Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பேன்:அனந்தி

Featured Replies

141230174710_ananthi_sasitharan_lanka_51வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் அனந்தியின் இந்தக் கருத்து வந்துள்ளது.

வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில் அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்ட விரோதமான ஒரு கொள்கையைக் கொண்ட ஒருவருக்கு எவ்வாறு வாக்களிப்பது, மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் வட மாகாண சபை உறுப்பினரும், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவருமாகிய எழிலன் எனப்படும் சசிதரன் மனைவியுமாகிய அனந்தி சசிதரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/12/141230_elexnboycott_ananthi

Edited by BLUE BIRD

  • Replies 99
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்குமே ஏமாற்றம்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

---

வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில் அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்ட விரோதமான ஒரு கொள்கையைக் கொண்ட ஒருவருக்கு எவ்வாறு வாக்களிப்பது, மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்

----

TNA-press-300x200.jpg

அனந்தி சசிதரன் சொல்வதிலும்.... நியாயமுள்ளது.

இது, பழுத்த.... அரசியல்வாதிகளுக்கு,  புரியாதது... வேடிக்கையானது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா.. நாங்களும்... அழுகிறோம்.

எந்தச் சிங்களவன் எங்களை காலம் காலமாக அழித்தானோ அவனை எல்லாம் கூட்டாக்கி அவனுக்கு வாக்குப் போடு என்று கேட்கும் ஒரு தலைமையை தலைவர் ஏன் எங்களுக்கு விட்டுச் சென்றார் என்று அழுகிறோம்...!!

அந்தாள் ஒரு 1000 போராளிகளோடு எங்காவாது தப்பி போயிருக்கலாம்...!!! இருக்கிறார் என்ற பயத்திலாவது தமிழரின் உணர்வுகளை புரிய முனைந்திருப்பார்கள்.

ஆனால்.. எந்தக் காந்திக்கு எதிராக ஒரு கோட்சே உருவானாரோ.. அது சில எல்லைகள் மீறப்படும் போது மக்கள் பலத்த ஏமாற்றங்களை சந்திக்கும் போது நடக்கலாம். :icon_idea:

TNA-press-300x200.jpg

அனந்தி சசிதரன் சொல்வதிலும்.... நியாயமுள்ளது.
இது, பழுத்த.... அரசியல்வாதிகளுக்கு,  புரியாதது... வேடிக்கையானது.

அவர் அந்தக் காலத்தில் இருந்து பழுத்தது எப்படி சிங்களத்தை தாஜா பண்ணுறது என்பதில் தான். கண்ட பலன்.. பூச்சியம். சம்பந்தன் எப்போதுமே நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்ததில்லை. தலைவர் அவரை மதித்து உள்வாங்கி இருந்தாலும்.. முற்றாக நம்பினவர் என்று சொல்ல முடியாது. ஏன்னா இவர்களின் சாணக்கிய அரசியல் பற்றி தலைவர் நன்கே அறிவார். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் திடமான முடிவுகளை  எடுக்கக்கூடியவர்கள்  எமக்குள் உள்ளனர் என்பதற்கு ஒரு சாட்சி...

காலம் இவர் போன்றவர்களுக்காக காத்திருக்கிறது.....

  • தொடங்கியவர்

TNA-press-300x200.jpg

அனந்தி சசிதரன் சொல்வதிலும்.... நியாயமுள்ளது.

இது, பழுத்த.... அரசியல்வாதிகளுக்கு,  புரியாதது... வேடிக்கையானது.

 நீங்கள் யாரும் நம்புவீர்களோ தெரியாது.கூட்டணிக்கு பணம் பற்றுவாடா பண்ணியது உண்மை.வெளி நாட்டிலிருந்து இவர்களுக்கு வழங்கிய பிரதியை இங்கு விரைவில் இணைக்கின்றேன்.அதையே தவறவிட்டவர்கள்.அதைவிட இவர்கள் அடுத்த வருடங்களில் கூட்டணியிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவார்கள் இதுதான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

-------

அவர் அந்தக் காலத்தில் இருந்து பழுத்தது எப்படி சிங்களத்தை தாஜா பண்ணுறது என்பதில் தான். கண்ட பலன்.. பூச்சியம். சம்பந்தன் எப்போதுமே நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்ததில்லை. தலைவர் அவரை மதித்து உள்வாங்கி இருந்தாலும்.. முற்றாக நம்பினவர் என்று சொல்ல முடியாது. ஏன்னா இவர்களின் சாணக்கிய அரசியல் பற்றி தலைவர் நன்கே அறிவார். :icon_idea:

அவரை.... கொழுத்த அரசியல்வியாதி என்று எழுதத் தான், விரும்பினேன்.

