Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் வல்வை சகாறாவின் இரு நூல்கள் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலை செம டென்சன்ல பேசி இருக்காப்ல... கைகாலோட  பேப்பரும் டான்ஸ் ஆடுது... :lol:   கண்மணி அக்கா மற்றும் நிழலி அண்ணாவின் பேச்சுக்கள் கேட்டது மிக மகிழ்ச்சி... அத்தோட சகாரா அக்கா, மற்றும் என் மிக நெருங்கிய கள உறவுகள்   அனைவரையும் இங்கு வீடியோக்களில் கண்டது மிக்க மகிழ்ச்சி... இரண்டு உறவுகளின் போட்டோ இங்கு அவர்களின் அனுமதியுடனா  இணைக்கப்பட்டது? 

  • Replies 157
  • Views 12.6k
  • Created
  • Last Reply
அருமையிலும் அருமை..
வாழ்த்துக்கள் ச்கோதரி. 
 
தலை செம டென்சன்ல பேசி இருக்காப்ல... கைகாலோட  பேப்பரும் டான்ஸ் ஆடுது... :lol:   கண்மணி அக்கா மற்றும் நிழலி அண்ணாவின் பேச்சுக்கள் கேட்டது மிக மகிழ்ச்சி... அத்தோட சகாரா அக்கா, மற்றும் என் மிக நெருங்கிய கள உறவுகள்   அனைவரையும் இங்கு வீடியோக்களில் கண்டது மிக்க மகிழ்ச்சி... இரண்டு உறவுகளின் போட்டோ இங்கு அவர்களின் அனுமதியுடனா  இணைக்கப்பட்டது? 

வீடியோ எடுத்தவர்கள் நல்ல வேளை என் கால்களைக் காட்டவில்லை...

அது சரி, ஆதிவாசி பற்றி ஒரு வரி வருகின்றது கவனித்தீர்களா? அவர் கூட்டத்துக்கு வந்திருந்தாரா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொய்யாலா.. வல்வை அக்கா தான் அந்த ஆதிவாசியா. நம்பவே முடியல்ல..!! :rolleyes::lol:

ஆதிமவனே.. ச்சா.. மவளே.. என்று விளிக்க வேண்டி வந்திட்டே...!! :lol:

ஆஆ....இந்த விடயம் உங்களுக்கு இவ்வளவு நாளும் தெரியாதா நெடுக்ஸ் அண்ணா  :icon_idea:

ஆச்சரியமாக இருக்கின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆ....இந்த விடயம் உங்களுக்கு இவ்வளவு நாளும் தெரியாதா நெடுக்ஸ் அண்ணா  :icon_idea:

ஆச்சரியமாக இருக்கின்றது :D

களத்துக்கு வெளில யார்.. எவை என்ற ஆராய்ச்சிக்கு போறதில்ல. அதனால தெரியாமல் போச்சுது. இன்று தான் நிழலி அண்ணரின் பேச்சைக் கேட்டபின் நிலைமை புரிஞ்சுது. இவ்வளவு நாளும்... ஆதிமவனே என்று தான் விளித்து எழுதி வந்தது. :lol::o

நேற்கொழுவின் புத்தகவெளியீடும் விசுகுவின் விமர்சனமும் அதில் பலர் இட்ட பின்னூட்டங்களும் ஏனோ நினைவிற்கு வந்து தொலைக்குது . :icon_mrgreen:

வீடியோ எடுத்த ஈகுருவிக்கு பார்வையாளர்கள் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. பார்வையாளர்களை ஒரு முறையாவது தெளிவாகக் காட்டியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

களத்துக்கு வெளில யார்.. எவை என்ற ஆராய்ச்சிக்கு போறதில்ல. அதனால தெரியாமல் போச்சுது. இன்று தான் நிழலி அண்ணரின் பேச்சைக் கேட்டபின் நிலைமை புரிஞ்சுது. இவ்வளவு நாளும்... ஆதிமவனே என்று தான் விளித்து எழுதி வந்தது. :lol::o

நானும் இதே நிலையில் தான் இருந்ததது,இருப்பது...நூல் வெளியீட்டிற்கு போய் இருந்த போதும் யாழ்கள உறவுகள் எல்லாரும் வந்து பேசித் தான் சென்றார்கள்..ஆதிவாசியைக் காணவில்லை..யாரு இந்த ஆதிவாசி என்று பார்க்கனும் என்ற ஆவலில் அடிக்கடி பின்னுக்கு திரும்பி,திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தன்..நிழலியண்ணா பேச்சின் பின் தான் அட நான் பின்னாடி பார்த்தது தப்பு..எங்க முன்னாடி இருக்கிறா என்று தெரிந்து கொண்டேன். :lol:

