Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடிவேலு மகன் திருமண வீட்டில் நுழைந்த போலிஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பெண்களின் குறைந்த பட்ச திருமண வயதை 21 ஆக்க இந்தியாவில் மகளிர் அமைப்புக்கள் கோரிக்கை வைத்ததை இங்கு சுட்டிக்காட்டுதல் தகும். :icon_idea:

  • Replies 78
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதில...நெடுக்கால போவனையும்.... சேருங்க.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவனை எங்க சேர்த்தாலும்.. அநியாயத்தை அங்கீகரிக்கமாட்டம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவனை எங்க சேர்த்தாலும்.. அநியாயத்தை அங்கீகரிக்கமாட்டம். :lol:

கலாய்பதென்றால் ஒரு சுகம்தான் .ம்

படிப்பை பற்றியும்,பண்பைப் பற்றியும் சும்மா புலட்டிக் கொள்ளாதீர்கள்.

வாழ்த்த மனசு வராத புல உறவுகள்.

லவட்டிக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டியதுதானே.அதை விட்டு

திருந்தாத பதிவுக் கூட்டம்.

அப்ப.... யாழிவன், சரியாய் தான்.... சொல்லியிருக்கிறார். :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப.... யாழிவன், சரியாய் தான்.... சொல்லியிருக்கிறார். :D  :lol:  :icon_idea:

உங்களை நியாயப்படுத்த தவறான உதாரணத்தை கையில் எடுக்கிறீர்கள். அதுவே ஓர் நாள் உங்களை தாக்கும் போது.. கொய்யோ முறையோ என்பீர்கள். அப்போது அவர்கள் வரமாட்டார்கள். நாங்கள் தான் உங்களுக்காக நியாயத்தின் பக்கமிருந்து வந்து குரல்கொடுக்க வேண்டி இருக்கும். அதனால்.. அடக்கி வாசிக்கிறது நல்லம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு மட்டும்தான் வாழ்க்கையின் வெற்றிக்கு உதவுமா?
இல்லை என்பதற்கு  நடிகர் வடிவேலு ஒரு உதாரணம்.
அது சரி.. பெரிசாப் படிச்சு கிழிச்சவையளால இப்படி எழுதவும் முடியுமோ ??

இந்தத் திருமணத்தால் இந்தப் பெண்ணின் கல்வி தடுக்கப்பட்டுள்ளதா?
அதனைப் பற்றிச் செய்தியில் ஒன்றுமில்லை
அல்லது திருமணம் செய்தால் இந்தியாவில் படிக்க முடியாதா??
அதுவும் இல்லை.
எந்த அடிப்படையில் இங்கே கருத்துக்கள் பதியப்படுகின்றன.
யாழிவன் கேட்டதில் தப்பில்லை. ஆனால் சில சொற்களைத் தவிர்த்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நியாயப்படுத்த தவறான உதாரணத்தை கையில் எடுக்கிறீர்கள். அதுவே ஓர் நாள் உங்களை தாக்கும் போது.. கொய்யோ முறையோ என்பீர்கள். அப்போது அவர்கள் வரமாட்டார்கள். நாங்கள் தான் உங்களுக்காக நியாயத்தின் பக்கமிருந்து வந்து குரல்கொடுக்க வேண்டி இருக்கும். அதனால்.. அடக்கி வாசிக்கிறது நல்லம். :lol::icon_idea:

"நீரளவே... ஆம்பல்."

"விரலுக்கு, தகுந்த வீக்கம் வேண்டும்."

இந்தப் பழ மொழிகளை... நீங்கள் கேள்விப் பட்டிருந்தால்.... உங்கள் கருத்து அடிபட்டுப் போகும்Laie_22.gif

நமக்கு... அடக்கி, வாசிக்க வேண்டிய.. எந்த நிர்ப்பந்தமும் இல்லை. :)

அதனை... நீங்கள், சொல்வது... விநோதமாக உள்ளது. :o

நாதமுனி, விசுகு, நிழலி எல்லோரும் இந்தத் தலைப்பில்....

எதிர் பார்க்காத, கருத்துக்களை வைத்துள்ளார்கள்.

அதனை... உங்களிடமிருந்து, எதிர் பார்க்காத கருத்துக்கள்.

செய்த  தவறை, ஒத்துக் கொள்பவன் தான்.... உணமையான மனிதன்.

அதற்கு... வியாக்கியானம்  கற்பிப்பதால்.....  நீங்களே, உங்களை தாழ்த்திக் கொள்கிறீர்கள். :)

ஆங்... மாட்டவே மாட்டன். 18 வயதில் ஒரு பெண்ணை அது வடிவேலுவின் மகனாயிருந்தால் என்ன சுப்பன் குப்பன் போன்றோரின் மகனாயிருந்தால், ஒபாமாவின் மகளாக இருந்தால் தான் என்ன கலியாணம் கட்டிக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். எவ்வளவவு உருண்டு பிரண்டு கத்தினாலும் மாட்டவே மாட்டன். :)

c%20(70).gifநிழலி, நீங்கள் சின்னப் பிள்ளை மாதிரி... விழுந்து, அழுது, கண்ணீர் விட்டாலும்....

தனக்கு, என்று.... வரும் போது.....

சுப்பன், குப்பன், மட்டுமல்ல....

நிழலியியும்... ஒரு, மகனுக்கு தந்தை என்பதால்....

பத்து, வருடத்தில், வடிவேலின் முடிவுக்கு வருவார் என்று, நம்புகின்றேன். :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு தான் நடந்து வந்த பாதையை மறக்காமல் உள்ளது இக்காலத்தில் ஆச்சரியமான விடயம்.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஏழைப்பெண்ணுக்கு நல்ல வாழ்வு அமைந்ததற்கு வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வல்வை அக்கா.. ஒரு ஏழைப் பெண்ணை 18 வயதில் திருமண பந்தத்துக்குள் தள்ளுவதை தட்டிக் கேட்கக் கூடாது என்றா சொல்ல வாறீங்க.