அது... யாழ்கள விதிகளுக்கு, முரணாக இருக்கும் என்பதால்.... பழுத்த என்று கூறினேன். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 நீங்கள் யாரும் நம்புவீர்களோ தெரியாது.கூட்டணிக்கு பணம் பற்றுவாடா பண்ணியது உண்மை.வெளி நாட்டிலிருந்து இவர்களுக்கு வழங்கிய பிரதியை இங்கு விரைவில் இணைக்கின்றேன்.அதையே தவறவிட்டவர்கள்.அதைவிட இவர்கள் அடுத்த வருடங்களில் கூட்டணியிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவார்கள் இதுதான் உண்மை

கூட்டமைப்பு கட்டாயம் தேவை.....

ஆனால்... அதில், சம்பந்தனோ.... சுமந்திரனோ.... இருந்தால், 

அது... விழலுக்கு இறைத்த நீர்,

கூட்டமைப்பில்  இரண்டு பேர் மகிந்தாவிற்கு வோட்டு போட சொன்னால்  இன்னும் திறமாக இருக்கும் .

கூட்டைப்பை கலைக்க வேண்டிய காலம் நெருங்குகின்றது போல கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில்  இரண்டு பேர் மகிந்தாவிற்கு வோட்டு போட சொன்னால்  இன்னும் திறமாக இருக்கும் .

கூட்டைப்பை கலைக்க வேண்டிய காலம் நெருங்குகின்றது போல கிடக்கு .

அது தானே ஐனநாயகம்....???

அதுக்காக விவாகரத்து பற்றி  ஏன் சிந்திக்கின்றீர்கள்.....??

விருப்பு வாக்குகள் அதிகம் கிடைத்ததாலும் சில புலம் பெயர்ந்தவர்கள் உசுப்பேற்றுவதாலும் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் .தலைமையின் சொல்லை கேளாமல் கட்டுகாசும் இல்லாமல் போக வழி சமைக்கின்றார் .

அது தானே ஐனநாயகம்....???

அதுக்காக விவாகரத்து பற்றி  ஏன் சிந்திக்கின்றீர்கள்.....??

அண்ணை ஜனநாயகம் என்றால் என்ன ?

கட்சி எடுக்கும் முடிவுகள் தனக்கு பிடிக்கவில்லை என்றால் தனது சொந்த கருத்தை ஊடகங்களில் சொல்லும் ஜனநாயக உரிமை சுவிற்சர்லாந்தில் உள்ளது.  எத்தனேயோ சுவிஸ் அரசியல்வாதிகள் இவ்வாறு கட்சி முடிவுகளுக்கு எதிராக ஊடகங்களில் கருத்து தெரிவித்த, சக கட்சி தலைவர்களுடன் விவாதித்த  சம்பவங்கள் நடந்துள்ளது மட்டுமல்ல அவ்வாறு கருத்து தெரிவித்துவிட்டு அதே கட்சியில் முக்கிய பதவிகளில் தொடர்ந்து இருப்பது  இங்கு சகஜம். இது இலங்கை போன்ற மூன்றாம் தர ஜனநாயகம் நிலவும்  நாடுகளில் இருந்து வந்த எமக்கு ஆச்சரியம் தரும் விடயமாகும்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் ஜனநாயகம் என்றால் சொந்த மக்களின் சுடலை மேட்டில் இருந்து அந்த சுடலைக்கு காரணமானவை இரட்சிப்பது.

இது ஒட்டுக்குழுக்களுக்கு புதிய ஜனநாயகம் அல்ல..!! :lol::icon_idea:

முதலில் ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியவேண்டும் . :o

சுவிசுக்கு என்று புதிதாய் ஒரு ஜனநாயகம் இருக்குதா என்ன ? காணாதை கண்டால் அப்படிதான் இருக்கும் ,நாங்கள் ஊரிலேயே ஜனநாயத்தை அறிந்தவர்கள் மற்றவன் கருத்தை மதிக்காமல் மண்டையில் போட்ட ஆட்கள் இல்லை .

ஆளுக்கு ஒரு கருத்து சொல்வதனால் கட்சி எதற்கு  ? தலைமை எதற்கு ? 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுணனுக்கு குசும்பு கூட. கோட்டு சூட்டோட போராட போன ஜனநாயகவாதி.

