Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசிட் கொடுத்து குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்த தாய்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. ஒரு தடவை ஒரு அக்காவுடன் கதைத்த போது class க்கு சென்றால் வேறு ஆண்களுடன் கதைத்து விடுவேன் என்று கூறி தன்னை பிரெஞ்சு படிக்க தனது கணவன் விடுவதில்லையாம் என்று கூறினார்.

அதே போல் போன வருடம் பிரெஞ்சு படிக்க சென்ற போது அங்கு படிக்க வரும் ஒரு அக்கா(அன்ரி) தலையில் பல காயங்களுடன் வருவார். எமது ஆசிரியை கவனித்து விட்டு என்ன நடந்தது என்று கேட்டபோது கணவன் அடித்தது என்று கூறியிருந்தார். அவருக்கு அவ்வளவாக பிரெஞ்சு கதைக்க தெரியாது. எனவே எமது ஆசிரியை இன்னொரு தமிழ் பெண் மூலம் என்ன பிரச்சினை என்று கேட்டறிந்து கொண்டார். வீட்டில் கணவன் கொடுமைப்படுத்துவது, அடிப்பது என்பவை தெரிய வந்தது.

இது பற்றி அவரது கணவனை தான் எச்சரிக்கை செய்யவா, police இல் புகார் கொடுக்க சம்மதமா? விவாகரத்து பெற விரும்புகிறீர்களா என்ற கேள்விகளையும் முன்வைத்த போது ஆரம்பத்தில் ஆம் என்று சொன்ன அப்பெண் பின்னர் பயத்தில் வேண்டாம் என்று கூறி விட்டார். class முடிந்த பின்னர் அவருடன் எனக்கு தொடர்பு இல்லை. இப்பொழுது அவர் நிலை என்ன என்று தெரியவில்லை.

ஒரு தடவை ஒரு அண்ணன் வந்தார். தலையால் இரத்தம் வடிய. கேட்டால் மனைவி பூரிக்கட்டையால் எறிந்து காயம் என்று.

அவருக்கு சிகிச்சை செய்தவர்கள் அந்தக் கொடுமைக்கார பெண்ணிடம் இருந்து விடுதலை பெற விருப்பமா என்றார்கள். அவர் முதலில்.. மெளனமாக இருந்தார். பிறகு ஒரு போன் கோல் வந்திச்சுது. அதுக்குப் பிறகு இது பூரிக்கட்டை காயம் அல்ல.. தவறி விழுந்திட்டன் என்று சொல்லி சமாளிக்க வெளிக்கிடவே அங்கிருந்தோருக்கு நிலைமை விளங்கிட்டுது.

இப்ப அந்த அண்ணன் எங்கையோ தெரியாது. அவரை காணேல்ல..!!

இப்படியும் நடக்குது துளசி..!! இதுக்கென்ன சொல்லுறீங்க..???! :lol::icon_idea:

ஒரு ஆணின் இளமைக்காலத்தை.. காதல்.. கத்தரிக்காய்.. கல்யாணம் என்று சீரழித்து அவன் பெயரால் பிள்ளையும் பெத்துக்கிட்டு.. அவனையே சதா வதைத்துக் கொண்டு வாழ்வதிலும்.. பெற்ற பிள்ளைகளை விட்டிட்டோ.. இல்ல கூட்டிக்கொண்டு போயோ இன்னொருத்தன் கூட பிடிச்சா வாழலாம்.. இல்லை தனிய வாழலாம். எல்லாத்துக்கும் இந்த உலகில் வாய்ப்புள்ளது. யாரும் தற்கொலை செய்யனுன்னு அவசியம் இல்லை. இதே விதி பெண்களால் துன்புறுத்தப்படும்.. ஆண்களுக்கும் பொருந்தும். :icon_idea::)

அண்ணன் மருதங்கேணிக்கு.. இதைச் சொன்னா அது ஆணாதிக்கமா தெரியுது. வீடுகளுக்கு இருக்கும் பெண்ணாதிக்கம் பற்றி அவர் மூச்சும் விடார். அண்ணன் சில விடயங்களை இட்டு மூச்சு விடப் பயப்பிடுவது ஏனோ..???!! :icon_idea::)

  • Replies 66
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மருது.. பிரிந்து செல்லும் பெண்களுக்கு தம் பிள்ளைகளை வளர்க்க விருப்பம் இல்லாவிட்டால் கணவர்களிடம் விட்டுவிடலாம். கணவர் சரியில்லாவிட்டால் அரசாங்கமே வளர்க்கும்தானே..

சட்டையை கழற்றி போட்டுவிட்டு பிடிக்கவிட்டால் ...
அரசு பணத்தில் இன்னொரு சட்டையை வாங்கி போட்டுகொள்ளலாம். என்று மிக சாதரணமாக எழுதுகிறீர்கள்.
உங்களுடைய தாயின் அன்பை இந்த அளவில்தான் எடை போட்டு வைத்திருக்கிறீர்களா??
 
ஒரு தாய்க்கும் அவளுடைய பிள்ளைக்கும் இருக்கும் தொடர்பானது வெறும் 10 மாதம் சுமந்ததில்லை. 
அவளை தாயாக்கிய ஒரு ஆணுக்கு அத்தனை பொறுப்பும் வேண்டும். அது தவறும் இடத்தில்தான் ...... இவை நிகழ்கிறது.
 
இதில் தொடர்ந்து எழுத எனக்கு விருப்பம் இல்லை.....
நானும் நெடுக்கரும் ஒரு உரையாடலை தொடர்ந்தோம். நிர்வாகம் அப்படியே  விளாசி விட்டது. எந்த தனிமனித தாக்குதலோ அவதுரோ இருக்கவில்லை. அவர் தனது வழமையான நிலைபாட்டை தொடர்ந்தார். நான் ஆண்களின் அடாவடி தனம் பற்றி தொடர்ந்தேன். ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை ஒன்றும் இல்லாது போய்விட்டது. திரும்பவும் அப்படி நடக்கல்ம் என்பதால் நிறைய நேரம் செலவழித்து  எழுத விருப்பம் இல்லை. 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கள்ளக்காதல் கொடூரம்... 3 வயது சிறுவனைக் கொன்று பீரோவில் ஒளித்து வைத்த பெண்!
 
வேலூர்: கள்ளக்காதல் ஒரு அப்பாவி சிறுவனை அநியாயமாக பழிவாங்கியுள்ளது. அந்தப் பாதகத்தை செய்தது ஒரு பெண் என்பது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தனது கள்ளக்காதலுக்கு, கள்ளக்காதலரின் மனைவி இடையூறாக இருந்ததாலும், தன்னை அம்பலப்படுத்தி விடுவதாக அவர் கூறியதாலும் ஆத்திரமடைந்த அந்த கள்ளக்காதலி, கள்ளக்காதலரின் 3 வயது சிறுவனை கொன்று தனது வீட்டு பீரோவில் அடைத்து வைத்த சம்பவம் வேலூரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கள்ளக்காதலுக்காக நடைபெறும் கொலைகள் தினசரி நடந்தவண்ணம் உள்ளது. இதில் பெரும்பாலும் அப்பாவிகள்தான் பலியாகிறார்கள். இந்த நிலையில் வேலூரில் 3 வயது சிறுவனைக் கொடூரமாகக் கொன்று கைதாகியுள்ளார் சுமதி என்ற பெண். வேலூர், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபத்தைச் சேர்ந்தவர் சலவை தொழிலாளி முரளி. இவரது மனைவி சுமதி (26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இதில் 2வது மகன் பெயர் திணேஷ். 3 வயதான திணேஷ் நேற்று தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அதன் பின்னர் காணாமல் போய் விட்டான். பதறிப் போன முரளியும், சுமதியும் பிள்ளையைத் தேடி அலைந்தனர். ஆனால் மகன் கிடைக்கவில்லை. இதையடுத்து இருவரும் போலீஸில் புகார் கொடுத்தனர்.

