Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சின் இருண்ட 3 நாட்கள் ....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் மறக்கமுடியாத நாட்களாக 07-08-09/01/2015 அமைந்துவிட்டன...

 

ஏழாந்திகதி காலை 11 மணியளவில்  CHARLIE HEBDO என்னும்  பத்திரிகை  அலுவலகத்திற்குள்  ஆபத்தான நவீன ஆயுதங்களுடன் புகுந்த இரு இளைஞர்கள் (சகோதரர்கள்)  Chérif Kouachi (32 வயசு),  Said Kouachi,( 34வயசு ( மத்தியகிழக்கைச்சேர்ந்தவர்கள்)

705684-portraits-fournis-par-la-police-m

 அல்லாவின் பெயரைச்சொல்லியபடி குறி தவறாதும் துப்பாக்கி சூட்டில் அனுபவப்பட்டவர்கள் போல் சுடுகின்றனர். காவலுக்கு இருந்த காவல்துறையினர் இருவர் மற்றும் பத்திரிகையின் முக்கிய பிரமுகர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட 11 பேர் காயமடைகின்றனர். அதில் நால்வரின்நிலை கவலைக்கிடமானதாக இருக்க 

கொலையாளிகள் வந்த வாகனத்திலேயே தப்பிவிடுகின்றனர்......

 

648x415_rassemblement-republique-paris-7

மக்கள்  கொதித்து எழுந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட

அரசு தனது அனைத்து வளங்களையும் தயார்நிலைக்கு கொண்டுவந்து தேடுதலைத்தொடங்குகிறது.

காவல்த்துறை 

ரகசிய கமராக்கள் மூலம் அவர்களது தப்பியோடுதலைக்குறிவைத்து நகர்கிறது...

 

எட்டாந்திகதி

Montrouge(92) என்னும் பரிசை அண்டிய பகுதியில் கார் விபத்து ஒன்று ஏற்படுகிறது.

அதை விசாரிக்க சென்ற காவல்த்துறை உத்தியோகத்தவரை  விபத்தில் ஈடுபட்ட நபர் (ஆபிரிக்கர்) சுட்டுக்கொன்றுவிட்டு இன்னொரு காரை அபகரித்துக்கொண்டு தப்பிவிடுகிறார்...

காவல்த்துறை வலை விரிக்கிறது

உலகெங்கும் இருந்து அனுதாபங்களும் அஞ்சலிகளும் உதவி கோருதலும் வருகின்றன..

பிரெஞ்சு அரசு நிதானமாக ஆனால் குறியோடு நகர்கிறது...

சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களது படங்கள் எல்லா இடமும் காட்சிப்படுத்தப்படுகின்றன

தகவல் வழங்குவோருக்கு வசதியாக தொலைபேசிச்சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றன்

குறிப்பிடப்பட்ட பகுதிகளின்  தொலைபேசி மற்றும் இணையவசதிகள் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படுகின்றன.

 

ஒன்பதாந்திகதி  அதிகாலை

ஒரு பெற்றோல் நிலையத்துக்குள் புகுந்த முகத்தை மறைத்த இரு இளைஞர்கள்

அங்கிருந்தவரை மிரட்டி பெற்றோல் மற்றும் சாப்பாட்டுப்பொருட்களை எடுத்துச்செல்கின்றனர்

உடனே பெற்றோல் நிலையத்தவர் 

தன்னிடம் வந்தவர்கள் இந்த கொலைகாரர்கள் தான் என காவல்த்துறைக்கு துப்பு கொடுக்கிறார்

தயாராக இருந்த காவல்த்துறை 

அவர்களைத்தொடர்ந்து சென்று சுற்றி வளைக்க முயல

பரிசின் புறநகர்ப்பகுதியான DAMMARTIN என்னும் இடத்தில்

பக்கத்திலிருந்த அச்சுக்கூடத்துக்குள் இருவரும் பதுங்கிக்கொள்கின்றனர்...

