Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீபோட் போராளி (முகடு)

Featured Replies

பரணி கபேயை குடித்து முடிக்கும்போது நேரம் எட்டரை காட்டியது வேகமா இன்று வேலை முடிகவேனும் என்னும் மனக்கணக்கில் தொடங்கினான் தண்ணியில் சலாட்டை தூக்கி போட்டு விட்டு ,தக்காளி பழத்தை எடுத்து எட்டா வெட்ட தொடங்க ,சவா(நலமா) என்று கேட்டபடி செப் உள்ளே வந்தான் . உய்(ஓம் ) என்று சொல்லின்கொண்டு சலாட்டை வெட்ட தொடங்கினான் பரணி இன்று பின்னேரம் வேளைக்கு போகவேணும் ,அதனால் இப்பவே கூட எல்லாம் செய்து வைத்தால் வேளைக்கு இறங்கலாம் என்னும் எண்ணோட்டத்தில் வேகமா வேலை செய்ய தொடங்கினான் ..

நாலு ,மணிபோல குகன் வருவான் ஆளை ஏரியாவில் சந்தித்து விட்டு போனா இரவு வளைச்சு அடிக்கலாம் ஆளுக்கு இண்டைக்கு எப்படியும் ஆளை தப்ப விடக்கூடாது அவருக்கு சொறிக்கதை ,வேலை முடியும் நேரம் குகன் தொலைபேசியில் மச்சி நான் வந்திட்டன் ஏரியாக்கு நீ எப்ப வருவா ,இந்த உடுப்பு மாத்திரன் இப்ப வருவான் நில்லு போயிடாத ;என்று சொல்லிக்கொண்டு சப்பாத்தை கட்டிக்கொண்டு ஜக்கெட்டை எடுத்து கொளுவினான் ...

வணக்கம் மச்சி எப்படி சுகம் வேளைக்கு வந்திட்ட போல ,ஓம் மச்சான் பருவாயில்லை இந்த அண்ணையும் வாறன் என்று சொன்னார் அதுதான் கொஞ்சம் நேரத்தோட வந்திட்டன் ,ஓ யாரு இவர் புதுசா கிடக்கு ஒருநாளும் காணவில்லை ஆளை ,ம்ம் நீ கண்டிருக்க மாட்ட இப்பத்தான் ஊரில இருத்து வந்தவர் முதல் இயக்கத்தில இருத்து கடைசி சண்டையில காயப்பட்டு ,பிறகு பிடிபட்டு உள்ளுக்கு இருந்து வெளியால வந்து இப்ப ஒரு கிழமை முதல் தான் இங்க வந்து சேர்த்தவர் ,ஓகே ஆள் எங்க ஆளத்தான் அப்ப ...

சும்மா இருடா அவர் இயக்கத்தில பெரிய பொறுப்பில் இருத்த ஆள் பழைய சண்டைக்காரன் , எங்கட கதைகளை ஆளோட கதைக்காத பிறகு கதை பொத்தி அடிக்கும் ,சரி சரி எங்களுக்கு தேவையான விஷயம் இருத்தல் எடு அங்க போட்டு ,முழங்க நல்ல வரவேற்ப்பு இருக்கும் தெரியும் தானே உனக்கு ,ம்ம் அது பிறகு பார்ப்பம் இப்ப என்னமாதிரி ஆளை இரவு கூப்பிட்டு அடிப்பமே ...

அதுக்குத்தான் வந்தது ஒரு ஒன்பது மணிக்கு தொடங்கு நான் கரிகாலன் தம்பியால வாறன் ;நீ ஈழ வேங்கையாள வா சரியா இண்டைக்கு ஒரு கை பார்ப்பம் ,அவன் ,மற்ற பார்ட்டி தான் நான் இளைவன் அண்ணையிட்ட கேட்டனான் ,அவர் சொன்னார் அவன் ஒட்டுக்குழு ஆள் என்றுதான் உன்னை கேட்டதா சொன்னார் மச்சி ..

