Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது

ஆழ்வாப்பிள்ளை

6abe2eb9-e7e9-41f0-a5d7-591ac5035db41.jp

ஆனைவிழுந்தான் சந்தியில் இருந்தது அந்த மயானம். மயானத்தை ஒட்டி இருந்த வீதி எப்பொழுதும் அமைதியாகவே இருக்கும். அந்த வழியாக தனியாகப் போகும் போது ஒரு வித அச்சம் இருக்கும். ஆனாலும் நண்பர்களோடு வல்லிபுரக் கோவிலுக்குப் போகும் பொழுது அந்த மயானத்துக்குள் ஒரு தடவை போய் வலம் வந்து விட்டே போவோம். வாய்க்கரிசி போடும் பொழுது வீசப் படும் அரிசியோடு கலந்திருக்கும் ஐந்து, பத்து சத நாணயக் குற்றிகளோடு, சில சமயங்களில் ஐம்பது சத நாணயங்களும் யார் கண்களிலும் படாமல் எங்களுக்காக ஒளித்துக் காத்திருக்கும். வல்லிபுரக் கோவில் கேணியில் குளித்த பின்னர் மரத்தடிகளில் ஆச்சிகள் சுட்டுக் கொண்டிருக்கும் சூடான தோசைகளை புசிக்கவும், துரைசிங்கத்தின் தமையனார் நடாத்திக் கொண்டிருந்த தேனீர் கடையில் தேத்தண்ணி ருசிக்கவும் அவை எங்களுக்குப் பயன்பட்டிருக்கின்றன.

ஆனைவிழுந்தான் மயானத்தின் வடக்குப் பகுதியில் இருந்த காணி தனியாருக்குச் சொந்தமானது. வேலி அடைப்புகள் கிடையாது. வெள்ளை மணலை கள்ளமாக அள்ளிச் செல்ல அந்த காணியினூடாகவே வழி அமைத்து றக்டர்கள் பயணிக்கும்.

ஊரில் எங்காவது நாகபாம்பு வந்தால், பிடித்துக் கொண்டு வந்து வல்லிபுரக் கோவிலடியில் விடுவது அப்பொழுது வழமையாக இருந்தது. சாமிக்குற்றம் என்பதால் நாகப் பாம்புகளை கொல்ல மாட்டார்கள். இப்படி விடப்படும் நாகப் பாம்புகள் கோவிலை அண்டிய சவுக்குத் தோப்பிலும், பத்தைகள் உள்ள காணிகளிலுமே ஒதுங்கி வாழும். அதன் நிமித்தம் ஆனைவிழுந்தான் மயானத்தை ஒட்டி இருந்த காணியிலும் பாம்புகள் இருக்கும் என்ற பயத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி மயான அமைதியாக இருக்கும்.

வழமைக்கு மாறாக அந்தக் காணி அன்று சனங்களால் நிறைந்திருந்தது. அங்கிருந்த மரங்களில் எல்லாம் சைக்கிள்கள் சாத்தி வைக்கப் பட்டிருந்தன. எனது றலி சைக்கிளும் அவற்றில் ஒன்றாக இருந்தது. ஒரு இளம் பெண்ணின் அதுவும் பாடசாலை மாணவியின் சடலம் அங்கே இருந்ததுதான் அன்று அந்தக் காணியில் இருந்த கூட்டத்துக்கான காரணம்.

பாடசாலைக்கு கொண்டு செல்லும் பை நிலத்தில் இருந்தது. அதனுள் இருந்து புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், கொம்பாஸ் எல்லாம் மெதுவாக வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. வெள்ளை நிற பாடசாலை சீருடையில் தரையில் இருந்த பெண்ணின் உடலத்தின் முகம் மண் கொண்டு மூடப் பட்டிருந்தது.

'யார் பெத்த பிள்ளையோ? இப்படி செத்துப் போய் இருக்குது'

'எந்தப் பாவி இதைச் செய்தது?' என பலவிதமான அங்கலாய்ப்புகளை அங்கே கேட்கக் கூடியதாக இருந்தது.