போலீஸார் விசாரணையில் குதித்தனர். தேடுதல் வேட்டை முடக்கி விடப்பட்டது. இந்த நிலையில் போலீஸாருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், முரளிக்கும், அவரது எதிர் வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி சுமதி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது. சுமதியைப் பிடித்து விசாரித்தால் உண்மை தெரியும் என்று அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து சுமதியை விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர். அவரது வீட்டுக்குச் சென்றனர். சுமதி வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். சந்தேகம் வலுத்ததைத் தொடர்ந்து போலீஸார் வீட்டைத் திறந்து உள்ளே சென்று சோதனையிட்டனர். வீட்டின் படுக்கை அறையியில் இருந்த பீரோவை திறந்து போலீஸார் உள்ளே பார்த்தபோது அங்கே திணேஷ் கை, வாய் கட்டப்பட்ட நிலையில் பிணமாக இருந்தான். உடலை மடக்கி உள்ளே வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுமதியிடம் போலீஸார் வழக்கமான முறையில் விசாரித்தபோது தான்தான் திணேஷைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் சுமதி.

போலீஸாரிடம் அவர் கூறுகையில், நானும், முரளியும் நீண்ட நாட்களாக பழகி வருகிறோம். அடிக்கடி உல்லாசமாக இருப்போம். இது முரளியின் மனைவிக்குத் தெரிந்து விட்டது. அவர் என்னிடம் சத்தம் போட்டார். உன்னை அம்பலப்படுத்துகிறேன் பார் என்றும் கோபத்துடன் கூறினார். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். என்னை அம்பலப்படுத்துவதற்கு முன்பு அவருக்கு சோகத்தைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதற்கு திணேஷைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். நேற்று வெளியில் விளையாடிக் கொண்டிருந்த திணேஷை எனது வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்தேன். பின்னர், அவனது கை மற்றும் வாயை கட்டிவிட்டு, அவனை அடித்து உதைத்தேன். இதனால், பலத்த காயம் அடைந்த அவன் வலிப்பு வந்ததைப் போல் துடித்தான். இதையடுத்து, தலையணையால் அவனது முகத்தில் அழுத்தியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்தேன். யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அவனை பீரோவில் வைத்து பூட்டினேன் என்று கூறினார் சுமதி. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் போலீஸார். சுமதியைக் கைது செய்து அவரை கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் சுகத்திற்காக தனது மகனை இப்போது இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார் முரளி. தனது கணவரின் செயலால் மகனைப் பறி கொடுத்து விட்டு துடித்துக் கொண்டிருக்கிறார் முரளியின் மனைவி சுமதி.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/woman-arrested-killing-her-paramour-son-213585.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை ஒரு அண்ணன் வந்தார். தலையால் இரத்தம் வடிய. கேட்டால் மனைவி பூரிக்கட்டையால் எறிந்து காயம் என்று.

அவருக்கு சிகிச்சை செய்தவர்கள் அந்தக் கொடுமைக்கார பெண்ணிடம் இருந்து விடுதலை பெற விருப்பமா என்றார்கள். அவர் முதலில்.. மெளனமாக இருந்தார். பிறகு ஒரு போன் கோல் வந்திச்சுது. அதுக்குப் பிறகு இது பூரிக்கட்டை காயம் அல்ல.. தவறி விழுந்திட்டன் என்று சொல்லி சமாளிக்க வெளிக்கிடவே அங்கிருந்தோருக்கு நிலைமை விளங்கிட்டுது.

இப்ப அந்த அண்ணன் எங்கையோ தெரியாது. அவரை காணேல்ல..!!

இப்படியும் நடக்குது துளசி..!! இதுக்கென்ன சொல்லுறீங்க..???! :lol::icon_idea:

ஒரு ஆணின் இளமைக்காலத்தை.. காதல்.. கத்தரிக்காய்.. கல்யாணம் என்று சீரழித்து அவன் பெயரால் பிள்ளையும் பெத்துக்கிட்டு.. அவனையே சதா வதைத்துக் கொண்டு வாழ்வதிலும்.. பெற்ற பிள்ளைகளை விட்டிட்டோ.. இல்ல கூட்டிக்கொண்டு போயோ இன்னொருத்தன் கூட பிடிச்சா வாழலாம்.. இல்லை தனிய வாழலாம். எல்லாத்துக்கும் இந்த உலகில் வாய்ப்புள்ளது. யாரும் தற்கொலை செய்யனுன்னு அவசியம் இல்லை. இதே விதி பெண்களால் துன்புறுத்தப்படும்.. ஆண்களுக்கும் பொருந்தும். :icon_idea::)

அண்ணன் மருதங்கேணிக்கு.. இதைச் சொன்னா அது ஆணாதிக்கமா தெரியுது. வீடுகளுக்கு இருக்கும் பெண்ணாதிக்கம் பற்றி அவர் மூச்சும் விடார். அண்ணன் சில விடயங்களை இட்டு மூச்சு விடப் பயப்பிடுவது ஏனோ..???!! :icon_idea::)

உங்களுக்கு தெரிந்த கதைகளைவிட எனக்கும் ஏராளம் தெரியும்.
நானே எமாற்றபட்டிருக்கிறேன் ஒரு பெண்ணால்.
 
நான் ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்தேன். அங்கே எமக்கு அருகில் இருந்த ஒருவர் கடன்கள் வாங்கி தனது மனைவியையும் 2 பிள்ளைகளையும் அஜென்சிக்கு காசு கட்டி கூப்பிட்டார். மனைவி வந்து கொஞ்ச நாட்களால் இவருக்கு சொன்னார் சின்ன பிள்ளைகளுடன் என்னை விட்டு விட்டு நீங்கள் வந்து விட்டீர்கள் நான் மிகவும் கச்ற்றபட்டு விட்டேன் என்று. அங்கே இருந்த தம்பி ஒருவர்தான் தமக்கு மிகவும் உதவி செய்ததாக. இவருக்கும் அவரை ஓரளவிற்கு தெரியும் இவருக்கும் மனைவிக்கும் 38 35 வயது. உதவி செய்த தம்பிக்கு 25 வயது. தம்பியின் குடும்பத்திலும் நிறைய கஸ்ரம். அதனால்தான் பள்ளியை நிறுத்திவிட்டு தோட்டம் செய்து வந்தார்... பின்பு இவர்கள் கொழும்பு புறப்படும்போது தனியாக போய் கஷ்டரபடுவார்கள் என்று தம்பியும் வந்து கொழும்பில் நின்று இவர்கள் விமானம் ஏறிய பின்தான்  ஊருக்கு போனார். செஞ்சோற்று கடனுக்கு அவரையும் இங்கே கூப்பிட்டு விட்டல் நல்லம் என்று மனைவி சொல்லியிருக்கிறார். யாவரும் பாவம் என்று அவரை கடனோடு கடனாக அவரை கூப்பிட்டார். அவர் வந்து பதிந்து காம்பில் இருந்தார் பின்பு வேலை எடுத்ததும் ஒரு வீடு எடுத்தார் ... அக்கா புரசனை விட்டுவிட்டு பிள்ளைகளுடன் போய் தம்பியுடன் இருந்துவிட்டார். கணவன் கடனை மணம் முடித்து வாழ்ந்து வருகிறார். கிட்டதட்ட இதே மாதிரி இன்னொரு இடத்தில் (ஜெர்மனி) நடந்ததாக எனது நண்பர் ஒருவர் சொன்னார். இப்படி 2 கதை இருக்கு எனக்கு தெரிய இன்னும் இருக்கலாம். 
 