முன்னாள் போராளி இவங்கள் என்ன கதைக்கிறாங்கள் என்று தெரியாமல் நெக்டோ சோடாவை குடித்தபடி என்னடாப்பா இங்கயும் சண்டையா ,எதாவது இயக்க நிர்வாக பிரச்சினையா ஏன் இதுக்கு எல்லாம் நீங்கள் போறீங்கள் அப்பு கவனம் ,சும்மா வெளிநாட்டில் வந்து எங்கட சனத்துக்கு ஏதாவது செய்ய முயற்ச்சி பண்ணுங்க ;எனக்கு சகோதரம் வெளிநாடு நான் வந்திட்டன் அப்படி இல்லாமல் எத்தினை போராளிகள் அங்க இன்னும் கஷ்டப்படினம் ,இல்லை அண்ணே இது வேற பிரச்சினை அப்படி ஒன்றும் இல்லை ...

சரி மச்சி வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு நான் சாப்பிட்டு வர சரியா இருக்கும் என்று சொல்லிக்கொண்டு பரணி ரயில் தரிப்பிடம் நோக்கி நடந்தான் ,மனம் எல்லாம் அவனை இன்றையோட ஒடப்பண்ணனும் துரோகி ஆக்கினா சரி ,பிறகு அவருக்கு ஒரு ஆதரவும் இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டு போக ,தம்பி குகன் ஒரு படம் எடுத்துக்கொண்டு போவம் ,நாளைக்கு வீசா அலுவல் பார்க்க வேணும் ,சரி அண்ணே பக்கத்தில தான் போயிட்டு போவம் என்று இருவரும் நடக்க தொடங்கினர் ..

அண்ணே நீங்க இயக்கத்தில எத்தினை சண்டை போனநிங்கள் ,எங்க எங்க போனநிங்கள் என்று பேச்சை கொடுத்துக்கொண்டு நடந்தான் குகன் , அதை விடு தம்பி சும்மா எல்லாத்துக்கும் போய் இருக்கிறன் ,இங்க எப்படி வீசா போட்டா கிடைக்குமே எனக்கு காயங்களை பார்த்து புலி என்று சொல்லி நிராகரிக்க மாட்டினமே தம்பி ,இல்லை அண்ணே இங்க இரவு கோழி களவுக்கு போய் முதுகில கம்பி கிழிச்சவன் எல்லாம் தான் புலி என்று சொல்லித்தான் வீசா எடுத்து வைத்து இருக்கிறாங்க ..

பரணி வேகமா சாப்பிட்டு மடிக்கணணியை தூக்கி மடியில வைத்தபடி குகனுக்கு போனை போட்டான் மச்சி எங்க வந்திட்டியா வீட்டுக்கு என்று ,ஓ இப்பத்தான் மேல ஏறிக்கொண்டு இருக்கிறன் படியால என்று மூச்சு வாங்கியபடி கதைத்தான் குகன் ,அண்ணே பார்த்து வாங்கோ காலும் ஏலாது பிடிச்சு நடவுங்க என்று பின்னாடி வரும் பழைய போராளி அண்ணைக்கு சொல்லிக்கொண்டு வீட்டு திறப்பை எடுத்து கதவில் செருகினான் குகன் ..

ஒரு டீ குடிப்பம் போடவா அண்ணே என்று கேட்டுக்கொண்டு இருக்க இல்லை அப்பு அதிக சீனி சேர்க்க கூடாது காயத்துக்கு பிரச்சினை இன்னும் இங்க மெடிகல் காட்டும் இல்லை ,நீங்க குடியுங்க எனக்கு வேணாம் என்று சொல்லிக்கொண்டு சோபாவில் சாய்த்தார் ,முன்னாள் போராளி தம்பி நீர் எங்கையோ ஒன்பது மணிக்கு போறான் எண்டு சொன்னீர் போகவில்லை போல ,இல்லை வீட்டில் இருந்துதான் அது கதைப்பது அண்ணே போறது எல்லாம் இல்லை ,ஆ எதோ சண்டை என்று எல்லாம் சொன்னியள் அதுதான் நான் பயந்து போனன என்று சிரித்தார் அவர் ...

பரணி மீண்டும் போன் பண்ணி எங்கட ஆள் நிக்கு வா வா குடுப்பம் ,நான் கரிகாலன் தம்பியை இறகிட்டன் ;ஏன்டா கோமான்சுக்கு லைக்கு பாயுது அவரை துரோகி என்று சொல்லி குடுத்துக்கொண்டு இருக்கிறன் நீ ,வா ஈழ வேங்கை ஐடியால அவர் ஒட்டுக்குழு ஆள் என்று எல்லோரும் நம்பிட்டினம் என்று மூச்சு விடாமல் வேகமா கதைதான் பரணி ..