'வீட்டிலை அக்கா இருக்கிறாதானே?' என்று ஊரில் இருந்த தம்பிமார்களை விசாரித்தோம். விசாரணை முடிவில் தெளிவானது. எங்கள் ஊரில் எல்லா மாணவிகளும் பத்திரமாக இருந்தார்கள் என்று. ஆகவே இறந்து இருந்தது வெளி ஊராக இருக்க வேண்டும். அது யாராக இருக்கும் என்ற கேள்வி ஊரில் பலமாக இருந்தது.

யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் நகரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த என்னை எனது நண்பன் கலையரசன் இடை மறித்தான்.

'மச்சான் நேற்று மத்தியானத்துக்குப் பிறகு ஒரு பிள்ளையை ஒருத்தன் ஆனைவிழுந்தான் பக்கம் கூட்டிக் கொண்டு போனதை நான் பார்த்தேன்டா'

'ஆளைத் தெரியுமோ?'

'புது முகங்களா இருந்துது. முந்தி ஒருக்காலும் நான் அவையளைப் பார்க்கை இல்லை மச்சான்'

முகத்தை மண் கொண்டு மூடி இருந்ததால் யாருக்குமே அந்தப் பாடசாலை மாணவியை யார் என்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை.

அந்தக் கேள்வி அதிக நேரம் நிலைக்கவில்லை. மெதடிஸ் பெண்கள் பாடசாலை ஆசிரியை ஒருவரின் மகள் என்று கண்டு பிடித்து விட்டார்கள். அந்த ஆசிரியையின் பெயரைக் கேட்டதும் எனக்குப் பெரும் கவலையாகப் போய் விட்டது. அந்த ஆசிரியை எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவர். அவரது கணவர் எனது வகுப்பு ஆசிரியராக இருந்தவர். ஆனால் இருவரும் ஏதோ காரணத்தால் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆஸ்திக்கு பெண் என்றும் ஆசைக்கு ஆண் என்றும் இரண்டு பிள்ளைகள். இரண்டு பிள்ளைகளும் தாயுடனே வசித்து வந்தார்கள். மூத்தவளான மகள்தான் இப்பொழுது கொலை செய்யப் பட்டிருக்கிறாள். அவள் பெயர் கமலம்.

சம்பவம் இப்படித்தான் அரங்கேறுகிறது.

கமலம் படிக்கும் அதே பாடசாலையில்தான் தாயும் ஆசிரியையாக வேலை பார்க்கின்றார். அன்று அவளது தாய் பாடசாலைக்கு வரவில்லை.

கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு வராத்துப்பளை என்ற இடத்தில் அவளது தாய் சிகிச்சை பெறுகிறார் என்றும் கமலத்தை அழைத்து வர என்னை அனுப்பினார் எனவும் பொய் சொல்லி பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த கமலத்தை அழைத்துச் செல்கிறான் அவளது ஒன்று விட்ட சகோதரன். அவன் பெயர் வீரப்பன்.

இந்த வீரப்பன் ஒரு கடற் தொழிலாளி. சொந்தமாகப் படகு இல்லாததால் ஒரு சம்மாட்டியாரின் கீழ் ஒரு தொழிலாளியாக வேலை செய்கிறான். சம்மாட்டியாரின் மகனுக்கு கமலத்தின் மேல் ஒரு கண். கமலமோ அவனைக் கண் கொண்டு பார்க்கவே இல்லை. கொஞ்சம் நெருங்கி வந்து 'பகிடி' விட்டுப் பார்த்திருக்கிறான். கமலம் செருப்பைக் கையில் எடுத்திருக்கிறாள். அவமானம் ஏமாற்றம் இரண்டோடும் தனது நண்பர்கள் மத்தியில் கேலிக்கு ஆளாகி விட்டிருந்தான். எப்படியாவது அடைந்தே தீர்வேன் என்று நண்பர்கள் மத்தியில் சபதம் எடுக்கிறான். தனது தந்தையிடம் கூலியாக வேலை பார்க்கும் வீரப்பனைக் கருவியாக்குகிறான். பணம் தருகிறேன் என்றோ சொந்தமாகப் படகு வாங்கித் தருகிறேன் என்றோ ஆசை காட்டி இருப்பான் போல, வீரப்பன் அவனது எண்ணத்துக்கு சம்மதித்து விட்டான். அதனால்தான் இப்பொழுது கமலத்தை பாடசாலையில் இருந்து பொய் சொல்லிக் கூட்டிப் போகிறான். பருத்தித்துறையில் பஸ் ஏறி கிராமக்கோட்டுச் சந்தியில் இறங்கி ஆனைவிழுந்தான் பக்கம் கமலத்துடன் போய்க் கொண்டிருக்கிறான். அப்படி அவர்கள் போகும் பொழுதுதான் கலையரசன் கண்டிருக்கிறான். ஆனால் அதன்பின் நடந்ததை யாரும் பார்க்கவும் இல்லை சொல்லவும் சாட்சிகள் இல்லை.