இப்போதைய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இந்த கதைகளை காட்டி ஒரு தராசில் போட்டு நெறுக்க முடியுமா? 
சில (தமிழ்)  பெண்கள் கள்ள காதலுக்காக கணவனையே கொன்று இருக்கிறார்கள். 
 
ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் அங்கீகாரம் என்பதை இந்த கதைகளை வைத்து நிறுவ முடியுமா? 
வெள்ளைகார பெண்களே சோகங்களை சுமக்கும் சுமைதாங்கியாக இருக்கிறார்கள். இதில் இங்கு வந்த தமிழ் பெண்களின் நிலை எப்படி இருக்கும்? 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளை ஏற்றி ஆதாரம் தேடுவதை விட......உண்மையாக செயல்படுங்கள்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸாரிடம் அவர் கூறுகையில், நானும், முரளியும் நீண்ட நாட்களாக பழகி வருகிறோம். அடிக்கடி உல்லாசமாக இருப்போம். இது முரளியின் மனைவிக்குத் தெரிந்து விட்டது. அவர் என்னிடம் சத்தம் போட்டார். உன்னை அம்பலப்படுத்துகிறேன் பார் என்றும் கோபத்துடன் கூறினார். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். என்னை அம்பலப்படுத்துவதற்கு முன்பு அவருக்கு சோகத்தைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதற்கு திணேஷைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். நேற்று வெளியில் விளையாடிக் கொண்டிருந்த திணேஷை எனது வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்தேன். பின்னர், அவனது கை மற்றும் வாயை கட்டிவிட்டு, அவனை அடித்து உதைத்தேன். இதனால், பலத்த காயம் அடைந்த அவன் வலிப்பு வந்ததைப் போல் துடித்தான். இதையடுத்து, தலையணையால் அவனது முகத்தில் அழுத்தியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்தேன். யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக அவனை பீரோவில் வைத்து பூட்டினேன் என்று கூறினார் சுமதி. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் போலீஸார். சுமதியைக் கைது செய்து அவரை கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் சுகத்திற்காக தனது மகனை இப்போது இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார் முரளி. தனது கணவரின் செயலால் மகனைப் பறி கொடுத்து விட்டு துடித்துக் கொண்டிருக்கிறார் முரளியின் மனைவி சுமதி.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/woman-arrested-killing-her-paramour-son-213585.html

அடி பாவி!  எதோ பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு சம்பல் இடிச்ச கணக்கா சொல்லுறாள். 
இதுக்குதான் கலியாணம் கட்டாமல் இருக்கோணும். அவர் அவர் வீட்டில் எப்போ சம்பல் இடிப்பார்களோ தெரியவில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்கண்ணா! சிறுவனை கொன்றுவிட்டு சுமதி ஜெயிலுக்கு போய்விட்டாள்.
மனைவி பெற்று வளர்த்த மகனை தொலைத்த கவலையில் வாடி வந்தங்கி இருப்பாள்.
 
அப்பாவி ஆண்சிங்கம் என்ன செய்துகொண்டு இருக்கிறது? தொடர்ச்சியான செய்தி ஏதும்  இதைப்பற்றி கிடைத்ததா?? 
  • கருத்துக்கள உறவுகள்

சட்டையை கழற்றி போட்டுவிட்டு பிடிக்கவிட்டால் ...

அரசு பணத்தில் இன்னொரு சட்டையை வாங்கி போட்டுகொள்ளலாம். என்று மிக சாதரணமாக எழுதுகிறீர்கள்.

உங்களுடைய தாயின் அன்பை இந்த அளவில்தான் எடை போட்டு வைத்திருக்கிறீர்களா??

ஒரு தாய்க்கும் அவளுடைய பிள்ளைக்கும் இருக்கும் தொடர்பானது வெறும் 10 மாதம் சுமந்ததில்லை.

அவளை தாயாக்கிய ஒரு ஆணுக்கு அத்தனை பொறுப்பும் வேண்டும். அது தவறும் இடத்தில்தான் ...... இவை நிகழ்கிறது.

இதில் தொடர்ந்து எழுத எனக்கு விருப்பம் இல்லை.....

நானும் நெடுக்கரும் ஒரு உரையாடலை தொடர்ந்தோம். நிர்வாகம் அப்படியே விளாசி விட்டது. எந்த தனிமனித தாக்குதலோ அவதுரோ இருக்கவில்லை. அவர் தனது வழமையான நிலைபாட்டை தொடர்ந்தார். நான் ஆண்களின் அடாவடி தனம் பற்றி தொடர்ந்தேன். ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை ஒன்றும் இல்லாது போய்விட்டது. திரும்பவும் அப்படி நடக்கல்ம் என்பதால் நிறைய நேரம் செலவழித்து எழுத விருப்பம் இல்லை.

மருது.. நான் சொல்லவந்தது என்னவென்றால், மாமனார், மாமியார், கணவன், மசசாள்மார் கொடுமை செய்தால் ஒரு பெண் தன் சொந்தக் குழந்தைகளையும் கொன்று தானும் சாகவேண்டிய தேவை மேலை நாடுகளில் தவிர்க்கக் கூடிய விடயம் என்பதையே.. பெண் குழந்தை பெற்றபின் கணவனைப் பிரிந்தால் குழந்தைகளை வளர்ப்பதிலேயே அவளது வாழ்க்கை போய்விடுகிறது.. இது அநியாயமில்லையா என்று கேட்டிருந்தீர்கள்.. அதற்கான பதிலாகவே குழந்தையை கணவரிடமோ, அரசிடமோ விட்டுவிடலாம் என்றும் எழுதியிருந்தேன். (ஆனாலும் எம்குலப் பெண்டிர் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்பதையும் ஆணித்தரமாக நம்புகிறேன். :D )

இது இப்பிடி இருக்க.. தாய்குலத்தின் பத்துமாத சென்டிமென்டை இழுத்துவிட்டு என்னை மாட்டிவிட நினைப்பது நியாயமா?? :(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா! சிறுவனை கொன்றுவிட்டு சுமதி ஜெயிலுக்கு போய்விட்டாள்.
மனைவி பெற்று வளர்த்த மகனை தொலைத்த கவலையில் வாடி வந்தங்கி இருப்பாள்.
 
அப்பாவி ஆண்சிங்கம் என்ன செய்துகொண்டு இருக்கிறது? தொடர்ச்சியான செய்தி ஏதும்  இதைப்பற்றி கிடைத்ததா?? 

அப்பாவி ஆண்சிங்கம்... இன்னொரு பெண் சிங்கம் கிடைக்காமலா போய்விடும் என்று எங்காவது தேடிக் கொண்டிருக்கும்! :o

மிருகங்கள் கூடப் பழிவாங்குவதற்கெனத் தேடித் திரிந்து கொள்வதில்லை!

