Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞரை அடித்துக்கொன்ற வெள்ளைப்புலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: டெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவரை  வெள்ளைப்புலி அடித்துக் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மதியம் 1.30 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புலி அடைக்கப்பட்டிருந்த வேலிப்பகுதியின் அருகே நின்று அந்த இளைஞர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது உள்ளே இருந்த காய்ந்த தடாகத்தினுள் தவறி விழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வெள்ளைப்புலி பாய்ந்து வந்து அந்த இளைஞரை அடித்து இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த இளைஞர்  எவ்வாறு உள்ளே விழுந்தார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. சிலர் அந்த தடுப்பு வேலி மீது இளைஞர் அமர்ந்திருந்தபோது உள்ளே விழுந்ததாகவும், வேறு சிலர் தடுப்பு வேலிக் கம்பியின் உயரம் மிகவும் தாழ்வாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே அந்த இளைஞர் உள்ளே விழுந்ததாகவும் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், "புலி இருந்த பகுதிக்குள்ளிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டதும் ஓடிச் சென்று வேலிக்கு அருகே சென்று பார்த்தேன். அப்போது அந்த வெள்ளைப்புலியின் வாயில் அந்த இளைஞர் சிக்கியிருந்தார்.அந்த இளைஞரின் கழுத்தை கவ்விப்பிடித்து புலி  தூக்கிச் சென்றுகொண்டிருந்தது. வலியால் அவர் அலறி துடித்துக்கொண்டிருந்தார்" என்றார். 

மற்றொருவர் கூறுகையில், "அந்த இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னர் சுமார் 10 நிமிடங்களாவது பீதியோடு போராடினார். புலியை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். சில வினாடிகள் அந்த இளைஞரை புலி உற்று பார்த்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே புலி அவரை விரட்டிச் சென்று கவ்வி பிடித்தது. அங்கு வந்த பாதுகாவலர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை" என்றார்.

ஆனால் வேறு சிலர், புலியை மயக்கமடைய செய்யும் துப்பாக்கி எதுவும் பாதுகாவலர்களிடம் இல்லை என்று குற்றம் சாட்டினர். 

இந்நிலையில் புலியால் அடித்து தூக்கிச் செல்லப்பட்ட இளைஞரின் தலையின் சில பாகங்களை புலி கடித்து தின்றுள்ளதாகவும், மாணவனின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உயிரியல் பூங்காவுக்கு வந்த சிறுவர்கள் சிலர் புலி அடைக்கப்பட்டிருந்த வேலிக்குள் கற்கள் white%20tiger.jpgமற்றும் சிறிய கம்புகளை தூக்கி வீசியதாகவும், அதன் பின்னரே ஒருவரை புலி தனது வாயில் கவ்விக் கொண்டு சென்றதை பார்த்ததாகவும் வேறு சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடந்த சம்பவத்தை பிட்டு என்பவர் தனது மொபைல் கேமராவில் படம் பிடித்துள்ளார்.

அவர் கூறுகையில்,  "புலியிடம் சிக்கிய இளைஞரை காப்பாற்ற பாதுகாவலர்கள் மிகவும் தாமதமாகவே வந்தனர். வந்த பின்னரும் அவர்கள் தடுப்பு வேலிக்கு அருகில் நின்றவர்களைத்தான் விரட்டிக்கொண்டிருந்தார்களே தவிர, இளைஞரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை" என தெரிவித்தார். 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=32694

  • கருத்துக்கள உறவுகள்

white_tiger_afp_2121648f.jpg

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி மிருகக்காட்சிசாலையில் புலியினால் கொல்லப்படும் வாலிபர் - அதிர்ச்சி தரும் காணொளி !!!

 

 

 

https://www.facebook.com/video/video.php?v=720786707987851

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவிற்கும், அந்த மாணவனின் அருகில் 15 நிமிடமளவில், புலி ஒன்றும் செய்யாமல் நின்றுள்ளது.

அதுவரை ஒரு மிருகக்காட்சி பொறுப்பாளர்களும் வராதது மிகவும் கண்டிக்கப் பட வேண்டியது.
என்ன... ஆசையுடன், மிருகக் காட்சி சாலைக்குப் போயிருப்பான் அந்த மாணவன்.

நினைக்கவே.... வேதனையாக உள்ளது. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான ஒரு Video clip. அந்த இளைஞன் உயிரோடிருந்த ஒவ்வொரு கணமும் தன்னை யாராவது காப்பாற்றுவார்கள் என்று திரும்பிப்பார்த்ததுதான் கண்ணுக்குள் நிழலாடுகிறது. Such a tragedy... Rest in Peace ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞரை கொன்ற புலியை என்ன செய்வது? 