அப்படின்னா... யாழ் களத்தில் பெற்றோரா உள்ள நீங்கள் உட்பட உங்களின் 18 வயது தாண்டிய பிள்ளைகளை கலியாணம் முடிக்கப் போறியா.. யுனிவேர்சிட்டி போகப் போறியா என்று கேட்டுவிட்டா.. யுனிவேர்சிட்டிகளுக்கு அனுப்பினீர்கள்..??! அதென்ன உங்கட பிள்ளை என்றால் ஒரு நியாயம்.. அடுத்தவன் பிள்ளை என்றால் பல்கலைக்கழகம் போற வயசில பள்ளியறை போகனுன்னு நினைக்கிறது. உங்கட பிள்ளை 21ம் நூற்றாண்டில வாழ அது 16ம் நூற்றாண்டில் வாழனுமா..??! ஏன் அந்தப் பிள்ளைக்கும் 21ம் நூற்றாண்டு சலுகைகள் வசதிகள் கிடைக்க குரல் கொடுக்கக் கூடாது.

பெண்களின் உரிமைக்காக குரல்கொடுப்பதாகச் சொல்லும் நீங்கள்.. ஒரு பெண்ணின் உயர்கல்வி அவளின் அறியாமையோடு பறிக்கப்படுவதை... நியாயப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடிவதாக இல்லை. பெண்ணுரிமை எல்லாம்.. எழுத்திலும்.. பேச்சிலும்.. ஊருக்கும் போல. வீட்டுக்கு என்றால்.. வேறையோ என்னமோ..???!

ஒரு சினிமா பிரபல்யம் வீட்டில் இப்படி நடந்தால்.. கிட்டத்தட்ட 60% கையெழுத்துத்தறிவு வீதம் கொண்ட தமிழ்நாட்டில் உள்ள 18 வயசுப் பெண்களின் நிலை என்ன என்று சிந்தித்துப் பார்த்தீர்களா..?????!

இங்கு சிலர் இதற்கு வக்காளத்து வாங்கக்கூடும். ஏனெனில் இன்று வெளிநாட்டு விசாவைக் காட்டி 18 வயசுப் பெட்டையள ஊரில போய் கலியாணம் கட்டிக் கொண்டு வந்து குடும்பம் நடத்திறவையை புகலிடத்தில் அதிகம் காண முடிகிறது. அதுங்க இங்கு படும் அல்லல்கள்.. யார் அறிவார்..???! அப்படியானவை இதனை நியாயப்படுத்த முன்னிற்பினம்..!!! :icon_idea::):rolleyes:

பசிக்கு உணவு போட்டால்தான் மனிதன் எழுந்தே நிற்கமுடியும்.
பின்பு அதில் இருந்துதான் எங்காவது நகரமுடியும்.
 
உணவிற்கும் வசதியில்லாத பெண்ணிற்கு ..... ஒரு வாழ்வை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இனி இப்படி ஒரு வசதியான இடத்திற்கு வந்த பெண் ... படிப்பை தொடரலாம்.
அவருடைய கடந்தகால படிப்பை பொறுத்தே அது தொடரும். 
 
இனி அந்த பெண்ணிற்கும் வடிவேலா படிக்க முடியும்? 
 
18 வயது திருமணம் பிழையானது என்றால்.
பள்ளி வயது மாணவர்களுக்கு அடிப்படை  கல்வி வசதி செய்யாதிருப்பது அதை விட கொடியது.
அரசு செய்யும் தவறுகளுக்கு ஒரு வடிவேலு என்ன செய்ய முடியும்? 
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்... மாட்டவே மாட்டன். 18 வயதில் ஒரு பெண்ணை அது வடிவேலுவின் மகனாயிருந்தால் என்ன சுப்பன் குப்பன் போன்றோரின் மகனாயிருந்தால், ஒபாமாவின் மகளாக இருந்தால் தான் என்ன கலியாணம் கட்டிக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். எவ்வளவவு உருண்டு பிரண்டு கத்தினாலும் மாட்டவே மாட்டன். :)

18 வயதில் திருமணம் செய்தால் அதன் பின்னர் படிக்க முடியாது என யார் சொன்னார்கள் .

படிப்பில் ஆர்வம் இருந்தால் எப்போதும் எத்தனை வயதிலும் படிக்கலாம்.

பணத்தையும் ஆடம்பர வாழ்க்கையையும் கண்டவுடன் படிப்பைக் கைவிட்டால் நாங்கள் என்ன செய்வது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என்ன இது உங்கள் பத்தாம் பசலித்தனமான கதை. இந்த திருமண பின்னணி குறித்து நான் வாசித்தவைகளை நாகரிகம் கருதி இங்கே பதியவில்லை. 
 
இதில இரண்டு பெண்கள் வேறு ஆதரவு தருகிறார்கள். இருவருமே நூல் ஆசிரியர்கள். சமூகத்தினை நன்கு புரிந்திருக்க வேண்டியவர்கள்.
 
ஏதோ வடிவேலு பெரும் சமூகத் தொண்டு புரிந்த மாதிரியும் நாம் அதை விரும்பவில்லை போலவும் எழுதுகிறார்கள்.
 
1. மணமக்கள் முகத்தில் சந்தோசமே இல்லை. காரணம் என்ன, ஏனிந்த அவசரக் கலியாணம்?
 
2. ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு உதவி செய்வது, அந்த பெண் கல்விக்கு உதவுவதன் மூலம் நடந்திருக்கலாமே. பெண்ணின் தந்தை பந்தல் தொழிலாளி, அதனால் தத்து எடுத்தேன் பீலா எல்லாம் எதற்கு. தத்து எடுத்திருக்கிறேன், படிப்பு முடிந்ததும் கலியாணம், இப்போ நிச்சயதார்த்தம் மட்டுமே என்று அறிவித்திருக்கலாமே.
 