யானையும்.. திமிங்கிலமும் இதற்கு 'விதி விலக்கு' என்று கூறுகின்றார்கள்!

மனிதனையும் அவற்றுடன் சேர்த்துக் கொள்ளுவோம்! :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

மருது.. நான் சொல்லவந்தது என்னவென்றால், மாமனார், மாமியார், கணவன், மசசாள்மார் கொடுமை செய்தால் ஒரு பெண் தன் சொந்தக் குழந்தைகளையும் கொன்று தானும் சாகவேண்டிய தேவை மேலை நாடுகளில் தவிர்க்கக் கூடிய விடயம் என்பதையே.. பெண் குழந்தை பெற்றபின் கணவனைப் பிரிந்தால் குழந்தைகளை வளர்ப்பதிலேயே அவளது வாழ்க்கை போய்விடுகிறது.. இது அநியாயமில்லையா என்று கேட்டிருந்தீர்கள்.. அதற்கான பதிலாகவே குழந்தையை கணவரிடமோ, அரசிடமோ விட்டுவிடலாம் என்றும் எழுதியிருந்தேன். (ஆனாலும் எம்குலப் பெண்டிர் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்பதையும் ஆணித்தரமாக நம்புகிறேன். :D )

இது இப்பிடி இருக்க.. தாய்குலத்தின் பத்துமாத சென்டிமென்டை இழுத்துவிட்டு என்னை மாட்டிவிட நினைப்பது நியாயமா?? :(:lol:

சண்டை களம் என்று இறங்கிவிட்டால் ........
காவலரண் அமைத்து .... வைக்க வேண்டிய இடங்களில் மிதிவெடிகளை வைத்து விட்டு இருப்பதே எமக்கு பாதுகாப்பாக இருக்கும்.
 
இதுக்குள் தனிய வேற மாட்டுபட்டு இருக்கிறோமில்ல .........
 
(எங்க நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும்) 

அப்பாவி ஆண்சிங்கம்... இன்னொரு பெண் சிங்கம் கிடைக்காமலா போய்விடும் என்று எங்காவது தேடிக் கொண்டிருக்கும்! :o

மிருகங்கள் கூடப் பழிவாங்குவதற்கெனத் தேடித் திரிந்து கொள்வதில்லை!

யானையும்.. திமிங்கிலமும் இதற்கு 'விதி விலக்கு' என்று கூறுகின்றார்கள்!

மனிதனையும் அவற்றுடன் சேர்த்துக் கொள்ளுவோம்! :icon_idea:  

ஆண்பாம்பு வரும்......... பெண்பாம்பு வரும் என்று நாகபாம்பு இனத்தை வளர்த்துகொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். 
அப்ப அது பொய்யா??  
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தொடர்ந்து இவ்வாற திரிகளுக்குள் புக விருப்பம் இல்லை..காரணம் விமர்சனங்கள் என்னும் போது பலவாறு அமையும்...சரி அவற்றைவிடுவம்..அண்மைய காலங்களில் நான் மொழி பெயர்ப்பு சம்பந்தமான சில வேலைகளும் செய்யிறனான்.சிலர் உதவி என்று கேட்டால் எனக்கு மனதுக்கு சரி என்று தோன்றினால் மட்டும் சிலருக்கு மொழிபெயர்ப்புக்கு போறனான்.தூரவாக இருந்தால் தொலைபேசியில் செய்வது வழமை.இப்போ அந்த வேலைக்கும் குட்பை சொல்லிட்டன்....அந்த வகையில் வெளியில் போய் பார்த்தால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று நினைக்கும் அளவுக்கு பிரச்சனைகளை கோர்ட்டில் பதிந்து வைத்திருப்பார்கள்..யாரு நம்ம அக்காமார்,அண்ணாமார்..

பெற்றோரின் பிரச்சனைகளினால் சின்னப் பிள்ளைகள் பாதிக்கபடுவது என்பது சாதரணமான ஒன்று மாதிரி ஆக்கி விட்டார்கள்.நிறைய,நிறைய குழந்தைகள் பாதிக்கபடுகிறார்கள் என்பது தான் உண்மை.கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தந்தையை பிரிந்து தாயோடு வாழும் இரண்டு பிள்ளைகளை அவதானித்து வருகிறன்.அந்தப் பிள்ளைகள் படும் பாடு சொல்ல முடியாது...தந்தை விட்டுவிட்டு போக தாயார் தான் இவ்வளவுக்கும் அவர்களை வளர்த்துக் கொண்டு இருந்தார். இப்போ அந்த தாய்க்கு தானும் மறுமணம் செய்து விட்டால் என்ன என்ற எண்ணம் போலும்..

அடிக்கடி உங்களால் தான் கிடந்து இப்படிச் சாகிறன். உங்கட அப்பாவைக் கூப்பிட்டு போய் விட்டீர்கள் என்றால் நான் சந்தோசமாக வாழுவன் என்று  தாய் வெருட்டும் போதும் எல்லாம் அந்த குழந்தைகளில் ஒருவர்  விக்கி,விக்கி அழுவா..ஏன் அழுகிறா என்று கேட்டால் தாய் எந்த வித தயக்கமும் இன்றி நான் இப்படிச் சொன்னதனால் அழுகிறா என்று சொல்வார்.இப்படியான பெற்றாருக்கு பிள்ளையாக பிறந்ததினால் நாளாந்தம் வதை படும் குழந்தைகளும் இருக்கிறார்கள்...அப்பனை மாதிரியே வந்து தொலைச்சு இருக்குதுகள் என்று வதைக்கபடும் பிள்ளைகள் எத்தனை பேர்....இது மட்டுமா செய்கிறார்கள் இரவில் பிள்ளைகள் நித்திரையால் எழும்பி அழுதால் உடனும் பிரிந்து வாழுறவருக்கு போண் பண்ணி உடன வந்து பிள்ளைகளைக் கொண்டு போக சொல்லி ஆய்க்கினைப்படுத்துறது இப்படி எல்லாம் நடக்கிறது.இரண்டு பக்கத்திலும் பிளையும் இருக்கலாம்,சரியும் இருக்கலாம்..ஆனால் இவை ஒன்றும் யாதும் அறியாத பிள்ளைகளைத் தாக்கவே கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் சொல்லும் விடயங்கள் உண்மைதான்......
 
பலபேருடனும் இங்கே நான் மல்லுகட்டுவதட்கும் ... நிர்வாகத்துடன் கூட சிலவேளைகளில். பலர் எனது கருத்தை புரியாமல் போவதற்கும் காரணம்.
 
இப்படி effect பற்றிய பேசிக்கொண்டு இருப்பதால்தான். 
இவை கதைகள் சம்பவங்களே தவிர இவற்றை வைத்து ஒரு சாதகமான முடிவை பெற முடியாது.
 
இதற்கெல்லாம் cause என்னவாக இருக்கிறது. என்று பிரச்சனைக்கான அத்திவாரத்தை திருத்தவேண்டும். அத்திவாரத்தை பிழையாக வைத்துகொண்டு இந்த சுவர் சொத்தி .. அந்த சுவர் கோணல் என்று கொண்டு இருந்தால் எப்படி? பின்பு எல்லாம் கோணலாகத்தான் இருக்கும்.
 