இவ்வளவு நேரமும் வரும்போது அவரின் கதைகேட்டுக்கொண்டு வந்த குகனின் மனதில் எவ்வளவு தியாகம் எப்படியான உயிர் கொடுப்புகள் ,அவர் உடலில் உள்ள காயம்; இதை எல்லாம் நாம் பேஸ்புக்கில் ஒரு போலி பெயரில் நானே செய்வது போல நானே அங்கு சண்டையில் நின்றது போல எழுதி நாலு லைக்கும் ,என்னையும் போராளியா புலியா பார்க்கணும் என்னும் எண்ணத்தில் எழுதி என் பெயர் புகழுக்கு அலைத்து இருக்கிறேன் என்று மனதில் உள்ளே எண்ணி வெட்க்கபட்டான் குகன் ...

புலிக்கொடியை பிடித்து ,மடித்து போர்த்து எல்லாம் படம் எடுத்து போட்டால் என்னையும் புலியா நினைப்பினம் என்னும் எண்ணமே இருந்தது, ஆனால் ஒரு நாள் புலியா வாழ்த்து இருந்தால் இந்த வெந்து சினிமாத்தனமான செயலுக்கு வெக்கப்பட்டு இருப்பேன் ,இவ்வளவு கள அனுபவும் உள்ள இந்த அண்ணன் சாதரணமா சொல்லுறார் ,அவரளிடம் ஒப்பிடுகையில் நாம் எம் மண்ணுக்கு இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்பதுதான் உண்மை ..

மீண்டும் போன் அடித்தது டீ ஊற்றியபடி நிண்ட குகன் சொன்னான் எடுங்க அண்ணே எடுத்து இஸ்பிக்கரில் விடுங்க என்று ,அவரும் இணைப்பை எடுத்து இஸ்பிக்கரை அமத்தி விட ,மச்சான் ஓடுவா மகிந்தன் அண்ணையும் வந்து நிக்கிறார் இரண்டு பெரும் சேர்த்து கொடுக்கிறம் ஆளுக்கு பதில் சொல்ல எல்லாமல் பார்ட்டி திணறுது ,நீயும் சயிட் சப்போர்ட் தந்தால் ஆள் எங்க போக்ஸ்க்குள் மாட்டிட்டும் இண்டைக்கு செத்தான் என்று சந்தோஷம் மிகுந்த களிப்பில் சொன்னான் பரணி ..

அதை சோபாவில் சாய்ந்து இருந்தபடி புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்த முன்னாள் போராளியின் மனதில் தீச்சுவாலை சண்டை ஒருநொடி வந்து போனது ,குகன் எதை பேசுவது என்று தெரியாமல் மவுனமா நின்றுகொண்டு இருந்தான் ,மீண்டும் பரணி மச்சி சே செமையா ஆளுக்கு போட்டுகொண்டு இருக்க ப்ரீ வீப்பி கட்டா போயிட்டு சே என்று வெறுப்பா கத்தினான் ,அட பாவிகளா ஈழத்தை இலவச இணைப்பில் எப்படி எல்லாம் பிடிக்கறாங்க என்று மனதில் சிரித்தான் முன்னாள் போராளி ..அதுக்குள் பரணியின் போனை துண்டித்தான் குகன் ..

பரணியில் போன் மீண்டும் அடித்துக்கொண்டே இருந்தது பேஸ்புக் வேணாம் பேக் ஐடியும் வேணாம் ,இன்றில் இருத்தாவது இங்கு வந்திருக்கும் அண்ணைக்கு வீசா எடுத்து கொடுக்கும் வரை ,என் சிந்தனை ஓட்டம் எல்லாம் அதுபற்றியே இருக்கணும் என்று நினைத்துக்கொண்டு அண்ணே உங்களுக்கு உடல் நலம் நல்லா இல்லாட்டி நாளைக்கு வைத்தியரை பார்க்க போகலாம் ,இல்லை அப்பு எனக்கு ஒன்றும் இல்லாமல் எப்படி பார்க்கிறது கொஞ்சம் வலி இருக்கு முதுகு பக்கம் ,பிறகு பார்ப்பம் வீசா போட்டுட்டு ..இல்லை என்னுடைய காட்டில் காட்டலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை ...