கழுத்து எலும்பில் ஒரு முறிவு காணப்படுகிறது. சுவாசப் பையில் மண்கள் காணப் படுகின்றன. மயக்கம் அடைந்து விட்டிருந்த அவரை மரணித்து விட்டதாக நினைத்து மண்ணால் மூடி இருக்கலாம். மண் கொண்டு மூடியதால் மூச்சுத் திணறி மரணம் ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கொலைக்கான மரண சான்றிதழ்தான் இது.

கலையரசன் ஒரு சாட்சியாக வருகிறான். வீரப்பன், கமலத்தை ஆனைவிழுந்தான் பக்கம் கூட்டிச் சென்றது உறுதியாயிற்று. பாடசாலையில் கிடைத்த தகவல் மற்றும் கலையரசன் சாட்சி ஆகியவற்றால் வீரப்பன் கைது செய்யப் படுகிறான்.

தங்களது சொந்த மகளை இழந்து விட்டது போன்று நகரமே சோகமானது. பாடசாலை கீதத்தைப் பாடாமல் மாணவிகள் சோக கீதம் பாடினார்கள். பத்திரிகைகளுக்கு பெரும் தீனி கிடைத்தது. பல நாட்களாக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியே கமலம் கொலை வழக்காகிப் போனது.

நகரத்தில் பிரதான சட்டத்தரணி வீரப்பனுக்காக வாதாடிக் கொண்டிருந்தார். வீரப்பனுக்கு எதிராக இரண்டு சாட்சிகள் இருக்கின்றன. ஒன்று பாடசாலையில் இருந்து அனுமதி பெற்று கமலத்தைக் கூட்டிச் சென்றது. மற்றையது ஆனைவிழுந்தான் பக்கம் கமலத்தை அழைத்துச் சென்றதைப் பார்த்த கலையரசனிடம் இருந்தது. ஆனால் சம்மாட்டியார் மகனுக்கு எதிராக எவ்வித துப்புகளும் இல்லை. ஆக வீரப்பன் வாயைத் திறந்தால்தான் ஏதாவது தகவலே கிடைக்கும்.

கூட்டிக் கொண்டு வருவதற்கு படகு தருவதாகச் சொன்ன பகுதி காட்டிக் கொடுக்காமல் இருந்தால் என்ன எல்லாம் தருவதாகச் சொல்லி இருக்கும்.

பணம் பலமாகப் பாய்ந்தது. அது சட்டத்தின் ஓட்டை ஒடிசல்கள் ஊடாக புகுந்து கபடி விளையாடிக் கொண்டிருந்தது. அதனால் சம்மாட்டியாரின் மகனுக்கு துளியும் சேதாரம் இல்லாமல் போயிற்று. பாதுகாப்பாக அவனை வேறு இடத்திற்கு நகர்த்தி விட்டார்கள். ஆரம்பத்தில் வேகம் பிடித்த கமலம் கொலை வழக்கு பின்னாளில் நத்தையை விட மெதுவாக நகர்ந்தது.

வருடங்கள் ஓடிற்று. கலையரசனும் இப்பொழுது வெளிநாட்டுக்குப் போய் விட்டான். சாட்சியங்கள் போதுமானதாக இல்லை. வழக்கின் வீச்சும் குறைந்து கொண்டே போனது. தமிழ் விடுதலை வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். மக்கள் கவனமும் அந்தப் பக்கம் போய் விட்டது.