 

 

‘பழக்கப்பட்ட புலி என்று ஒன்று கிடையவே கிடையாது’ - உலகிலுள்ள புலி ஆய்வாளர் களிடம் புழங்கும் பிரபல வாசகம் இது. கடந்த 2000-ம் ஆண்டில் ஆப்பிரிக்க காடுகளில் புலிகளுக்கு வசிப்பிடம் ஏற்படுத்துவதற்காக புலிகளை கட்டிப்பிடித்து கொஞ்சி, மிக நெருக்க மாக பழகிய ஜான் வார்டியும் இதையேதான் சொன்னார்.

தாய்லாந்து அரசாங்கம் காடுகளில் இருந்து குட்டிப் புலிகளை கைப்பற்றி, அதனை மனிதனுடன் பழக்கி புலிகள் சுற்றுலா (Tiger tourism) திட்டத்தை நடத்தி வருகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.700 செலுத்தினால் அந்தப் புலிகளுடன் கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடலாம். ஆனாலும், புலிகள் எந்த நேரத்திலும் மனிதருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால் இந்தத் திட்டத்துக்கும் உலகெங்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. டெல்லி உயிரியல் பூங்காவில் நடந்துள்ள சம்பவமும் மேற்கண்ட கூற்றை உறுதிப் படுத்துகிறது.

டெல்லி புலி விஜய் மிகவும் சாதுவானது; அதன் பாதுகாவலர் களுடன் சகஜமாக விளையாடும் தன்மை கொண்டது என்கிறது பூங்கா நிர்வாகம். ஆனாலும், ஒரு புலி தனது எல்லைக்குள் புகுந்த இன்னோர் உயிரினத்தை தாக்கவே முற்படும். ஏனெனில், புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை. அவை சிறுநீரை பீய்ச்சியடித்து தங்களுக்கான அதிகார எல்லையை நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த எல்லைக்குள் இரை விலங்குகளைத் தவிர வேறு புலி வருவதைகூட அவை விரும்பாது.

இளைஞரை கொன்ற அந்தப் புலி, உயிரியல் பூங்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் உயிரியல் ரீதியான அதன் பழக்க வழக்கங்கள் என்பது அதன் மரபு வழியாக வந்தவை. அதனால், அந்தப் புலி அந்த இளைஞரை தாக்கிக் கொன்றிருக்கலாம். தவிர, ஒரு புலி மனிதனை தாக்கிக் கொல் வதற்கான காரணத்தை ஒருபோதும் அறுதியிட்டு சொல்லவே முடி யாது. ஏனெனில், விலங்குகள் இப்படித்தான் நடந்துகொள்ளூம் என்று பத்தாயிரம் கருத்துருக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை யாரும் எதிர்பாராத பத்தாயிரத்து ஒன்றையும் செய்யும் என்கின்றன விலங்கியல் ஆய்வுகள்.

 

ஒருவேளை அந்த இளைஞர் எழுந்து நின்று, கடுமையாக சத்தம் எழுப்பியிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம். ஏனெனில், உட்கார்ந்த நிலையில் இருந்த அந்த இளைஞரை தன்னை விட உயரம் குறைந்த இரை விலங்காக அந்தப் புலி கருதியிருக்கலாம். இதனால், நின்ற நிலையில் அந்த இளைஞர் இருந்திருந்தால் புலி விலகியிருக்கக்கூடும். ஆனால், அதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. இதற்கிடையே அந்தப் புலியை உயிரியல் பூங்காவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. அப்புறப் படுத்தி அதனை வேறு எங்கு வைப்பது? இன்னொரு உயிரியல் பூங்காவிலா? அதற்கு அங்கேயே இருக்கலாமே. காட்டில் விடலாம் என்கின்றனர் சிலர். காட்டில் விட்டால், அது பெரும்பாலும் இறக்கவே வாய்ப்பு இருக்கிறது. சுமார் 14 ஆண்டுகள் உயிரியல் பூங்காவில் வசித்த அந்தப் புலிக்கு காட்டு வாழ்க்கை தெரியாது. வேட்டை யாடியும் பழக்கமில்லை. எனவே, அதனை அப்புறப்படுத்துவது என்பது புத்திசாலித்தனம் அல்ல.

