Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் முன்னாள் தமிழீழ காவல்துறை வீரர் சுட்டுக்கொலை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கும் சிங்களவனிற்க்கும் உள்ள வித்தியாசம் இந்த "சிலவேளை" இதுக்குள்ளை நிற்பவர்கள்தான் நாங்கள் .

ragunathan நீங்களா? யாழ்கள கருத்தாளர்களில் எனக்கு பிடித்தவர் அதுவும் இழவுவீட்டில் நின்றுகொண்டு நாங்கள் இப்படி. 

 

தவறுதான், யோசிக்காமல் எழுதிவிட்டேன். 

 

இவரைப்போலவே இன்னொருவருக்கும் இதுபோன்ற அச்சுருத்தல் முன்னர் விடுக்கப்பட்டிருந்தது. அதனால்த்தான் அப்படி எழுதினேன்.

கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் அவர்களின் படுகொலைக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கண்டனம்

கணேசபுரம் என்ற கிராமத்தில் குடும்பமாக வசித்துவந்த முன்னால் தமிழீழ காவல்துறையில் பணிபுரிந்தவரென கூறப்படும் 40 வயதுடைய கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் அவர்கள் கடந்த புதன்கிழமை (12-11-2014) இரவு 8.00 மணியளவில் அவரது காணியில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் அவர்களின் இப்படுகொலைச் சம்பவத்தினை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

2009 ம் ஆண்டு கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை பெற்று பின்னர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார் .தமிழர் பிரதேசம் எங்கும் ஸ்ரீலங்கா அரசின் ராணுவம் குவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இக்கொலைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கமே முழுப் பொறுப்பாகும்.கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் அவர்களின் படுகொலை தமிழின அழிப்பு இன்றும் தொடர்கின்றதை தெளிவாக காட்டிநிற்கின்றது.

நீதி இல்லாத நாட்டில் இக் கொலைக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. இக் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கோரிநிற்கின்றோம் .தொடர்ச்சியாக தமிழர் மீது முனெடுக்கப்படும் படுகொலையை கண்டும் சர்வதேசம் மௌனம் காக்காமல் உடனடியாக ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் .

கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் அவர்களை இழந்து தவிக்கும் பிள்ளைகளுடனும் ஆறாத்துயரில் துடிக்கும் மனைவியிடமும் , உறவினர்களிடமும் , நண்பர்களிடமும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

http://www.pathivu.com/news/35368/57//d,article_full.aspx

கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலைக்கு த தே ம மு கண்டனம்.

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பிரதேசத்திலுள்ள கணேசபுரம் என்ற கிராமத்தில் வசித்துவந்த முன்னர் தமிழீழ காவல்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவரெனக் கூறப்படும் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) கடந்த புதன்கிழமை (12-11-2014) இரவு 8.00 மணியளவில் அவரது காணியில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படுகொலைச் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளது ஆளுகையின் கீழ் வன்னிப்பிரதேசம் இருந்த காலப்பகுதியில் அங்கு நடைமுறையிலிருந்த தமிழீழ காவல்துறை என்ற கட்டமைப்பில் அதிகாரியாகப் பணியாற்றிதாகக் கூறப்படும் நகுலேஸ்வரன் 2009 மே மாதத்தின் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா அரசினால் “புனர்வாழ்வு” அளிக்கப்பட்டதாகக் கூறி சமூகத்துடன் இணைக்கப்பட்டிருந்தார்.

புனர்வாழ்வு முகாமிலிருந்து விதலையான பின்னர் தனது மனைவி பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களுடன் வாழ்ந்து வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தீவு முழுவதும் ஸ்ரீலங்கா அரசின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள நிலையில் ஸ்ரீலங்கா ஆயுதப் படையினரிடமும் பொலீசாரிடமும் மட்டுமே ஆயுதங்கள் காணப்படுகின்றன. அதிலும் வடமாகாணத்தில் சுமார் 15 இராணுவ டிவிசன்கள் நிலை கொண்டுள்ளதுடன் இப்பிரதேசம் உளவுத் துறையினரது அதி உச்ச கண்காணிப்பின் கீழும் உள்ளது. அது மட்டுமன்றி “புனர்வாழ்வு” அளிக்கப்பட்டதாக கூறி சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அதிதீவிரமாகக் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். இவ்வாறான புறச்சூழ்நிலையில்; நகுலேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் இக்கொலைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கமே முழுப் பொறுப்பாகும்.