முதலில் ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியவேண்டும் . :o

சுவிசுக்கு என்று புதிதாய் ஒரு ஜனநாயகம் இருக்குதா என்ன ? காணாதை கண்டால் அப்படிதான் இருக்கும் ,நாங்கள் ஊரிலேயே ஜனநாயத்தை அறிந்தவர்கள் மற்றவன் கருத்தை மதிக்காமல் மண்டையில் போட்ட ஆட்கள் இல்லை .

ஆளுக்கு ஒரு கருத்து சொல்வதனால் கட்சி எதற்கு  ? தலைமை எதற்கு ? 

நான் சுவிற்சர்லாந்தின் நடைமுறையை தான் குறிப்பிட்டேன். நாங்கள் ஒன்றும் காணாததை காணவில்லை.  ஜனநாயகத்தை பற்றி எமக்கும் நன்கு தெரியும். உயர் கல்விவரை அரசியலை ஒரு பாடமாக கற்றவன் நான். மற்றபடி மண்டையில்  போடுவதை பற்றி இங்கு யாரும் பேசவில்லை. அதில் உங்கள் ஆட்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதால்  உங்களுக்கு அந்த ஞாபகம் வருவதை தடுக்க முடியாது. தனது கட்சி எடுத்து ஒரு முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என்றால் அதை வெளிப்படையாக தெரிவிக்கும் நடைமுறை இங்கு உள்ளது. அது கட்சிவிரோதமாக இங்கு பார்க்கபடுவதில்லை என்பதையே குறிப்பிட்டேன். மற்றபடி அனந்தி செய்வது சரியா தவறா என்பது பற்றி நான் எதுவும் கூறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் கோஷ்டி மக்களைச் சுயமாக வாக்களிக்கச் சொல்லாமல் நிபந்தனையற்ற முறையில் மைத்திரிக்கு வாக்களிக்கச் சொன்னது சிறிலங்காவின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது.சிறலங்காவின் ஒற்றையாட்சி முறையில் தமிழ்மக்களுக்கு ஒருபோதுமே தீர்வு கிடைக்கப் போவதில்லை.இதே மைத்திரியை எதிர்த்து அடுத்த 5 வருடங்களில் சம்பந்தர் முடிவெடுப்பார். சம்பந்தரும்,சுமத்திரனும் இல்லாத கூட்டமைப்பே எமக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படாமல் ஆளுக்கு ஒரு கருத்து சொல்வதுதான் அண்ணை சொல்லும் ஜனநாயகம் போல .

இவளவு காலமும் தமிழ் மக்களும் புலிகளும் ஒரே அணியில் நின்றபோது.
 
பொறாமையில் வாந்தி  எடுத்தவர்கள்.
ஜேசு அவதாரம் எடுத்து மறு கன்னத்தை காட்டுகிறார்கள்.
 
தொழுநோய்க்கு எனக்கு பயம். பயமில்லதவர்கள் அறையலாம். 
 
புலிகளும் மக்களும் ஒன்றாக நின்றால் அது பயங்கரவாதம்.
 
மைத்திரியின் பணத்தை வாங்கி வைத்துவிட்டு சம்மந்தரும் சுமந்திரனும் கூலிக்கு மாரடிச்சால் அது ஜெனனாஜகம்.
 
நான் நினைக்கிறேன் ......
காகத்திற்கு கனவிலும் எதையோ கிண்டும் ஞாபகம்தானாம். இது அடுத்த படிக்கு ஏறிட்டுது நினைவிலும் அதுதான். 

நான் சுவிற்சர்லாந்தின் நடைமுறையை தான் குறிப்பிட்டேன். நாங்கள் ஒன்றும் காணாததை காணவில்லை.  ஜனநாயகத்தை பற்றி எமக்கும் நன்கு தெரியும். உயர் கல்விவரை அரசியலை ஒரு பாடமாக கற்றவன் நான். மற்றபடி மண்டையில்  போடுவதை பற்றி இங்கு யாரும் பேசவில்லை. அதில் உங்கள் ஆட்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதால்  உங்களுக்கு அந்த ஞாபகம் வருவதை தடுக்க முடியாது. தனது கட்சி எடுத்து ஒரு முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என்றால் அதை வெளிப்படையாக தெரிவிக்கும் நடைமுறை இங்கு உள்ளது. அது கட்சிவிரோதமாக இங்கு பார்க்கபடுவதில்லை என்பதையே குறிப்பிட்டேன். மற்றபடி அனந்தி செய்வது சரியா தவறா என்பது பற்றி நான் எதுவும் கூறவில்லை.