அங்கிருந்தவர்களை பணயக்கைதியாக பிடித்தும் விடுகிறார்கள்..

அனைத்து வலுவுடன்  (மருத்துவப்பிரிவு உட்பட) பிரெஞ்சு அதிகாரிகள் அந்த இடத்தை சுற்றி  வளைத்துவிடுகின்றனர்.....

ஏனெனில் அதற்கு பக்கத்தில் ஆயிரத்துக்குமதிகமான பிள்ளைகள் படிக்கும் 3 பாடசாலைகள் உள்ளன.

 

B68TbvOCQAI1uSO.jpgB68TYeWCUAEZJwM.jpg

 

 

ஒன்பதாந்திகதி காலை 11.30

 

பரிசின் எல்லைப்பகுதியான  Porte de Vincennes 

என்னும் இடத்திலிருந்த யூதருக்கு சொந்தமான பலசரக்கு கடைக்குள் புகுந்த ஒருவர்coulibaly-3048109-jpg_2657989_652x284.JP

அங்கிருந்தவர்களை பணயக்கைதியாக பிடித்துவிடுகிறார்..

 

648x415_forensic-police-l-work-outside-t

அனைத்து வலுவுடன் (அதிக மருத்துவப்பிரிவு உட்பட) பிரெஞ்சு அதிகாரிகள் அந்த இடத்தை சுற்றி  வளைத்துவிடுகின்றனர்.....

காரணம்

ஒன்று பல பொதுமக்கள் உள்ளே இருப்பது

 இரண்டு கடை யூதருக்கு சொந்தமானது...

 

இவர்தான் முதல்நாள் Montrouge(92)இல் காவல்த்துறை உத்தியோகத்தவரை சுட்டுக்கொன்றவர் என்பதை அடையாளம் கண்ட காவல்த்துறை இவரது படத்தையும் Amedy Coulibaly அவருடைய காதலி படத்தையும் Hayat Boumeddiene பிரசுரித்த மேலதிக தகவல்களை பெற முயல்கிறது.

 

இவை நடைபெற்றுக்கொண்டிருக்க

இரு கொலையாளிகளில் ஒருவரான Chérif Kouachi இன் மனைவியை காவல்த்துறை கைது செய்கிறது.

அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டத்துக்கு காவல்த்துறை தயாராகிக்கொண்டிருக்கையில்..

 

ஒருவரை தம்முடன் பணயக்கைதியாக வைத்திருந்தபடி

அச்சுக்கூட பொறுப்பாளரை கொலையாளிகள் வெளியில் விடுகின்றனர்.

அவர் பல தகவல்களை (அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் உட்பட) காவல்த்துறைக்கு தருகிறார்.

இதில் இன்னொரு அதிசயம்

அதே கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அச்சுக்கூடஊழியர் ஒருவர் பதுங்கிக்கொண்டார்

இது கொலையாளிகளுக்கும் தெரியாது

அவரும் சமையலறையின் கழுவும் பகுதிக்குள் ஒழிந்திருந்தபடி

காவல்த்துறைக்கு தனது கைத்தொலைபேசி மூலம் அங்கு நடப்பவைகளை அறியத்தருகிறார்...

 

இவை நடந்து கொண்டிருக்க

தொலைக்காட்சி  ஒன்று கொலையாளிகளுடன் அச்சுக்கூடத்தொலைபேசியில் பேச முயல்கிறது

Chérif Kouachi தொலைபேசியை எடுத்து 

எந்த பதட்டமும் இன்றி

தான் அல்கைடாவால் பயற்சி தரப்படடவன் என்றும்

அவர்களே தமக்கு நிதி எதவி செய்கிறார்கள் என்றும் சாதாரணமாக பேசி  தொடர்பை துண்டிக்கிறார்..

