Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசிக்கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற சம்பூர் முதியவர்

Featured Replies

141016163951_sampoor_hunger_old_man_suic

தற்கொலைக்கு முயன்ற மயில்வாகனம்

பசியின் கொடுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் 80 வயது வயோதிபரொருவர் பிளேடினால் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படும் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மயில்வாகனம் தாமோதிரம் என்ற இந்நபர் அரச மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 
உலக உணவு தினமாகிய ஒக்டோபர் 16 வியாழனன்று பிபிசி தமிழோசையுடன் பேசிய அவரது மனைவி யோகேஸ்வரி, சம்பவ தினம் தனது கணவன் மதிய உணவு கேட்டபோது வீட்டில் சோறு சமைக்க அரிசி இருக்கவில்லை என்றார்.
பசியின் கொடுமை காரணமாகவே தனது கணவன் இப்படி நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
 
ஏற்கனவே 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை உலக உணவு திட்டத்தின் கீழ் இந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் உலர் உணவு நிவாரண உதவிகள் கிடைத்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவிக்கிறார்.
அந்நிவாரண உதவிகள் நிறுத்தப்பட்ட பின்னர் எந்தவொரு நிவாரண உதவிகளும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
 
2012 ஆகஸ்ட் மாதம் கிழக்கு மாகாண சபையில் இம்மக்களுக்கான நிவாரண உதவிகள் தொடர்பாக தன்னால் சுட்டிக்காட்டப்பட்டபோதிலும் இதுவரை மாகாண சபை அதில் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித்தை தொடர்பு கொண்டு அவரை பதிலை பெற பல தடவைகள் முயன்ற போதிலும் அவரது பதிலை பெற முடியவில்லை.
 
இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேச அகதிகளுக்கு நிவாரண உதவிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறாக அவர்கள் தொடந்தும் உணவு உணவுப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

அந்த வயோதிபரை கார்பெட் வீதிக்குகொண்டு வந்து வீதியின் அகலத்தை காட்டுங்கள் 
அபிவிருத்தி என்ற பெயரில் கட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய கட்டிட்டங்களை காட்டுங்கள் 
பசி அடங்கி சகலத்தையும் அடைந்துவிடுவார் ... :(

கபோதிகளே ..கருமாந்திரங்களே .புலம்பெயர் நம்மவர்களிடம் ....ஊரிலை தேனும் பாலும் வீதியால் புரண்டோட மக்கள் மொன்று மொன்று குடிக்கிறார்கள் 
என்று புளுகும் ......எலும்பு நக்க வட்டமிடும் நீங்கள் எல்லோரும் தான் இதற்க்கு காரணம் 
மஜித்திடமும், சந்திரசிறியிடமும் யாசகம் (பிச்சை) கேட்க சொல்கிறீர்களா..?

கேட்டாலும் பிச்சை  போடும் நிலையில் அவர்கள் இல்லை ... :(  :(

நியாயமான கோபம்

புலத்தமிழர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்தை பொறுப்பெடுத்தால்...

பசி  பட்டினி  இருக்காது தாயகத்தில்...........

அந்த வயோதிபரை கார்பெட் வீதிக்குகொண்டு வந்து வீதியின் அகலத்தை காட்டுங்கள் 

அபிவிருத்தி என்ற பெயரில் கட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய கட்டிட்டங்களை காட்டுங்கள் 

பசி அடங்கி சகலத்தையும் அடைந்துவிடுவார் ... :(

கபோதிகளே ..கருமாந்திரங்களே .புலம்பெயர் நம்மவர்களிடம் ....ஊரிலை தேனும் பாலும் வீதியால் புரண்டோட மக்கள் மொன்று மொன்று குடிக்கிறார்கள் 

என்று புளுகும் ......எலும்பு நக்க வட்டமிடும் நீங்கள் எல்லோரும் தான் இதற்க்கு காரணம் 

மஜித்திடமும், சந்திரசிறியிடமும் யாசகம் (பிச்சை) கேட்க சொல்கிறீர்களா..?

கேட்டாலும் பிச்சை  போடும் நிலையில் அவர்கள் இல்லை ... :(  :(

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த யகதித்னை அழித்திடுவம் என்றது நீங்கள் தானோ :o .