கண்ணிவெடித் தாக்குதல்கள் அதன் பின்னால் அதிரடியாக ஊருக்குள் நுளைந்து அட்டகாசம் செய்யும் சிறிலங்கா இராணுவம் என எல்லாமே அல்லோல கல்லோலமாக இருந்தது. இந்த நிலையில் கமலம் கொலை வழக்கு மக்களின் கவனத்தில் இருந்து விலகிப் போயிற்று.

ஒருநாள் வழக்கு முடிந்து விட்டது. வீரப்பன் விடுதலை ஆனான்.

விடுதலை கிடைத்த மறுநாள் வல்வெட்டித்துறை சந்தியில் இருந்த ஆலமரத்தில் தலை கீழாகக் கட்டப் பட்ட நிலையில் வீரப்பன் செத்திருந்தான். அவனது நெற்றியில் பொட்டு வைத்தாற் போல் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=6abe2eb9-e7e9-41f0-a5d7-591ac5035db4

Edited by கிருபன்

  • Replies 53
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சம்மட்டியாரின் மகன்?? :blink:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் ஒன்று விட்ட சகோதரன் தான் இதைத் செய்ததா?...உண்மையில் நடந்த சம்பவம் போல இருகுது :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கமலம் கொலை வழக்கு பற்றி முன்பு பெரியவர்கள் சிலாகித்து பேசுவதை கேட்டிருக்கிறேன். இன்றுதான் அவர் ஒரு மாணவி என்று அறிகிறேன். :blink:

  • கருத்துக்கள உறவுகள்
ஆனைவிழுந்தான் கமலம் கொலை யாழ்ப்பாணத்தினை உலுக்கிய அதிர்சியான ஒரு கொலைச் சம்பவம் என்று எனது அண்ணா சொல்லுவார். 
 
இயக்கங்கள் வருமுன்னர் நடந்த இந்த கொலைச் சம்பவம் யாழ் குடா நாட்டினையே உலுக்கி இருந்ததாம்.  
 
அப்போது யாழ் போலீஸ் DIG ஆக இருந்தவர் சொன்ன ஒரு ஆங்கில வசனம், பத்திரிகைகளில் வந்து, சிறுவர்கள் எல்லோரும் சொல்லும் ஒன்றாக இருந்ததாம். 
 
If I see him (the killer), I will squeeeze him.
  • கருத்துக்கள உறவுகள்

மிக நெருக்கமானவர்களால் இந்த மரணதண்டனை கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்ட தருணம் அது. மிகக் கோரமான தண்டனையாக இருந்தது.  அப்போது நான் சின்னப்பிள்ளை அப்போதும் சரி எப்போதும் சரி தண்டனை வழங்கியவர்களைக்கண்டு அச்சப்பட்டதே கிடையாது

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

மிக நெருக்கமானவர்களால் இந்த மரணதண்டனை கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்ட தருணம் அது. மிகக் கோரமான தண்டனையாக இருந்தது.  அப்போது நான் சின்னப்பிள்ளை அப்போதும் சரி எப்போதும் சரி தண்டனை வழங்கியவர்களைக்கண்டு அச்சப்பட்டதே கிடையாது

 

புரியவில்லையே..என்ன சொல்ல வருகிறீர்கள் அக்கா ? 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி இந்தத்தண்டனை மிக விகாரமாக வழங்கப்பட்டது இரண்டு கால்களிலும் கட்டி வல்வைச்சந்தியில் உள்ள அரசமரத்தில் கால்களைப்பிளந்து தலை கீழாக தொங்கக்கட்டி அப்போது வீரப்பனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஊரையே அச்சப்படவைத்தது. அன்றிலிருந்தே குற்றவாளிகள் ஓடி ஒழியவும், தம்முடைய குற்றங்களை திருத்திக் கொள்ளவும் முற்பட்டார்கள் என்றால் மிகையாகாது. பணமுதலைகளாக இருந்தால் எக்குற்றத்தையும் இலகுவாகச் செய்யலாம் என்ற நிலை தடம் புரண்டது.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

கலையரசனுக்கும் தண்டனை குடுத்திருக்க வேணும்

 

  • கருத்துக்கள உறவுகள்

கலையரசனுக்கும் தண்டனை குடுத்திருக்க வேணும்

சாட்ச்சிக்கும் உங்க ஊரில் தண்டனையா ?