இக்கொலை தொடர்பாக ஸ்ரீலங்கா அரசு நியாயமான விசாரணைகள் எதனையும் நடாத்தும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. எனவே இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொண்டுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இக்கொலை தொடர்பாகவும் முழுமையான விசாரணை ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகின்றோம்.

செ.கஜேந்திரன்

பொதுச் செயலாளர்

http://www.seithy.com/breifNews.php?newsID=120761&category=TamilNews&language=tamil

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 

 

சிங்களவன் சொல்லும் இணக்க அரசியல் இதுதான் என்பதினை என்னும் சிங்களவனை நம்பி இருப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட ஈனமான கேவலமான செயல் எதுவும் இருக்கமுடியாது .

 

குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

 

இப்படியான கொலைகளை பல வருடங்களாக நாங்களும் நியாயபடுத்திக்கொண்டிருந்த காலங்களும் இருந்தது .

நாய்க்கு கல் எங்கு பட்டாலும் காலைத்தான் தூக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
"பயங்கரவாத முத்திரை குத்தி மாகாணசபையை கலைக்கவும் தயங்க மாடார்கள்" சி வி விக்னேஸ்வரன்.
 
மற்று கருத்தாளர்கள்.
ஜெனநாயக வீரர்கள்.
ஒட்டி ஒட்டாத ஓடுகாலிகள்.
விட்டுகொடுப்பு அரசியல் வாதிகள்.
இனத்தை விற்கும் எட்டப்பர்.
 
இதெல்லாம் தமிழரில் தான் அன்றும் இன்றும் எப்போதும் உண்டு.
தமிழனுக்குள் தான் தமிழனுக்கான எதிரிகள் அதிகாமாக உண்டு.
 
அன்றில் இருந்து இன்றுவரை உண்மை தமிழன் தமிழர் என்ற காரனத்திற்காக இந்த கூட்டத்தை அவப்போது மன்னித்தே வந்திருக்கிறார்கள்.
இந்த கூட்டம் தமிழரை விற்க ஒருபோதும் மறந்ததில்லை.
 
(அவர்களை கொன்றால் அதுவும் பயங்கரவாதம்தான்) 
  • கருத்துக்கள உறவுகள்

நகுலேஸ்வரன் படுகொலையும் மாவீரர் நாள் என்ற சமயச் சடங்குப் பிழைப்பும்

 

nakuleSvaran.jpgவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் இலங்கை அரச புலனாய்வுப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை இலங்கை முழுவதும் முன்னை நாள் போராளிகள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. புனர் வாழ்வளிக்கிறோம் என்ற அடிப்படையில் பல்வேறு சித்திரவதைகளுக்கும் உளவியல் பாதிப்புக்களுக்கும் உள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகள் மீது விடுக்கப்பட்டுள்ள மிரட்டலே இப்படுகொலை.

இராணுவச் சர்வாதிகார அரசை ராஜபக்சவின் தலைமையில் உருவாக்கத் துணைபோகும் மேற்கு ஏகபோக அரசுகளும் இந்திய அரசும் சமூகத்தின் மீது பற்றுள்ள எஞ்சியவர்களையும் அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இப்படுகொலை.

நகுலேஸ்வரன் விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து நிலப்பறிப்பிற்கு எதிரான போராட்டங்களில் பங்காற்றியிருக்கிறார். சமூகப்பற்றுடன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மக்கள் மீது பற்றுக்கொண்ட எவரையும் இலங்கையில் ஆட்சிசெலுத்தும் இனப்படுகொலை அரை இராணுவ அரசு வாழ அனுமதிக்காது என்பதே நகுலேஸ்வரனின் படுகொலை உலகிற்குச் சொல்லும் செய்தி.

இது இவ்வாறிருக்க மரணித்த போராளிகளை முன்வைத்து பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. புரட்சிகரமாகவும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட வேண்டிய போராளிகளின் நினைவு நாளை மாவீரர் நாள் என்ற தலையங்கத்தில் சமயச்சடங்கு போல புலம்பெயர் அரசியல் தலைமைகள் நடத்தி அதனைப் பிழைப்பாக்கிக் கொள்கின்றன. இவர்கள் தாம் சுருட்டிக்கொள்ளும் பணத்தின் ஒரு பகுதியையாவது நகுலேஸ்வரன் போன்ற போராளிகளின் மக்கள் சார்ந்த செயற்பாடுகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தினால் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் மீண்டும் முளைவிட வாய்ப்புக்களுண்டு.

http://inioru.com/?p=42776

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் 80,81 ஆண்டுகளை நினைவில் கொண்டுவந்து நிறுத்துகிறது இந்நிகழ்வு

 

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் இவ்வேளையில் இக்குடும்பத்திற்கு உதவி செய்யவும் விருப்புகிறேன்.