 

 

அதேநேரம் அதே தொலைக்காட்சிக்கு BFM TV தானாகவே தொலைபேசித்தொடர்பை மேற்கொண்ட Porte de Vincennes  இல் பணய நாடகத்தை நடாத்தும் Amedy Coulibaly  தன்னை அறிமுகப்படுத்தியபடி காவல்த்துறையுடன் தான்பேசவேண்டும் என்கிறார்

இவரது கோரிக்கை அங்கே சுற்றிவளைப்புக்கு உள்ளாகியிருக்கும் இருவரையும் விட்டுவிடவேண்டும் என்பதாகும்..

தனது பெயர்  Amedy Coulibaly என்றும் தானே காவல்த்துறை உத்தியோகத்தவரைக்கொன்றவர் என்றும்

தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால் தற்பொழுது தன்னுடன் வைத்திருப்பவர்களை கொல்லப்போவதாகவும் சொல்கிறார்..

 

ஏற்கனவே கொலை செய்தவர் எதையும் செய்வார் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு காவல்த்துறை தயாராகிறது.

இதில் ஒரு அதிசயம் என்னவெனில்

Amedy Coulibaly தொலைபேசியில் பேசிவிட்டு தனது தொலைபேசியை அணைக்க மறந்துவிடுகிறார்

அங்கு நடப்பவைகளை காவல்த்துறை கேட்க இது வசதியாகிறது...

Amedy Coulibaly  தொழத்தொடங்குகிறார்

அந்த நேரம் தொழுகை நேரம் இல்லாதபடியால்

வரஇருக்கும் அபாயத்தை காவல்த்துறை கணிக்கிறது

இடத்தை நோக்கி நகரத்தொடங்குகிறது....

 

இதேநேரம் தப்பமுடியாத படி சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த கொலையாளிகளில்  ஒருவர் வெளியில் வந்து 

காவல்த்துறையை நோக்கி சுட ஆரம்பிக்கின்றார்

தயாராக தருணம் பார்த்திருந்த காவல்த்துறை சில செக்கன்களில் இருவரையும் சுட்டுக்கொன்று இடத்தைக்கைப்பற்றி பணயக்கைதிகள் இருவரையும் எதுவித காயம் இல்லால் மீட்கிறது

ஒரு காவல்த்துறையைச்சேர்ந்தவர் காயமடைகிறார்...

 

அதேநேரம்  இதே இடத்திலிருந்து 40 கிலோமீற்றருக்கு அப்பால் பலசரக்குக்கடைக்குள் பணயம் வைத்திருப்பவரின் அசைவுகளை கண்ட காவல்த்துறை கடையின் கண்ணாடிக்கதவுக்கு குண்ட வைத்து தகர்த்தபடி எல்லோரும் நிலத்தில் படுங்கள் என்றபடி உள்ளே நுளைகிறது

கொலையாளி Amedy Coulibaly காவல்த்துறையை  நோக்கி பாய சுட்டுக்கொல்லப்படுகிறார்

60 குண்டுகள் அவரைத்துளைத்திருந்தன...

மக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படகின்றனர்

அனால் பெரும் துக்கம்

அவர் நுளைந்த உடனேயே நால்வரை கொன்றுவிட்டிருந்தார்...

 

17 ?பேரைப்பலி கொண்டு

3 பேரைச்சுட்டுக்கொன்று எல்லாமாக 20 பிரெஞ்சுக்காரர்கள் இழக்கப்பட்ட இரு பயங்கரங்களும் முடிவடைந்திருந்தாலும்

சில கேள்விகள் மீதி இருக்கின்றன..