 

இப்போது மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், அந்தப் புலி இளைஞரின் உடல் பாகங்கள் எதையேனும் சாப்பிட்டிருக்கிறதா என்பதுதான். அது பிரேதப் பரி சோதனை முடிவுகளில் தெரிய வரும். ஒருவேளை அப்படி மனித உடல் பாகத்தை சாப்பிட்டிருந்தால் - உப்பு ரத்தத்தின் சுவைக்காக அது மீண்டும் மனிதனை தாக்க மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்போது அதை மனிதர்களின் அலட்சியத்தின்போதுகூட அணுக முடியாத, கடுமையான பாதுகாப்பு சூழலில் வைக்க வேண்டும். 

 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/article6444839.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
ஹிந்துவின் கருத்தின் படி புலியின் உயிர் மனித உயிரை விட விலைமதிப்பாக தெரிகிறது. மனிதனையே கொன்று விட்டது. இனி புலி இரத்தத்தை சுவைத்ததா என ஒரு ஆராட்சி?? அதற்கு பிறகு புலி இன்னும் கொல்லுமா என்றொரு முடிவு??
 
படம் பிடித்த நேரத்துக்கு அல்லது இன்னொருவரிடம் சொல்லி  மிருக உத்தியோகத்தரை உடனடியாக அழைத்து இருந்தால் மனிதனின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். புலி ஒருவரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் கட்டாக்காலியாக விடப்பட்டது ஆச்சரியமாக உள்ளது.

 

ஹிந்துவின் கருத்தின் படி புலியின் உயிர் மனித உயிரை விட விலைமதிப்பாக தெரிகிறது. மனிதனையே கொன்று விட்டது. இனி புலி இரத்தத்தை சுவைத்ததா என ஒரு ஆராட்சி?? அதற்கு பிறகு புலி இன்னும் கொல்லுமா என்றொரு முடிவு??
 
படம் பிடித்த நேரத்துக்கு அல்லது இன்னொருவரிடம் சொல்லி  மிருக உத்தியோகத்தரை உடனடியாக அழைத்து இருந்தால் மனிதனின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். புலி ஒருவரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் கட்டாக்காலியாக விடப்பட்டது ஆச்சரியமாக உள்ளது.

 

 

நுணா, படம் பிடித்தவர் போக மிச்சப் பேர் காவலர்களை அழைக்க பல முறை முயன்றனர் என்றும், இளைஞனை புலி கொன்ற பின் 20 நிமிடங்கள் கழித்தே காவலர்கள் வந்தனர் என்றும் செய்திகள் சொல்கின்றனர். இப்படியான சந்தர்ப்பங்களில் மயக்க ஊசியை தொலைவில் இருந்தே செலுத்தித் தான் காப்பாற்றுவார்களாம்.... ஆனால் செவ்வாய்க்கு ரொக்கட் விட்ட இந்தியாவில் புலிக்கு ஊசி போட ஆட்கள் இல்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றுமொரு புலிப்பாய்ச்சல்

 

https://www.facebook.com/video/video.php?v=1043369875690608

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காணொளியில், புலியின் இருப்பிடம் பள்ளத்தில் இருந்தாலும்,
அதன் தடுப்புவேலி, ஒருவரின் முழங்கால் அளவே உள்ளது.
மனதை பாதித்த... ஒரு நிகழ்வு.

பார்வையாளர்கள் கத்தி கூச்சல் இட்டு இருக்காட்டி, பேசாமல் விட்டு இருக்குமோ என்று தோன்றுகின்றது. அதன் மேல் கற்களையும் தடிகளையும் வீசி 15 நிமிடமாக சும்மா நின்ற புலியை சீண்டி விட்ட மாதிரித் தான் தெரிகின்றது.

 

டெல்லி மிருகக்காட்சி சாலை ஆட்கள் இப்ப அந்த இளைஞன் ஒரு மனநிலை பாதிப்படைந்த இளைஞன் என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர்.


சரி, மனிதனுக்கு பதிலாக ஒரு மானோ மாடோ இருந்திருந்தால் இது செய்தியாகவே போயிருக்காது, அல்லது National Geography channel இல் காசு கொடுத்து பார்த்து இருப்பம்.

 

உலகம் முழுதும் சரணாலயங்கள் தவிர மிச்சம் இருக்கின்ற அனைத்து Zoo களையும் பூட்ட வேண்டும் முதலில். இதுவும் ஒரு பெரும் மிருக வதைதான்.

மிக மிக அநியாயமாக ஒரு உயிர் போய்விட்டது .

 

பி பி சி யில் கருத்து தெரிவித்த zoo முகாமையாளர் பச்சை பொய் சொன்னார் போலிருக்கு ,அந்த இளைஞன் நாலு ஐந்து தடுப்புகளை தாண்டிப்போய் புலியை சீண்டியதாக சொன்னார் .