 

நேசக்கரத்திடம் இது தொடர்பாக ஆவன செய்ய வேண்டுகிறேன்.

இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுதுறையினர் புடை சூழ நகுலேஸ்வரனின் இறுதிக் கிரிகை!

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து  12 ஆம் திகதி புதன்கிழமை இரவு இராணுவ முகாம்கள் சூழவுள்ள பகுதியில் வைத்து  கொல்லப்பட்டார்.

 

இவரது இறுதி கிரிகை நிகழ்வு நேற்று அவரது  கிராமத்தில் நடை பெற்றது. இவ் நிகழ்வில்  சீருடை அணிந்த இலங்கை இராணுவத்தினர் இறுதி நேரத்தில் பல்வேறு மூலைகளிலும் இருந்து புகைப்படங்களை எடுத்தனர். அதில் 200 மக்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் பங்கேற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் சிங்கள  புலனாய்வுதுறையினர் அங்கு வருகை தந்திருந்தனர்.

 

Nakuleswaran-1.JPG

 

Nakuleswaran-2.jpg

 

Nakuleswaran-3.JPG

 

Nakuleswaran-4.JPG

 

Nakuleswaran-5.JPG

Nakuleswaran-6.jpg

 

Nakuleswaran-7.JPG

 

Nakuleswaran-8.JPG

 

http://www.pathivu.com/news/35414/57//d,article_full.aspx

Edited by துளசி

இராணுவப்புலனாய்வு பிரிவின் வழிநடத்தலில்  நகுலேஸ்வரன் கூலிக்கே படுகொலை!  - ஆதாரங்கள் இணைப்பு

 

இராணுவப்புலனாய்வு பிரிவின் வழிநடத்தலில் நடந்த மன்னார் மாவட்ட முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலைக்கு ஜந்து இலட்சம் விலை பேசப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் இப்பணத்தினை கிராம அலுவலரான ஜெபநேசனிடம் வழங்கியதாகவும் அதில் 35 ஆயிரத்தினை முற்பணமாக வழங்கி வவுனியாவில் வசித்து வரும் விடுதலைப்புலிகளது முன்னாள் புலனாய்பு பிரிவு போராளியான தமிழ் என்பவரை கொண்டு இக்கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
 

sriskanthakumar01.png

கொலையின் பின்னர் மீதிப்பணம் வழங்கப்படுமென கிராம அலுவலரால் உறுதி அளிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

sriskanthakumar02.png

எனினும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி படைத்தரப்பிடமிருந்தே பெறப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இதனை அமைச்சர் றிசாத் பெற்று வழங்கியிருந்ததாக ஆரம்ப கட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

sriskanthakumar03.png

இந்நிலையில் பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டால் தனது நிலை தொடர்பில் அச்சங்கொண்டுள்ள அமைச்சர் றிசாத் அவரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதுடன் ஏனையவர்களினை மட்டும் சிக்கவைக்க முற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

sriskanthakumar04.png

 


http://www.pathivu.com/news/35421/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவப்புலனாய்வு பிரிவின் வழிநடத்தலில்  நகுலேஸ்வரன் கூலிக்கே படுகொலை!  - ஆதாரங்கள் இணைப்பு

 

இராணுவப்புலனாய்வு பிரிவின் வழிநடத்தலில் நடந்த மன்னார் மாவட்ட முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலைக்கு ஜந்து இலட்சம் விலை பேசப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் இப்பணத்தினை கிராம அலுவலரான ஜெபநேசனிடம் வழங்கியதாகவும் அதில் 35 ஆயிரத்தினை முற்பணமாக வழங்கி வவுனியாவில் வசித்து வரும் விடுதலைப்புலிகளது முன்னாள் புலனாய்பு பிரிவு போராளியான தமிழ் என்பவரை கொண்டு இக்கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