3. படிப்பு தொடரும் என்பது உத்தரவாதம் தர முடியாத ஒன்று. மிக முக்கியமான காரணம், இந்த பெண்ணே, தனது கணவனிலும் பார்க்க கூடுதலாக படிக்க மறுக்கப் போகின்றார். அது தமிழ் நாட்டுப் பெண்களின் தலை எழுத்து.
 
4. சினிமா பிரபலங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். கோடானு கோடி ரசிகர்கள் அவர்களை முன் மாதிரியாக கொள்கிறார்கள். பெண்ணுக்கு திருமண வயது 21 என்று தமிழ் நாடு முழுவதும் லாரிகளிலும், வாகனங்களிலும் எழுதி வைத்துள்ளனர். அதை வாசிக்க வடிவேலுவுக்கு முடியாதா என்ன?
 
5. ஏதோ காரணமாக ரகசியமாக செய்யப் போய், அது குறித்து விசாரிக்க அதிகாரிகள் வந்த போது, வயது குறித்து (நேற்று 18 முடித்து 7 மாதம் என்றார்கள், இன்று 19 முடிந்து 6 மாதம் என்கிறார்கள்) விசாரிக்க வந்தார்கள். விசாரித்து ஒண்ணுமே இல்லை என்று சந்தோசமாக, என்னுடன் நின்னு படம் எடுத்துவிட்டு போனார்கள். 'அவங்க நம்ம பானுங்க' என்று அவரது நகைசுவை படம் போல அசடு வழிவது வேற.
 
6. ஏன் வடிவேலு ஒரு பெண்ணுக்கு பதிலாக பல ஏழைகளுக்கு உதவி இருக்கலாமே. நான் ஒரு கிராமத்தினையே தத்து எடுக்க இருந்தேன். முடியலே, இந்த பெண்ணை தத்து எடுத்திருக்கிறேன் என்கிறார். அந்தப் பெண்ணுக்கு உதவ கல்யாணமா வழி?  இங்கே பலருக்கு உதவாமல் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவி கிடைத்தால் போதும் என்பது போல் அல்லவா எழுதுகிறீர்கள்.
 
  7. அதிகாரிகள் வடிவேலு போன்ற பிரபல்யங்கள் வீட்டு கலியாண நிகழ்வுக்கு, சும்மா, யாரோ கிளப்பிய புரளியை நம்பி வருவார்களா என்ன? குறைந்த பட்சம் வடிவேலுவை போனில் தொடர்பு கொண்டு அல்லது ஒரு அதிகாரியாவது சிவில் உடையில் வந்தாவது விளக்கம் கேட்டிருப்பார் அல்லவா?
 
நான் எப்பொழுதும் சொல்லும் ஒரு விடயம்: தனி மனித ஒழுக்கம். சினிமாவில் அது முக்கியமானது. இல்லாவிடில் குடும்பம் அவ்வளவு தான்.
 
சிவகுமார் தனிமனித ஒழுங்குக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. அவரது பிள்ளைகள் அனைவரும் சிறந்த கல்வி பெற வைத்தார். பணத்தினைக் காட்டாமல் மிடில் கிளாஸ் பிள்ளைகளாகவே வளர்த்தார். அவர்கள் ஒரு அறக்கட்டளை ஒன்றை அமைத்து பீலா விடாமல் பல வசதி இல்லாப் பிள்ளைகளுக்கு உதவு கின்றனர். 
 
சிவாஜி, கமல், ரஜனி, வடிவேலு எல்லாம் ஒழுக்கத்தில் சிவகுமாருக்கு  நேர் எதிர். அவர்களது பிள்ளைகள் தம் தந்தைகளை கவலை கொள்ள வைத்தவர்கள். சில தந்தைமார் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
 
'கால்கட்டு' எனும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப் படும் சொல்லின் கருத்து புரிந்தால், வசதி இல்லா அப்பாவிப் பெண்ணின் படிப்பு, எதிர்காலம், படிப்பில்லா ஆண் கையில் பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கருதினால், வாழ்த்துவோம், சேர்ந்தே....
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பசிக்கு உணவு போட்டால்தான் மனிதன் எழுந்தே நிற்கமுடியும்.
பின்பு அதில் இருந்துதான் எங்காவது நகரமுடியும்.
 
உணவிற்கும் வசதியில்லாத பெண்ணிற்கு ..... ஒரு வாழ்வை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இனி இப்படி ஒரு வசதியான இடத்திற்கு வந்த பெண் ... படிப்பை தொடரலாம்.
அவருடைய கடந்தகால படிப்பை பொறுத்தே அது தொடரும். 
 
இனி அந்த பெண்ணிற்கும் வடிவேலா படிக்க முடியும்? 
 
18 வயது திருமணம் பிழையானது என்றால்.
பள்ளி வயது மாணவர்களுக்கு அடிப்படை  கல்வி வசதி செய்யாதிருப்பது அதை விட கொடியது.
அரசு செய்யும் தவறுகளுக்கு ஒரு வடிவேலு என்ன செய்ய முடியும்? 

கலியாணத்துக்கு பசி தடையில்லையோ..???!

கல்விக்கு மட்டும் தான் பசி தடையோ..???!

வடிவேலுவே சொல்லி இருக்கிறார் எங்கட குடும்பம் படிப்புக் குறைவு.. என்று மக்கள் முன் ஒரு அனுதாபியாக அவர் பார்க்கப்பட இதைச் சொல்லி வந்திருக்கிறார். அது உண்மையும் கூட.