Amedy Coulibaly மனைவிக்கும் Chérif Kouachi மனைவிக்குமிடையில் 2014 ஆம் ஆண்டு மட்டும் 500க்குமதிகமான தொலைபேசி அழைப்புக்கள் நடந்துள்ளன.  இதன்படி இந்த சம்பவங்களின் வழி நடாத்துநர் 

தலைமறைவாகியிருக்கும் Amedy Coulibaly மனைவியான Hayat Boumeddiene 706186-portraits-transmis-par-la-police-என்பது காவல்த்துறையின் சந்தேகம். இவர் ஆயுதப்பயிற்சி  எடுத்த படங்களும் பிரசுரமாகி அவரைத்தேடும் படலம் முடக்கிவிடப்பட்டுள்ளது... அவர் கைது செய்யப்பட்டால் ஒழிய இதன் சூத்திரதாரிகளை அறிய வாய்ப்பில்லை...

 

B6_59at_Cc_AAZyv8.png

 

இதில் ஒரு படிப்பினையுமுண்டு

பத்திரிக்காரர்களை  கொலை செய்து ஆரம்பித்த இவர்கள் செயல் அச்சுக்கூடத்தில் புகுந்து அழிந்து போனது தான்...  

648x415_freres-kouachi-amedy-coulibaly-s

 

--- நான் கேட்டதை பார்த்தை எழுதியுள்ளேன்.

எழுதியுள்ள செய்திகளில் குறைபாடுகள் இருக்கலாம்..

என்னால் முடிந்தளவு தந்துள்ளேன்

நன்றி.

 

பிரான்சிலிருந்து யாழுக்காக விசுகு..

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே ஒரு திகில் கதை பாணியில் எழுதி இருக்கின்றீர்கள் சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா உங்களின் நேரத்தை எடுத்து பெரும்பாலான தகவல்களை தந்தமைக்கு.

மூன்றாம் உலகப்போருக்கு மேற்கத்திய நாடுகளுக்கு அறைகூவல் விடுகிறார்களோ மத்திய கிழக்கின் அடிப்படைவாதிகள்? தகவல்களுக்கு நன்றிகள் ராசா.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

மீன்டும் ஒரு சந்தேகம்  கேட்க அவசியமில்லாத படிக்கு விபரமாகத் தந்துள்ளீர்கள், நன்றி விசுகு...!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர்கள், ஒரு பத்திரைகைச் செய்தியாளராக செயற்படும் திறன்கொண்டிருப்பதை இப்பதிவு வெளிப்படுத்துகிறது. :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

ஆக சாவை தைரியமாக எதிர் கொண்ட தீவிரவாதிகள் அவர்களை சுத்தி,வளைத்து பிடிக்க முடியாத பொலீசார். அவர்கள் தைரியமாக சுட்டுக் கொண்டு வரும் போது சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இன்னொருத்தர் தொழுது கொண்டு இருக்கிறார் என தெரிந்தும் அவருக்கு 60 தடவைக்கு மேலே துப்பாக்கிச் சூடு...தூ...அந்த தீவிரவாது வேண்டுமென்றே தான் தொலைபேசியை அணைக்காமல் வைத்திருப்பார்.பிரென்ஞ் பொலிசோட ஒப்புடுகையில் இலங்கைப் பொலிசார் 100% பெட்டர்...ஆக்கத்திற்கு நன்றி அண்ணா

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்
இறந்தவரின் குடும்ப அங்கத்தவர் ஒருவர், சுட்டவரின் குடும்பத்துக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என கூறுகிறார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/clCRRyTvWMo

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

tdy_holt_paris_150110.blocks_desktop_lar

 

 

கடந்த மூன்று நாளாக இரவு பகலாக பார்த்து 
இந்த பிள்ளை மீது ஒரு அது வந்திட்டுது 
 
கூடாதார் கூட்டம் கூடி பிள்ளை எதோ சில தவறுகளை செய்துவிட்டது.
பாவம் சுட வேண்டாம் என்று உங்கள் போலிசுக்கு சொல்லிவிடுங்கள். 
 