தலை செம டென்சன்ல பேசி இருக்காப்ல... கைகாலோட  பேப்பரும் டான்ஸ் ஆடுது... :lol:   கண்மணி அக்கா மற்றும் நிழலி அண்ணாவின் பேச்சுக்கள் கேட்டது மிக மகிழ்ச்சி... அத்தோட சகாரா அக்கா, மற்றும் என் மிக நெருங்கிய கள உறவுகள்   அனைவரையும் இங்கு வீடியோக்களில் கண்டது மிக்க மகிழ்ச்சி... இரண்டு உறவுகளின் போட்டோ இங்கு அவர்களின் அனுமதியுடனா  இணைக்கப்பட்டது? 

அனுமதியைப் பற்றியெல்லாம் யார் இங்கு கவலைப்படுகிறார்கள் சுபேஸ்.  தெரிந்தே செய்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.  இனிமேல் நாம்தான் அதற்குத் தக்கமாதிரி நடந்து கொள்ள வேண்டும்.  

ஆஆஆ! ஆதிவாசி தான் வல்வை சஹாறாவா? என்னால் நம்பவே முடியவில்லை... நீங்கள் சொல்லும் விடயத்தை சரிபார்த்தீர்களா நிழலி...

அந்த அடக்கமான குனிந்த தலை நிமிராத பெண்ணுக்குள் குரங்குப் புத்தி கொண்ட தமாசும் நக்கலும் நிறைந்த இந்த வாலும் ஒழிந்திருந்ததா?

எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பிருக்கும் என்று எப்படித்தான் கண்டு பிடிப்பதோ??? ஐயோ! ஐயோ!

ஆஆஆ! ஆதிவாசி தான் வல்வை சஹாறாவா? என்னால் நம்பவே முடியவில்லை... நீங்கள் சொல்லும் விடயத்தை சரிபார்த்தீர்களா நிழலி...

ஓம் மணி, அத்துடன் சகாறாவின் முழு அனுமதி பெற்றுத்தான் அவரது இன்னொரு ஐடி பற்றியும் பேச்சில் குறிப்பிட்டேன். :)

அந்த அடக்கமான குனிந்த தலை நிமிராத பெண்ணுக்குள் குரங்குப் புத்தி கொண்ட தமாசும் நக்கலும் நிறைந்த இந்த வாலும் ஒழிந்திருந்ததா?

அவரின் பன்முக ஆற்றல்களுக்குள் இதுவும் ஒன்று.. :)

பத்து பன்னிரண்டு id களில் வாறதுதான் பன்முக ஆற்றலா ? இவ்வளவு காலமும் தெரியாமல் போய்விட்டது . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதியைப் பற்றியெல்லாம் யார் இங்கு கவலைப்படுகிறார்கள் சுபேஸ்.  தெரிந்தே செய்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.  இனிமேல் நாம்தான் அதற்குத் தக்கமாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

பட்சி சொன்னதால் இசைக்கலைஞன் புத்தகவெளியீட்டைக் காய்வெட்டிவிட்டார் :) 

கமராவும் கையுமாக நிற்பவர்களிடமிருந்து அவ்வளவு எளிதில் தப்பமுடியாது! அதற்காக ஒளித்துக்கொள்ள வேண்டுமென்பதில் உடன்பாடில்லை.

களத்துக்கு வெளில யார்.. எவை என்ற ஆராய்ச்சிக்கு போறதில்ல. அதனால தெரியாமல் போச்சுது. இன்று தான் நிழலி அண்ணரின் பேச்சைக் கேட்டபின் நிலைமை புரிஞ்சுது. இவ்வளவு நாளும்... ஆதிமவனே என்று தான் விளித்து எழுதி வந்தது. :lol::o

எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது :o. ஆதி ஒரு அரையடிப் பையன் என்று நினைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கன்னியுரையைப் பார்த்தேன். பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டுபோய் மேடைக் கூச்சத்தால் நடுங்கி வேகமாகப் பேசியிருக்கின்றார். எப்படா போய்க் கதிரையில் இருப்போம் என்ற மாதிரி இருந்தது. கொஞ்சம் மருந்தை மணந்திருந்தால் பேச்சு சரளமாகவும் கோர்வையாகவும் வந்திருக்கலாம்!