இதிலே நீங்க வேற .....
ஜெனநாயக பக்கெட்டை கடவுளிடம் வாங்கி அவர்தான் கட்டிலுக்கு கீழே வைத்திருக்கிறார்.
உங்களுக்கு எப்படி தெரியும் ஜெனநாயகம் ???

சுவிசுக்கு என்று புதிதாய் ஒரு ஜனநாயகம் இருக்குதா என்ன ? காணாதை கண்டால் அப்படிதான் இருக்கும் ,நாங்கள் ஊரிலேயே ஜனநாயத்தை அறிந்தவர்கள் மற்றவன் கருத்தை மதிக்காமல் மண்டையில் போட்ட ஆட்கள் இல்லை .

மற்றவன் கருத்தை கேளாமலே போட்ட ஆட்கள் நீங்கள் என்பது (புளட் ) ஊருக்கே தெரியும் அதை எழுதி தெரிய படுத்த தேவை இல்லை.
 
ஒரு சுதந்திரத்திட்காக போராடும் ஒரு இனமும் போராளிகளும்.
இனத்துடன் ஒட்டி இருந்துகொண்டே எதிரிக்கு காட்டிகொடுப்போம் என்றால். அதற்கு மதிப்பளிப்பது என்றால் மண்டை கழண்டிருக்க வேண்டும்.

ஜனநாயகம் பற்றி கதைக்கும் இடத்தில் 

இவளவு காலமும் தமிழ் மக்களும் புலிகளும் ஒரே அணியில் நின்றபோது.
 
பொறாமையில் வாந்தி  எடுத்தவர்கள்.
ஜேசு அவதாரம் எடுத்து மறு கன்னத்தை காட்டுகிறார்கள்.
 
தொழுநோய்க்கு எனக்கு பயம். பயமில்லதவர்கள் அறையலாம். 
 
புலிகளும் மக்களும் ஒன்றாக நின்றால் அது பயங்கரவாதம்.
 
மைத்திரியின் பணத்தை வாங்கி வைத்துவிட்டு சம்மந்தரும் சுமந்திரனும் கூலிக்கு மாரடிச்சால் அது ஜெனனாஜகம்.
 
நான் நினைக்கிறேன் ......
காகத்திற்கு கனவிலும் எதையோ கிண்டும் ஞாபகம்தானாம். இது அடுத்த படிக்கு ஏறிட்டுது நினைவிலும் அதுதான். 

இதிலே நீங்க வேற .....
ஜெனநாயக பக்கெட்டை கடவுளிடம் வாங்கி அவர்தான் கட்டிலுக்கு கீழே வைத்திருக்கிறார்.
உங்களுக்கு எப்படி தெரியும் ஜெனநாயகம் ???

மற்றவன் கருத்தை கேளாமலே போட்ட ஆட்கள் நீங்கள் என்பது (புளட் ) ஊருக்கே தெரியும் அதை எழுதி தெரிய படுத்த தேவை இல்லை.
 
ஒரு சுதந்திரத்திட்காக போராடும் ஒரு இனமும் போராளிகளும்.
இனத்துடன் ஒட்டி இருந்துகொண்டே எதிரிக்கு காட்டிகொடுப்போம் என்றால். அதற்கு மதிப்பளிப்பது என்றால் மண்டை கழண்டிருக்க வேண்டும்.

ஜனநாயகம் பற்றி கதைக்கும் இடத்தில் உங்களுக்கு என்ன வேலை .வோட்டு போட்ட ஆட்களின் விரலை வெட்டிய ஆட்கள் அல்லவோ ?

அதுதான் மக்கள் புலிகளை அம்போ என்று விட்டு விட்டு இராணுவத்திடம் ஓடி வந்தார்கள் .

அம்புலிமாமா கதைகள் கேட்கும் நிலையில் இப்போ மக்கள் இல்லை நீங்கள் இப்பவும்  வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையுடன் நிற்கின்றீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் பற்றி கதைக்கும் இடத்தில் 

ஜனநாயகம் பற்றி கதைக்கும் இடத்தில் உங்களுக்கு என்ன வேலை .வோட்டு போட்ட ஆட்களின் விரலை வெட்டிய ஆட்கள் அல்லவோ ?

அதுதான் மக்கள் புலிகளை அம்போ என்று விட்டு விட்டு இராணுவத்திடம் ஓடி வந்தார்கள் .

