Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் நடந்த தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Featured Replies

எதிர்காலத்தில் கேக் ஊட்டும் படங்களும் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தாரகி எழுதிய கட்டுரை அகப்படவில்லை. அதைப் படித்தால் ஏன் குழப்பம் வந்தது என்று உங்களுக்குப் புரியும்.

என்னுடைய பிறந்தநாளை நான்தான் கொண்டாடப்போகின்றேன். மற்றவர்களைக் கொண்டாடச் சொல்லிக் கேட்கவில்லை என்பதை விளங்காமல் நீங்கள் எழுதுவீர்கள் என்பது தெரியும்தானே துள்சி :wub:

நீங்கள் தான் முதல் பதிவில் தலைவர் உண்ணாவிரதம் இருப்பவர் என்று கூறியிருந்தீர்கள். அது தான் தலைவர் கேக் வெட்டி தானே உண்ணும் படம் எதையும் நான் இணைத்திருக்கவில்லையே. மற்றவர்கள் கேக் வெட்டி கொண்டாடுவதை தானே இணைத்துள்ளேன் என்கிறேன். இதற்குள் தலைவரை கோர்த்து விட்டு மற்றவர்களை குழப்பும் வேலையை செய்யாதீர்கள்.

தலைவர் பிறந்தநாளை மற்றவர்கள் கேக் வெட்டி கொண்டாடியதற்காக நீங்களும் உங்கள் பிறந்தநாளை கொண்டாடப்போவதாக கூறியிருந்தீர்கள். அது தான் தனிமனிதன் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கும் இப்படியொரு தலைவர் கிடைத்ததற்காக அவர் பிறந்தநாளை நாம் கொண்டாடுவதற்கும் வேறுபாடு உள்ளது. அது கூட உங்களுக்கு தெரியவில்லையே என்று கூறினேன்.

Edited by துளசி

  • Replies 80
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த வீடியோவில் உள்ள படத்தில் தலைவர் கேக் சாப்பிடும் படம் எதுவும் இல்லையே. உங்களுக்கு ஏன் இந்த குழப்பம்.

தலைவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறாரோ இல்லையோ மற்றவர்கள் அவர் பிறந்தநாளை கொண்டாடுவதில் தவறில்லை. அவ்வாறு கொண்டாடியுள்ளார்கள் என்பதற்கே அதை இங்கு இணைத்தேன்.

அடுத்து,

உங்கள் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்கும் தேசிய தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்கும் இடையிலான அடிப்படை வித்தியாசமே தெரியாதவரா நீங்கள்? :)

உண்மையில் துளசி இணைத்த காணொளியில் காட்டப்படுவது தலைவர் அல்ல, அது கேர்ணல் சூசை அவர்கள் என்றே நினைக்கிறேன்.

தவிர அவரை போல உன்னதமான ஒரு மனிதரின் பிறப்பை கொண்டாடுவதில் தவறு தான் என்ன?

இயேசு பிறந்த நாள் கிறிஸ்மஸ் ...

புத்தர் பிறந்த நாள் வெசாக்..

நபிகள் பிறந்த நாள்  மிலாத் திருநாள்..

காந்தி பிறந்த நாள் காந்தி ஜெயந்தி ...

இப்படி கடவுள் முதல் மகான் வரை அவர்களுடைய பிறந்த நாளை அவர்களை சார்ந்தோர் கொண்டாடிக்கொண்டு தான் இருகிறார்கள்...

எங்கள் தலைவர் கடவுளும் அல்ல, மகானும் அல்ல

மண்ணை நேசித்த போராளி ....  Why Not?

நன்றி சசி அண்ணா 

Nations without states என்ற பெயரில் பல நாட்டவர்கள் இணைந்து செயற்படுகிறார்கள்.

இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள் National Liberal Party (NLP) என்ற கட்சி பெயரில் போட்டியிட்டார்கள்.

10151184_762429400463362_759726211584817

படம் : facebook

Edited by துளசி

தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது பிறந்தநாள், பிரித்தானியாவில் வான் அதிர பாட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

(Facebook)

அடேங்கப்பா அடுத்த வருடம் அனேகமாக தண்ணி பார்ட்டி டான்ஸ் ஃப்லோர் என்று களை கட்டும் என்று நினைக்கிறன். இல்லாட்டி இந்த வருடமே அதையும் துவங்கி விட்டார்களா? சரித்திர நாயகனின் பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் என்ன தவறு என்று பக்தர்கள் சண்டைக்கு வந்தாலும் வரலாம். 
 