அந்த நிலையை ஏன் வடிவேல் வளர்க்க வேண்டும்..??! அவரிடம் உள்ள வசதிக்கு படிக்க வைக்கலாமில்ல..??! படிக்க வைச்சு ஒரு 3 வருசம் தள்ளி கலியாணம் பண்ணிக்கிட்டா என்ன தப்பு..??! குழந்தை பிறக்காதா.. தாலி கட்ட கழுத்துத்தான் இராதா..??!

குடும்பச் சுமைகளோடு ஒரு பெண் அதுவும் தமிழக சமூகச் சூழலில் கல்வி கற்பது என்பது பெரிய முன்னேற்றமான குடும்பங்களில் கூட போராட்டமாக உள்ள நிலையில்.. வடிவேலு வீட்டில்..  வாழப் போயிருக்கும் இந்தப் பொண்ணுக்கு..??! இப்படி தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆயிரம் பெண்களுக்கு..??!

இங்கினை நடந்த ஒரு உண்மைச் சம்பவம்..

கிறிஸ்தவ மதமாற்றம் பெற்ற ஒரு இந்துக்குடும்பம். தீவிர கிறீஸ்வதவர்களாகிவிட்ட நிலையில்.. அந்த அம்மாட கனவில ஜீசஸ் வந்து சொன்னாராம்.. உன் பொண்ணுக்கு இந்த இடத்தில் திருமணம் செய்து வை அவள்.. நல்லா இருப்பாள் என்று. சரின்னு அந்த அம்மாவும் அந்த இடத்தில் 19 தே வயதான பொண்ணுக்கு திருமணம் செய்து வைத்தார். அவள் ஐரோப்பிய பிரஜை. அதே ஆண்டு அவளுக்கு மருத்துவக் கல்வி கற்க வாய்ப்பும் கிடைத்தது. இப்போ 20 வயது.. வயிற்றில பிள்ளை.. கையில புத்தகம். எதை தூக்கிறதுன்னு தெரியாம.. கல்விக்கு முழுக்குப் போடப் போகுது. இது நடந்தது.. இந்தியாவில் அல்ல. நன்கு முன்னேறிய அபிவிருத்தி அடைந்த ஐரோப்பிய நாட்டில் நம்மவர்களிடையே.

சிந்தித்துப் பாருங்கள்.. இந்தியாவில்.. தமிழகத்தில்.. ஒரு சாதாரண குடும்பத்தில்.. இருந்து வந்த பெண்ணிற்கு.. திருமணத்தின் பின் உயர்கல்வி என்பது.. எவ்வளவு சாத்தியமுன்னு..???!

இதைச் சிந்திக்க முடியல்லைன்னா.. நடையைக் கட்டுங்க. சும்மா ஆணாதிக்கம் அதுஇதென்னு.. பிற தலைப்புக்களில் வந்து பிசத்தப்படாது. ஒரு பொண்ணுக்கு அவளின் அடிப்படை அதுவும் 21ம் நூற்றாண்டில் வாழ அவசியமான உயர்கல்வியை மறுதலிக்கும் நீங்க எல்லாம்.. ஆணாதிக்கம் பற்றி பேசவே கூடாது. :icon_idea::)

இதே பதிலை.. மற்றவர்களும் உள்வாங்கிக் கொள்ளுங்க. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
படிப்பு படிப்பு எண்டு அலையுற மகான்களே!!!!......கமலன்ரை இரண்டு பெடிச்சியளும் உலகத்திலை இல்லாத பொல்லாத படிப்பு படிச்சுப்போட்டுத்தான் சினியிலை ஆடைகழட்டி சமூக சேவை செய்யினம் தெரியுமோ??
 
உலக நடப்பு தெரிஞ்சவன் நம்ம வடிவேலு. :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

கமல்... ரஜனியின் பொடிச்சியள் எல்லாம் சினிமா சார்ந்த துறைகளில் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர். அதனை அங்கு தான் காண்பிக்க முடியும்.

அதுங்க எல்லாம் சுயமாக வாழக் கூடிய பெண்களாகவும் உள்ளன.

இந்தப் பொண்ணிடம்.... வடிவேலு வீட்டில்.. மாமியாருக்கும்.. மாமனாருக்கும்.. சதா.. அவிச்சுக் கொட்டும்.. என்ற இந்திய பெண் அடிமைத்தன உலக நடப்பை தான் வடிவேல் திணிக்க முடியும். வேற என்னத்தை..???????! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவும் 21ம் நூற்றாண்டில் 18 வயதில் காலேஜ் போற வயசில உள்ள பொண்ணை... பள்ளி அறைக்கு அனுப்பிற இந்தச் செயலை வாழ்த்துவதிலும் வாழ்த்தாமல் இருப்பது நல்லதல்லவா.

எதுஎப்படியோ.. இந்திய கிராமங்கள் இன்னும் முன்னேற இடமுள்ளது. வடிவேல் இத்தனை படங்களில் நடித்த போதும் கற்றுக்கொண்ட பாடங்கள் எதுவுமே இல்லையா என்றும் வினவத்தோன்றுகிறது.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். திருமணத்திற்கு பின்னாவது அந்த பொண்ணை படிக்க விடுங்க வடிவேலு சார். படிப்பை அவள் தன் குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் நிலையை உருவாக்காதீர்கள். அவள் தன் படிப்பை குழந்தைகளுக்கு ஊட்டும் நிலையை உருவாக்குங்கள். :icon_idea::)

வெளிநாடுகளிலை அறப்படிச்ச தாயும் தன்ரை பிள்ளையை ஓய்வெடுக்க விடாமல் ரியூசனுக்கு திரத்தி விடுறதை கன சிங்கங்களுக்கு தெரியேல்லை போலை.. :lol:

இந்தக்காலத்தில்லை படிச்சவன் படிக்காதவன் எண்ட லெவெலெல்லாம் இல்லை. :icon_idea: எல்லோரும் சமம் எண்ட அளவுக்கு உலகம் முன்னேறிக்கொண்டு வருது.