அம்புலிமாமா கதைகள் கேட்கும் நிலையில் இப்போ மக்கள் இல்லை நீங்கள் இப்பவும்  வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையுடன் நிற்கின்றீர்கள் .

இப்படிதான் 30 வருஷமா அழுது வாறீங்கள் ............ பாவம் காது கொடுத்து கேட்பார் யாரும் இல்லை. 

ஜனநாயகம் பற்றி கதைக்கும் இடத்தில் உங்களுக்கு என்ன வேலை .

இரவொன்று இருப்பதால்தான் பகலும் இருக்கிறது.
நாங்கள் பயங்கரவதிகளாக இருப்பதால்தான் ........... நீங்கள் ஜெனநாயக படம் காட்டுறீங்கள்.
நாங்க விட்டு விட்டு போன நீங்களும் பெட்டி கட்ட வேண்டியதுதான்.
ஒரு யாதார்த்தம் தெரியாத ஆளா இருக்கிறீங்க?? 
நாலறிவு காக்காவே இவளவு திட்டம் போட்டு தண்ணி குடிக்குது 

இப்படிதான் 30 வருஷமா அழுது வாறீங்கள் ............ பாவம் காது கொடுத்து கேட்பார் யாரும் இல்லை. 

இரவொன்று இருப்பதால்தான் பகலும் இருக்கிறது.
நாங்கள் பயங்கரவதிகளாக இருப்பதால்தான் ........... நீங்கள் ஜெனநாயக படம் காட்டுறீங்கள்.
நாங்க விட்டு விட்டு போன நீங்களும் பெட்டி கட்ட வேண்டியதுதான்.
ஒரு யாதார்த்தம் தெரியாத ஆளா இருக்கிறீங்க?? 
நாலறிவு காக்காவே இவளவு திட்டம் போட்டு தண்ணி குடிக்குது

நாங்கள் சொன்னதுதானே கடைசியில் நடந்தது ,இப்ப நடக்குது .(முன்னர் உங்களுக்கு அது வாந்தியாக இருந்தது இப்ப அழுவது போலிருக்கு .இருந்த இடம் அப்படி  ,விளக்கம் அப்படி இப்படித்தான் )

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்குமே ஏமாற்றம்தான்..

ஏமாற்றமாக இருக்கும் என நினைத்தாலும் பலரும் இதை எதிர்பார்த்தார்கள். நான் சம்பந்தரின் முடிவைக் கூறுகின்றேன்.

ஆனந்தி அவர்களின் முடிவையும் பலர் ஏற்கலாம்.

ஆனாலும் தமிழர்களின் வாக்குகளைவிட அவர்களின் நிலைப்பாடே

எப்போதும் சிங்கள ஜனாதிபதியைத் தெரிவு செய்ய உதவும் என்பது சம்பந்தருக்குத் தெரியாமலா இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சொன்னதுதானே கடைசியில் நடந்தது ,இப்ப நடக்குது .(முன்னர் உங்களுக்கு அது வாந்தியாக இருந்தது இப்ப அழுவது போலிருக்கு .இருந்த இடம் அப்படி  ,விளக்கம் அப்படி இப்படித்தான் )

1983 இல் புலிகள் சொன்னதுதான் 2009இல் நடந்தது.
நீங்கள் கொப்பி அடிச்சது...
ஏதாவது ஒன்றை என்றாலும் சுயமா செய்ய கூடாதா? 

மைத்திரியின் பணத்தை வாங்கி வைத்துவிட்டு சம்மந்தரும் சுமந்திரனும் கூலிக்கு மாரடிச்சால் அது ஜெனனாஜகம்.
 
சம்பந்தர் மைத்ரியின் பணத்தை வாங்கி வைத்து விட்டு அவருக்கு வாக்கு கேட்டால் அது கூலிக்கு மாறடிப்பது.
தலைவர் 2005ல் மகிந்தவிடம் பணம் வாங்கி விட்டு தேர்தலை புறக்கணிக்கச்சொன்னால் அது ராசதந்திரம்   :lol:

சம்பந்தர் மைத்ரியின் பணத்தை வாங்கி வைத்து விட்டு அவருக்கு வாக்கு கேட்டால் அது கூலிக்கு மாறடிப்பது.

தலைவர் 2005ல் மகிந்தவிடம் பணம் வாங்கி விட்டு தேர்தலை புறக்கணிக்கச்சொன்னால் அது ராசதந்திரம் :lol:

முத்திரைன்குத்தப்போறாங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.