Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களே! ஏன் இன்னும் உங்களுக்கு கல்யாண ஆசை வரலன்னு தெரியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே! ஏன் இன்னும் உங்களுக்கு கல்யாண ஆசை வரலன்னு தெரியுமா?
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறையானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ணம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரும்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையில் மனைவி என்ற ஒரு பெண் முக்கியத்துவம் பெறும் ஒருவேளை கண்டிப்பாக வரும். அந்த நிலைக்கு வந்துவிட்ட பின்னும், இன்னமும் கூட உங்களுக்கு தகுந்த பெண்ணை கண்டுபிடிக்க திணறினால், உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை என்னெவென்று ஆராய வேண்டும். சரி, நீங்கள் திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதற்கான முக்கியமான 10 காரணங்களை இப்போது பார்க்கலாமா..

சுதந்திரத்தை இழக்க விரும்பமாட்டீர்கள்

திருமணமாகாத ஆடவராக இருப்பதிலும் சில நன்மைகள் அடங்கியுள்ளன. நினைத்த நேரத்தில் காலை எழுந்திருக்க முடியும், பிடித்த உணவை சாப்பிட முடியும், நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல முடியும். இவை அனைத்தையும் குறை சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள். மேலும் வீட்டில், உங்களுக்கு பிடித்த கிரிகெட் அல்லது கால்பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் ரசிப்பதற்கு பதிலாக, காதலிக்காக மணிக்கணக்கில் காத்திருக்கவோ அல்லது அவளை காண வெளியில் செல்வதற்கு கண்ணாடி முன் பல மணிநேரம் செலவிடவோ பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் பெண்கள் வேண்டுமென்றால், கண்டிப்பாக சிலவற்றை தியாகம் செய்யத் தான் வேண்டும். அதற்கு தயாராக இல்லாதவர்கள் தான், திருமணம் புரியாமல் இருப்பார்கள்.

அலுப்புத் தட்டும் வகையில் உள்ளவரா?

உங்களுக்கென்று ஒரு உலகம் என்று எப்போதும் ஒரு கோட்டிற்குள்ளேயே வாழ்கிறீர்களா? அந்த உலகத்தை விட்டு வெளிவரவும், உங்கள் மனம் இடம் தரவில்லையா? அப்படியானால் உங்களை சுற்றி உள்ளவர்களை, நீங்கள் அலுப்புத் தட்டி தூங்க வைத்து விடுவீர்கள். அவர்களிடம் பேச சில நினைவுகள் மட்டுமே உங்களிடம் இருக்கும். சிறிது காலம் கழித்து சொன்ன கதையையே திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கும். இதில் பெரிய கொடுமை என்னெவென்றால், அலுப்புத் தட்ட வைக்கும் குணாதிசயம் உடையவர் என்று உங்களுக்கு தெரிந்திருந்தும், அதனை இரகசியமாக வைத்திருக்க மாட்டீர்கள். ஒரு பெண்ணை உங்களால் சிரிக்க வைக்க முடிந்தால், அவளை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கலாம் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

உங்களையே விரும்புகிறீர்களா?

நீங்கள் உங்கள் மீதே அதிக காதல் கொண்டவராக உள்ளீர்களா? அதை தவிர வேறு எதுவும் உங்களை கவரவில்லையா? அப்படியானால் அதிக கவர்ச்சியுடன் அழகான பெண்ணை கண்ட போதிலும் கூட, உங்கள் மனதில் "அவளை விட நான் தான் அழகு" என்ற எண்ணம் தான் இருக்கும். மற்றவர்களின் மேல் குற்றம் கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் கடினமானது, நம்மீது உள்ள குறைகளை நாம் உணர்வது. நீங்கள் இந்த வகை ஆணாக இருந்தால், ஏன் இன்னும் திருமண பந்தத்தில் ஈடுபடவில்லை என்று இப்போது புரிந்திருப்பீர்கள்.