 

நெருப்பு கொழுத்தி போட்டிருந்தால் புலி ஓடியிருக்கும் என்று சொல்லுகின்றார்கள்  .தாயை காத்த தனயன் படத்தில் அப்படி ஒரு சீன் இருக்கு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஜேர்மனியின் ஒருசில ஊடகங்களில் இந்த்தசெய்தி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
பார்க்க வேதனையாக உள்ளது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக மிக அநியாயமாக ஒரு உயிர் போய்விட்டது .

 

பி பி சி யில் கருத்து தெரிவித்த zoo முகாமையாளர் பச்சை பொய் சொன்னார் போலிருக்கு ,அந்த இளைஞன் நாலு ஐந்து தடுப்புகளை தாண்டிப்போய் புலியை சீண்டியதாக சொன்னார் .

 

நெருப்பு கொழுத்தி போட்டிருந்தால் புலி ஓடியிருக்கும் என்று சொல்லுகின்றார்கள்  .தாயை காத்த தனயன் படத்தில் அப்படி ஒரு சீன் இருக்கு .

 

இனிமேல் மிருககாட்சிச்சாலைக்கு போகேக்கை காவோலையும் நெருப்புப்பெட்டியும் கொண்டுபோகத்தான் இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

மனித குணம் மிருகத்தனமானது

அதன்வேட்கை அடிமனதிலுள்ள இதுபோன்ற கொடூரங்களை வேடிக்கை ரசிப்பது...

அது தான் இங்கு மேலோங்கி நின்று இருக்கிறது... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

.

 

நெருப்பு கொழுத்தி போட்டிருந்தால் புலி ஓடியிருக்கும் என்று சொல்லுகின்றார்கள்  .தாயை காத்த தனயன் படத்தில் அப்படி ஒரு சீன் இருக்கு .

இப்ப ஆர் சினிமா படங்களுக்கு விசிலடிச்சான்குஞ்சுகள் என்று தெரிஞ்சுபோச்சு. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நிழலியின் கருத்தே நல்லது பார்வையாளர்களினாலேயே அநியாயமாக ஒரு உயிர் துடிக்க துடிக்க கொல்லபட்டிருக்கு. நம்மைடை போராட்டத்திலும் சைற்றிலை நின்று குரைச்சைவையாளளைதான் தமிழர்களுக்கு பெரும் துன்பம் கண்டியளோ!

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நிழலியின் கருத்தே நல்லது பார்வையாளர்களினாலேயே அநியாயமாக ஒரு உயிர் துடிக்க துடிக்க கொல்லபட்டிருக்கு. நம்மைடை போராட்டத்திலும் சைற்றிலை நின்று குரைச்சைவையாளளைதான் தமிழர்களுக்கு பெரும் துன்பம் கண்டியளோ!

 

நூற்றுக்கு நூறு, வீதம் உண்மை பெருமாள்.

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கு நூறு, வீதம் உண்மை பெருமாள்.

அட அதை விடுங்க சிறி இனவளிப்பு அரசுக்கு ஜால்ரா அடிக்கும் கருத்துகளமாணிக்கங்களுக்கு உதாரணமாய் இதன் அடுத்த கிளைச்செய்தி.

 

 

009.jpg

 

விஜய்யை ஒன்றும் செய்யாதீர்கள்: த்ரிஷா கெஞ்சல்
 
சமீபத்தில் அனைவரையும் கலங்க வைத்த சம்பவம் டெல்லியில் நடந்தேறியது.
அங்குள்ள விலங்கியல் பூங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை 20 வயதுள்ள வாலிபர் ஒருவதை புலி கடித்துக் குதறியது.
இதனையடுத்து இப்புலியை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்புலியை கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது த்ரிஷாவும் அந்த விஜய் என்ற புலியை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
cineulagam.com/
  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் வளர்ப்பு வளர்த்தாலும் மிருகம் மிருகம்தான். செல்லமாக வளர்க்கும் நாய்களே சில வேளை எஜமானர்களை பதம் பார்த்து விடுகிறது. இது காட்டில் நடந்திருந்தால், ஏதோ ஒருவரை புலி அடித்து விட்டது என்று சொல்லி, பிணத்தை எரித்திருப்போம். ஆனால் அந்த 20 வயது மாணவன் 10 நிமிடங்கள் பட்ட வேதனையை முக புத்தகத்திலும், மற்ற தளங்களிலும் பார்க்க முடியாமல் இருக்கிறது. இதயம் கனக்கிறது. மாணவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மிருக காட்சி சாலையின் பாதுகாப்பிலும், அவசர உதவி சேவையிலும் ஓட்டைகள் உள்ளன.