 

sriskanthakumar01.png

கொலையின் பின்னர் மீதிப்பணம் வழங்கப்படுமென கிராம அலுவலரால் உறுதி அளிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

sriskanthakumar02.png

எனினும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி படைத்தரப்பிடமிருந்தே பெறப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இதனை அமைச்சர் றிசாத் பெற்று வழங்கியிருந்ததாக ஆரம்ப கட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

sriskanthakumar03.png

இந்நிலையில் பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டால் தனது நிலை தொடர்பில் அச்சங்கொண்டுள்ள அமைச்சர் றிசாத் அவரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதுடன் ஏனையவர்களினை மட்டும் சிக்கவைக்க முற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

sriskanthakumar04.png

 

http://www.pathivu.com/news/35421/57//d,article_full.aspx

பணத்தை கொடுத்த பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் தமிழர்,... அவர் இந்தப் பணத்தை கொடுத்த கிராம அலுவலரான ஜெபநேசன் தமிழர்.... அவர் அட்வான்ஸ் கொடுத்த முன்னாள் புலி தமிழ் என்பவரும் தமிழர்.... இடையே ஒரு முஸ்லீம் அமைச்சர்.... சுட்டதும் புலி, உயிரிழந்ததும் புலி... ஆனால், வழிநடத்தல், ராணுவ புலனாய்வு பிரிவு... 5 லட்சம் டீல் என்று இணையத்தளத்திடம் ஆதாரம் வேறு கிடைத்து விட்டது....

 

அட முட்டாள் ராணுவ புலனாய்வுத்துறையே...  ஒரு தோட்டா என்ன விலை? நீங்களெல்லாம் குருட்டு லக்கிலே யுத்தத்தில் ஜெயிச்சிருக்கீங்க!

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஏலம் போன பதிவு போல இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Nakuleswaran-funeral-300-news.jpg

வெள்ளாங்குளத்தில் இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினர் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றது. இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.இறுதிக்கிரியைகள் நடந்த போது பெருமளவு இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் அங்கு காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் நகுலேஸ்வரனின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.

 

Nakuleswaran-funeral-171114-seithy%20(1)

 

 

Nakuleswaran-funeral-171114-seithy%20(2)

 

 

Nakuleswaran-funeral-171114-seithy%20(3)

 

 

Nakuleswaran-funeral-171114-seithy%20(4)

 

 

Nakuleswaran-funeral-171114-seithy%20(5)

 

 

Nakuleswaran-funeral-171114-seithy%20(6)

 

http://seithy.com/breifNews.php?newsID=120943&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம்- அமைச்சர்கள்- புலனாய்வாளர்கள்- படையினருடன் இணைந்து மாபியாக்களாகும் தமிழ்அதிகாரிகள் சிலர்:

 

 

 

கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலையும் துலங்கும் மர்மங்களும்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இணைப்பு - 2-

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், தமிழீழ காவற்துறையின் முன்னாள் வீரருமான கிருஸ்ணசாமி  நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் பல முக்கிய தகவல்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்துள்ளது.

தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை இவர் துணிந்து செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார். சமுக பிரச்சினைகளுக்கு எதிராக அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுடன் கடுமையான  தர்க்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு அமைந்திருக்கிறது. இந்த பிரிவின் நகராக அடம்பன் விளங்குகிறது. இங்கு தான் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்தப் பிரிவின் தற்போதைய பிரதேச செயலராக இருப்பவர் சிறீஸ்கந்தராசா இவர் மிகப்பெரிய ஊழல் பேர்வழி என கிராம மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர்.



குறிப்பாக இவர் அமைச்சர் ரிஸாத்பதியுதீனிற்கு  மிக நெருங்கிய நண்பர் எனவும்,  பாடசாலைக் கால நண்பர் எனவும் அறியவருகிறது.  அதனால் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஊழல்களுக்கு இவரும், இவருடைய ஊழலுக்கு அமைச்சர் ரிசாத்தும்  துணை துணையாக செயற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதற்கு உதாரணமாக அவர்கள் சுட்டிக் காட்டும் விடயங்கள் - காட்டு மரங்கள் வெட்டி விற்கப்படுவது -  இந்த வியாபாரத்தில் ஈடுபடும் அமைச்சர் ரிஸாத் பதியுதீனிற்கு நெருக்கமானவர்களுக்கு அனுமதிப்பத்திரம் கொடுப்பது (பெமிற் கொடுப்பது) மணல் கொள்ளைக்கு அனுமதிப்பத்திரம் கொடுப்பது  (பெமிற்) - கிரவல் ஏற்றி விற்பதற்கு அனுமதிப்பத்திரம் கொடுப்பது (பெமிற்) உள்ளிட்ட விடயங்களுக்கு  தாராளமாக இந்தப் பிரதேச செயலராக உள்ள சிறீஸ்கந்தராசா உதவுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அடம்பன் பிரதேச அரச அதிகாரி ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