ஓம் மணி, அத்துடன் சகாறாவின் முழு அனுமதி பெற்றுத்தான் அவரது இன்னொரு ஐடி பற்றியும் பேச்சில் குறிப்பிட்டேன். :)

பட்சி சொன்னதால் இசைக்கலைஞன் புத்தகவெளியீட்டைக் காய்வெட்டிவிட்டார் :) 

கமராவும் கையுமாக நிற்பவர்களிடமிருந்து அவ்வளவு எளிதில் தப்பமுடியாது! அதற்காக ஒளித்துக்கொள்ள வேண்டுமென்பதில் உடன்பாடில்லை.

எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது :o. ஆதி ஒரு அரையடிப் பையன் என்று நினைத்திருந்தேன்.

ஆண்களே தங்கள் முகத்தைக் காட்டத் தயங்கும்போது, பெண்கள் அதுவும் தமிழ்ப் பெண்கள் தயங்குவதில் ஒரு நியாயம் இருக்கிறதுதானே?  அவரவர் சூழ்நிலைகள் அவரவர்களுக்குத்தானே தெரியும்?  ஒரு பெண்ணாக இருந்து கொண்டே இவ்வாறு நடந்து கொள்வது நியாயமா?  அவரது மகள்களின் விடயத்திலும் இப்படித்தான் நடந்து கொள்வாரா?

யாழ்கள உறவுகளுக்குள் முகம் காட்டுவது வேறு.  யாழில் முகத்தைக் காட்டுவது வேறு.  அப்படி நாம் முகம் காட்டுவதாக இருந்தால் மற்றவர்கள் போல் நாமும் எமது படத்தைப் போடுவோமே?  யாழ்கள உறவுகள் நேரில் சந்திக்கும்போது அவர்களுக்குள் ஒரு நட்புணர்வு புரிந்துணர்வு இருக்கும்.   ஆனால், யாழில் ஆயிரக்கணக்கானவர்கள் பார்வையிடுவது.   இவர்தான் இன்னார் என மற்றவர்கள் நினைக்கும்படி ஏன் பதிவிட வேண்டும்?  எத்தனை பேர் இதனைக் காவித் திரிவார்களோ யாருக்குத் தெரியும்?  

விழாவில் படம் எடுத்தவர்கள் தமது இணையத்தில் போட்டுவிட்டார்கள். தவிர்க்கவேண்டுமென்றால் படம் எடுக்கவேண்டாம் என்று நேரடியாகச் சொல்லவேண்டும். ஆனால் பொது நிகழ்வுகளில் இது எல்லாம் இலகுவாக இருக்காது. ஆனாலும் பொதுவெளியில் போடமுதல் அனுமதி கேட்டிருக்கலாம்.

யாழ் இணையத்தில் உள்ள சில ஆண்களும் பெண்களும் தம்மை இனங்காட்டக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். ஆனால் மற்றையவர்கள் யார் என்று அறிந்துகொள்வதில் ஆவலாக இருக்கின்றார்கள்.

நிழலியின் கன்னியுரையைப் பார்த்தேன். பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டுபோய் மேடைக் கூச்சத்தால் நடுங்கி வேகமாகப் பேசியிருக்கின்றார். எப்படா போய்க் கதிரையில் இருப்போம் என்ற மாதிரி இருந்தது. கொஞ்சம் மருந்தை மணந்திருந்தால் பேச்சு சரளமாகவும் கோர்வையாகவும் வந்திருக்கலாம்!

 கொண்டு போனது இரண்டே இரண்டு பேப்பர்கள். ஒவ்வொன்றிலும் 10 வரிகள் தான். அவையும் ஆதிவாசியின் 'காக்கையே பற பற' வும் சகாறாவின் 'இயங்கு தயங்கு.. " வும் யாழ் இணையத்தின் பகுதிகளின் செந்தமிழ் பெயர்களும் தான்...ஆங். 

ஆனால் எப்படா போய் கதிரையில் இருப்பம் என்று எண்ணியது உண்மைதான். :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலை செம டென்சன்ல பேசி இருக்காப்ல... கைகாலோட  பேப்பரும் டான்ஸ் ஆடுது... :lol:   கண்மணி அக்கா மற்றும் நிழலி அண்ணாவின் பேச்சுக்கள் கேட்டது மிக மகிழ்ச்சி... அத்தோட சகாரா அக்கா, மற்றும் என் மிக நெருங்கிய கள உறவுகள்   அனைவரையும் இங்கு வீடியோக்களில் கண்டது மிக்க மகிழ்ச்சி... இரண்டு உறவுகளின் போட்டோ இங்கு அவர்களின் அனுமதியுடனா  இணைக்கப்பட்டது? 

