Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகளை திருப்பி அனுப்பப் போகிறது இந்தியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாயகம் தி்ருப்பி அனுப்புவது தொடர்பாக, இந்தியாவும் இலங்கையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. 
 
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அகதிகளை திருப்பி அழைத்துக் கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டிருந்தது.
 
இதையடுத்தே,வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான இருதரப்புப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை, இந்தியாவில் இருந்து திருப்பி அழைக்கப்படும் அகதிகளுக்கான மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு  நடவடிக்கைகளுக்கு உதவ, அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் இணக்கம் தெரிவித்துள்ளன.
 
இதேவேளை தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என இந்தியப் பிரதமரிடன்  தமிழக முதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=237663838928622750#sthash.ja75dwif.dpuf
நல்ல முயற்சி.
 
தமிழ்நாட்டிலுள்ள சில முகாம்கள் ஏறத்தாள சிறைச்சாலை போன்றதே. இவர்களது விடுதலையை வரவேற்கும் அதேநேரம் அம்மக்களிற்கான உதவிகளை ஐ.நா முகவர் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் கொடுக்க முன்வந்ததையும் வரவேற்கின்றேன். இவ்வுதவிகள் எந்தவித அரசியல் குறுக்கீடுமின்றி அம்மக்களிற்குக் கிடைப்பதை ஐ.நா முகவர் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுதிப்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைத் தமிழ் அகதிகளை தாயகம் அனுப்ப தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு

 தமிழகத்தில் உள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக இலங்கை - இந்தியா வெளியுறவு அமைச்சக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக அரசு சார்பில் மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதனையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை இத்தருணத்தில் மேற்கொள்வது சரியானதாக இருக்காது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6830206.ece?homepage=true

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னும் நிலைமை சீரடையவில்லை. இத்தகைய சூழலில் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பு அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்திவைப்பதே சரியானதாகும்.

இலங்கையில் சமீபகாலமாக நிலவும் அரசியல் மாற்றம் சில நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தமிழர் பகுதியில் இன்னும் இலங்கை ராணுவத்தினர் இருப்பது தயக்கத்தை ஏற்படுத்துகிறது.

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற இலங்கையின் புதிய அரசின் வாக்குறுதி செயல்பாட்டுக்கு வரும்போது இங்கிருக்கும் தமிழ் அகதிகளுக்கும் தாயகம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் இருந்து சிங்கள இராணுவத்தை அகற்றாமலும்.. ஒரு நிரந்தர அரசியல் தீர்வின்றியும் தமிழ் மக்களை நாடு கடத்துவது ஆபத்தான விளைவுகளை உண்டு பண்ணும் என்பதை தமிழகம் மத்திய ஹிந்திய ஆளும் தரப்புக்கும் உலகத்திற்கும் உணர்த்த வேண்டும். தமிழக முதல்வரின் குரலுக்கு நன்றி. :icon_idea:

இலங்கைத் தமிழ் அகதிகளை தாயகம் அனுப்ப தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு

சோலியன் குடுமி சும்மா ஆடாதே.
 
தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அகதிகள் உழைப்பதற்கோ ஏன் வாகனச்சாரதி ஓட்டுனர் பத்திரம் கூட எடுக்க முடியாதவர்கள். நேரில் பார்த்திருந்தால்தான் அவர்கள் நிலமை புரியும். சிலருக்கு புலம்பெயர்ந்த உறவினர்கள் உதவி கிடைக்கும். அதிகமானவர்க்கு எதுவுமில்லை. இவரகளில் பெரும்பாலானவர்கள் இலங்கையில் விவசாயம், மீன்பிடி, அன்றாடம் வேலை செய்தவர்கள். விவசாயக்காணி அபகரிப்பு, கடல்வலயத் தடை, பொருளாதாரத்தடை போன்றவற்றால் வாழ்வாதாரம் இழந்தவர்கள். இவர்கள் மறுபடியும் தமது மண்ணில் குடியேற வேண்டும். இழந்த வாழ்கையை மறுபடியும்  25 வருடங்களின் பிறகாவது பெறவேண்டும்.
 
இதற்குள் பன்னீர்செல்வம் ஏன் அவசரப்படுகின்றார்? - புரியவில்லை.

பன்னீர்க்கு விளங்கினது  உங்களுக்கு விளங்கவில்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்கள் விரும்பினால் போகலாம்

முடிவை அவர்கள் தான் எடுக்கணும்

இவர்கள் எல்லோரும் ஏதோ பிளான் போடுகபிறார்கள்

அதற்குள் அந்த மக்கள் ஏமாற்றுப்படாமல் இருக்கட்டும்

அந்த மக்கள் விரும்பினால் போகலாம்

முடிவை அவர்கள் தான் எடுக்கணும்

இவர்கள் எல்லோரும் ஏதோ பிளான் போடுகபிறார்கள்

அதற்குள் அந்த மக்கள் ஏமாற்றுப்படாமல் இருக்கட்டும்

நியாமான கருத்து.
 