எவ்வளவு உணர்ச்சி மயமாக அனுஷ்டிக்க வேண்டிய மாவீரர் வாரம் இப்படி குரங்குகளின் கையில் பூமாலை ஆனது தான் சோகம். பிரபாகரன் உயிரோட இருந்தா முதல்ல இந்த கூட்டத்தை கூண்டோட கைலாயம் அனுப்பி இருப்பார். போன வருடம் கனடாவில் நவம்பரில் இளையராஜா கச்சேரி வைக்க கூடாது வைத்தால் தமிழர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று வெள்ளைகள் நினைப்பர் என்று கூவின புலம்பெயர் போராளிகள் எங்கே?? 

தலைவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். அதே நேரம் தனிப்பட்ட அல்லது வேறு கொண்டாட்டங்களை நான் ஆதரிக்கவும் மாட்டேன்.

தலைவரின் பிறந்தநாளை கொண்டாடுவதை வெளிநாட்டவர்கள் பார்த்தால் அவர்களுக்கும் தலைவரை பற்றி தெரிய வரும். ஒரு வரலாற்று வீரன் பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்கள் என நினைப்பார்கள். இளையராஜாவின் இசை நிகழ்விற்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். (கனடாவில் இளையராஜாவின் இசை நிகழ்வு நடந்தது போன வருடம் அல்ல. 2012 இல்)

தலைவரின் 60 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டதற்கு எதிராக எதற்கு என்றுமில்லாதவாறு பலர் இவ்வளவு துள்ளு துள்ளுகிறீர்களோ தெரியவில்லை.

தலைவர் உயிருடன் இருந்தால் (உயிருடன் உள்ளாரா இல்லையா எனக்கு தெரியாது) நீங்கள் சொல்லும்படி எதுவும் செய்ய மாட்டார். ஏனென்றால் புலிகளின் ஆட்சிக்காலத்திலேயே தாயகத்திலும் அவ்வாறு தலைவரின் பிறந்தநாளை மற்றவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். ஏற்கனவே கிருபன் அண்ணாவுக்கு விளக்கம் கொடுத்து முடிந்தால் நீங்கள் மறுபடியும் ஆரம்பிக்கிறீர்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா அடுத்த வருடம் அனேகமாக தண்ணி பார்ட்டி டான்ஸ் ஃப்லோர் என்று களை கட்டும் என்று நினைக்கிறன். இல்லாட்டி இந்த வருடமே அதையும் துவங்கி விட்டார்களா? சரித்திர நாயகனின் பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் என்ன தவறு என்று பக்தர்கள் சண்டைக்கு வந்தாலும் வரலாம். 
 
எவ்வளவு உணர்ச்சி மயமாக அனுஷ்டிக்க வேண்டிய மாவீரர் வாரம் இப்படி குரங்குகளின் கையில் பூமாலை ஆனது தான் சோகம். பிரபாகரன் உயிரோட இருந்தா முதல்ல இந்த கூட்டத்தை கூண்டோட கைலாயம் அனுப்பி இருப்பார். போன வருடம் கனடாவில் நவம்பரில் இளையராஜா கச்சேரி வைக்க கூடாது வைத்தால் தமிழர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று வெள்ளைகள் நினைப்பர் என்று கூவின புலம்பெயர் போராளிகள் எங்கே?? 

நவம்பர் மாதத்தில் மாவீரர் நாள் வருகிறதாம். உருகி போகிறார்கள்.
இந்த விடயம் தெரியாதவர்கள் வாசித்து அறிந்து கொள்ளுங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

2009 க்கு முதல் பிறந்த நாள் கொண்டாடியதற்கும்,தற்போது பிறந்த நாள் கொண்டாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குது.அது தெரியாமல் யாழில் கணக்க பேர் இருப்பது தான் வேடிக்கை. இன்னும் 10,15 வருடங்கள் போனாலும் நாங்கள் தலைவரை சாட்டி அவருக்கு பிறந்த நாள் விழா மாத்திரம் கொண்டாடி மகிழ்வோம்.அவருடைய கொள்கைகளை மறந்து போவோம்...2009 ஆம் ஆண்டு இத்தனை அழிவுக்குப் பின்னரும் பிறந்த நாள் கொண்டாடி மகிழும் இனம் நாங்களாகத் தான் இருக்கும்.அதுக்கு சப்பைக் கட்டு காரணங்கள் வேற தலைவரது போராட்டத்தினை எடுத்துச் செ[சொ]ல்ல முடியாதவர்கள் அவருக்கு பிறந்த நாள் கொண்டாடி விளக்கம் கொடுக்கினமாம்

தலைவரின் பாதையில்  போய் நீங்கள் வென்று வைத்திருக்கும் தமிழ் ஈழத்தில்.
யாழ் களத்தில் சக உறவாக இருந்தேன் என்ற அடிப்படையில் ஒரு வீடு கட்ட சிறிய காணி தருவீர்கள் என்று எதிர்பார்கிறேன். 
 
நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவதற்கும் ....
அவரது கொள்கையை மறந்து போவதற்கும் .....
அடுத்தவன் என்ன செய்ய முடியும் ??
 
வைட்டமின் ஈ ஞாபக சக்திக்கு நல்லம் என்று சொல்கிறார்கள். முடிந்தால் நாளுக்கு ஒன்று எடுங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

தலைவருடைய  பிறந்தநாளை

அவரை விரும்புபவர்கள்

தாமாக கொண்டாடுவதில்

ஏன் சிலருக்கு அலர்சி.....

தங்களைக்கொண்டாடவில்லை என்றா?

அல்லது தங்களது தலைவர்களைகளைக்கொண்டாடவில்லையென்றா???

புலிகள் ஈழம்  கேட்பது பிழை என்கிறார்கள்

புலிக்கொடி  பிடிப்பது இடைஞ்சல் என்கிறார்கள்

தற்பொழுது தலைவரது பிறந்தநாளைக்கொண்டாடுவதும் பிழை என்கிறார்கள்

இவை எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது

தமிழினம் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியமாகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் புதிசாய் ஏதோ எழுதியிருப்பீங்கள் என ஓடி வந்தால் திரும்ப,திரும்ப அரைச்சதையே அரைச்சுக் கொண்டு:D...அதிலை வேற எனது பிறந்த நாளையும்,தலைவரையும்,அவருக்கு பிற்ந்த நாள் கொண்டாடுவதையும் ஒப்பிட்டு எழுதிக் கொண்ட:)

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் உரத்துத் தேசியம் பேசினால் அவர் தலைவருக்குப் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது, செத்த வீடு தான் செய்ய வேணும் எண்டு வாதிடுவது சரியான விவாதமாகப் படவில்லை. ஒவ்வொருத்தரும் தான் விரும்பிய வழியில் தாம் மதிக்கும் ஒரு நபருக்கு அன்பையும் மரியாதையையும் தெரிவிக்க புலத்தில் உரிமை உண்டு! நாங்கள் எல்லாம் புலத்தில் வாழ்ந்தாலும் இந்த மற்றவனின் மூக்கு வரை எங்கள் ஊண்டு தடியை வீசிப் பார்க்கும் பழக்கம் இன்னும் பனை வடலியோடவே நிக்குது!

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியை விரும்பிற மக்கள் காந்தியிடம் கேட்டுவிட்டா ஜெயந்தி தினம் கொண்டாடினம். பெரியார் என்கிற ராமசாமியை பிந்தொடர்கிற பகுத்தறிவு உள்ளவை என்று சொல்லிக்கிற ஆக்கள் கூட அண்மையில் அவரின் ஜெயந்தி தினத்தைக் கொண்டாடிச்சினம். பேஸ்புக்கில படம் போட்டிச்சினம். இதெல்லாம் ராமசாமியரைக் கேட்டா நடக்குது. அப்படித்தான் இதுவும்..!!!

இதில ஏன் கொண்டாடாத ஆக்கள் குத்தி முறியுறீங்க. உங்களுக்கு கேக் பீஸ் வரல்லைன்னா..???! கடையில போய் தலைவரின் பெயரால வாங்கிச் சாப்பிட்டாப் போச்சு. இப்ப அதுதானே நடந்துகிட்டு இருக்குது. கொஞ்சம் தலைவரை வாழ்த்தி வாழுது. கொஞ்சம் ஏசி வாழுது. அம்புட்டுத்தான். :icon_idea::)

Edited by nedukkalapoovan

யேசு கிறிஸ்து தொடங்கி தந்தை பெரியார் வரை அவர்களின் பிறந்த நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அதே வேளை அவர்களின் இறந்த நாளையும் மக்கள் நினைவு கூருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் எப்போது பிறந்தார்கள் இறந்தார்கள் என்பது தெளிவு என்பதால். சிலர் பிறந்தது தெளிவு.. இறந்ததில் மர்மம் உள்ளதால்.. சிலரின் இறந்த நாட்கள் உலகில் நினைவுகூறப்படுவதில்லை..!!! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யேசு கிறிஸ்து தொடங்கி தந்தை பெரியார் வரை அவர்களின் பிறந்த நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அதே வேளை அவர்களின் இறந்த நாளையும் மக்கள் நினைவு கூருகிறார்கள்.