இப்ப ஆர் சினிமா படங்களுக்கு விசிலடிச்சான்குஞ்சுகள் என்று தெரிஞ்சுபோச்சு. :D  :D

அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.

ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.

..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.

..

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

..

காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.

 

விளக்கமான ஒரு கட்டுரையில் சிறு பகுதி இணைத்துள்ளேன் .எங்கு இருந்து எடுத்தது என்பதை விட எதை எடுத்தம் என்பதுதான் முக்கியம் ,பத்திரிகை ,சினிமா ,புத்தகம் இவற்றில் இருந்து நல்லதையும் கற்கலாம் கெட்டதையும் பொறுக்கலாம் அது அவரவர் அறிவை பொறுத்து.

 

அண்ணை காவோலையும் தீப்பெட்டியும் இருந்தால் தான் நெருப்பு மூட்டலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இந்தியா. அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயில் மங்கள்ஜான் இறங்குவது முக்கியமல்ல இந்திய பூமியில் நடக்கும் பல மனித குலத்திற்கெதிரான நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிருகக் காட்சி சாலைக்கு,  வருபவர்களே....  குழந்தைகளும், 15 வயதிற்குடபட்ட மாணவ, மாணவியரும் தான்.
அவர்களுக்கு.... கொடுக்க வேண்டிய பாதுக்காப்பை கொடுக்கத் தவறிய...

மிருகக் காட்சி சாலை இயக்குனரையும், புலிகளுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியையும்,

அந்தப் புலிக்கு.... இரையாக கொடுக்க வேண்டும்.
அப்ப தான், மற்ற மிருகக் காட்சி, பொறுப்பானவர்கள் திருந்துவார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை காவோலையும் தீப்பெட்டியும் இருந்தால் தான் நெருப்பு மூட்டலாமா ?

 

நம்ம அறிவுக்கு காவோலைதான் வந்தது அண்ணா.......உங்களை மாதிரி அணுசக்தி அறிவெல்லாம் நமக்கு வராது அண்ணா.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புலி!

அன்புள்ள ஜெயமோகன், நான் தங்களின் வலை தளம் மற்றும் நூல்களின் தீவீர வாசகன். என்னை இன்று வெகுவாக பாதித்ததை தங்களிடம் பகிரவே இக் கடிதம் கடந்த இரண்டு நாட்களுக்குள் எனக்கு whatsapp இல் கீழ்க்கண்ட வீடியோக்கள் நண்பர்கள் மூலம் பகிரப்பட்டது.1. மின்சார ரயில் கூரையில் ஏறி மின் கம்பியை தொட்டு உயிரை விடும் மன நோயாளியின் நேரடிகாட்சி.2. நேற்று வெள்ளை புலியிடம் சிக்கி உயிரிழந்த வாலிபன் பற்றிய நேரடி காட்சி (இதை என்னால் 3 நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை, ஆப் செய்து delete செய்துவிட்டேன்) 3.மனைவியின் தலையை கொய்து அதனுடன் இருக்கும் கணவனின் புகைப்படம்.

ஐயா, சக மனிதன் ஏதேதோ காரணங்களால் உயிர் இழப்பதை, எந்த மன உறுத்தலும் இல்லாமல் கைபேசியில் படமெடுக்கும் இந்த சமிபத்திய அரக்கத்தனம் மனித இனத்தை எங்கு கொண்டு செல்லும்?

மனித மனதின் அன்பின் ஊடகவும், குரூரத்தின் உச்ச நிலைகளையும் கதை, கட்டுரை மூலம் சொல்லும் (யானை டாக்டர், 3 சிறுத்தை 1 புலி, காடு நாவல் ) தாங்கள் இதற்கு கூறும் சிந்தனை மிக்க நல்ல பதிலால், தங்களின் ஏராளமான வாசகர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சி உண்டாகும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்கள் பதிலால் மனித மனங்களின் வக்கிரம் தணியும்.

குறிப்பு : நான் பார்க்க பயந்த புலி பட துணுக்கை (வீடியோ) என் உடன் பணி புரியும் பெண்கள் ஆர்வத்துடன் முழுதும் பார்த்தனர்.