பெண்களை விட விளையாட்டின் மீது மோகம்

இந்த தலைமுறையை சேர்ந்த விளையாட்டு விரும்பிகள், கணிப்பொறி முன் அமர்ந்து விளையாடுவதில் அலாதி காதல் கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்த வரை ,விளையாட்டில் எதிரிகளை வீழ்த்தி, முதல் இடத்தை அடைந்து, உலக பதிவை உடைத்தெறிந்தால் தான் இடைவேளையே விடுவார்கள். ஆகவே இவ்வகையை சேர்ந்தவராக இருந்தால், ஏன் உங்களுக்கு இன்னும் காதலி இல்லை என்பது தெளிவாக புரிந்திருக்கும். அப்படியே ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தாலும், ஒன்று நீங்கள் மாற வேண்டும் அல்லது அவள் உங்களுக்காக மாற வேண்டும்.

உறவில் ஈடுபட விருப்பமின்மை

சுதந்திரமாக இருப்பதை தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் வாழ்க்கையில் ஏன் பெண் ஒரு அங்கமாக இல்லை என்பது உங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. பொதுவாக பெண்களுக்கு ஒரு உறவில் ஈடுபடுவது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும். அவர்களை விட்டுவிட்டு வேறு பெண்ணை நீங்கள் நாடலாம் என்ற பயம் உங்கள் மீது இருக்கலாம். ஆனால் இந்த புதிய உறவு என்பது ஒவ்வொரு உறவுமுறையிலும் முக்கியமான ஒன்று. இந்த உறவின் மீது மதிப்பு வைத்துள்ள ஒரு ஆணை தான் பெண்கள் விரும்புவார்கள். இதை தவிர மற்றவை மீது விருப்பம் காட்டும் ஆணை, எந்த பெண்ணுக்கும் பிடிக்காது.

வேலை இல்லையா?

அனைத்து பெண்களுக்கும் அன்பளிப்பு மற்றும் பரிசு பொருட்களின் மேல் நாட்டம் இருப்பதில்லை. ஆனால் சிலசமயங்களில் வெளியே செல்ல வேண்டும் என்று கண்டிப்பாக ஆசைப்படுவார்கள். வெளியே செல்வதென்றால், சாப்பிட ஏதாவது வாங்கி தருவது, பயணச் செலவை ஏற்பது, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செலவழிப்பது போன்றவைகளாகும். ஆனால் வேலை போய்விட்டதென்றால், இந்த செலவை எல்லாம் உங்களால் செய்ய முடியாது. அதனால் கையில் பணம் இல்லாத போது, காதல் போன்றவற்றில் விழமாட்டீர்கள்.

அமைதியானவரா?

அமைதியாக இருந்து, மற்றவர்களுக்கு உதவி புரிந்து அனுசரணையாக நடந்து கொள்பவரை தான் ஒரு பெண் விரும்புவாள் என்று நீங்கள் நினைத்தால், முதலில் உண்மையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகை நல்ல குணங்கள் உள்ள ஆண்கள், பெண்களிடம் சகஜமாக பழகுவதற்கு அதிக காலம் எடுப்பார்கள். சில நேரம் மிகவும் அதிக நேரம் எடுப்பதால், அந்த பெண் அவன் வாழ்க்கையை விட்டே சென்றிருப்பாள். மேலும் பெண்ணின் கண்களுக்கு மிகவும் நல்லவனாக, அமைதியானவனாக காட்சி அளித்தால், உங்களை இளக்காரமாக நினைத்து விடுவாள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நீங்கள் ஒரு கால்மிதியை போல் பயன்படுத்தப்படுவீர்கள். ஆகவே மற்ற ஆண்களிடம் பழகும் போது, நீங்கள் காட்டும் உங்கள் கடுமையான பக்கத்தை பெண்கள் காணச் செய்ய வேண்டும். உங்களை இணங்கச் செய்வது கடினமாக இருந்தாலும், அதில் ஒரு இனிமையை அவர்கள் காண வேண்டும். மேலும் மற்றவர்களை தாக்கி, அவளை காப்பாற்றும் நிலை வரும் போது, நீங்கள் அப்படி செய்யவே அவள் விரும்புவாள்.

அதிக வினைத்திறமிக்கவரா?