இவை மட்டும் அல்லாது அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு நெருக்கமானவர்கள் புத்தளம் - கற்பிட்டி உள்ளிட்ட இலங்கையில் எங்கிருந்தாலும் மன்னாரில் இந்திய வீட்டுத் திட்டம் வேண்டும் என்றால் அவர் மன்னாரில்தான் வசிக்கிறார் என்பதனை உறுதிப்படுத்தி அந்த இந்திய வீட்டுத் திட்டம் கிடைக்கவும பிரதேச செயலராக உள்ள சிறீஸ்கந்தராசா உதவி புரிவார்.

தவிரவும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு நெருக்கமான -  18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் எல்லோரும் மன்னார் பெரிய மடு , சன்னார் போன்ற பகுதிகளில் அரசிற்கு சொந்தமான காட்டு காணிகளை வெட்டி தமதுடமையாக்குவதற்கு அனுமதிப் பத்திரம் (பெமிற்) போட்டு கொடுப்பார்.  இதனால் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவருக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறார் என அந்த அதிகாரி தெரிவிக்கிறார்.

அந்த வகையில் பிரதேச செயலரான சிறீஸகந்தராசா  தன்னுடைய உறவினர்கள் நண்பர்கள் பெயரில் அதிகமான  வாகனங்களை வாங்கி குவித்துள்ளார். ( றக்றர் - டிப்பர் - பெக்கோவாகனம்)  இந்த வாகனங்கள் மூலமாக மன்னார் இலுப்பைக் கடவைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் கூராய் என்ற ஆறில் இருந்து பெருந்தொகையான மணலை கொள்ளை அடித்து ஒரு டிப்பர் மணலுக்கு 9000.00 ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார்.  அதனை வாங்கும் வியாபாரிகள் 14.000 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்கிறார்கள்.

இத்தகைய நடவடிக்கைகளில் நீண்டகாலமாக செயற்பட்டு வரும் இவருக்கு பல இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்ட போதும்;  அமைச்சர் ரிசாத் பதியுதீன்; ஊடாக அமைச்சர்  பசில் ராஜபக்ஸவின் அனுசரணையோடுஇடமாற்றங்களை காலதாமதப்படுத்தி வருவதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பெரிய மடு வெள்ளாங்குளப் பகுதியில் பலநூறு ஏக்கர் அரச காணிகளை தனது உறவினர்கள் நண்பர்கள் பெயரில் அபகரித்து தனது உடமையாக்கி வருகிறார்.

அதில் ஒரு கட்டமாக மன்னார் வெள்ளாங்குளப் பகுதியில் பாலியாறுக்கு அண்மையில் நெற்செய்கை பண்ணக் கூடிய 60 ஏக்கர் அரச காணியை தனது உடமையாக்க முயற்சித்த வேளையிலேயே கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் இவர்களின் வில்லனாக உருவெடுத்துள்ளார்.

வெள்ளாங்குளத்தில் தற்போதைய கிராமசேவகராக இருக்கும் ஜெபநேசன் என்பவருடன் இணைந்து பிரதேச செயலாளரான சிறீஸ்கந்தராஜா இந்தக் காணியை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் பொழுது இதற்கு அங்கு வசிக்கும் புலிகளின் முன்னாள் காவற்துறையை சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்...

இது குறித்து மன்னார் நீதிமன்றில் முக்கியமான வழக்கு ஒன்று நடைபெறுகிறது. அதன் முக்கிய சாட்சியாகவும் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் விளங்கியிருக்கிறார்...

இதனால் இவரை ஊரைவிட்டு துரத்த சிறீஸ்கந்தராஜாவும் - ஜெபநேசனும் முயன்றிருக்கின்றனர்...