சுபேஸ் இரண்டு உறவுகள் அல்ல இதுவரை யாழில் முகங்காட்டாத 5 உறுப்பினர்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. யாயினியிடம் அனுமதி வாங்கி இணைத்தேன் மற்றையோர் எவரிடமும் அனுமதியைப் பெறாதது என்னுடைய தவறே... ஆர்வக்கோளாறு காரணமாக மற்றைய நால்வரின் படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. படங்களை இணைத்துவிட்டேன் என்று சங்கடப்பட்டுக்கொண்டு இருக்கும் உறவுகளிடம் நான் என்னுடைய ஆர்வக்கோளாறினால் ஏற்பட்ட தவறுக்காக பகிரங்க மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். இருப்பினும் இந்தப்படங்கள் இணைத்த பின்னர் என்னுடன் பேசிய உறவு ஒருவர் அதனை அகற்றும்படி கேட்டுக் கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு முகங்காட்ட பிரியமில்லாத இடத்து ஈக்குருவியின் புகைப்படச்சுருளுக்குள் அகப்படாமல் தவிர்த்திருக்கலாம். அவர்களின் எச்சரிக்கை உணர்வு என்னையும் எச்சரித்திருக்கும். முன்னெப்போதுமே செய்யாத ஒரு தவறை என்னுடைய நூல் வெளியீட்டில் செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வு என்னை ஆக்கிரமிக்கத்தான் செய்கிறது. யாயினி தவிர்த்து மற்றைய நால்வரும் என்னை மன்னிப்பார்களாக.

stock-photo-sorry-emoticon-73086553.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே தங்கள் முகத்தைக் காட்டத் தயங்கும்போது, பெண்கள் அதுவும் தமிழ்ப் பெண்கள் தயங்குவதில் ஒரு நியாயம் இருக்கிறதுதானே?  அவரவர் சூழ்நிலைகள் அவரவர்களுக்குத்தானே தெரியும்?  ஒரு பெண்ணாக இருந்து கொண்டே இவ்வாறு நடந்து கொள்வது நியாயமா?  அவரது மகள்களின் விடயத்திலும் இப்படித்தான் நடந்து கொள்வாரா?

யாழ்கள உறவுகளுக்குள் முகம் காட்டுவது வேறு.  யாழில் முகத்தைக் காட்டுவது வேறு.  அப்படி நாம் முகம் காட்டுவதாக இருந்தால் மற்றவர்கள் போல் நாமும் எமது படத்தைப் போடுவோமே?  யாழ்கள உறவுகள் நேரில் சந்திக்கும்போது அவர்களுக்குள் ஒரு நட்புணர்வு புரிந்துணர்வு இருக்கும்.   ஆனால், யாழில் ஆயிரக்கணக்கானவர்கள் பார்வையிடுவது.   இவர்தான் இன்னார் என மற்றவர்கள் நினைக்கும்படி ஏன் பதிவிட வேண்டும்?  எத்தனை பேர் இதனைக் காவித் திரிவார்களோ யாருக்குத் தெரியும்?  

இதை என்னுடன் பேசும்போதே கேட்டிருக்கலாமே தமிழச்சி அல்லது உடனடியாக நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்டவர்களுக்காக விடயத்தை தெரியப்படுத்தி ஆவன செய்திருக்கலாம் இதுவரை எந்த யாழ் உறவுகளையும் அவர்கள் அனுமதியின்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியதில்லை. இம்முறை தவறுதலாக ஈக்குருவியின் இணையத்தளத்திலிருந்து நேரடியாக தரவிறக்கம் செய்ததில் சிலருடைய படங்கள் அகப்பட்டுவிட்டன. அவசரமும் ஆர்வமும் சில நண்பர்களின் கட்டுப்பாடுகளை மீறிப்பாய்ந்து விட்டது அவர்கள் எல்லோரிடமும் நான் மிகவும் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுள்ளேன். மன்னிப்பார்களாக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்கொழுவின் புத்தகவெளியீடும் விசுகுவின் விமர்சனமும் அதில் பலர் இட்ட பின்னூட்டங்களும் ஏனோ நினைவிற்கு வந்து தொலைக்குது . :icon_mrgreen:

என்ன அர்யூன் இங்கு இன்னும் குழப்பம் வரவில்லை என்று கவலைப்படுவதுபோல இருக்கு....

இந்த இடத்தில் இன்னுமொரு கேள்வியையும் நீங்கள் முன் வைக்கமுன்னர் நானே பதிவிட்டுவிடுகிறேன்...