கரிகாலன் தம்பியின் அழைப்பு பேஸ்புக்கில் ஓவர் ஓவர் என்று ஒலித்துக்கொண்டு இருக்க ,குகனின் தொலைபேசி அடித்துக்கொண்டு இருக்க எதையும் கவனிக்காது சமைக்க தொடங்கினான் குகன் ,போலி முகவரியில் ஈழம் பிடிப்பதை விட ஈழத்துக்காக வாழ்த்தவர்கள்,தியாகம் செய்தவர்கள் ,உயிர் கொடுத்தவர்களுக்கு நாலு உதவி செய்தாலே போதும் என்னும் எண்ணத்தில் அவன் முழுமையா தன்னை மாற்றி இருந்தான்.. தம்பி குகன் போன் அடிக்குது பரணியாம் ,அவன் கிடக்கிறான் லூசுப்பயல் விடுங்க அண்ணே என்று திடமா சொன்னான் குகன் .

Edited by அஞ்சரன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை கதை அல்ல.. எழுதியவரின் சொந்தக் கடுப்பு. :lol::icon_idea::rolleyes:

உலகம் பூரா.. பேஸ்புக்.. ருவிட்டர்..  பெரி்ய மாற்றங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கு.. நாங்க.. இப்படியே நக்கல்     அடிச்சுக்கிட்டே இருப்பம். அதைவிட்டா நமக்கு என்ன வரும். :)

  • தொடங்கியவர்

மிக்க  சந்தோசம்  நான்  இந்த  கதையில்   வெற்றி  கண்டுள்ளேன்  நெடுக்கர் அண்ணாவே ...யாருக்கு  உறைக்கணும் என்று  நினைத்தனோ  அங்கு உறைத்து  இருக்கு  என்பதால்  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை எழுத்துப் பிழைகளுடனும் முகடு சஞ்சிகையில் உள்ளதா
அல்லது நீங்கள் விட்ட பிழைகளா அஞ்சரன்?
உங்கள் கீ போர்ட் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் :D

  • தொடங்கியவர்

இத்தனை எழுத்துப் பிழைகளுடனும் முகடு சஞ்சிகையில் உள்ளதா

அல்லது நீங்கள் விட்ட பிழைகளா அஞ்சரன்?

உங்கள் கீ போர்ட் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் :D

அங்கு  சரி  பார்க்கபட்டு  போடப்பட்டது  வாத்தியார் ஐயா  இது  நான்  எழுதி  அனுப்பியதை  பதிந்தேன்  :(

மீள்  வாசிப்பு  செய்தாலும்  பிழைகளை   தவிர்க்க  முடியவில்லை  என்பது  வருத்தம் தான்  :(  :(

யாரோ சிலருக்கு  உரைப்பதற்காக எழுதப்பட்ட இந்த பதிவிற்காக  ஒரு இலக்கிய  இதழ் பாவிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது :(

  • தொடங்கியவர்

யாரோ சிலருக்கு  உரைப்பதற்காக எழுதப்பட்ட இந்த பதிவிற்காக  ஒரு இலக்கிய  இதழ் பாவிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது :(

சிறு  கதை  என்பது  ஒரு  கருத்தை  தாங்கி  நிப்பது  விஸ்வா  எதுவம்  இல்லாமல்  இருந்தால்  அது  சிறுகதை  இல்லை சமூக  விழிப்பு  எழுத்தில் சிறு தாக்கத்தை  ஏற்படுத்த  வேணும் ..நிஜம்  எப்பவும்  சுடும் அதுக்கு  நானும்  விதி  விலக்கு அல்ல .. :unsure:

Edited by அஞ்சரன்

மனதில் மிகுந்த சலனத்தை ஏற்படுத்திய பின்பே நான் கருத்தை பதிவிட்டேன், நீங்கள் எடுத்து கொண்ட கருப்பொருளை கதைக்கான கட்டமைப்புடன் நிறைதலுடன் தந்திருக்கிறீர்களா என மீளாய்வு செய்யுங்கள் அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் உறைக்கத்தான் செய்யும், என்ன செய்யிறது! :o

அவரவர் தங்களுக்கு  முடிந்ததை தெரிந்ததை தானே செய்யலாம் .

நல்ல கதை, இப்ப இதுதான் இணையங்கள் அனைத்திலும் நடக்கின்றது .