ஒருக்கா நாலு நாடுகள் சென்று வாங்கோ ,பல ரொக்கெட் விடும் நாடுகளிலேயே ஒரு வேளை சாப்பிட முடியாமல் பசியில் வாடுபவர்கள் இருக்கின்றார்கள் .இலங்கை திறம் என்று சொல்லவரவில்லை ஆனால் வறுமைப்பட்ட  நாலு நாடுகள் சென்று பார்த்தால் இலங்கை சுவர்க்கம் தான் .

கொஞ்சம் வெளியிலும் எட்டி பாருங்கோ .

ஸ்ரீலங்கா பேரினவாத அரசாங்கத்தை சும்மா ஜோக்குக்கு  திட்டினாலும் உங்களுக்கு அது பிடிக்காது என்பதும் அவர்களுக்கு வக்காலத்து வாங்க உலகில் எவரையும் அவமதிக்க நீங்கள் தயார் என்பது  அவருக்கு தெரியாது போலும். பாவம் அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் திரு அர்ஜீன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்துமா மன்றம்.. விவேகானந்த சபை.. இவை போன்ற தொண்டு நிறுவனங்களோடு இந்த ஐயாவுக்கு யாராவது தொடர்பு ஏற்படுத்திக் கொடுங்கள். அவருக்கு இப்போது தேவை ஆறுதல் அளிக்க.. உணவளிக்க மனிதர்களே அன்றி.. கோடி கோடியாக அவர் எதனையும் கேட்பதாகத் தெரியவில்லை..!! :icon_idea:

கள உறுப்பினர் புலிக்குரல் போன்று  எவராவது திருகோணமலையில் இருந்து இவர் பற்றிய விபரங்கள் தந்தால், யாழ் இணையத்தின் சார்பாக ஒரு சில கள உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இவ் வயோதிப தம்பதியினரை பொறுப்பேற்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா இது தொடர்பாக கதைத்து உள்ளேன் விபரம் கிடைத்ததும் இணைக்கின்றேன்.

நிழலி அண்ணா இது தொடர்பாக கதைத்து உள்ளேன் விபரம் கிடைத்ததும் இணைக்கின்றேன்.

நன்றி புலிக்குரல். விபரங்களை தனிமடலில் அனுப்பி வைத்தால் அதன் பின் உதவிகளை ஒருங்கிணைக்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்
கொடுமையிலும் கொடுமை இந்த ஐயா தற்கொலை செய்ய முயற்சித்தமையால் அது செய்தியாக வெளியில் வந்தது பலரது மனங்களை ஆழமாக பாதித்துள்ளது என்னும் எவ்வளவுபேர் பசியில் தினம் தினம் இறந்து கொண்டிருக்கிறார்கள். :(  
 
நாம் இங்கு எவ்வளவு சாப்பாடுகளை விரையம் செய்கின்றோம் சற்று சிந்தித்தாலே எவ்வளவோ செய்யலாம்.   
  • கருத்துக்கள உறவுகள்

ம்..ம்... விபரங்கள் கிடைத்ததும் தங்களுக்கு தனி மடலில் அனுப்பி விடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த யகதித்னை அழித்திடுவம் என்றது நீங்கள் தானோ :o .

ஒருக்கா நாலு நாடுகள் சென்று வாங்கோ ,பல ரொக்கெட் விடும் நாடுகளிலேயே ஒரு வேளை சாப்பிட முடியாமல் பசியில் வாடுபவர்கள் இருக்கின்றார்கள் .இலங்கை திறம் என்று சொல்லவரவில்லை ஆனால் வறுமைப்பட்ட  நாலு நாடுகள் சென்று பார்த்தால் இலங்கை சுவர்க்கம் தான் .

கொஞ்சம் வெளியிலும் எட்டி பாருங்கோ .