அப்படியா...?

இதுக்குத்தான் உங்களைப்போல ஆட்கள் வேண்டும் என்பது.....

தெரிந்தால் ஆதாரங்களுடன் சொல்லுங்கள்...

எத்தனை நாட்களுக்குத்தான் நாங்களும்  உண்மையில் இறந்திருந்தால் அஞ்சலி  செலுத்தாமல் இருப்பது...

உங்கள் போர் கட்டுரைகள் போல் இருக்காது என்ற நம்பிக்கையை  முதலில் தாருங்கள்..... :(

அத்துடன் சிறீலங்கா அரச ஆதாரங்களை  தரமாட்டீர்கள் என நம்புகின்றோம்... :(

அத்துடன் யேசு உயிர்த்தெழுந்தார்

உயிர்தெழவில்லை என்ற சர்ச்சை இன்றுவரை உள்ளது

அதையும் ஒருக்கா முடித்து வைக்கமுடியுமா??? :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கின்றார் என நம்புபவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். தலைவர் இல்லை என்பவர்கள் நினைவு நாள் கொண்டாடுகின்றனர். அது அவர் அவர்களுடைய விருப்பம்.
சிலர் தலைவருடைய பிறந்த நாளையும் கொண்டாடுவதில்லை, இறந்த நாளையும் கொண்டாடுவதில்லை. தேடலில் உள்ளவர்களுக்கு மட்டுமே விடை கிடைக்கும்... தெளிவு பிறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியை விரும்பிற மக்கள் காந்தியிடம் கேட்டுவிட்டா ஜெயந்தி தினம் கொண்டாடினம். பெரியார் என்கிற ராமசாமியை பிந்தொடர்கிற பகுத்தறிவு உள்ளவை என்று சொல்லிக்கிற ஆக்கள் கூட அண்மையில் அவரின் ஜெயந்தி தினத்தைக் கொண்டாடிச்சினம். பேஸ்புக்கில படம் போட்டிச்சினம். இதெல்லாம் ராமசாமியரைக் கேட்டா நடக்குது. அப்படித்தான் இதுவும்..!!!

இதில ஏன் கொண்டாடாத ஆக்கள் குத்தி முறியுறீங்க. உங்களுக்கு கேக் பீஸ் வரல்லைன்னா..???! கடையில போய் தலைவரின் பெயரால வாங்கிச் சாப்பிட்டாப் போச்சு. இப்ப அதுதானே நடந்துகிட்டு இருக்குது. கொஞ்சம் தலைவரை வாழ்த்தி வாழுது. கொஞ்சம் ஏசி வாழுது. அம்புட்டுத்தான். :icon_idea::)

ஒரு துண்டு கேக்குக்கு அலைகின்ற ஆளா நீங்கள்:(

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாங்க. அதுதான் காணாத கண்ட கணக்கில.. பார்டி.. பந்தா என்று.. தினமும் கேக் வெட்டிக்கிட்டு திரியுறம். இதில தலைவருக்கு கேக் வெட்டிறது தான் பிரச்சனை. :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. அன்று முழுவதும் முதல் மாவீரன் பெல். சங்கர் தனது மடியில் வீரச்சாவடைந்ததை நினைவு கூரும் வகையில் எதுவும் உண்ணாமல் மெளன விரதம் இருப்பார் என்றுதான் படித்திருந்தேன். தமிழ்நெற் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் ஆதாரத்தைக் காட்ட ஒரு கட்டுரையையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே இப்போது பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் தமிழ்நெற்றில் இருந்த ஆதாரமான கட்டுரையைத் தூக்கிவிட்டார்களோ என்று சந்தேகமாக இருக்கின்றது.