நீங்கள் யாழ்  இணையத்துடன  கதையை  இணைத்து  பார்க்காது  பொது வெளியில்  பாருங்கள் உண்மை  புரியும் விஷ்வா . ^_^

உண்மைகள் உறைக்கத்தான் செய்யும், என்ன செய்யிறது! :o

அளவானவர்கள்  போடலாம்  என்று  நினைத்தேன்  அவர்களே  முண்டி  அடித்து  போட்டுகொண்டுள்ளர்கள்  என்பதால்  சந்தோசம்  கதையில்  :icon_idea:

அவரவர் தங்களுக்கு  முடிந்ததை தெரிந்ததை தானே செய்யலாம் .

நல்ல கதை, இப்ப இதுதான் இணையங்கள் அனைத்திலும் நடக்கின்றது .

உண்மை யாரவாது  போராளிகள்  சொல்லும்  கதையை  கேட்டுட்டு வந்து தானே  செய்வது  போல  அடிச்சு விடுறது இப்ப புது  யுத்தியா  இருக்கு ..

பிறந்தது  யாழில் வளர்த்தது  கொழும்பில் எனக்கு தெரிய ஒரு பையன் வயது இப்ப இருபத்திரண்டு  எனக்கே சொல்லுறான்  தீசுவாலை சண்டையில் கிளாலி  பக்கம் நிண்டனான்  தான்  என்று  அப்ப அவனுக்கு  வயது  பத்து என்னத்த  சொல்ல  அண்ணே ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பியின்ரை சொந்தக்கதையோ...... :)

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் இங்கும் இப்படியான கதைகள் ஏராளம். எப்படித்தான் கூசாமல் கதையளக்கிறார்கள். கூடப்பழகுபவர்களே அருகில் இருப்பவர்களின் பூர்வீகம் தெரியாமல் கதையளப்பதை அதிகம் கண்டிருக்கிறேன் பல சமங்களில் இழுத்து மூஞ்சையில் காறி உமிழ்ந்து அவர்களின் அளப்பரையை வெளிச்சம்போட்டுக்காட்டலாமா என்று தோன்றும். வழமையான இறுக்கமும் அமைதி காத்தலும் கட்டிப்போட்டுவிடும்.

  • தொடங்கியவர்

தம்பியின்ரை சொந்தக்கதையோ...... :)

நடைமுறை  அவதானிப்பு  அண்ணே   :D

உண்மை  அக்கா  எதுக்காக  இவ்வாறு  நடந்து கொள்கிறார்கள்  என்றுதான்  புரிய வில்லை ஒரு  அற்ப  சந்தோஷம் தலைவர் படம் போட்டு ...காலை மாலை இயக்க பாட்டு  போட்டு ..ஒவ்வெரு  நாளும்  மாவீரர் வணக்கம்  போட்டால் புலியா அல்லது போராளியா  வாழலாம்  என்னும்  நிலையில்  இன்று வந்து  நிக்கு  இணைய  போராட்ட  புரட்சி .. :(

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை  அவதானிப்பு  அண்ணே   

உங்களுக்கும்

உங்கள் வளர்ச்சிக்கும் எதிரி நீங்களே தான்...

முகட்டின் முதல் பதிப்பில் தலைவர் படத்தை போட்டதை  இவ்வாறு இழிவு படுத்தியிருக்கவேண்டாம்... :(  :(  :(

Page_1_img045.jpg

Edited by விசுகு

  • தொடங்கியவர்

உங்களுக்கும்

உங்கள் வளர்ச்சிக்கும் எதிரி நீங்களே தான்...

முகட்டின் முதல் பதிப்பில் தலைவர் படத்தை போட்டதை  இவ்வாறு இழிவு படுத்தியிருக்கவேண்டாம்... :(  :(  :(

Page_1_img045.jpg

நாம்  இங்கு  விவாதிப்பது  இணைய  போலி  முகவரி  போராளிகளை  நீங்கள்   சம்மந்தம்  இல்லாமல்  சஞ்சிகையை  கொண்டுவந்து  நுழைப்பது  எதுக்கு  என்று  புரியவில்லை ...ஊடகம்  வேறு  இணையங்களில் நான்தான்  புலி நான் தான்  எல்லாமே  என்று  தம்பட்டம்  அடிப்பது வேறு  அதை முதலில்  புரிந்து  கொள்ளுங்கள் அண்ணே ..