அடக்கம் என்ற குணத்தால் பெண்கள் ஈர்க்கப்படுவார்கள். ஆனால் அதற்காக எப்போது பார்த்தாலும், அதிக அடக்கத்துடன் இருந்தால், அது கொஞ்சம் ஜாஸ்தி தான். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் பேசும் போது, குறிக்கிட்டு கொண்டே இருப்பார்கள். சில கடுமையான கருத்துக்கள் மற்றும் நாகரீகமற்ற நகைச்சுவையை சொன்னாலும் கூட, யாருக்கும் சிரிக்க தோன்றாது. நீங்கள் இப்படிப்பட்டவராக இருந்தால், ஒரு பெண்ணை பொறுத்தவரை அவள் நகத்தை துளையிடும் துன்பமாக நீங்கள் விளங்குவீர்கள். ஆகவே நீங்கள் ஒரு நல்ல நபராக மாறும் வரை, எந்த பெண்ணையும் தொந்தரவு செய்ய வேண்டாம்.

நண்பர்கள் என்ற பெயரில் ஒரு குரங்கு கூட்டத்துடன் இருக்கிறீர்களா?

ஆண்களை, அவர்களின் சேர்க்கையை வைத்தே எடை போடலாம் என்று சொல்வார்கள். அதே போல் பெண்களும் கூட, அவர்களின் சேர்க்கையை வைத்து தான் அவர்களை எடை போடுகிறார்கள். இவ்வாறு உங்களை சுற்றி நண்பர்கள் என்ற பெயரில் குரங்கு கூட்டம் ஒன்று எப்போதும் உங்களை விட்டு பிரியாமல் இருக்கிறதா? அப்படியானால் கண்டிப்பாக ஒரு பெண்ணும் கிடைக்கப்போவதில்லை. மேலும் பழகும் பெண்ணுட் சிடுசிடுப்பாகவே நடந்து கொள்வார்கள். எனவே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், இதுவா, அதுவா என்று.

சோம்பேறியா?

ஷேவ்விங் செய்யவோ அல்லது குளிக்கவோ பிடிப்பதில்லையா? நினைவு தெரிந்த நாள் முதல் தலைமுடியை வெட்டவில்லையா? துணிமணிகளை சரிவர துவைக்காமல், அவைகளை அழுக்குடன் அணிகிறீர்களா? மிச்சமான உணவு அறையெங்கும் சிந்தி கிடக்கிறதா? அறையில் உள்ள பர்னிச்சர்கள் எங்கே என்று தேட வேண்டியிருக்கிறதா? அப்படியானால் நிச்சயம் காதல் உங்களை தேடி வராது.


 
  • கருத்துக்கள உறவுகள்

:D

 

 

10646720_662299547211588_888948188402050

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான ஆண்கள் மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ பலவோ உள்ளவர்களாக உள்ளார்கள். ஆகவே உண்மையான காரணம் மேற் கூறியவை அல்ல யுவர் ஓனர். :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் துணிவு இல்லாதவர்கள், எழுச்சி  குறைந்தவர்கள்  தான்...

கலியாணத்தை தள்ளிப் போடுவார்கள். என்பதையும்... சேர்க்க வேண்டும், யூவார் ஆனர். :D

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் துணிவு இல்லாதவர்கள், ............

கலியாணத்தை தள்ளிப் போடுவார்கள். என்பதையும்... சேர்க்க வேண்டும், யூவார் ஆனர். :D

 

கல்யாணம் கட்ட ஏன் 'துணிவு' வேண்டும்? :o

குடும்ப் பொறுப்பை ஏற்க சிரத்தையில்லை என சொல்லலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு மனதில் துணிவு பெற்று.. எழுச்சி பெற்று என்னத்தைச் சாதிச்சியள்..???!

 

நாலு குட்டியை போட்டிட்டு.. அதை வளர்த்திக்கிட்டு இருப்பியள். அதுக்கு மாடா உழைப்பியள். கூடவே.. சீலை.. நகைக்கு.. கொலிடேக்கும் உழைப்பியள்.. கடைசில ஒரு சந்தோசமும் அனுபவிக்காம கட்டையில போய் சேருவியள்..??!

 

இதுக்கு நாய் தேறல்ல..! அதுவும் இதைத்தான் செய்யுது.. கலியாணம் என்று கட்டினதே இல்ல..!!!  உதுக்கு எதுக்கு பகுத்தறிவு.. ஆறறிவுப் பிறப்பு..??! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்சை ஆராய்ந்து எழுதின கட்டுரைமாதிரி இருக்கு.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

நண்பர்கள் என்ற பெயரில் ஒரு குரங்கு கூட்டத்துடன் இருக்கிறீர்களா?