சுவிஸ் நாட்டில் ஒரு மனநல மருத்துவமனைக்கு சென்றேன் மொத்தம் 26 பேர்கள் இருக்கிறார்கள் அதில் 5 பேர் தமிழர்கள். எனது நண்பர் உங்களிபோல  ஒரு மொளிபெர்ப்பாளர் அங்கே. என்ன என்று அவரிடம் கேட்டேன் மிருகங்களிலும் கேவலமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை கேட்டு அதிர்ந்து போனேன். அவர் சொல்லும் கதைகள் படங்களில் கூட பார்க்க முடியாது. அப்படி கேவலமானவை.
 
இதெற்கெல்லாம் எமது முன்னைய தலைமுறை கோவில் குளம் என்று கட்டி திருநீறும் பூச்சும் போட்டும் என்றுதான் எங்களை வளர்த்து விட்டார்கள்? 
சான்டமருதன் என்பவர் இங்கே பதியும் பதிவுகள்தான் உண்மையானவை. நாம் ஒரு கேடுகெட்ட இனமாக இருந்துகொண்டுதான் வெளிக்கு சும்ம்மா வெள்ளை அடித்து வந்திருக்கிறோம்.
  • கருத்துக்கள உறவுகள்

சிலரது கருத்துக்களைப்பார்த்தால்............

மன உழைச்சல் தரும் இந்த சமுதாயத்தில் 

இந்தக்கொலைகளும்  ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளே  என்பது போலிருக்கு.... :(

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள்

அதில் தப்பியவர்கள்

தப்பி சில நாட்களில் உயிர் விட்டவர்கள் என சிலரைச்சந்தித்துள்ளேன்

அவர்கள் எல்லோரம் சொன்னது

ஒரு செக்கன் முடிவு

அந்த கணங்களை வெல்லமுடியவில்லை என்பது...

ஆனால் பிள்ளைகளையும் கொன்று தானும் போவதென்பது...

ஒரு கண முடிவு அல்ல

திட்டமிட்டு

பலநாட்கள் தயார்ப்படுத்தி

பழிவாங்குதலுக்காக செய்வது.............. :(

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமது கலாச்சாரம் என நாம் 'நம்புவதில்' மிகப்பெரிய தவறிருக்கின்றது!

உதாரணத்துக்கு எமது தமிழ்ப்படங்களை, அல்லது இந்தியத் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் அவை எதனைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன?

அது தான் எமது கலாசாரம் எனில்...

பழிக்குப் பழி, இரத்ததிற்கு இரத்தம், கற்பு, வரட்டுக் கெளரவம்.... இப்படியே தொடர்கிறது!

காதல் தோல்வியா... காதலியைத் தூக்கு... ?

இதன் முடிவுகளும், விளைவுகளும் தானே இவை!

கண்ணுக்குக் கண், பல்லுக்குப பல் என்ற வகையில் போனால்.. ஒரு கட்டத்தில் முழு உலகுமே குருடாகப் போவது தான் விளைவாக இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

சிலரது கருத்துக்களைப்பார்த்தால்............

மன உழைச்சல் தரும் இந்த சமுதாயத்தில் 

இந்தக்கொலைகளும்  ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளே  என்பது போலிருக்கு.... :(

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள்

அதில் தப்பியவர்கள்

தப்பி சில நாட்களில் உயிர் விட்டவர்கள் என சிலரைச்சந்தித்துள்ளேன்

அவர்கள் எல்லோரம் சொன்னது

ஒரு செக்கன் முடிவு

அந்த கணங்களை வெல்லமுடியவில்லை என்பது...

ஆனால் பிள்ளைகளையும் கொன்று தானும் போவதென்பது...

ஒரு கண முடிவு அல்ல

திட்டமிட்டு

பலநாட்கள் தயார்ப்படுத்தி

பழிவாங்குதலுக்காக செய்வது.............. :(

நான் உங்களை நடுகடளுக்குள் தள்ளிவிட்டால் ...........
 
பின்பு நீங்கள் தத்தளித்து கொண்டு இருப்பீர்கள் .......... சில நேரம் புயலை சந்தீர்பீர்கள். அல்லது உங்கள் அருகில வந்து போகும் உங்கள் உயிரையே பறிக்க கூடிய மீன்களை சந்திப்பீர்கள். பசி பட்டினி  தண்ணீர் தாகம். திசை அற்ற வாழ்வு என்று .......... தொடரும்போது. 
நீங்கள் என முடிவையும் எடுக்கலாம்.  அந்த முடிவை பற்றி அலட்டுவதில் பயன் இல்லை.
 
உங்களை நடுகடளுக்குள் தள்ளிவிட்ட என்னை பற்றி யாருமே அலட்டாமல் இருந்தால்? இப்படியான தற்கொலைகளை தடுக்க முடியாது. என்பதுதான் என்னுடைய வாதம்.
 
அவர்கள் இறந்ததன் பின்பு ஒப்பாரி வைப்பதில் என்ன இருக்கிறது??
தண்ணீர் வரமுன்பே அணையை கட்டவேண்டும். தண்ணீர் வெள்ளம் வரும்போது அவன் அவன் தனது உடல் உள்ள ஆரோக்கியத்திற்கு ஏற்ப முடிவுகளிதான் எடுக்க முடியும்.
 
மேலே துளசி அவர்கள் எழுதிய இரண்டு கதைகளையும் பாருங்கள். அவர்கள் நிலைமைக்கு எமது சமூகம்தான்  முதல் காரணம். அதை பழுது பார்க்காமல் அப்படியே வைத்துகொண்டு ......
அதற்குள் மாட்டுபட்ட அவர்கள் ஓர் நாளில் எடுக்கும் முடிவுகளை கொண்டுவந்து .
 
கவுன்சில் இருக்கிறது ....
கடவுள் வாழும் கோவில் இருக்கிறது .....
காபரே கிளப்புகள் இருக்கிறது ....  என்றால் இப்போதும்தான் அவை இருக்கிறது. அவர்களுடைய வாழ்வை எதை வைத்து மாற்ற  முடியும்?
 
அந்த இரு கதைகளுக்கும் எமது பெண்கள் ஏற்க கூடிய ஒரு நல்ல முடிவை எழுதுங்கள்.
வெட்டினா விழுத்தினா போல ......... விவாகாரத்து என்று சொன்னால். பாசை தெரியாது போகும் இடம் தெரியாது  பிள்ளைகள். ஒரு பெண்ணின் இடத்தில் உங்களை வைத்து பாருங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

சிலரது கருத்துக்களைப்பார்த்தால்............

மன உழைச்சல் தரும் இந்த சமுதாயத்தில் 

இந்தக்கொலைகளும்  ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளே  என்பது போலிருக்கு.... :(

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள்

அதில் தப்பியவர்கள்

தப்பி சில நாட்களில் உயிர் விட்டவர்கள் என சிலரைச்சந்தித்துள்ளேன்

அவர்கள் எல்லோரம் சொன்னது

ஒரு செக்கன் முடிவு

அந்த கணங்களை வெல்லமுடியவில்லை என்பது...

ஆனால் பிள்ளைகளையும் கொன்று தானும் போவதென்பது...

ஒரு கண முடிவு அல்ல

திட்டமிட்டு

பலநாட்கள் தயார்ப்படுத்தி

பழிவாங்குதலுக்காக செய்வது.............. :(

நீங்கள் கருதுவது போல சில வினாடி முடிவுகள் அல்ல மன அழுத்தப்பாதிப்பு என்பது.மன உழைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் வேறுபாடு உண்டு இதனை முதலில் பிரித்தறிந்து கொள்ளுங்கள்.
 