அன்புடன்

சரவணகுமார்

வடசேரி

நாகர்கோயில்

-------------

அன்புள்ள சரவணக்குமார்,

இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது என்று புரியவில்லை. எப்போதும் மனிதனுக்கு உக்கிரமான நிகழ்ச்சிகள் மீது பெரிய ஆர்வம் இருக்கிறது. கொலை,தற்கொலை, விபத்துக்கள், அடிதடிகள், கலகங்கள்…

ஏனென்றால் அன்றாடவாழ்க்கை மிகவும் சலிப்பானது. தட்டையானது. அடிப்படை உணர்ச்சிகள் எதுவும் வெளிப்படாதது.ஆகவே வாழ்ந்த நிறைவையே அளிக்காதது. ஆகவேதான் நாம் பயணம் போகிறோம். சாகஸங்கள் செய்கிறோம்,

ஆகவே எந்த ஒரு தீவிரமான நிகழ்ச்சியையும் மனிதர்கள் தவறவிடுவதில்லை. கலவரங்களையும் தீவிபத்தையும் வேடிக்கைபார்க்கப்போய் சாகிறவர்கள்தான் அதிகம். 2004ல் சுனாமி வந்தபோது சென்னையில் சுனாமி தாக்கியதைக் கேள்விப்பட்டு அவசரமாக கடற்கரைக்கு வேடிக்கைபார்க்க ஓடிப்போனவர்கள்தான் குமரிமாவட்டத்தில் அதிகம் பலியானார்கள். [நானும் நாஞ்சில்நாடனும் சிலரும் போக முயன்றோம், வாகனம் சிக்கவில்லை]

சென்ற நூற்றாண்டில் ஊடகங்கள் இல்லாதபோது கொலை, விபத்து போன்றவை வாய்மொழிப்பாடல்களாக இயற்றப்பட்டு நாடோடிப்பாடல்களாகச் சந்தைகளிலும் முச்சந்திகளிலும் நீண்டபாடல்களாக பாடப்பட்டன. அவை பின்னர் சிறிய ‘குஜிலி’ பதிப்பு நூல்களாக வெளிவந்தன.நானே பலவற்றை கேட்டிருக்கிறேன். காசுகொடுத்து வாங்கவும் செய்திருக்கிறேன்.

எடத்துவாவின் யானை மிரண்ட கதை நினைவில்கூட இருக்கிறது.

அஞ்சாறுபேர் ஓடி அறையிலு கேறியே.

ஆனவந்நப்போள் அவிடே தூறியே

ஆனைப்பிண்ணம் கண்டல்லோ அம்மச்சி சத்துபோயீ!

ஆனமுடி கொண்டல்லோ அம்மிணி காஞ்ஞுபோயீ!

[சற்று கௌரவமான தமிழாக்கம்

ஐந்தாறுபேர் ஓடி அறையில் ஒளிந்தனர்

ஆனைவந்தபோது அங்கே மலம் கழித்தனர்

ஆனையின்சாணியைக் கண்டுதான் பாட்டி செத்துப்போனாள்

ஆனையின் வால்முடி பட்டு அம்மிணி செய்த்துப்போனாள்]

இந்தப்பாடலை பாடியவர் ஒரு முஸ்லீம்பாடகர். மஸ்தான் என்று பெயர். இவர்களெல்லாருமே மஸ்தான்கள்தான். இவர் தீப்பெட்டியில் படுவேகமாக இரண்டுவிரலால் தாளம்போட்டுப்பாடுவார். ஆகவே தீப்பெட்டி மஸ்தான் என்று சான்றோரால் அழைக்கப்பட்டார். எடத்துவாவின் யானை சொர்க்கத்துக்குப் போகிறது. ‘படச்சோன்’ அதனிடம் கணக்கு சொல்கிறார். ‘டா ஹமுக்கே நீ எப்டீடா பதினெட்டுபேரை மய்யத்தாக்கினே? ஹராம்பொறப்பே?’ யானை பதிலுக்கு பரிதாபமாக மன்றாடுகிறது

ரட்சகனாம் ஒடயதே ரண்டுவாக்கு கேக்கணே

ரண்டுதலை உண்டே அடியென்றே கணக்கிலே

பேடிச்சு சத்ததும் பனிபிடிச்சு சத்ததும்

பாவத்தின்றே குற்றமோ பறயீன் தம்புரானே

[ரட்சகனாகிய இறைவா இரண்டு வார்த்தை கேள்

என் கணக்கில் இரண்டு தலைதான் உண்டு

பயந்து செத்ததும் நடுங்கிச் செத்ததும்

பாவமாகிய என் தப்பா சொல்லு]

திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற குஜிலிபாடகரான உண்ணிகிருஷ்ணன் மேனோன் ஆ.மாதவனின் எட்டாவதுநாள் என்ற குறுநாவலில் அழகிய கதாபாத்திரமாக வருகிறார். நானே அவரை பார்த்திருக்கிறேன். கொலை வர்ணனையில் ‘மாஸ்டர்’. தாசிகளையும் சிறப்பாக வர்ணிப்பார். சட்டம்பி கோமப்பன் வாக்கத்தி நாணுக்குட்டன் நாயரின் வயிற்றை குத்திக்கிழித்தபோது அவரது நாள்பட்ட வாயுப்பிரச்சினை காரணமக ‘காற்று’ அந்த துளை வழியாக வெளியே போன வருணனை மெய்சிலிர்க்கவைக்கும்

காலையில் வெண்சருமமும் கச்சிதமீசையும் சட்டைக்குப்பின் கர்ச்சீபும் வெண்ணிற உடையுமாக அழகாக இருப்பார். ‘பகலிலே பக்கா நாயர். ராத்திரியில் ஆளு தனி செற்ற’ என்று சாளைப்பட்டாணி சொல்கிறார் . அவரை ஜகதி ஸ்ரீகுமார் ஒரு படத்தில் நடித்தும் காட்டியிருக்கிறர்.

‘ஒற்றக்கொம்பில் இரட்டத்தூக்கு’ ‘ஆறணாவுக்கு அஞ்சு கொலை’ போன்ற பல தற்கொலைகளும் அருங்கொலைகளும் பாடல்பெற்றிருக்கின்றன. ‘மறியக்குட்டிக்கொலக்கேஸு’, ‘மதராசிலே மோன்’ போன்ற சில பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

செம்பரத்தி

செம்பரத்தி

அப்படி ஒருகொலைப்பாடல் 1972ல் நல்லபடமாகவும் வந்துள்ளது. செம்பருத்தி. பி.என்மேனன் இயக்கியது. அசோக் குமார் ஒளிப்பதிவு செய்த அருமையான கருப்புவெள்ளை படம். திரைக்கதை மலையாற்றூர் ராமகிருஷ்னன். ‘சக்ரவர்த்தினீ நினக்கு ஞான்’ போன்ற அற்புதமான பாடல்கள் உள்ளபடம். வயலார் எழுதி தேவராஜன் இசை.

தமிழில் தென்னகத்தில் இப்பாடல்கள் கொலைச்சிந்து என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. முனைவர் அ.கா.பெருமாள் கொலைச்சிந்துக்களை நல்ல அறிமுக உரையுடன் தொகுத்திருக்கிறார். நா.வானமாமலை கொலைச்சிந்துக்களை ‘நவீன நகர்சார் நாட்டார்பாடல்கள்’ என்று வகுக்கிறார். ‘தமிழில் கொலைச்சிந்து’ என்னும் ஆய்வுநூல் மருதத்துரை என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இணைய்த்தில் தமிழகத்தில் கொலைச்சிந்து என்ற பேரில் ஒரு நூல் வெளிவந்துள்ள தகவல் உள்ளது [சி. மா இரவிச்சந்திரன், பா சுபாஷ்போஸ்]

ப.சரவணன் கொலைச்சிந்து என்னும் வடிவம் உருவான முறைபற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலைப்போருக்குக் கூட கொலைச்சிந்து வடிவம் பயன்படுத்தபப்ட்டிருக்கிறது. பகத்சிங் கொலைச்சிந்து ஆங்கில அரசால் தடைசெய்யபப்ட்டது என்கிறார் சரவணன். முனைவர் சி.சுந்தரேசன் கொலைச்சிந்து பற்றி ஒரு அறிமுகக்குறிப்பை எழுதியிருக்கிறார்

சித்தையன் கொலைச்சிந்து, மம்பட்டியான் கொலைச்சிந்து போன்றவை மக்களிடையே பிரபலமானவை. மம்பட்டியான் கொலைச்சிந்து மலையூர் மம்பட்டியான் என்ற பேரில் படமாக வந்தது. சித்தையன் கொலைச்சிந்தை இணையத்திலேயே வாசிக்கலாம்

இவை எல்லாமே கொடூரமான வர்ணனைக்குப் புகழ்பெறவை. இன்றைய ‘மாஸ்’ சினிமாவில் வரும் வன்முறைக்காட்சிக்கு ஒருபடி மேல் என்று சொல்லத்தக்கவை .சந்தேகத்தால் மனைவியைக் கொலைசெய்தவன் சித்தையன். அதை சித்தையன் கொலைச்சிந்து இப்ப வருணிக்கிறது