கோர்ட்டுக்கு கொண்டு சென்று வழக்கை தொடர சொல்லுங்கள்.
பார்க்க பாவமாக இருக்கிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

 

tdy_holt_paris_150110.blocks_desktop_lar

 

 

கடந்த மூன்று நாளாக இரவு பகலாக பார்த்து 
இந்த பிள்ளை மீது ஒரு அது வந்திட்டுது 
 

 

"புகையிலை விரிக்கக்கூடாது. பொம்பிளை சிரிக்கக்கூடாது" என்று சொல்லுவார்கள். அந்தப்பிள்ளை வாய் திறக்கக்கூடவில்லையே..,! சோகப் புன்னகைதானே சிந்தியது!!. மருதன்கேணிக்கு என்ன நடந்தது?. அவர் தான் ஆணா பெண்ணா என்று தெரிவிக்காதுவிட்டாலும், தான் ஆண்தான் என்று இங்கு உறுதிப்படுத்தி உள்ளார்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"புகையிலை விரிக்கக்கூடாது. பொம்பிளை சிரிக்கக்கூடாது" என்று சொல்லுவார்கள். அந்தப்பிள்ளை வாய் திறக்கக்கூடவில்லையே..,! சோகப் புன்னகைதானே சிந்தியது!!. மருதன்கேணிக்கு என்ன நடந்தது?. அவர் தான் ஆணா பெண்ணா என்று தெரிவிக்காதுவிட்டாலும், தான் ஆண்தான் என்று இங்கு உறுதிப்படுத்தி உள்ளார்.  :icon_idea:

கடந்த மூன்று நாளும் விமானநிலையத்தில் வேலை செய்தேன் ...
இங்கு வட அமெரிக்கா (கனடா வில் தொடங்கி) ஆர்டிக்கில் இருந்து வந்த குளிர் காற்றால் எல்லா இடமும் ஓவரு பிரச்சனை.
பல விமானங்கள் நேரத்திற்கு செல்லவில்லை 
பலது இடை நிறுத்தபட்டது.
நான் வேலை செய்யும் இடத்திற்கு முன்பாக ஒரு டிவி இருக்கிறது சி என் என் தான் போய்கொண்டு இருக்கும்.
வெள்ளி கிழமை பூராக இந்த காட்சிதான் சி என் எனில் போய்கொண்டு இருந்தது.
போலிஸ் சுற்றி வளைத்ததில் இருந்து சுட்டு கொல்லுவரை பார்த்துகொண்டு இருந்தேன்.
இரு நாளும் நேரத்திற்கு வீடு வர முடியவில்லை.
விமானங்கள் இடைநிறுத்தபட்டதால். எல்லோருக்கும் திருப்பி ரீ புக்கிங் செய்ய வேண்டி இருந்தது.இரு நாளும் 12 மணி நேரம் வேலை செய்தேன்.
 
பயங்கரவாதிகள் .... அவர்கள் பிடித்து வைத்திருந்த பயண கைதிகள் சிலர் என்று 
எல்லோரும் சில மணி நேரத்தில் பலியாக போவது திண்ணமாக இருந்தது.
அப்போது என் மனத்தில் பல கேள்விகள் வந்து வந்து போய்கொண்டு இருந்தது.
 
அமெரிக்காவை நேசித்து ..... அதற்காக உயிரை கொடுத்து பலர் போராடி இருக்கிறார்கள்.
அவர்கள் உயிரை துறந்து போய்விட்டார்கள்.
இன்று என்னை போன்ற சுயலவாதிகள் எங்கிருந்தோ வந்து ஜாலியாக அமெரிக்காவில் வாழுகிறோம்.
அவர்களுடைய உயிரின் பெறுமதி என்ன???
 
இன்று தப்பான தர்க்கம் ஒன்று இவர்களுக்கு ஊடபட்டதால்....
அவர்களால் சிலரும் ... அவர்களும் கொல்லப்பட போகிறார்கள்.
தவறான சிர்த்தர்தன்களை திரைமறைவில் இருந்து யார் என்னை ஊற்றி வளர்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்போது 
பல பல கேள்விகள் வந்து வந்து போய்கொண்டே இருந்தது.
 