ஆனால் கடற்புலித் தளபதி சூசை தலைவருடைய பிறந்தநாளை பெருமெடுப்பில் கொண்டாடியிருக்கின்றார் என்றும் அதில் தலைவர் கலந்துகொண்டுள்ளார் என்றும் ஆதாரத்தோடு படங்களும் காணொளிகளும் இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க தலைவரும் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தாரா என்று சந்தேகமாக இருக்கின்றது. இந்த நேரத்தில் பிறந்தநாள் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தாலும் தமிழீழத்தைக் கைவிட்டால் தன்னைச் சுட்டுக்கொல்லும்படிச் சொன்னதில் இருந்து மாறவில்லை என்பதுதான் அவரும் இன்றும் தமிழர்களின் தலைவராக இருப்பதற்குக் காரணம் என்பதை ஒத்துக்கொள்கின்றேன்.

..................

From 1991 the entire week from November 21-27, was declared as Great Heroes Week. Interestingly the birthday of LTTE leader Prabakharan was November 26. Since this day was now within the Great Heroes Week more importance was attached to it.

An outpouring of emotion both genuine as well as sycophantic emerged. Gradually the focus shifted from Great Heroes Day to the leader’s birthday. Some even thought that Great Heroes day was to celebrate the leaders birthday. Soon Prabakharan acted firmly and clamped down all festive activity connected with his birthday. The week was for the fallen heroes and the red letter day of that week would only be November 27, the Great Heroes Day he decreed. Nevertheless various religious observances were undertaken by followers and well wishers on November 26, seeking divine protection and blessings on the man who supposedly personified Tamil resistance to Sinhala chauvinist hegemony.

மிகுதியைப் படிக்க ஜெயராஜின் பக்கம் போகவேண்டும்!

http://dbsjeyaraj.com/dbsj/archives/35472

...........................

எனக்குத் தெரிந்து கிட்டர் இலண்டனில் இருந்த காலத்தில் அந்தக்காலத்தில் மேய்ப்பர்களாக இருந்தவர்கள் எல்லாரும் விம்பிள்டன் கோயிலிலும் (இன்னும் பல கோயில்களிலும்) தலைவர் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று அர்ச்சனை, அபிஷேகம் செய்திருந்தார்கள். உபயமாகப் பரிமாறிய உணவைச் சாப்பிட்டதால் நானே அதற்குச் சாட்சி! மிகவும் எளிமையாகவும் கடவுளின் ஆசியை வேண்டியும் கோயில்களில் அர்ச்சனை செய்யப்பட்டதை யாரும் விமர்சிக்கவில்லை.

அதே நேரத்தில் தலைவரின் பிறந்தநாளை வெகுவிமர்சையாகக் கொண்டாடி தமிழ்த் தேசியத்தை வளர்க்கின்றோம், பிற இனத்தினருக்கு தமிழர்களின் போராட்டத்தை அறிமுகப்படுத்துகின்றோம் என்பதெல்லாம் சுத்தமுட்டாள்தனமான விடயங்கள் என்பது எனது பார்வை.

மாவீரர் வாரத்தை அனுட்டிப்பதில் (observe) இருந்து மாவீரர் வாரத்தைக் கொண்டாடுவதுவரை (celebrate) முன்னேறிய தமிழ்த் தேசியவாதிகள், தலைவரே விரும்பாத கொண்டாட்டத்தை பெரிய அளவில் கேக் வெட்டியும், தீபாவளிக்கு பட்டாசும் வாணவேடிக்கையும் செய்வது போலவும் கொண்டாடுவதைப் பெருமிதமாக நினைக்கமுடியவில்லை. "பாட்டி சொத்துத்தானே, புகையாகப் போகட்டும்" என்றுதான் செய்கின்றார்களாக்கும். இப்படி இறைக்கின்ற காசைத் தலைவரை நம்பிப் போராட்டத்தில் ஈடுபட்டு இன்று நடுத்தெருவில் நிற்கும் போராளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கொடுத்திருக்கலாம். அல்லது மரங்களாவது இலண்டனிலும் பாரிஸிலும் நட்டிருந்தால்கூட அவை இன்னும் நூறு வருடங்களுக்காவது நின்று அவரை நினைவுபடுத்தியிருக்கும். இதையெல்லாம் செய்யமாட்டார்கள். ஏனென்றால் இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் பல வகையினர்:

1) தலைவர் மேல் உண்மையான அன்புகொண்டவர்கள். கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றுக்கும் ஆமாப் போடும் விசுவாசிகள்

2) தலைவரின் பெயரைச் சொல்லிப் பிழைக்குப் பிழைப்புவாதிகள்

3) போலித் தேசியவாதிகள்.