  • கருத்துக்கள உறவுகள்

சாட்ச்சிக்கும் உங்க ஊரில் தண்டனையா ?

 

மாறி எழுதிவிட்டேன் :D சம்மட்டியாரின் மகனையும் தண்டித்திருக்க வேண்டும்

 

மாறி எழுதிவிட்டேன் :D சம்மட்டியாரின் மகனையும் தண்டித்திருக்க வேண்டும்

 

 

நல்லவேளையுங்கோ நீங்க தண்டிக்க கூடியவராக  இல்லாமல் போய்விட்டீர்கள். ஒரு அப்பாவி அநியாயமாக தலைகீழாய் தொங்கியிருப்பார்

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொழும்பில் ஆங்கிலம் ரியுசன் தந்த சில்வா என்ற சிங்களவர் சொன்னார். தமிழர்களின் போராட்டத்தில் அனுதாபம் இருப்பினும், இந்த இயக்கங்கள், சட்டத்தினை கையில் எடுத்து விளக்கு கம்பங்களிள் கட்டி வைத்து உயிரைப் பறிப்பது அவர்களது நோக்கத்துக்கு நீண்ட கால போக்கில் ஊறு விளைவிக்கும் என்றார்.

மீண்டுமொரு கொலை நடாந்த போது, அது தொடர்பில் Island paper கட்டுரை ஒன்றை, வாசிக்க வைத்த பின் அவர் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது.

குற்றம் செய்பவர்களை சட்டம் தண்டிப்பதை ஏற்கும் உறவுகள், இயக்கங்கள் தண்டிக்கும் போது ஏற்க மாட்டார்கள். வன்மமும், பழிவாங்களும் அதிகரித்து, பழிவாங்கும் நோக்குடன், தண்டித்த இயக்கத்தின் எதிர் இயக்கத்துடன் சேர்வர்.

இறுதியில், கவ்வியில் சிறப்பான மக்கள், கொலைகளையும், கொலையாளிகளையும் சகித்து வாழும் அவலமே மிஞ்சும், என்றார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கத்தில் சமூகவிரோதிகளுக்குக் வழங்கப்பட்ட பொட்டுவைத்தல் போகப்போக தனிப்பட்ட விரோதங்களுக்காகவும் எல்லா இயக்கங்களினாலும் வழங்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

மாறி எழுதிவிட்டேன் :D சம்மட்டியாரின் மகனையும் தண்டித்திருக்க வேண்டும்

 

இது சட்டப்படி குற்றம்

இந்த அதிகாரத்தை யார் உங்களுக்கு கொடுத்தது....??? :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

மாறி எழுதிவிட்டேன் :D சம்மட்டியாரின் மகனையும் தண்டித்திருக்க வேண்டும்

சம்மட்டியார் மகன் வெளியால வந்துட்டாரே.

இங்கின பாட்டியல்ல சந்திச்சிருப்போம். Uncle வேற ஊர் பெயரை சொல்லி இருப்பார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளையுங்கோ நீங்க தண்டிக்க கூடியவராக  இல்லாமல் போய்விட்டீர்கள். ஒரு அப்பாவி அநியாயமாக தலைகீழாய் தொங்கியிருப்பார்

 

 

நீங்கள் தடுத்திருப்பியள் தானே கடைசி நேரத்திலையாவது :D  :D 

 

சம்மட்டியார் மகன் வெளியால வந்துட்டாரே.

இங்கின பாட்டியல்ல சந்திச்சிருப்போம். Uncle வேற ஊர் பெயரை சொல்லி இருப்பார்.