பயங்கரவாதிகள் கொல்லபட்டால் .... அதை மகிழ்வாக கொண்டாடுவது தற்போதைய உலக நாகரீகம் என்பதால் 
நாமும் பின் நிற்க கூடாது .... நாகரீகம் அற்ற மனிதர்கள் என்று எம்மை கூற தொடக்கி விடுவார்கள்.
இப்படி நான் எழுதியதற்கே இனி எத்தனை பேர் காவடி எடுப்பார்களோ தெரியாது.
நாகரீகமாக வாழுவோம்! 
  • கருத்துக்கள உறவுகள்

 மருதன்கேணி அவர்களே! முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்பு பயங்கரவாதிகள் என்று எவரையும் இந்த உலகம் பெரும் படம்போட்டுக் காட்டினாலும், நான் நம்புவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி தந்த தொகுப்புக்கு நன்றி விசுகு அண்ணா. :icon_idea:

 

மருந்தங்கேணி எதில கண்வைக்கிறது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சுது. காலம் சரியில்லப் போல. இப்படியான ஆக்களுக்கு தான் காலா காலத்துக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும். :lol:  அதைவிட்டிட்டு சிவனேன்னு இருக்கிற எங்கள மாதிரி ஆக்களை கல்யாண சிறைக்குள் அடைக்க நினைக்கிறது மகா தப்பு. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி தந்த தொகுப்புக்கு நன்றி விசுகு அண்ணா. :icon_idea:

 

மருந்தங்கேணி எதில கண்வைக்கிறது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சுது. காலம் சரியில்லப் போல. இப்படியான ஆக்களுக்கு தான் காலா காலத்துக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும். :lol:  அதைவிட்டிட்டு சிவனேன்னு இருக்கிற எங்கள மாதிரி ஆக்களை கல்யாண சிறைக்குள் அடைக்க நினைக்கிறது மகா தப்பு. :icon_idea::)

அது வந்திட்டுது  என்று நான் எழுதியதை ........
எது என்று தெரியாமல் .... பலர் எழுதுகிறார்கள்.
 
அது என்று நன் சொன்னது ... "மனிதாபிமானம்" 
உயிருக்கு உயிர் என்ற பழிவாங்கல் நிலையில் இருந்து விலகி ..
 
ஏன் எதற்கு என்ற கேள்வியுடன் அணுகலாமா?
அப்படி என்று எண்ணுகிறேன்.  
  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானத்தை ஏன்.. "அது" என்ற வகைக்குள் அடக்கனும். "அது" குழூக்குறியாக வேறு அர்த்தங்களை தருமல்லவா. அதுதான்.. மற்றும்படி.. நீங்கள் மனிதாபிமானம் காட்டச் சொல்வதில் நியாயம் இருக்கலாம். அதற்கு முன்னோடியாக இவா காவல்துறையிடம் சரணடையலாம் தானே. நாங்க நினைக்கல்ல.. இவா இப்பவும் பிரான்சில இருப்பான்னு. :lol::icon_idea:

நன்றி விசுகு அண்ணர் உங்கள் தொகுப்பிற்க்கு.
ஆனாலும் சில விடயங்களில் எனக்கு இன்னும் தெளிவில்லை.
 
17 பேர் கொல்லப்பட்டதுக்கு 
ஒரு மில்லியன் சனங்கள் வீதியில் இறங்கி போராட்டம்.
40க்கும் மேற்பட்ட அரச தலைவர்களின் கை கோர்ப்பு....
சொலிடாரிற்றி... ஒற்றுமை... புல்லரிக்கிறது...
 
முள்ளிவாய்க்காலில் அழிந்து போன 
எங்கள் இன மக்களுக்கு தஞ்சம் என ஒரு தமிழ் நாடும் இல்லையே?
 