4) தாங்கள் செய்வது எல்லாம் சரியென்ற வெறியர்கள் (fanatics)

இதற்கு மேல் இந்தத் திரியில் சொல்ல எனக்கு எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு மேல் இந்தத் திரியில் சொல்ல எனக்கு எதுவுமில்லை.  ...
ம்ம் பாராட்டுக்கள் எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவு...
 
ஒரு சில ஞாயங்கள் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் .
வானவெடிக்கை போட்டு பணத்தை விரயம் செய்தல், அது தவிர வேறு எதுவும் வீண் ஆடம்பரச்
செலவுகளை தவித்துக்கொள்ளல் வேண்டும். இந்த திரியில் யாரும் இந்த செயல்களை பாராட்டி எழுதவில்லை.

மாறாக செய்திகளாகத்தான் பதிந்தார்கள்.
ஆனால் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்தவர்கள் ஏராளம். ஒருவர் அரு படி மேலே சென்று  மக்கள் குத்தாட்டம் போட்டதாகவும் எழுதி இருந்தார்.

கோயிலில் அர்ச்சனை, அன்னதானம், நீர்ப்பந்தல் ஒரு  ரகம்
இதுவே சில இடங்களில் கேக் ...
அன்னதானம் சரி .... கேக் பிழை

தவிர... D.B.S ஜெயராஜ் உண்மையை உண்மையாய் எழுதுபவர் என்று நீங்கள் நினைத்து
அவரை மேல்கோள் காட்டி நீங்கள் எழுதுவதை நான் என்ன சொல்ல.    
ஜெயராஜ் எனக்கு பிரத்தியோகமாக பல வருடங்கள் தெரியும்...

நான் தலைவர் மேலும் போராளிகள் மேலும் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவன் மட்டுமே.
 
Edited by Sasi_varnam

ஆனால் கடற்புலித் தளபதி சூசை தலைவருடைய பிறந்தநாளை பெருமெடுப்பில் கொண்டாடியிருக்கின்றார் என்றும் அதில் தலைவர் கலந்துகொண்டுள்ளார் என்றும் ஆதாரத்தோடு படங்களும் காணொளிகளும் இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க தலைவரும் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தாரா என்று சந்தேகமாக இருக்கின்றது.

-----

-----

இதற்கு மேல் இந்தத் திரியில் சொல்ல எனக்கு எதுவுமில்லை.

கிருபன் அண்ணா, நான் இணைத்த பாடலில் 21 ஆவது செக்கனில் இருந்து 41 ஆவது செக்கன் வரை தான் பிறந்தநாள் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. (3 படங்கள்). அதில் எதிலுமே தலைவர் இல்லை. தலைவரின் படத்தை மட்டுமே வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.

மிகுதி படங்கள் வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட தலைவரின் படத்தை பாடலுக்காக போட்டுள்ளார்கள்.

கண் தெரியவில்லை என்றால் முதலில் ஒருக்கா போய் கண்ணாடி போட்டு கொண்டு வாங்கோ. :D

இதற்கு மேலும் இத் திரியில் எழுதி மக்களை குழப்ப வேண்டாம். :D

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கிருபண்ணா.. தலைவர் கொண்டாடாட்டிலும்.. போராளிகள் தலைவர் மீதான அன்பில் கொண்டாடியதில்லையோ. எங்கள் வீட்டைச் சுற்றி முன்னர் 6 முகாம்கள் இருந்தன. அங்கெல்லாம்.. தலைவரின் பிறந்த நாளை போராளிகள் கொண்டாட கண்டிக்கிறமே. இனிப்புகளையும் வழங்கினரே..!! அதுக்கெல்லாம் இயக்கம் தடை போட்டிருந்ததாகத் தெரியவில்லை. இது 2002 க்கு அப்புறம் அல்ல.. 1990 களில் நிகழ்ந்தவை..!!!!

ஒருவர் தான் விரும்பும் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுவதில் என்ன தப்புள்ளது. பகுத்தறிவு பேசும் தங்களை போன்றவர்கள்.. பெரியார் ராமசாமியின் பிறந்த நாளை கொண்டாடினமே..??! ஆனால் ராமசாமி கொண்டாடியதில்லையாம். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. அன்று முழுவதும் முதல் மாவீரன் பெல். சங்கர் தனது மடியில் வீரச்சாவடைந்ததை நினைவு கூரும் வகையில் எதுவும் உண்ணாமல் மெளன விரதம் இருப்பார் என்றுதான் படித்திருந்தேன். தமிழ்நெற் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் ஆதாரத்தைக் காட்ட ஒரு கட்டுரையையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே இப்போது பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் தமிழ்நெற்றில் இருந்த ஆதாரமான கட்டுரையைத் தூக்கிவிட்டார்களோ என்று சந்தேகமாக இருக்கின்றது.