எழுத்தாளர்' தமிழ்நதியின் உரையை காணவில்லை ஓகோ சகாறா மறைத்துவிட்டாரா என்று யாரும் சந்தேகங் கொள்ளுமுன் அனைவருக்கும் தெரியப்படுத்துவது என்னவெனில் அன்புத்தோழி தமிழ்நதி இந்நிகழ்வில் உரையாற்றியதை இப்போதைக்கு இணைய வெளிகளில் தரவேற்றம் செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அதனை நான் வெளியிடவில்லை மீள மீள அவர் ஞாபகப்படுத்தியதால் ஈக்குருவியிடமும் கேட்டுக்கொண்டதால் அவருடைய உரை தரவேற்றம் செய்யப்படவில்லை. நிச்சயம் காலம் வரும்போது அதனை தரவேற்றம் செய்வேன் இப்போதைக்கு அல்ல.

 யாயினி தவிர்த்து மற்றைய நால்வரும் என்னை மன்னிப்பார்களாக.

இந்த நால்வரில் என்னையும் சேர்த்துள்ளீர்களா எனப் புரியவில்லை. என் படங்கள் ஏற்கனவே என் மூலமாகவே யாழில் இரு முறை வந்து விட்டது மற்றும் முகம் காட்டுவதிலும் எனக்கு பிரச்சனை இல்லை. என் அவதாராகவும் என் படத்தினை பல நாட்கள் போட்டு இருந்தேன். அத்துடன் நிழலியாகத்தான் நிகழ்வுக்கு வந்து என்ன அறிமுகப்படுத்தினேன்

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்கமுடியாத காரணங்களால் என்னால் வர முடியவில்லை. :huh: விழா இனிதே நடைபெற்றதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி. :D

இசை உங்களுடைய காரணம் எனக்கு கிடைத்தது. இம்முறை இல்லாவிட்டால்  இன்னொரு முறை எனது நூல்களின் வெளியீட்டில் கலந்து கொள்ள மாட்டீர்களா என்ன?

இந்த நால்வரில் என்னையும் சேர்த்துள்ளீர்களா எனப் புரியவில்லை. என் படங்கள் ஏற்கனவே என் மூலமாகவே யாழில் இரு முறை வந்து விட்டது மற்றும் முகம் காட்டுவதிலும் எனக்கு பிரச்சனை இல்லை. என் அவதாராகவும் என் படத்தினை பல நாட்கள் போட்டு இருந்தேன். அத்துடன் நிழலியாகத்தான் நிகழ்வுக்கு வந்து என்ன அறிமுகப்படுத்தினேன்

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

உங்களைத்தான் எல்லோருக்கும் தெரியுமாச்சே... அந்தக்கணக்கில் உங்களையெல்லாம் சேர்க்கமுடியாது :lol::icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊப்ஸ் நால்வர் அல்ல ஐவர் ஹிஹி யாழ் உறுப்பினர்கள் ஐவர் இதுவரை யாழில் முகங்காட்டாதவர்கள்

சசி, அர்யூன், நிழலி,காவலூர்கண்மணி, வல்வை சகாறா தவிர்ந்து அறுவர் அதில் யாயினியைத் தவிர்த்தால் மிகுதி இருப்பவர்கள் ஐவர்... :D

இந்த ஐவரிடமும் நான் அடிவாங்குவது உறுதி :rolleyes:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும்..... யாழ் உறவுளின் படத்தை தான், பார்த்தோம்.

இந்தக் காணொளியுடன், குரலையும் கேட்டது.. மிக்க மகிழ்ச்சி. :)

நிழலி, அந்தரப் படுவதைப் பார்க்க.... சிரிப்பாக உள்ளது :D.

ஆரம்பத்திலேயே.... அவர், இதுதான்...முதல் மேடைப் பேச்சு என்று குறிப்பிட்டதால்...

சொதப்பப் போறாரோ என்று யோசித்தேன். ஆனால் பரதூரமாக எதுவும் நடக்கவில்லை.

வல்வை இவ்வளவு நாளும்..... ஆதிவாசி என்ற பெயரில் வந்து முழு யாழ் உறுப்பினர்களையும் ஏமாற்றியதை ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்ததை நினைக்க வெட்கமாக உள்ளது.

ஒருவர்... இரு பெயரில் எழுதும் போது.... எப்படியும் எழுத்து நடை காட்டி விடும். ஆனால்... எங்கும் பிடி கொடுக்காமல் எழுதியது ஆச்சரியமாக  உள்ளது. :)

monkey_eating_banana.gif?__sid=ggl&lang=

கடைசியில ஆதியை எல்லாரும் மறந்திட்டாங்கள் அக்கோய் ஆதிக்கு பிரத்தியேக அழைப்புத்தந்தால்தான் வருவேன்.

அக்கோய்.... என்று தன்னைத்தானே கூப்பிட்டு, எம்மை ரொம்ப கடுப்பேத்திப் போட்டார். :icon_mrgreen:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.