நீங்கள் இப்பவும் சட்டம்பியார் காலத்திலையே இருக்கிறியள்...அய்யொ...அய்யொ.... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமல்... ரஜனியின் பொடிச்சியள் எல்லாம் சினிமா சார்ந்த துறைகளில் தான் உயர்கல்வி பெற்றுள்ளனர். அதனை அங்கு தான் காண்பிக்க முடியும்.

அதுங்க எல்லாம் சுயமாக வாழக் கூடிய பெண்களாகவும் உள்ளன.

இந்தப் பொண்ணிடம்.... வடிவேலு வீட்டில்.. மாமியாருக்கும்.. மாமனாருக்கும்.. சதா.. அவிச்சுக் கொட்டும்.. என்ற இந்திய பெண் அடிமைத்தன உலக நடப்பை தான் வடிவேல் திணிக்க முடியும். வேற என்னத்தை..???????! :icon_idea::lol:

எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்குமெண்டால் இந்த உலகமே இயங்காது. 
 
உதாரணத்துக்கு அமெரிக்கா/ரஷ்யா ஏன் எல்லா நாடுகளிட்டையும் அணுஆயுதம் இருக்கிறதை விரும்பேல்லை????
 
ஏன் வீட்டோ பவர் எல்லா நாடுகளுக்குமில்லை???  :lol:  :D
 
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வல்வை அக்கா.. ஒரு ஏழைப் பெண்ணை 18 வயதில் திருமண பந்தத்துக்குள் தள்ளுவதை தட்டிக் கேட்கக் கூடாது என்றா சொல்ல வாறீங்க.

அப்படின்னா... யாழ் களத்தில் பெற்றோரா உள்ள நீங்கள் உட்பட உங்களின் 18 வயது தாண்டிய பிள்ளைகளை கலியாணம் முடிக்கப் போறியா.. யுனிவேர்சிட்டி போகப் போறியா என்று கேட்டுவிட்டா.. யுனிவேர்சிட்டிகளுக்கு அனுப்பினீர்கள்..??! அதென்ன உங்கட பிள்ளை என்றால் ஒரு நியாயம்.. அடுத்தவன் பிள்ளை என்றால் பல்கலைக்கழகம் போற வயசில பள்ளியறை போகனுன்னு நினைக்கிறது. உங்கட பிள்ளை 21ம் நூற்றாண்டில வாழ அது 16ம் நூற்றாண்டில் வாழனுமா..??! ஏன் அந்தப் பிள்ளைக்கும் 21ம் நூற்றாண்டு சலுகைகள் வசதிகள் கிடைக்க குரல் கொடுக்கக் கூடாது.

பெண்களின் உரிமைக்காக குரல்கொடுப்பதாகச் சொல்லும் நீங்கள்.. ஒரு பெண்ணின் உயர்கல்வி அவளின் அறியாமையோடு பறிக்கப்படுவதை... நியாயப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடிவதாக இல்லை. பெண்ணுரிமை எல்லாம்.. எழுத்திலும்.. பேச்சிலும்.. ஊருக்கும் போல. வீட்டுக்கு என்றால்.. வேறையோ என்னமோ..???!

ஒரு சினிமா பிரபல்யம் வீட்டில் இப்படி நடந்தால்.. கிட்டத்தட்ட 60% கையெழுத்துத்தறிவு வீதம் கொண்ட தமிழ்நாட்டில் உள்ள 18 வயசுப் பெண்களின் நிலை என்ன என்று சிந்தித்துப் பார்த்தீர்களா..?????!

இங்கு சிலர் இதற்கு வக்காளத்து வாங்கக்கூடும். ஏனெனில் இன்று வெளிநாட்டு விசாவைக் காட்டி 18 வயசுப் பெட்டையள ஊரில போய் கலியாணம் கட்டிக் கொண்டு வந்து குடும்பம் நடத்திறவையை புகலிடத்தில் அதிகம் காண முடிகிறது. அதுங்க இங்கு படும் அல்லல்கள்.. யார் அறிவார்..???! அப்படியானவை இதனை நியாயப்படுத்த முன்னிற்பினம்..!!! :icon_idea::):rolleyes:

முதலில் நெடுக்கு இங்கு ஆரம்பிக்கப்பட்ட செய்தியை மறுபடியும் போய் வாசித்துவிட்டு பதில் எழுத முற்படுங்கள். இவ்விடத்தில் உங்களுடைய வாதமானது பொருத்தமில்லாதது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நிற்க. இங்கு இந்தச் செய்திக்கான பலருடைய கருத்தாடல் என்பது செய்திக்குச் சம்பந்தமே இல்லாமல் இன்னொரு தொடர்பற்ற இழையில் தொங்கிக்கொண்டு பயணிக்க ஆரம்பித்துள்ளதை படித்தவர்களால் உணரமுடியும்.

இந்தச் செய்தியில் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட கல்வி என்ற புகாரை எவ்விடத்திலும் காணவில்லை ஆக இச்செய்தியில் இல்லாத ஒன்றை புகுத்தி கருத்துரையாடுவதோடு மட்டும் நின்று விடாமல் என்னை நோக்கியும் உங்கள் வித்துவத்தனத்தை காட்டுவதற்கு முற்பட்டிருப்பது உங்கள் கருத்தாடலில் உங்களுக்கு உள்ள அளவு கடந்த நம்பிக்கையைக்காட்டுகிறது. பாராட்டுக்கள் இருப்பினும் பொருத்தமில்லாத இடத்தில் பொருந்தாத விடயத்தை எடுத்துவந்து அலட்டிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது உங்கள் பத்தாம் பசலித்தனமான கதை. இந்த திருமண பின்னணி குறித்து நான் வாசித்தவைகளை நாகரிகம் கருதி இங்கே பதியவில்லை. 
 