  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானத்தை ஏன்.. "அது" என்ற வகைக்குள் அடக்கனும். "அது" குழூக்குறியாக வேறு அர்த்தங்களை தருமல்லவா. அதுதான்.. மற்றும்படி.. நீங்கள் மனிதாபிமானம் காட்டச் சொல்வதில் நியாயம் இருக்கலாம். அதற்கு முன்னோடியாக இவா காவல்துறையிடம் சரணடையலாம் தானே. நாங்க நினைக்கல்ல.. இவா இப்பவும் பிரான்சில இருப்பான்னு. :lol::icon_idea:

 

 

தாக்குதலுக்கு முன் வெளியேறி துருக்கி எல்லையில் எங்கோ இருப்பார் என வானொலி செய்தி ஒன்று கூறுகிறது.

17 பேர் கொல்லப்பட்டதுக்கு 
ஒரு மில்லியன் சனங்கள் வீதியில் இறங்கி போராட்டம்.
40க்கும் மேற்பட்ட அரச தலைவர்களின் கை கோர்ப்பு....
சொலிடாரிற்றி... ஒற்றுமை... புல்லரிக்கிறது...

 

 

17 பிரான்ஸ் உயிர்களுக்கு இவ்வளவு மதிப்பு உள்ளது. உந்த ஐ.நாவில் உள்ள ஆட்கள் தான் வன்னியில் உள்ள மக்களை இறக்கட்டும் என்று விட்டு விட்டு வந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி விசுகு அண்ணர் உங்கள் தொகுப்பிற்க்கு.
ஆனாலும் சில விடயங்களில் எனக்கு இன்னும் தெளிவில்லை.
 
17 பேர் கொல்லப்பட்டதுக்கு 
ஒரு மில்லியன் சனங்கள் வீதியில் இறங்கி போராட்டம்.
40க்கும் மேற்பட்ட அரச தலைவர்களின் கை கோர்ப்பு....
சொலிடாரிற்றி... ஒற்றுமை... புல்லரிக்கிறது...
 
முள்ளிவாய்க்காலில் அழிந்து போன 
எங்கள் இன மக்களுக்கு தஞ்சம் என ஒரு தமிழ் நாடும் இல்லையே?

 

பத்திரிகை நிறுவனத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் ....
வேறு ஒரு நாட்டின் உளவு துறையாக கூட இருக்கலாம்.
 
பயனகைதிகள் நாடகம் நடக்கும்போது தொலைபேசிய பயங்கரவாதி ......தனது உயிரை பாதுகாக்க ஏதும் தந்திர கதை கூட சொல்லவில்லை.
சொன்ன ஒரே கதை ........ நான் அல் ஹெய்தாவில் பயிற்சி பெற்றனான் என்பதே.
உயிருக்கு போராட்டம் நடக்கும்போது ......... ஒருவனுக்கு இந்த வாக்குமூலம் தேவையா ?? 
 
இன்னொரு நாடகம் அரங்கேற போகிறது ...
நான் நினைக்கிறன் அண்ணர் சிரியா நாட்டு அதிபர் பசார் அல் அசாத்திட்கு  வேறு வடிவிலான வலை ஒன்று விரிய போகிறது என்று. 
அல்கெய்தா அவருக்கும் எதிரி ... இந்த வலை எப்படி விரிய போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி விசுகு அண்ணர் உங்கள் தொகுப்பிற்க்கு.
ஆனாலும் சில விடயங்களில் எனக்கு இன்னும் தெளிவில்லை.
 
17 பேர் கொல்லப்பட்டதுக்கு 
ஒரு மில்லியன் சனங்கள் வீதியில் இறங்கி போராட்டம்.
40க்கும் மேற்பட்ட அரச தலைவர்களின் கை கோர்ப்பு....
சொலிடாரிற்றி... ஒற்றுமை... புல்லரிக்கிறது...
 