வீச்சருவாள் கையில் எடுத்து – அடியே

வெக்கம் கெட்ட வேசி மகளே வெகுமதி உனக்கு இதுதான் என்று

வெட்டினானாம் கழுத்தைச் சேர்த்து – பாலம்மாளையும்

வெட்டினானாம் கழுத்தைச் சேர்த்து

சண்டாளப் பாவியப் பையல் சதக்கென்று வெட்டியதில்

சலசலன்னு ரத்தம் தெறிக்க – பாலம்மாள் உடல்

தரையில் விழுந்து துடிக்க – தாலி

கட்டிக்கொண்ட சம்சாரத்தை கொலை செய்த துரோகி என்று

தலை அவனைக் கண்டு துடிக்க

(சித்தையன் கொலைச் சிந்து)

தினத்ந்தின் சதக் சதக் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லையா என்ன? இன்றும் நாம் அதிகம் நாளிதழில் சதக் சதக் செய்திகளைத்தானே வாசிக்கிறோம். [சுனாமி பற்றி வைரமுத்து எழுதிய கவிதையும் சமீபத்தில் எஸ்.ரா புலி மனிதனைக் கொலை செய்ததைப்பற்றி எழுதிய குறிப்பும் கொலைச்சிந்து பாட்டின் நவீன வடிவங்கள் என்று தோன்றியது]

கொலைச்சிந்துக்கு முன்னால் உள்ள நாட்டுப்புறப்பாடல்களும் இதே மனநிலையைத்தான் காட்டுகின்றன. பொன்னிறத்தாள் அம்மன் கதை, மதுசூதனப்பெருமாள் மாடன் பாட்டு எல்லாமே அருங்கொலை வர்ணனைகள்தான். சொல்லப்போனால் கலிங்கத்துப்பரணியும் புறநாநூறும்கூட இம்மனநிலையை உள்ளடக்கியவைதான்

ஊரில் பேசப்படும் விஷயங்கள் எல்லாமே இம்மாதிரி நிகழ்ச்சிகள்தானே? 1901 ல் எங்களூரில் இதேமாதிரி ஒரு நிகழ்ச்சி. நாலைந்து பெண்கள் புல்லறுத்துக்கொண்டிருந்தனர். ஒருத்தி சொன்னாள் ‘அங்க பாருடி அக்கா என்னமோ ஒண்ணு நெரங்கி [தவழ்ந்து] வருது’. ‘பூனையில்லா? பேதீல போறது வளந்துல்லா நிக்கி!’ என்று இன்னொருத்தி. வந்தது புலி. அவளை கவ்வி இழுத்துக்கொண்டு சென்றது. அது செவிவழிக்கதையாக நூறாண்டுக்காலம் புழங்கியது.

இன்று அந்த இடம் முக்கியமான குறுநகர் மையம்.இன்றும் புலியெறங்கி [அல்லது புலிநெரங்கி] என்றே அழைக்கப்படுகிறது. நண்பர் கே.பி.வினோதின் மனைவி ஊர் அது. குலசேகரத்தில் ‘புலிநெரங்கி எல்லாம் எறங்குங்க’ என்று கூவி கண்டக்டர் இறக்கிவிடுவார்

ஒருவனை புலி அடிப்பது ‘பரிதாபம்’ மட்டும் அல்ல. அது ஒரு அபூர்வ நிகழ்ச்சி. அந்த ‘வரலாற்றில்’ பங்குகொள்ளவும் பதிவுசெய்யவும் சாமானியர் துடிக்கிறார்கள். சொல்லிச்சொல்லி பெரிதாக்குகிறார்கள். அங்கே நின்ற ஐம்பதுபேரிடம் கேட்டால் நூறு பாடபேதங்களாக அக்கதை கிடைக்கும். இப்படித்தான் நினைவுகள் வரலாறாகின்றன.

அத்துடன் அந்த தீவிரநிலைகளில் தங்களை வைத்துப்பார்த்துக் கற்பனைசெய்கிறார்கள். அந்த அனுபவங்களில் மானசீகமாக திளைக்கிறார்கள். அவர்களின் உலகம் விரிகிறது

ஆக அதெல்லாம் வக்கிரங்கள் அல்ல. அடிப்படை மானுட இயல்புகள். என்றும் உள்ளவை.மனிதர்கள் அப்படித்தான். சாமானியர்கள், அசாதாரணமான விஷயங்களுக்காக ஏங்குபவர்கள்.

ஜெ

http://www.jeyamohan.in/?p=62625

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.