்களில் வாகனத்தைச் செலுத்துவீர்களென நம்புகின்றேன்.

நிச்சயமாக  தம்பி  சேரன்

ஆனால் முடியல அப்பா

ஒழுங்கா  ஓடுவம் என்று முடிவெடுத்த ஓடினாலும்

எவனாவது குறுக்கவந்து கடுப்பேத்தி என்னை மாற்றிவிடுகின்றார்கள் :(

கீழே குமாரசாமியண்ணையைப்போல.... :lol:  :D

பிள்ளைகள் வளர்ந்தபின் ரொம்ப மாறியிருக்கின்றேன்

அவர்களும் என்னை  பின்பற்றக்கூடாது என்பதற்காக...

அதனால் தான் மணிக்கு 160 கிலோமீற்றர்....

நன்றி  தம்பி  அன்புக்கும் கட்டளைக்கும்...

 வேகமான ஓட்டம், கவனக்குறைவு , மற்றைய வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவு, அதிக அலட்டல்கள் , இப்படிப் பல காரணங்களால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன.

கன ரக வாகனங்கள்  ஜேர்மன் வெகப்பாதைகளில் 100 கிலோ மீற்றர் வேகத்திற்கு அதிகமாக ஓடத் தடை உள்ளது.

ஒரு வேகப்பாதை முடிவடைவதை 1000 மீற்றருக்கு முன்னரே அறியத்தந்திருப்பார்கள். அதை அப்படியே தொடர்ந்து 3 ,4 தடவைகள் 600 மீ ,400 மீ,  200 மீ என மீளவும் அறியத்தருவார்கள்.

எல்லை மீறிய ஓட்டங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு எந்த காப்புறுதி நிறுவனங்களும் நஸ்ட ஈடு தரமாட்டாது.

ஊரில் வாடகைக் கார் வைத்திருக்கும் எங்கள் அயலவர் ஒவ்வொரு நாளும் அந்தக்காருக்குக் கற்பூரம் காட்டி  வழிபட்டுவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். கேட்டால்  அது கடவுள் மாதிரி என்பார்.

வாகனம் ஒரு போக்குவரத்திற்கு உதவும்  சாதனமே தவிர யாருக்கும் பொழுது போக்கும் சாதனமாக இருக்கக் கூடாது. அந்த வகையில் விசுகு அண்ணை இனிமேல் இப்படியான வாகன ஓட்டங்களைத் தவிர்ப்பார் என நினைக்கின்றேன்.

நிச்சயமாக காட்டியிருப்பார்கள்

ஒன்றில் நான் இடையில் வந்திருக்கணும்

அல்லது கவனிக்காது விட்டிருக்கணும்

நன்றி  வாத்தியார்

அன்புக்கும் ஆலோசனைக்கும் அறிவுறுத்தல்களுக்கும்...

விசுகு அவர்களே! பாதை முடிவடைந்தாலும் பல மீற்றர் தூரத்திற்கு வாகனத்தைச் செலுத்திச் செல்லக்கூடிய இடப்பரப்பு உள்ளதையே குறிப்பிட்டேன். அந்த இடப்பரப்பு வாகனம் செலுத்துவதற்குரிய இடமல்ல... ஆனாலும் அந்த இடப்பரப்பு நீங்கள் விபத்திலிருந்து தப்புவதற்கு நிச்சயம் ஒரு காரணமாக அமைந்திருக்கும். இந்த அமைப்பை வேறு நாடுகளில் நான் கண்டதில்லை.   

1987_01.jpg

இப்படியிருக்கவில்லை  பஞ்ச்

வீதியை  முடித்தே விட்டார்கள்

ஒன்றில் வந்தபாதையில் நிறுத்தணும்

அல்லது அடத்த பாதைக்குள் நுளையணும்

2 தெரிவு தான்..

ஒரு பத்து மீற்றர்கூட  எனது கண்ணுக்குப்படவில்லை

நன்றி  விளக்கத்துக்கும் நேரத்துக்கும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1- விசுகரின் அந்த நேர திடசங்கர்ப்பத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது.
2- அதிவேக வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
3-அதிவேக வாகன ஓட்டு பிரியரான விசுகருக்கு இப்படியான செயல்கள் முதற்தடவையாக இருக்காது.  :icon_idea:
 
எல்லாம் இமைப்பொழுதில் நடந்து முடிந்துவிடும்.

1-  எனது 30க்கும் மேற்பட்ட வாகன அனுபவம் தான் என்னைக்காத்ததாக நினைக்கின்றேன் அண்ணா

இதே எனது பிள்ளைகளோ

புது சாரதிகளோ

நிச்சயம்  பிரேக்கில் தான் கால்வைத்திருப்பார்கள். :(

2- எனது வேக ஓட்டம்  காரணமாக எப்பொழுதும் அவதானமாக இருப்பதால்தான் இதுவரை எதுவித விபத்தக்களிலும் சிக்கிக்கொண்டது கிடையாது. ஆனால் வீட்டில் சொல்லியுள்ளேன் சந்திக்கும் விபத்து மிக பயங்கரமானதாக இருக்கும் என்று. .. :(

3- ஓடக்கூடிய  இடங்கிளிலேயே  ஓடுவது எனது பழக்கம்

மழை பனி  காலங்களிலும் வளைவுகளிலும் வீரம் காட்டுவதில்லை...

ஆனால் இந்த சூழ்நிலைகள் தவிர்ந்த இடங்களில் எப்பொழுதுமே வேகம் அதிகமாக இருக்கும்...

முன்பெல்லாம் 850 கிலோமீற்றர் லூர்து  மாதா கோயில் எனக்கு 51/2 மணித்தியால பயணம் தான்.

காலையில் போய்க்கும்பிட்டுவிட்டு இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்..... :(

நன்றியண்ணா

அன்புக்கும் நேரத்துக்கும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.