ஏன் இணைய போலி முகவரி போராளிகளை மட்டும் விவாதிக்க வேண்டும் சஞ்சிகை போலி முகவரி போராளிகளையும் விவாதியுங்கள்.

இணையத்தில படம் போட்டால் தப்பு புத்தகத்தில போட்டால் தப்பில்லையோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

உங்கள் நடைமுறையைவைத்து நான் ஒன்று உங்களிடம் கேட்கவிரும்புகிறேன்.இங்கு பதிவிடப்பட்ட படைப்பின்மீதான கருத்து விவாத்திற்கும் தாங்கள் பிரசுரம் செற்திருக்கும் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? 

  • தொடங்கியவர்

ஏன் இணைய போலி முகவரி போராளிகளை மட்டும் விவாதிக்க வேண்டும் சஞ்சிகை போலி முகவரி போராளிகளையும் விவாதியுங்கள்.

இணையத்தில படம் போட்டால் தப்பு புத்தகத்தில போட்டால் தப்பில்லையோ

மீரா  சஞ்சிகை  போலி  என்று  சொல்வதை  பார்க்க  சிரிப்பு  வருது  அதுக்கு  ஒரு  பச்சை  வேற  ஐயகோ ..எங்கும்  நாங்கள்  எங்கள்  சுய  முகவரியில்  இயங்கும்  ஆக்கள்  ...ஊரை  சுற்றி  உலையில்  போடும்  ஆக்கள்தான்  போலிகளில்  தேசியம்  ஈழம்  பிடிக்கும்  ஆக்கள் .

செந்த முகத்தில் தலைவர்  படம் போடுங்க என்றுதான்  சொல்கிறோம் ஆக்கும்  :icon_idea:

வணக்கம்

உங்கள் நடைமுறையைவைத்து நான் ஒன்று உங்களிடம் கேட்கவிரும்புகிறேன்.இங்கு பதிவிடப்பட்ட படைப்பின்மீதான கருத்து விவாத்திற்கும் தாங்கள் பிரசுரம் செற்திருக்கும் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? 

கீர்த்திதீபன்  இப்படி  பலது  நடக்கும் ஈழம்  பிடிக்கிறவ  காட்டும்  கூத்து  ஆட்டுக்க  மாட்டை  விட்டு  தங்களை  புனிதர்  ஆக்குவீனம் . :D

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை  அவதானிப்பு  அண்ணே   :D

உண்மை  அக்கா  எதுக்காக  இவ்வாறு  நடந்து கொள்கிறார்கள்  என்றுதான்  புரிய வில்லை

ஒரு  அற்ப  சந்தோஷம்

1- தலைவர் படம் போட்டு ...

2- காலை மாலை இயக்க பாட்டு  போட்டு ..

3- ஒவ்வெரு  நாளும்  மாவீரர் வணக்கம்  போட்டால் புலியா அல்லது போராளியா  வாழலாம்  என்னும்  நிலையில்  இன்று வந்து  நிக்கு  இணைய  போராட்ட  புரட்சி .. :(

1- தலைவரது படங்களை சுமக்க தகுதியானோர் எவர்?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

2-  இயக்க பாடல்களை கேட்க  தகுதியானோர் எவர்?

இவ்வாறான மக்கள் தான் இயக்க பாடலை கேட்கணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

உங்களைப்போன்றவர்கள் மட்டுமே கேட்கலாம் என்ற வகையில் தான் பாடல்கள் உருவாக்கப்பட்டனவா??

அதற்கு சாட்சி உண்டா??

3-  மாவீரருக்கு அஞ்சலி செலுத்த  தகுதியானோர் எவர்?

இவ்வாறான மக்கள் தான்  மாவீரருக்கு அஞ்சலி செலுத்தணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

*********

நியானி: யாழ் கள நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

நீங்கள  எந்த  வைகையில்  இவரு  தேசியத்துக்கு  எதிரானவர்  ..அல்லது  துரோகிகள்  என்று  தரம்  பிரிப்பது  போலவே  நாங்களும் எவர் வெற்று  கூச்சல் ..எவர்  உண்மையான  விசுவாசி  என்று ஒரு வரையறை  வந்துள்ளோம் ..அதன்  படி  நாம் அவர்களை  அணுகுவோம் தரம் பிரிப்போம் .