கல்யாணம் கட்டியும் என்ன றபர் கொண்டும் அழிக்கமுடியிதில்லை. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்கு மனதில் துணிவு பெற்று.. எழுச்சி பெற்று என்னத்தைச் சாதிச்சியள்..???!

 

நாலு குட்டியை போட்டிட்டு.. அதை வளர்த்திக்கிட்டு இருப்பியள். அதுக்கு மாடா உழைப்பியள். கூடவே.. சீலை.. நகைக்கு.. கொலிடேக்கும் உழைப்பியள்.. கடைசில ஒரு சந்தோசமும் அனுபவிக்காம கட்டையில போய் சேருவியள்..??!

 

இதுக்கு நாய் தேறல்ல..! அதுவும் இதைத்தான் செய்யுது.. கலியாணம் என்று கட்டினதே இல்ல..!!!  உதுக்கு எதுக்கு பகுத்தறிவு.. ஆறறிவுப் பிறப்பு..??! :lol::D

 

உலகம் போற போக்கை பார்த்தால் தம்பி நெடுக்கு சொல்லுறது சரி போலைதான் கிடக்கு... :D

 

அண்டு  தொடக்கம் ஒண்டோடையே இருந்து மாரடிக்கவேண்டிக்கிடக்கு....... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் போற போக்கை பார்த்தால் தம்பி நெடுக்கு சொல்லுறது சரி போலைதான் கிடக்கு... :D

 

அண்டு  தொடக்கம் ஒண்டோடையே இருந்து மாரடிக்கவேண்டிக்கிடக்கு....... :D  :lol:

 

தம்பி நெடுக்கு, கலியாணம் கட்டாவிட்டாலும்...... அதனைப் பற்றிய அறிவு அபாரம். :D  :icon_idea: 

 

  • 3 weeks later...

கலியாணம் ஒரு காலச்சார சிறை. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருமே நுனிப்புல் மேய்பவர்களாக உள்ளனர். ரசித்து, உண்டு, சமிபாட்டின் பின்னரே அதன் சக்திகள், நறுமணங்கள், நாற்றங்கள் எல்லாமே வெளிப்படும். இதில் குமாரசாமி ஐயாவே ஐயம்திரிபுற அனுபவித்து சொல்பவர்போல் தெரிகிறது. :lol::(

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான ஆண்கள் சுயமா முடிவெடுக்க முடியாத பேதைகளாக்கப்பட்டுள்ளதை இன்று பரவலாக அவதானிக்க முடிகிறது. பிள்ளைகள் கூட அம்மாமாரால் அதிகம் கட்டுப்படுத்தப்படுவதும்.. தந்தைகள் வீட்டுக்குள்ளேயே இரண்டாம் தரப் பிரஜைகள் போல வாழ்வதையும் காண முடிகிறது. இவை கூட இளைய ஆண்கள் சில முடிவுகளை நீண்ட கால நோக்கோடு எடுக்க சிந்திக்கச் செய்கிறது..!!  

 

இன்றைய இளைய ஆண்கள் சமூகமும்.. விவேகமானதாக உள்ளது..! தேவைக்கு பாவி.. தேவை முடிந்ததும்.. தூக்கி வீசு.. என்ற முறை தான் நல்லது. தேவைக்கு பெறுவது.. அவர்களையே கட்டுப்படுத்துவதை யாருமே விரும்புவதில்லை..!!  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

சம்சாரிகள் வாழுற வாழ்க்கையை பார்த்தால் கல்யாணம் பண்ணிக்காமல் இருப்பதே மேல் என தோணும். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கு கல்யாண ஆசை வரவில்லை என்டால் அதற்கு உரிய ஹோமோன் அவர்களுக்கு இன்னும் சுரக்க இல்லை என்று அர்த்தம். :lol:இதெல்லாம் ஒரு கேள்வியா:)

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் கருத்து சூப்பர்!

இதுவே 100 வீதம் உண்மையாகும்!