 

நீங்கள் இல்லைத்தானே நாதமுனி ??? :lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கமலம் கொலை வழக்கைப்பற்றி யாரோ எப்போதோ யாழில் எழுதப்போவதாகவும் அதில் சம்பந்தப்பட்டவர்கள்  பலர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் வாசித்தேன். அது இப்போதும்  யாழில் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. சிறுவயதில் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்த வழக்கு விசாரணைகளில்  இதுவும் ஒன்று.
இணைப்பிற்கு நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்கள் இல்லைத்தானே நாதமுனி ??? :lol: :lol:

 

 

நாலு வயது குட்டிப் பயல், அப்ப , எப்படி வீரப்பனோட டீல் போட ஏலும்??   :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது எத்தனையாம் ஆண்டு நடந்தது?...வீரப்பனுக்காக வழக்காடிய அந்த பெரிய வக்கீல் யார்?...அவரிடம் கொடுக்குமளவிற்கு வீரப்பனிடம் பணம் இருந்ததா?..உண்மையிலேயே வீரப்பன் தான் குற்றவாளியா அல்லது பணம் விளையாடியதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பவம் நடந்தது என்று சிறு வயதில் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் விபரங்களை அறிந்துகொள்ளும் வயதில் இருக்கவில்லை. கமலம் பொலிகண்டியைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியும். இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில்தான் வீரப்பனுக்கு நெற்றியில் பொட்டு வைத்தார்கள் என்று நினைக்கின்றேன். சகாறா அக்காதான் சரியா இல்லையா என்று சொல்லவேண்டும்.

இதைப் போலவே இன்னுமொரு சம்பவமும் கேள்விப்பட்டிருக்கின்றேன் (வீரபிரதாபக் கதைதான்!). கம்பர்மலையைச் சேர்ந்த சில சண்டியர்களை பொலிஸ் வல்லைவெளியால் யாழ் சிறைச்சாலைக்கு பஸ்ஸில் கொண்டுபோன வேளை எதிரானவர்கள் பஸ்ஸைக் குற்றிபோட்டு மறித்து கைதிகளை வெட்டிக் கொன்றார்கள். ஒருவரின் தரம் (தலை) பறந்தது! தரம் என்றால் தலை என்று அந்தக் கதையைக் கேட்கும்போது அறியும் வயதில் இருந்தேன். இதைப் பற்றி யாழ் கள பெரிசுகளுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும்.

இதைப் போலவே இன்னுமொரு சம்பவமும் கேள்விப்பட்டிருக்கின்றேன் (வீரபிரதாபக் கதைதான்!). கம்பர்மலையைச் சேர்ந்த சில சண்டியர்களை பொலிஸ் வல்லைவெளியால் யாழ் சிறைச்சாலைக்கு பஸ்ஸில் கொண்டுபோன வேளை எதிரானவர்கள் பஸ்ஸைக் குற்றிபோட்டு மறித்து கைதிகளை வெட்டிக் கொன்றார்கள். ஒருவரின் தரம் (தலை) பறந்தது! தரம் என்றால் தலை என்று அந்தக் கதையைக் கேட்கும்போது அறியும் வயதில் இருந்தேன். இதைப் பற்றி யாழ் கள பெரிசுகளுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும்.

 

ஹி ஹி அண்ணே  அது நம்ம எரியாண்ணே,

 

மொத்தமாக ஏழுபேர் தரம் பறந்தது. அதிலும் கேவலம் என்னவென்றால் இருதரப்பும் சொந்தக்காரர்கள்.

 

சங்கரும் நித்திலாவும் பண்டிதரும் மகானும் மனோமாஸ்ரரும் இந்தமண்ணில் பிறந்தவர்களே.

 

அண்ணை சம்பவம் முடிஞ்சு, ஏறக்குறைய இருபத்து ஐந்து வருடங்களின் பின் இலங்கை நீதித்துறை யாழில் இயங்க ஆரம்பித்தபின்  பருத்தித்துறை நீதிமன்றில இருந்து பிடியாணை வந்தது சம்மந்தப்படவர்கள் மேல். :D அதற்கிடையில சம்மந்தப்பட்டர்கள்  காலமாகியும், காணாமலும் போய்விட்டனர். 

 

இதற்குப்பின், எங்கட அக்காக்களுக்கு கல்யாணம் கட்டிவைக்கப்பட்ட பாடு இருக்கே ...

புரோக்கரிட்ட போனா கம்பர்மலையா என்றுவிட்டு ஓடுவான். மாப்பிளை கம்பர்மலையா என்றுவிட்டு தலையைக் குனிவான்.. 