மன அழுத்தத்திற்கான காரணங்கள் பல்வகையானது. அதில் நீங்கள் சந்தித்வர்களின் நிலமையும் இங்கு பேசப்படும் தற்கொலையும் ஒரே காரணங்கள் அல்ல.
 
ஒரு தாய்க்கும் பிள்ளைகளுக்குமான உறவென்பது தந்தையை விடவும் நெருக்கம் மிகுந்தது. தனது பிள்ளைகளை கொல்லும் அளவுக்கு அவளை பாதித்தது என்ன ? இதுவே இங்கு பேசப்பட வேண்டிய விடயமும் தீர்வுமாகும். எழுந்தமானமாக மன அழுத்தம் என்பது ஏதோ காச்சல் தடிமன் இருமல் போல நினைக்காதீர்கள். 

பொதுவாக

இத போன்ற  நிகழ்வுகள் எவரையோ பழி  வாங்கவோ

அல்லது எனக்கு  சொந்தமானதை உனக்கு விட்டுவைக்கமாட்டேன் என்ற பழி உணர்வே மேலோங்கி நிற்பதை வைத்தே எழுதினேன்.

உங்களது கருத்தைப்பார்த்தால்

தனிப்பட இவர்கள் பற்றி  உண்மைநிலை தெரியும்போல உள்ளது.

அப்படியென்றால் எனது கருத்து ஆதாரமற்றது

நன்றி  வணக்கம்..

சாந்தி,

என் வாழ்நாளில் நான் மன அழுத்தம் நிறைந்து மருத்துவமனையிற்கு சென்று சிகிச்சை எடுத்தவர்களுடனும் அப்படி எடுக்காமல் விட்டவர்களுடனும் நெருக்கமாக பழகி இருக்கின்றேன். அதன் அடிப்படையில் பார்க்கும் போது, இப்படியான கொலை + தற்கொலைக்கு மன அழுத்தம் மட்டுமே காரணமாக ஒரு போதும் அமையாது. நொண்டிச் சாக்காக இதனைச் சொல்லி தப்பிக்கலாம்.

மனவழுத்தம் கொண்டவர்கள் தற்கொலை செய்வது வேறு விடயம். அவர்களே அதனைச் சாட்டி தம் பிள்ளைகளையும் கொன்று தற்கொலை செய்வது இன்னொரு விடயம். இப்படியான விடயங்களில் மிகுதியாக நிற்பது பழிவாங்கும் உணர்வு மட்டுமே ஆகும். மனவழுத்தத்தில் பழிவாங்கும் உணர்வின் சதவிகிதம் மிகவும் குறைவு சாந்தி.

"நான் மட்டும் செத்து உன்னை தண்டிப்பதை விட, நீ உயிராக நினைக்கும் பிள்ளைகளையும் கொன்று உன்னை தண்டிக்கின்றேன்" என்ற செய்தி தான் இப்படியான அநேக சம்பவங்களின் பின்னால் இருக்கு. இது வெறுமனே பழி உணர்ச்சியில் வருவது. ஒருவரின் சுய இயல்பு சார்ந்தது (attitude).  இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் பார்க்கப்பட்டு வருகின்றது.

நான் இதே திரியில் இணைத்த செய்தியில் ஒரு தமிழ் பெண்ணை மணமுடித்த தமிழரல்லாத ஆண் ஒருவர் குடும்பப் பிரச்சனைக்காக தன்னுடன் சேர்த்து குழந்தைகளையும் எரித்து மாண்டுள்ளார். அவருக்கு மன ரீதியிலான பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கையோ அல்லது செய்திகளோ சொல்லவில்லை.

அதே போன்று இச் செய்தியில் சொல்லப்பட்டவருக்கும் நீண்ட கால மனவழுத்தம் இருப்பதாக சொல்லப்படவில்லை.

தானும் செத்து தன் பிள்ளைகளையும் பலியெடுக்கும் காலம் நல்லதங்காளின் காலத்திலிருந்தோ அல்லது அதற்கும் முன்பாகவோ தொடங்குகின்றது. இதை வெறுமனே மனவழுத்தத்தின் விளைவு என்று சுருக்கி விட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தனியாக வாழமுடியும்.
ஆண்களும் வாழமுடியும். அதில் யாருக்கு என்ன லாபம் இருக்கிறது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை.
 
இங்கே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் ... பேரு வலிக்கு தன்னை உட்படுத்தி பெண் இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுக்கிறாள். இரண்டு பேர் என்பது இப்போது நான்கு  பேர் என்று ஆகிறது.
 
இப்போ கணவன் விட்டு விலகி போகிறார் .......
இரண்டு பிள்ளைகள்?
இவை யாருடையவை?
ஏன்  இந்த சுமைகள் அந்த பெண் மீது சுமத்த படுகிறது?
 
ஒரு பெண்ணின் இளமை காலத்தை காதல் கலியாணம் கத்தரிக்காய் என்று அழித்துவிட்டு இரண்டு உயிர்களையும் அவள் தலையில் கட்டிவிட்டு. 
தனியாக வாழ்ந்து காட்டுங்கள் ??? என்பது ஆணாதிக்கத்தின் அருவெறுப்பான அதி உச்சம். 
 
எதை வைத்து பெண்கள் தனியாக வாழ முடியாது என்று எண்ணுகிறீர்கள்??

 எந்த நாட்டிலும் குடும்பம் பிரியும் போது பெண் தான் குழந்தைகளை தனியே வளர்க்க வேண்டும் என்ற சட்டம் இல்லை.தாயிற்கும் தகப்பனுக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் சம பங்கு உள்ளது.

இந்தப் பெண் ஒரு நீதிமன்றை  நாடி இருந்தால் குழந்தைகளுக்கு இந்த நிலை வந்திருக்காது. கணவனை இழந்தாலோ விவாகரத்து ஆனாலோ வாழ்க்கை முடிந்து விட்டது என்ற நிலைக்குப் போகும் பெண்களே அதிகமாக இருக்கின்றார்கள்.

தனியாக வாழும் போது ஆண்களினால் தொந்தரவு இருக்கும் என்ற நிலையில் வாழும் பெண்களும் தனது தேவைகளைத் தானாகவே தனியாகப் பூர்த்தி செய்ய முடியாது வாழும் பெண்களுமே இப்படியான நிலைமைக்குத் தங்களைத் தாங்களே இட்டுச் செல்கின்றனர்.

பல பெண்களுக்கு முதலில் தன்னம்பிக்கை வேண்டும்.

தங்களாலும் ஆண்களைப் போலவேஎதையும்  கையாளத் தெரியும் என்ற நிலைக்கு அவர்கள் வரவேண்டும்.

ஆண்கள் அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தாலும் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. எல்லாவற்றையும் முதலில் ஆண்களின் தலையில் கட்டிவிட்டு  இக்கட்டான நிலை வந்ததும் குய்யோ முறையோ என்று ஓலைமிடுவதில் என்ன பயன். :icon_idea:

நான் நினைக்கிறேன் நீங்கள் தத்துவம் பேசுகிறீர்கள் என்று.
 
கடவுளை முழுமையாக நம்புவர்கள் ஏன் இங்கே பூமியில் வீணாக நேரத்தை சிலவழிக்க வேண்டும்? 
தன்னம்பிக்கை பெற்று தற்கொலை செய்து நேரே கடவுளிடம் போகலாமே??
 
ஆதி  அந்தம் எல்லாம் கடவுள்தானே ???
 