இதில இரண்டு பெண்கள் வேறு ஆதரவு தருகிறார்கள். இருவருமே நூல் ஆசிரியர்கள். சமூகத்தினை நன்கு புரிந்திருக்க வேண்டியவர்கள்.
 
ஏதோ வடிவேலு பெரும் சமூகத் தொண்டு புரிந்த மாதிரியும் நாம் அதை விரும்பவில்லை போலவும் எழுதுகிறார்கள்.
 
1. மணமக்கள் முகத்தில் சந்தோசமே இல்லை. காரணம் என்ன, ஏனிந்த அவசரக் கலியாணம்?
 
2. ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு உதவி செய்வது, அந்த பெண் கல்விக்கு உதவுவதன் மூலம் நடந்திருக்கலாமே. பெண்ணின் தந்தை பந்தல் தொழிலாளி, அதனால் தத்து எடுத்தேன் பீலா எல்லாம் எதற்கு. தத்து எடுத்திருக்கிறேன், படிப்பு முடிந்ததும் கலியாணம், இப்போ நிச்சயதார்த்தம் மட்டுமே என்று அறிவித்திருக்கலாமே.
 
3. படிப்பு தொடரும் என்பது உத்தரவாதம் தர முடியாத ஒன்று. மிக முக்கியமான காரணம், இந்த பெண்ணே, தனது கணவனிலும் பார்க்க கூடுதலாக படிக்க மறுக்கப் போகின்றார். அது தமிழ் நாட்டுப் பெண்களின் தலை எழுத்து.
 
4. சினிமா பிரபலங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். கோடானு கோடி ரசிகர்கள் அவர்களை முன் மாதிரியாக கொள்கிறார்கள். பெண்ணுக்கு திருமண வயது 21 என்று தமிழ் நாடு முழுவதும் லாரிகளிலும், வாகனங்களிலும் எழுதி வைத்துள்ளனர். அதை வாசிக்க வடிவேலுவுக்கு முடியாதா என்ன?
 
5. ஏதோ காரணமாக ரகசியமாக செய்யப் போய், அது குறித்து விசாரிக்க அதிகாரிகள் வந்த போது, வயது குறித்து (நேற்று 18 முடித்து 7 மாதம் என்றார்கள், இன்று 19 முடிந்து 6 மாதம் என்கிறார்கள்) விசாரிக்க வந்தார்கள். விசாரித்து ஒண்ணுமே இல்லை என்று சந்தோசமாக, என்னுடன் நின்னு படம் எடுத்துவிட்டு போனார்கள். 'அவங்க நம்ம பானுங்க' என்று அவரது நகைசுவை படம் போல அசடு வழிவது வேற.
 
6. ஏன் வடிவேலு ஒரு பெண்ணுக்கு பதிலாக பல ஏழைகளுக்கு உதவி இருக்கலாமே. நான் ஒரு கிராமத்தினையே தத்து எடுக்க இருந்தேன். முடியலே, இந்த பெண்ணை தத்து எடுத்திருக்கிறேன் என்கிறார். அந்தப் பெண்ணுக்கு உதவ கல்யாணமா வழி?  இங்கே பலருக்கு உதவாமல் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவி கிடைத்தால் போதும் என்பது போல் அல்லவா எழுதுகிறீர்கள்.
 
  7. அதிகாரிகள் வடிவேலு போன்ற பிரபல்யங்கள் வீட்டு கலியாண நிகழ்வுக்கு, சும்மா, யாரோ கிளப்பிய புரளியை நம்பி வருவார்களா என்ன? குறைந்த பட்சம் வடிவேலுவை போனில் தொடர்பு கொண்டு அல்லது ஒரு அதிகாரியாவது சிவில் உடையில் வந்தாவது விளக்கம் கேட்டிருப்பார் அல்லவா?
 
நான் எப்பொழுதும் சொல்லும் ஒரு விடயம்: தனி மனித ஒழுக்கம். சினிமாவில் அது முக்கியமானது. இல்லாவிடில் குடும்பம் அவ்வளவு தான்.
 
சிவகுமார் தனிமனித ஒழுங்குக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. அவரது பிள்ளைகள் அனைவரும் சிறந்த கல்வி பெற வைத்தார். பணத்தினைக் காட்டாமல் மிடில் கிளாஸ் பிள்ளைகளாகவே வளர்த்தார். அவர்கள் ஒரு அறக்கட்டளை ஒன்றை அமைத்து பீலா விடாமல் பல வசதி இல்லாப் பிள்ளைகளுக்கு உதவு கின்றனர். 
 
சிவாஜி, கமல், ரஜனி, வடிவேலு எல்லாம் ஒழுக்கத்தில் சிவகுமாருக்கு  நேர் எதிர். அவர்களது பிள்ளைகள் தம் தந்தைகளை கவலை கொள்ள வைத்தவர்கள். சில தந்தைமார் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
 
'கால்கட்டு' எனும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப் படும் சொல்லின் கருத்து புரிந்தால், வசதி இல்லா அப்பாவிப் பெண்ணின் படிப்பு, எதிர்காலம், படிப்பில்லா ஆண் கையில் பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கருதினால், வாழ்த்துவோம், சேர்ந்தே....