 

வெங்காயத்துக்கும் போயிலைக்கும் மட்டும் வந்திடுவாங்க எல்லா ஊர்லிருந்தும்... :icon_idea: ம்ம் 

எப்ப போவானோ இனிப் போக எப்படி இருக்குமோ என் ஊர். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பேரா! வல்லைவெளி வயல்களுக்குள் துரத்தித் துரத்தி வெட்டினார்கள் என்று கேட்டபோது தமிழ்ப்படக் கதைகள் போல இருந்தது.

கம்பர்மலைப் பக்கம் நிறைய "ஏரியா" வேலை செய்ய அடிக்கடி போயிருக்கின்றேன். பயத்தைத் தந்த இடமாகத் தெரியவில்லை!

நித்திலாவின் தகப்பனார் நல்லையா மாஸ்ரரிடம் ஒரு சில மாதங்கள் படித்திருக்கின்றேன். அதற்கு மேல் படிக்கக் கொடுத்து வைக்க்கவில்லை.

நித்திலாவோடு வீரச்சாவடைந்தவர்களில் எங்கள் வயதை ஒத்த ஒருவர் மிகச் சிறந்த கிரிக்கட் வீரன். சண்ணா வெட்யையில் கொளுத்தும் வெயிலில் எங்களை அலைய வைத்து அவன் அரைச் சதங்கள் பல அடித்திருக்கின்றான். நல்லா நிதானமாக நேரம் எடுத்து விளையாடி எங்களுக்கு விசராக்கியதால் அவன் இயக்கத்திற்குப் போனதால் எங்களுக்கு நிம்மதி கிடைத்திருந்தது. ஆனால் அவனின் மரணமும் மிகவும் துயரத்தைத் தந்த ஒன்றாகவே இருந்தது.

ஏழு பேரா! வல்லைவெளி வயல்களுக்குள் துரத்தித் துரத்தி வெட்டினார்கள் என்று கேட்டபோது தமிழ்ப்படக் கதைகள் போல இருந்தது.

கம்பர்மலைப் பக்கம் நிறைய "ஏரியா" வேலை செய்ய அடிக்கடி போயிருக்கின்றேன். பயத்தைத் தந்த இடமாகத் தெரியவில்லை!

நித்திலாவின் தகப்பனார் நல்லையா மாஸ்ரரிடம் ஒரு சில மாதங்கள் படித்திருக்கின்றேன். அதற்கு மேல் படிக்கக் கொடுத்து வைக்க்கவில்லை.

நித்திலாவோடு வீரச்சாவடைந்தவர்களில் எங்கள் வயதை ஒத்த ஒருவர் மிகச் சிறந்த கிரிக்கட் வீரன். சண்ணா வெட்யையில் கொளுத்தும் வெயிலில் எங்களை அலைய வைத்து அவன் அரைச் சதங்கள் பல அடித்திருக்கின்றான். நல்லா நிதானமாக நேரம் எடுத்து விளையாடி எங்களுக்கு விசராக்கியதால் அவன் இயக்கத்திற்குப் போனதால் எங்களுக்கு நிம்மதி கிடைத்திருந்தது. ஆனால் அவனின் மரணமும் மிகவும் துயரத்தைத் தந்த ஒன்றாகவே இருந்தது.

 

 

நல்லையா மாஸ்ரர் எங்கட வீட்டுக்கு பக்கத்தில தான்.    சன்னாவெட்டை( அமிக மைதானமாகிவிட்டது) என்னையும் வளர்த்திருந்தது.  

பயத்தைத் தந்த இடமாகத் தெரியவில்லை! ///  குடியும் வெறியும் கோபமும் அன்று அவர்களை நிலைகுலைய வைத்திருக்கும். 

 

சண்டையின் ஆரம்ப புள்ளியே ஒரு ஆடு உரித்த நிகழ்வில்  இருந்து என்று அம்மா சொல்லி இருந்தார்.    

 

நம்ம ஏரியாவுக்கே  ஏரியா செய்ய வந்திருந்தீங்களா ....  யாருடன் அண்ணா ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஏரியாவுக்கே  ஏரியா செய்ய வந்திருந்தீங்களா ....  யாருடன் அண்ணா ...

இதெல்லாம் பரம ரகசியம் :) சொல்லித் தர்ம அடி வாங்கத் தயாரில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.