இப்படிப்பட்ட ஆண்கள் Male Hormone Imbalance Test செய்வதுதான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பால் குடிப்பதற்காக மாட்டை வாங்க வேண்டுமா என்ற நேபாளிய பழமொழியையயும் இத்தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன் யுவன் ஆனர். :icon_mrgreen:

பால் குடிப்பதற்காக மாட்டை வாங்க வேண்டுமா என்ற நேபாளிய பழமொழியையயும் இத்தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன் யுவன் ஆனர். :icon_mrgreen:

மனித வாழ்விற்கு  இன்றி அமையாத பாலைத்தரும் மென்மையான ஜீவராசியுடன்    அவர்களை  உவமானப்படுத்தியத்தை வன்மையாக கண்டிக்கிறேன் யுவராணர்  :D

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

பால் குடிப்பதற்காக மாட்டை வாங்க வேண்டுமா என்ற நேபாளிய பழமொழியையயும் இத்தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன் யுவன் ஆனர். :icon_mrgreen:

 

இந்த முதுமொழியை ஏதோ ஒரு படத்தில்(கனா கண்டேன்..?) விவேக்கிடம் ஒரு நடிகை கூறியதாக பார்த்திருக்கிறேன். :o:)

 

  • கருத்துக்கள உறவுகள்

பால் குடிப்பதற்கு மாட்டை வாங்கக்கூடாது பசு மாட்டை வாங்க வேண்டும். அதுபோக, பால்குடிக்க பசு மாடு தேவையில்லை என்று வைத்துக்கொண்டாலும் அந்தப் பசு, காளை மாட்டின் துணையில்லாமல் பால் தராது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களுக்கு கல்யாண ஆசை வரவில்லை என்டால் அதற்கு உரிய ஹோமோன் அவர்களுக்கு இன்னும் சுரக்க இல்லை என்று அர்த்தம். :lol:இதெல்லாம் ஒரு கேள்வியா :)

 

அப்பிடியெண்டும் சொல்லேலாது....தட்சணாமூர்த்தியின்ரை தனித்தவில் பாத்து பழக்கப்பட்டு போச்சினமோ ஆருக்குதெரியும்!!  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்டும் சொல்லேலாது....தட்சணாமூர்த்தியின்ரை தனித்தவில் பாத்து பழக்கப்பட்டு போச்சினமோ ஆருக்குதெரியும்!!  :D  :lol:

 

சிலருக்கு... தனித்தவில், தனி ஆவர்த்தனம் பார்ப்பதில், கேட்பதில் ஆசை இருக்கும்.

அது, அவரவர் விருப்பம். அதனை நாம் குற்றம் சொல்ல முடியாது.

ஒரு கட்டத்தில்... அவர்களே, அதனை வெறுத்து... கூட்டுக் கச்சேரி கேட்க ஆசைப்படுவார்கள்.

அப்போ.... வயது, வட்டுக்குள்ளை போயிருக்கும்.troll-face-meme-smiley-emoticon.gif rolling.gif :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். கொப்புத் தாவவேண்டும். தாவாவிட்டால்....!

 

சீ சீ இந்தக் காயும் புளிக்கும்!  :(  அந்தப் பழமும் புளிக்கும்!!.  :(  :(

ஆண்களுக்கு கல்யாண ஆசை வரவில்லை என்டால் அதற்கு உரிய ஹோமோன் அவர்களுக்கு இன்னும் சுரக்க இல்லை என்று அர்த்தம். :lol:இதெல்லாம் ஒரு கேள்வியா :)

அது இப்பொது அதிகமாகவும் இளவயதிலேயே சுரக்க ஆரம்பித்துவிட்டது. 

 

அதன் தாக்கத்தை தாயகம்வரை கேட்கின்றது.... சட்டத்துக்கு புறம்பான கருக்கலைப்பும் இயற்கைக்கு மாறான உறவும் இப்பொது அதிகரித்துள்ளது.

 

அதுபோக இந்த கல்யாண கன்றாவியை கண்டு பிடித்தவன் மாத்திரம் என்னிட்டை கிடைத்தான் அவன் செத்தான்.

 

மனிசி வருது நான் பிறகு வந்து மிச்சம் சொல்லுறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.