முள்ளிவாய்க்காலில் அழிந்து போன 
எங்கள் இன மக்களுக்கு தஞ்சம் என ஒரு தமிழ் நாடும் இல்லையே?

 

 

ஒரு தமிழ்நாட்டை உருவாக்கவந்த தலைவனை அழித்துவிட்டுப் புலம்பும் தமிழர்கள் நாங்கள். புலம்பித்திரியும் எங்களுக்கு இன்றுகூட ஒரு தலைவனை உருவாக்கவோ ஏற்றுக்கொள்வதற்கான சொலிசிரூட் வரவில்லையே? 

ஐயா வாசுதேவன்  சொன்னது போல ஆழமா  பார்த்தால் இஸ்ரேலின் மொசாட்டுக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கும்  நடக்கும் யுத்தத்தில்  பலியாக்கபட்ட  பிரான்ஸ் மக்கள் அவ்வளவுதான் .

 

ஐரோப்பா  அண்மைய காலமா இஸ்ரேலுக்கு பாலஸ்தீன  விவகாரம்  தொடர்பா  அதிக அழுத்தம்  கொடுத்து  வந்து இன்று  எல்லாம் தலைகீழ் பயங்கரவாதத்துக்கு  எதிரா ஐரோப்பா  கரம்  கோர்க்குதாம் இதில் இஸ்ரேல்  பிரதமரும் அடக்கம் .

 

19422_10205096262759131_7113244794709461

 

Paris rally:Hypocrisy is sickening! The March in Paris is led by Benjamin Netanyahu, a man who's responsible for murdering 527 children in Gaza...
Gaza Death Toll Nears 2,143 wounded more than 11,000 and left some 100,000 homeless as 120-Hour.

10933957_10205096278799532_2489131853373

 

10915217_10205096290359821_7698101127800

 

10915288_10205096290279819_6178905063577

 

10931099_10205096262519125_1348428181915

 

 

இவைகள்  எல்லாம்  உயிர்களில்  அடங்காது  போலும் .

10269428_10205096263079139_3913736048202

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப்பதிந்த உறவுகள்

 

தம்பி  சுண்டல்

தம்பி  நுணா

தம்பி ராஜன் விஷ்வா

சகோதரர்  Ahasthiyan

சுவியண்ணா

சகோதரர் பாஞ்ச்

தங்கை ரதி

சகோதரர் மருதங்கேணி

தம்பி  நெடுக்கு

சகோதரர் Small Point

தம்பி  அஞ்சரன்...

 

 

மற்றும் பச்சைகளைத்தந்து ஊக்குவிப்புத்தந்த உறவுகள்

அனைவருக்கும்  நன்றிகள்..

 

இதில் என்னால் முடிந்தவரை நடுநிலையான ஒரு செய்தி தொகுப்பையே  செய்திருந்தேன்

இதில் இன்னும் கனக்க பக்கச்செய்திகளும்

இணை நடவடிக்கைகளும் இருக்கிறது

ஆனால் அவற்றை முழுமையாக என்னால் செய்ய உனது நேரம் இடம் தராது

ஆனாலும் ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கும் விடயங்களை

யாழ்கள ஒவ்வொரு உறவும் இவ்வாறு தமிழில் நேரடி செய்தித்தொகுப்பை யாழுக்கு கொண்டுவரவேண்டும் என்பதன் முன் முயற்சியே இது.

இதன் மூலம் யாழில் சில நேரடி செய்திகளை நாம் வெளியில் கொண்டு செல்லமுடியும் என நினைக்கின்றேன்.

நன்றி

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்தாலும்  உங்கள் பதிவு மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

துயரமான அந்த மூன்று இருண்ட நாட்கள் மீண்டும் ஒருமுறை வராமல் இருக்கட்டும்.

பதிவிற்கு நன்றி விசுகு அண்ணை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.