உலகில் எத்தனையோ இனங்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடி விடுதலை அடைந்து இருக்கிறார்கள்.
ஏன் தமிழர்கள் தன்னம்மிக்கை பெற்று போராடி விடுதலை பெற முடியாது??
புலிகள் 30 வருடம் போராடவில்லையா?
ஏன் இப்போ இருக்கும் தமிழர்களால் போராடமுடியவில்லை? தன்னம்பிக்கை இல்லையா ? அல்லது தமிழர் இல்லையா ?? 
 
நடைமுறைக்கு சாத்தியமானதையும் ........... நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளையும்  பற்றியே நான் பேசுகிறேன்.
தத்துவம் பேசுவது என்றாலோ இதைவிட அழகாக நான் பேசுவேன்.
 
only solution is fix the root of the cause. 
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

என் வாழ்நாளில் நான் மன அழுத்தம் நிறைந்து மருத்துவமனையிற்கு சென்று சிகிச்சை எடுத்தவர்களுடனும் அப்படி எடுக்காமல் விட்டவர்களுடனும் நெருக்கமாக பழகி இருக்கின்றேன். அதன் அடிப்படையில் பார்க்கும் போது, இப்படியான கொலை + தற்கொலைக்கு மன அழுத்தம் மட்டுமே காரணமாக ஒரு போதும் அமையாது. நொண்டிச் சாக்காக இதனைச் சொல்லி தப்பிக்கலாம்.

மனவழுத்தம் கொண்டவர்கள் தற்கொலை செய்வது வேறு விடயம். அவர்களே அதனைச் சாட்டி தம் பிள்ளைகளையும் கொன்று தற்கொலை செய்வது இன்னொரு விடயம். இப்படியான விடயங்களில் மிகுதியாக நிற்பது பழிவாங்கும் உணர்வு மட்டுமே ஆகும். மனவழுத்தத்தில் பழிவாங்கும் உணர்வின் சதவிகிதம் மிகவும் குறைவு சாந்தி.

"நான் மட்டும் செத்து உன்னை தண்டிப்பதை விட, நீ உயிராக நினைக்கும் பிள்ளைகளையும் கொன்று உன்னை தண்டிக்கின்றேன்" என்ற செய்தி தான் இப்படியான அநேக சம்பவங்களின் பின்னால் இருக்கு. இது வெறுமனே பழி உணர்ச்சியில் வருவது. ஒருவரின் சுய இயல்பு சார்ந்தது (attitude).  இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் பார்க்கப்பட்டு வருகின்றது.

நான் இதே திரியில் இணைத்த செய்தியில் ஒரு தமிழ் பெண்ணை மணமுடித்த தமிழரல்லாத ஆண் ஒருவர் குடும்பப் பிரச்சனைக்காக தன்னுடன் சேர்த்து குழந்தைகளையும் எரித்து மாண்டுள்ளார். அவருக்கு மன ரீதியிலான பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கையோ அல்லது செய்திகளோ சொல்லவில்லை.

அதே போன்று இச் செய்தியில் சொல்லப்பட்டவருக்கும் நீண்ட கால மனவழுத்தம் இருப்பதாக சொல்லப்படவில்லை.

தானும் செத்து தன் பிள்ளைகளையும் பலியெடுக்கும் காலம் நல்லதங்காளின் காலத்திலிருந்தோ அல்லது அதற்கும் முன்பாகவோ தொடங்குகின்றது. இதை வெறுமனே மனவழுத்தத்தின் விளைவு என்று சுருக்கி விட முடியாது.

அவர் பிள்ளைகளை உயிராக நினைத்திருந்தால் ............. பிள்ளைகள் இந்த நிலைமயை ஒருபோதும் அடைந்திருக்க முடியாது.
 
நடு காட்டில் இருட்டுக்குள் கொண்டு சென்று விட்டால் உலகில் 88 வீதத்திற்கும் மேலானவர்கள் பேயை நம்புகிறார்கள். இதுவரையில் யாருமே காணதா பேயைக்கு எததனயோ பேர் பயப்பிடுகிறார்கள்?
இது ஒரு மன தாக்கம்தான். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ................ உலகில் 88 வீதமானவர்கள் மனத்தாக்கத்திட்கு உடபட்டவர்கள் என்பதை என்னால் நிருபிக்க முடிகிறது.
 
பழிவாங்குதல் என்ற உணர்வுகூட மன அழுத்தத்தின் இன்னொரு பரினாம்தான். சொந்த உறவுகளை பழிவாங்குதல் என்பதையும் ......... மன அழுத்தத்தையும் பிரிக்க முடியாது. 
 
ஒருவருடைய மனம் எந்த அளவில் பாதிக்கிறது என்பதை ...........? யாராலும் அளவிட முடியாத போது. ஒருவருடைய தற்கொலையில் மன அழுத்தம் காரணம் இல்லை என்பதை எதை வைத்து அளவிடுவது ?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே.. மருதங்கேணி.. மன அழுத்தத்துக்கு நீங்க கொடுக்கிற விளக்கத்தை கேட்டு மனநோய் மருத்துவருக்கே.. மனநலம் பாதிக்கப் போகுது..!! :lol:

சும்மா சப்பை கட்டுக்கட்டி.. பூசி மொழுகாமல்.. யதார்த்தத்தை ஏத்துக்கொண்டு.. விவாதத்தை.. அடுத்த நிலைக்கு கொண்டு போய்.. சமூகத்திற்கு சிந்திக்கக் கூடிய ஒரு தீர்வை முன் வைக்கிறது தான் நல்லது.

இந்த விடயத்தில்.. ஆண்.. பெண் என்ற வேற்றுமைக்கு இடமில்லை. இருவரும்.. மற்றவரால் பாதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். :icon_idea::)

இதைதான் நான் இவளவு நேரமும் சொல்லி வருகிறேன் ......
நான் சும்மா எழுதும் ஒரு கருத்தே ............. மருத்துவர் ஒருவரின் மனநிலையையே பதிக்க செய்யலாம் என்று நீங்களே  சொல்கிறீர்கள்.
 
பல கனவுகள் நினைவுகள் உடன் கட்டிய வாழ்க்கை சிதறி நாடு தெருவுக்கு வரும்போது ...
ஒரு பெண்ணின் மன நிலை ???
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக

இத போன்ற  நிகழ்வுகள் எவரையோ பழி  வாங்கவோ

அல்லது எனக்கு  சொந்தமானதை உனக்கு விட்டுவைக்கமாட்டேன் என்ற பழி உணர்வே மேலோங்கி நிற்பதை வைத்தே எழுதினேன்.

உங்களது கருத்தைப்பார்த்தால்

தனிப்பட இவர்கள் பற்றி  உண்மைநிலை தெரியும்போல உள்ளது.

அப்படியென்றால் எனது கருத்து ஆதாரமற்றது

நன்றி  வணக்கம்..

இங்கு என்ன விடயத்தை பேசுகிறோம் என்பதனை புரியாமல் ஆத்திரப்பட்டு ஒதுங்குகிறீர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். மிகவும் அவதானமாகவும் தீர்வையும் தேட வேண்டிய விடயத்தில் இத்தகைய எண்ணங்கள் ??? சென்று வருக.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

என் வாழ்நாளில் நான் மன அழுத்தம் நிறைந்து மருத்துவமனையிற்கு சென்று சிகிச்சை எடுத்தவர்களுடனும் அப்படி எடுக்காமல் விட்டவர்களுடனும் நெருக்கமாக பழகி இருக்கின்றேன். அதன் அடிப்படையில் பார்க்கும் போது, இப்படியான கொலை + தற்கொலைக்கு மன அழுத்தம் மட்டுமே காரணமாக ஒரு போதும் அமையாது. நொண்டிச் சாக்காக இதனைச் சொல்லி தப்பிக்கலாம்.