நாரதரின் இனனொரு பெயர் நாதமுனி கலகங்கள் செய்வதிலும் நியாயம் இருக்கவேண்டும். அடிப்படைச் செய்தியின் சாரம்சமே புரியாத அல்லது புரிந்து கொள்ள முயலாத தன்மையை நீங்கள் எத்தனை பத்தி எழுதினாலும் மறைத்துவிட முடியாது. உங்களுக்கு மட்டுமே தோன்றும் கற்பனைகளை தேர்வு பெற்ற சட்டவல்லுனர்போன்று இலக்கங்கள் இட்டு எழுதினால் உங்கள் தரப்பு வாதம் செய்தியின் சாரம்சம் ஆகிவிடாது. பெண்கல்வி என்று இங்கு இத்திருமணச்செய்தியில் சடைய முயல்வதன் நோக்கம் என்ன? பெண்கல்வி தொடர்பாக பேச இந்தக்களத்தில் தாராளமாகத் திரி ஆரம்பிக்கலாம். ஒரு திருமண தம்பதிகன் தொடர்பான செய்தியில் அத்தம்பதிகளை அவர்கள் சார்ந்த உறவுகளை சர்ச்சைக்குள்ளாக முற்படுவதன் நோக்கம் என்ன, ஒரு வேளை உங்களுக்கு பிரத்தியேகமாக இந்த மணமகன் மணமகள் பற்றி அவர்கள் ஒப்பின்றி அல்லது மணப்பெண்ணின் விருப்பின்றி, அல்லது கல்வி மறுக்கப்பட்டு இப்படி ஏதாவது ஆதாரபூர்வமாக இருந்தால் இங்கு பதிவிடலாமே... அப்போது உங்கள் வாதமும் இந்தச் செய்திக்கு பொருத்தமாகதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
நாதமுனி,
 
சட்டவல்லுனர் போல் ஒரு சாதாரண விடயத்தை ஆராயாதீர்கள்.
 
நீங்கள் ஒர் ஏழையாக இருந்து, 18 வயது இளம் பெண்ணிற்கு தகப்பனாக இருந்து, உங்கள் மகளிற்கு ஓர் வசதியான இடத்தில் திருமண சம்பந்தம் வந்தால் என்ன செய்வீர்கள்? 
 
ஒரு ஏழைப்பெண்ணுக்கு நல்ல வாழ்வு அமைந்ததற்கு வாழ்த்துக்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலை அறப்படிச்ச தாயும் தன்ரை பிள்ளையை ஓய்வெடுக்க விடாமல் ரியூசனுக்கு திரத்தி விடுறதை கன சிங்கங்களுக்கு தெரியேல்லை போலை.. :lol:

இந்தக்காலத்தில்லை படிச்சவன் படிக்காதவன் எண்ட லெவெலெல்லாம் இல்லை. :icon_idea: எல்லோரும் சமம் எண்ட அளவுக்கு உலகம் முன்னேறிக்கொண்டு வருது.

நீங்கள் இப்பவும் சட்டம்பியார் காலத்திலையே இருக்கிறியள்...அய்யொ...அய்யொ.... :D

ஒரு உருப்படியான மதியுரைஞர் 2006 க்குப் பின் இல்லாததால் தமிழர் நாங்கள்.. எங்கு போய் நிற்கிறோம் என்பதை உலகமே அறியும். படிப்பறிவு.. பட்டறிவும் இன்றி.. இந்த உலகில் வெற்றி இல்லை..!!! படிக்காதவனுக்கும் படித்தவனின் உதவி தேவை எப்போதும் அவசியமானதாகவே உள்ளது. யதார்த்தத்தை ஒத்துக்கொள்ள மனமற்றவர்களோடு பேசிப் பிரயோசனம் இல்லை. பட்டறியும் வரை..!! :):icon_idea:

எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்குமெண்டால் இந்த உலகமே இயங்காது. 
 
உதாரணத்துக்கு அமெரிக்கா/ரஷ்யா ஏன் எல்லா நாடுகளிட்டையும் அணுஆயுதம் இருக்கிறதை விரும்பேல்லை????
 
ஏன் வீட்டோ பவர் எல்லா நாடுகளுக்குமில்லை???  :lol:  :D
 
அப்ப ஏன் எல்லாருக்கும் அ.. ஆ.. A.. B..C..D.. படிப்பிக்கிறாங்கள். அதனையும் 4 பேர் படிக்க மிச்சப் பேர் தாவித் திரியும் வாழ்க்கை வாழலாம் தானே. அமேசன் காட்டிலும் மக்கள் வாழினம்... அவை போல..!! ஏன் முடியல்ல..?????!  :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நெடுக்கு இங்கு ஆரம்பிக்கப்பட்ட செய்தியை மறுபடியும் போய் வாசித்துவிட்டு பதில் எழுத முற்படுங்கள். இவ்விடத்தில் உங்களுடைய வாதமானது பொருத்தமில்லாதது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நிற்க. இங்கு இந்தச் செய்திக்கான பலருடைய கருத்தாடல் என்பது செய்திக்குச் சம்பந்தமே இல்லாமல் இன்னொரு தொடர்பற்ற இழையில் தொங்கிக்கொண்டு பயணிக்க ஆரம்பித்துள்ளதை படித்தவர்களால் உணரமுடியும்.

இந்தச் செய்தியில் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட கல்வி என்ற புகாரை எவ்விடத்திலும் காணவில்லை ஆக இச்செய்தியில் இல்லாத ஒன்றை புகுத்தி கருத்துரையாடுவதோடு மட்டும் நின்று விடாமல் என்னை நோக்கியும் உங்கள் வித்துவத்தனத்தை காட்டுவதற்கு முற்பட்டிருப்பது உங்கள் கருத்தாடலில் உங்களுக்கு உள்ள அளவு கடந்த நம்பிக்கையைக்காட்டுகிறது. பாராட்டுக்கள் இருப்பினும் பொருத்தமில்லாத இடத்தில் பொருந்தாத விடயத்தை எடுத்துவந்து அலட்டிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தலைப்பை நீங்க தான் சரியான உணராமல் இருக்கிறீங்க போல. இச் செய்தி.. ஒரு மைனர் (குற்றச்சாட்டு அப்படித்தான் போனதாக செய்தி குறிப்பிடுகிறது) பொண்ணை திருமணத்துக்குள் கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் பிரகாரம்.. பொலிஸ் மற்றும் சிவில் அதிகாரிகள் அவளின் வயது.. கல்விச் சான்றிதழ்கள்.. பரிசோதனை செய்ததன் விளைவு.