ஏதோ ஒரு அலுவலாக ஆசிரியரான  நகுலேஸ்வரனின் மனைவி பிரதேச செயலகத்திற்கு சென்ற போது ' தங்கச்சி உனது கணவரை ஏதாவது மத்திய கிழக்கு நாட்டுக்கு அனுப்பு  ஊரில் வைத்திருக்காதே விணான பிரச்சனை என மறைமுகமாக மிரட்டி உள்ளார்.

இந்தப் பின்னணியில் வழக்கு தொடரும் நிலையில் வெள்ளாங்குள கிராம சேவகர் ஜெபநேசன் மூலமாக நகுலேஸ்வரனை கொல்லும் பொறுப்பை சிறீஸ்கந்தராஜா ஒப்படைத்துள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது.

இந்தக் கொலையில் கிராமசேவகர் ஜெபனேசன், பிரதேச செயலர் சிறீஸ்கந்தராசா தவிர நேரடியாக 3பேர் தொடர்புபட்டுள்ளனர்.

ஒருவர் வெள்ளாங்குளம் மாட்டு கண்ணன் என அழைக்கப்படுபவர். எருமைகளையும் ரக்ரர்களையும் சொந்மாக  வைத்திருப்பதனால் இவரை மாட்டுக் கண்ணன் என மக்கள் அழைக்கின்றனர்.  இரண்டாமவர் மாட்டு கண்ணனின் உழவுயந்திர சாரதி. 

3ஆவது நபர் வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் புலிகளின் உறுப்பினர். இவர் மதுவுக்கு அடிமையாகி கூலிக்கு எதனையும் செய்வார் - முரடன் கொலைகாரன் என பெயர் பெற்றவர். இவருக்கும் இலங்கைப் புலனாய்வுத் துறைக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவருகிறது.  இவரே கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்.  இவருடன் மாட்டுக் கண்ணனும் அவரது உழ வுயந்திர சாரதியும் உடன் சென்றுள்ளார்கள்.

கொல்லப்பட்ட அன்றைய தினம் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரின் வீட்டின் மீது கல்லெறிந்து  உள்ளார்கள். யாரடா என கேட்டவாறு  வெளியில் சென்ற கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் மீது முன்னாள் புலி உறுப்பினர்   ரீ 56 துப்பாக்கியினால் சுட்டு இருக்கிறார்.

சூட்டுக்கு இலக்கான நகுலேஸ்வரன் இரத்த வெள்ளத்தில் கிடக்க ரீ 56 துப்பாக்கியை எறிந்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.   இந்தத் துப்பாக்கி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு துப்பாக்கியும் இவர்களிடத்து இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போ செத்தவரும் முன்னாள் புலி சுட்டவரும் முன்னாள் புலி. இதனால் இந்தக் கொலையை புலிகளுக்கு இடையிலான மோதலாக காட்டுவதற்கு ஒருதரப்பும்; - இந்து கிறீஸ்தவ மோதல் எனக் காட்டுவதற்கு இன்னொரு தரப்பும் முயலுவதாக முக்கிய தரப்புகளிடம் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதே வேளை பிரேத பரிசோதனைக்கு சென்ற நீதவான்  'இந்தப் பொடியன் வழக்கொன்றிற்காக சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு  வரும்  பெடியன் அல்லவா' எனக் கேட்டதாக அருகிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போ இந்தக் கொலையின் பின்னணியில் பல கேள்விகளை பிரதேச மக்கள் எழுப்புகின்றனர்.

1)    அமைச்சர் ரிஸாத் பதியுதீனுக்கும் பிரதேச செயலாளர் சிறீஸ்காந்தராஜாவுக்கும் இடையிலான பரஸ்பர சலுகைகள் குறித்து பக்கச் சார்பற்ற விசாரணையை இலங்கை நீதிமன்றங்கள் மேற்கொள்ளுமா?


2)    பிரதேச செயலாளர் சிறீஸ்காந்தராசா மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பல முறை இடம்மாற்ற உத்தரவுகள் வந்த போதும் அதனை தடுத்து நிறுத்திய அல்லது உதவி புரிந்த அமைச்சர்கள் பசில் ராஜபக்ஸ – ரிஸாத் பதியுதீன் மீது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பக்கச் சார்பற்ற விசாரணையை நடத்துவாரா?


3)    கிராமசேவகர் ஜெபநேசன், பிரதேச செயலாளர் சிறீஸ்காந்தராசா ஆகியோர் சட்டத்திற்கு புறம்பாக அமைச்சர் ரிஸாத் பதியுதீனின் அனுசரணையுடன் மன்னாரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்துமா?