மனவழுத்தம் கொண்டவர்கள் தற்கொலை செய்வது வேறு விடயம். அவர்களே அதனைச் சாட்டி தம் பிள்ளைகளையும் கொன்று தற்கொலை செய்வது இன்னொரு விடயம். இப்படியான விடயங்களில் மிகுதியாக நிற்பது பழிவாங்கும் உணர்வு மட்டுமே ஆகும். மனவழுத்தத்தில் பழிவாங்கும் உணர்வின் சதவிகிதம் மிகவும் குறைவு சாந்தி.

"நான் மட்டும் செத்து உன்னை தண்டிப்பதை விட, நீ உயிராக நினைக்கும் பிள்ளைகளையும் கொன்று உன்னை தண்டிக்கின்றேன்" என்ற செய்தி தான் இப்படியான அநேக சம்பவங்களின் பின்னால் இருக்கு. இது வெறுமனே பழி உணர்ச்சியில் வருவது. ஒருவரின் சுய இயல்பு சார்ந்தது (attitude).  இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் பார்க்கப்பட்டு வருகின்றது.

நான் இதே திரியில் இணைத்த செய்தியில் ஒரு தமிழ் பெண்ணை மணமுடித்த தமிழரல்லாத ஆண் ஒருவர் குடும்பப் பிரச்சனைக்காக தன்னுடன் சேர்த்து குழந்தைகளையும் எரித்து மாண்டுள்ளார். அவருக்கு மன ரீதியிலான பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கையோ அல்லது செய்திகளோ சொல்லவில்லை.

அதே போன்று இச் செய்தியில் சொல்லப்பட்டவருக்கும் நீண்ட கால மனவழுத்தம் இருப்பதாக சொல்லப்படவில்லை.

தானும் செத்து தன் பிள்ளைகளையும் பலியெடுக்கும் காலம் நல்லதங்காளின் காலத்திலிருந்தோ அல்லது அதற்கும் முன்பாகவோ தொடங்குகின்றது. இதை வெறுமனே மனவழுத்தத்தின் விளைவு என்று சுருக்கி விட முடியாது.

நிழலி, இ.ங்கு பேசப்படும் பெண்ணின் கொலையும் தற்கொலையும் பற்றியதே. நீங்கள் சொல்லும் உதாரணம் ஒரு சம்பவம். அதன் உண்மையை நீங்கள் யாருமே உணர்ந்து அறியவில்லை. கேட்ட செய்தியை இப்படித்தான் இருக்கும் அதாவது உனது உயிரான பிள்ளைகளை அழித்து இதோ உன்னை வருத்துகிறேன் பார் என்ற பழியுணர்வையே ஊகத்தின் முடிவை விடையாக தந்துள்ளீர்கள்.
 
மன அழுத்தம் அதன் தாக்கம் எத்தகையது பெண்களை இத்தகைய நிலைக்கு இட்டுச் சென்றது ஏன் என்பது பற்றி இதுவரையில் இங்கு பிரிந்து போக விரும்பினால் போய் வாழ்ந்து காட்டு என்றோ அல்லது எப்படி இவவுக்கு இப்படி செய்ய வரும் என எழுதிய யாருமே தீர்வை சொல்லவில்லை.
 
மன அழுத்தம் கால எல்லையை வகுத்து வருவதில்லை. அடி உதையல்லாது குறைந்தகால மனத்தாக்கத்தை  குடும்பத்திலிருந்து பெற்றாலும் இத்தகைய நிலமைகள் வரும்.
 
ஒர உதாரணம் :- ஒர யேர்மனிய பெண். அவள் இன்று இருந்திருந்தால் என் வயது. 5வருடம் முதல் யேர்மனியில் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள். இவள் பெண்கள் நலன் சார்ந்து பணியாற்றிய ஒரு பெண். ஒரு பெரும் பொறுப்பை வகித்தவள். நான் கூட மொழி கற்க அனைத்து சமூக பெண்களுடனான தொடர்பாடலை பேண இன்னும் இங்கத்தைய சமூகத்துடனான உறவை பேண துணையிருந்தவள். 
 
2வது மணமுடித்து இரண்டாவது தாரத்திற்கு ஒரு 5வயது பெண் குழந்தையும் இருந்தது. எங்கள் தமிழர்களில் சிலர் என்னுடன் வாதிட்டார்கள். தன்னை வழிநடத்தத் தெரியாதவ என்னெண்டு உங்களுக்கெல்லாம் வழிகாட்டினா என்று. 2வருடங்கள் அந்தப் பெண்ணுடன் பழகியிருக்கிறேன். அவளது தனிப்பட்ட வாழ்வைவிட அவள் பணியாற்றிய பணியில் வந்த பெண்களின் பிரச்சனைகள் அவள் பார்த்த அவலங்களும் அவளை பாதித்தே மன அழுத்தத்திற்கு உள்ளானாள்.
 
இங்கு மன அழுத்தம் என்ன என்பது பற்றி எழுதப்படாதவரை விவாதங்கள் மட்டுமே நீளும். 
எனவே இனி இத்திரியில் முரண்படுவதைவிட மன அழுத்தம் என்ன என்பது பற்றி எழுதிவிட்டு இங்கு கருத்தாட வருகிறேன்.

 எந்த நாட்டிலும் குடும்பம் பிரியும் போது பெண் தான் குழந்தைகளை தனியே வளர்க்க வேண்டும் என்ற சட்டம் இல்லை.தாயிற்கும் தகப்பனுக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் சம பங்கு உள்ளது.

இந்தப் பெண் ஒரு நீதிமன்றை  நாடி இருந்தால் குழந்தைகளுக்கு இந்த நிலை வந்திருக்காது. கணவனை இழந்தாலோ விவாகரத்து ஆனாலோ வாழ்க்கை முடிந்து விட்டது என்ற நிலைக்குப் போகும் பெண்களே அதிகமாக இருக்கின்றார்கள்.

தனியாக வாழும் போது ஆண்களினால் தொந்தரவு இருக்கும் என்ற நிலையில் வாழும் பெண்களும் தனது தேவைகளைத் தானாகவே தனியாகப் பூர்த்தி செய்ய முடியாது வாழும் பெண்களுமே இப்படியான நிலைமைக்குத் தங்களைத் தாங்களே இட்டுச் செல்கின்றனர்.

பல பெண்களுக்கு முதலில் தன்னம்பிக்கை வேண்டும்.

தங்களாலும் ஆண்களைப் போலவேஎதையும்  கையாளத் தெரியும் என்ற நிலைக்கு அவர்கள் வரவேண்டும்.

ஆண்கள் அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தாலும் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. எல்லாவற்றையும் முதலில் ஆண்களின் தலையில் கட்டிவிட்டு  இக்கட்டான நிலை வந்ததும் குய்யோ முறையோ என்று ஓலைமிடுவதில் என்ன பயன். :icon_idea:

தத்துவங்கள் கோடிக்கணக்கில் இருக்கிறது வாத்தியார். யதார்த்தம் தத்துவங்களுக்கு மாறுபட்டுள்ளது. மாறுபாட்டை தீர்க்க வழி நீங்கள் சொல்லும் ஆண் வீரம் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.