இப்போதுதான் இதைப்பற்றி பேச்சை ஆரம்பித்துள்ளார்கள். இன்னமும் எவ்வளவோ இருக்கு. அதற்குள் அவசரம் ஏன் என்பதுதான் எனது கருத்து.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஈழத்தமிழரை பொறுத்தவரையில் மிக கேவலமான முகாமில் தங்கியிருக்கின்றார்கள்.அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.  தீபெத் மற்றும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அகதிகள் பல வசதிகளுடனும் வாழ்கின்றார்கள்.   
 
ஈழத்தமிழருக்கு அதிகமாக ஓரபட்சம் காட்டும் நாடுகளில் இந்தியா முதலிடம்.

ஈழத்தமிழர்களின் அகதி முகாம்கள் எல்லாம் சுற்றி அடித்த ஆட்கள் கதைக்கினம் .

இந்த நிலை உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பின்  வந்த வினை 

  • கருத்துக்கள உறவுகள்

நியாமான கருத்து.
 
இப்போதுதான் இதைப்பற்றி பேச்சை ஆரம்பித்துள்ளார்கள். இன்னமும் எவ்வளவோ இருக்கு. அதற்குள் அவசரம் ஏன் என்பதுதான் எனது கருத்து.

உண்மை

தாயகத்தில் சுமுகநிலை வந்து

திரும்பிப்போகக்கூடிய சூழ்நிலை வந்தால்

இந்தியாவில் உள்ள தமிழர்கள் தான் உடடினயாகவும் அதிகளவிலும் திரும்புவார்கள்

அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் அப்படி...

சமாதானம் என்று ஒன்று வரும்போது காலகாலமாக இது பற்றி கதைத்துக்கொண்டுதான் வருகின்றார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சை பத்தை குடுத்துட்டு கதைக்கினம்.... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இலங்கையில் முகாம்களில் இருக்கும் மக்களை அவர்களின் சொந்த நிலத்தில்

குடியிருக்க அனுமதிக்க வேண்டும்.
அதன் பின்னர் இந்தியா தனது நாட்டிலுள்ள ஈழத்து அகதிகளிடம்கேட்கலாம்.

விரும்பியவர்கள் செல்லலாம். இந்தியாவில் தொடர்ந்தும் இருக்க விரும்புபவர்களுக்கு

இரட்டைப் பிரஜாவுரிமை கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சை பத்தை குடுத்துட்டு கதைக்கினம்.... :icon_mrgreen:

நேற்று சந்திரனைப்பற்றி  எழுதியிருந்தீர்கள் அண்ணா

எப்பொழுது அங்கிருந்து திரும்பி  வந்தீர்கள்....?? :lol:  :D

அஞ்சை பத்தை குடுத்துட்டு கதைக்கினம்.... :icon_mrgreen:

போராட்டம் என்றவுடன் ஓடிவந்த கனபேர் அஞ்சை பத்தை கொடுத்துவிட்டு போராட்டமே தாங்கள் தான் நடாத்திய மாதிரியல்லோ கதை விடுகின்றார்கள் . :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளை வற்புறுத்தியோ ஆசை வார்த்தை காட்டியோ அனுப்பாமல் அவர்களின் விருப்பப்படி அனுப்பினால் நல்லது. சிறிலங்காவில் உள்ள அகதிகளின் பிரச்சனை முற்றாக முடியவில்லை. வலிகாமத்தில் பல இடங்கள், சம்பூர் என பல இடங்களில் இருத்து மக்கள் வெளியேறி வெவ்வேறு இடங்களில் வாழ்கிறார்கள். வன்னியில் இருந்து வெளியேறி இன்னும் வீடுகள் அற்ற மக்கள் கவனிக்கப்படாமல் உள்ளார்கள். இவர்களின் பிரச்சனை தீர்க்கப்படாமல் இந்தியாவில் உள்ள அகதிகளை திருப்பி அனுப்ப இந்திய மத்திய அரசு ஏன் அவசரப்படுகிறது??

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்றவுடன் ஓடிவந்த கனபேர் அஞ்சை பத்தை கொடுத்துவிட்டு போராட்டமே தாங்கள் தான் நடாத்திய மாதிரியல்லோ கதை விடுகின்றார்கள் . :D

அதை வாங்கியவன் சரி என்கிறான்

கொடுத்தவனுக்கும் வாங்கியவனுக்கும் சரியாக இருக்கு.

உங்களுக்கு ஏன் உதறுது...??

அதை வாங்கியவன் சரி என்கிறான்

கொடுத்தவனுக்கும் வாங்கியவனுக்கும் சரியாக இருக்கு.

உங்களுக்கு ஏன் உதறுது...??

எதற்கும் புதுவையின் கவிதையை ஒருக்கா திருப்பி வாசியுங்கோ . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் புதுவையின் கவிதையை ஒருக்கா திருப்பி வாசியுங்கோ . :icon_mrgreen:

கவிஞர்களது பார்வை நிலையற்றது.