4)    மிகச் சாதாரண உழைப்பாளர் குடும்பத்தில் இருந்து பிரதேச செயலாளராக உயர்ந்த சிறீஸ்காந்தராசா கடந்த 3 – 4 வருடங்களில் பல ஏக்கர் காணிகளுக்கு சொந்தக்காரணாகவும் பெரும் பணக்காரராகவும் எப்படி உருவெடுத்தார் என வெளிப்படையான விசாரணையை அரசாங்கம் நடத்துமா?


5)    மன்னார் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொகைக்கு ஈடாக படையினரையும், பெருமளவு புலனாய்வாரள்களையும், மிகப் பலம் வாய்ந்த புலநாய்வு வலையமைப்பையும் வைத்திருக்கும் படையினரை தாண்டி ரி 56 துப்பாக்கியுடன் சென்று சர்வ சாதாரணமாக ஒருவரை எப்படி சுட்டிருக்க முடியும்?


6)    துப்பாக்கிச் சூட்டை நடத்திய முன்னாள் புலி உறுப்பினருக்கும் வவுனியா -  மன்னார மாவட்டங்களில்; முன்னாள் இயக்கங்களின் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் விசேட  புலனாய்வுக் கட்டமைப்புக்கும் உள்ள தொடர்பை குறிப்பாக துப்பாக்கிச் சூட்டை நடத்திய முன்னாள் புலி உறுப்பினரின் தொடர்பை வெளிப்படுத்த முடியுமா?


7)    அரசாங்கத்தினதும், புலனாய்வுப் பிரிவினதும் தேவைகளுக்காக முன்னாள் புலிகள் பயன்படுத்தப்படுவது குறித்து பகிரங்க விசாரணைக்கு அரசாங்கம் தயாரா?

இங்கே தரப்பட்ட தகவல்கள் யாவும் மன்னாரைச் சேர்ந்த மக்கள் அரசாங்க அதிகாரிகயால் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு வழங்கப்பட்டவை.

இவை குறித்து சம்பந்தப்பட்டோர் தமது பக்க நியாயத்தை – அல்லது குற்றச்சாட்டுகள் குறித்த மறுப்பை எமக்கு அனுப்பி வைத்தால் அவை முழுமையாக பிரசுரிக்கப்படும். எனினும் தகவலின் மூலம் குறித்தோ பெயர் விபரங்களை வழங்குமாறோ எவராவது கோரினால் அவை வழங்கப்பட மாட்டாது. தொலைபேசி அழைப்பிலும் விளக்கம் அளிக்கப்பட மாட்டாது. அனைத்து தொடர்புகளையும் மின் அஞ்சல் மூலமாக மேற்கொள்ள முடியும்.

radiokuru@yahoo.com


இந்தச் செய்தியை சமூக வலைத்தளங்களில் - இணையங்களில் புளொக்குகளில் மீள்பதிவிடுவோர் மூலத்தை குறிப்பிட்டு பதிவிடலாம்...
 

3ஆம் இணைப்பு- தமிழீழ காவல் துறையின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக கொலை:- http://www.globaltamilnews.net/…/language/ta-IN/3------.aspx

 

மன்னார் மாவட்டத்தில் முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலைக்கு ஜந்து இலட்சம் விலை பேசப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் இப்பணத்தினை கிராம அலுவலரான ஜெபநேசனிடம் வழங்கியதாகவும் அதில் 35 ஆயிரத்தினை முற்பணமாக வழங்கி வவுனியாவில் வசித்து வரும் விடுதலைப்புலிகளது முன்னாள் புலனாய்பு பிரிவு போராளியான தமிழ் என்பவரை கொண்டு இக்கொலை மேற்கொள்ளப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.


பின்னர் மீதிப்பணம் வழங்கப்படுமென கிராம அலுவலரால் உறுதி அளிக்கப்பட்டு உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி அரச புலனாய்வுப் பிரிவுடன் நெருங்கிய உறவை வைத்திருந்த தமிழ்  படைத்தரப்பிடமிருந்தே பெற்றதாக  கூறப்படுகிறது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113578/language/ta-IN/article.aspx

 

இரங்கல்கள்

இப்போ அரச புலனாய்வு ,ஒட்டுக்குழு எல்லாம் முன்னாள் அவர்கள் தான் .