ஜகம் மட்டுமல்ல இந்த நாடே அழியப்போகிறது ....குற்றம் மேல் இழைக்கப்படும் குற்றம் நல்லதல்ல

ரொக்கெட் விடும் பில்லியன் கணக்கில் சனத்தொகைகளை வைத்திருக்கும் நாடுகளை இரண்டு கோடிக்கு குறைந்த சனத்தொகை உள்ள இந்த 

நாட்டுடன் ஒப்பிடுகிறீர்கள் . உத்தியோகம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தங்கள் பிரஜையின் குடும்பங்களையும் பராமரிக்கும் நாடுகளுடன் பக்கத்தில் விழுந்து கிடப்பவனையும் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்த பரதேசி நாடை ஒப்பிடுகிறீர்கள் 

இந்த லட்சணத்தில் நான் எந்த நாட்டையும் எட்டி பார்க்க விரும்பவில்லை  :( 

அதிலும் இந்த வயோதிபர் 2009 இற்கு முன் இப்படி பசியுடன் இருந்திருக்கமாட்டார் என்று உறுதியுடன் கூறுவேன் 

புலிக்குரல்,நிழலி அண்ணை 

புலத்தில் இருப்பவன், பிறப்பால் தமிழன் என்ற அடிப்படையில் எனக்கும் சில தார்மீக கடமைகள் உள்ளது 

உங்களது இந்த உதவிக்குழுவில் நானும் சேர்கின்றேன் ......உதவிகளை ஒருங்கிணைக்கும் போது அல்லது வேறு எதுவும் தேவைப்படின் தயங்காமல் எனக்கு அறியத்தாருங்கள், என்னால் முடியுமான எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் 

--------------------------- ------------------ ----------------------------- -----------------

Edited by நிழலி
பைத்தியகாரத்தனமான சீண்டல் கருத்து மட்டுறுத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

கள உறுப்பினர் புலிக்குரல் போன்று  எவராவது திருகோணமலையில் இருந்து இவர் பற்றிய விபரங்கள் தந்தால், யாழ் இணையத்தின் சார்பாக ஒரு சில கள உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இவ் வயோதிப தம்பதியினரை பொறுப்பேற்கலாம். 

அண்ண இந்த ஐயாவின் விபரங்கள் கிடைக்கப் பெற்றால் எனக்கும் மடலிடுங்கள்...மாதம் எவ்வளவு உதவலாம் என்று ஒரு குறிப்பிட்ட தொயை திட்டம் போட்டு அறியத் தந்தால் அதன் படி செய்ய உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி எனக்கும் விபரம் தாருங்கள். என் பெயர் விபரம் தெரியப்படுத்தாமல் பண உதவி செய்ய நான் தயார்.

பெரிய அளவில் முடியாது ஆனால் ஒருகுழுவாக இணையும் போது என்பங்கை செலுத்த முடியும்.

சாந்தி அக்கா இப்படி பலவேலைகள் செய்யுறவ, குறிப்பா கிழக்கில். அவவிடமும் உதவி கேட்கலாம்.

சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து வசிக்கும் கிளிவெட்டி முகாமில் உள்ள 230குடும்பங்களுக்கு 350000ரூபாய் பெறுமதியான உணவுப்பொருட்கள் இன்று கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவரும் திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவருமான திரு.சி .தண்டாயுதபாணி அவர்களால் வழங்கப்படவுள்ளது .

இதற்குரிய நிதி கனடா வாழ் திருகோணமலை மக்களால் வழங்கப்பட்டுள்ளது .

முன்பும் திரு .சி .தண்டாயுதபாணி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கனடா மறுவாழ்வு அமைப்பும் ,கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து உதவிகள் வழங்கியுள்ளார்கள் .இதற்குரிய செய்தி படங்களுடன் யாழிலும் இணைத்திருந்தேன் .

சரி அடுத்த தேர்தலில்  உங்கள் கட்சிக்கே வாக்களிக்குமாறு எனது உறவினர்களிடன் சொல்லுகிறேன். எங்கள் வாக்குகள் உங்கள் கட்சிக்கே.

  • 2 weeks later...
கைவிடப்பட்ட சம்பூர் மக்கள்! கனடாவில் உள்ள திருமலை நலன்புரிசங்கம் நிவாரண உதவி 
 
2006ம் ஆண்டு மாவிலாற்றில் போர் தொடங்கியதை நாமறிவோம். இதன் விளைவாக சம்பூர் பகுதி மக்கள் மட்டக்களப்பு நோக்கி துரத்தப்பட்டனர்.