இந்த  கேள்வி கேட்கும் அதிகாரங்கள்  எல்லாம் எவர்  உங்களுக்கு  தருகிறார்களோ  அவர்களே எமக்கு  தருகிறார்கள் ..

அஞ்சரன் ஒருவர் தான் இரண்டு வகையாக உங்களையும் விசுகரையும் கையாளுகிறாரா? இது சுத்த முட்டாள்தனம். உண்மையான விசுவாசிக்கு என்ன வரையறை?

  • கருத்துக்கள உறவுகள்

1- நீங்கள  எந்த  வைகையில்  இவரு  தேசியத்துக்கு  எதிரானவர்  ..அல்லது  துரோகிகள்  என்று  தரம்  பிரிப்பது  போலவே  நாங்களும் எவர் வெற்று  கூச்சல் ..எவர்  உண்மையான  விசுவாசி  என்று ஒரு வரையறை  வந்துள்ளோம் ..அதன்  படி  நாம் அவர்களை  அணுகுவோம் தரம் பிரிப்போம் .

2- இந்த  கேள்வி கேட்கும் அதிகாரங்கள்  எல்லாம் எவர்  உங்களுக்கு  தருகிறார்களோ  அவர்களே எமக்கு  தருகிறார்கள் ..

1- ஒரு  ஆக்கத்தை கருத்துக்களத்தில் போட்டால் பலரும் பலவாறு விளங்கிக்கொள்வார்கள்

கேள்விகள் வரும்.  அவர்களுக்கு பதில் சொல்லும் பக்குவம் வேண்டும்.

2- நான் எங்காவது எதிரானவர் துரோகி என எழுதினால்

அந்த இடத்தில் கேட்கணும்.

பதில் தரப்படும்.

மற்றும்படி

முகநூலிலும் புத்தகத்திலும் நீங்களே உங்கள் கதையின் கதாநாயகன் என்பது வெளிப்படை...

ஒருவரை  நோக்கி  கைநீட்டும்போது

நாலு விரல்கள் நம்மை கேட்கின்றன.

பேசும் சொற்களைவிட  எழுதும் எழுத்துக்கள் வலுவானவை

சாட்சியாக நிலைப்பவை.

எனவே எழுதும் போது ஒன்றுக்கு பலமுறை யோசியுங்கள்

உங்களுக்கு நீங்களே முரண்படாதீர்கள்...

நன்றி.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் உண்மைகளைக் கதைகளாக எழுதிக் கடுப்பேற்றுகின்றார்!

முதல் வெடி துவக்கு வெடியா, சீனவெடியா என்று தெரியமுதலே தமிழீழத்தை அடையவேண்டும் என்று தூரநோக்கோடு மேற்கு நாடுகளுக்கு வந்து இன்றும் சளைக்காது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்களை கீபோட் போராளிகள் என்று நக்கல் செய்வது எந்த வகையில் நியாயம்?

கதை  முகநூலில்  உள்ள  நண்பர்கள்  தங்களை  கடிப்பதா  சொல்கிறார்கள் ...இங்கு  போட்டால்  நீங்கள்  எங்களை  நோக்கி  என்று  நினைக்கிறிர்கள்  ஆக  இங்கு  பலர்  இதை  ஒரு  கதையா  பார்த்து  கடந்து  போனார்கள்  ,நீங்கள்  மட்டும்  அந்த  கதையின்  ஒரு  பாத்திரமா   மாறி  பார்த்தது  என்று  நினைக்கிறேன் ,மற்றும்படி இது  ஒரு  கதை  :)

அஞ்சரன் உண்மைகளைக் கதைகளாக எழுதிக் கடுப்பேற்றுகின்றார்!

முதல் வெடி துவக்கு வெடியா, சீனவெடியா என்று தெரியமுதலே தமிழீழத்தை அடையவேண்டும் என்று தூரநோக்கோடு மேற்கு நாடுகளுக்கு வந்து இன்றும் சளைக்காது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்களை கீபோட் போராளிகள் என்று நக்கல் செய்வது எந்த வகையில் நியாயம்?

இப்ப  எதுக்கு  சூப்பர்  பெற்றோல் ஊத்துறிங்க  கிருபன்  அண்ணே  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.