ஆனால் கடற்புலித் தளபதி சூசை தலைவருடைய பிறந்தநாளை பெருமெடுப்பில் கொண்டாடியிருக்கின்றார் என்றும் அதில் தலைவர் கலந்துகொண்டுள்ளார் என்றும் ஆதாரத்தோடு படங்களும் காணொளிகளும் இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க தலைவரும் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தாரா என்று சந்தேகமாக இருக்கின்றது. இந்த நேரத்தில் பிறந்தநாள் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தாலும் தமிழீழத்தைக் கைவிட்டால் தன்னைச் சுட்டுக்கொல்லும்படிச் சொன்னதில் இருந்து மாறவில்லை என்பதுதான் அவரும் இன்றும் தமிழர்களின் தலைவராக இருப்பதற்குக் காரணம் என்பதை ஒத்துக்கொள்கின்றேன்.

..................

From 1991 the entire week from November 21-27, was declared as Great Heroes Week. Interestingly the birthday of LTTE leader Prabakharan was November 26. Since this day was now within the Great Heroes Week more importance was attached to it.

An outpouring of emotion both genuine as well as sycophantic emerged. Gradually the focus shifted from Great Heroes Day to the leader’s birthday. Some even thought that Great Heroes day was to celebrate the leaders birthday. Soon Prabakharan acted firmly and clamped down all festive activity connected with his birthday. The week was for the fallen heroes and the red letter day of that week would only be November 27, the Great Heroes Day he decreed. Nevertheless various religious observances were undertaken by followers and well wishers on November 26, seeking divine protection and blessings on the man who supposedly personified Tamil resistance to Sinhala chauvinist hegemony.

மிகுதியைப் படிக்க ஜெயராஜின் பக்கம் போகவேண்டும்!

http://dbsjeyaraj.com/dbsj/archives/35472

...........................

எனக்குத் தெரிந்து கிட்டர் இலண்டனில் இருந்த காலத்தில் அந்தக்காலத்தில் மேய்ப்பர்களாக இருந்தவர்கள் எல்லாரும் விம்பிள்டன் கோயிலிலும் (இன்னும் பல கோயில்களிலும்) தலைவர் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று அர்ச்சனை, அபிஷேகம் செய்திருந்தார்கள். உபயமாகப் பரிமாறிய உணவைச் சாப்பிட்டதால் நானே அதற்குச் சாட்சி! மிகவும் எளிமையாகவும் கடவுளின் ஆசியை வேண்டியும் கோயில்களில் அர்ச்சனை செய்யப்பட்டதை யாரும் விமர்சிக்கவில்லை.

அதே நேரத்தில் தலைவரின் பிறந்தநாளை வெகுவிமர்சையாகக் கொண்டாடி தமிழ்த் தேசியத்தை வளர்க்கின்றோம், பிற இனத்தினருக்கு தமிழர்களின் போராட்டத்தை அறிமுகப்படுத்துகின்றோம் என்பதெல்லாம் சுத்தமுட்டாள்தனமான விடயங்கள் என்பது எனது பார்வை.

மாவீரர் வாரத்தை அனுட்டிப்பதில் (observe) இருந்து மாவீரர் வாரத்தைக் கொண்டாடுவதுவரை (celebrate) முன்னேறிய தமிழ்த் தேசியவாதிகள், தலைவரே விரும்பாத கொண்டாட்டத்தை பெரிய அளவில் கேக் வெட்டியும், தீபாவளிக்கு பட்டாசும் வாணவேடிக்கையும் செய்வது போலவும் கொண்டாடுவதைப் பெருமிதமாக நினைக்கமுடியவில்லை. "பாட்டி சொத்துத்தானே, புகையாகப் போகட்டும்" என்றுதான் செய்கின்றார்களாக்கும். இப்படி இறைக்கின்ற காசைத் தலைவரை நம்பிப் போராட்டத்தில் ஈடுபட்டு இன்று நடுத்தெருவில் நிற்கும் போராளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கொடுத்திருக்கலாம். அல்லது மரங்களாவது இலண்டனிலும் பாரிஸிலும் நட்டிருந்தால்கூட அவை இன்னும் நூறு வருடங்களுக்காவது நின்று அவரை நினைவுபடுத்தியிருக்கும். இதையெல்லாம் செய்யமாட்டார்கள். ஏனென்றால் இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் பல வகையினர்:

1) தலைவர் மேல் உண்மையான அன்புகொண்டவர்கள். கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றுக்கும் ஆமாப் போடும் விசுவாசிகள்

2) தலைவரின் பெயரைச் சொல்லிப் பிழைக்குப் பிழைப்புவாதிகள்

3) போலித் தேசியவாதிகள்.

4) தாங்கள் செய்வது எல்லாம் சரியென்ற வெறியர்கள் (fanatics)

இதற்கு மேல் இந்தத் திரியில் சொல்ல எனக்கு எதுவுமில்லை.

இவர் இன்னமும் கெரில்லா காலத்தில்  நிற்கிறார் என்று நினைக்கிறேன்.
புலிகள் நிழல் அரசு நிறுவி ...... முப்படை வைத்து போர்செய்த காலம் கூட உண்டு. 
 
எதையாவது யாரோ ஒருவன் செய்தால் ...........
அவன் குடும்பமே கோமணத்துடன் நிற்கவேண்டும்.  இவர்கள் எங்கு நிற்பது சரி எப்படி நிற்பது பிழை என்று மட்டும் எழுதிக்கொண்டு இருப்பார்கள்.
 
புலத்தில் இவளவு நடக்குது பிரபாகரனின் பிறந்தாளுக்கு வேண்டிய கேக் காசுதான் அங்கு போராளிகளை நிலை நிறுத்த போகிறது.
புலிகள் (போராளிகள்)குளிர்பானம் குடிப்பதற்கு  ஒருகாலத்தில் தடை விதித்து இருந்தார்கள். அதை தேவை அற்ற செலவு எனவும் ஒரு ஆடம்பர தேவை என்றும்  கருதினார்கள் 
பின்பு குடாரப்பு தரை இறக்கத்தில் எல்லோருக்கும் இஸ்ப்ரைட்  கொடுத்தார்கள்.  கடல்வழி பயணத்தில் இழந்த சக்தியை மீள பெற்றால்தான் வலுவாக எதிரியை சமாளிக்க முடியும் என்று கருதினார்கள்.
 
எப்போது எங்கே என்ன செய்கிறோம் என்பதே முக்கியமானது.
இனிவரும் காலத்தில் பிரபாகரனின் பிறந்த நாள்  முக்கியபடுத்தவேண்டியது ஒன்றாகி விட்டது. துரதிஸ்ட வசமாக மாவீரர் நாளும் அடுத்தல்போல் வருகிறது.
மரம் நடுதல் ..... புதிய திட்டங்கள் தொடக்கி வைத்தல் போன்றவற்றை இந்நாளில் இனிவரும் காலங்களில் செய்யலாம்.  இப்போதான் அதுவும் 60வது பிறந்த நாள் என்பதால் இப்படி கொண்டாட பட்டிருக்கிறது.  இதுவே 600ஆவது பிறந்தநாள் ஆகும்போது இப்படி இருக்க போவதில்லை.
அந்த காலம் அதை முடிவு செய்து கொள்ளும். 
 
(தனிப்பட இப்படி கொண்ட்டடுவதில் எனக்கு எந்த இஸ்டமும் இல்லை. எனது பிறந்தாள் எப்போ வருகிறது போகிறது என்பதை கூட நான் கணக்கில் எடுப்பதில்லை. எனது பிள்ளைகளும் அதை தவிர்க்க வேண்டும் என்பது என்னுடைய தற்போதைய அவா. அது அவர்கள் இஸ்டம்)
 
மக்கள் தமது தலைவனின் பிறந்த நாளை கொண்டாடுவதில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை.
மக்கள் தலைவனை போல வாழ முடியாது. அவர்கள் கொள்கையோடு கொள்கைக்காக வாழ்பவர்கள் கொள்கைக்காக தமது வாழ்வையும் அழிக்க கூடியவர்கள்.
மக்கள் கொள்கைகளை முடிந்தால் அழித்து விட்டு தமது வாழ்வை பார்பவர்கள். இரண்டுக்கும் இடையில் எப்படியும் பாரிய வித்தியாசம் இருக்கத்தான் செய்யும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.