 

காலம் எப்படி மாறுது .

 

இறந்தால் மாவீரர் இருந்தால் ஒட்டுக்குழு என்ற நிலை.

 

பாவங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nakuleswaran-funeral-171114-seithy%20(3)

 

தாய் தந்தையர் நல்லவரோ கெட்டவரோ அதைப்பற்றி பிரச்சனையில்லை.
 
இனிவரும் காலங்களிலாவது ஈழத்தில் பிறக்கும்/வாழும் குழந்தைகளுக்கு இந்த நிலை வரக்கூடாது.

முன்னாள் போராளி கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை! பிரதேச செயலாளர் கைது செய்யப்படுவரா?

Nakuleswaran-1.JPGமன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அந்தப் பகுதி கிராம அலுவலர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தடயவியல் ரீதியான முக்கிய சாட்சியங்களும், விபரங்களும் காவல்துறை விசாரணைகளில் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் சாட்சிகள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் பற்றிய தகவல்கள், விசாரணைகள் முடிவடைந்ததும் சில நாட்களில் வெளியிடப்படும்.

அந்தப் பகுதியின் பிரதேச செயலரும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

பல விடயங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெறுகின்றன.

இந்தச் சம்பவத்தில் எவர் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களின் பதவி நிலையைக் கருத்தில் கொள்ளாமல் கைது செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்தக் கொலைச் சம்பவத்துடன், அரசியல் மற்றும் அரச அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் நீதிமன்றத்தில் நடந்த முக்கிய வழக்கு ஒன்றின் பிரதான சாட்சியாக, நகுலேஸ்வரன் சேர்க்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி:

நகுலேஸ்வரன் கூலிக்கே படுகொலை! தனது பொய்ப்பிரசாரத்தை உறுதிப்படுத்தவே புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியான அப்பாவியை படுகொலை செய்தது அரசு! ஐ.நா. விசாரணை இடம்பெற்றுவருகின்ற நிலையில், வடக்கில் கொடூர சம்பவம் -கூட்டமைப்பு

முன்னாள் போராளியின் படுகொலை தொடர்பில் பொலிஸார் வெளிப்படத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். - ஆனந்தன் எம்.பி

நகுலேஸ்வரன் படுகொலைக்கு கூட்டமைப்பு கண்டனம்!

இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுதுறையினர் புடை சூழ நகுலேஸ்வரனின் இறுதிக் கிரிகை!

 

http://www.pathivu.com/news/35433/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ அரச புலனாய்வு ,ஒட்டுக்குழு எல்லாம் முன்னாள் அவர்கள் தான் .

 

காலம் எப்படி மாறுது .

 

இறந்தால் மாவீரர் இருந்தால் ஒட்டுக்குழு என்ற நிலை.

 

பாவங்கள் .

 

எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பலன்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ அரச புலனாய்வு ,ஒட்டுக்குழு எல்லாம் முன்னாள் அவர்கள் தான் .

 

காலம் எப்படி மாறுது .

 

இறந்தால் மாவீரர் இருந்தால் ஒட்டுக்குழு என்ற நிலை.

 

பாவங்கள் .

உன் நிலமை காெஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலுங்கூட உன்னை மிதிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
பாவப்பட்ட இனம் தமிழினம். தமிழனே தமிழனை ஏளனம் செய்யும் பரிதாப நிலை.
தந்திரமாக தமிழ் இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் சேர்த்து வடக்கில் இராணுவம் நிலைப்பதற்கு, திட்டம்.
.முன்னாள் புலி சுட்டதில்......? இராணுவத்தினர் பலி இராணுவம் திருப்பி சுட்டதில் முன்னாள் பாேராளி பலி, இனவழிப்பின் அடுத்த கட்டம்.
சர்வதேசத்துக்கு தனது செயற்பாடுகள் யாவும் சரியானவையென காட்ட, நல்ல விளக்கம்.
அப்பாேதும் பழைய கதைபேசி வம்பிழுப்பதில் நமக்காெரு இன்பம்.
நாய் காய்ந்த பழைய எலும்பை கடிக்கும் பாேது எலும்பு குத்தி தன் வாயால் வரும் தன் இரத்தத்தை எலும்பில் இருந்து வருவதாக எண்ணி இன்பம் காணுமாம். கேட்ட ஞாபகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.