பெண்ணின் திருமண வயது 21 ஆக வேண்டும் என்ற உரிமைக் குரல் ஒலிக்கும் அதே இடத்தில்.. 18 வயது பூர்த்தி என்றதும்.. கலியாணம் கட்டிக் கொடுத்து.. ஒரு பெண்ணின் உயர்கல்விக்கான வாய்ப்பை மறுதலிப்பது அப்படியே அப்பட்டமாக தெரிந்தும்.. அதனை இட்டு குரல்கொடுக்கல்லைன்னா.. அது கொடுமை.

இந்த இடத்தில்.. அதுவும் வடிவேல் போன்ற ஒரு சினிமா பிரபல்யம் வீட்டில் இருந்து இது ஆரம்பிக்கப்பட்டிருப்பது நியாயமே ஆகும்..!!! அநியாயத்தை.. பற்றி உலகிற்கு கதையாகச்  சொல்லும் வடிவேல்.. தன் வீட்டில் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க ஆளில்லாமல்..????! :icon_idea::)

இந்த தலைப்புக்குள் ஓடும் இந்த வாதம்.. தவறானதோ.. அநாவசியமானதோ அல்ல. பெண்ணின் திருமண வயது 21 ஆகனும் என்ற குரல்களையே இது வலுப்படுத்தும். அது ஒரு பெண் 21ம் நூற்றாண்டிற்கு அவசியமான உயர்கல்வியை அவள் பெறுவதை உறுதி செய்யும்..!!! அது ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வளர்ச்சில் முக்கிய பங்காற்றும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்கர் இது பற்றி இந்த திரியில் நான் பதியும் கடைசி பதிவு இது.
உங்களுடன் மல்லுகட்டி இதை வெல்வதில் எந்த பிரயோசனமும் இல்லை ஆதலால்.
 
இந்த பெண் தொடர்ந்தும் படித்துகொண்டு இருந்தார் ... என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?
எதைவைத்து அவர் கல்வி நிறுத்தப்ட்டிருக்கிறது என்று சொல்ல வருகிறீர்கள்?
 
பெண்ணின் குடும்பம் ஏழை குடும்பம் என்பதை என்றாலும் ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஆக வடிவேல் பகுதி இதில் லாபம் அடைய ஏதும் இல்லை.
 
ரவுணில படிச்சு கிழிச்சு பட்டம் எடுத்து திருமணம் ஆகி இங்கு வந்திருக்கும் இந்திய பெண்கள் மாமியார் பிரச்சனையால் தற்கொலை செய்திருக்கிறார்கள். நடு ரோட்டில் நின்று பொலிஸ் இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.
 
இந்த பெண் வடிவேல் வீட்டுக்கு போய் அவர்களுக்கு சமைத்து போட்டால் ............ அது சமூக பிரச்சனை. அப்படி அவர் செய்வார் என்ற எண்ணம் உங்களுக்கு எங்கிருந்து உதித்தது? இந்த சமூகம் சார்ந்து சிந்தித்ததால்தான் உதித்தது. அப்படி இல்லை என்று நீங்கள் அதை மறுத்தால். நீங்கள் ஏற்கனவே வடிவேலின் மனைவியுடன் வாழ்ந்திருக்க வேண்டும். அதை ஆதாரமாக வைத்துதான் அப்படி கூற முடியும்.
 
சமூகத்தில் சீரழிவுகளை வைத்துகொண்டு வடிவேலை வாடி கட்ட சொன்னால் அந்தாள் என்ன செய்யும். தனது கடந்த காலத்தை மறக்காது இவளவு பெரிய இடத்தில் இருக்குபோது  கிராமத்தை தேடி போயிருக்கிறார். நானோ நீங்களோ அதை செய்யபோவதில்லை. 
இப்போ எனக்கு ஹருனிகாவுடந்தான் காதல் வந்திருக்கு. உங்களுக்கும் அப்படிதான் வரபோகிறது. இப்படி ஒரு மனிதன் உதாரணமாக என்றாலும் இருக்கும்போது  அதை பாரட்ட பழகவேண்டும்.
பெண்ணுக்கு வயது குறைந்திருந்தால்கூட ...........  அவர்கள் அதை செய்ய முற்பட்டது ஒரு நல்ல எண்ணத்தில்.
 
நாதமுனி!
வடிவேல் கிராமங்களுக்கு உதவி செய்யவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள் ? இது இன்னொரு படி.
நீங்கள் ஒருவர் வெளிநாட்டில் இருப்பதால் ஊரில் இருந்து எத்தனை பேர் உதவி பெறுகிறார்கள் . இப்போ இந்த பெண்ணின் குடும்பம் என்றாலும் வறுமையில் இருந்து  மூச்சுவிட முடிகிறதே நிரந்தரமாக. 
வடிவேல் என்ன நான் இந்தியாவில் வறுமையை ஒழிப்பேன் என்று கேட்டா பிரச்சாரம் செய்கிறார்? எதோ தன்னால் வறுமையை ஒழிக்க முடிந்ததை அவர் செய்கிறார்.
நாளை நீங்கள்  நெடுக்கர் எல்லோரும் ஈழத்தில் வறுமை குடும்பத்தில் கல்விக்கு வழியில்லாத வீடுகளை தட்டும்போது குறைந்த பட்சம் இரு வீட்டில் என்றாலும்  வறுமை  விட்டு அகலும் இல்லையா? அதை தொடர்ந்தும் நீங்கள் மற்றைய பெண் பிள்ளைகளுக்கு பண உதவி செய்யலாம். எல்லோரையும்  நீங்கள் அல்லது   நெடுக்கர்  மணம் முடிக்க முடியாதல்லவா? ஒருவரை மணம் முடித்துக்கொண்டு மற்றவர்களுக்கு உதவிகளை செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.