அங்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பின்பு படிப்படியாகத் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய ஊர்களில் தற்காலிக முகாங்கள் அமைத்து அங்கு மேற்படி மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

தொடக்கத்தில் இவர்களுக்குப் பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களால் உலர் உணவு வழங்கப்பட்டது.

2009ம் ஆண்டைத் தொடர்ந்து பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களும் வெளியேறிய பின் இலங்கை அரசு இவர்களுக்கு இடர் உதவி வழங்கி வந்தது.

இந்த நிலையில் சம்பூர் பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற முடியாது. அவர்களுக்கு மாற்று இடம் தரப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.

இந்த இடங்கள் விவசாயம் செய்ய முடியாதவை. எனவே இவ்விடங்கள் தமக்கு வேண்டாம் தமது சொந்த இடங்களுக்குப் போகவிடுங்கள் என்று சம்பூர் மக்கள் கேட்டனர்.

இலங்கை அரசு அதை ஏற்க மறுத்து விட்டதோடுதான், கூறியதை ஏற்றுக் கொண்டுதான் கூறிய இடத்தில் குடியேறாதபடியால் உலர் உணவு, மின்சாரம், நீர் அனைத்தையும் இலங்கை அரசு நிறுத்திவிட்டது.

இம்மாத முற்பகுதியில் அகவை எண்பது உடைய முதியவர் (இரண்டு ஆண் பிள்ளைகளையும் மருமகனையும் போரில் பலி கொடுத்தவர்) மனைவி, மகள், பேரப்பிள்ளை ஆகியோரின் வயிறுப் பசியைக் காணப் பொறாமல் தனது கழுத்தை வெட்டித் தற்கொலை செய்ய முயன்று உள்ளார்.

மேற்படி நிலைமையைக் கவனத்தில் கொண்டு கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிசங்கமானது இவர்களுக்கு உலர் உணவு வழங்கும் பொருட்டாக மூன்று இலட்சம் ரூபாவை உடனடியாக எமக்கு அனுப்பி இருந்தது.

இப்பணத்தின் மூலம் உலர் உணவு கொள்வனவு செய்யப்பட்டு கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இருநூறு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் திருகோணமலை மாவட்டத் தமிழ் அரசு கட்சியின் தலைவருமான சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுகட்சியின் பொதுச் செயலாளருமான துரைராசசிங்கம் ஆகியோரால் கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இருநூறு குடும்பங்களுக்கு மேற்படி உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

sampoor_camp_001.JPG

sampoor_camp_002.JPG

sampoor_camp_003.JPG

sampoor_camp_004.JPG

sampoor_camp_005.JPG

sampoor_camp_006.JPG

sampoor_camp_007.JPG

sampoor_camp_008.JPG

sampoor_camp_009.JPG

sampoor_camp_010.JPG

sampoor_camp_011.JPG

sampoor_camp_012.JPG

sampoor_camp_013.JPG

எனது E -mail இல் கிடைக்கப்பெற்றது .

சரி அடுத்த தேர்தலில்  உங்கள் கட்சிக்கே வாக்களிக்குமாறு எனது உறவினர்களிடன் சொல்லுகிறேன். எங்கள் வாக்குகள் உங்கள் கட்சிக்கே.

அதென்ன எங்கட கட்சி உங்கட கட்சி ,நாங்கள் பதவிகளையும் பட்டங்களையும் எதிர்பார்த்து மக்களுக்கு சேவை செய்வது கிடையாது .திருகோணமலையின் நலன்களை முன்னிறுத்தி படித்தவர்கள் ,நேர்மையாளர்களையும் களமிறக்குவோம் .திருக்கோணமலையின் அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் திரு .சி .தண்டாயுதபாணி .,திரு .இரா .சம்பந்தன் தேசியப்பட்டியல் மூலம் உறுப்பினராக்கப்படுவார் .

இப்பவாவது உணர்வுபூர்வமாக சிந்தித்து முடிவெடுத்ததற்கு நன்றிகள் . :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.