அதற்கு சாட்சியாக கண்ணதாசனின் கவிதைகளை வாசியுங்கள் என்று அறிவுரை கூறமாட்டேன் :icon_mrgreen:  :icon_mrgreen:  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மகாவலி கங்கையில் இருந்து வடக்கு நோக்கி தேனும் பாலும் பாய இருக்கும் இந்த சந்தர்பத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது தான் பொருத்தமாக இருக்கும்

மகாவலி கங்கையில் இருந்து வடக்கு நோக்கி தேனும் பாலும் பாய இருக்கும் இந்த சந்தர்பத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது தான் பொருத்தமாக இருக்கும்

முதல்லை அவுஸ்திரேலியாவில இருந்து எல்லாரையும்!! அங்கை வளர்க்கிற கருவேப்பிலை மரங்களையும்!!  :o  :icon_idea:

இந்த நிலை உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பின்  வந்த வினை 

நடந்து முடிந்தவை பற்றியே பதிவிடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகள் நிலை நீங்கள் அறியாததல்ல. இப்போது நடப்பது சரியா பிழையா? இவர்களது எதிர்காலம் என்ன? மேற்கத்தைய உலகத்திற்கு பணபலத்துடன் புலம்பெயர்ந்த எம்மைப் போன்றோரின் வாழ்கைநிலையை இவர்களுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.
 
இவர்களிற்கும் விடிவு வேண்டும் சிந்தித்து பாருங்கள்.

எப்படியாவது  புலியை  இழுக்கணும்.....

ஆனால் அவர்கள்

இந்தியா

எதுவும் செய்யலாம்....

5000  பேரை கொன்று புதைக்கலாம்

கெடுத்து வீசலாம்.... :(  :(  :(

நடந்து முடிந்தவை பற்றியே பதிவிடுகிறீர்கள். இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகள் நிலை நீங்கள் அறியாததல்ல. இப்போது நடப்பது சரியா பிழையா? இவர்களது எதிர்காலம் என்ன? மேற்கத்தைய உலகத்திற்கு பணபலத்துடன் புலம்பெயர்ந்த எம்மைப் போன்றோரின் வாழ்கைநிலையை இவர்களுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.
 
இவர்களிற்கும் விடிவு வேண்டும் சிந்தித்து பாருங்கள்.

சும்மா நல்லபிள்ளைக்கு கருத்து எழுதி ஆகப்போவதில்லை .யதார்த்தை பார்க்கவேண்டும் .மேற்குலகையும் இந்தியாவையும் ஒப்பிடும்போதே எப்படி பதில் எழுதுவது என்று தெரியவில்லை .

ஏன் இந்தியா அவசரப்படுவான் , அகதிகளிடம் அவர்கள் முடிவு என்னவென்று கேட்கவேண்டும், இந்தியாவில் இருக்கும் அகதிகளையும் மேற்குலகில் இருக்கும் அகதிகள் போல வைத்திருக்கவேண்டும் இப்படி நாங்கள் எங்களுக்கு சரியெனப்படும் முடிவுகளை எழுதலாம்

ஆனால் முடிவு இந்தியாவின் கையில் தான் இருக்கு ,எமது அகதிகளுக்கு இருக்க இடமும் கொடுத்து உதவிசெய்வதும் அவர்கள் தான் .மிக பெரும் பணத்தை செலவழிக்கின்றார்கள் அதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கவே விரும்புவார்கள் .(கிழக்கு பாகிஸ்தான் அகதிகள் இந்தியாவிற்குள் பெரும் தொகையாக வந்து குவிந்ததும் இந்தியா படையெடுக்க ஒரு முக்கியகாரணம் ) சமாதானம் ஒன்று இலங்கையில் வந்துவிட்டது மீள்அனுப்பலாம் என்று அவர்கள் நினைத்துவிட்டால் அதை செயற்படுத்த துவங்கிவிடுவார்கள் .திரும்பி போகவிருப்மில்லை என்பவர்களை என்ன செய்வார்கள் என்பதுதான் கேள்விக்குறி ஏனெனில் அகதி முகாம்களை நிரந்தரமாக மூடும் திட்டமும் அவர்களிடம் இருக்கலாம் .

நடந்து முடிந்துவிட்டது என்று முள்ளிவாய்காலை மறந்துவிடுவீர்களா ? மன்னித்து விட்டாலும் மறக்கமுடியாது .அது போலத்தான் இந்தியாவுடனான எமது உறவும் .

உண்மையை எழுதினால்  தொப்பியை தூக்கிபோட்டுகொண்டு புலிவாந்தி என்று துள்ளினால் என்ன செய்வது .ஆறாதகாயங்கள் எல்லா பக்கத்திலும் இருக்கு .

தீபெத் அகதிகள் டெல்கியில் பிச்சைஎடுத்துக்கொண்டு திரிவதை பார்த்திருக்கின்றேன் .இந்தியாவே பிச்சைகாரநாடு அவர்கள் எப்படி அகதிகளை வசதியாக வைத்திருக்கமுடியும் ,ஆனால் தமிழ் நாட்டு உறவுகள் எமது அகதிகளை தமது உதவியால் ஓரளவு வசதியாக வைத்திருந்தார்கள் அதிலும் நாம் தாம் மண்ணை அள்ளிகொட்டினோம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.